Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா ஆரம்பம்

Featured Replies

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா ஆரம்பம்

 

 

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் கோலாகலமான முறையில் ஆரம்பமானது.D02515fff.jpg

இன்று காலை மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தர் சமாதியில் நடைபெற்ற வணக்க நிகழ்வினை தொடர்ந்து தமிழ் இலக்கிய விழா ஆரம்பமானது.IMG_0206.JPG

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் ஆரம்பமான கலாசார பவனி கல்லடியில் இருந்து ஆரம்பமானது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவினங்களின் பாரம்பரிய கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த கலாசார பேரணி நடைபெற்றது.IMG_0201.JPG

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் சுவாமி பிரபு பிரபானந்த ஜி மற்றும் கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட கலை இலக்கிய ஆர்வர்கள் உட்பட பல்வேறு கலைகலாசார அமைப்புகளும் கலந்துகொண்டன.IMG_0208.JPG

இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகும் மாகாண தமிழ் இலக்கிய விழா மூன்று தினங்கள் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.IMG_0211.JPG

இரண்டு நாட்கள் இலக்கிய ஆய்வரங்கு நடைபெறவுள்ளதுடன் இந்த ஆய்வரங்கில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கலை இலக்கியத்துடன் தொடர்புடைய பேராளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.IMG_0226.JPG

 மூன்று தினங்களும் காலை நிகழ்வாக ஆய்வரங்குகள் நடைபெறவுள்ளதுடன் பிற்பகல் நான்கு மணி தொடக்கம் ஏழு மணி வரையில் கலை,கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.IMG_0246.JPG

இன்று வியாழக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழi நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கலந்துகொள்ளவுள்ளதுடன் மூன்றாம் நாள் நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.IMG_0266.JPG

இந்த மாகாண இலக்கிய விழாவில் கலைத்துறைக்கு பெரும்பங்காற்றிய மூத்த கலைஞர்கள் 12பேர் வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் இளம் கலைஞர்கள் 18பேர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதுடன் சிறந்த நூல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட ஆறு பேர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.IMG_0373.JPG

இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் ஆர்வலர்கள், மாணவர்கள்,கலைஞர்கள்,பொதுமக்களை கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 IMG_0272.JPGIMG_0282.JPGIMG_0285.JPGIMG_0287.JPGIMG_0291.JPGIMG_0329.JPGIMG_0334.JPGIMG_0338.JPGIMG_0346.JPGIMG_0347.JPGIMG_0355.JPG

http://www.virakesari.lk/article/12573

  • தொடங்கியவர்

தமிழ் இலக்கிய விழா

 

 

தமிழ் இலக்கிய விழா

 

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான, கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் கோலாகலமாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

நேற்றைய இறுதி நாள் நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் அடையாளங்களையும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் வருடாந்த இந்த தமிழ் இலக்கிய விழா நடாத்தப்படுகின்றது.

இந்த மாகாண இலக்கிய விழாவில் கலைத்துறைக்கு பெரும்பங்காற்றிய மூத்த கலைஞர்கள் 12பேர் வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இளம் கலைஞர்கள் 18 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் இருந்து சிறந்த நூல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட ஆறு பேர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் இதன்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

http://tamil.adaderana.lk/news.php?nid=2277&mode=head

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நிகழ்வில் கலந்துகொண்டதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும் படங்களையும் அதற்கான வர்ணனைகளையும் இங்கு பதிந்த நவீனன் அவர்களுக்கு நன்றிகள்!!
 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படங்கள் நானும் நிற்றேன் ஆனால் படத்தில்  இல்லை  பல பாடசாலைமாணவ மாணவிகள் பங்கெடுத்துச் சிறப்பாக நடத்தினார்கள் :11_blush:

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும் பகிர்வும் அழகாய் இருக்கின்றது....! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.