Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??

Featured Replies

வணக்கம் வலைஞன்,

உங்கள் பதிலுக்கு நன்றி! நான் உங்கள் கருத்தை வாசித்தபின் எனது கருத்தை கீழே கூறுகின்றேன். இது உங்களையோ அல்லது நிருவாகத்தையோ சிக்கலில் மாட்டுவதற்காக நான் கூறும் கருத்து அல்ல, மாறாக யாழ் கள உறவுகளிற்கு எனது பக்க நியாயத்தை கூறவேண்டும் என்பதற்காகவும், மற்றும் நான் கூறும் கருத்தில் இருந்து நிருவாகம் பயனுள்ள முறையில் எதையாவது உள்வாங்கிக்கொள்ளும் என்ற நப்பாசையுடனும் பதிகின்றேன்.

----------------------------------------------------------------------------

முதலாவது விசயம்.... நான் இந்தக் கருத்தாடலை மூடுமாறு கேட்டு இருந்தேன். நீங்கள் மூடவில்லை. நான் இங்கு எழுதிய கருத்துக்கள் பக்கச்சார்பாக அகற்றப்பட்டதாலும், மேலும் நான் இந்தக் கருத்தாடலை கலைஞன் என்ற பெயரில் ஆரம்பித்ததாலும், மேலும் நிருவாகத்திற்கு எதையாவது எழுதி மனஸ்தாபங்கள் ஏற்படாது இருப்பதற்காகவும் அவ்வாறு கேட்டு இருந்தேன். நான் நிருவாகத்திற்கு எனது எதுவிதமான அபிப்பிராயங்களையும் கூறுவதில்லை என்று அண்மையில் தீர்மானித்து இருந்தேன். என்றாலும்... மனம் கேட்கவில்லை... இன்று மீண்டும் ஒரு பதிவு...

சரி இனி விசயத்துக்கு வருவம்...

யாழ் இணையம் புதினத்தின் செய்திச் சேவையை பயன்படுத்துவதால் சுருக்கமாகச் சொல்லி மிச்சத்தை புதினத்தில வாசிக்குமாறு சொல்லுறீங்களோ? சரி, அப்ப யாழ் இணையம் வீரகேசரி, சங்கதி, பதிவு, உதயன், தினக்குரல், தமிழ்நாதம், தட்ஸ்தமிழ் என்று இன்னோரன்ன பல்வேறு செய்திச்சேவைகளையும்தான் பயன்படுத்துகின்றது. அப்படியாயின் அவற்றில் இருந்து இணைக்கப்படும் செய்திகளையும் சுருக்கமாக கூறி மிச்சத்தை அங்கு போய் வாசிக்குமாறு கூறலாமே?

புதினம் இணையத்தினர் யாழ் கருத்துக்களத்தின் சேவையப் பயன்படுத்தி தம்மை பரப்ப/விளம்பரப்படுத்த/வெளிப்படுத்த நினைக்கவில்லை என்று நீங்கள் கூறுவது சோற்றுக்குள் முழுப்பூசணிக்காயை மறைப்பது போன்றது. யாழ் இணையத்துக்கு வரும் வாசகர்கள் புதினத்துக்கு செல்லவேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது என்பதை நான் நன்கு அறிவேன். மேலும் NEWSBOT எனப்படும் பெயரில் ஒரு கருத்துக்கள உறவு உருவாக்கப்பட்டு தானியங்கியாக யாழில் செய்திகள் இடப்படுவதன் அடிப்படை நோக்கமே யாழுக்கு வரும் வாசகர்கள் யாழுடன் மாத்திரம் நின்றுவிடாது புதினத்துக்குபோய் செய்தியை பார்க்கவேண்டும் என்று புதினம் இணையத்தினர் ஆசைப்படுவதாலேயே ஆகும்.

எல்லாம் ஆரம்பம் - பூச்சியத்தில் இருந்துதான் ஆரம்பமாகின்றது என்பதை முதலில் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். புதினம் இணையம் திடீரெண்டு எங்கிருந்தோ வானத்தில் இருந்து வந்து குதிக்கவில்லை. மேலும்...

