Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??

Featured Replies

உங்கள் ஆதரவிற்கு நன்றி ஜெனரல் அவர்களே!! :lol:

பார்போம் மற்றவர்கள் இதை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று அவர்களும் சம்மதித்தால் புது திரியை நீங்களே உங்கள் தலைமையில் தொடங்கி வையுங்கள்.............. ;)

  • Replies 281
  • Views 80.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உண்மையில் நிருவாகம் விரும்பினால் - மனம் வைத்தால் இதை செய்ய முடியும். அதாவது தற்போது கண்ணாடியில் உள்ள விமர்சனங்களை அந்த தலைப்பில் வைத்த்துக்கொண்டு, கண்ணாடிகளை மட்டும் புதிய ஒரு திரிக்கு நகர்த்திவிடுதலே இலகுவானது.

நாம் எங்கள் எண்ணப்படி தற்போது புதிய தலைப்பை திறந்து பிரயோசனம் இல்லை. நாம் புதிதாக கண்ணாடிக்கு விமர்சனம் எழுத என்று ஒரு தலைப்பை திறந்தாலும் ஏற்கனவே அங்கு உள்ள கருத்துக்கள் அப்படியே இருக்கத்தானே போகின்றன?

ஜெனரல் அவர்களே நமது பாரிய திட்டம் வெற்றி பெற்றுவிட்டது அந்த சந்தர்பத்தில் நான் இருக்கவில்லை என்பது மட்டும் தான் குறை ஆனால் நீங்க சரியாக வழி நடத்தி சென்று இருப்பீங்க தானே.................எமது ஒரு இலக்கு முடிந்துவிட்டது அடுத்த இலக்கை நோக்கிய எமது திட்டம் பயணிக்க வேண்டும்.................எந்த இலக்கிலும் வெற்றி எமகே தான் ஜெனரல் அவர்களே........ :P :P

நாம் எங்கள் எண்ணப்படி தற்போது புதிய தலைப்பை திறந்து பிரயோசனம் இல்லை. நாம் புதிதாக கண்ணாடிக்கு விமர்சனம் எழுத என்று ஒரு தலைப்பை திறந்தாலும் ஏற்கனவே அங்கு உள்ள கருத்துக்கள் அப்படியே இருக்கத்தானே போகின்றன?

ஜம்மு நம்ம கோரிக்கை நிறைவேறி விட்டதல்லவா?

2 உயர்மட்ட ஜெனரல்மார் வைத்து கோரிக்கை நிறைவேற்றாவிடில் பிறகு நடக்கிறது தெரியும் தானே ஜெனரல் நான் சொல்லுறது சரி தானே.............. :mellow::huh:

  • தொடங்கியவர்

எங்கள் இருவரையும் - இரண்டு ஜெனரல்களையும் யாழ் களத்தில் தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் இடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? :mellow:

-----------------------------------------------------------------------------------------------------------------

முற்றம், விம்பகம் போன்ற பகுதிகளிற்கு நான் போவதே இல்லை. எப்பாவது அருமையாகப் போவேன். மற்றவர்கள் போகின்றார்களா என்று தெரியாது... யாழ் கருத்தாடல் தளத்தை மட்டுமே பலரும் விரும்பி வாசிக்கின்றார்களோ? ஏனென்றால் அங்கு ஒருவரும் பதில் கருத்து எழுதுவதில்லையே!

முற்றம், விம்பகம் பகுதிகளை யாழ் கருத்தாடல் தளத்துடன் இணைத்தால் என்ன? இதன் மூலம் பலரின் பார்வைக்கு இவை உள்ளாக கூடும் என்பதோடு கொமண்ட்ஸ் - பதில் கருத்துக்களும் அதிக அளவில் வரும்..

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அல்லது இவ்வாறு இணைப்பது நடைமுறை சாத்தியம் அற்றதா? அதாவது தொழில்நுட்ப சிக்கல்கள் இருத்தல்...

ஜெனரல் அவர்களே நீங்க பேச்சுக்கு சொன்னாலெ பலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திடுவார்கள் கவனம்........ஆனா அதுவும் நல்ல விசயமா தான் இருக்கு அதற்கு பரீசீலனை செய்வோம், :mellow:

ஜெனரலில் இன்றைய புதிய திட்டத்திற்கான முழு ஆதரவையும் நான் வழங்குகிறேன்...........இதனை நிர்வாகம் கவனத்தில் எடுத்து கொள்ளுமாறு இத்தால் பணிவன்படுடன் கேட்டு கொள்கிறேன்.......... :huh:

  • தொடங்கியவர்

உங்கள் தொடர்ந்த ஆரதவுக்கு நன்றி! :P

---------------------------------------------------------------------------------------------------------------------

கேள்விகள்:

1. யாழில் ஒரு கருத்தை எழுதும் போது அதிகப்படியாக எத்தனை முகக்குறிகளை பயன்படுத்தமுடியும்? சிலவேளைகளில் முகக்குறிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது என்று எச்சரிக்கை வருகின்றதே? ஏன்?

