Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருப்பி அனுப்பப்படும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை – வடக்கு மாகாண முதலமைச்சர்!

Featured Replies

திருப்பி அனுப்பப்படும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை - வடக்கு மாகாண முதலமைச்சர்!

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பும் அளவிற்கு இன்னமும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து நீதி மற்றும் காவற்துறை அமைச்சர்களுடன் வருகை தந்துள்ள ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புமளவுக்கு நாட்டில் நிலமை மாற்றமடையவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து நடாத்தும் ஆட்சியிலும் 17 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் வரைக்கும் திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்வில் அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

‘அனைத்தும் சுமுகமான நிலைமைக்கு வந்துவிட்டதாக நான் கூறவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் கூறியது. எனினும் அது இன்னமும் நீக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதிக்கு பின்னரும் கூட தாக்குதல், துன்புறுத்தல் தொடர்பில் 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டின் தற்போதைய நிலைமை முன்னர் இருந்ததை விட மிகவும் மேம்பட்டுள்ளது. ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

எனினும் யுத்தத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது என என்னால் கூற முடியாது. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாவிடின், நபர்களைக் கைதுசெய்து நீண்டகாலம் தடுத்துவைத்து கடுமையான முறையில் வழக்குகள் பதிவுசெய்யப்படும். ஏற்கனவே உள்ள அரசியல் கைதிகள் விடயத்திலும் இதுவே நடைபெறுகின்றது என தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் வாழும் ஒரு இனத்திற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கப்படாது, அனைவரையும் சமமாக அங்கீகரிக்கும் நிலையை அரசியல் சாசனத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நாம் இந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவந்தோம். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஆதரவு வழங்காவிடின் இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்திருக்காது.

ஆகவே இந்த அரசாங்கமும் எங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று தான். எனினும் அனைத்து மக்களுக்கான சமத்துவத்தையே நாம் கோருகின்றோம். ஒரு சமயத்திற்கு விசேட சலுகை, ஒரு மொழிக்கு விசேட சலுகை, ஒரு இனத்திற்கு விசேட சலுகை என்பதல்ல சமத்துவம் இருக்க வேண்டும் அதனையே கோருகின்றோம்.

வெளிநாட்டில் தஞ்சம் கோரியவர்கள் மீண்டும் நாட்டிற்கு வருவார்களா என நீங்கள் கேட்ட கேள்விக்கு சாதகமான பதிலை வழங்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் என்னைத் தடுக்கின்றது.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, சாதாரண சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். வெளிநாட்டில் தஞ்சமடைந்தவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவந்தால் அவர்களை தடுத்து வைத்து, 15 வருடங்களுக்கு முன்னர் என்ன செய்தீர்கள்? 20 வருடங்களுக்கு என்ன செய்தீர்கள்? 5 வருடங்களுக்கு முன்னர் என்ன செய்தீர்கள் என விசாரணை செய்வார்கள். பாரபட்சம் காட்டப்பட்டமையே அவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட முன்னுரிமை அளித்தது.

ஆகவே அவர்கள் நாடு திரும்புவதற்கு பாதுகாப்பான நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும். முதன்மையாக பயங்கரவாத தடைச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும்.

வேறு ஒரு முறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டுவராமல் இருக்க வேண்டும். கடந்த காலங்கள் தொடர்பில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால் அனைவரும் நாட்டிற்கு வரலாம். அவர்கள் வரவேண்டும். அவர்களை நாங்கள் வரவேற்போம் என குறிப்பிட்டார்.

வடக்கில் தொடரும் நில அபகரிப்பு, அதிகரித்த இராணுவ பிரசன்னம் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் வட பகுதியில் நிலைகொண்டுள்ளனர். உங்கள் நாட்டில் ஜேர்மன் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தது போல் ஆக்கிரமிப்பு படைகளாக அவர்கள் நிலைகொண்டுள்ளனர்.

கொழும்பில் இடம்பெறும் அரசியல் மாற்றங்களால் சில விஸ்தரிப்புக்கள் கட்டுப்பாட்டுக்கள் இருக்கின்றன. எனினும் ஏன் அவர்கள் தொடர்ந்தும் காணிகளை கையகப்படுத்த வேண்டும்? பாதுகாப்பை அவர்கள் வழங்குவதாயின் ஐந்து ஏக்கர் காணியை எடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுங்கள், ஏன் 4 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை ஒரு பகுதியிலும் மற்றுமொரு பகுதியில் 200 ஏக்கர் காணியையும் ஒரு பகுதியில் 1702 ஏக்கர் காணியையும் வைத்திருக்க வேண்டும்? எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவே நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என முதலமைச்சர் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=43608

Monthly Statistical Bulletins 2016

Monthly Statistical Bulletin

Monthly statistical bulletin for the months from January to December which consists of information on tourist arrivals and hotel occupancy was published.