நீங்கள் கூறுவதைப் பார்த்தால் எனக்கு யாழில் விளம்பரம் ஏற்படுகின்றது. எனவே, யாழில் நான் இனி எழுதக்கூடாது என்றும் சொல்லுவீங்கள் போல இருக்கிது. எனது புள்ளி நிறுவனத்திற்கு கடந்த சில நாட்களில் சுமார் 1400 இற்கும் மேற்பட்ட வெவ்வேறு கணணிகளில் இருந்து வாசகர்கள் வருகை தந்து இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் யாழில் இருந்து வந்தார்கள் என்று நான் கூறும் அதேவேளை, நான் இவ்வாறு ஒரு புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்தமைக்கு காரணம் யாழில் சுதந்திரமாக எனது ஆக்கங்களை படைப்பதற்கு யாழில் கட்டுப்பாடுகள் போடப்பட்டமையே என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நான் ஏற்கனவே பல தடவைகள் நான் யாழுக்கு எப்படி வந்தேன், மற்றும் எனது எதிர்காலச் செயற்பாடுகள் பற்றி கருத்துகள உறவுகளுடன் பகிர்ந்து இருந்தேன். ஆனால்... இப்படி தனியாக ஒரு புள்ளி நிறுவனத்தை ஆரம்பிக்கும் நோக்கம் எனக்கு அறவே இருக்கவில்லை... எனினும்..

நான் திடீரென்று இப்படி ஒரு புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளேன் என்றால் அதற்கு யாழ் நிருவாகம்தான் காரணம் என்று அடித்துச் சொல்லுவேன். தவிர, யாழில் எனது புள்ளிநிறுவனம் விளம்பரம் செய்யப்படக்கூடாது என்று புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவந்தால் யாழுக்கு வராமலே எனது புள்ளி நிறுவனத்தை எப்படி விளம்பரப்படுத்துவது என்றும் எனக்குத் தெரியும்.

நீங்களும் 24/7 கணணிக்கு முன்னால், விரல் நுனியில் தொழில்நுட்ப வசதிகளுடன் இருக்கின்றீர்கள். இதுபோலவே எனக்கும் 24/7 கணணி, விரல்நுனியில் தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றது. இன்றைய நவீன உலகில் ஒரு புள்ளி நிறுவனத்தை விளம்பரப்படுத்தி முன்னுக்கு கொண்டுவருவதற்கு ஒரு சில மாதங்களே போதும். அந்த விளம்பரம் யாழ் மூலம்தான் செய்யப்படவேண்டும் என்று இல்லை.

நான் இங்கு யாழில் யாழ் கள உறவுகள், மற்றும் வாசகர்களுக்காகவே ஆக்கங்கள் படைக்கின்றேன். நிருவாகத்திற்காக ஆக்கங்கள் படைப்பதில்லை. பல கள உறவுகள் தாம் யாழில் இணைந்ததற்கான காரணம் நான் சற்று பகிடியாகவும், ரசிக்கத் தக்க வகையிலும் எழுதியமையே என்று கூறி உள்ளார்கள். மேலும், யாழில் எனக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியவேண்டும்.

நான் ஒன்றும் எழுதாது இருந்தால் எங்க உங்கட ஒரு போஸ்டையும் காணவில்ல, எங்க நீங்கள் ஒண்டையும் எழுதக்காண இல்ல என்று கேட்டு மடல்கள் அனுப்பும் வாசகர்கள் இருக்கின்றார்கள்...

எந்தநேரமும் சுமார் 80 - 100 பேர் இணைந்து இருந்த யாழ் இணையத்தில் இப்போது 150 - 200 பேர் இணைந்து இருக்கின்றார்கள் என்றால், அதற்கு கருத்துக்கள உறவுகளாகிய நாங்களும் காரணம் என்பதை யாழ் நிருவாகத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு விடயம்..