2. யாழில் புதிய தலைப்பு ஒன்றை ஆரம்பிக்கும் போது Topic Description என்ற பகுதியில் அதிகம் எழுதும்போது பெட்டிகள் வருகின்றதே ஏன்? அதாவது Topic Description என்ற பகுதியில் குறிப்பிட்டளவு எழுத்துக்களிற்கு மேல் எழுதும்போது பெட்டிகள் வருகின்றன. அப்படியாயின் நாம் இதில் எழுதக்கூடிய அதிகப்படியான சொற்களின் எண்ணிக்கை எத்தினை?

யாருக்காவது பதில் தெரிந்தால் விளக்குங்கள்..

நன்றி! தாங்க்ஸுங்கோ

முற்றம், விம்பகம் போன்ற பகுதிகளிற்கு நான் போவதே இல்லை. எப்பாவது அருமையாகப் போவேன். மற்றவர்கள் போகின்றார்களா என்று தெரியாது... யாழ் கருத்தாடல் தளத்தை மட்டுமே பலரும் விரும்பி வாசிக்கின்றார்களோ? ஏனென்றால் அங்கு ஒருவரும் பதில் கருத்து எழுதுவதில்லையே!

முற்றம், விம்பகம் பகுதிகளை யாழ் கருத்தாடல் தளத்துடன் இணைத்தால் என்ன? இதன் மூலம் பலரின் பார்வைக்கு இவை உள்ளாக கூடும் என்பதோடு கொமண்ட்ஸ் - பதில் கருத்துக்களும் அதிக அளவில் வரும்..

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அல்லது இவ்வாறு இணைப்பது நடைமுறை சாத்தியம் அற்றதா? அதாவது தொழில்நுட்ப சிக்கல்கள் இருத்தல்...

கலைஞன், முற்றம் பகுதியில் தற்போது எதுவித விடயங்களும் இணைப்பதில்லை. வரும் விடயங்களையும் களத்தில் இணைத்து வருகின்றோம். அங்கு இணைக்கப்பட்ட விடயங்கள் அப்படியே இருக்குமே தரவிர புதிதாக எதுவித விடயங்களும் இணைக்கும் திட்டம் தற்போது இல்லை.

தற்போதுள்ள விம்பகம் பகுதி சில காரணங்களால் சில விடயங்கள் செயலிழந்து விட்டன. எனினும் அதனை தற்போது புதிய பகுதிக்கு மாற்றியுள்ளோம். அது முழுமை பெற்றதும் பார்வைக்கு விடலாம் என இருக்கின்றோம். நீங்கள் குறிப்பிட்டது போன்று அதனை கருத்துக்களத்துடன் இணைக்க முடியும். ஆனால் சில பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக அவ்வாறு இணைப்பதைத் தவிர்த்துள்ளோம்.

1. யாழில் ஒரு கருத்தை எழுதும் போது அதிகப்படியாக எத்தனை முகக்குறிகளை பயன்படுத்தமுடியும்? சிலவேளைகளில் முகக்குறிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது என்று எச்சரிக்கை வருகின்றதே? ஏன்?

ஆகக் கூடியது 10 முகக்குறிகளே இணைக்க முடியும்.

2. யாழில் புதிய தலைப்பு ஒன்றை ஆரம்பிக்கும் போது Topic Description என்ற பகுதியில் அதிகம் எழுதும்போது பெட்டிகள் வருகின்றதே ஏன்? அதாவது Topic Description என்ற பகுதியில் குறிப்பிட்டளவு எழுத்துக்களிற்கு மேல் எழுதும்போது பெட்டிகள் வருகின்றன. அப்படியாயின் நாம் இதில் எழுதக்கூடிய அதிகப்படியான சொற்களின் எண்ணிக்கை எத்தினை?

இதில் எண்ணிக்கை குறிப்பிடுவது கடினம். ஏனெனில் தமிழில் யுனிக்கோட் அமைப்பில் எழுதும் போது எழுத்துக்கள் குறைவாகத் தெரிந்தாலும் அதன் பின்னால் நிறைய code கள் உருவாக்கப்படுகின்றது.

