Jump to content

'சுவாமிநாதன் பதவி துறக்கவேண்டும்'


Recommended Posts

பதியப்பட்டது

'சுவாமிநாதன் பதவி துறக்கவேண்டும்'
 
 

article_1481020472-MA.jpgதன்னுடைய அமைச்சுப் பதவியை முறையாக செய்யமுடியாவிடின், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தன்னுடைய அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/187568/-ச-வ-ம-ந-தன-பதவ-த-றக-கவ-ண-ட-ம-#sthash.MAgADxh4.dpuf
Posted

பொருத்து வீடுகள் தொடர்பில் பாராளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள்

parliament
பொருத்து வீடுகள் தொடர்பில் பாராளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. வடக்கில் இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பொருத்து வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்து வரும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பல்வேறு வழிகளில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் திட்டத்தை அமைச்சர் முன்னெடுப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மக்களுக்கு பொருத்து வீடுகள் தேவையில்லை எனவும், நிரந்தர வீடுகளே அமைத்துக் கொடுக்கப்படவேண்டுமெனவும் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/9503

Posted
பொருத்து வீட்டுத்திட்டத்தால் நாடாளுமன்றில் கூட்டமைப்பு வாதம்-அமைச்சர் சுவாமிநாதனை பதவி விலகவும் கோரிக்கை
 
 
பொருத்து வீட்டுத்திட்டத்தால் நாடாளுமன்றில் கூட்டமைப்பு வாதம்-அமைச்சர் சுவாமிநாதனை பதவி விலகவும் கோரிக்கை
பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் இன்றைய தினம் மீள்குடியேற்ற அமைச்சர், டி.எம்.சுவா மிநாதனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாம் இடம்பெற்றது.
 
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, கடற்றொழில் மற்றும் நீரியல்வழ அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதங்கள் இன்று இடம்பெற்றன.
 
இந்த விவாதத்தின்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பினார், இதற்கு பதில ளிக்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயன்றவேளை சபையில குழப்பம் ஏற்பட்டது.
 
எம்.ஏ.சுமந்திரன் தனதுரையில் “பொருத்து வீட்டுத் தொடர்பிலேயே நீங்கள் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றீர்கள். இது எமது மக்களுக்கு பொருத்தமற்றது என்பதை பல முறை வலியுறுத்தியுள்ளோம். தமிழ்க் கூட்டமைப்பின் மாற்று வீ்ட்டுத்திட்டம் சாத்தியமற்றது என கூறியுள்ளீர்கள். ஏன் சாத்தியமற்றது. மேலும் அதில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளீர்கள்? அந்த அரசியல் காரணங்கள் என்வென்பதை தெளிவுபடுத்துமாறு உங்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன். இரண்டு நாட்களுக்கு முன்பதாக நீங்கள் அவ்வாறு குறிப்பிட்டுள்ளீர்கள். 
 
13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு என நீங்கள் கூறியுள்ளீர்கள். தமிழர்களின் பிரச்சினைக்கு அதுதான் தீர்வு எனக்கூற உங்களுக்கு என்ன துணிவு? அதனை கூற நீங்கள் யார்? மக்கள் உங்களை தெரிவு செய்து இங்கு அனுப்பினார்களா? நீங்கள் தெரிவுக்குழு மூலமும் தெரிவான ஒரு உறுப்பினர். 13ஆவது திருத்தம் தீர்வென்றால் புதிய யாப்பிற்கான தேவை ஏன்? இந்த அடிப்படை கேள்விக்கு பதில் வழங்குமாறு நான் உங்களை கேட்கின்றேன். நீங்கள் என்ன மாதிரியான பாதிப்பினை ஏற்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? எங்களால் உங்களை அனுமதிக்க முடியாது. 
 
எமது மக்களின் எதிர்காலத்தை நீங்கள் வீணடிக்கின்றீர்கள், நீங்கள் சிலவற்றை நிறு த்திக்கொள்ள வேண்டும். உங்களால் முடியாதென்றால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யுங்கள். தயவுசெய்து கூறுகின்றேன் வேறு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளு ங்கள். இந்த வீட்டுத்திட்டத்தை வேறு சமூகத்திற்கு வழங்குங்கள். இன்றே நீங்கள் இராஜி னாமா செய்யுங்கள்.“
 
இதற்கு பதில் வழங்க மீள் குடியேற்ற அமைச்சர் முயற்சித்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் வாய்ப்பளிக்கவில்லை.
 
இந்நிலையில் சுமந்திரனின் கேள்விக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கினார்.
 
