Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை உறைய வைக்கும் 'பந்த்' கர்நாடகாவில் திரும்புகிறதா 1991?

Featured Replies

 

தமிழர்களை உறைய வைக்கும் 'பந்த்' கர்நாடகாவில் திரும்புகிறதா 1991?

protest.jpg

ச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர்  திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்றுவருகிறது.  பாஜக, மஜத  உட்பட நூற்றுக்கணக்கான கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ளதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள். பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் வீடு புகுந்து தாக்குவோம் என்ற அடாவடி அறிவிப்பு அவர்களை மிரட்சிக்குள்ளாக்கியுள்ளது. 700க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஆதரவோடு  கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெற்றுவருகிறது, கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  மைசூரு, மண்டியா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பந்த் தீவிரமாகவே இருக்கிறது. தலைநகர் பெங்களூருவில் மட்டும் பாதுகாப்புக்காக 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி பந்த் போராட்டத்தின் தீவிரத்தை எடுத்து சொல்கிறது.

ஐடி நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை

கடைகள் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை. வாகனங்கள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சமாக பந்த் கடைபிடிக்காமல் இயங்கிய  ஐடி நிறுவனங்களை  முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர் நிறுவனங்களை உடனடியாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.  எந்த போராட்டத்திலும் பங்கேற்காமல், அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் ஐடி நிறுவனங்களை கூட பரபரக்க வைத்தது இந்த பந்த் போராட்டம். அதுமட்டுமல்லாது பெங்களூரு சர்வதேச விமான நிலையம் முன்பு கன்னட ரக்சன வேதிகேயின் பெண்கள் அமைப்பினர் முற்றுடையில் ஈடுபட்டதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்கள்.

தண்ணீர் திறந்துவிடப்பட்ட நாள் முதல் இன்று வரை போராட்டம் தீவிரமடைந்து வருகிறது மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் குல்பர்கா, பிஜாபூர், மண்டியா, மைசூரு பகுதியில் தாக்குதலுக்குள்ளாகின. மைசூரு - சத்தியமங்கலம், பெங்களூரு - ஓசூர் இடையே தமிழக அரசு பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. "கர்நாடகம் நம்தே, காவேரி நம்தே" 'ஜெயலலிதா டிக்காரா... ஜெயலலிதா டிக்காரா' என கோஷங்களுடன்  மெஜஸ்டிக் ரயில் நிலையம் முன்பு ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட ரக்சன வேதிகே அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் ஆத்திரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

cauvery-protest-.jpg

மிரட்டப்பட்டும் தமிழர்கள்

"கர்நாடக பந்த்துக்கு இங்கு  வாழும் தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லையெனில் 1991-ம் ஆண்டு நடந்தது போல் மீண்டும் ஒரு கலவரம் நடக்கும். தமிழர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்துவோம்"  என கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்த தர்மேந்திரா ஒரு  தொலைக்காட்சிக்கு பேட்டி தர...  அது கர்நாடகவாழ் தமிழர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சவுவளி கட்சியின் தலைவர் வாட்டார் நாகராஜன், ‘‘எங்களுடைய போராட்டத்திற்கு கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் மூட்டையை கட்டிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு ஓடு’’ எனக்கூறி பதற்றத்தை அதிகரிக்கச் செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக வாட்ஸ் அப், சமூக வலைதளங்களில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது அதிகரித்துள்ளது.

இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம், கர்நாடக தமிழ் கூட்டமைப்பு, அனைத்து இந்திய தமிழ் சங்க கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 54 தமிழ் சேனல்களின் சேவை முடக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பதற்றத்தில் தமிழர் வாழ் பகுதிகள்

maxresdefault.jpg

பதற்றத்தின் உச்சத்தில் தமிழர் வாழ் பகுதிகள்

இதற்கிடையில் கர்நாடக கொப்பல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் தமிழர் ராமச்சந்திரன் பள்ளிக் குழந்தைகள் போராட்டத்தில் கலந்துக் கொள்ள கூடாது என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியதால் அவரது வீட்டின் முன்பு 500க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்துள்ளார்கள்.  பெல்லாரியில் தமிழில் நெம்பர் பிளேட் போட்டிருந்த 3 லாரிகளை தீ வைத்து கொளுத்தி இருக்கிறார்கள்.