எந்த ஒரு நிறுவனமாகிலும்... அது Microsoft ஆக இருக்கட்டும், Dell ஆக இருக்கட்டும், Sony ஆக இருக்கட்டும், Toyota ஆக இருக்கட்டும்.. எல்லாருமே தவறுசெய்து இருக்கின்றார்கள். ஆனால் இன்றும் அந்த நிறுவனங்கள் உலகில் பேரும் புகழும் கொண்டு நிலைத்து இருக்கின்றன என்றால் அதற்கு காரணம் Customer Service (மன்னிக்கவும் இதை தமிழில் எப்படிச் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை..) ஏன் என்றால் வாடிக்கையாளர்கள் - Customers தான் ஒரு நிறுவனத்தின் முலதனம். இந்தவகையில்...

ஒரு வாடிக்கையாளன் - Customer சொல்வதை காதுகொடுத்து கேட்பது எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அவசியமானது. அது பணத்தை மையப்படுத்தி செயற்படும் நிறுவனமாக இருந்தாலும் சரி அல்லது சேவைகள் செய்யும் நிறுவனமாக இருந்தாலும் சரி.

கருத்துக்கள உறவுகளாகிய நாமும் ஒருவகையில் யாழ் இணையம் என்ற இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் - Customers தான். நாம் சொல்வதை காதுகொடுத்து கேட்கமாட்டோம்.. நாம் நினைத்தபடிதான் யாழ் இணையத்தை நடத்துவோம் என்று நிருவாகம் ஒற்றைக்காலில் நின்றால் அது எப்படியான நிலைக்கு யாழ் இணையத்தை இட்டுச்செல்லும் என்று எதிர்காலம் பதில்சொல்லும்போது பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

இறுதியாக..

எனக்கு களம் அமைத்துக்கொடுத்து, எனக்கு எத்தனையோ இனிய பல உறவுகளைப் பெற்றுத் தந்தது இந்த யாழ் இணையமே...

நான் தொடர்ந்தும் எனது பாணியில்... யாழிலும், எனது புள்ளிநிறுவனத்திலும் எழுதிக்கொண்டு இருப்பேன், முன்புபோல் இணைப்பும் கொடுப்பேன்.

எனது எதிர்கால நடவடிக்கைகள் எப்படி அமையும் என்பது யாழ் நிருவாகத்தின் செயற்பாடுகளிலேயே தங்கி உள்ளது.

நன்றி! வணக்கம்!

------------------------------------------------------

  • Replies 281
  • Views 80.9k
  • Created
  • Last Reply

முரளி சொன்னதில் நியாயம் இருக்கின்றதே. முரளி தன் புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்தமைக்கு யாழ்தான் காரணம். அதைக்கூட அவர் தொடங்கும்போது சொல்லிட்டு தானே ஆரம்பித்தார். சரி முரளி இணைப்பு கொடுத்த பின் தான் நிர்வாகம் அப்படி செய்யக்கூடாது என்ற சட்டத்தை வன்மையாக அமுலாக்கியது. ஆனால் எப்போதோ தொடங்கி ஐசூர்யா என்பவர் இணைப்பை கொடுத்த வண்ணம் தானே இருந்தார். அதை கூட முரளி சுட்டிக்காட்டினார். அபப்டி இணைப்பை கொடுத்து அங்கு சென்று வாசிப்பது சிரமம் என்று சொன்ன முரளியே இபப்டி செய்கிறார் என்றால் அவரின் மனதை யாழ்நிர்வாகம் எபப்டி மாற்றி இருக்கு என்பது தெரிகிறது. :lol:

இதைத் தான் சொன்னார்களோ யாழில் ஏற்படும் மன உளைச்சலுக்கு நாம பொறுப்பில்லை என்று. :D

நிர்வாகம் கருத்தாளர்கள் சொல்லுவதை ஒருநாளும் ஏற்றதே இல்லையே ஏன்?