உதாரணமாக:

இதில் எண்ணிக்கை குறிப்பிடுவது கடினம்.

என்பது யுனிக்கோட் அமைப்பில் பின்வருமாறு பதிவில் வைக்கப்படுகின்றது.

uc.jpg

ஆனால் ஆங்கிலத்தில் அப்படியல்ல.

  • தொடங்கியவர்

ஐயா மோகன், உங்கள் விரிவான தகவல்களிற்கு மிக்க நன்றி!

எனக்கு என்னவோ முற்றம், விம்பகம் பகுதிகளை பிரதான கருத்தாடல் தளத்துடன் நீங்கள் இணைப்பது நல்லதாகபடுகின்றது.

மேலும், அந்தப் பகுதிகளில் கருத்து எழுதுவதற்கு வேறு ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் பாவிப்பதும் சரியாக தெரியவில்லை. தொழில்நுட்ப சிக்கல்கள், பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், இந்தப் பிரச்சனைகள் எதிர்காலத்தில் தவிர்க்கப் படக்கூடியதாய் இருக்கும்போது பிரதான கருத்தாடல் தளத்துடன் இவற்றை இணைப்பது பல நன்மைகளை கொண்டுவரும் என்று நினைக்கின்றேன்.

சிறந்த நல்ல படைப்புக்கள் எல்லாம் அந்தப் பகுதிகளில் உள்ளன. ஆனால், ஒருவரும் அங்கு அதிகளவில் போகாத காரணத்தால் நானும் போவதில்லை. இதனால், படைப்பாளிகளை நாங்கள் ஊக்குவிக்க, மற்றும் எங்கள் பின்னூட்டல்களை, விமர்சனங்களை அவர்களிற்கு கொடுக்க எம்மால் முடியாமல் போகின்றது.

உதாரணமாக, பவித்திரா என்பவர் அருமையான பல கவிதைகளை அங்கு எழுதி உள்ளார். ஆனால், எமக்கு அந்தப் பகுதிக்கு போவதற்கு ஆர்வம் வராத காரணத்தால் ஒன்றும் எழுதுவதில்லை.

நான் சில காலத்திற்கு முற்றம், விம்பகம் பகுதிகளில் கருத்து - கொமண்ட்ஸ் எழுதுவதற்கு யூசர் நேம் ஒன்றை உருவாக்கினேன். அது இப்போது என்னவென்றே எனக்கு மறந்து போச்சு!

நன்றி!

ஜெனரல் அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.............இதற்கு பூரண ஆதரவை நல்குகிறேன்............... :icon_idea:

அத்துடன் எனக்கு ஒரு சந்தேகம் ஜெனரல் அவர்களே அதாவது எச்சரிக்கை வழங்கபடுகிறது கள உறுப்பினர்களுக்கு...............வழங்

  • தொடங்கியவர்

மட்டறுத்துனர்கள், அல்லது நிருவாகிகள் ஏதாவது பிழை செய்வது போல் இருந்தாலே புதிய தலைப்பு ஒன்றை திறந்து நியாயம் கேட்க டன், நெடுக்காலபோவான், புசுக்குட்டி... இப்படி வீரர்கள் பலர் ஆயத்தமாக இருக்கும் விசயம் உங்களுக்கு தெரியாதோ? ;)

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் - ஒருவர் யாழில் தடை செய்யப்பட்டால் அவரது status.. தமிழில் எப்படி சொல்லுவது -- நிலை - தடைசெய்யப்பட்டோர் என்று காட்டப்படும் இல்லையா? இல்லாதுவிடின் கருத்துக்கள உறவுகள் அல்லது கருத்துக்கள உறுப்பினர்கள் அல்லது validating இப்படி காட்டப்படும்.

ஆனால், நேற்று என்று நினைக்கின்றேன், காவல்துறை கவிதைப் பூங்காட்டு பகுதியில் வன்னிமைந்தன் எழுதியதாக சொல்லி ஒரு கவிதையை ஒட்டி இருந்தார். அங்கு அவர் வன்னிமைந்தன் தான் யாழில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தனக்கு தனிமடல் அனுப்பி இருந்தார் என்று கூறி இருந்தார். உடனே, நான் வன்னிமைந்தனின் புரபைலுக்கு போய் அவரது யாழ் status ஐ பார்த்தேன். அதில் கருத்துக்கள உறவுகள் என்று இருந்தது. அப்படியாயின் காவல்துறை வன்னிமைந்தன் யாழில் தடை செய்யப்பட்டு உள்ளதாக கூறியது தவறா? எங்கே பிழை நடந்தது என்று விளங்கவில்லை..