பெங்களூரில் உள்ள கோரமங்கலா, சர்ஜாபூர், பன்னர்கடா, வொயிட் பீல்ட் போன்ற பகுதிகளில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் அதிகம் தமிழர்கள் வேலை பார்ப்பதால் நேரடியாக கன்னட அமைப்புகள் சென்று ஐ.டி., நிறுவங்களுக்கு விடுமுறை விட வில்லை என்றால் தொலைத்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்தும் இருக்கிறார்கள்.

இதனால் கர்நாடக முழுவதும் பெரும் பதற்றம் சூழ்ந்துள்ளது. தமிழர்கள் வாழக்கூடிய ஓக்லிபுரம், ஸ்ரீராமபுரம், இராமச்சந்திரா நகர், பிரகாஷ்நகர், மாங்கடி ரோடு, சிவாஜி நகர், சாந்தி நகர், அல்சூர், இராமமூர்த்தி நகர், கோரமங்கலா, வண்ணாரப்பேட்டை பெரியார் நகர், இராஜாஜி நகர் பகுதிகளிலும், கர்நாடகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ் சங்கங்கள், திருவள்ளுவர் சிலை போன்ற அனைத்து பகுதிகளிலும் மாநில ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழர்கள் வாழும் பகுதியில் போலீஸ் குவிப்பு

3 நாட்களாக போராடிய கன்னட அமைப்புகள் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின் போது தமிழர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று தமிழர்களை உடைமைகளை சேதப்படுத்துவதோடு அவர்களை அடித்து துரத்தவும் முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது. இது உளவுத் துறை மூலமாக மாநில அரசுக்கு தெரிய வரை உடனே கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா நேற்று இரவு அனைத்து கன்னட அமைப்பின் தலைவர்களையும் அழைத்து, ‘‘நாம் போராடுவது நம்முடைய உரிமை. அதில் யாரும் தலையிட வில்லை. ஆனால் சிறுபான்மை சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தினீர்கள் என்றால் அது தேசிய பிரச்னையாக மாறக்கூடும். நமக்கு பாதகமாகவே அமைந்து விடும். தவறான திட்டம் ஏதாவது வகுத்து வைத்திருந்தாலும் அதை கைவிட்டு நேர்மையான வழியில் போராடுங்கள்... போராடுவோம்.  ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்" என்று வலியுறுத்தியதை அடுத்து தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த பெங்களூரு துணை கமிஷனர் ஹரிசேகரன் தமிழர்கள் பாதுக்காக்கப்பட்டதற்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுத படை போலீஸாரை தமிழர் பகுதிகளில் குவித்திருக்கிறார்கள்.

18BV08.JPG

திரும்புகிறதா 1991?

1991ல் இதே போன்று உச்சநீதிமன்ற தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இடைக்கால தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அப்போது கர்நாடகாவின் முதல்வராக இருந்த பங்காரப்பா, ‘‘நான் ஜெயிலுக்கு போனாலும் போவேன். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மாட்டேன்’’ என்று கூறி தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டார். அதனால் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் போராட்டம் வெடித்தது. இதில் கர்நாடகாவில் உள்ள தமிழர்களை வீடு புகுந்து கன்னடர்கள் தாக்கி சூரையாடினார்கள். இதனால் தமிழர்களுடைய பல கோடி மதிப்பிலான உடமைகள் சூரையாடப்பட்டது. லட்சகணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு திரும்பி வந்தார்கள். சில உயிர் பலிகளும் நேர்ந்தது. இதை சுட்டிக் காட்டியே கர்நாடக தமிழர்களை சிலர் அச்சுறுத்தி வருகிறார்கள்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கவில்லை. தமிழகத்துக்கான உரிமையில் ஒரு பகுதியைக்கூட, இப்படி போராடி மட்டுமே பெற வேண்டியுள்ளது. அதற்கு கூட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா வாழ் தமிழர்கள் அச்சுறுத்தப்படுவதும், மிரட்டப்படுவதும் தான் கொடுமை

http://www.vikatan.com/news/coverstory/68182-cauvery-dispute-statewide-bandh-in-karnataka-recalling-the-violence-against-tamils-in-1991.art

  • தொடங்கியவர்

காவிரி ஆற்று மணலில் உடல் புதைத்து விவசாயிகளின் நூதன போராட்டம்!

