Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபத்தான முன்னுதாரணம் ட்ரம்பின் வெற்றி

Featured Replies

ஆபத்தான முன்னுதாரணம் ட்ரம்பின் வெற்றி

donald-trump-shouting-you-re-fired-cartoon-caricature-73545369-4d74450bb29fa26d73ffa2f51d46a76a6498be90.jpg

 

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றி, இலங்கை தொடர்­பான வெளி­வி­வ­காரக் கொள்­கையில் எத்­த­கைய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் என்ற விவா­தங்கள் ஒரு­பு­றத்தில் நடந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், இந்த வெற்­றியின் தாக்கம் இலங்­கையின் உள்­நாட்டு அர­சி­ய­லிலும் எதி­ரொ­லிக்கும் என்ற கருத்தும் வலு­வ­டைந்­தி­ருக்­கி­றது.

டொனால்ட் ட்ரம்ப் வெள்­ளை­யினத் தேசி­ய­வா­தத்தை முன்­வைத்தே வெற்­றியைப் பெற்­றி­ருந்தார். கறுப்­பர்கள்,முஸ்­லிம்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களின் ஆதிக்கம் அதி­க­ரித்து வந்த சூழலில், அமெ­ரிக்­காவின் பெரும்­பான்­மை­யி­ன­ரான வெள்­ளை­யி­னத்­த­வர்கள் மத்­தியில் இருந்து வந்த அச்­சத்தை டொனால்ட் ட்ரம்ப் தனக்குச் சாத­க­மாக்கிக் கொண்டார்.

ஒன்று குவிக்­கப்­பட்ட சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் முன்­னைய தேர்­தல்கள் இரண்­டிலும் ஒபா­மாவின் வெற்­றிக்கு கார­ண­மா­கி­யது போலவே, இம்­முறை, வெள்­ளை­யி­னத்­த­வர்­களின் வாக்­குகள் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு, ட்ரம்பின் வெற்றி உறுதி செய்­யப்­பட்­டது.

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் வெளி­யான அதேநாள், பேரா­சி­ரியர் நளின் டி சில்வா எழு­திய நூல் ஒன்றின் வெளி­யீட்டு விழா கொழும்பில் நடந்­தது.

அதில் உரை­யாற்­றிய, முன்னாள் இரா­ஜ­தந்­தி­ரியும், தற்­போது மஹிந்த ராஜ­ பக் ஷவுக்கு ஆலோ­ச­னை­களை வழங்கி வரு­ப­வ­ரு­மான கலா­நிதி தயான் ஜெய­தி­லக மற்றும் கோத்­தா­பய ராஜ­பக் ஷ உள்­ளிட்டோர் கலந்து கொண்­டனர்.

இந்தக் கூட்­டத்தில் உரை­யாற்­றி­யி­ருந்த கலா­நிதி தயான் ஜெய­தி­லக, ஹிலாரி கிளின்டன் வெற்­றி­பெற்­றி­ருந்தால் அது இலங்­கைக்கு கடி­ன­மா­ன­தாக இருந்­தி­ருக்கும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஹிலாரி கிளின்டன், 2015ஆம் ஆண்டு இலங்கை ஜனா­தி­பதித் தேர்­தலில் சந்­தி­ரிகா குமா­ர­துங்க கையாண்­டது போன்ற- சிறு­பான்­மை­யின வாக்­கு­களை ஒருங்­கி­ணைத்து வெற்றி பெறும் உத்­தியைக் கையாண்­டி­ருந்தார் என்றும் ஆனால் அது தோல்­வியில் முடிந்­தமை இலங்­கைக்கு ஒரு பாட­மாக இருக்கும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்த நிகழ்வில் உரை­யாற்­றி­யி­ருந்த முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ, அமெ­ரிக்­காவில் பெரும்­பான்­மை­யின மக்கள், டொனால்ட் ட்ரம்பின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளதை, இலங்­கையின் பெரும்­பான்­மை­யின மக்கள் ஒரு பாட­மாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி­யி­ருந்தார்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில், டொனால்ட் ட்ரம்­பிற்கு, எதி­ரணி வேட்­பா­ள­ருடன் தொக்கி நின்ற சிறு­பான்­மை­யி­னரே தடை­யாக இருந்­தனர். அதனால் அவர் வெற்றி பெறு­வாரா என்­பது கேள்­விக்­கு­றி­யாக இருந்­தது.அமெ­ரிக்க வாக்­கா­ளர்­களின் பக்­கத்­தி­லி­ருந்து பார்க்கும் போதும், அந்­நாட்டு புத்­தி­ஜீ­விகள் கருத்­துக்­களின் அடிப்­ப­டையில் இருந்து பார்க்கும் போதும் அவ­ருக்கு ஆத­ரவு இருக்­க­வில்லை. அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் ஆத­ரவும் ட்ரம்­பிற்கு கிடைக்­க­வில்லை. எனவே அவர் தோல்வி அடை­யப்­போ­வது உறுதி என்றே கூறப்­பட்­டது.

