Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது-மாவை சேனாதிராஜா

Featured Replies

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது-மாவை சேனாதிராஜா
 
 
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது-மாவை சேனாதிராஜா
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது என  யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 
 
தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றத்தில் உள்ள போதிலும், தேியப்பட்டியலில் தெரிவான மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் 'ஏஜ்ன்ட்' போன்று செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பி ட்டுள்ளார்.  
 
இதுகுறித்து மாவை சேனாதிராஜா மேலும் தெரிவிக்கையில், மீன்பிடிக்க பல இடங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் 300 க்கும் அதிகமான லொறிகளில் மீனையும் மரக்கறி களையும் தென்னிலங்கைக்கு எடுத்துச் சென்று வந்தன. 
 
வடக்கிலுள்ள மக்களின் கணிசமான நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அண்மை யில் ஜனாதிபதி ஒரு தொகுதி நிலங்களை விடுவித்தார். ஆனால் இப்பகுதிகளில் படையினர் மீண்டும் வேலிகளை இட்டுள்ளனர்.
 
கோயில்கள்,வீடுகள்,பாடசாலைகள் என்பன அதிகரிக்கப்பட்ட போதும் அவற்றை கட்டி யெழுப்ப போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. பெண்களை தலைமையாகக் கொண்ட 90 ஆயி ரம் குடும்பங்கள் இருக்கின்றன. யுத்தத்தினால் சேதமடைந்த பகுதி மக்கள் தேசிய அரசாங்க த்தை நம்பியிருந்தனர். இனப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கிடைக்கும் என காத்திருந்தார்கள்.
 
65,000 பொருத்து வீடுகளை தலா 2.1 மில்லியன் செலவில் நிர்மாணிக்க மீள்குடியேற்ற அமை ச்சர் முயன்று வருகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி பலரும் அந்த வீடுகள் பொருத்தமற்றவை என்று கூறியிருந்தார்கள்.
 
ஒரு இலட்சத்து 2 ஆயிரம் வீடுகளை இந்தப் பணத்தில் நிர்மாணிக்க முடியும். நல்லிணக்க குழுவின் கூட்டத்திலும் இந்த விடயம் பேசப்பட்டது. அத்திவாரம் கொண்ட சீமெந்து வீடுகளை கட்டும் திட்டத்தை மீள்குடியேற்ற அமைச்சர் ஏன் தட்டிக்கழிக்க வேண்டும். 
 
எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு நாடாளுமன்றம் வரவில்லை. தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். 
 
தேசியப்பட்டியலில் வந்த அமைச்சர் சுவாமிநாதன் 'ஏஜ்ன்ட்' போன்று செயற்பட்டு வருகிறார். பொருத்துவீட்டுத் திட்டத்தை திணிக்க முயன்று வருகிறார். அவர் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டை ஆதரிப்பதா இல்லையா என ஆராய்ந்து வருகிறோம்.
 
இந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது நியாயமா என மக்கள் கேட்கி ன்றனர். பிக்குமாரும், இராணுவத்தினரும் பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த சிலை களை வைக்கின்றனர். 
 
மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் கோவில்களுக்கு முன்னால் புத்தர் சிலை வைக்கப்படுகின்றது. ஜனாதிபதி  இதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். யாரும் விரும்பியவாறு பௌத்த மதத்துக்கு விரோதமாக இன முரண்பாடு ஏற்படும் விதத்தில் புத்த சிலை வைப்பதை நிறுத்த வேண்டும். 
 
இனப்பிரச்சினையை தீர்க்க இந்த நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்ப டவுள்ளது.. உபகுழுக்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. சர்வதேச சமூகத்தின் மீது நாம் நம்பிக்கையிழக்கவில்லை. நாட்டை பிரிக்க கோரவில்லை. 
 
சமஷ்டி தீர்வை கோருகிறோம். அதிகாரத்தை முழுமையாக பகிர வேண்டும். கொடுத்த அதி காரம் திருப்பி பெறப்பட்டது. ஒற்றையாட்சி தீர்வை நம்ப முடியாது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டார நாயக்க தான் முதலில் சமஷ்டி தீர்வு பற்றி பேசினார். 
 
முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் நாம் ஒன்றாக வாழ வேண்டும். இந்த நாட்டுக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது. 
 
வேறு நாடுகளில் உள்ள சமஷ்டி அதிகாரமுறைக்கு ஒத்த தீர்வு இங்கு வழங்கப்பட வேண்டும். எமது எம்பிக்களை வற்புறுத்தி வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்க கூறியுள்ளோம். ஒன்றிணைந்த திட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் நாடாளு மன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். 
 

http://www.onlineuthayan.com/news/20362

1 hour ago, நவீனன் said:

தேசியப்பட்டியலில் வந்த அமைச்சர் சுவாமிநாதன் 'ஏஜ்ன்ட்' போன்று செயற்பட்டு வருகிறார். பொருத்துவீட்டுத் திட்டத்தை திணிக்க முயன்று வருகிறார். அவர் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டை ஆதரிப்பதா இல்லையா என ஆராய்ந்து வருகிறோம்.

 

சுவாமிநாதன் மனநலப் பிரச்சினைக்கு ஆட்பட்டவர், ஒரு கைக்கூலி என்று மாவையே சொல்லுமளவு மோசமானவராக சுவாமிநாதன் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில்

அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான சுவாமிநாதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணையம், கல்விச் சேவைகள் குழு ஆகியவற்றில் உறுப்பினராக நியமித்தார். பின்னர் அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசாவின் கீழ் உள்ளூராட்சி சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் சேவையாற்றினார். 2002 இல் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[6][7]

அரசுத்தலைவர் விஜயதுங்கா மேல்மாகாணசபை ஆளுனர் சுப்பையா சர்வானந்தாவைசர்ச்சைக்குரிய வகையில் பதவி நீக்கம் செய்ததை அடுத்து, அவரது இடத்துக்கு சூன் 2004 இல் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.[8]

2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல்உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2015 சனவரி 12 இல் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2] மீண்டும் இவர் 2015 செப்டம்பர் 4 அன்று புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9] [10][11] 2015 நவம்பர் 11 முதல் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.[3"


ஆள் அப்பிடி ஒரு விசுவாசிபோலகிடக்கு பிறகு எப்படியவர் தமிழருக்கு நல்லது செய்வார்....

உபயம் விக்கிபீடியா

  • தொடங்கியவர்

தேசிய அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழக்­க­வில்லை

mavay-1f8fa468b7e2848c4f071742eabb2d9842f5a5a9.jpg

 

2 ஆம் வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்பில் ஆத­ரவு வழங்க காரணம் என்­கிறார் மாவை.எம்.பி.

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்­பிற்கு ஆத­ர­வ­ளிப்­பது தொடர்பில் எமது உறுப்­பி­னர்கள் விரும்­பி­யி­ருக்­காத போதும் தேசிய அர­சாங்­கத்தின் மீது இன்­னமும் நாம் நம்­பிக்கை இழக்­கா­ததன் கார­ணத்தால் ஆத­ர­வ­ளிக்கும் முடிவை எடுத்தோம் என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்­வைக்­காண முடி­யாது என்­ப­தா­லேயே சமஷ்டி அடிப்­படை ரீதி­யி­லான தீர்வு தேவை­யா­க­வுள்­ளது. முஸ்­லிம்­களின் உரி­மை­களும் வென்­றெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யா­க­வுள்­ள­தா­கவும் அவர் சபையில் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை 2017ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­ய­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் பல்­வேறு சலு­கைகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது உரையில் கூறி­யி­ருந்தார்.

 சலு­கைகள் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்ற போதும் அந்த சலு­கை­களில் எவ்­வாறு நடை­முறை ரீதியில் வழங்க முடியும் என்ற கேள்வி எமக்­குள்­ளது. யுத்தம் நிறை­வ­டைந்து ஏழாண்­டுகள் ஆகின்ற போதும் 2017ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் மொத்த ஒதுக்­கீட்டில் 21.8சத­வீதம் பாது­காப்புச் செல­வீ­னங்­க­ளுக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. மக்­களின் வரிப்­ப­ணத்தில் 21.8சத­வீதம் பாது­காப்புச் செல­வீ­னங்­க­ளுக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.  

