Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தியை காணவில்லை

Featured Replies

நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா படப்பிடிப்பின் போது மரணம் அடைந்ததாக செய்்திகள் இங்கு வெளியாகியிருந்தன. இது உண்மையா/ பொய்யா என அறிய இங்கு பிரசுரித்திருந்தேன். ஆனால் அந்த செய்தியையே காணவில்லை? தலைப்பு நீக்கப்பட்டிருந்தால் ஏன் எனக்கு தனிமடல் மூலம் அறிவிக்கவில்லை?

தயவுசெய்து எனக்கு உடன் இதுபற்றி அறியத்தரவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே பார்த்தீர் இந்த செய்தியை?

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா படப்பிடிப்பின் போது மரணம் அடைந்ததாக செய்்திகள் இங்கு வெளியாகியிருந்தன. இது உண்மையா/ பொய்யா என அறிய இங்கு பிரசுரித்திருந்தேன். ஆனால் அந்த செய்தியையே காணவில்லை? தலைப்பு நீக்கப்பட்டிருந்தால் ஏன் எனக்கு தனிமடல் மூலம் அறிவிக்கவில்லை?

தயவுசெய்து எனக்கு உடன் இதுபற்றி அறியத்தரவும்.

்ஆதாரம் இல்லையாக்கும்

காக்கா துக்கி கொண்டு போயீருக்கும்ம்

இது காலம் காலமா நடப்பது தானே

நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா படப்பிடிப்பின் போது மரணம் அடைந்ததாக செய்்திகள் இங்கு வெளியாகியிருந்தன. இது உண்மையா/ பொய்யா என அறிய இங்கு பிரசுரித்திருந்தேன். ஆனால் அந்த செய்தியையே காணவில்லை? தலைப்பு நீக்கப்பட்டிருந்தால் ஏன் எனக்கு தனிமடல் மூலம் அறிவிக்கவில்லை?

தயவுசெய்து எனக்கு உடன் இதுபற்றி அறியத்தரவும்.

அச் செய்தியில் எதுவித ஆதாரமும் இல்லாத காரணத்தினால் நீக்கப்பட்டது :rolleyes:

  • தொடங்கியவர்

சரி அது பற்றி ஏன் எமக்கு அறியத்தரவில்லை அண்ணா?

மதுகா இணைத்த வதந்"தீ"யை நீக்கியது முற்றிலும் நியாயமே.

ஒரு மரணம் பற்றிய செய்தியை இப்படி ஆதரம் இன்றி இணைப்பது பொறுப்பற்றது. எத்தனையோ சினிமாத் தளங்கள், செய்தித் தளங்கள் இருக்கிறது. அவைகளைப் பார்த்து அறிந்த பின் இணைத்திருக்க வேண்டும்.

ஆயினும் ஒரு கருத்தை நீக்குகின்ற பொழுது, அது குறித்து கருத்தளருக்கு அறிவிக்கின்ற தார்மீகக் கடமை களநிர்வாகிக்கு இருக்கிறது. ஆனால் அதை இங்கு பின்பற்றுவதாகவும் தெரியவில்லை.

நடவாத ஒன்றை நடந்ததாக கூறமுற்படுவது, மடத்தனம். அதன் உண்மை பொய் அறிந்த பின்னர் இணைத்திருக்க வேண்டும். சூரியாவின் ரசிகர்கள் எவ்வளவு மனம் புண்பட்டிருப்பார்கள். ஒரு பிரபல்யத்தின் மரணம் என்பது சதாரன விடயமன்று, யாழ்களத்தினூடாக பரவ இருந்த ஒரு வதந்தி தடுக்கப்பட்டுள்ளது, யாழ்களத்தை சுப்பனும் கந்தனும் மட்டும் பார்வையிடுவதில்லை, உலகத்தமிழர்கள் முழுவதும் பார்க்கிறார்கள், இணைப்பில் எந்தநேரமும் ஒரு 60, 80பேர் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவரே சிரமப்பட்டு எழுதிய ஒரு ஆய்வுகட்டுரை என்றால், அவருக்கு அறிவித்து இருக்கலாம், இரண்டு வரியில் எழுதும் குப்பைகளுக்கு எல்லாம் தனிமடல் போடுவது என்றால், யாழ்களத்துக்கு உதுதான் வேலையாக இருக்கும். இங்கு வந்து வீண்விதண்டாவாதம் செய்யும் ஒட்டுக்குழுக்களின் வால்களுக்கு எல்லாம் தனிமடல் போட்டுகொண்டு இருங்கோவன். தக்கபதில் அழிக்கப்பட்டிருக்கிறது. செய்தியை போடுபவர் அதை உறுதிப்படுத்தவேண்டும், அல்லது செய்தி பெற்ற இடத்தின் இணைப்பை கொடுக்கவேண்டும். சூரியாவை சாவடிச்சு நேற்று முழுதும் டென்சன் படுத்தி உண்டான மன உழைச்சலுக்கும் சோகத்தை மறக்க குடித்த மருந்துக்கும் முதலில் நஸ்டஈடு வழங்கவேண்டும். :D:rolleyes: B)

ஆமாம், நானும் யாழ் களத்தில் இந்த செய்தியைப்பார்த்து விட்டு மிகவும் அதிர்ச்சியடைந்து விட்டேன். கடவுளே அப்படி ஒன்றும் நடந்துவிடவில்லை என்று நினைத்துப் பார்க்க சந்தோசமாக இருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த பதிவு செய்தியாக அன்றி வினாவாகத்தான் தொடுக்கப்பட்டிருந்தது. இப்படி கதையடிபடுகிறது உண்மையா என்று..??! அதைக் கூட வாசித்து தெளிய முடியாதவர்களா யாழ் கள வாசகர்கள்..???!