Farmers%20Aarpattam%20%282%29.JPG

திருச்சி : தமிழர்களுக்கு மிரட்டல், தமிழர்கள் மீதான தாக்குதல் என கர்நாடகாவில் நடந்து வரும் பந்த் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அதே நேரத்தில், காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டு தரக் கோரி, திருச்சியில் விவசாயிகள் மண்ணில் புதைந்து நூதன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும். காவிரி மேலாண் வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் 6 நாட்களாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக காவிரியில் தமிழக உரிமையை மீட்கக்கோரி இன்று காவிரி ஆற்றில் இறங்கி வறண்ட மணலில் புதைந்து போராட்டம் நடத்தினர்.

Farmers%20Aarpattam%20%284%29.JPG

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில்  ஒரு சிறுமி உட்பட 20க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள், திருச்சி ஶ்ரீரங்கம் மாம்பழச் சாலை  அருகே காவிரி ஆற்றில் இறங்கி வறண்ட மணலில் தங்கள் உடலை புதைத்து கொண்டனர். கழுத்து வரை மணலில் புதைந்து, கழுத்தில் மாலை அணிந்து மத்திய அரசுக்கு எதிராகவும், கர்நாடகா அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த  கோட்டை, ஸ்ரீரங்கம்  போலீஸார்,   மணலில் புதைந்திருந்த சிறுமியை முதலில் மீட்டனர். பின்னர் விவசாயிகளை மணல் குழியில் இருந்து மீட்டு கைது செய்தனர்.

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணுவிடம் பேசினோம்.  “உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட்டது. இதை கண்டித்து கர்நாடக மாநில விவசாயிகள் இன்று பந்த் நடத்தி வருகிறார்கள்.இதை கண்டித்தும், காவிரியில் தமிழகத்துக்கான உரிமையை கோரியும் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம். கர்நாடகாவில் தண்ணீர் வைத்துக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் நாங்கள் வற்றிப் போய் கிடக்கும் காவிரி ஆற்றின் நடுவே மணலில் குழி தோண்டி  புதைத்துக் கொண்டு   போராட்டம் நடத்தியுள்ளோம். காவிரி  வறண்டு கிடக்கிறது என உணர்த்தவே இந்த போராட்டம். இப்போது கர்நாடக அரசு திறந்து விடும் நீர் கடைமடைக்கு கூட வருமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் கூடுதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்றார்.  

 

http://www.vikatan.com/news/tamilnadu/68188-trichy-farmers-protest-by-burying-themselves-at-cauvery-river.art

 

  • தொடங்கியவர்

வயிற்றில் கத்தியால் கீறிக் கொண்ட போராட்டக்காரர்.. காவிரி போராட்டத்தில் விபரீதம்.. தமிழர்கள் பீதி

 

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை எதிர்த்து பெங்களூரில் இளைஞர் ஒருவர் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்டார். கேஆர்எஸ் அணை அருகே 4 விவசாயிகள் தண்ணீரில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றனர். பெங்களூரில் மாநில தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ளது சுதந்திர பூங்கா. இங்கு காவிரி விவகாரம் குறித்து பல்வேறு அமைப்பினர் காலை முதல் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

Man stabs self while protesting during Karnataka bandh

போராட்டத்தில் பங்கேற்ற பெங்களூர் சோளூர்பாளையாவை சேர்ந்த பிரபு (30) என்ற இளைஞர், உணர்ச்சி வேகத்தில் திடீரென கத்தியால் தனது வயிற்றில் கீறிக்கொண்டார். இதனால் ரத்தம் வழிந்து ஓடியது. அதிர்ச்சியடைந்த சக போராட்டக்காரர்கள் அவரை காரில் ஏற்றி அருகேயுள்ள செயின்ட். மார்த்தாஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ரத்தம் கொடுத்தாலும் கொடுப்பேன்.. தண்ணீர் விட்டுக்கொடுக்க மாட்டேன் என பிரபு கோஷமிட்டபடி மருத்துவமனைக்குள் சென்றார்.