இம்­முறை வரவு செல­வுத்­திட்­டத்தில் கல்வி அமைச்­சுக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள தொகை குறித்து நாம் வர­வேற்பைத் தெரிவு செய்­ய­மு­டியும். அதே­நேரம் மாகாண சபைக்­கான ஒதுக்­கீ­டு­களை பார்க்­கின்ற போது அனைத்து மாகா­ண­ச­பை­க­ளுக்கும் சிறு­சிறு வித்­தி­யா­சத்­துடன் ஒதுக்­கீ­டுக்ள வழங்­கப்­பட்­டுள்­ளன.

இரு­மா­தங்­க­ளுக்கு முன்­ன­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நாம் சந்­தித்­தி­ருந்­த­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­ட­வை­யாகும். ஆகவே அந்த மாகா­ணங்­களில் அனைத்து தேவை­க­ளையும் கருத்­திற்­கொண்டு அதற்­கான ஒரு மதிப்­பீட்­டைச்­செய்து ஒருங்­கி­ணைந்த ரீதி­யி­லான செயற்­திட்­டத்தை முன்­வைக்­க­வேண்­டு­மென கேட்­டக்­கொண்­டி­ருந்தோம். ஆனால் அவ்­வா­றா­ன­தொரு செயற்­பாடு மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

வடக்­கிற்கும் கிழக்­கிற்கும் தனி­யா­ன­தொரு அபி­வி­ருத்திச் செயற்­றிட்டம் அவ­சியம் என எமது தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான சம்­பந்தன் இந்த சபையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். ஆகவே அந்த விடயம் தொடர்­பாக அர­சாங்­கத்­த­ரப்­பினர் கவனம் செலுத்த வேண்டும்.

ஒட்­டு­மொத்­த­மாக இலங்­கையில் 2.1வீத­மா­ன­வர்கள் வறு­மைக்­கோட்­டுக்கு உட்­பட்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள். இவர்­களில் 1.2சத­வீ­த­மா­ன­வர்கள் 2டொலர்­க­ளுக்கும் குறை­வான வாரு­மா­னத்­தையே நாளொன்­றுக்கு பெறு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வா­றி­ருக்­கையில் வடக்கு கிழக்கு பிர­தே­சத்தில் எமது மக்­களில் இலட்­சக்­க­ணக்­கா­ன­வர்கள் அகதி முகாம்­க­ளிலும் நண்­பர்­க­ளி­னு­டைய வீடு­க­ளிலும் இன்றும் வசித்து வரு­கின்­றார்கள். அவர்கள் தமது சொந்த நிலத்தில் குடி­யே­று­வ­தற்­காக காத்­தி­ருக்­கின்­றார்கள்.

மாறிய காலம்

ஒரு காலத்தில் விசே­ட­மாக வடக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து மரக்­க­றிகள், கட­லு­ண­வுகள் என சுமார் 300 லொறிகள் நாளொன்­றுக்கு தென்­னி­லங்கை நோக்கி வருகை தந்து விற்­பனை செய்யும் நிலைமை இருந்­தது. ஆனால் இன்­றைய காலத்தில் நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது.

வடக்கு கிழக்கில் மீன்­பி­டி­து­றைகள் கடற்­ப­டை­யி­னரில் பிடியில் இருக்­கின்­றன. பொது­மக்­களின் விவ­சாய நிலங்கள் இரா­ணு­வத்­திடம் உள்­ளன. இவற்­றுக்கு மேலாக தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து வியா­பா­ரிகள் விற்­பனை நிலை­யங்கள் வடக்கை ஆக்­கி­ர­மித்­துள்­ளன.