பிரதமர் “நாங்கள் ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொண்டுள்ளோம். எனினும் யாழ்ப்பாணத்தில் எவ்வித வாக்கினையும் பெற்றுக்கொள்ளாத நீங்கள் ஏன் பேசுகிறீர்கள். நீங்கள் யாழ்ப்பாண மக்களை எவ்வாறு நடத்தினீர்கள் என எங்களுக்குத் தெரியும்.  ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? தற்போது யாழ்ப்பாணத்தில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியும். அமைச்சர் சுவாமிநாதனும், தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பி னர்க ளும் சத்தமிட முடியும். எனினும் கடந்த அரசாங்கத்தில் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சத்தமிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என எங்களுக்குத் தெரியும். ரவிராஜுக்கு என்ன நடந்தது. விசாரணைகள் நடத்தப்பட்டாலும் இறுதியில் எவ்வித பிரயோசனமும் இல்லை. 
 
யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என்று தெரியும். யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் நாம் சிந்திக்கின்றோம். அமைச்சர்கள் அதனை செய்ய வேண்டும். நான் இரண்டு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுகிறேன். ஆகவே பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு மேலதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வோம். வட மத்திய மாகாணத்திற்கு நாங்கள் சிறிய குளங்களை அமைத்துள்ளோம். அதனையே வடக்கிற்கும் செய்யவுள்ளோம். ஏன் சிங்கள மக்களுக்கு செய்தால் சரி தமிழ் மக்களுக்கு செய்தால் தவறு என்றா கூறுகீறீர்கள்?“
 
இந்நிலையில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.
 
இரா.சம்பந்தன் “பிரதமர் அவர்களே, எமது மக்கள் நீண்டகாலமாக அச்சத்தில் வாழ்ந்தார்கள். அவர்களது வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன. எமது மக்கள் தொடர்ந்து கொட்டி ல்களிலேயே வாழ வேண்டுமா? பொருத்து வீட்டுத் திட்டத்தை நாம் முற்றாக எதிர்க்கி ன்றோம். இலங்கையில் செயற்படும் ஐந்து வங்கிகள் இதற்கு நிதியுதவி வழங்க முன்வந்து ள்ளன. பொருத்துவீட்டுத் திட்டத்திற்கான நிதியின் மூலம் இரணடு சாதாரண வீடுகளை அமைக்க முடியும். ஏன் அதனையை பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து இதனை நிறுத்துங்கள். பதில் தாருங்கள்.“
 
இதற்கு பதிலளித்த, பிரதமர், “சிலர் இந்த விட்டுத் திட்டத்தினை கோரினார்கள். ஆகவே இதனை செயற்படுத்த தீர்மானித்தோம். இந்த நாட்டில் இவ்வாறான வீடுகள் காணப்படு கின்றன. ஆகவே அடுத்த வருடம். இது தொடர்பில் உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். ஆகவே உங்கள் அனைவரையும் அழைத்து நான் பேசவுள்ளேன். அதன் பிறகு ஒரு முடிவுக்கு வர முடியும். 
 
வீடுகளை ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு அமைப்பதா? அல்லது வேறு வழிகள் தொடர்பிலும் தீர்மானிக்க முடியும். இராணுவம் சில வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளது. வடபகுதி மக்கள் கொட்டில்களில் வாழ்வாக கூறினீர்கள்.  உங்கள் கோரிக்கையே மக்களது கோரிக்கையானால் அதனை நிச்சயமாக செய்ய முடியும். இதில் பிரச்சினை இல்லை. பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள முடியும்.“
 
இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட இரா.சம்பந்தன், “10,000 பொருத்து வீடுகளை அமைப்பதற்கா ன நிதியில் 20,000 கல் வீடுகளை அமைக்க முடியும், ஏன் நிதியை வீணடிக்க வேண்டும். இது தொடர்பில் கவனம் செலுத்தவும்.“
 
இந்நிலையில் மீண்டும் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்க அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் முயற்சித்தார். எனினும் தமிழ்க் கூட்டமைப்பின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அதனை மறுதளித்தார்.
 
மாவை சேனாதிராஜா “எங்களுக்கு பிரதமர் பதில் வழங்கிவிட்டார் நீங்கள் அமரலாம். உங்கள் பதில் தேவையில்லை எனத் தெரிவித்தார்
 
Posted

பொருத்து வீட்டுத்திட்ட விவகாரம்:

111-422966098a92a39b9f23e5fe3dfc629833ca8b51.jpg

 

கூட்டமைப்பினரும் சுவாமிநாதனும்  சபையில் கடும் வாக்குவாதம்
(ஆர்.ராம், எம்.எம்.மின்காஜ்)

வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­பது தொடர்பில் சபையில் பிர­தான எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் அமைச்­சர் சுவாமிநாதனுக்கு­மி­டையில் சபையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்பட்டது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 2017ஆம் ஆண்டு வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தின் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத விவ­கார அமைச்சின் செல­வுத்­த­லைப்­புக்கள் மீதான குழு­நிலை விவாதம் நடை­பெற்­றது.