 கறுப்­பி­னத்­த­வர்­களின் ஆத­ரவும் இவ­ருக்கு கிடைக்­காது என்ற கருத்­துக்கள் மிகவும் வலுப்­பெற்­றி­ருந்­தன. ஆனாலும் அவர் வெற்றி பெற்­றுள்ளார்.

வெள்­ளை­யின பெரும்­பான்­மை­யினர் ஒன்று திரண்டு டொனால்ட் ட்ரம்­பிற்கு வாக்­க­ளித்தன் கார­ண­மா­கவே அவர் சுல­ப­மாக வெற்றி பெற்றார்.

இதனை இந்த நாட்டின் பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் ஒரு பாட­மாக கொள்ள வேண்டும். இதனால் உரு­வாக்­கப்­பட்ட கருத்­தி­யலே மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.” என்று கோத்­த­பய ராஜ­பக் ஷ கூறி­யி­ருந்தார்.

இதன்­மூலம் அவர் கூற வந்த விடயம் தான் இங்கு மிக முக்­கி­ய­மா­னது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷவைத் தோற்­க­டித்­தது பெரும்­பான்­மை­யி­ன­ரான சிங்­கள மக்கள் அல்ல. சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழ், முஸ்லிம் மக்கள் தான்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நோக்கி, சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­குகள் ஒன்று குவிக்­கப்­பட்­டதால், மஹிந்த ராஜபக் ஷவின் தோல்வி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

மஹிந்த ராஜ­பக் ஷ இந்த தோல்­வியை கொஞ்­ச­மேனும் எதிர்­பார்க்­க­வில்லை.

சிறு­பான்­மை­யின மக்­களின் ஆத­ரவை இழந்தால், அவர்­களைப் பகைத்துக் கொண்டால் ஆட்­சியைப் பிடிக்க முடி­யாது என்ற பாடத்தை அவர்­க­ளுக்கு அந்த தேர்தல் கற்றுக் கொடுத்­தது.

ஆனால், கோத்­தா­பய ராஜ­பக் ­ஷவும், கலா­நிதி தயான் ஜெய­தி­ல­கவும், அந்தப் பாடத்தை ஒதுக்கி வைத்து விட்டு, அமெ­ரிக்­கர்கள் இப்­போது கற்றுத் தந்­தி­ருக்­கின்ற பாடத்தை பெரும்­பான்­மை­யி­ன­ரான சிங்­க­ள­வர்கள் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி­யி­ருக்­கி­றார்கள்.