இவ்­வா­றான நிலை யினால் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட எமது மக்கள் இரண்டு டொல­ருக்கும் குறை­வான வரு­மா­னத்­தையே அதி­க­மாக பெறு­கின்­றார்கள். மாத­மொன்­றுக்கு நாற்­பத்­தொரு ஆயிரம் ரூபா வரு­மா­ன­மாக பெறு­கின்­றார்கள் என்­பதை வடக்கு கிழக்கை மைய­மாக வைத்து பார்க்­கையில் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. விசே­ட­மாக யுத்­தத்தின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட பெண்கள் குடும்­பங்­க­ளுக்கு தலை­மைத்­து­வத்தை தாங்­க­வேண்­டிய துர­திஷ்­ட­மான நிலை­மைக்குள் உள்­ளன.

அவர்கள் தொழில்­வாய்ப்­புக்­க­ளுக்­காக, அன்­றாட வாழ்­வா­தா­ரத்­திற்­காக மிகவும் கடி­ன­மான நிலை­மை­க­ளுக்குள் இருக்­கின்­றார்கள். அதற்­காக விசேட செயற்­திட்­டங்­களை இந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் அறி­மு­கப்­ப­டுத்­த­வில்லை என்­பதை இட்டு நாம் கவலை அடை­கின்றோம்.

போரின் பாதிப்பு

போரின் போது ஊன­முற்ற படை­வீ­ரர்­க­ளுக்கு ஓய்­வூ­தியம் வழங்­கு­வது தொடர்­பாக அர­சாங்கம் உறு­தி­மொ­ழி­களை வழங்­கு­கின்­றது. ஆனால் எமது பகு­தி­களில் யுத்­தத்தின் கார­ணத்தால் அவ­ய­வங்­களை இழந்த ஆண்­களும், பெண்­களும் தமது வாழ்க்­கையை கொண்டு நடத்த முடி­யாது திண்­டா­டு­கின்­றனர். அவர்­க­ளுக்கு அர­சாங்கம் என்ன பதி­ல­ளிக்­கப்­போ­கின்­றது. அவர்­க­ளுக்கு எவ்­வா­றான உத­வி­களை வழங்­கப்­போ­கின்­றது என்­பது எமது கேள்­வி­யா­கின்­றது.

ஆக்­கி­ர­மிப்பு

வடக்கு கிழக்கில் தற்­போதும் படை­யி­னரின் ஆக்­கி­ர­மிப்பு தொடர்ந்த வண்­ண­மே­யுள்­ளது. பௌத்­தர்கள் வாழாத இடத்தில் புத்தர் சிலைகள் நிறு­வப்­ப­டு­கின்­றன. பௌத்த விகா­ரகைள் அமைக்­கப்­படும் முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக எனது சொந்த பகு­தி­யான வலி.வடக்கில் அண்­மையில் இரா­ணு­வத்­தி­னரால் விடு­விக்­கப்­பட்ட பகு­தியில் இந்து ஆலயம் காணப்­பட்ட இடத்தில் பௌத்த விகாரை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதே­போன்று தான் கிளி­நொச்­சி­யிலும், முல்­லைத்­தீ­விலும் திரு­கோ­ண­ம­லை­யிலும் நையி­னா­தீ­விலும் நிலை­மைகள் தொடர்ந்­த­வண்­ண­முள்­ளன.

பௌத்­தர்கள் வாழாத இடத்தில் ஏன் இவ்­வா­றான விகா­ரை­களும், புத்தர் சிலை­களும் என்ற கேள்வி எமது உறுப்­பி­னர்­களால் எம்­மி­டத்தில் கேட்­கப்­ப­டு­கின்­றன. இதனை நல்­லி­ணக்கம் பற்றி பேசும் அர­சாங்­கத்­த­ரப்­பி­ன­ரா­கிய நீங்­களே தடுத்து நிறுத்­த­வேண்டும்.

தற்­போது மட்­டக்­க­ளப்பில் ஒரு பௌத்த தேரர் மிகவும் மோச­மாக இன­வா­தத்தை தூண்டும் வகையில் சிறு­பான்­மை­யி­னரை அச்­சு­றுத்தும் வகையில் நடந்­து­கொள்­கின்றார். இது­போன்ற செயற்­பா­டுகள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். இல்­லா­விட்டால் மோச­மான நிலை­மைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு விடும்.