வேடிக்கை என்னவென்றால் சூரியாவுக்கு ஏதோ என்னமோ என்று பதறிப்போட்டினமாம் சிலர். அவரை ஒரு சாதாரண மனிதனாகப் பார்த்து அது வதந்தியாகவே இருக்க வேண்டும் என்று பிரார்த்திக் கொள்வது வேறு...இதென்னடா என்றால் ரசிகர் கூட்டம் யாழ் களத்தில் வந்த வினவலால் தற்கொலைக்கே போட்டுது என்பது போல இருக்கிறது சிலரின் வாதம். இதெல்லாம் ரெம்ப ரெம்ப ஓவர். எல்லாம் கோடம்பாக்க ஆதிக்கத்தின் விளைவு. இத்தனை ஈழத்தமிழன் இறந்தும் ஒரு இரங்கல் செய்தி கூட வழங்காதவர்கள் சினிமாக்காரர்கள். அப்படிப்பட்ட மனிதாபிமானமற்றவர்கள் அவர்கள்..! பொங்கலுக்கு உள்ள நடிகைகளோடு கும்மாளம் அடிப்பவர்கள் ஒரு ஈழத்தமிழ் அகதிமுகாமில் ஒரு பொங்கலைக் கழித்திருப்பரா...??! அயல்நாட்டில் உறவுகள் படும் துன்பம் அறிய முயலாதவர்கள் அவர்கள்.

ஏதோ பாவம் சக மனிதன் தமிழன் என்று பரிதாபப்பட முடிந்ததே தவிர... பெரிய பாதிப்பு என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் மக்களின் மனம் நிறைந்தவர்கள் அல்ல. :rolleyes:

நடிகர் சூர்ய ஒரு சிறந்த கலைஞர். இன்றைக்கு தமிழ் சினிமாவில் இருக்கின்ற மிகச் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர்.

கலையை ரசிப்பவர்களை யாழ் களத்தில் வெளிவந்த வதந்தி அதிர்ச்சி அடையச் செய்திருக்கும்.

அது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

சிவகுமார் உண்மையில் ஒரு தமிழினப்பற்றுடையவர் என்பது அனைவருக்கு தெரிந்த விடயம், அவர் யாழை பார்த்திருந்தால் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார். ஒரு உயிருடன் விளையாட எவருக்கும் உரிமையில்லை. ஈழத்தில் உயிர்கள் பறிக்கபடுகிறது என்பதால் தமிழகத்தில் ஒரு உயிர்போவது பெரிய விடயமில்லை என்று கூறுவது எம்மால் ஏற்று கொள்ளக்கூடிய விடயமில்லை.

மற்றது இடப்பட்ட தலைப்பு கேள்விக்குறியுடன் போடப்படவில்லை. தலைப்பை பார்த்துதான் ஊள்ளே வருகிறோம். வேலைக்கு செல்லும் அவசரத்தில் தலைப்புகளை மட்டும் பார்த்து விட்டும் செல்வதுண்டு, தலைப்பு விடயத்தை உறுதியாக கூறி இருந்தது.

தவறை தவறு என்று ஒப்பு கொள்ளவேண்டும். பல உயிரை இழந்ததால் எமக்கு உயிரின் அருமை தெரியும்.

"வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் தானும் வாடினாராம் வள்ளலார்"

வாடவிட்டாலும் பறவாயில்லை வதந்திகளையாவது பரப்பாது இருப்போம். யாழின் நம்பகத்தனமையை கட்டிக்காப்போம் :rolleyes::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இன்னொரு விடயம் உணர்த்தப்பட்டுள்ளது. வெறும் தலைப்பைப் பார்த்துவிட்டு செய்தியைத் தீர்மானிக்க வேண்டாம் என்பது. தலைப்பிட்டதுதான் தவறு எண்டால் அதை நிர்வாகம் மாற்றி இருக்கலாம். அவர்களும் கவனிக்கவில்லைப் போல.

அதே வள்ளலார் வாழ்ந்த மண்ணில் தான் பட்டினிச்சாவும்.

மற்றும் படி சூர்யா ரசிகர்கள் ஏங்கினர் மடிந்தனர் என்பதெல்லாம் யாரும் சொல்லக் கூடிய கற்பனையே.. அப்படி மடிவது கூட முட்டாள் தனமானது..! :rolleyes:

்ஆதாரம் இல்லையாக்கும்

கறுப்பி மேம், உங்களுக்கும் தான் அடிக்கடி ஆதாரம் கொடுக்காமல் ஒட்டி விட்டு ஓடிப் போயிடுறீங்க.! :P :D

சபேசன் விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் ஆக்கதிர்கள்.

சும்மா காதால் கேட்டதை அதுவும் ஒருவர் இறந்ததை கேட்டுவிட்டு லட்சக்கனகாக நேயர்கள் பார்க்கும் ஒரு இனையத்தில் இப்படி தவறான செய்திகளை போட்டால்? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே களப்பொறுப்பாளரால் விளக்கம் தரப்பட்டுள்ளதால் தலைப்பு மூடப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.