Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தபெருமான் இந்தியாவிலிருந்து வந்தவர் என்பது ஞானசார தேரருக்கு தெரியாதா?

Featured Replies

பௌத்த சமயத்தை உருவாக்கிய புத்தபெருமானே இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு வந்தவர். அவர் இலங்கைக்குவர முன்பு இங்கிருந்த மதம் என்னவென்று ஞானதேரருக்குத் தெரியுமா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் பகிரங்கமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்திய கவிந்திரன் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் பூர்வீகமாக இருந்துவந்த தமிழ்மக்களை இந்தியாவிற்குப் போ என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. முன்னைய காட்டுமிராண்டித்தனமான அரசின் ஜனாதிபதி மகிந்தவினால் உருவாக்கப்பட்ட பொது பலசேனா இன்றைய அரசாங்கத்தை தமது அரசாங்கம் என நினைத்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடாத்துகிறார்.

எந்தப் பருப்பும் இனி வேகாது. எழுக தமிழ் நிகழ்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அதுவும் தமிழ்மண்ணில் நடாத்துவதற்கு இன்றைய அரசாங்கம் கொண்டு வந்த சமாதான சூழலே காரணம் என்பதை மறந்துவிடலாகாது.

தமிழ்மக்கள் நீண்டகாலமாக மாறி மாறி பலதரப்பினராலும் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். இனியும் ஏமாறக்கூடாது என்று கூறி ஒரு புரட்சி வெடித்திருக்கின்றது. அதற்கு சாட்சியம் கூறுவதைப்போல எழுகதமிழ் நிகழ்வு நடந்தேறியிருக்கிறது.

ஒரு இனத்தின் சுதந்திர வேட்கை நியாயமான ஆதங்கம் என்பவற்றை கொச்சைப்படுத்த ஞானசார தேரர் யார்? முதலில் அவர் இலங்கை வரலாற்றை அறிந்துவிட்டு சவால் விடட்டும். என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் பகிரங்கமாக சவால் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/119713?ref=left_popular

  • கருத்துக்கள உறவுகள்

புத்த பெருமான்... இந்தியாவில் இருந்து துரத்தப் பட்டவர் என்பது தான் உண்மை!

புத்தனால் கூட.. வருணாச்சிரம தர்மத்தை உடைக்க முடியவில்லை !

இன்று காவாலிகளுக்கும், காடைகளுக்கும் அவன் ஒரு காவல் தெய்வமாக இருப்பது தான்...காலத்தின் கொடுமை!

  • கருத்துக்கள உறவுகள்

 ஞானசார தேரருக்கு என்ன, இலங்கையில் உள்ள பவுத்தர்கள் யாருக்குமே  தாங்கள் யார்? தாங்கள் எங்கிருந்து வந்தோம்? புத்தர் என்பவர் யார்? அவர் எங்கிருந்து வந்தார்?  அவரின் போதனைகள் என்ன?  இலங்கையின் சரித்திரம் என்ன? என்று ஒன்றுமே தெரியாது. யாராவது ஊத்தி, ஊட்டி விட்டால், எல்லாம் தலை கீழாய் தெரியும். தெரிஞ்ச்சதையெல்லாம் ஊளையிட்டுக்கொண்டு தெருத்தெருவாய் ஓடவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

புத்த பெருமான்... இந்தியாவில் இருந்து துரத்தப் பட்டவர் என்பது தான் உண்மை!

புத்தனால் கூட.. வருணாச்சிரம தர்மத்தை உடைக்க முடியவில்லை !

இன்று காவாலிகளுக்கும், காடைகளுக்கும் அவன் ஒரு காவல் தெய்வமாக இருப்பது தான்...காலத்தின் கொடுமை!

புத்தர் எப்ப, புங்கையர், சிலோன் வந்தவர்...

சிவனொளிபாத மலை, மனிதனல்லா இறைவன் சிவனின் பாதம் என்பது ஏற்புடையது.

புத்தற்ற பாதம் என்றால்.... கீழ நிண்டு, இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி மலை உச்சில வைத்த மனிதப்பிறவியோ புத்தர்?

இத பற்றி கேட்டல்... ஹி...ஹீ... அது தான் விஸ்ணுவின்ற அவதாரம் தானே புத்தர் என்று கதை விடுவினம்.