இதுதான் அந்த லிங்க்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=338492

Edited by கலைஞன்

validating இது நீங்கள் உங்கள் கடவுசோல்லையோ அல்லது மின்னஞ்சல் முகவரியை மாற்றுவதன் மூலம் validating இப்படி வரும். வேணும்னா செய்து பாருங்கோ.

ஜெனரல் அவர்களே நீங்கள் சொல்வது சரி தான் பிழை விட்டா கேட்க பல வீரர்கள் இருகிறார்கள் அப்ப சரி..... ;)

தடைசெய்யபட்டோர் என்று காட்டபடுமா அப்படி இருக்காது என்று நினைகிறேன் இதுவரை தடைசெய்யபட்டோர் ஒருத்தரையும் அவ்வாறு பார்த்ததாக ஞாபகம் இல்லை.............வலிடேட்டிங் நிலா அக்கா சொன்ன காரணம் தான் அதற்காக நீங்க மாற்றி பார்க்க வேண்டாம்........... ;)

நீங்கள் லிங் தந்தா பிறகு தான் பார்தேன்.............அவர் தடைசெய்யபட்டவரா அப்படி இல்லை என்று நினைகிறேன்.......... :icon_idea:

வன்னி மைந்தன் தடை செய்யபப்டுள்ளதாகவும் அவர் கவிதையை தனிமட்லில் அனுப்பி இருந்ததாகவும் காவல்துறை என்ற உறுப்பினர் சொல்லி இருக்கிறார். அப்போ வன்னி மைந்தனால் யாழுக்குள் நுழைய முடியும். யாழில் கருத்துக்கள் எழுத முடியவில்லை. அபப்டித்தானே. ஆனால் அவரின் தகுதி "கருத்துக்கள உறவுகள்" என்று தான் இருக்குது கலைஞன் அண்ணா சொன்னது போல.

தடை செய்யப்பட்டால் அவரின் தகுதி என்னவாக மாறும்?

  • தொடங்கியவர்

தடை செய்யப்பட்டு இருந்தால் தடைசெய்யப்பட்டோர் என்று எழுதப்பட்டு இருக்கும்! நான் இதை எங்கோ பார்த்துள்ளேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு யோசனை:

குமுதம் சஞ்சிகையில் பார்த்து இருப்பீங்கள் பிரார்த்தனை என்று ஒரு பகுதி உள்ளது. இதுபோல் யாழிலும் பிரார்த்தனை பகுதி ஒன்றை உருவாக்குவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

அதாவது பிரார்த்தனைக்காக இரண்டு கருத்தாடல் தலைப்புக்களை ஆரம்பிக்கலாம்..

ஒன்று குறிப்பிட்ட சிலருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வது போல செய்யலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒருவருக்கு உடல் சுகம் அடைந்து பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று..

மற்றது, தினமும் எமது அலுவல்களை ஆரம்பிக்க முன் பிரார்த்தனை செய்வது போல் யாழுக்கு தினமும் நாம் வந்ததும் முதலாவதாக ஒரு பிரார்த்தனை கருத்து ஒன்றை எழுதிவிட்டு எமது கருத்தாடலை ஆரம்பிக்கலாம். இதற்கு என்று இன்னொரு தலைப்பை உருவாக்கலாம்.

இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

அதாவது யாழில் பிரார்த்தனை செய்தல்??

ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான கடவுளை பிரார்த்தித்து கருத்து எழுதலாம்..

உதாரணமாக இன்று முதலாவது கருத்தை பிரார்த்தனை பகுதிக்கு நான் சென்று அதில் ஒரு வேதவாக்கியத்தை அல்லது தேவாரம் ஒன்றை எழுதிவிட்டு மிகுதி களத்தில் இறங்கலாம். அதாவது ஆண்டவனை பிரார்த்தித்தபின் கருத்தாடலில் ஈடுபடல். ஸ்கூலில் பிரார்த்தனை செய்தபின் பாடம் துவங்கிவது மாதிரி. இதன் மூலம் பல மன உலைச்சல்கள் தவிர்க்கப் படக்கூடியதாக இருப்பதோடு, வீண் சச்சரவுகள் குறையும் என்று நினைக்கின்றேன். மூளையும் - மனமும் கொஞ்சம் சாந்தி அடையும்..

உங்கள் விருப்பம் என்ன மாதிரி?

