Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'சசிகலாவை முன்னிறுத்தினால், அ.தி.மு.கவுக்கு ஆபத்து!' - பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த திட்டம்

Featured Replies

'சசிகலாவை முன்னிறுத்தினால், அ.தி.மு.கவுக்கு ஆபத்து!'  - பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த திட்டம் 

 

sasi_garden2_16197.jpg

.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை வரவிடாமல் தடுப்பதற்கான சட்டரீதியான வேலைகள் தொடங்கிவிட்டன. சசிகலா எதிர்ப்பாளர்களையும் சந்திக்க இருக்கிறார் அமித் ஷா" என்கின்றனர் பா.ஜ.க. நிர்வாகிகள். 

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த கட்டத் தலைமை குறித்த விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. 'மத்திய அரசு உள்ளே நுழையப் பார்க்கிறது. அ.தி.மு.கவை வழிநடத்த சசிகலாவின் தலைமை அவசியம்' என சீனியர்கள் பேசி வருகின்றனர். அ.தி.மு.கவின் பொதுக்குழு கூடி புதிய தலைமையை தேர்வு செய்ய இருக்கிறது. இந்நிலையில், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சிக்கும் ஓ.பன்னீர்செல்வமே தலைமை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு ஓ.பி.எஸ் முன்னிறுத்தப்படாவிட்டால், தம்பிதுரைக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால், சசிகலாவே முன்னிறுத்தப்படுவதை மத்தியில் ஆளும் பா.ஜ.க நிர்வாகிகள் ஏற்கவில்லை.

amithsha1_16504.jpgஇதுகுறித்து பேட்டியளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, 'சசிகலா பொதுச் செயலாளர் ஆனால், அ.தி.மு.க முற்றிலும் அழிந்து போய்விடும். அவருக்கு மக்களிடம் எதிர்ப்பு இருக்கிறது. நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி தொடர வேண்டும் என்றால், சசிகலா அல்லாத வேறு ஒருவர் அ.தி.மு.கவுக்குத் தலைமை தாங்கினால் மட்டுமே சாத்தியம்' என விரிவாகப் பேசியிருக்கிறார். இதே மனநிலைதான் பா.ஜ.க தலைமையிடமும் நிலவுகிறது" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், "தம்பிதுரையோ பன்னீர்செல்வமோ கட்சிப் பதவியில் இருந்தால், அடுத்து வரக் கூடிய தேர்தல்களில் விரும்பக் கூடிய கூட்டணியை உருவாக்க முடியும் என அமித் ஷா நம்புகிறார். தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் செயல்படுவதை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.  எனவே, பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா வந்துவிடக் கூடாது என்பதற்காக சில முக்கியமான வேலைகள் தொடங்கியுள்ளன. சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களை சந்தித்துப் பேசும் முடிவில் இருக்கிறார் அமித் ஷா" என்றார் விரிவாக. 

"ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க இருக்கிறார். அவர் மூலம் அமித் ஷாவின் உதவியை நாட இருக்கிறார். அவருக்கு வேண்டிய உதவிகளை மறைமுகமாகச் செய்வதற்கும் மத்திய அரசு தயாராக இருக்கிறது. நாளை மாலை சசிகலா புஷ்பாவை சந்திக்கிறார் அமித் ஷா. இதற்கான பின்னணி காரணம் என்னவென்றால், அ.தி.மு.கவின் தொண்டர் பலத்தை சிதறடிக்காமல், பா.ஜ.கவுக்கான வாய்ப்புகளாக மாற்றிக் கொள்வதுதான். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க தலைமையோடு இணைந்து செயல்பட்டால், வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.கவால், வலுவான அணி அமைக்க முடியாமல் போகலாம் என எண்ணுகிறார் அமித் ஷா. இதையடுத்து, அ.தி.மு.கவில் சசிகலா எதிர்ப்பாளர்கள் யார் என்பதைப் பட்டியலிட்டு, அவர்கள் மூலம் சட்டரீதியான சிக்கல்களை உருவாக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை போட்டியிடாமல் வைப்பதற்கான வேலைகள் தீவிரமடைந்துள்ளன. இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் ஏற்கப்பட்டுவிட்டது. விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. பொதுக்குழு கூடுவதற்குள் முடிந்த வரையில் சிக்கல்களை ஏற்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. அதையொட்டியே, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளும் குரல் எழுப்புகின்றனர்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

சட்டரீதியான சிக்கல்களைத் தாண்டி, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவாரா என்ற குரல்கள் அ.தி.மு.க வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

http://www.vikatan.com

எனது இரசனை இவ்வளவு மட்டமாய் உள்ளது என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை, But, ஓர் உண்மை இங்கே சொல்லியாகனும். 