சிங்கத் தேப்பனுக்கும், மனித தாய்கும் பிறந்த இனம் என்ற மகாவம்ச பித்தலாட்ட புளுடா தான் எல்லாம். tw_confused:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

புத்தர் எப்ப, புங்கையர், சிலோன் வந்தவர்...

சிவனொளிபாத மலை, மனிதனல்லா இறைவன் சிவனின் பாதம் என்பது ஏற்புடையது.

புத்தற்ற பாதம் என்றால்.... கீழ நிண்டு, இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி மலை உச்சில வைத்த மனிதப்பிறவியோ புத்தர்?

இத பற்றி கேட்டல்... ஹி...ஹீ... அது தான் விஸ்ணுவின்ற அவதாரம் தானே புத்தர் என்று கதை விடுவினம்.

சிங்கத் தேப்பனுக்கும், மனித தாய்கும் பிறந்த இனம் என்ற மகாவம்ச பித்தலாட்ட புளுடா தான் எல்லாம். tw_confused:

புத்தர் இலங்கைக்கு வந்திருக்கிறார் என்று மேலுள்ள கருத்தில் நான்  கூறவில்லையே, நாதம்!

நிச்சயமாகத் தென்னிந்தியாவுக்கு வந்திருக்கிறார் என்று தெரியும்! வடக்கிலிருந்து தெற்கை நோக்கி வரும்போது தான் மகாயான பௌத்தம்...ஹீனயான பௌத்தமாக மாறித் தேர வாதமாகி...கொஞ்சம் மனித வாழ்வின் பலவீனங்களையும் ஏற்று வாழும் மதமாகின்றது! இரண்டாயிரத்து ஆண்டுகளின் முன்னர் இந்தியாவும் இலங்கையும் மண் மேட்டு அணை ஒன்றினால் தொடுக்கப்பட்டிருக்கும் சாத்தியங்களே அதிகமாக இருந்திருக்கும்! எனவே ராமேஸ்வரம் வரை வந்து...பின்னர் நெடுந்தீவு வழியாக..நைனதீவை அடைந்திருக்கக் கூடும் என்பது எனது அனுமானம்!

நெடுந்தீவில் இப்போதும் அழிந்த நிலையில் இருக்கும் வெடியரசன் கோட்டை என்பது ஒரு புத்த கோவிலின் அடிவாரம் என்பது எனது கருத்து! ( பிறகு காட்டிக்கொடுக்கிறான் என்று என்னைப் போட்டுக் கொடுக்கக் கூடாது...சொல்லிப்போட்டன்). இங்கு வாழ்ந்த தமிழர்கள்.. பௌத்தர்களாகவே இருந்தார்கள்!

Delft.jpg

 

fetters+of+ruins+temple%252C+Jaffna+Univ

சாத்வீக மதங்கள் வட இந்தியாவில் தலை எடுத்தது மிகவும்  குறைவு!

வைணவம் கூட... வளர்ந்தது தமிழ் நாட்டில் தான்! 

வட நாட்டில்...இந்து மதத்தின் கொடூரமான பிரிவுகளால் மட்டுமே தலையெடுத்து வளர முடிந்தது!

சாக்தம், (துர்க்கையை வழிபடுதல்), கபாலிகம் ( மண்டையோட்டை வழிபடுதல்), உருத்திர வழிபாடு....இஸ்லாம், குரு நானக்கின் சிக்கிசம் போன்ற மதங்களே வளர்ந்தன! சுபி இஸ்லாம் போன்றவற்றால் வளர முடியவில்லை! 

இந்து மதத்தின்..அசுரர்களை அழிக்கும் சூரன் போர் ( திவாலி) போன்றவையும்... கிருஷ்ணரின் போர்க்கால அவதாரங்கள், மகாபாரதம் இராமாயணம் போன்ற போர் நிகழ்வுகள் போன்றவை மிகவும் பிரபல்யம் பெற்றன!

சாத்வீகம் பேசும் கௌதம புத்தர் ஏளனம் செய்யப்பட்டார்! கேலி செய்யப் பட்டார்! அதனால் தான் புத்தர் துரத்தப்பட்டார் என்று எழுதினேன்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புங்கையூரன் said:

புத்தர் இலங்கைக்கு வந்திருக்கிறார் என்று மேலுள்ள கருத்தில் நான்  கூறவில்லையே, நாதம்!