இதி­லி­ருந்து, பெரும்­பான்­மை­யின மக்­களின் ஆத­ரவில் மாத்­திரம் வெற்றி பெற முடியும் என்ற ட்ரம்பின் முன்­னு­தா­ர­ணமே, அடுத்து வரும் தேர்­தல்­களில், மஹிந்த ராஜ­பக் ஷ அணி­யி­னரால் பயன்­ப­டுத்­தப்­படும் என்­பதை ஊகித்துக் கொள்ள முடி­கி­றது. குறிப்­பாக அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் இதனை முன்­னி­றுத்­தியே எதி­ர­ணி­யி­னரின் பிர­சார வியூகம் அமைக்­கப்­படும் என்று தெரி­கி­றது.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக, கோத்­தா­பய ராஜ­பக் ஷ போட்­டியில் நிறுத்­தப்­படும் வாய்ப்­புகள் உள்­ளன. இந்­த­நி­லையில், பெரும்­பான்­மை­யினர் தொடர்­பாக கோத்­தா­பய ராஜ­பக் ஷ வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்கும் கருத்­துக்கள், இதே உத்­தியை அவர் பயன்­ப­டுத்திக் கொள்ளும் வாய்ப்­பு­களை அதி­கப்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்த பெரும்­பான்­மை­யி­ன­வாதம், என்­பது இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் ஆபத்­தா­னது. ஏற்­க­னவே இலங்­கையில் சிங்­கள இன­வாதம் என்­பது மிகப்­பெ­ரிய அழி­வு­க­ளுக்கு வழி­வ­குத்­தி­ருக்­கி­றது. இந்த அழி­வு­களில் இருந்து மீள்­வ­தற்கும், இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்ற ஒரு சூழலில், பெரும்­பான்­மை­யி­ன­வாதம் தலை­யெ­டுப்­ப­தா­னது, பெரும் பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­வ­குக்­கலாம்.

ஏற்­க­னவே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மகிந்த ராஜ­பக்ச அத்­த­கைய இன­வாதப் பிர­சா­ரங்­க­ளையே அதி­க­ளவில் மேற்­கொண்­டி­ருந்தார். 

போர் வெற்­றியை அத­னுடன் இணைத்து அவர் தனது வெற்­றியை உறு­திப்­ப­டுத்த முனைந்­தி­ருந்­தாலும், அந்த முயற்சி வெற்­றியைத் தந்­தி­ருக்­க­வில்லை.

எனினும், அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில், போட்­டி­யிடும் கோத்­தா­பய ராஜ­பக்­சவோ அல்­லது மகிந்த அணி சார்பில் போட்­டி­யிடும் வேறு எவரோ, இன்னும் ஆக்­ரோ­ச­மான பெரும்­பான்­மை­யி­ன­வாதக் கருத்­துக்­களை முன்­வைக்­கலாம்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில், 30 இலட்சம் குடி­யே­றி­களை வெளி­யேற்­றுவேன், முஸ்­லிம்­களைத் துரத்­துவேன் என்­பது போன்ற, ஆக்­ரோ­ச­மான பிர­சார உத்­தி­களை டொனால்ட் ட்ரம்ப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அது­போல, அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் இங்கு நடந்தால், ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்க விட­ய­மாக அது இருக்­காது.

தமி­ழர்­களை துரத்­துவேன், சிங்­க­ள­வர்­களை விரட்­டுவேன், வெளி­நாட்­ட­வர்­களை வெளி­யேற்­றுவேன் என்­றெல்லாம் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் ஆபத்­துகள் இருக்­கின்­றன.

இந்த பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்­துடன் பௌத்த மத­வா­தமும் இன்னும் பல­ம­டையும் வாய்ப்­பு­களும் தென்­ப­டு­கின்­றன.

மிக அண்­மைய நாட்­க­ளாக பௌத்த பிக்­குகள் வெளி­யிடும் கருத்­துக்கள் அத்­த­கைய ஒரு நிலையை நோக்கி .இலங்­கையை இழுத்துச் செல்லும் முயற்­சிகள் ஏற்­க­னவே தொடங்கி விட்­டதா என்று சந்­தேகம் கொள்ளும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது,

பொது பல­சே­னாவின் பொதுச்­செ­யலர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர், முஸ்­லிம்­களை ஒட்­டு­மொத்­த­மாக அழித்து இரத்த ஆறு ஓட­வைப்பேன் என்று மிரட்­டு­கிறார்.

மட்­டக்­க­ளப்பில், மங்­க­ள­ரா­மய விகா­ரையின் விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண­திஸ்ஸ தேரர், தமிழ் நாய்­களை அடிப்பேன், கொல்­லுவேன் என்­கிறார்.

இவை­யெல்லாம் பகி­ரங்­க­மா­கவே நடக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. இந்த விட­யங்­களை- குறிப்­பாக பௌத்த பிக்­கு­களின் இன­வெ­றுப்புக் கருத்­துக்­களை அர­சாங்கம் கண்­டு­கொள்­வ­தா­கவும் தெரியவில்லை.