இந்த விவா­தத்தில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சுமந்­திரன் எம்.பி. சிறைச்­சாலை மறு­சீ­ல­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம். சுவா­மி­நா­தனின் பெயரைக் குறிப்­பிட்டு கடு­மை­யான விமர்­சித்­த­தோடு அமைச்­சுப்­ப­த­வி­லி­யி­ருந்து வில­கு­மாறும் வலி­யு­றுத்­தினார். அது­மட்­டு­மன்றி 13ஆம் திருத்­தச்­சட்டம் தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு எனக் கூறு­வ­தற்கு நீங்கள் யார் என கடு­மை­யான தொனியில் கேள்­வி­யும் எ­ழுப்­பினார்.

இதன்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொது எதி­ரணி உறுப்­பி­னர்­களும் கிண்­ட­லாக அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்கு எதி­ராக கருத்­துக்­களை முன்­வைத்­த­வா­றி­ருந்­தனர்.

சுமந்­திரன் எம்.பி.யின் கருத்­துக்­க­ளுக்கு அமைச்சர் தனது பதி­ல­ளிப்­பையும் தெளிவுபடுத்­த­லையும் முன்­வைக்க முனைந்­த­போதும் இரு­வ­ருக்­கு­மி­டையில் கடு­மை­யான வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. நீங்கள் பிர­தமர் உத்­த­ர­வு­க­ளைக்­கூட செய்­யா­தி­ருக்­கின்­றீகள். தயவு செய்து அமைச்சை வேறொ­ரு­வ­ரி­டத்தில் வழங்­குங்கள் என சுமந்­திரன் எம்.பி குறிப்பிட்டார்.

அவ­ச­ர­மாக சபைக்குள்

வந்தார் பிர­தமர்

இச்­ச­ம­யத்தில் சபைக்குள் அவ­ச­ர­மாக பிர­வே­சித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,எதி­ர­ணியை அமை­தி­யா­கு­மாறும் குறிப்­பாக சுமந்­திரன் எம்.பி.யை அமைதி காக்­கு­மாறும் சைகையால் கூறி­ய­தோடு குறுக்­கீடு செய்து தனது கருத்தை முன்­வைக்க முயன்றார்.

கூச்­ச­லிட்ட பொது எதி­ரணி

இதன்­போது பொது எதி­ர­ணி­யினர் கூச்­ச­லிட்­ட­வாறு பிர­த­மரை உரை­யாற்­ற­வி­டாது வெவ்­வேறு விட­யங்­க­ளை­கூ­றி­ய­வாறு இருந்­தனர். குறிப்­பாக வடக்கு மக்­க­ளுக்கு வீடு­களை கொடுங்கள். சேர்.சேர் என்று குழப்­பி­ய­வாறே இருந்­தனர்.

இதன்போது உரையாற்றிய பிரதமர்

யாழ்ப்­பாணம் பற்­றிய மோத­லொன்று வார்த்­தைகள் மூலம் நடக்­கி­றது. நாம் அதை பேசித் தீர்த்­துக்­கொள்வோம். யாழ்ப்­பா­ணத்தை பொறுத்த வரையில் எமக்கு ஒரு எம்.பி. இருக்­கிறார். விஜ­ய­கலா மகேஸ்­வரன் எமக்கு இருக்­கிறார். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கே பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றனர். உங்­க­ளுக்கு அங்கு எந்த உறுப்­பி­னரும் இல்­லாத நிலையில் நீங்கள் (ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர்) எதற்­காக கூச்­ச­லி­டு­கின்­றீர்கள்?

யாழ்ப்­பாண மக்­களை நீங்கள் எப்­படி நடத்­தி­னீர்கள்? யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு உங்­க­ளது காலத்தில் என்ன நடந்­தது? என்ற கேள்­வி­களைத் தொடுக்­க­லானார்.

அத்­தோடு நாம் அதிக பணத்தை யாழ்ப்­பா­ணத்­துக்கு வழங்­குவோம். அவர்­க­ளுக்கு என்ன வேண்டும் என்­பதை வாக்­க­ளித்து யாழ்ப்­பாணம் மக்கள் தெரிவித்­தனர், அந்த பகு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தையே நாம் தற்­போது செய்ய வேண்டும். அபிப்­பி­ராய பேதங்­களை நாம் துப்­பாக்கி குண்­டு­களை பாவிக்­காமல் பேச்­சுக்­களின் மூலம் தீர்த்துக் கொள்­கிறோம். நாம் அப் பிர­தே­சத்­துக்கு அதிக பணத்தை வழங்­குவோம் என்றார்.

