Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

554462241_1178382240830259_8711452829864

தற்சார்பு வாழ்கை 

eotSsondrplg1m7hc92mllh0im23ai0fcttam5676mu710i06u2itf905 gg ·

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், டெல்லியில் விஷமுள்ள கோப்ராக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் கவலைப்பட்டனர். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, இறந்த ஒவ்வொரு பாம்பிற்கும் ஒரு பரிசுத் தொகையை அறிமுகப்படுத்தினர்.

முதலில், இந்தக் கொள்கை வெற்றிகரமாகத் தோன்றியதாகத் தோன்றியது, பல கோப்ராக்கள் கொல்லப்பட்டன.

ஆனால் விரைவில், எதிர்பாராத விளைவு தோன்றியது. வெகுமதியைப் பெறுவதற்காக ஆர்வமுள்ள உள்ளூர்வாசிகள் கோப்ராக்களை இனப்பெருக்கம் செய்யத் தொடங்கினர். அரசாங்கம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து, கோப்ரா திட்டத்தை ரத்து செய்தவுடன், வளர்ப்பாளர்கள் இப்போது பயனற்ற தங்கள் பாம்புகளை விடுவித்தனர்.

விளைவு? கோப்ராக்களின் எண்ணிக்கை முன்பை விட அதிக அளவில் அதிகரித்தது.

இந்த அத்தியாயம் கோப்ரா விளைவு என்று நினைவுகூரப்படுகிறது, இது நல்ல நோக்கத்துடன் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் எவ்வாறு பின்வாங்கும், நோக்கம் கொண்ட விளைவுக்கு நேர் எதிரான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.......! 😃

  • Replies 2.6k
  • Views 227.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

553513113_775442085402720_79708822319184

🏆 100 வயது முதியவர், ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி உலக சாதனை படைத்தார்.

அரிதான வரலாற்றுச் சாதனையாக, 100 வயதுடைய ஒருவர் உலகின் ‘மிக விசுவாசமான ஊழியர்’ என கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவர் ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இன்றைய வேகமான தொழில்சூழலில், இப்படியான அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால உறுதிப்பாடு வியப்பை ஏற்படுத்துகிறது. ஓய்வு பெற்றிருக்கும் வயதில் கூட, வேலைக்கான பாசமும், கட்டுப்பாடும், ஒழுக்கமும் அவரை முன்னெடுத்துச் சென்றது. இந்த சாதனை, மனித உள்ளத்தின் வலிமையையும், வாழ்க்கையில் அர்த்தமுள்ள நோக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் சக்தியையும் நிரூபிக்கிறது. 🌟 அவரது பயணம், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பேருத்வேகமாக திகழ்கிறது. உண்மையான உழைப்பும் விசுவாசமும் எப்போதும் பாராட்டப்படும் என்பதற்கான சான்றாக இந்த சாதனை விளங்குகிறது.

Tamil Trending Newsz

  • கருத்துக்கள உறவுகள்

554836077_781915058022561_59456753266608

👍👍

  • கருத்துக்கள உறவுகள்

554104427_4108127206095910_7262675207162

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2025 at 06:01, தமிழ் சிறி said:

553513113_775442085402720_79708822319184

🏆 100 வயது முதியவர், ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி உலக சாதனை படைத்தார்.

அரிதான வரலாற்றுச் சாதனையாக, 100 வயதுடைய ஒருவர் உலகின் ‘மிக விசுவாசமான ஊழியர்’ என கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவர் ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இன்றைய வேகமான தொழில்சூழலில், இப்படியான அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால உறுதிப்பாடு வியப்பை ஏற்படுத்துகிறது. ஓய்வு பெற்றிருக்கும் வயதில் கூட, வேலைக்கான பாசமும், கட்டுப்பாடும், ஒழுக்கமும் அவரை முன்னெடுத்துச் சென்றது. இந்த சாதனை, மனித உள்ளத்தின் வலிமையையும், வாழ்க்கையில் அர்த்தமுள்ள நோக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் சக்தியையும் நிரூபிக்கிறது. 🌟 அவரது பயணம், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பேருத்வேகமாக திகழ்கிறது. உண்மையான உழைப்பும் விசுவாசமும் எப்போதும் பாராட்டப்படும் என்பதற்கான சான்றாக இந்த சாதனை விளங்குகிறது.