பௌத்த பிக்குகளை கைது செய்தால் தமக்கு எதிராக பௌத்த சிங்கள இனவாதிகள் திரும்பி விடுவார்களோ என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

ஆனால், சிறுபான்மையினங்களோ இத்தகைய மிரட்டல்களால் மீண்டும் அச்சமடையும் நிலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பெரும்பான்மையினவாதத்தைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கும் வியூகம் ஒன்று வகுக்கப்பட்டால், அது சிறுபான்மையினங்களின் அமைதி, நிம்மதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றி அத்தகையதொரு நிலைக்கு இலங்கையை கொண்டு செல்லுமானால், அது மோசமான முன்னுதாரணமாகவே அமையும்.

அத்தகையதொரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தவே, மகிந்த அணியினர் வியூகம் வகுக்கின்றனர் போலும்.

அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களில் இருந்து அதனைத் தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நிகழப்போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... அதுவா..... :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நயினார் செத்தது நல்லது நல்லது
ஒரு பிடி சோத்துக்கு நல்லது நல்லது.

  • தொடங்கியவர்

டொனால்ட் ட்ரம்பும் தென்னிலங்கை தேசியவாதிகளும் 

 

 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி மற்றைய இனத்தவர்கள், மதத்தவர்கள் மீதான வெறுப்புணர்வின் அடிப்படையிலான கொள்கைகளைக் கொண்ட  கடும் தேசியவாத அரசியல் சக்திகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த தேர்தலுக்கு  பின்னரான நாட்களில் இது குறித்து பரவலாக  கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்ட  வண்ணமிருக்கின்றன. இலங்கையில்  உள்ள அத்தகைய  தேசியவாத அரசியல் சக்திகள் அமெரிக்க குடியரசு கட்சியின் வேட்பாளரின் எதிர்பாராத  வெற்றியையடுத்து எக்களிப்புடன் கூடிய நம்பிக்கையுணர்வுடன்  கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவற்றில் பிரபலமான சிங்கள எழுத்தாளரும் தேசிய அமைப்புக்களின் சம்மேளனத்தின்   அமைப்பாளருமான டாக்டர் குணதாச அமரசேகர  தெரிவித்த கருத்தொன்று  எமது கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. அதற்கான பிரதான காரணத்தை இக்கட்டுரையின் போக்கில் வாசகர்களினால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். 

D0022fd0ff.jpg

சிறுபான்மையினத்தவர்களின் அமோகமான ஆதரவு இல்லாமல் தேசியத் தேர்தல்களில் வெற்றி பெற முடியுமென்பதை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நிரூபித்திருக்கிறது என்று டாக்டர் அமரசேகர குறிப்பிட்டிருக்கிறார். டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தங்களுக்கு  பெரும் உற்சாகத்தைத் தந்திருப்பதாகவும்  பிரதானமாக பெரும்பான்மைச் சமூகத்தின் பலத்திலேயே முக்கியமான  தேர்தல்களில் வெற்றிபெற முடியுமென்ற தங்களது நம்பிக்கை நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும்  அவர்  கடந்தவாரம் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் கூறியிருக்கிறார். மேலும், விடுதலைப் புலிகளுடன்  சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றவர்கள் டொனால்ட் ட்ரம்பின்  வெற்றியிலிருந்து படிப்பினையைப்  பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில்  மாத்திரமல்ல, முழு உலகைப் பொறுத்தவரையிலும்  கூட,மிகவும் அவசியமான ஒரு தருணத்திலேயே  அமெரிக்காவில்  குடியரசுக் கட்சிக்காரர் ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கிறார் என்றும் டாக்டர் தெரிவித்திருக்கிறார். 

