Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆரின் சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் நாளை நல்லடக்கம்..!

Featured Replies

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 70 நாட்களுக்கு மேலாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது 68வது வயதில் இன்று இரவு காலமானார்.

இந்நிலையில். போயஸ்கார்டன் இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறவுள்ளதாகவும், பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், நாளை மாலை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

http://www.tamilwin.com/india/01/127198?ref=home

  • தொடங்கியவர்

தமிழகத்தில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

tngovt_1946528f.jpg
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி செவ்வாய், புதன் , வியாழன் ஆகிய 3 நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/தமிழகத்தில்-3-நாட்கள்-பள்ளி-கல்லூரிகளுக்கு-விடுமுறை/article9412034.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு: வெளி மாவட்டங்களிலிருந்து 10,000 போலீஸார் குவிப்பு

Jaya_apollo_security2
 
ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10,000 போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னதாக, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சென்னையில் ஏற்கெனவே 15,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் முதல்வரின் இறுதிச் சடங்கில் பல லட்சம் அதிமுகவினர், பொதுமக்கள் பங்கேற்பார்கள். இதைத் தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் உள்பட எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெற்று விடக்கடாது என்பதைக் கருத்தில்கொண்டு சென்னை நகரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் வெளிமாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், இளைஞர் படையினர், அதிவிரைவு படையினர், அதிரடிப் படை உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேரந்த காவலர்கள் சுமார் 10,000 பேர் செவ்வாய்க்கிழமை நண்பகலுக்கு சென்னைக்கு வரும்படி டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் சென்னைக்கு வந்ததும் நேரு உள்விளையாட்டரங்கில் தங்களது பெயரை பதிவு செய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். அவர்கள் தங்குவதற்காக சென்னையில 500 திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றில் ஏற்படாடு செய்யப்டட்டுள்ளது.

இவர்கள் இறுதிச் சடங்கு முடிந்த பின்னரே வெளிமாவட்டங்களுக்கு செல்வார்கள் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். 

http://www.dinamani.com/latest-news/2016/dec/06/ஜெயலலிதாவின்-இறுதிச்-சடங்கு-வெளி-மாவட்டங்களிலிருந்து-10000-போலீஸார்-குவிப்பு-2611070.html

  • தொடங்கியவர்

தமிழகத்தில் 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு

maxresdefaultf_01286.jpg

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 11.30 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர், பிற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்பட நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/jayalalithaa/74262-jayalalithaa-demise-7-days-state-mourning-in-tamilnadu.art

  • தொடங்கியவர்

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது மறைந்த முதல்வர் ஜெ.,வின் உடல்

உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து , மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா (68) உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதயம் செயலிழந்ததால் ஜெயலலிதா மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனால் மருத்துவமனை முன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கதறி அழுதனர்.

பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து, போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வேதா இல்லத்திற்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டு வரப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அவரது உடல் கொண்டு வரப்பட்ட வாகனத்தை கண்டதும் போயஸ் தோட்டம் இல்லம் அருகே கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

போயஸ் கார்டன் கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவின் உடலுக்கு குடும்ப சம்பிரதாயப்படி சடங்குகள் நடத்தப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

பின்னர் திட்டமிட்டப்படி மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

ஜெயலலிதாவின் உடலுக்க அங்கு கூடியருக்கும் பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும், மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மக்கள் அஞ்சலி செலுத்திய பின் மாலை 4.30 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள MGR சமாதி அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

http://www.tamilwin.com/india/01/127213?ref=home

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில்... எம். ஜீ . ஆரின்  பின்.... எந்த அரசியல் தலைவர்களின் உடலையும் நல்லடக்கம் செய்யக் கூ டாது என்று. முன்பு  நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. அது... இப்போது நடைமுறையில் உள்ளதா என்று தெரியவில்லை. 

ஏ ற்கெனவே  பல அரசியல் தலைவர்களின் உடல் அங்கு நல்லடக்கம் செய்து இருப்பதால்... 
மெரினாவின் அழகு கெட்டுப்  போகும் என்று... ஒருவர் 25 வருடங்களுக்கு முன்பு.... வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

  • தொடங்கியவர்
16 hours ago, தமிழ் சிறி said:

எம்ஜிஆர் சமாதி அருகில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்!