Month 2015 2016* % Cha. 2015/16
January 156,246 194,280 24.3
February 165,541 197,697 19.4
March 157,051 192,841 22.8
April 122,217 136,367 11.6
May 113,529 125,044 10.1
June 115,467 118,038 2.2
July 175,804 209,351 19.1
August 166,610 186,288 11.8
September 143,374 148,499 3.6
October 132,280    
November 144,147    
December 206,114    
Total 1,798,380    
Up to Sep 1,315,839 1,508,405 14.6

http://www.sltda.lk/node/745

மேற்குறிப்பிட்ட திரியில் விலாவாரியா நாடுரீதியா விபரம் இருக்கு. வந்து போனவங்க முக்காவாசிப்பேரும் நம்ம சனங்கள்தான் - எதுவுமே நடக்கல்லையே!!!!

அகதி அந்தஸ்து கிடைத்தவர்கள் ஜாலியா வந்து போகலாம். இங்கு வந்து முதலீடு செய்யுங்கோ என்கிறார் முதலமைச்சர். ஆனால் அகதி அந்தஸ்து கிடைக்காதவர் இங்கு வந்தால் பிரச்சனையாம்.

ஒட்டு மொத்தத்தில் எல்லாம் கப்சாதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன், அகதி அந்தஸ்து கிடைத்தவர்கள் ஒருபோதும் இலங்கைக்கு போக முடியாது. கிடைத்த அகதி அந்தஸ்தை நிரந்தர வதிவுடமைக்கோ அல்லது பிராஜாவுரிமைக்கோ மாற்றியே போகமுடியும்.

வேற்றுநாட்டின் கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு பயணிக்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நடப்பின் அந்த நாட்டின் தூதுவராலயத்தின் உதவி கிடைக்கும்.

17 minutes ago, ஜீவன் சிவா said:

Monthly Statistical Bulletins 2016

Monthly Statistical Bulletin

Monthly statistical bulletin for the months from January to December which consists of information on tourist arrivals and hotel occupancy was published.

Month 2015 2016* % Cha. 2015/16
January 156,246 194,280 24.3
February 165,541 197,697 19.4
March 157,051 192,841 22.8
April 122,217 136,367 11.6
May 113,529 125,044 10.1
June 115,467 118,038 2.2
July 175,804 209,351 19.1
August 166,610 186,288 11.8
September 143,374 148,499 3.6
October 132,280    
November 144,147    
December 206,114    
Total 1,798,380    
Up to Sep 1,315,839 1,508,405 14.6

http://www.sltda.lk/node/745

மேற்குறிப்பிட்ட திரியில் விலாவாரியா நாடுரீதியா விபரம் இருக்கு. வந்து போனவங்க முக்காவாசிப்பேரும் நம்ம சனங்கள்தான் - எதுவுமே நடக்கல்லையே!!!!

அகதி அந்தஸ்து கிடைத்தவர்கள் ஜாலியா வந்து போகலாம். இங்கு வந்து முதலீடு செய்யுங்கோ என்கிறார் முதலமைச்சர். ஆனால் அகதி அந்தஸ்து கிடைக்காதவர் இங்கு வந்தால் பிரச்சனையாம்.

ஒட்டு மொத்தத்தில் எல்லாம் கப்சாதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அட ராமா... அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுபவர்கள் வேறு...
உல்லாசமா ஊர் சுற்ற காசு பணத்துடன் பந்தாவா வந்து இறங்குபவர்கள் வேறு...
தயவு செய்து உங்களிடம் இருந்தால் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுபவர்கள் குறித்த தரவுகள், ஆஹா ஓஹோ என்ற அவர்களின் வாழ்க்கை பதிவுகளையம்  பதிந்து விடுங்கள் ஜீவன்...

9 minutes ago, MEERA said:

ஜீவன், அகதி அந்தஸ்து கிடைத்தவர்கள் ஒருபோதும் இலங்கைக்கு போக முடியாது. கிடைத்த அகதி அந்தஸ்தை நிரந்தர வதிவுடமைக்கோ அல்லது பிராஜாவுரிமைக்கோ மாற்றியே போகமுடியும்.