கலைஞன் அண்ணாஅ நீங்கள் சொல்வது நல்ல ஒரு ஐடியா என்பது என் அபிப்பிராயம். அதை நடைமுறைப்படுத்துவது சிறந்தது.ஆனால் நாம் அப்படி கடவுள் பிரார்த்தனை செய்யும் போது யாழில் சிலர் கடவுளே இல்லை என வாதாடுபவர்கள் நையாண்டி பண்ணுவார்களே. அல்லது அதைக் குழப்ப முனைவார்களே. உது பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

கலைஞனின் பிரார்த்தனை பகுதி யோசனை ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

பிரார்த்தனைப் பகுதி என்று ஒன்றை திறந்தால் நிறைய பிரச்சனைகள் வரும். யாழ் களத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் சைவர்கள். ஆகவே இங்கே சைவம் சார்ந்த பிரார்த்தனைகளே இடம்பெறும். அது யாழ் களத்திற்கு தேவையற்ற முத்திரையை கொடுக்கும்.

அத்துடன் கடவுள் இல்லை என்று வாதிடுகின்ற யாழ் கள உறவுகளின் மனதை புண்படுத்துகின்ற ஒரு பகுதியாகவும் இருக்கும்.

கடவுள் இல்லை என்று வாதிடுபவர்களின் கருத்துக்கு தனிப் பகுதியை ஒதுக்குவது என்பது எப்படி ஏற்றுக்கொள்ளப்பட முடியாததோ, அதே போன்று பிரார்த்தனைப் பகுதியும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

கடவுளை பிரார்த்திக்காது, மதபோதகரை அழைத்து மந்திரம் சொல்லியோ ஜெபித்தோ ஆரம்பிக்கப்படாத தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என்பன மேற்கு நாடுகளில் கண்டுள்ள வளர்ச்சியை பாருங்கள்

நம்பர் பார்த்து, திசை பார்த்து, நாள் பார்த்து பூசை செய்து ஆரம்பித்து தினமும் பிரர்த்தனையும் செய்கின்ற எம்மவர்களின் நிறுவனங்கள் பல வீழ்ச்சி அடைவதையும் பாருங்கள்.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதே நல்லது. வேண்டும் என்றால் தன்னம்பிக்கைப் பகுதி என்று ஒன்றை உருவாக்குவது நல்லது.

ஜெனரல் அவர்களே உங்கள் முயற்சி நல்லபடியாக அமைய வாழ்த்துகள்....................... :D

ஆனால் எனக்கு இதில் உண்மயாக நம்பிக்கை இல்லை இப்ப தான் போதிமரத்தில தேறிவருகிறேன் பிறகு நம்பிக்கை வந்தா நிச்சயம் இணைகிறேன்..........ஆனால் நக்கல் எல்லாம் பண்ணமாட்டென் என்பதை தெரிவித்து கொள்கிறேன்........... :lol:

சபேசன் மாமா சொல்வது போல தன்னம்பிக்கை பகுதி மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைகிறேன் ஜெனரல் அவர்களே.............. :D

  • தொடங்கியவர்

வெண்ணிலா, சபேசன், ஜமுனா உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

நீங்கள் இன்னும் இதை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்..

அதாவது இப்போது மெய்யெனப்படுவது பகுதியில் பல தலைப்புக்களில் பல விசயங்கள் இருப்பது மாதிரி, தமிழும் நயமும் பகுதியில் சமய இலக்கியம் எனும் தலைப்பில் ஒரு விசயம் இருப்பது மாதிரி...

இனிய பொழுது பகுதியில் "இன்றைய பிரார்த்தனை" என்று ஒரு தலைப்பில் ஒரு திரியை உருவாக்குவம் என்று நினைக்கின்றேன்.

இதில் தினமும் நான் யாழில் கருத்து எழுதும் போது முதலாவதாக ஒரு பிரார்த்தனை ஒன்றை எழுதிவிட்டு - ஒரு வேதவாக்கியத்தை, தேவாரத்தை எழுதிவிட்டு பின் மிகுதி களத்தில் இறங்கலாம் என்று யோசித்தேன். மற்றவர்களும் தமது கருத்தாடலை ஆரம்பிக்கும் போது முதலாவது ஒரு பிரார்த்தனை கருத்தை இதில் எழுதிவிட்டு பின் மற்றைய பகுதிகளிற்கு செல்லலாம்.

நான் பிரார்த்தனை எழுதும் போது வெறும் இந்துக்களின் பிரார்த்தனையை மட்டும் எழுதாது தினமும் கீழ்வரும் விசயங்களில் பிராத்தனை கருத்தை எழுதுவேன்.