கருத்தாளர்கள் இல்லையேல் கருத்துக்களம் ஏது?

நீங்கள் நினைக்கலாம் நீங்கள் போனால் என்ன உங்களைப் போல இன்னும் ஆயிரம்பேர் இணைவார்கள் என்று.

புதிதாக இணைபவர்கள் முக்கியமில்லை இணைந்தவர்களை இழக்காமல் இருப்பதே ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பலம்.

ஆனால் யாழில் கருத்தாளர்களின் எண்ணங்களை செவிமெடுப்பதே இல்லை. ஏன் அப்படி?

நிர்வாகம் எங்கே பக்கச்சார்பாக தம் பணியை செய்யுது னு கேட்காதீங்க. ஒவ்வொரு கருத்துக்களையும் பார்த்து வெட்டுறியளோ இல்லை ஒரு சில கருத்தாளர்கள் எழுதியதை மட்டும் கூர்ந்து கவனித்து கூரான வார்த்தைகளால் வெட்டுறியளோ தெரியாது. ஆனால் ஒரு இடத்தில் முலை" பற்றிய வாதம் நடந்தபோது அதெல்லாம் ஆபசாமான சொற்பிரயோகமாக நடந்திச்சு. இன்னும் அபப்டியான கருத்தாடல்கள் நடக்கின்றன. அதையெல்லாம் இன்னுமா கவனிக்கவில்லை நிர்வாகம். :D நிர்வாகம் என்றால் எல்லா பக்கமும் கண்களை சுழல விடணும். ஒருவரின் கருத்தின் பின்னாலே போகாமல் :D

:( என்ன வெண்ணிலா இப்ப்டி கதைக்கிறா னு நினைக்காதீங்க.

நியாயம் தான் என்னை பொறுத்தளவில் முக்கியம். பக்கசார்பற்றதாக இருக்கணும் நிர்வாகம். (யாழ் நிர்வாகம் அப்படி இருக்குமா என்பது கேள்விக்குறியே)

நிர்வாகம் பற்றி நிலாக்கு என்ன தெரியும் என நினைக்கபடாது நிலாவுக்கும் தெரியும் நிர்வகித்தல் என்றால் என்ன என்பது.

மட்டுறுத்தினர்கள் என்பவர்கள் கருத்துக்களை கண்காணிப்பது, அவர்களின் ஆக்கத்தை தட்டிக்கொடுத்து ஊக்குவித்தல், கருத்தாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தல், கருத்தாளர்களாஅல் அனுப்பப்படும் மடல்களுக்கு உடன் பதில் அளித்தல்(இது ரொம்ப முக்கியம்)...........இன்னும் பல செயற்பாடுகளை செய்தாலே நல்லதே. இப்படியான வேலைகளை நிர்வாகம் முதலில் திறம்பட செய்யுமாயின் நீங்கள் கருத்தாளர்கள் மேல் காணும் குறைகளும் நிவர்த்தியாகுமே. (இது முடியுமா உங்களாலை நிர்வாகமே) :rolleyes:

முந்தி இருந்த மட்டுறுத்தினர்கள் மதன் கவிதன் ஆகியோர் கருத்தாளர்களுள் ஒருவராக எல்லோரோடும் கருத்தாடி மட்டுறுத்தினர் பணியை திறம்பட செய்தனர். இராவணன் ஆபாச வார்த்தை பிரயோகத்தை நீக்கினாலும் எவருக்கும் சப்போட்டிவ் பண்ணலை.

அதுசரி முந்தி எல்லாம் வலைஞன் அண்ணா யாழில் அறிவித்தல்கள் நிபந்தனைகள் போட்டிட்டு நிர்வாகத்தில் ஒரு பெயரளவில் பாட்னர் /சிலீப்பிங் பாட்னர் ஆக எல்லோ இருந்தவர். :D இப்போ எப்படி இப்படி மாறினார்.