Tamil Trending Newsz

பெரியவர் 16 வயதில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

முதலே இளைப்பாறி இருந்தால் 100 வயதுவரை வாழ்ந்திருக்க மாட்டார்.

இருந்தாலும் சுயநலம் பிடித்த மனிதன்.

எத்தனையோ பேர் வேலை இல்லாமல்

தெருத்தெருவாக திரியும் நேரத்தில்

84 வயதுவரை வேலை செய்துள்ளார்.

அரசியல்வாதிகள் போல இவரும் குந்திய இடத்தைவிட்டு நகலாமல் இருந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

554102745_1543898756638224_4539686892389

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

554102745_1543898756638224_4539686892389

இதைச் சொல்லுவதற்கும் 150000 ரூபா போன்தான் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

554099686_4107087619533202_7829888734958

  • கருத்துக்கள உறவுகள்

557027384_818548027778815_41369345189632

  • கருத்துக்கள உறவுகள்

556887756_777388388455180_47455988245899

  • கருத்துக்கள உறவுகள்

557620172_2274339992986924_8678511252229

  • கருத்துக்கள உறவுகள்

558843792_4119698731605424_3158873266563

  • கருத்துக்கள உறவுகள்

561608038_1310011424472030_1596157821469

விதூஷனி கிரிதாஸ்

Scripted & edited என்று குற்றம்சாட்டப்படும், கிளிஷே டிராமாக்களாகவே இருக்கும் நீயாநானா நிகழ்ச்சியில் முதன்முறையாக ஒரு sensible ஆன விஷயத்தை பகுதி பார்க்க முடிந்தது.

சண்முகத்தம்மாள்.

What a மாமியார்?!!!

திருமணமான முதல்மகன் இறந்துவிட, அவரது மனைவியான (தன் மருமகளை) வீட்டைவிட்டு அனுப்பாமல், தானே படிக்க வைத்து, தனது இளையமகனுக்கு திருமணம் செய்துவைத்து, அந்தப்பெண்ணை ஒரு டீச்சராக்கி சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு உயர்த்தி இருக்கும் எழுபத்தியைந்து வயது மாமியார் சண்முகத்தம்மாளின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது.

ரிதன்யாக்கள் வரதட்சணை மற்றும் இன்னப்பிற கொடுமைகளால் செத்துக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், சண்முகத்தம்மாளும் அவரது இளைய மகனும் ரோல்மாடலாக போற்றப்பட வேண்டியவர்கள்...பின்பற்றப்பட வேண்டியவர்கள்..

இளையமகன் ஏன்?

இன்னமும் தனது மனைவியான அண்ணியை, "வாங்க போங்க" என்றே அழைக்கிறார். பாதுகாவலாக இருப்பது மட்டுமே வேலையன்று. பொட்டிழந்தவளுக்கு மரியாதையும் கொடுக்கும் ஆண்கள் ரொம்ப ரொம்ப குறைவு எல்லாம் இல்லை, அல்மோஸ்ட் ஸீரோ.!

நவீனத்துவம் என்பது என்னவோ மாநகரங்களின் ஏகபோக குணம் என்பது போன்ற மாயபிம்பங்கள் சுக்குநூறாக உடைந்து போனது. தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் சண்முகத்தம்மாளை போன்ற புரட்சி பெண்மணிகள் சத்தமில்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தான் உண்மையான வீரத்தமிழச்சிகள்...போலி திரைபிம்பங்களை , போலி புரட்சியாளர்களை கொண்டாடும் இளைய தலைமுறை இவர்களை பார்த்து ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும்.. எளிமையான மனிதர்களின் வாழ்வியல் முறை என்பது எப்போதுமே மனதால் நிரம்பிய உணர்வுகளால் உந்தப்பட்டிருக்கும். இவர்கள் செய்வதெல்லாம் மாபெரும் புரட்சி என்பதை கூட அறியாதவர்கள். காமிரா வெளிச்சம் இவர்களை மாற்றாதிருக்கட்டும்..