உதாரணமாக கிறீஸ்தவர்களின் பைபிளில் இருந்து ஒரு கருத்து, இந்துக்களின் பிரார்த்தனை கருத்து ஒன்று, மாவீரரை நினைவுகூறும் போற்றும் கருத்து ஒன்று, மற்றும் தமிழ்தாயை நினைவுகூறும் கருத்து ஒன்று.. மற்றும் பெற்றோரை போற்றுதல்.. இப்படி அனைத்தும் கலந்து தினமும் ஒரு பதிவை இடுவேன்.

இதைப்போல் மற்றவர்களும் பிரார்த்தனை கருத்துக்களை எழுதலாம்..

பிரார்த்தனை கருத்து தவிர வேறு ஒரு பதிவும் இங்கு இடப்படமுடியாது!

இந்துக்களாக இருந்தாலும் சரி, கிறீஸ்தவர்களாக இருந்தாலும் சரி, முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, கடவுளை நம்புவர்களாக இருந்தாலும் சரி, கடவுளை நம்பாதவர்களாக இருந்தாலும் சரி.. ஒரு வேலையை தினமும் ஆரம்பிக்கும்போது ஒரு பிரார்தனையை அல்லது தியானத்தை, அல்லது மன ஒருங்கமைப்பை மேற்கொள்வோம் தானே? இதுபோல் யாழிலும் தினமும் முதலாவதாக எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும் என நினைத்து ஒரு கருத்தை எழுதிவிட்டு பின் கருத்தாடல் செய்வதில் என்ன தவறு உள்ளது?

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விருப்பமானால் இந்தப்பகுதியில் தன்னம்பிக்கையை வளர்க்கும் - ஒரு பொன்மொழியை - ஒரு பதிவை இட்டபின் தமது கருத்தாடலை ஆரம்பிக்கலாம்.

எல்லாரும் இதை பின்பற்றவேண்டும் என்று இல்லை..

பிரார்த்தனை தவிர வேறு ஏதாவது அரட்டைகளோ அல்லது ஒருவர் எழுதிய கருத்துக்கு பதில் அளிப்பதோ இந்தப் பகுதியில் தவிர்க்கப்படும்.

தினமும் நான் சுமார் 10 - 20 கருத்துகள் யாழில் எழுதுகின்றேன். இதில் ஆரம்ப கருத்தாக ஒரு பிரார்த்தனை இடம்பெறுவதில் என்ன தவறு உள்ளது?

இதன் மூலம் எம்மை நாம் யாழில் கொஞ்சம் கட்டுப்பாடாக வைத்திருக்க, மற்றும் ஒரு புரிந்துணர்வு, அமைதி ஏற்பட வழி சமைக்கும் என்று நினைக்கின்றேன்.

இப்ப, யாழில் அரட்டைப்பகுதி உள்ளது, டைகர் வானொலி பகுதி உள்ளது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகுதி உள்ளது, காணவில்லை பகுதி உள்ளது, காணாமல் போகின்றோம் பகுதி உள்ளது, பாட்டுக்குப் பாட்டு, கவிதை அந்தாதி, நெடுக்காலபோவானின் கிரீன்பிரிகேட்.. இப்படி பல பகுதிகள் உள்ளன. இதுபோல் இது பிரார்த்தனை பகுதி. இதில் இந்த தலைப்பில் உள்ள விதிகளிற்கு கட்டுப்பட்டவர்கள் கருத்து எழுதமுடியும். இதன்மூலம் என்ன சிக்கல் வரும் என்று விளங்கவில்லை.

நான் தினமும் பிரார்த்தனை கருத்தை எழுதும் போது அனைவருக்கும் பொதுவான வகையிலேயே எழுதுவேன். தனிப்பட்ட ஒரு மதத்தையோ அல்லது குழுவினரையோ மட்டும் பிரதிநிதித்துவம் செய்யமாட்டேன்.

மேலும், யாழில் சைவர்களே அதிகளவில் என்று கூறுகின்றீர்கள். ஆனால், ஆறுமுகநாவலர் என்பவர் சைவசமய தீட்சை பெற்றவர்கள் மட்டுமே சைவர்கள் என்று கூறுகின்றார். யாழில் எத்தனை பேர் தீட்சை பெற்று உள்ளார்கள்? நான் பெறவில்லை... யாழில் பெரும்பாலானோர் சைவர்கள் என்று கூறுவது தவறு...

இதுபோல் இனியபொழுது பகுதியில் கூட்டுப்பிரார்த்தனை என்று ஒரு திரியை ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கின்றேன். இதுபற்றி பின்னர் விளக்குகின்றேன்..

