Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் சிறுவர்களுக்கான புற்றுநோய் வைத்திய சாலை கட்ட வடக்கில் இருந்து நடைபயணி

Featured Replies

தெற்கில் சிறுவர்களுக்கான புற்றுநோய் வைத்திய சாலை கட்ட வடக்கில் இருந்து நடைபயணி

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

தெற்கில் சிறுவர்களுக்கான புற்றுநோய் வைத்திய சாலை கட்ட வடக்கில் இருந்து நடைபயணி

 

தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய்  சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி நாளை வியாழக்கிழமை வடக்கில் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. 
 
 
இவ் நடைபவனியில் கலந்து கொண்டு நிதி திரட்டுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியிய் முன்னாள் தலைவர்கள் குமார் சங்ககார, மகேலஜேயவர்த்தன மற்றும் பொலிவூட் நட்சத்திரம் ஜாக்குலன் பெர்னாண்டஸ், பொப் பாடகர்களான பாத்தியா, சந்தூஷ், தொழில் முயற்சி ஒட்டாரா டி ஆகியோரும் இணைந்து கொள்ளவுள்ளனர். 
சுமார் 5 மில்லியன் நிதியினை திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து தெற்கிற்கு 28 தினங்களாக பயணிக்கவுள்ள இந்த நடைபவணி வியாழக்கிழமை யாழ். பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 
 
ஒரு நாளில் சுமார் 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ள இவ் நடைபவனியானது பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம், மாங்குளம், மதவாச்சி, கல்முனை, குருணாகல், கொச்சிக்கடை, கொழும்பு, பாணாந்துறை மற்றும் சீனிகம போன்ற நகரங்களை கடக்கவுள்ளது. 
 
இவ் நடைபவனியில் இணைந்து கொள்வதற்கு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நன்கொடையாளர்களும், 800 ற்கு மேற்பட்ட நடைபவனியாளர்களும் தங்களை பதிவு செய்துள்ளனர். 
இவ் நடைபவனியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், தமது உடற்தகுதிக்கு ஏற்ப ஒரு நாளோ அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களோ இணைந்து கொண்டு நடைபவனிக்கு வலுச் சேர்க்குமாறு ட்ராய்ல் அமைப்பினரும் இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னாள தலைவர்களாக குமார் சங்ககார, மகேலஜெயவர்த்தன ஆகியோர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். 
மேலும் 2015 ஆம் ஆண்டில் கராப்பிட்டிய போதனா வைத்திய சாலையில் அதிகளவிலான புற்றுநோய் மரணங்கள் பதிவாக்கப்பட்டுள்ளன. 
 
மேலும் இவ் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அதனைச் சூழவுள்ள மாகாணங்களிலிருந்து ஏராளமான நோயாளர்கள் வருகை தருகின்றார்கள். 
குறிப்பாக காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை   போன்ற மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, பதுளை மற்றும் களுத்துறை போன்ற தூர பிரதேசங்களில் இருந்தும் நோயாளர்கள் இந்த வைத்திய சாலைக்கு வருகின்றார்கள். 
 
குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் 6 மில்லியன் மக்களுக்கு சேவைகளை வழங்கும் வைத்திய சாலையாக கரப்பிட்டிய வைத்திய சாலை உள்ளது. 
 
இந்நிலையில் குறித்த வைத்திய சாலையில் தனியான புதிய புற்றுநோய் வைத்தியசாலையினை அமைப்பதற்காகவே இவ் நடைபவனி ஊடாக நிதி சேகரிக்கப்படுகின்றது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136695/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா..இன நல்லிணக்கம்......சம்பந்தர் தலமை தாங்கலையோ.....சிரிதரன் பூரணகும்ப மரியாதை செலுத்த அங்க்கலை செல்வம் அடைக்கலனாதன் அங்கப்பிரதட்டண செய்து வரவேற்பார்...எழுக தமிழ் மண்கவ்வும்....

  • கருத்துக்கள உறவுகள்

0628ratatouille_bw.jpg

மூஞ்சூறு ..... தான் போற வழியை காணவில்லை, அதற்குள்... விளக்கு மாத்தையும், காவிக் கொண்டு போக நிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

0628ratatouille_bw.jpg

மூஞ்சூறு ..... தான் போற வழியை காணவில்லை, அதற்குள்... விளக்கு மாத்தையும், காவிக் கொண்டு போக நிக்குது.

உதுதான் விளக்குமாறா சிறியர்????

  • தொடங்கியவர்
யாழில்புற்று நோய் வைத்தியசாலைக்கு நடைபவனி மூலம் நிதி திரட்டல்
யாழில்புற்று நோய் வைத்தியசாலைக்கு நடைபவனி மூலம் நிதி திரட்டல்
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் சிகிச்சைக்கு நிதி சேர்க்கும்  முகமாக இன்று பருத்திதுறையில் நடைபவனி ஒன்று நடைபெற்றது.
 
14593302_1155196231260567_1277282687_n.jpg
 
 
14593237_1155218267925030_1419433709_n%20%281%29.jpg
 
இன்று காலை 8:30 மணியளவில் சர்வமதத் தலைவர்கள் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து பருத்தித்துறை திக்கத்தில் ஆரம்பித்த குறித்த நடைபனியானது வல்லை சந்தி வரை சென்று நிறைவடைந்தது. 
 