அதுசரி, பலூன் அக்காவையும் மெண்டல் டாக்டரையும் வைத்து பிக்பாஸ் நடத்தும் விஜய்டிவி, இதுபோல் சில அரிதான நிகழ்வுகளால் புண்ணியம் கட்டிக்கொள்ளட்டும்.......!

Writer Charithraa's

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

560657055_1145966247639449_7857394690474

  • கருத்துக்கள உறவுகள்

Ammu Dilaxshi ·

தீபிகா படுகோன், ஆலியா பட் உள்ளிட்ட நடிகைகள் பாலிவுட்டை கலக்கி வரும் நிலையில், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றை ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா ஆகியோர் அதிக சம்பளம் பெறும் நடிகைகளாக உள்ளனர். ஆனால், இவர்களைவிட பல ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி வரும் நடிகை ஒருவர் அதிக சம்பளம் வாங்குகிறார்.

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சினிமா. அத்தகைய சினிமா ரசிகர்களால் நாள்தோறும் கொண்டாடப்படுகிறது. நடிகர்களுக்கு சமமாக நடிகைகளும் தங்களின் அபார நடிப்பு திறனால் அசத்தி வருகின்றனர். இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் எனத் தெரியுமா?. தீபிகா படுகோனே, ஆலியா பட் என நீங்கள் நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு.

ஒரு திரைப்படத்திற்கு ரூ.40 கோடி சம்பளம் வாங்கும் இந்த நடிகையே முதன் முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கியவர். பிகார் மாநிலத்தில் பிறந்து, உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்தவர் தான் அந்த நடிகை. அவர் வேறு யாருமல்ல, உலக அழகியான பிரியங்கா சோப்ரா.

பாலிவுட்டில் ஹீரோயின்களின் சம்பளத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த பிரியங்கா சோப்ரா, பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ. 40 கோடி சம்பளம் வாங்குகிறார். அதாவது 5 மில்லியன் டாலர்கள்.

ஆனால் இந்த தொகை ஹாலிவுட்டுக்கானது மட்டுமே. இருப்பினும், அவர் இந்திய படங்களில் நடிக்கும்போது ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ.14-ரூ.20 கோடிகள் வாங்குகிறார்.

என்னதான் பாலிவுட், ஹாலிவுட் என பிரியங்கா சோப்ரா நடித்தாலும், அவரின் சினிமா கேரியருக்கு விதைபோட்டது தமிழ் சினிமாதான். 2002 ஆம் ஆண்டில் தமிழில் 'தமிழன்' திரைப்படம் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதுவே பிரியங்காவின் முதல் திரைப்படம்.

அதன்பிறகு வரிசையாக இந்தி படங்களில் நடித்தார். 'பர்ஃபி', 'மேரி கோம்', 'பாஜிராவ் மஸ்தானி', 'தில் தடக்னே தோ' போன்ற படங்களில் ஒவ்வொன்றாக ஹிட் அடித்தார்.

ஹாலிவுட்டுக்கு சென்ற அவர், இந்தி படங்களை குறைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார். பிரியங்கா நடித்த முதல் ஹாலிவுட் படமான 'பேவாட்ச்' மாபெரும் வெற்றி பெற்றது. அது 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு அவர் 'எ கிட் லைக் ஜேக்', 'இஸ்னாண்ட் இட் ரொமான்டிக்', 'வீ ஆர் ஹீரோஸ்', 'தி மேட்ரிக்ஸ் ரிசர்ரக்ஷன்', 'லவ் அகெய்ன்' போன்ற படங்களில் நடித்தார்.

இவர் தன்னைவிட வயதில் இளையவரான பிரபல பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் முடித்தார். இவர்களது திருமணம் உமைத் பவன் என்ற அரண்மனையில் நடைபெற்றது.

