Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குரேயின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். பல்கலை மாணவர்கள்

Featured Replies

குரேயின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். பல்கலை மாணவர்கள்
 
 

article_1477476281-Lette.jpg

 

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம், மாணவர்களால் ஆளுநருக்கே திருப்பிய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாது எனவும் இலங்கையின் அரச கரும்மொழிகள் சிங்கள, தமிழ் மொழிகள் என நினைவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் வட மாகாண ஆளுநர் அனுப்பி வைத்த கடிதம், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடந்த திங்கட்கிழமை (24) யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களினால் வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வடமாகாண ஆளுநர், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினால், மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு கண்டனம் வெளியிட்டும் நீதி வேண்டும் எனக் கோரியும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

இந்த மகஜருக்கான பதில் கடிதத்தை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்குச் சிங்கள மொழியில் மாத்திரமே அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தையே, மாணவர்கள், திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

article_1477476296-Lette1.jpg

 

http://www.tamilmirror.lk/184795/க-ர-ய-ன-கட-தத-த-த-ர-ப-ப-அன-ப-ப-ய-ய-ழ-பல-கல-ம-ணவர-கள-

  • கருத்துக்கள உறவுகள்

அது....

  • கருத்துக்கள உறவுகள்

குரே ஐ தே கட்சி கூடாரத்தின் அமைதியான இனவாத குள்ள நரி. அது இந்த பனங்காட்டு சல சலப்புக்கு எல்லாம் பயப்பிடாது. இருந்து பாருங்க. ஆனாலும் மாணவர்களின் அடிப்படை.. உரிமைக் குரல் வரவேற்கத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், குசும்புக்காரனுக்கு தமிழில் எழுதி அனுப்பியிருக்க வேண்டும் 

  • தொடங்கியவர்

வடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பியனுப்பிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

 

 

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் அனுப்பி வைத்துள்ள கடிதத்தை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

14826176_10205961907241505_1942800547_n.

யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற யாழ். மாணவர்கள் உட்பட யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதியை மாணவர்கள் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

14875395_10205961906961498_95342441_n.jp

தனிச் சிங்களத்தில் ஆளுநரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்தக் கடிதத்தின் ஊடாக, ஆளுநர் எதனைக் கூற வருகின்றார் என்பதை  தம்மால் புரிந்து கொள்ள முடியாது என்று குறிப்பிடடுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கையின் அரச கருமமொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

14826420_10205961906881496_669803745_n.j

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் முற்றுகைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

 14877243_10205961906841495_346876969_n.j

குறித்த போராட்டத்தின் இறுதியில், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினால், மாணவர்களின் படுகொலைக்கு கண்டனம் வெளியிட்டும் நீதி கோரியும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதப்பட்ட மகஜர்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/12786

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நவீனன் said:

வடக்கு ஆளுநரின் கடிதத்தை திருப்பியனுப்பிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் அனுப்பி வைத்துள்ள கடிதத்தை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

14826420_10205961906881496_669803745_n.j

தனிச் சிங்களத்தில் ஆளுநரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்தக் கடிதத்தின் ஊடாக, ஆளுநர் எதனைக் கூற வருகின்றார் என்பதை  தம்மால் புரிந்து கொள்ள முடியாது என்று குறிப்பிடடுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கையின் அரச கருமமொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு அரச அதிகாரிக்கு அவருடைய அரசகரும மொழிகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு அது கட்டாயமல்ல.

ஆளுனர் மாணவர்களுக்கு அனுப்பிய கடிதப் பிரதியிலாவது தமிழ் மொழிபெயர்ப்பும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பெரும்பான்மை  தமிழர்களே! மாணவர்களின் ஆட்சேபனை நியாயமானதே! இருந்தும்  யாழ். பல்கலைக்கழக மாணவர் தலவன், எதற்காக ஆட்சேபனையை ஆங்கிலத்தில் தெரிவிக்க வேன்டும்....?? இது ஏற்புடையதாகத் தெரியவில்லை. :(

  • தொடங்கியவர்

தனிச்சிங்களத்தில் காணப்பட்ட கடிதம் : மாணவர்களின் அதிரடி நடவடிக்கையால் கிடைத்தது வெற்றி

 

 

தனிச் சிங்களத்தில் காணப்பட்ட கடிதத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து இன்று ஆளுநரால் தமிழ் மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.D22255400.jpg

யாழ்.பல்கலை மாணவர்களது கொலைக்கு நீதி விசாரணை கோரி கடந்த திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் ஏ 9 வீதியை மறித்தும் அமைதிப் போராட்டங்களை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தினர். 

இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குரிய மகஜர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடமும் வடமாகாண ஆளுநரின் செயலாளரிடமும் கையளிக்கப்பட்டன.14877243_10205961906841495_346876969_n.j

குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் வழங்கப்பட்ட கடிதத்திற்கு வடமாகாண ஆளுநரினால் பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

குறித்த கடிதமானது தனிச்சிங்களத்தில் இருந்தமையினால் அதில் என்ன எழுதியுள்ளது என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை என குறிப்பிட்டு  கடிதத்தினை பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் பதிவுத் தபால் மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.14826176_10205961907241505_1942800547_n.

இந்நிலையில் இன்று தமிழ் மொழியில் மீண்டும் மாணவர்களுக்கு கடிதமொன்றை ஆளுனர் அனுப்பி வைத்துள்ளார்.

14875395_10205961906961498_95342441_n.jp

http://www.virakesari.lk/article/12813

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.