அண்மைக்காலங்களாய் வரும் செய்திகளை வாசித்து வாசித்து இப்போது நான் சசிகலா ஆன்ரியின் அபிமானி ஆகிவிட்டேன். 

ஆன்ரிக்கு எதிராக வரும் ஒவ்வொரு செய்தியையும் வாசிக்கும்போது எனது மனம் அவற்றை சசிகலா ஆன்ரிக்கு  positiveஆகவே பார்க்கின்றது. 

எங்கள் தலைவி சசிகலா மேடம் வாழ்க! :grin: 

  • தொடங்கியவர்
3 minutes ago, கலைஞன் said:

எனது இரசனை இவ்வளவு மட்டமாய் உள்ளது என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை, But, ஓர் உண்மை இங்கே சொல்லியாகனும். 

அண்மைக்காலங்களாய் வரும் செய்திகளை வாசித்து வாசித்து இப்போது நான் சசிகலா ஆன்ரியின் அபிமானி ஆகிவிட்டேன். 

ஆன்ரிக்கு எதிராக வரும் ஒவ்வொரு செய்தியையும் வாசிக்கும்போது எனது மனம் அவற்றை சசிகலா ஆன்ரிக்கு  positiveஆகவே பார்க்கின்றது. 

எங்கள் தலைவி சசிகலா மேடம் வாழ்க! :grin: 

நீங்கள் ஒரு மார்க்கம் ஆகதான் நிற்கிறீர்கள்... லண்டன் போய் வந்ததில் இருந்து..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

CzvaSGcWgAAZSG4.jpg:large இவங்க பண்ற ரவுசுக்கு அளவில்லை .

  • தொடங்கியவர்

பேசும் படம்: சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஆதிக்கம்

 
 
 
sasi2_3104070f.jpg
 
 
 

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பதவிக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது.

இதுதொடர்பாக பல்வேறு விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், சசிகலாவை சந்தித்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருவது நீடிக்கிறது.

இந்தச் சூழலில், கட்சித் தலைமையை ஏற்கக் கோரி, சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் இவை:

sasi1_3104072a.jpg

sasi3_3104073a.jpg

 

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படம்-சசிகலா-ஆதரவு-போஸ்டர்கள்-ஆதிக்கம்/article9428352.ece?homepage=true&theme=true

 

 

பேசும் படம்: சசிகலா போஸ்டர்கள் மீது 'காட்டப்பட்ட' எதிர்ப்பு!

 

 
004_3104526f.jpg
 
 
 

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு சசிகலாவிடம் அதிமுகவினர் வேண்டுகொள் விடுத்து வருகின்றனர். இதையொட்டிய சசிகலாவுக்கு ஆதரவாவான போஸ்டர்கள், தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் இடம்பெற்றிருந்த சசிகலா படங்கள் மீது எதிர்ப்பாளர்கள் சிலர் தங்களது கோபத்தைக் காட்டும் விதமாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன் புகைப்படப் பதிவுகள்:

001_3104527a.jpg

005_3104531a.jpg

002_3104528a.jpg

003_3104529a.jpg

 

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படம்-சசிகலா-போஸ்டர்கள்-மீது-காட்டப்பட்ட-எதிர்ப்பு/article9430096.ece?homepage=true&theme=true

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு ஆப்பு வைக்கிறமாதிரி இன்னுமோர் போஸடர்.

"தமிழச்சி கையில் அதிகாரம் வரணும். இதுவே சரியான தருணம்., அதனால் சின்னம்மாவை ஆதரிப்போம்"

எலேய், அப்ப பன்னீரூ?

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

சீமானுக்கு ஆப்பு வைக்கிறமாதிரி இன்னுமோர் போஸடர்.

"தமிழச்சி கையில் அதிகாரம் வரணும். இதுவே சரியான தருணம்., அதனால் சின்னம்மாவை ஆதரிப்போம்"

எலேய், அப்ப பன்னீரூ?

பாவம் பன்னீர்  அவருக்கு கண்ணீர்  தான்  எப்போதும் :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னய்யா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை. இந்தம்மாவுக்கு வேறை நிறைய நினைப்பு இருக்கு.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இசைக்கலைஞன் said:

 

என்னய்யா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை. இந்தம்மாவுக்கு வேறை நிறைய நினைப்பு இருக்கு.. :unsure:

யாருப்பா தம்பி இது. ஒரு பொந்ணுமாதிரே இருக்கானே.

  • தொடங்கியவர்

சின்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா..!

அ.தி.மு.க-வுக்கு சசிகலாதான் அடுத்த தலைமைங்கிறது கிட்டத்தட்ட தெரிஞ்சு போச்சு. கணேஷா இருந்து வேதாளமாக ட்ரான்ஸ்ஃபர்மேசன் ஆகிற அஜீத் மாதிரி அம்மாவின் தொண்டர்களாக இருந்தவங்க சின்னம்மாவின் தொண்டர்களாக மாறி என்னன்ன அலப்பறைகள் பண்ணுவாங்கனு சும்மா ஒரு கற்பனை!