பிரார்த்தனை செய்வதால் யாழுக்கு எதுவித தீங்கும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக நன்மைகளே ஏற்படும். மேலும் விருப்பம் இல்லாதவர்கள் இந்த திரியில் வாசிக்கவோ, எழுதவோ தேவையில்லை.

இப்ப கோயில்கள், தேவாலயங்கள், யோகா நிலையங்கள், தியானம் செய்யும் பட்டறைகள், உடற்பயிற்சி நிலையங்கள் ஒரு நகரில் இருக்கின்றன. ஆனால், எல்லாவற்றுக்கும் எல்லாரும் போய் வருகின்றார்களா? கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் கோயிலுக்கு போக தேவையில்லை. அதற்காக நீ கோயிலுக்கு போகாதே என்று ஒருவரை தடுக்க முடியுமா? விருப்பம் உள்ளவர்கள் விருப்பமான இடங்களிற்கு போய்வரமுடியும் தானே?

அதுபோல் பிரார்த்தனை பகுதிக்கு வந்து கருத்து எழுதவிரும்புபவர்கள் அங்கு வந்து எழுதட்டும். அங்கு வந்து வாசிக்க விரும்புபவர்கள் வாசிக்கட்டும். இது எந்த ஒரு தனிப்பட்ட மதம் சார்பான பகுதி அல்ல. மேலும், நான் எந்த ஒரு தனிப்பட்ட மதம் சார்ந்தவனும் அல்ல.

நீங்கள் விருப்பமானால் 'கடவுள் இல்லை!' இப்படி ஒரு தலைப்பில் யாழில் ஒரு திரியை தொடங்கலாம் தானே? இதற்கு ஏதாவது தடை இல்லையே! இதுபோலவே 'இன்றைய பிரார்த்தனை' என்று ஒரு திரியை - தலைப்பை தொடங்கலாம் என்று யோசிக்கின்றேன்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் கிறிஸ்துமஸ், தீபாவளி, நவராத்திரி, மற்றும் விரதங்கள் இவைபற்றி கூட எதுவுமே யாழில் எழுதக்கூடாது என்று சொல்வது போல் இருக்கின்றதே??

பிரார்த்தனை என்ற பொருளில் திரி - ஒரு தலைப்பு தொடங்குவதால் யாழ் இணையம் எந்தவிதத்திலும் ஏதாவது மதம்சார்பானது அல்லது ஒரு குறிப்பிட்ட கொள்கை உடைய குழுவினர் சார்பானது என்ற எண்ணம் மற்றவர்களிடையே தோன்றும் என்று நான் நினைக்கவில்லை..

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனின் கருத்தை ஆதரிக்கின்றேன்.அதாவது எந்த ஒரு கருத்தும் மற்றவர்களை பாதிக்காத வரை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞனின் வாதம் சரியானது இந்த தலைப்பை தொடக்கினால் தங்களுடைய பரப்புரைகள்

நிர்வணமாகிவிடும் என்பதால் சிலர் அஞ்சுகிறார்கள்...இதற்கெல்லாம

நான் கலைஞன் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டேன்.

செய்திகளுக்கு, புலத்திற்கு, உலகநடப்பிற்கு, துயர்பகிர்வதற்கு என்று தனிப் பகுதிகள் இருப்பது போன்று பிரார்த்தனைக்கும் ஒரு தனிப்பகுதி இருக்க வேண்டும் என்று கலைஞன் விரும்புவதாக நான் புரிந்து கொண்டேன்.

ஏதோ ஒரு பகுதியில் பிரார்த்தனைக்கு ஒரு தலைப்பு தொடங்குவதற்கு யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள்.

ஒரு தலைப்பை தொடங்குவதற்கு எதற்கு கருத்துக் கேட்கிறீர்கள். பேசாமல் ஆரம்பிக்க வேண்டியதுதானே?

நீங்கள் கருத்துக் கேட்டதுதான் குழப்பத்திற்கு காரணம்.

பிரார்த்தனைப் பகுதிக்கு குறிப்பிட்டளவு கள உறுப்பினர்கள் நிச்சயமாக ஆதரவு வழங்குவார்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

தன்னை நம்பாது, இல்லாத ஏதோ ஒன்றை நம்பி தான் செய்கின்ற நன்மை, தீமை அனைத்திற்கும் அதுதான் காரணம் என்று நினைக்கின்ற சமூகம் எம்முடையது.