 

இதனிடையே மண்டியா மாவட்டத்திலுள்ள கே.ஆர்.எஸ் அணை அருகே காவிரி நதியில் பாய்ந்து 4 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றனர். அதில் மூவர் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு மைசூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு விவசாயியை தேடி வருகிறார்கள்.

Man stabs self while protesting during Karnataka bandh

அதே பகுதியில் மற்றொரு விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் கன்னட மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொந்தளிப்பு கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் உருவாக்கியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/man-stabs-self-while-protesting-during-karnataka-bandh-262336.html

காவிரியில் கூடுதல் தண்ணீர் கேட்கும் தமிழகத்திற்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை 
கர்நாடகாவின் பொறுமையை தமிழகம் சோதித்து பார்க்க வேண்டாம்: குமாரசாமி 


Read more at: http://tamil.oneindia.com/

இந்தியா கூடிய விரைவில் வல்லரசாக வருமாம்.இந்தியா என்ற நாடே கேள்விக்குறியாக இருக்கிறது இதில இது வேறு .....

 

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக. இந்த இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் தற்போது இல்லை. அதனால்தான் தண்ணீர் திறந்துவிடும்படியான தீர்ப்பை வர வைத்துள்ளார்கள் (மத்திய அரசு) என்று பேசிக்கிறாங்க.. :unsure:

  • தொடங்கியவர்

காவிரி நீர் திறப்பை எதிர்த்து பந்த்: கர்நாடகாவில் பதற்றம்- போக்குவரத்து 5-வது நாளாக முடக்கம்

 

 
மைசூருவில் டவுன் ஹால் சாலையில் நடந்த போராட்டம் | படம்: முரளி குமார்.
மைசூருவில் டவுன் ஹால் சாலையில் நடந்த போராட்டம் | படம்: முரளி குமார்.

காவிரி நீரை தமிழகத்துக்கு பகிர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நடைபெறும் பந்த் காரணமாக அங்கு இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு, ராம்நகர், காமராஜ் நகர் முடங்கியுள்ளது. தெற்கு கர்நாடகா முழுவதும் பாதிப்பு முழு வீச்சில் இருக்கிறது.

இதற்கிடையில் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை தொடர்பாக நாளை (சனிக்கிழமை) கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் காவிரி நீரை பங்கிட்டு கொள்ளும் மாநிலங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

திரைத்துறையினர் எதிர்ப்பு:

கர்நாடகா மாநில திரைத் துறையினர் கர்நாடகா திரை சேம்பர் அருகே கண்டன போராட்டம் நடத்தினர். இதில் நடிகர் சிவராஜ்குமார், நடிகை ஸ்ருதி உடன் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்றனர்.

அப்போது நிருபர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு திறமையாக செயல்படவில்லை. இப்பிரச்சினையை சரியாக கையாளாதது நமது தவறு. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வசைபாடுவதால் மட்டும் நிலைமை சீரடையப் போவதில்லை" என்றார்.

விவசாயிகள் தற்கொலை முயற்சி:

மைசூருவில் 4 விவசாயிகள் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெங்களூருவில் விவசாயி ஒருவர் கத்தியால் வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றார். அவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேஆர்எஸ் அணை அருகே பதற்றம்

கேஆர்எஸ் அணையை முற்றுகையிட முயன்ற போரட்டக்காரர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் லேசான தடியடி நடத்தினர். அப்போதும் நிலைமை சீராகாததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இயல்பு நிலை முடங்கியது:

பந்த் காரணமாக கர்நாடகாவில் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைசூரு, மண்டியா, பெங்களூரு போன்ற இடங்களில் பந்த் முழு வீச்சில் நடைபெறுகிறது.