உண்மை மீரா

நான் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கிடைத்து அதை நிரந்தர வதிவிட அனுமதியாக மாற்றியவர்கள் + பிரஜைகளாக மாறியவர்கள் (இதில் நானும் அடக்கம் - வந்த விதம் வேறுபட்டாலும் நானும் இன்னொரு நாட்டு பிரஜைதானே) பற்றியதே. எனது எழுத்து உங்களுக்கு குழப்பம் விளைவித்திருந்தால் - மன்னிக்கவும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மை மீரா

நான் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கிடைத்து அதை நிரந்தர வதிவிட அனுமதியாக மாற்றியவர்கள் + பிரஜைகளாக மாறியவர்கள் (இதில் நானும் அடக்கம் - வந்த விதம் வேறுபட்டாலும் நானும் இன்னொரு நாட்டு பிரஜைதானே) பற்றியதே. எனது எழுத்து உங்களுக்கு குழப்பம் விளைவித்திருந்தால் - மன்னிக்கவும்.
 
ம் விளங்குது

  • கருத்துக்கள உறவுகள்

Quote

எனினும் யுத்தத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது என என்னால் கூற முடியாது. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாவிடின், நபர்களைக் கைதுசெய்து நீண்டகாலம் தடுத்துவைத்து கடுமையான முறையில் வழக்குகள் பதிவுசெய்யப்படும். ஏற்கனவே உள்ள அரசியல் கைதிகள் விடயத்திலும் இதுவே நடைபெறுகின்றது என தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் வாழும் ஒரு இனத்திற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கப்படாது, அனைவரையும் சமமாக அங்கீகரிக்கும் நிலையை அரசியல் சாசனத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

வந்து போவதுக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. 

எனது கரிசனை எல்லாம் அவர்களின் பாதுகாப்பு + எதிர்காலத்துக்கான உத்தரவாதம் பற்றியது. ஒரு நாடு ஒரு அகதியை ஏற்கமுடியாதென்று கூறுவது அவர்களின் சட்டத்திற்கு உட்பட்டது. அதை நாம் மறுக்க முடியாது. திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கேட்கமுடியாது. இலங்கை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தின எத்தனைபேர் இங்கு வேறுநாட்டு பிரஜாவுரிமையுடன் உல்லாசமாக வந்து போகிறார்களே - அப்ப ஏன் இவர்கள் திரும்பி வரக்கூடாது என்ற கேள்விக்கு பதில் யார்  கொடுப்பார்?

இத்தனை ஆயிரம் மக்கள் கிந்தியாவில் முள்ளுக்கம்பி வேலிக்கு பின்னாலும் இருக்கிறார்களே - அவர்களுக்கு என்ன பதில்.

திரும்பி வருபவர்களுக்கு ஆவண செய்யுங்கள் என்றுதான் கூற வேண்டுமே தவிர, திருப்பி அனுப்பாதே என்பது முட்டாள்தனம். 

1 hour ago, Sasi_varnam said:

அட ராமா... அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுபவர்கள் வேறு...
உல்லாசமா ஊர் சுற்ற காசு பணத்துடன் பந்தாவா வந்து இறங்குபவர்கள் வேறு...
தயவு செய்து உங்களிடம் இருந்தால் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுபவர்கள் குறித்த தரவுகள், ஆஹா ஓஹோ என்ற அவர்களின் வாழ்க்கை பதிவுகளையம்  பதிந்து விடுங்கள் ஜீவன்...

சசி, இனி உங்கள் கேள்விக்கு பதில்:

திருப்பி அனுப்பப்படுபவர்களின் நிலைமை பொருளாராத ரீதியில் மிகவும் கஷ்டம்தான்.  ஏனெனில் அவர்கள் பல லட்ஷங்களை செலவு செய்திருப்பார்கள். அவற்றை இலங்கையோ அல்லது அவர்களின் அகதி அந்தஸ்தை நிராகரித்த நாடோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

உங்களின் பதிலைப் பார்த்தால் சகலரும் பொருளாதார அகதிகள் என்றே கூறுகிறீர்கள் போலவே இருக்குது. இவ்வளவு லட்ஷத்தையும் செலவழித்துவிட்டு திரும்பி வந்து எப்படி ஆஹா ஓஹோ என்று வாழலாம்?.