 

அமெரிக்காவில்  கறுப்பினத்தவர்கள் உட்பட சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளைப் பெறுவதில் ஆர்வம்  காட்டாமல் பெரும்பான்மையினத்தவர்களான வெள்ளையர்களின் பேராதரவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை டாக்டர்  அமரசேகர மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றார் என்றால், இலங்கையிலும்  அவர்  எதை  எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொள்வதற்கு எவரும் அரசியல் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. பெரும்பான்மையினத்தவர்களான சிங்களவர்களின் வாக்குகளை அமோகமாகப்  பெறுபவரே  இலங்கையில் ஆட்சியாளராக இருக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருக்கிறது. சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட அங்கீகரிக்கத் தயாரில்லாத தேசியவாத அமைப்புக்களை உள்ளடக்கிய சம்மேளனத்தின்  அமைப்பாளராக இருக்கும் டாக்டர் அமரசேகர, சிறுபான்மையினங்களைச் சேர்ந்த வாக்காளர்கள்  கொழும்பில்  ஆட்சியதிகாரத்துக்கு வருபவர்களைத் தீர்மானிப்பதில் எந்தவிதமான பங்கையும் கொண்டிருக்கக்கூடிய அந்தஸ்தில் இருக்கக்கூடாது என்பதே அவர் தனது கருத்துக்களின் மூலமாக உணர்த்துகின்ற செய்தியாகும். 

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இத்தகைய கருத்தியல் முனைப்படைந்ததை நாமெல்லோரும் ஏற்கனவே அறிவோம். 

2015 ஜனவரி 8 ஜனாதிபதித்  தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அடுத்தடுத்த நாள் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான வீரக்கெட்டியாவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாசஸ்தலத்தின் முன்பாக திரண்ட ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியபோது ‘மைத்திரிபால சிறிசேன  ஈழம் வாக்குகளினால் தான் தேர்தலில்  வெற்றி பெற்றார்’ என்று  கூறியதைப் பலரும் மறந்திருக்கமாட்டார்கள்.  சிங்களவர்கள் அல்ல, தமிழர்களே சிறிசேனவை ஜனாதிபதியாக்கியிருக்கிறார்கள் என்பதே ராஜபக் ஷ தென்னிலங்கைக்கு தெரிவிக்க விரும்பிய செய்தியாகும். 

தமிழர்களின் வாக்குகள்  மாத்திரமல்ல, ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின்  வாக்குகளும் அன்று  எதிரணியின்  பொதுவேட்பாளராக நின்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு  கிடைத்தன என்பதே உண்மை. தமிழர்களைப்  பொறுத்தவரை,  அவர்கள் ராஜபக் ஷவை  எந்தளவுக்கு வெறுத்தார்கள் என்பதை 2010 ஜனவரி 26 ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு  தமிழ்ப் பகுதிகளில் பெருவாரியாகக் கிடைத்த வாக்குகள்  வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழர்கள் மாத்திரமல்ல, மலையக தமிழர்களும் அதிகப் பெரும்பான்மையாக பொன்சேகாவுக்கே வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு பெரும் அவலத்தையும் அழிவையும் ஏற்படுத்திய போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கை இராணுவத்துக்கு தலைமை தாங்கிய தளபதி பொன்சேகாவை விடவும், ராஜபக் ஷவையே  தமிழர்கள் கூடுதலான  அளவுக்கு வெறுத்தார்கள் என்பதை அது நிரூபித்தது. தங்களை அரசியல் ரீதியாக வீரியமற்ற ஒரு சமுதாயமாக ராஜபக் ஷவின்  கொள்கைகளும் செயற்பாடுகளுமே  மாற்றியமைத்தன என்பதை  தமிழர்கள் நன்குணர்ந்துகொண்டதனாலேயே அத்தகைய  நிலைப்பாட்டை  அவர்கள்  எடுத்தார்கள். 

விடுதலை புலிகளுக்கு  எதிரான போரில் ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு  ஆதரவான நிலைப்பாட்டையே பெரும்பாலான முஸ்லிம் அரசியல் கட்சிகள்  எடுத்திருந்த போதிலும் கூட,  போரின்  முடிவுக்குப் பின்னரான கால கட்டத்தில்  முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகத் தென்னிலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதப் பிரசாரங்களையும்  வன்செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கு அந்த அரசாங்கம் உருப்படியான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு அப்பால், முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ராஜபக் ஷ  அரசாங்கம்  அனுசரணையாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது என்று முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவே நிலைவரங்கள் காணப்பட்டன. பொதுபல சேனா போன்ற சிங்கள–பெளத்த  பேரினவாத சக்திகளுடன் ராஜபக் ஷ அரசாங்கத்தின் முக்கிய  உறுப்பினர்களுக்கு ஒட்டுறவு இருந்தது என்பது ஒன்றும்  இரகசியமானதல்ல. முஸ்லிம் மக்கள் ராஜபக் ஷவுக்கு எதிராக ஒட்டு மொத்தமாக அணிதிரள்வதற்கு அதுவே காரணமாயமைந்தது.  