நெடுந்தீவில் இப்போதும் அழிந்த நிலையில் இருக்கும் வெடியரசன் கோட்டை என்பது ஒரு புத்த கோவிலின் அடிவாரம் என்பது எனது கருத்து! ( பிறகு காட்டிக்கொடுக்கிறான் என்று என்னைப் போட்டுக் கொடுக்கக் கூடாது...சொல்லிப்போட்டன்). இங்கு வாழ்ந்த தமிழர்கள்.. பௌத்தர்களாகவே இருந்தார்கள்!

 

உங்கள் அளவுக்கு ஆழ்ந்த ஆராய்வு அறிவு எனக்கில்லை, புங்கையர்.

எனினும் எனக்குத் தெரிந்த அலம்பல்கள் சில:

ஜேசு, புத்தர் இவர்களது போதனைகள் எதுவுமே அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதிக்கப் பட்டு, மதமாக வளர்ந்து அவர்கள் இறைவணக்கத்துக்கு உரியவர்களாக கருதப் படவில்லை. தமது பெயரில் புதிய மதங்கள் உண்டாகும் என்று அவர்கள் கருதி இருக்க முடியாது.

புத்தர் இந்து மதத்தின் மையப் பகுதியான வாரணாசிக்கு, கடைசிக்கு காலத்தில், நகர்ந்து இருந்தார் என்பதால், அவர் இந்து மதம் கடைப் பிடித்த ஒருவராகவே இருந்திருப்பார்.

இருவருமே கொலை செய்யப்பட்டவர்கள்.

இவர்களது கருத்துக்கள், போதனைகள் காலப் போக்கில், பல நீக்கல்கள், இடைசெருகல்களுக்கு உள்ளாகி, வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தது பேரரசர்களுக்கு சொல்லப் பட, அவர்களது அனுசரணைகளால் உலகெங்கும் பரவியது. 

ரோமர் சாம்ராஜ்ஜியத்தின் அனுசரணையால் ஐரோப்பாவெங்கும், பின்னர் காலனித்துவ வாதத்தினால் உலகெங்கும் பரவியது கிரிஸ்தவம்.

அசோக சாம்ராஜ்ஜியத்தினால் பௌத்தமும் சீன, இலங்கை உள்ளிடட கிழைத் தேயம் எங்கும் பரவியது பௌத்தம். நீங்கள் சொன்ன மகாயானம், தேரவாதம் எல்லாம் காலப் போக்கில் வந்த மாறுதல்கள்.

இன்னுமொரு உதாரணம், 16ம் நூறாண்டில் இங்கிலாந்தில் வளர்ந்த சர்ச் ஒப் இங்கிலாந்து மதப் பிரிவு. காரணம் 8ம் ஹென்றி மன்னர் அனுசரணை.

தென்னகத்தில், கம்போடியாவில், இந்தோனேசியாவில், குறிப்பாக பாலியில் வளர்ந்த சைவத்துக்கு சோழ சாம்ராஜ்ஜியத்தினையும், இலங்கையில் பௌத்தத்துக்கு தேவ நம்பிய தீசனையும் குறிப்பிட முடியும். 

ஆக இன்று இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் காணப் படும் பௌத்தமானது, புத்தரின் ஒரிஜினல் போதனைகளுக்கு நேர் மாறானது.

காட்டுச் சிங்கத்துக்கு, மனித இளவரசிக்கும் பிறந்த குழந்தைகளால், தழைத்த இனம் சிங்களம் என்று கப்ஸா விடும், மகாவம்ச காவியத்தினை, இன்றும், மேலதிகமாக விபரம் சேர்த்து பதித்து வெளியிடும் அறிவு ஜீவிகளும் இருக்கிறார்களே எனும் போது என்ன சொல்ல முடியும்?.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
10 hours ago, புங்கையூரன் said:

சாத்வீக மதங்கள் வட இந்தியாவில் தலை எடுத்தது மிகவும்  குறைவு!

வட இந்தியாவை வன்முறைகளின் உதவியுடனும் ஏமாற்றியும் ஆக்கிரமித்த, தற்போது ஹிந்தி பேசும்  ஆரியர்கள் இரத்தத்தில் ஓடும் வன்முறைகளால் சாத்வீக மதங்கள் வட இந்தியாவில் தலை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.