Edited by வெண்ணிலா

முரளி சொன்னதில் நியாயம் இருக்கின்றதே. முரளி தன் புள்ளி நிறுவனத்தை ஆரம்பித்தமைக்கு யாழ்தான் காரணம். அதைக்கூட அவர் தொடங்கும்போது சொல்லிட்டு தானே ஆரம்பித்தார். சரி முரளி இணைப்பு கொடுத்த பின் தான் நிர்வாகம் அப்படி செய்யக்கூடாது என்ற சட்டத்தை வன்மையாக அமுலாக்கியது. ஆனால் எப்போதோ தொடங்கி ஐசூர்யா என்பவர் இணைப்பை கொடுத்த வண்ணம் தானே இருந்தார். அதை கூட முரளி சுட்டிக்காட்டினார். அபப்டி இணைப்பை கொடுத்து அங்கு சென்று வாசிப்பது சிரமம் என்று சொன்ன முரளியே இபப்டி செய்கிறார் என்றால் அவரின் மனதை யாழ்நிர்வாகம் எபப்டி மாற்றி இருக்கு என்பது தெரிகிறது. :wub:

இதைத் தான் சொன்னார்களோ யாழில் ஏற்படும் மன உளைச்சலுக்கு நாம பொறுப்பில்லை என்று. :wub:

நிர்வாகம் கருத்தாளர்கள் சொல்லுவதை ஒருநாளும் ஏற்றதே இல்லையே ஏன்?

கருத்தாளர்கள் இல்லையேல் கருத்துக்களம் ஏது?

நீங்கள் நினைக்கலாம் நீங்கள் போனால் என்ன உங்களைப் போல இன்னும் ஆயிரம்பேர் இணைவார்கள் என்று.

புதிதாக இணைபவர்கள் முக்கியமில்லை இணைந்தவர்களை இழக்காமல் இருப்பதே ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பலம்.

ஆனால் யாழில் கருத்தாளர்களின் எண்ணங்களை செவிமெடுப்பதே இல்லை. ஏன் அப்படி?

நிர்வாகம் எங்கே பக்கச்சார்பாக தம் பணியை செய்யுது னு கேட்காதீங்க. ஒவ்வொரு கருத்துக்களையும் பார்த்து வெட்டுறியளோ இல்லை ஒரு சில கருத்தாளர்கள் எழுதியதை மட்டும் கூர்ந்து கவனித்து கூரான வார்த்தைகளால் வெட்டுறியளோ தெரியாது. ஆனால் ஒரு இடத்தில் முலை" பற்றிய வாதம் நடந்தபோது அதெல்லாம் ஆபசாமான சொற்பிரயோகமாக நடந்திச்சு. இன்னும் அபப்டியான கருத்தாடல்கள் நடக்கின்றன. அதையெல்லாம் இன்னுமா கவனிக்கவில்லை நிர்வாகம். :) நிர்வாகம் என்றால் எல்லா பக்கமும் கண்களை சுழல விடணும். ஒருவரின் கருத்தின் பின்னாலே போகாமல் :)

:D என்ன வெண்ணிலா இப்ப்டி கதைக்கிறா னு நினைக்காதீங்க.

நியாயம் தான் என்னை பொறுத்தளவில் முக்கியம். பக்கசார்பற்றதாக இருக்கணும் நிர்வாகம். (யாழ் நிர்வாகம் அப்படி இருக்குமா என்பது கேள்விக்குறியே)

நிர்வாகம் பற்றி நிலாக்கு என்ன தெரியும் என நினைக்கபடாது நிலாவுக்கும் தெரியும் நிர்வகித்தல் என்றால் என்ன என்பது.