தலைநகர் பெங்களூருவில் மட்டும் பாதுகாப்புக்காக 16,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை. ஆசியாவில் மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர் நிறுவனங்களை மூடுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் போராட்டக்காரர்களை கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விமான நிலையம் முற்றுகை:

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் முன்பு கன்னட ரக்சன வேதிகேயின் பெண்கள் அமைப்பினர் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் கைது செய்யப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்ல டாக்ஸிகள் இயக்கப்படாததால் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகள் அமர்வதற்காக கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிவமோகாவில் முழு ஆதரவு:

சிவமோகா பகுதியில் எப்போதுமே தமிழகத்துக்கு எதிரான முழு அடைப்புப் போராட்டங்களுக்கு பேராதரவு இருக்காது. ஆனால், இன்று சிவமோகா பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. நவ கர்நாடகா நிர்மாணா வேதிகே அமைப்பு சார்பில் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

5-வது நாளாக பாதிப்பு:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீரும் செவ்வாய் நள்ளிரவு காவிரியில் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் திறந்துவிடப்பட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து 5-வது நாளாக மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் குல்பர்கா, பிஜாபூர், மண்டியா, மைசூரு பகுதியில் தாக்குதலுக்குள்ளாகின.

மைசூரு - சத்தியமங்கலம், பெங்களூரு - ஓசூர் இடையே தமிழக அரசு பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

"கர்நாடகம் நம்மதே, காவேரி நம்மதே" என்ற கோசங்களுடன் போராட்டத்தை துவக்கிய கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் மெஜஸ்டிக் ரயில் நிலையம் முன்பு ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால், போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Banashankari_30039_3003967a.jpg

பெங்களூருவில் பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள்

பெங்களூரு தமிழ்ச்சங்கம் ஆதரவு:

இன்றைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம், கர்நாடக தமிழ் கூட்டமைப்பு, அனைத்து இந்திய தமிழ் சங்க கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 54 தமிழ் சேனல்களின் சேவை முடக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வீடியோ இணைப்பு: மைசூரு போராட்டம்

தமிழர்களுக்கு எச்சரிக்கை:

கர்நாடக பந்த்துக்கு அங்கு வாழும் தமிழர்கள் ஆதரவு தெரிவிக்காவிட்டால் 1991-ம் ஆண்டு நடந்தது போல் மீண்டும் ஒரு கலவரம் நடக்கும். தமிழர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்படும் என கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் பிரதிநிதி தர்மேந்திரா பெங்களூருவில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

பந்த் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதுமே பதற்றமான சூழல் நிலவுகிறது.

http://tamil.thehindu.com/india/காவிரி-நீர்-திறப்பை-எதிர்த்து-பந்த்-கர்நாடகாவில்-பதற்றம்-போக்குவரத்து-5வது-நாளாக-முடக்கம்/article9089882.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையும் துணிவுமற்ற தமிழனின் தலைஎழுத்து இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுத்தறிவில்லா மோட்டுக்கூட்டங்கள்.  நகைப்புக்குரிய அரசியலும் அதன் தலைவர்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

காவேரி நதி விடயத்தில்,  யார்..... செய்தது தவறு?  அறிவியல் சம்பந்தமான விவாதம்.
தயவு  செய்து..... இந்தக் காணொளியை  பார்த்து விட்டு, சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

பகுத்தறிவில்லா மோட்டுக்கூட்டங்கள்.  நகைப்புக்குரிய அரசியலும் அதன் தலைவர்களும்.

இங்கு, கூத்தமைப்பும்..... 
அங்கு, திராவிடமும்.....   
தமிழனை, ஒரு வழி பண்ணி விட்டுத்தான்.... 
போவாங்கள்... போல கிடக்கு.  tw_cold_sweat:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.