இனப்­பி­ரச்­சினை தீர்வு

நீண்­ட­கா­ல­மாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வொன்றை ஏற்­ப­டுத்­து­மாறு நாம் தொடர்ந்து போரா­டி­வ­ரு­கின்றோம். நியா­ய­மான அர­சியல் தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற சர்­வ­தேச சமு­கத்­திடம் கோரி­நின்றோம். வலி­யு­றுத்­தினோம். அதன் பிர­காரம் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றாக இணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்­ளன. ஒற்­றை­யாட்­சிக்குள் எமது மக்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­வா­தற்­கான சூழல் ஏற்­ப­டுத்த முடி­யாது என்­பதில் நாம் தெளி­வாக இருக்­கின்றோம். அதன் கார­ணத்தால் தான் சமஷ்டி முறை­மை­யி­லான தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம்.

இந்த நாட்டில் கடந்த காலத்தில் 13ஆவது திருத்­தச்­சட்டம் இந்­தி­யாவால் கொண்­ட­வ­ரப்­பட்ட போதும் அதனை அடிப்­ப­டை­யாக வைத்­துக்­கொண்டு தமி­ழர்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வை வழங்­கு­வ­தற்­காக முன்­னோக்கிச் செல்­ல­வேண்­டு­மென்றே கூறப்­பட்­டது.

அத­னைத்­தொ­டர்ந்து சந்­தி­ரிகா அம்­மை­யாரின் காலத்தில் கலா­நிதி நீலன் திருச்­செல்­வமும் தற்­போது திசை­மா­றிப்­போ­யுள்ள பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரீஸும் இணைந்து பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் என்­ற­வ­கையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்ட தீர்வு திட்ட வரை­பொன்றை கொண்­டு­வந்­தார்கள். அதனை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் எதிர்த்­தார்கள்.

தற்­போது நல்ல சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது. எமது மக்­களின் கோரிக்­கைகள் ஆட்­சி­யா­ளர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன. அதன் பிர­கா­ரமே எமது மக்கள் அவர்­க­ளுக்­கான ஆணையை வழங்­கி­னார்கள். அதன் கார­ணத்தால் நாம் தேசிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்றோம்.

எமது மக்கள் சுதந்­தி­ர­மா­கவும் நிரந்­தர பாது­காப்­போடும் வாழ்­வ­தற்­காக இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்­வொன்றை புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக வழங்­வேண்டும். அதுவே எமது நம்­பிக்கை. நாளைய தினம்(இன்று) அர­சி­ய­ல­மைப்பின் வழி­ந­டத்தும் குழுவின் உப­கு­ழுக்­களின் முக்­கிய ஆறு அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அதில் எமக்கு பாரிய எதிர்பார்ப்புக்கள் உள்ளன.

நம்பிக்கை

எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் எவ்வாறு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது என எமது உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினார்கள். இருப்பினும் தற்போது ஏற்பட்ட சந்தர்ப்பதை பயன்படுத்தி எமது மக்களின் அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாம் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம். தேசிய அசரங்கத்தின் மீது எமக்கு இன்னமும் நம்பிக்கை உள்ளது.

முஸ்லிம் மக்களின் உரிமைகள்

அதேபோன்று எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றபோது எமது சகோதர இனமான முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு அவர்களுக்கான அரசியல் உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அவர்களுடன் இணைந்து உரிமைகளை வென்றெடுப்பதற்கான அந்த மக்களின் தலைவர்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கின்றோம். அரசாங்கம் நீதியாக செயற்பட்டு எமது விடயங்களுக்காக நியாயமான தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-19#page-1

  • தொடங்கியவர்

அமைச்சர் சுவா­மி­நாதன் மீது நம்­பிக்­கை­யி­ழந்­து­விட்டோம்

 

பொருத்து வீட்­டுத்­திட்­டத்தின் முகவர் போன்று செயற்­ப­டு­கின்றார் என்­கி­றது கூட்­ட­மைப்பு

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

அமைச்சர் சுவா­மி­நாதன் மீது நம்­பிக்கை இழந்து விட்­ட­தாக சபை யில் தெரி­வித்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா அவர் 65 ஆயிரம் வீட்­டுத்­திட்ட விட­ யத்தில் முகவர் போன்று செயற்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

 பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற 2017ஆம் ஆண்­டுக்­கான வர­வு­–செ­ல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு  உரை­யாற்­று­கை­ய­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், எமது கணிப்பின் பிர­காரம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை பூர்த்தி செய்­வ­தற்கு 130, 000 வீடுகள் தேவை­யா­க­வுள்­ளன. அவ்­வா­றி­ருக்­கையில் 5000 வீடு­க­ளுக்­குத்தான் நிதி அமைச்சர் 2017ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் நிதி ஒதுக்­கி­யுள்ளார்.  

மறு­பக்­கதில் எமது மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் அக்­கறை செலுத்தி வரும் நாம் தற்­போ­தைய ஆட்­சியில் உள்ள மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் மீது நம்­பிக்­கை­யி­ழந்­துள்ளோம். எமது மக்­களின் தேவைகள் சரி­யாக மதிப்­பி­டப்­ப­ட­வில்லை. மீள் குடி­யேற்ற அமைச்­சுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி போதா­துள்­ளது.

ஜேர்மன், ஜப்­பான தூது­வர்கள் எம்மைக் சந்­தித்­போது அர­சாங்கம் உங்­க­ளுடன் இணைந்து தான் அபி­வி­ருத்தி மற்றும் மக்­க­ளுக்­கான திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றதா எனக்­கேட்­டனர். எமது மக்­க­ளுக்­காக எம்­மையும் திட்­டங்­களை முன்­வைக்­கு­மாறு கூறினர்.

நாட்டில் யுத்தம் இல்லை. நல்­லி­ணக்கம் இருக்­கின்­றது என்ற நம்­பிக்­கை­யுடன் நாம் செயற்­ப­டு­கின்றோம். வடக்கின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காக 65000 பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை வழங்­கு­வ­தற்கு மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுவா­மி­நாதன் முயற்­சிக்­கின்றார்.

அதனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விரும்­ப­வில்லை. அதில் உள்ள குறை­பா­டு­களை எமது உறுப்­பி­னர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். நாம் மட்­டு­மல்ல, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட அத்­திட்­டத்தை விரும்­ப­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா மற்றும் பொது அமைப்­பினர் கூட அத்­திட்­டத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

65000 வீடு­களை 21இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான செலவில் கட்­டத்­தே­வை­யில்லை. மக்கள் அத்­திட்­டத்தை விரும்­ப­வில்லை. வடக்கு கிழக்கின் பல மாவட்­டங்­க­ளிலும் மக்கள் தமது எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­டுள்­ளனர். குறித்த செல­வீ­னத்­திலும் பார்க்­கையில் குறைந்த செல­வீ­னத்தில் சிமெந்­தினால் வீடு­களை கட்­ட­மு­டியும்.

இரும்­பி­லான பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை முன்­னெ­டுக்கும் செல­வீ­னத்தில் ஒரு இலட்­சத்து 2 ஆயிரம் வீடு­களைக் கட்ட முடியும். இதனை அமைச்சர் சுவா­மி­நாதன் ஏன் ஏற்க மறுக்­கின்றார்? பொது­மக்­க­ளுக்கு பொருத்­த­மற்ற பொருத்து வீடு­களை ஏற்­கு­மாறு அமைச்சர் சுவா­மி­நாதன் எமது உறுப்­பி­னர்­களை தொலை­பே­சியில் வற்­பு­றுத்­து­கின்றார்.

அவர் இந்த வீடுகளை ஏற்கவைப்பதற்காக ஒரு ஏஜெணட் (ஒரு முகவர்) போன்று செயற்படுகின்றார். மிகவும் கவலையளிக்கும் விடயமாகவுள்ளது. இவ்வாறான நிலையில் நாம் மீள்குடியேற்ற அமைச்சு மீதான விவாதத்தின் நிறைவில் நடைபெறும் வாக்கெடுப்பில் அவ்வமைச்சுக்காக ஆதரவளிக்கத்தான் வேண்டுமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.