சின்னம்மா

* காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்ற அம்மா சென்டிமென்ட் படங்களை 1000, 500 ரூபாய் நோட்டுகள் மாதிரி கொஞ்சம் ஓரமாகத் தூக்கி வெச்சிட்டு எல்லாமே ஒரே சின்னம்மா சென்டிமென்ட் படங்களாக சொந்தக்காசைப் போட்டாவது படம் எடுத்து வெள்ளிதோறும் சொல்லி ரிலீஸ் செய்வார்கள். 

 

* தமிழ்ல டைட்டில் வெச்சுக்கங்க தாய்லாந்து மொழியில டைட்டில் வெச்சுக்கங்க...  ஆனா சின்னம்மா செண்டிமென்ட் படமாக இருந்தால் கட்டாயம் வரிவிலக்கு உண்டுனு சட்டமாகவே கொண்டுவந்தாலும், படம் பார்க்க அவங்களே ஃப்ரீ டிக்கெட் கொடுத்து ஆடியன்ஸை அனுப்பிவைத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை! 

 

* இதுவரைக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாட்டுகளை ரிங் டோனாக வெச்சிக்கிட்டு இருந்த ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாம் சின்னம்மா பாடல்களாகத் தேர்ந்தெடுத்து காதில் ரத்தம் வர வைக்க வாய்ப்புள்ளது. சின்னம்மா பாட்டே கிடைக்கலைனாலும் 'சக்கரக்கட்டி' படத்து 'சின்னம்மா சிலக்கம்மா', 'ஒஸ்தி' படத்து 'கலாசலா கலசலா', 'அம்பிகாபதி' படத்து 'கலா ரசிகா'னு ஏதாவது ஒன்றை காலர் டோன், ரிங் டோன், மெசேஜ் டோன் என வைத்து அட்ஜெஸ்ட் செய்து கடமை ஆற்றுவார்கள் என சோர்ஸ் சொல்கிறது.

சின்னம்மா

* அ- அம்மா, ஆ- ஆடு என இருந்த பள்ளிப்பாடத்தை எல்லாம் புதுமைப்படுத்தி அ-அரசியல், ஆ-ஆட்சி, சி- சின்னம்மா, ம- மன்னார்குடி என எக்குத்தப்பாக எதையாவது அள்ளிப்போட்டு சமச்சீர் கல்வி மாதிரி புதிதாக எழுத்துச்சீர் கல்வி என ஒன்றை உருவாக்கி கண்ணில் தண்ணீர் வரவைக்கவும் ஏகபோக வாய்ப்பு இருக்கிறது.

 

* 8 மணி ஆனாலே பாட்டுப்பாட ஆரம்பிக்கும் வெள்ளியங்கிரி அங்கிள் மாதிரி, ஆட்கள் ஒண்ணு கூடிட்டாலே ஆட்டோமேட்டிக்கா பாட ஆரம்பிச்சிடுற அ.தி.மு.க-காரங்க அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவுனு மட்டுமே பாடிக்கிட்டு இருந்ததெல்லாம் போய் சின்னம்மா என்றால் சிறப்பு என எக்ஸ்ட்ராவாக பல்லவியிலே பல்லைப் போட்டு பாட்டுப் பாடினாலும் கேட்டுதான் ஆகணும் மக்களே, ஏன்னா இது சகிப்புத்தன்மை மிக்க நாடு. ஆங்.

சின்னம்மா

* அடிப்பொடிகள் முதல் அமைச்சர்கள் வரை 'சின்னம்மாவால் நான்; சின்னம்மாவுக்காகவே நான்' என்பதையே ஸ்லோகனாக்கி புகைப்பழக்கம் உடலுக்கு தீங்கானதுனு  தியேட்டரில் அடிக்கடி டிஸ்க்லைமர் போடுவதுபோல் மறக்காமல் எல்லாக் கட்சி மீட்டிங்கிலேயும் இதைச் சொல்லும் காலம் வெகுதொலைவில் எல்லாம் இல்லை மக்களே. இதோ மிகமிக அருகில்.

 

* ட்ரம்பின்  மனைவியே சின்னம்மாவிடம் வந்து பகுதி நேர படிப்பாக அரசியலைக் கற்றுக்கொண்டு போய் அங்கே ட்ரம்புக்கு சொல்லிக் கொடுத்துதான் ட்ரம்ப்பே வெற்றிபெற்றார் என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும் என யாராவது கொளுத்திப்போட்டு கும்மாளம் அடிக்கும் சம்பவங்களையும் நிகழ்த்த அதிக வாய்ப்பிருக்கிறது.

http://www.vikatan.com/news/politics/75014-a-satire-article-about-posters-and-banners-for-sasikala.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.