தற்போது சுமார் 650 கோடிக்கு சொத்துக்கு அதிபதியாக, பிரைவேட் ஜெட், அமெரிக்காவில் இரண்டு பங்களா, விதவிதமான சொகுசு கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்நிலையில் இவரது சிறிய வயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Voir la traduction

559882540_1350864213074862_3863365657296

பிரியங்கா சோப்ரா .......! 🙂

  • கருத்துக்கள உறவுகள்

Thava Arumugam ·

இது கென்யா நாட்டிலே விவசாயிகளால் அமைக்கப்படும் தொங்கும் தேன்கூடுகளைக் கொண்ட யானைத் தடுப்பு வேலிகள் இவை. பொதுவாகவே யானைகள் தேனீக்கள் இருக்கும் பக்கம் தலைவைத்துப் பார்ப்பதில்லையாம். இந்த வேலிகளால் யானைகள் தங்கள் பயிர்களை சேதம் செய்வதை பெரும்பாலும் தடுப்பதோடு தேன் மூலமும் விவசாயிகள் மேலதிக வருமானத்தைப் பெறுகின்றனர். இலங்கையிலும் இந்த முறையைப் பயன்படுத்தலாமே.🙏"

தேனீக்கள் பற்றிய இன்னொரு தகவல் வியட்நாம் போரின் போது அமெரிக்க சிப்பாய்கள் சப்பித் துப்பிய சுவிங்களை சேகரித்த வியட்நாம் போராளிகள் அவற்றை குச்சிகளில் குத்தி தேன் கூடுகளை இடைஞ்சல் செய்வார்களாம் இதனால் கோபமடைந்த தேனீக்கள் சுவிங்கம் சப்பியபடி வரும் அமெரிக்க சிப்பாய்கள் முகத்தை பதம்பார்க்க வியட்நாம் போராளிகள் அமெரிக்க வீர்ர்களை பதம்பார்த்தார்களாம். 🌺"

559359921_24942626505428322_158527330726

  • கருத்துக்கள உறவுகள்

565149298_1837149936932489_3290089923965

  • கருத்துக்கள உறவுகள்

569516645_10234970104705691_538446877984

  • கருத்துக்கள உறவுகள்

Chandran Veerasamy ·

விருதுநகர் தெப்பக்குளம்; குளத் தைச் சுற்றிலும் கடைவீதிகள். அந்த வீதி களின் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சுலோசன நாடார் வீதி என்னும் அந்தச் சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ் நாட்டின் தவப்புதல்வர் காமராஜ் அவர் களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.

மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம் மையார் படுத்திருந்தார். சின்ன இடம். நாலு பக்கத்துச் சுவர்களிலும் பழம் பெரும் தேச பக்தர்களின் படங்கள். அவற் றுக்கிடையே வேல் முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்தியமூர்த்தியின் உருவம்!

கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட் கார்ந்தார். மூச்சுத் திணறியது. ''வாங்கய்யா'' என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்து போய் மின்சார விளக்கின் 'ஸ்விச்'சைப் போட்டார்.

''தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்...''

''நான் என்ன சொல்லப் போகிறேன் ஐயா! எனக்கு வயதாகிவிட்டது. அத்து டன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருசம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்ந்துக்கொள்கிறேன்.''

''சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?'' என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார்.

''நல்லாச் சொன்னீங்கய்யா... அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன். போன உடனே என்னை ஊருக்குத் திருப்பிப் பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பான்! 'பட்டணம் பாக்க ணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா. எல்லாத் தையும் பார்த்துட்டு உடனே விருதுநகர் போய்ச் சேரு'ம்பான்..!''

''மாசச் செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?''

''அனுப்பறான். பொடிக்கடை தனக் கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்...''

''எவ்வளவு பணம் அனுப்பறாரு?''

''120 ரூபாய். பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். மாசம் அந்த 120 ரூபாதான், அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும் பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்துது பாருங்க... அப்ப இங்கே வந்திருந்தான். 'என்னப்பா, இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா'ன்னு கேட்டேன். 'நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணானு கேட் டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா..?''

''இப்படியரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்'' என்றதும், அன்னை யின் கண்கள் கலங்கிவிட்டன.

''ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?''

''கலங்காம என்ன செய்ய? துறவியாகி விட்ட பட்டினத்தடிகளை அவன் தாய் துறந்துவிட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்து விட்டு நிற்கிறேனே!''

- விகடன்பொக்கிஷம்.