14585493_1155196254593898_1899136416_n.jpg
 
காலி கராப்பிட்டியவில் 75௦ மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள புற்று நோய் வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளுக்காக இவ் நடைபவனி நடைபெற்று வருகின்றமை குறிபிடத்தக்கது. குறித்த நடைபவனி ஆறு பிரிவுகளாக வகுக்கப்பட்டு 28 நாட்களுக்கு இடம்பெற உள்ளது.   
 
14593247_1155218254591698_1942036166_n.jpg
 
மேலும் இன்றைய நடை பவனியில் இலங்கை அணியின் முன்னால் தலைவர்களான குமார் சங்ககாரா, மகேல ஜெயவர்த்தனா, ஆகியோர் மற்றும் வடமாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் .தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், பொதுமக்கள், என பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்படத்தக்கது.
 
 
678 கிலோமீட்டரை கொண்ட இவ் நடைபவனியின் இரண்டாம் நாளாக நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://onlineuthayan.com/news/18584

  • தொடங்கியவர்

தவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்களை அகற்ற இந்த நடைபவனி உதவி புரியப் போகின்றது :

 

தவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்களை  அகற்ற இந்த நடைபவனி உதவி புரியப் போகின்றது :

பாதை 2016 திறப்பு விழா - வடமுனை பருத்தித்துறை புனித சேவியர் விளையாட்டு மைதானத்திலிருந்து தெற்கு தேவேந்திர முனை வரையிலான நடை பயணம்


2016ம் ஆண்டு ஒக்டோபர்  6ந் திகதி காலை 7 மணியில் இருந்து

முதலமைச்சர் உரை

குருர் ப்ரம்மா.............
பாதை நிறுவன ஒழுங்கமைப்பாளர்களே, பெருமதிப்புக்குரிய பங்குபற்றாளர்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே,


இன்று இங்கு தொடங்கும் நடை பவனி தெற்கில் புற்று நோயைப் போக்க எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை மட்டுமல்ல. எமது நாட்டில் நடைபெற்ற பல வருட கால தவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரியாமைகள் போன்றவற்றை அகற்றவும் இந்த நடைபவனி உதவி புரியப் போகின்றது.


ஒழுங்கமைப்பாளர்களுக்கு எங்கள் நன்றி. இந் நடை பவனியில் பங்குபற்ற வந்திருக்கும் எமது மதிப்பிற்குரிய அதிதிகளுக்கு எமது நன்றி. நன்றே நடக்க என் வாழ்த்துக்கள். பலர் வெளியில் இருந்து வந்திருப்பதால் சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் அடுத்துப் பேசுவேன்.
நன்றி.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136724/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நடைபவனி ஆரம்பம்: மஹேல, சங்கக்கார பங்கேற்பு

 

புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நடைபவனி ஆரம்பம்: மஹேல, சங்கக்கார பங்கேற்பு

காலி – கராப்பிட்டிய பகுதியில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கு, நிதி சேகரிக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று நடைபவனி ஆரம்பமானது.

இந்த நடைபவனி 670 கிலோமீற்றர் தூரத்தை கடந்து தெற்கின் தெய்வேந்திரமுனையை அடையவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தனவும் கலந்துகொண்டனர்.

28 நாட்கள் முன்னெடுக்கப்படும் இந்த நடைபவனியானது எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி தெய்வேந்திரமுனையில் நிறைவடையவுள்ளது.

இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை மேற்கொள்ளப்பட்ட நடைபவனியில் சேகரிக்கப்பட்ட நிதியில் யாழ். தெல்லிப்பளையில் புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share This

http://newsfirst.lk/tamil/2016/10/புற்றுநோய்-வைத்தியசாலைக/

  • தொடங்கியவர்

புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நடை இன்று ஆரம்பம்.. மஹேலவை கட்டி அணைத்து முத்தமிட்ட பெண். 

 

fb_img_1475774304942

புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நடை இன்று ஆரம்பம்..   மஹேலவை கட்டி அணைத்து முத்தமிட்ட பெண்.

காலி – கராப்பிட்டிய பகுதியில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கு, நிதி சேகரிக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று நடைபவனி ஆரம்பமானது.

இந்த நடைபவனி 670 கிலோமீற்றர் தூரத்தை கடந்து தெற்கின் தெய்வேந்திரமுனையை அடையவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தனவும் கலந்துகொண்டனர்.

28 நாட்கள் முன்னெடுக்கப்படும் இந்த நடைபவனியானது எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி தெய்வேந்திரமுனையில் நிறைவடையவுள்ளது.