மட்டுறுத்தினர்கள் என்பவர்கள் கருத்துக்களை கண்காணிப்பது, அவர்களின் ஆக்கத்தை தட்டிக்கொடுத்து ஊக்குவித்தல், கருத்தாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தல், கருத்தாளர்களாஅல் அனுப்பப்படும் மடல்களுக்கு உடன் பதில் அளித்தல்(இது ரொம்ப முக்கியம்)...........இன்னும் பல செயற்பாடுகளை செய்தாலே நல்லதே. இப்படியான வேலைகளை நிர்வாகம் முதலில் திறம்பட செய்யுமாயின் நீங்கள் கருத்தாளர்கள் மேல் காணும் குறைகளும் நிவர்த்தியாகுமே. (இது முடியுமா உங்களாலை நிர்வாகமே) :unsure:

முந்தி இருந்த மட்டுறுத்தினர்கள் மதன் கவிதன் ஆகியோர் கருத்தாளர்களுள் ஒருவராக எல்லோரோடும் கருத்தாடி மட்டுறுத்தினர் பணியை திறம்பட செய்தனர். இராவணன் ஆபாச வார்த்தை பிரயோகத்தை நீக்கினாலும் எவருக்கும் சப்போட்டிவ் பண்ணலை.

அதுசரி முந்தி எல்லாம் வலைஞன் அண்ணா யாழில் அறிவித்தல்கள் நிபந்தனைகள் போட்டிட்டு நிர்வாகத்தில் ஒரு பெயரளவில் பாட்னர் /சிலீப்பிங் பாட்னர் ஆக எல்லோ இருந்தவர். :) இப்போ எப்படி இப்படி மாறினார்.

அப்படிப் போடுங்க அருவாளை நாட்டாமை. அப்படியே இந்த விடயத்திற்கும் ஒரு தீர்ப்பைச் சொல்ல மாட்டீங்களா?? :unsure::)

(இது காமடி பண்ண எழுதலை. பொதுவாகவே ஆத்திரப்படாமல் கருத்தெழுதும் நீங்களே, சமீப காலமாக நிர்வாகத்தின் போக்கில் சீற்றமடைந்திருப்பதை உங்கள் கருத்துக்களில் அவதானித்தேன். நீங்களே கோபப்படும் அளவிற்கு நிர்வாகத்தில் தவறிருப்பதை அவர்கள் இன்னும் உணரவில்லையென்பதே எனது வருத்தம்.)

இங்கே நிறையப்பேர் வலிந்த கருத்து திணிப்பை செய்து இருக்கிறார்கள்.... ஆகவே வலைஞன் அதுகளை தேடி வெட்டுறது நல்லது...!

அப்படி ஒரு விதி இல்லை எண்று நீங்கள் சொல்ல வரமுடியும்... ஆனால் அதன் படி எனது கருத்துக்கள் சில தூக்கப்பட்டதை நினைவு படுத்தி விடுகிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நிறையப்பேர் வலிந்த கருத்து திணிப்பை செய்து இருக்கிறார்கள்.... ஆகவே வலைஞன் அதுகளை தேடி வெட்டுறது நல்லது...!

அப்படி ஒரு விதி இல்லை எண்று நீங்கள் சொல்ல வரமுடியும்... ஆனால் அதன் படி எனது கருத்துக்கள் சில தூக்கப்பட்டதை நினைவு படுத்தி விடுகிறேன்..

அதையேன் பேசுவான்.. ராமசாமியைப் பற்றி ஆதாரத்தோட பதிஞ்சதையே கருத்துத் திணிப்பு.. என்று சொல்லி.. வெட்ட வெட்ட பதிஞ்சது என்று சொல்லி வார்ணிங் வேற தந்தவை.

ஆனால் மெய்யனப்படுவது பகுதியில்.. பொங்குதமிழ் பகுதியில்.. நகைச்சுவைப் பகுதிகளில் இந்து மதத்தின் மீது நையாண்டித்தனம் நக்கல் தனம் செய்ய வைக்கப்பட்ட கருத்துத் திணிப்புகள்.. அப்பட்டமான கருத்துத் திணிப்புகள் என்று தெரிஞ்சும் எதுவும் செய்யப்படல்ல. எந்த ஆதாரமும் அற்ற தனிநபர்களின் கற்பனைகள் அங்கு இந்து சமயத்தை பழிக்க என்று வைக்கப்பட்ட போது.. அவை அனுமதிகப்பட்டன.