எம்ஜிஆர் சமாதி அருகில் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் | படம்: சுனிதா சேகர்.

எம்ஜிஆர் சமாதி அருகில் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் | படம்: சுனிதா சேகர்.

எம்ஜிஆர் சமாதி அருகில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மத்திய அரசின் அனுமதி பெற்று விரைவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிலதாவின் உடல், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில், ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. சமாதியைப் பொறுத்தவரை, தமிழக அரசின் செய்தித்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இதை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. தற்போது, இந்த இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டப்படி, கடற்கரை ஓரங்களில் எந்த கட்டுமானங்களையும் எழுப்பக் கூடாது. ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட வளாகம் என்பதால், தமிழக அரசின் ஒப்புதலுடன், இதில் தற்போது அடக்கம் செய்யப்பட்டது.

அதே நேரம், நினைவிடம் அமைக்க தமிழக அரசு மத்திய அரசை நாட வேண்டும். எனவே, மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆவணங்களை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து விலக்கு பெற்று, விரைவில் நினைவிடம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/எம்ஜிஆர்-சமாதி-அருகில்-ஜெயலலிதாவுக்கு-நினைவிடம்/article9413676.ece?homepage=true

  • தொடங்கியவர்

முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு சசிகலாவுடன் இணைந்து இறுதிச்சடங்கு செய்த இளைஞர் யார்?

உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்றிரவு மரணமடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், அவரின் மத வழக்கப்படியான சம்பிரதாய சடங்குகள் மன்னார்குடியிலிருந்து வந்த ஒரு ஐயர் மூலம் அவரின் உடலுக்கு செய்யப்பட்டன.

ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை சசிகலாவுடன் இணைந்து ஒரு இளைஞர் செய்தார், சசிகலாவின் சகோதரர் ஜெயராமன் - இளவரசி தம்பதியரின் மகனான விவேக் தான் முதல்வருக்கு இறுதிச்சடங்குகள் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வருக்கு இறுதிச்சடங்கு செய்த அந்த இளைஞர் யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.png

இந்நிலையில், முதல்வரின் சகோதரரான மறைந்த ஜெயக்குமாரின் மகன் தான் அந்த இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. அவரின் பெயர் தீபக். ஊடக வெளிச்சத்தில் படாமல் வாழ்ந்து வந்த தீபக் மற்றும் அவரின் சகோதரி தீபா ஆகியோர் முதல்வரின் ஒரே ரத்த சொந்தமாவர், எனினும் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனையில் அவரை சந்திக்க இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என கூறப்படுகிறது. தீபக்கின் தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் அவரது தாயார் விஜலட்சுமியும் 2013ஆம் ஆண்டு காலமானார். இவர் சென்னையில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஜெயலலிதாவை சந்திக்க இயலாத நிலை இருந்ததாக கூறப்படும் வேளையில், இன்று தனது அத்தையான முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை தீபக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/india/01/127337?ref=home

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, போல் said:

எம்ஜிஆர் சமாதி அருகில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்!

எம்ஜிஆர் சமாதி அருகில் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் | படம்: சுனிதா சேகர்.

கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டப்படி, கடற்கரை ஓரங்களில் எந்த கட்டுமானங்களையும் எழுப்பக் கூடாது. ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட வளாகம் என்பதால், தமிழக அரசின் ஒப்புதலுடன், இதில் தற்போது அடக்கம் செய்யப்பட்டது.

இனி சசிகலாவுக்கு... ஏதாவது நடந்தாலும், ஜெயலலிதா சமாதி அருகே, நிச்சயம் இடம் கிடைக்கும் போலுள்ளது.

சின்ன ஒரு கேள்வி போல்.... பூணுல் அணிந்த ஐயர்,   மரணச்  சடங்கு செய்யலாமா?
செத்த வீட்டு ஐயர்  என்று.. எங்கள் ஊரில்,  வேறு ஆக்கள் இருக்கிறார்கள்... அதான் கேட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இனி சசிகலாவுக்கு... ஏதாவது நடந்தாலும், ஜெயலலிதா சமாதி அருகே, நிச்சயம் இடம் கிடைக்கும் போலுள்ளது.