பாடாசாலைக்கு போனாலும் பிரார்த்தனை, கடை திறந்தாலும் பிரார்த்தனை, கூட்டம் ஆரம்பித்தாலும் பிரார்த்தனை என்று பிரார்த்தித்து பிரார்த்தித்தே இன்று உலகில் மிகச் சிறந்த இனமாக எமது தமிழினம் இருக்கிறது. பிரார்த்தனை செய்யாது தொழில்களையும் கல்வியையும் ஆரம்பித்து பாழாய் போய் நிற்கின்ற மற்றைய இனங்கள் எல்லாம் தமிழர்களின் அதி உச்ச வளர்ச்சியைப் பார்த்து திகைத்துப் போய்நிற்கின்றன

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈபிடிபியும் தமிழர்களுக்கு விடிவு வேண்டி பிரார்த்தனை நடத்தியது. சில மாதங்களுக்கு முன்பு அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட தேசியச் செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காக எம்மவர்களும் பிரார்த்தனை நடத்தினார்கள்.

பிரார்த்தனை என்று வந்துவிட்டால் தமிழர்களுக்குள் எந்த வேறுபாடும் இருக்காது.

ஆகவே கலைஞனே! தயங்காது உங்களின் பிரார்த்தனையை ஆரம்பியுங்கள்

காவல்துறை!

நீங்கள் வன்னிமைந்தனின் கருத்தை இங்கே கொட்டியிருக்கிறீர்கள். உங்களுக்கும் அது ஏற்புடையாக இருப்பதானால்தான் அதை செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இங்கே கலைஞன் பிரார்த்தனை செய்வதால் எங்களுடைய பகுத்தறிவுப் பரப்புரை எப்படி நிர்வாணமாகிவிடும் என்று விளங்கப்படுத்துவீர்களா? தயவு செய்து கவிதை என்று இங்கே எதையும் தராது, உரைநடைத் தமிழிலேயே உங்கள் விளக்கத்தை எழுதுங்கள்.

பிரார்த்தனைப் பகுதியில் "அப்புசாமி! இஞ்சை பகுத்தறிவுக் கருத்து எழுதுற ஆக்களை இல்லாமல் செய்துவிடு" என்று நீங்கள் பிரார்த்தனை செய்தால் அப்புசாமி வந்து எங்களை இல்லாமல் செய்துவிடும் என்பது போன்றும் அதற்கு நான் பயந்து இங்கே பிரார்த்தனைப் பகுதியை எதிர்க்கிறேன் என்பது போன்றும் நீங்கள் தந்த கருத்துக்கள் இருக்கின்றன.

பதிலுக்கு தயவு செய்து கவிதையோடு வரவேண்டாம். உண்மையில் நான் இப்படியான "கவிதைகளுக்குத்தான்" அஞ்சுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடாசாலைக்கு போனாலும் பிரார்த்தனை, கடை திறந்தாலும் பிரார்த்தனை, கூட்டம் ஆரம்பித்தாலும் பிரார்த்தனை என்று பிரார்த்தித்து பிரார்த்தித்தே இன்று உலகில் மிகச் சிறந்த இனமாக எமது தமிழினம் இருக்கிறது. பிரார்த்தனை செய்யாது தொழில்களையும் கல்வியையும் ஆரம்பித்து பாழாய் போய் நிற்கின்ற மற்றைய இனங்கள் எல்லாம் தமிழர்களின் அதி உச்ச வளர்ச்சியைப் பார்த்து திகைத்துப் போய்நிற்கின்றன

:):):lol::o:unsure:

குமாரசாமி!

இது உங்களுக்கு விளங்கவில்லையா?

இன்றைக்கு ஐரோப்பாவை பாருங்கள். எவ்வளவு ஏழ்மையாக இருக்கிறது. எல்லோரும் பட்டினி கிடந்த சாகிறார்கள். கல்வி அறிவு என்பதே இல்லை.

ஆனால் தமிழர்களைப் பாருங்கள். கல்வியை பிரார்த்தனையோடு ஆரம்பித்தார்கள். கல்விக்கு என்று ஒரு கடவுளை வணங்கி தமது கல்வியை ஆரம்பித்ததன் விளைவு, இன்றைக்கு எல்லோரும் சிறந்த கல்விமான்களாக இருக்கிறார்கள்.

எந்தத் தொழிலை ஆரம்பித்தாலும் பிரார்த்தனையோடு ஆரம்பித்து, அதுவும் செல்வத்திற்கு என்று ஒரு கடவுளை வணங்கி, தினமும் பிரார்த்தனை செய்ததன் விளைவு, இன்றைக்கு அனைத்து தமிழர்களும் பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். தமிழர்களின் அனைத்து தொழில் நிறுவனங்களும் கொடி கட்டிப் பறக்கின்றன.

பிரார்த்தனையால் பெற்ற பயனைப் பார்த்தீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.