Voir la traduction

570445162_25132688709728358_669418216210

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு மருந்து  ·

Amuthan ·eortndspoSilcm5icm hum68106245cm9lahl8310cn8l8ili1g52igthmtm ·

முன்னாடியெல்லாம் ஆட்டுக்கறி வாங்கினால் கொஞ்சம் ஈரல், கொழுப்பு எல்லாம் நாம கேட்காமலே சும்மா அள்ளிப்போடுவாங்க... நாமதான் அதெல்லாம் வேண்டாம்னு சொல்வோம் ஆனால் இப்ப அதெல்லாம் வேணும்னு நாமளே கேட்டாலும் அவங்க இல்லன்னு சொல்றாங்க.. ஏன்னு கேட்டால் ஈரல் தனியா, நுரையீரல் சுவரொட்டி தனியான்னு விக்கிறோம்.. வேணும்னா அதுக்கு தனியா காசு கொடுத்து வாங்கிட்டு போங்கன்னு சொல்றாங்க...

இதற்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா? யூடியூப்தான்... கன்டெண்ட்டுக்காக ஈரல் தனியா வாங்கி அது கறி, குடல் மட்டும் வாங்கி அது ஒரு கறி, நுரையீரல் வாங்கி அது ஒரு கறின்னு தனித்தனியா வாங்கி அதுக்கு ஒரு பேர் வைச்சு வீடியோ போட்டதின் விளைவு எங்க வந்து நிக்கிது பார்த்திங்களா?

ஆட்டுக்காலுக்கு வந்த மவுசு.. ஆட்டுக்கால் பாயான்னு சொல்லி சொல்லி இப்ப அதுக்கும் ஒரு விலை... மூனு ஆட்டுக்கால் ஆயிரம் ரூபாயாம் ஒரு நேரத்தில் உடம்பு முடியாதவங்களுக்குத்தான் ஆட்டுக்கால் ரசம் வைக்க வாங்குவாங்க எல்லாரும் வாங்க மாட்டாங்க ஆனால் இப்ப வாங்க நினைச்சாலும் வாங்க முடியாது போல அந்த விலை விக்கிது...

ஆட்டுக்குடல் அதுவும் பெரிசா யாரும் வாங்க மாட்டாங்க அதுவும் இப்ப விலை அதிமாகிடுச்சு இப்படி எல்லாவற்றையும் விலை ஏத்திவிட்ட பெருமை யூடியூப் காரங்களையே சேரும்...

எப்பா சாமிகளா.... இன்னும் எதையெல்லாம் ஏத்திவிடப் போறீங்களோ தெரியல..

Voir la traduction

572516722_3204988479679975_7761678027510

  • கருத்துக்கள உறவுகள்


எங்கே எனது கவிதை
  · 

(1887–1895ல்) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய

பிரிட்டிஷ் எஞ்சினீயர் பென்னி குவிக்

அணயைக் கட்டுவதில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன்

எடுத்துக் கொண்ட புகைப்படம்.......!

571771628_3112156918972194_9835687933648

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்  ·

Ranjini Kanna ·oeSosndtpr5t2o:09ict1c88gfbaml5gc529m1 911fi ta8251ag,rchoet ·

ஒரு நாள் பயணம்...

கணவர் தூங்கிக் கொண்டிருந்தார். மகன்களை மட்டும் எழுப்பினார் பெர்த்தா. மூவருமாகச் சேர்ந்து, ஓசை எழுப்பாமல் ஷெட்டிலிருந்து காரைத் தள்ளிக் கொண்டு வந்தனர். பின்னர் தனது அன்னை வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினார் பெர்த்தா.

கணவருடன் சண்டை போட்டு அம்மா வீட்டுக்குப் போகும் சாதாரணப் பயணம் அல்ல அது.

பிறகு?

ஜெர்மெனியில் வளமான குடும்பத்தில் பிறந்தார் பெர்த்தா. கார்ல் பென்ஸைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

கார்ல் பென்ஸ் திறமையான பொறியியலாளர். குதிரைகள் இல்லாமல், எந்திரத்தால் இயங்கும் வாகனத்தை உருவாக்கினார். அதுதான் காப்புரிமை பெறப்பட்ட முதல் பென்ஸ் மோட்டார் கார்.

ஆனால் அந்த பென்ஸ் மோட்டார் காரை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. குதிரை வண்டிகள்தான் வசதியானவை என மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. மோட்டார் கார் குறித்து பகடிகளும் எதிர்மறை விமர்சனங்களும் பரவலாக எழுந்தன.