இலங்கையில் நடைபெற்ற முதல் மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலுமே வெற்றி பெற்றவர்களைத் தீர்மானித்ததில் நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளுக்கு தீர்க்கமானதொரு பங்கு இருந்தது.  சிங்களவர்களின் வாக்குகளைப் பெருமளவுக்கு  பெற்றால் மாத்திரம் போதாது, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு  சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில்  இருந்தும் கணிசமான வாக்குகளை  பெறவேண்டியிருந்தது என்பதே அன்றைய தேர்தல் அரசியல் யதார்த்த நிலை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களோ  அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களோ இனக்குழும பெரும்பான்மைவாத  (Ethnnic Majoritarianism)  அரசியலை உறுதியாக முன்னெடுத்து வந்த போதிலும்,  ஜனாதிபதித்  தேர்தல் என்று வரும்போது சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளையும் சாத்தியமான அளவுக்கு  பெறக் கூடியதான அணுகுமுறையையே கடைப்பிடித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 

1982 அக்டோபரில்  நடைபெற்ற இலங்கையின் முதல் ஜனாதிபதித்  தேர்தலில்  ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு வடக்கு, கிழக்கில் தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு  இருந்தபோதிலும், மலையகத் தமிழர்களின் வாக்குகள் அவரின் வெற்றிக்கு பெருமளவுக்கு உதவியிருந்தன. மலையக  மக்களின் வாக்குகள் அவருக்கு கிடைப்பதை காலஞ்சென்ற  செளமிய மூர்த்தி தொண்டமான் தலைமையிலான  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதி செய்தது. பிறகு 1988 டிசம்பரில் நடைபெற்ற  இரண்டாவது  ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாசவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட திருமதி சிறிமா பண்டாரநாயக்கவும் தங்களால் இயன்றவரை சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான அணுகுமுறைகளை வகுத்தே செயற்பட்டனர். முன்னரைப் போன்றே தொண்டமானும் மலையக மக்களும் பிரேமதாசவை ஆதரித்த அதேவேளை, திருமதி பண்டாரநாயக்காவின் மேடைகளில் அகில இலங்கை  தமிழ் காங்கிரஸின்  பொதுச்செயலாளரான  காலஞ்சென்ற குமார்  பொன்னம்பலம் முக்கியமான ஒரு  பேச்சாளராக விளங்கினார். 

1994 நவம்பரில் நடைபெற்ற மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சி  தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமோக வெற்றியில் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள் முக்கியமான பங்கை வகித்தன.. சகல சமூகங்களினதும் கணிசமான  ஆதரவைப் பெறமுடியாத ஒரு அரசியல்   தலைவரினால் 'ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதே அரசியல் விஞ்ஞானிகளின் பொதுப்படையான மதிப்பீடாக இருந்தது. 

அது வரையான தேர்தல்கள் முடிவுகள் இந்த மதிப்பீட்டை  நிரூபித்தவையாகவே விளங்கின.