இதற்காகத்தான் சொன்னேன் - எப்படியும் திருப்பி அனுப்ப வேண்டியவர்களை திருப்பி அனுப்பத்தான் போகின்றார்கள், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கதைப்பதை விடுத்து திருப்பி அனுப்பாதே என்பது தீர்வல்ல. பிரச்னையை தள்ளிப் போடும் தந்திரமே. 

இவருடன் இந்தியாவில் முள்ளுக்கம்பி வேலிக்கு பின்னால் இருக்கும் அகதிகளை பற்றியும் கதைத்திருக்கலாம். மொத்தத்தில் திரும்பி வருவதற்கான ஒரு செயற்பாட்டை, ஒரு ஊக்கத்தை, ஒரு உதவியை கோருவதை விடுத்து வெறுமனே திருப்பி அனுப்ப வேண்டாம் என்பது வெறும் தள்ளிப் போடுதல் + பொறுப்பை உதாசீனப்படுத்தலுமே என்பதுதான் எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஜீவன் சிவா said:

எனது கரிசனை எல்லாம் அவர்களின் பாதுகாப்பு + எதிர்காலத்துக்கான உத்தரவாதம் பற்றியது. ஒரு நாடு ஒரு அகதியை ஏற்கமுடியாதென்று கூறுவது அவர்களின் சட்டத்திற்கு உட்பட்டது. அதை நாம் மறுக்க முடியாது. திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கேட்கமுடியாது. இலங்கை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தின எத்தனைபேர் இங்கு வேறுநாட்டு பிரஜாவுரிமையுடன் உல்லாசமாக வந்து போகிறார்களே - அப்ப ஏன் இவர்கள் திரும்பி வரக்கூடாது என்ற கேள்விக்கு பதில் யார்  கொடுப்பார்?

இத்தனை ஆயிரம் மக்கள் கிந்தியாவில் முள்ளுக்கம்பி வேலிக்கு பின்னாலும் இருக்கிறார்களே - அவர்களுக்கு என்ன பதில்.

திரும்பி வருபவர்களுக்கு ஆவண செய்யுங்கள் என்றுதான் கூற வேண்டுமே தவிர, திருப்பி அனுப்பாதே என்பது முட்டாள்தனம். 

சசி, இனி உங்கள் கேள்விக்கு பதில்:

திருப்பி அனுப்பப்படுபவர்களின் நிலைமை பொருளாராத ரீதியில் மிகவும் கஷ்டம்தான்.  ஏனெனில் அவர்கள் பல லட்ஷங்களை செலவு செய்திருப்பார்கள். அவற்றை இலங்கையோ அல்லது அவர்களின் அகதி அந்தஸ்தை நிராகரித்த நாடோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

உங்களின் பதிலைப் பார்த்தால் சகலரும் பொருளாதார அகதிகள் என்றே கூறுகிறீர்கள் போலவே இருக்குது. இவ்வளவு லட்ஷத்தையும் செலவழித்துவிட்டு திரும்பி வந்து எப்படி ஆஹா ஓஹோ என்று வாழலாம்?.

இதற்காகத்தான் சொன்னேன் - எப்படியும் திருப்பி அனுப்ப வேண்டியவர்களை திருப்பி அனுப்பத்தான் போகின்றார்கள், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கதைப்பதை விடுத்து திருப்பி அனுப்பாதே என்பது தீர்வல்ல. பிரச்னையை தள்ளிப் போடும் தந்திரமே. 

இவருடன் இந்தியாவில் முள்ளுக்கம்பி வேலிக்கு பின்னால் இருக்கும் அகதிகளை பற்றியும் கதைத்திருக்கலாம். மொத்தத்தில் திரும்பி வருவதற்கான ஒரு செயற்பாட்டை, ஒரு ஊக்கத்தை, ஒரு உதவியை கோருவதை விடுத்து வெறுமனே திருப்பி அனுப்ப வேண்டாம் என்பது வெறும் தள்ளிப் போடுதல் + பொறுப்பை உதாசீனப்படுத்தலுமே என்பதுதான் எனது கருத்து.

ஜீவன் என் கேள்விக்கு இவ்வளவு அழகாகஇ நிதர்சனமாக எழுதிய நீங்கள் இதையே இந்த செய்திக்கு இட்ட கருத்தாக இருந்திருக்கலாம். 
எதற்கு ஐயா.... சொல்லவேண்டிய சரியான கருத்தை சொல்லாமல் விட்டு எதையோ சொல்லி நீங்களும் குழம்பி இ நாங்களும் குழம்பி ... 
10 தோப்புக்கரணம் போட வைக்கத்தான் இருக்கு. 

Edited by Sasi_varnam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.