இதன்போது கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எமது மக்­களின் அனைத்து வீடு­களும் அழிக்­கப்­பட்­டுள்­ளன. எமது மக்கள் ஏன் கூண்­டு­களில் வாழ வேண்டும் என்று நினைக்­கி­றீர்கள்? எமது மக்­க­ளுக்கு வீடு­களே தேவை­யாக இருக்­கி­றன.

பொருத்து வீடொன்று அமைப்­ப­தற்­கான செலவில் எம்மால் இரு வீடு­களை அமைக்க முடியும். ஏன் இது தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்­த­வில்லை. தயவு செய்து இந்த பொருத்து வீடு திட்­டத்தை நிறுத்­துங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதமர்

பெரும்­ப­குதி வீடுகள் செங்­கற்­களை கொண்டே நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன. புனைந்து கட்­டப்­பட்ட பொருத்து வீடுகள் தேவை என்று சில உறுப்­பி­னர்கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். அவ்­வா­றான சில வீடுகள் அமைக்­கப்­படும். இரா­ணுத்­தினர் ஏற்­க­னவே சில வீடு­களை நிர்­மா­ணித்து உங்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளனர். 2009 பின்னர் வடக்கில் மக்கள் கூடா­ரங்­க­ளுக்குள் வாழ்­வ­தற்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­துடன், நட­மா­டு­வ­தற்­கான சுதந்­திரம் கூட அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. உங்­க­ளது கோரிக்கை மற்றும் மக்­க­ளுக்கு என்ன வேண்டும் என்­பது நிறை­வேற்­றப்­படும். அதில் எந்த பிரச்­சி­னையும் கிடை­யாது என்றார்.

தொடர்ந்த கூச்சல்

இச்­ச­ம­யத்­திலும் பொது எதி­ர­ணி­யினர் கூச்­ச­லிட்­ட­வாறு பிர­த­ம­ரைப்­பார்த்து ஏதோ கூறிக்­கொண்­டி­ருந்­தனர். பிர­தமர் ஆச­னத்தில் அம­ராது எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்­தி­லி­ருந்து எழு­வதைப் பார்த்­த­வாறு இருந்தார்.

விடாப்­பி­யாக நின்ற சம்­பந்தன்

10 ஆயிரம் உலோக பொருத்து வீடு­களை அமைப்­ப­தற்­கான தொகையின் மூலம் 20 ஆயிரம் செங்கல் வீடு­களை அமைக்க முடியும். ஆகவே, இந்த 10 உலோக பொருத்து வீடு­களை அமைக்கும் தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்­யு­மாறு நான் பிர­த­ம­ரிடம் வேண்­டுகோள் விடுக்­கிறேன் என்று இதற்போது பிரதமர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெ ளியிட்ட பிரதமர் நீங்கள் அனை­வரும் என்னை சந்­தித்­தீர்கள். நாம் இணக்கம் கண்­டி­ருந்தோம். சில உறுப்­பி­னர்­க­ளுக்கு இந்த மாதி­ரி­யான பொருத்து வீடுகள் தேவை­யாக இருந்­தன. ஆகவே, கேள்­வியை மதிப்­பீடு செய்த நாம் தீர்­மா­ன­மொன்­றுக்கு வர முடியும். நாம் முதலில் கட்­டி­டங்­களை பெறுவோம். குறித்­த­வொரு எண்­ணி­கை­யி­லான வீடுகள் நிர்­மா­ணிக்­க­பட்­டுள்­ளன. வடக்கில் ஏனைய வீடு­களின் நிர்­மாணப் பணி­க­ளையும் ஆரம்­பிப்போம் என்றார்.

இதன்போது கருத்து வெ ளியிட்ட மாவை.சோன­தி­ராஜா எம்.பி

எனது விளக்­கத்தை அளிக்­கின்றேன் என எழுந்த அமைச்­சரை நோக்கி பிர­தமர் இந்த விட­யத்தில் தலை­யிட்டு அதை தீர்த்து வைப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார்.எமக்கு உங்­க­ளது பதில் தேவை­யில்லை என்றார்.