2005 நவம்பர் 'ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பெருமளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு  வாக்களிக்காதிருப்பதை உறுதி செய்தால் மாத்திரமே தன்னால் வெற்றிபெறக் கூடியதாக இருக்குமென்று ராஜபக் ஷ வகுத்த வியூகத்தின்  அடிப்படையிலேயே  விடுதலை புலிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  தமிழர்களை வாக்களிக்கவிடாமல்  தடுக்கும் காரியத்தைச் செய்தார்கள் என்பது  எல்லோருக்கும் தெரியும். தமிழர்கள் வாக்களிப்பில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ளாத நிலையில் அந்த ஜனதிபதித்  தேர்தலில் வெற்றிபெற்ற ராஜபக் ஷ சிங்கள மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்று தன்னைக்  காட்சிப்படுத்துவதில் முனைப்பாகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்குப் பின்னரான  கால கட்டத்தில் போரை  முழு வீச்சில் தீவிரப்படுத்திய  ராஜபக்ஷ  அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில்  பெரும்  ஆதரவைப்  பெறத் தொடங்கியது.  இறுதியில் போர் வெற்றி  ராஜபக் ஷாக்களுக்கு சிங்கள மக்களின் ஏகபோக தலைமைத்துவத்துக்குரியவர்கள்  தாங்களே என்ற  மமதையைக் கொடுத்தது. நாளடைவில் அவர்கள் சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரம் ஒரு அரசியல்வாதியினால் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட முடியும் என்று புதியதோர் அரசியல் வரைவிலக்கணத்தையும் வகுத்துக்கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக ராஜபக் ஷாக்கள்  தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மத்தியில் தங்களின் தலைமையிலான ஆட்சி மாத்திரமே  தேசிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும் என்றும் தாங்கள் மாத்திரமே  சிங்கள பெளத்தர்களின் நலன்களைப்  பேணிப்பாதுகாக்கக் கூடிய வல்லமை கொண்டவர்கள் என்றும் ஒரு பிரதிமையைக்  கட்டி வளர்த்தார்கள். அதற்கு ஆட்சியதிகாரத்தை அவர்கள்  உச்சபட்சத்துக்கு பயன்படுத்தினார்கள்.. ….. இல்லை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானது. 

இந்த அதிகார துஷ்பிரயோகங்களின் தொடர்ச்சியாக  ராஜபக் ஷாக்கள் சிறுபான்மையினச் சமூகங்களின்  அரசியல் அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும்  முற்றிலும் எதிரானவர்கள் என்று தங்களை சிங்கள மக்களுக்கு  காட்டிக்கொள்வதற்காக  அந்தச்   சமூகங்களுக்கு எதிரான இனவாதப் பிரசாரங்களையும் வன்முறைச் செயற்பாடுகளையும் உத்வேகப் படுத்துகின்ற கொள்கைகளையும்   அணுகு முறைகளையும்  கடைப்பிடித்தார்கள். போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில்  தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான உணர்வுடன் அரசியல் ரீதியில் நேசக்கரத்தை நீட்டாமல் தொடர்ந்தும் அவர்களை இராணுவ முற்றுகை நிலையில் வைத்திருக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்தார்கள். அதற்குச் சமாந்தரமாக தென்னிலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகரித்துக் கொண்டேவந்தன. இறுதியில், இலங்கையில் இதுவரையில் ஆட்சியதிகாரத்தில் இருந்த தலைவர்களுடன் ஒப்பிடும்போது சிங்கள கிறிஸ்தவர்கள் உட்பட சகல சிறுபான்மையினச் சமூகங்களினாலும் பெரிதும் வெறுக்கப்பட்ட ஒரு  தலைவராக ராஜபக் ஷ விளங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. 

இதற்கான விலையை அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செலுத்தினார். சிறுபான்மையினச் சமூகங்களின் அமோகமான  ஆதரவுடன்  மைத்திரிபால சிறிசேன  வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கருத்து வெளியிட்ட பிரபலமான உள்நாட்டு அரசியல் ஆய்வாளர் ஒருவர் ‘இலங்கையின் வாக்காளர் தொகுதி (Electorate) வழமை நிலைமைக்குத் திரும்பிவிட்டது' என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, சகல சமூகங்களினதும்  கணிசமான   ஆதரவைப் பெறுபவரே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடியதாக இருக்கும் என்ற முன்னைய மதிப்பீடு மீண்டும் சரியானதென்று நிருபிக்கப்பட்டதையே அவர்  அவ்வாறு வர்ணித்தார். 

சிங்களவர்களின் ஆதரவை மாத்திரம் கொண்டிருந்தால் போதும் தங்களை எவராலும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் நினைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்த ராஜபக் ஷாக்கள் தங்களது  பிரமாண்டமான தவறைப்  புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை. ஆனால்,   அவர்கள் மீண்டும் அதே தவறான பாதையில் நம்பிக்கை வைப்பதற்கு மனங்கொள்ளக்கூடிய சூழ்நிலையை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெள்ளையின வெறியை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்  எந்த அசெளகரியத்தையும் காணாத டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. டாக்டர் குணதாச அமரசேகர போன்ற கடும் போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் தெரிவிக்கின்ற கருத்துக்கள் மீண்டும் சிங்களவர்களின்  அமோக ஆதரவுடன் மாத்திரம் ராஜபக் ஷாக்களை ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவரவேண்டுமென்ற விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. 

சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதித்து அவர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை மாத்திரம் இந்த சிங்களத் தேசியவாதிகள் எதிர்க்கவில்லை. சர்வசன வாக்குரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படைக் குடியியல் அந்தஸ்தைக் கூட இவர்கள் மதிக்கத் தயாராயில்லை. அதாவது சகல இனத்தவர்களினதும் வாக்குகளும் சமமான அந்தஸ்தையுடையதே என்பதற்கு பதிலாக பெரும்பான்மையினத்தவர்களின் வாக்குகளுக்கு கூடுதல் அந்தஸ்து இருக்கிறது என்பது போன்று  பேசுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையின் அரசியல் ஆய்வாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான திஸ்ஸரணி  குணசேகர, டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தொடர்பாக கடந்தவாரம் எழுதிய 'டொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து சொர்க்கத்தைப் மீளப் பெறுதல் என்ற தலைப்பிலான கட்டுரையில் மிகுந்த  அரசியல் நுண்ணறிவுத் திறத்துடன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்;

"ட்ரம்பின் வெற்றி 'மற்றவர்கள்'  ( others ) மீதான அச்சத்தையும் வெறுப்பையும் மையமாகக் கொண்டதும் மனித மனதில் இருக்கக்கூடிய இழிவான உணர்வுகள் சகலவற்றை உருவகப்படுத்துவதுமான புதிய காலப்பண்பு  ( zeitgeist )  ஒன்றின் வருகையின் முன்னறிவிப்பாக அமைகிறது. எம்மில் இருக்கக்கூடிய சிறந்தவை பற்றியல்ல மோசமானவை பற்றியே அது பேசுகிறது. வெளிப்படுத்துவதற்கு நாம் அஞ்சிய பீதிகளுக்கும் வெளிப்படுத்துவதற்கு நாம் தயங்கிய வெறுப்புணர்வுகளுக்கும்  இது இறக்கை கட்டிவிடுகிறது. உண்மையிலேயே அசாதாரணமானவற்றையெல்லாம் அது சாதாரணமாக்குகிறது. ஒருபோதுமே நடக்கக்கூடாதவற்றை அது சாத்தியமாக்குகிறது. சர்வசனவாக்குரிமை உட்பட உலகளாவிய ஒப்புரவான கோட்பாடுகளை யெல்லாம் அது வெறுக்கிறது. அருவருக்கிறது". 

http://www.virakesari.lk/article/13677

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை எப்போதுமே இனவாத நாடு தான். அமெரிக்கா கடந்த இரண்டு முறையும் கறுப்பின தலைவரையே தெரிந்து இருந்தார்கள். தமிழரின் தோலில் செருப்பு போடுவோம் என்ற சிங்கள தலைவர்களும் இருந்திருக்கிறார்கள் . ஏதோ இனித்தான் இனவாதம் கக்கப்போகிறார்கள் என்பது நல்ல பகிடி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

இலங்கை எப்போதுமே இனவாத நாடு தான். அமெரிக்கா கடந்த இரண்டு முறையும் கறுப்பின தலைவரையே தெரிந்து இருந்தார்கள். தமிழரின் தோலில் செருப்பு போடுவோம் என்ற சிங்கள தலைவர்களும் இருந்திருக்கிறார்கள் . ஏதோ இனித்தான் இனவாதம் கக்கப்போகிறார்கள் என்பது நல்ல பகிடி.

ட்ரம்ப், என்ன சொல்லி பொருள் விக்கவேண்டும் என அனுபவ அறிவு கொண்டபக்கா பெருவியாபாரி.

பலர் நிணைப்பது போல் நடக்க அவர் முட்டாள் அல்ல.

அவர் விற்க வேண்டியதை விற்க, வாங்க வேண்டியவர்கள் வாங்கி விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.