நடைபவணி வந்து கொண்டிருந்த போது கிரிக்கெட் வீரர் மஹெல ஜெயவர்த்தனவை கண்ட பெண்ணொருவர் அவரை அணைத்து மகிழ்ச்சியில் அன்பு முத்தமிட்டமை பார்வையாளர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

fb_img_1475774295264fb_img_1475774298240

இந்த நடைபவனி யாழ்.நகர், கொடிகாமம், மாங்குளம், மதவாச்சி, கல்கமுவ, குருநாகல், கொச்சிக்கடை, கொழும்பு, பாணந்துறை மற்றும் சீனிகம அடங்கலாக 28 நகரங்களை இந்த நடைபவனி கடக்கவுள்ளது.

இந்த நிகழ்விற்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களும், 800 நடைபவனியாளர்களும் தம்மைப் பதிவுசெய்து கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த முயற்சியின் மூலமாக திரட்டப்படும் ஒவ்வொரு டொலருக்கும் சமமான தொகையை அரசாங்கம் தன் பங்கிற்கு வழங்குமென உறுதியளித்துள்ளமை இதன் விசேட அம்சமாகும்.

#நிரூஜன் செல்வநாயகம்

fb_img_1475774304942fb_img_1475774292044fb_img_1475774285650fb_img_1475774276681

http://vilaiyattu.com/19053-2/

 

  • தொடங்கியவர்
இரண்டாவது நடைபவனியும் ஆரம்பம்

 

article_1475824885-bbbbbbbbbbbbbb.jpg

-சொர்ணகுமார் சொரூபன்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சமூகத்தினரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த நடைபவனி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (07) காலை ஆரம்பமாகியது.

காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் களேஸ் ஒவ் கரீஜ் நிதியத்தினரின் ஏற்பாட்டில் பருத்தித்துறையிலிருந்து தெற்கு நோக்கிய நடைபவனி வியாழக்கிழமை (06) பருத்தித்துறை முனைப்பகுதியில் இருந்து ஆரம்பமாகியது.

இந்த நடைபவனி தற்போது பருத்தித்துறை வீதிவழியாக துரையப்பா விளையாட்டரங்கை வந்தடைகின்றது.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கு இவ்வாறான நடைபவனியொன்றின் மூலம் நிதி சேகரித்தமையால், அதற்கு கைமாறு செய்யும் முகமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சமூகம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆகியன இணைந்து தனியாக நடைபவனி நடத்தி நிதி சேகரிக்கப்படுகின்றது.

இந்நிதி, துரையப்பா விளையாட்டரங்கில் வந்து சேரும் தெற்குக்கான நடைபவனி ஏற்பாட்டாளர்களிடம் கையளிக்கப்படுகின்றது.

தெற்குக்கான நடைபவனியில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/183436

  • தொடங்கியவர்
காலி புற்றுநோய் வைத்தியசாலைக்கு யாழில் இடம்பெற்ற நடைபவனியில் 06இலட்சம் நிதி திரள்வு
காலி புற்றுநோய் வைத்தியசாலைக்கு யாழில் இடம்பெற்ற நடைபவனியில் 06இலட்சம் நிதி திரள்வு
 
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஒன்றினை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் நடை பவனி  யாழ் நகரை வந்தடைந்தது.டன் இந்த நடைபவனி மூலம் 06 இலட்சம் நிதி கிடைத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இன்றைய தினம் இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற நடைபவனி  காலை 7 மணியளவில் வல்வை சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வரையிலும் இரண்டாவது பிரிவு நடைபவனி காலை 6.30 மணியளவில் தெல்லிப்பழை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம் வரை நடைபெற்றிருந்தது. 
14608170_1156036277843229_731850899_n.jpg
இந் நடைபவனியின் மூலம் சேகரித்த நிதியானது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் உத்தி யோகஸ்தர்களால் துரையப்பா விளையாட்டு அரங்கில் கலேர்ஸ் ஒவ் கரீஜ் நிதியத்திடம் கையளிக்கப்பட்டது.   
 
வல்வை சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு வரை நடைபெற்ற நடைபவனியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, மகேல ஜயவர்த்தன மற்றும் பொது நிறுவனங்களின் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 
 
மேலும், நேற்றையதினம் பருத்தித்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வ ரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம.ஏ. சுமந்திரன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்  கலந்து கொண்டனர். 
14593721_1156036267843230_1635449653_n.jpg
678 கிலோமீற்றர்கள் தூரத்தினை 28 நாட்களில்  ஆறு பிரிவுகளாக சென்றடையும்  இந் நடைபவனியில் 5 மில்லியன் ரூபாய் நிதியினை திரட்ட உள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான ட்றெய்ல் அமைப்பினர் தெரிவித்ததுடன் தற்பொழுது 6 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர். நாளையதினம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் காலை 5.30மணிக்கு ஆரம்பிக்கும் நடைபவனி கொடிகாமம் புகையிரத நிலையத்தை சென்றடையும்.
 
மேலும், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தெற்கிலிருந்து வடக்கை நோக்கிய நடைபவனியில் சேகரித்த நிதியினைக் கொண்டு தெல்லிப்பழையில் புற்றுநோய் பிரிவு வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
14593173_1156033047843552_1496601591_n.jpg
 
14593474_1155992337847623_1000450570_n.jpg
 
14585449_1156040551176135_426175724_n.jpg
 
14610695_1156040614509462_1733914739_n.jpg

http://onlineuthayan.com/news/18632

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.