கார்ல் பென்ஸால் இந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிறையப் பணத்தை முதலீடு செய்து, பெரிய கனவுகளுடன் உருவாக்கிய மோட்டார் கார் தோல்வி அடைந்ததாக எண்ணிக் கலங்கிப் போனார். ஆனால் பெர்த்தா அதைத் தோல்வியாகக் கருதவில்லை.

பிரச்சனை மோட்டர் காரில் இல்லை, மார்க்கெட்டிங்கில்தான் இருக்கிறது. முறையாக மக்களிடம் அறிமுகப்படுத்தினால், வெற்றிபெறக் கூடிய வாகனம்தான் என்று உறுதியாக நம்பினார். நம்பிக்கையை வெறும் வாய்வார்த்தையாகச் சொல்லாமல் செயலில் காட்ட முடிவெடுத்தார்.

காரை எடுத்துச் செல்கிறேன் என்று ஒரு குறிப்பு எழுதி வைத்தார். மூன்று சக்கரங்களைக் கொண்டு ரிக்ஷா வடிவிலிருந்த காரைத் தானே கிளப்பினார். தனது இரு மகன்களையும் ஏற்றிக் கொண்டார். சுமார் நூறு கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் பெற்றோர் வீட்டை நோக்கி ஓட்டத் தொடங்கினார்.

முறையான சாலைகள் அப்போது இல்லை. திசைகளைச் சுட்டும் பதாகைகளும் இல்லை. முழுப் பயணத்துக்கும் தேவையான எரிபொருளை சேமித்து வைக்கும் வசதி அந்தக் காரில் இல்லை. அத்தனை தூரம் அதற்கு முன்னர் யாரும் ஓட்டியதும் இல்லை. எல்லா இல்லைகளையும் துணிச்சலை மட்டுமே கொண்டு இட்டு நிரப்பினார் பெர்த்தா.

வழியில் மருந்துக் கடையில் நிறுத்தி, அங்கிருந்த மொத்த லிகோரினையும் வாங்கிக் கொண்டார். பெட்ரோலியக் கரைப்பானான லிகோரின்தான் காரின் எரிபொருள். அந்த மருந்துக் கடைதான் உலகின் முதல் பெட்ரோல் ஸ்டேஷன். (அந்தக் கட்டடம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இன்றளவும் இருக்கிறது)

காருடைய சிறிய இன்ஜின் அடிக்கடி சூடானது. அதைத் தணிக்க வழியில் கண்ட ஆறுகள், நீரோடைகளில் காரை நிறுத்தி, இன்ஜின்மேல் தண்ணீர் ஊற்றினார். மேடுகளில் மூவருமாக இறங்கி வண்டியைத் தள்ளினர்.

அப்படியும் கார் பாதி வழியில் நின்று போனது. பெர்த்தா பதட்டப்படவில்லை. என்ன கோளாறு என்று ஆராய்ந்தார். எரிபொருள் செல்லும் குழாயில் தூசி அடைத்துக்கொண்டிருந்தது. தொப்பியில் சொருகியிருந்த ஊசியை வைத்து அடைப்பை நீக்கினார். இக்னிஷன் ஒயர் சூடானபோது, தான் அணிந்திருந்த பெல்ட்டினைக் கழற்றி ஒயரில் சுற்றி விட்டார்.

கோளாறுகள் இத்தோடு நிற்கவில்லை. சிறிது தூரம் சென்றதும் இணைப்புச் சங்கிலி அறுந்து விழுந்தது. சிறுவர்கள் இருவரும் கொல்லரைத் தேடி அழைத்து வந்தனர். இரும்பைப் பற்றவைத்து இணைத்தபின் பயணம் தொடர்ந்தது.

அடுத்ததாக மரத்தால் செய்யப்பட்ட பிரேக் கட்டைகள் உடைந்து போயின. செருப்புத் தைப்பவரை அழைத்து பிரேக் கட்டைகளில் லெதர் வைத்துத் தைக்கச் சொன்னார்.

நூற்று ஆறு கிலோமீட்டர் தொலைவைக் கடந்து அன்று மாலை அன்னை வீட்டை அடைந்தார் பெர்த்தா. தனது பயணம் வெற்றிகரமாக நிறைவடந்ததைக் கணவருக்கு தந்தியடித்துச் சொன்னார்.