சின்ன ஒரு கேள்வி போல்.... பூணுல் அணிந்த ஐயர்,   மரணச்  சடங்கு செய்யலாமா?
செத்த வீட்டு ஐயர்  என்று.. எங்கள் ஊரில்,  வேறு ஆக்கள் இருக்கிறார்கள்... அதான் கேட்டேன். 

தலைவா... ஜெயலலிதா பிறப்பால் பிராமண குலத்தவர்!

அதனால் அவர்களது நடைமுறைகள் வேறாக இருக்கக் கூடும்!

அத்துடன் சைவக் குருக்களும் 'பூணூல்' அணிந்து தான் பூசை செய்வார்கள் என்று நினைக்கிறேன்!

எனது கருத்துத் தவறெனில் ...யாரும் திருத்தி விடவும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இனி சசிகலாவுக்கு... ஏதாவது நடந்தாலும், ஜெயலலிதா சமாதி அருகே, நிச்சயம் இடம் கிடைக்கும் போலுள்ளது.

சின்ன ஒரு கேள்வி போல்.... பூணுல் அணிந்த ஐயர்,   மரணச்  சடங்கு செய்யலாமா?
செத்த வீட்டு ஐயர்  என்று.. எங்கள் ஊரில்,  வேறு ஆக்கள் இருக்கிறார்கள்... அதான் கேட்டேன். 

அம்மா இல்லாது அனாதைகள் ஆகிவிட்டோமே என்ற கவலையில் 
நாங்கள் இருக்கிறோம் ..............

நீங்கள் இப்போதும் பூணூல் ஐயர் என்று நிக்கிறீரங்கள்.

அம்மா இறந்த நாளை இனியாவது யாராவது வெளிவிடுவார்களா ? 

  • தொடங்கியவர்
11 hours ago, தமிழ் சிறி said:

இனி சசிகலாவுக்கு... ஏதாவது நடந்தாலும், ஜெயலலிதா சமாதி அருகே, நிச்சயம் இடம் கிடைக்கும் போலுள்ளது.

சின்ன ஒரு கேள்வி போல்.... பூணுல் அணிந்த ஐயர்,   மரணச்  சடங்கு செய்யலாமா?
செத்த வீட்டு ஐயர்  என்று.. எங்கள் ஊரில்,  வேறு ஆக்கள் இருக்கிறார்கள்... அதான் கேட்டேன். 

முள்ளிவாய்க்காலில் உறவுகளை பறிகொடுத்த பல ஆயிரம் குடும்பத்தினரின் ஆன்மசாந்தி பூஜைகள் 2009 ம் ஆண்டு மகாளய  அமாவாசை தினத்தில் முள்ளுவேலி முகாம்களினுள் நடைபெற்ற போது அதை இணைந்து நடத்தியது பூணூல் அணிந்த 40 - 45 பிராமண குருக்கள் / ஐயர்மார்கள் தான், சைவக் குருக்கள்மார் இல்லை. 

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்
On 7.12.2016 at 6:48 AM, புங்கையூரன் said:

தலைவா... ஜெயலலிதா பிறப்பால் பிராமண குலத்தவர்!

அதனால் அவர்களது நடைமுறைகள் வேறாக இருக்கக் கூடும்!

அத்துடன் சைவக் குருக்களும் 'பூணூல்' அணிந்து தான் பூசை செய்வார்கள் என்று நினைக்கிறேன்!

எனது கருத்துத் தவறெனில் ...யாரும் திருத்தி விடவும்!

புங்கையூரான்.... உங்களுக்கு. தெரியாத, சம்பிராயதமா ?
சைவக்  குருக்கள்,  மரணச் சடங்கின் போதும் கூட, பூநூல் அணிய  அனுமதியில்லை. 
இறந்தவருக்கு.... உரித்துடைய,   கொள்ளி  வைப்பவர் மட்டுமே.. அன்று  பூணுலுடன் இருப்பார்.
அந்தப்  பூணூலைக்  கூட,  கோம்பயன்  சுடலையில்...  கழட்டி,  அந்த... எரியும் சிதைக்குள் எறிந்து விட்டு....
"திரும்பிப் பார்க்காமல்....  போ...."    என்று சொல்வார்கள்.

"திரும்பிப்  பார்த்தால்.... பேய்  பிடிக்குமாம்.".

இந்த  அமளியான ... நேரத்தில்,  யாருக்குத் தான்   குறுக்குக்  கேள்வி கேட்க முடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.