ஆனால் அதே மதத்தை பழிப்பவனை.. ஆதாரத்தோடு அவனின் நிலையைச் சொன்னா வெட்டுறாங்க. வார்ணிங் தாறாங்க. இது எதனைக் காட்டுது..??! நிர்வாகத்துக்குள்ள உள்ளவையின்ர மன நிலைப்படிதான் கருத்துக்கள் தணிக்கையாகுதே தவிர.. தண்டனைகள் வழங்கப்படுகுதே தவிர களவிதி அல்லது களத்துக்கு அவசியம் என்றில்லை..! :unsure:

Edited by nedukkalapoovan

அப்படிப் போடுங்க அருவாளை நாட்டாமை. அப்படியே இந்த விடயத்திற்கும் ஒரு தீர்ப்பைச் சொல்ல மாட்டீங்களா?? :unsure::)

(இது காமடி பண்ண எழுதலை. பொதுவாகவே ஆத்திரப்படாமல் கருத்தெழுதும் நீங்களே, சமீப காலமாக நிர்வாகத்தின் போக்கில் சீற்றமடைந்திருப்பதை உங்கள் கருத்துக்களில் அவதானித்தேன். நீங்களே கோபப்படும் அளவிற்கு நிர்வாகத்தில் தவறிருப்பதை அவர்கள் இன்னும் உணரவில்லையென்பதே எனது வருத்தம்.)

ஆத்திரம் எதுவும் இல்லை. நியாயத்தை எழுதினேன்.

எப்படித்தான் சொன்னாலும் எவ்வளவு தடவை தான் சொன்னாலும் ................................ முடியாத காரியம் :unsure::wub::wub:

அதையேன் பேசுவான்.. ராமசாமியைப் பற்றி ஆதாரத்தோட பதிஞ்சதையே கருத்துத் திணிப்பு.. என்று சொல்லி.. வெட்ட வெட்ட பதிஞ்சது என்று சொல்லி வார்ணிங் வேற தந்தவை.

ஆனால் மெய்யனப்படுவது பகுதியில்.. பொங்குதமிழ் பகுதியில்.. நகைச்சுவைப் பகுதிகளில் இந்து மதத்தின் மீது நையாண்டித்தனம் நக்கல் தனம் செய்ய வைக்கப்பட்ட கருத்துத் திணிப்புகள்.. அப்பட்டமான கருத்துத் திணிப்புகள் என்று தெரிஞ்சும் எதுவும் செய்யப்படல்ல. எந்த ஆதாரமும் அற்ற தனிநபர்களின் கற்பனைகள் அங்கு இந்து சமயத்தை பழிக்க என்று வைக்கப்பட்ட போது.. அவை அனுமதிகப்பட்டன.

ஆனால் அதே மதத்தை பழிப்பவனை.. ஆதாரத்தோடு அவனின் நிலையைச் சொன்னா வெட்டுறாங்க. வார்ணிங் தாறாங்க. இது எதனைக் காட்டுது..??! நிர்வாகத்துக்குள்ள உள்ளவையின்ர மன நிலைப்படிதான் கருத்துக்கள் தணிக்கையாகுதே தவிர.. தண்டனைகள் வழங்கப்படுகுதே தவிர களவிதி அல்லது களத்துக்கு அவசியம் என்றில்லை..! :unsure:

அதோட சபேசன் தான் யாரைபறியாவது திட்டி கருத்தை திணிப்பேன் எனும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்...

அதுக்கும் பிறகும் அவரின் கருத்தை விட்டு திருக்குறலில் குறல் எடுத்து விளக்கம் போட்டால் அதுக்கு வெளி வந்து சீரிய பதில் அளிக்காமல் ஒளிந்து நிண்று வெட்டுகிறார்கள்....

ஒருவேளை வாலியை ஒளிந்து நிண்டு கொண்ற இராமன் தாங்கள் எண்டு நினைப்போ என்னவோ..??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.