மெக்கானிக்குகளை உடன் வைத்துக்கொண்டு சிறிது தூரம் ஓட்டிச் சென்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவதுதான் அப்போது வழக்கமாக இருந்தது. பெர்த்தாவின் நெடுந்தூரப் பயணம், மக்களிடத்தில் ஓர் ஆர்வத்தையும், இந்தக் காரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்னும் எண்ணத்தையும், பென்ஸ் கார் குறித்த பரவலான அறிமுகத்தையும் ஏற்படுத்தியது.

தானே ‘டெஸ்ட் டிரைவ்’ செய்திருந்ததால், அந்த அனுபவத்திலிருந்து பல பயனுள்ள குறிப்புகளைச் சொன்னார். மேடுகளில் ஏறுவதற்கு எனத் தனி கியர், பிரேக் கட்டைகளில் லெதர் லைனிங் என அவர் முன்வைத்த யோசனைகள் இன்றுவரை கார்களில் பொருத்தப்படும் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன.

பெர்த்தா குறிப்பிட்ட வசதிகளைச் சேர்த்தார் கார்ல். புதுப் பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் பென்ஸ் கார் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னாளில் மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் அடைந்த பெருவெற்றிக்கும், மோட்டார் கார்களின் பரவலான ஏற்புக்கும், பெர்த்தா துணிச்சலுடன் மேற்கொண்ட அந்த ஒரு நாள் பயணமே அஸ்திவாரமாக அமைந்தது.

இன்று நாம் செல்லும் நீண்ட சாலைப் பயணங்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த முன்னோடியாக அறியப்படுகிறார் பெர்த்தா பெனஸ்.

Voir la traduction

571168973_122197835216293440_32390646844

  • கருத்துக்கள உறவுகள்

நேர்படப்பேசு மாத இதழ்  ·

Sudha Srinivasan ·toodrnespS202l1l 6870370fgi9hhhmum5a2guha2fggf33cat2mm77at7u ·

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு.. வீட்டில் ஏழ்மை.. தொடர்ந்து பல நாட்களாக பசி... வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு... ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன். ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.

பையனிடம், ”டேய் இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

ஆஹாஸ இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்ஸ மகிழ்ந்தான்.

மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா... நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.

வாய்ப்புகளை பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்...

Voir la traduction

572098335_1452961272431641_7110370975405


  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரைப் பூங்கா  ·

Natesan Natesan ·opsnedSotri4ifm6f 6i6gi120lh2m1m1u610h863ir f,e0122là5711H3: ·

#இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறு வென்று எல்லாரிடமும், பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கிறான்.

இங்கிலாந்து* கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்க வில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.

“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப்பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக்கூடாது ஆமா. அதென்ன சின்னப் புள்ளைக சமாச்சாரமா?” - இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்.

உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. “மன்னிக்க வேண்டும். தவறு தான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்” என்று பதில் வருகிறது.

சொன்னபடியே கொஞ்சம் வயதில் மூத்தவர் வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன் தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான். இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக்* கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவிவிடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்து விடுகிறது.

வழியனுப்பும் போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லி விட்டால் மனது லேசாகி விடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்:

“ஸாரி.. ஆக்சுவலி பலகோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன். மத்தபடி ஐ லைக் த பாய். துறுதுறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப் பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்..” என்று பாலிஷாகச் சொல்கிறார்.

அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். “இட்ஸ் ஓகே சார். நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்..” தயங்குகிறார்.

”பரவால்ல.. எதாருந்தாலும் சொல்லுங்க”

“நான் அந்தக் கம்பெனில அக்கவுண்ட்ஸ்ல வொர்க் பண்ற ஆளுதான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடிகூட தெரியாது”

நிர்வாகி அதிர்ச்சியாகிறார். “அப்பறம் இன்ஸ்டலேஷனப்ப வேலை செஞ்சுட்டிருந்தீங்க?”

“இந்தப் பையன்கிட்ட போய்ப் போய்க் கேட்டு* அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்ளதான்”

“அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்திருக்க முடியும்?”

“முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன் தான்..........!

Voir la traduction

574305880_2443812219378915_1569634405533

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.