இதன்போது அமைச்சர் சுவாமிநாதன் விளக்கமளிக்கையில்

உலோக பொருத்து வீடு­க­ளா­னது ஆரம்­பத்தில் தள­பா­டங்கள் மற்றும் கணிணி என அனைத்து வச­தி­க­ளு­டனும் வழங்­கப்­ப­ட­வி­ருந்­தன. உங்­க­ளது(கூட்­ட­மைப்­பி­ன­ரது) ஆட்­சே­ப­னையின் கார­ண­மாக அந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வி­ருந்த தள­பா­டங்கள் மற்றும் கணிணி உள்­ளிட்ட அனைத்து வச­தி­க­ளையும் நான் திரும்பப் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­ய­தா­யிற்று என குறிப்­பிட்­ட­போது சுமந்­திரன் எம்.பி. குறுக்­கீடு செய்தார்.

எதற்­காக 1.6மில்­லியன்

நீங்கள் கொடுத்த கடி­தத்தின் பிர­காரம் 2.1 மில்­லியன் ரூபாவில் இருந்து 1.6 மில்­லியன் ரூபா­வுக்கே குறைக்­கப்­பட்­டுள்­ளது. செங்கல் மற்றும் சாந்து வீடு­களை அர­சாங்­கமே 8 இலட்சம் ரூபா செலவில் நிர்­மா­ணிக்கும் நிலையில், எதற்­காக உலோக பொருத்து வீடு­க­ளுக்­காக 1.6 மில்­லியன் ரூபாவை செல­விட வேண்டும் என சுமந்­திரன் எம்.பி கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவா­மி­நாதன்:

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வ­டைந்து இரு ஆண்­டுகள் நிறை­வ­டை­கின்ற போதிலும் யாழ்ப்­பா­ணத்தில் ஒரு வீடேனும் முறை­யாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

சுமந்­தி­ரனால் கூறப்­பட்ட மாற்­றுத்­திட்­டத்தை பொறுத்த வரையில், 5 வங்­கிகள் நிதி­யு­தவி வழங்க முன்­வந்­தி­ருப்­ப­தாக தொிவிக்­கப்­பட்­டது. ஆனால், எந்த வங்­கி­யி­னது பெயரும் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. தேசிய அபி­வி­ருத்தி வங்­கி­யி­றுட­மி­ருந்து அவ­ருக்கு கடி­த­மொன்றை கிடைத்­துள்­ளது. ஆனால், நான் அந்த வங்­கி­யுடன் பேசிய போது அது விருப்பம் கடிதம் மட்­டுமே என்று தெரிவிக்­கப்­பட்­டது. எந்த உறு­தி­ய­ளிப்பும் அதில் இருக்­க­வில்லை.

இந்த வீடு­க­ளுக்­கான கேள்­வி­மனுக் கோரல் ஒரு வரு­டத்­திற்கு முன்னர் அறி­விக்­கப்­பட்ட போது ஏன் இவர்கள் யாரும் இந்த வீடு­களை நிர்­மா­ணிக்க முன்­வந்­தி­ருக்­க­வில்லை? ஏன் யாரும் உதவ முன்­வ­ரை­வில்லை. தற்­போது அனைத்து நடை­மு­றையும் நிறைவு செய்து யாழ்ப்­பாண மக்­க­ளுக்கு நாம் உதவ செயற்­படும் போது ஏன் அதை எதிர்க்­கி­றீர்கள்?

முல்­லை­தீவு, கிளி­நொச்சி, மட்­டக்­க­ளப்பு மற்றும் மன்னார் பகு­தி­களைச் சேர்ந்த உங்­க­ளது கட்­சியின் உறுப்­பி­னர்­களே உலோக பொருத்து வீடுகள் வேண்டும் என்று கோரி எனக்கு எழுதியிருந்தனர். அதற்கான ஆவணங்கள் என்வசம் இருக்கிறது என்றார்.

இதன்போது எந்தவொரு தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.யும் உலோக பொருத்து வீடுகள் தேவை என்று கோரியிருக்கவில்லை அதற்கான ஆதாரங்களை காட்டுங்கள் என அமைச்சர் சுவாமிநாதனிடம் மாவை சேனாதிராஜா கோரினார்.

எழுத்து மூல ஆவணங்கள் உள்ளன

எழுத்து மூலமான ஆதராங்கள் இருக்கின்றன. நாம் தமிழ் மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கவே செயற்படுகிறோம். இந்த கோரிக்கைகள் மக்களாலும் எம்.பி.க்களாலுமம் எழுத்துமூலம் எனக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் குழப்பாதீர்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து இருதரப்பு வாக்குவாதம் நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து பிரதமர் சபையை விட்டு வெ ளியேறினார். எனினும் அடுத்தவந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களின் உரைகளும், அமைச்சரின் பதிலும் காட்டமான தொனியில் சாடல்களுடன் அமைந்திருந்தன. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.