Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெல்ல கொல்லும்.....?

Featured Replies

மெல்ல கொல்லும்.....?

 

ஆர். ராம்

"முகா­மில இருந்த பொடி­யங்­களை தனித்­த­னியே ஆமி கூட்­டிக்­கொண்டு போய் கதைப்­பினம். புலி­க­ளைப்­பற்றி கேப்­பினம். அவை­ய­ளுக்­காக சி.ஐ.டி. வேலை பாக்­கி­ற­துக்கு கேப்­பினம்  "

 

பல நேரங்­க­ளி­லையும் யோசிச்சன். ஆனால் என்­னால ஊகிச்­சுக்­கொள்­ளவே முடி­யல. கொஞ்சம் பாரம் தூக்கி நடக்கக் கூட முடி­யாது. பாரங்கள் ஏதும் தூக்­கினால் கால் நிலையாய் நிக்­காது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடி­யாது. என்ட நிலைமை இப்­பிடி இருக்கு எண்ட நினைச்­சுக்­கொண்டே தொடர்ந்தும் இருப்பன்.

இப்­ப­டியே ஒன்­றி­ரண்டு வருசம் போனாப்­பி­றகு எனக்கு பொழு­து­ப­டு­கிற நேரத்­தில கண்­பார்­வையும் குறைஞ்­சு­கொண்டு போய்­யிட்­டுது. அதோட பகல் முழுக்க ஏதா­வது சின்ன சின்ன வேலை­களைச் செய்­தாலும் களைப்பாய் இருக்கும். உடம்­புக்கு கஷ்­டமாய் இருக்கும். என்ட உடம்­பில ஏதோ பிரச்­சினை இருக்கு என்டு நான் நினைச்சன்.

கொஞ்­சநாள் கழிச்சு, நான் நினைக்­கிறன் போன வரு­சத்­தின்ட கடை­சி­யில தான் ஒரு டொக்­டரைப் போய் பார்த்தன். அவர் எல்லாச் சோத­னை­யையும் செய்து போட்டு உடம்பு பல­வீ­னமாய் இருக்கு எண்டு சொன்னார். அதுக்கு மருந்து தாறன் எண்டு சொன்னார். அந்த மருந்தை வாங்கி போட்­டுக்­கொண்டு வாரன். அதோட கண்­பார்வை குறை­யி­றது வழ­மை­யா­ன­தொன்று. அதுக்கு பெரிய ஆஸ்­பத்­தி­ரிக்கு வைத்­தியம் செய்­ய­வேணும் எண்டு சொன்னார்.

இப்ப ஆறு­மா­சத்­துக்கும் கூட மருந்து போட்­டுக்­கொண்டு தான் வாறன். ஆனா இன்­னமும் உடம்பு நிலைமை அப்­பி­டியே தான் இருக்கு. இது என்ன காரணம் எண்டு தெரி­யல என தனது கஷ்­டத்­தையும் கொட்­டித்­தீர்த்தார் அந்தப் போராளி.

அத­னை­ய­டுத்து மற்றும் ஒரு போரா­ளியை நேரில் காண்­ப­தற்­கான பயணம் தொடர்ந்­தது. கிளி­நொச்சி நகரை அண்­மித்த பகு­தியில் உள்ள ஒரு வீட்­டிற்கு சென்­ற­போது கணவன் மனைவி ஆகி­யோரின் புன்­மு­று­வ­லான வர­வேற்பும் உப­ச­ரிப்பும் கிடைத்­தன. சில நிமி­டங்கள் கழிந்த நிலையில் நாம் காண்­ப­தற்­காக வந்­தவரை பார்க்­க­வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்தோம்.

அவர் இன்னும் சில நிமி­டங்­களில் வந்து விடுவார் என்­ற­வாறே, யுத்தம் நடந்த­போது அவர்­களின் அனு­ப­வத்தை கூறி­னார்கள். நெருக்­க­டி­களை குறிப்­பிட்­டார்கள். ஆனால் இவர்­களின் விட­யங்கள் முழு­மை­யாக வேறு­பட்­ட­தா­கவே இருந்­தன.

நாங்கள் கிளி­நொச்சி சண்டை ஆரம்­பிக்­க­றத்­துக்கு கொஞ்ச நாளுக்கு முன்ன தான் முல்­லைத்­தீ­வுக்கு போனம். பிறகு முல்­லைத்­தீ­வில நெருக்­க­டி­யான நிலைம வந்­த­போது நாங்கள் அங்க இருந்து ஓமந்­தைக்கு போயிட்டம். கடை­சிக்­கட்டம் வரை­யில நாங்கள் முல்­லைத்­தீ­வில இருக்­கல.

முதல்­கட்­டமாய் கொஞ்ச சனங்கள் ஆமீண்ட ஏரி­யா­வுக்கு போனாப்­பி­றகு நாங்­களும் இன்னும் கொஞ்ச ஆக்­க­ளுமாய் போனம். பயந்­து­ப­யந்து தான் போனம். ஏனெண்டால் ஒவ்­வொ­ருத்தர் ஒவ்­வொரு கதை சொல்­லு­வினம். என்ன செய்­யி­றது எண்டு தெரி­யாம

கடை­சியாய் என்­ன­வந்­தாலும் பரவாயி ல்ல. அங்­கால போறது தான் எண்டு முடிவு எடுத்தம்.

ஏனெண்டால் நான் புலிகள் அமைப்­பில இருக்­கல. என்ட மனை­வியும் இருக்­கல. நாங்கள் கடை­சிக்­கட்­டத்­தில 40வய­துக்கு உட்­பட்ட ஆக்கள் பயிற்சி எடுக்­க­வேணும் எண்டு வந்த அறி­விப்­பால தான் பயிற்சி எடுத்­த­னாங்கள். மற்­ற­படி புலி­க­ளிண்ட அமைப்­பில இருக்­கல.

நான் நினைக்­கிறன் 2009 ஏப்­ரல் புது­வ­ரு­சத்­துக்கு அண்­மித்த நாட்­க­ளில கொஞ்சம் சண்டை குறைஞ்­சி­ருந்­தது. அந்த நாட்­க­ளில தான் நாங்கள் ஆமிண்ட ஏரி­யா­வுக்­குள்ள வந்தம். எங்­க­ளிட்ட கேள்­விகள் கேட்­டிச்­சினம். இயக்­கத்­தில இருந்­த­னீங்­களா? என்ன செய்­த­னீங்கள்? அடை­யாள அட்டை இருக்கா? எண்­டெல்லாம் குடைஞ்சு குடைஞ்சு கேட்­டவை.

நான் உண்­மையை சொல்­லிப்­போட்டன். நான் கிளி­நொச்­சி­யில என்ட வேலை உண்டு குடும்பம் உண்டு எண்டு தான் இருந்­தனான் பிறகு கடை­சி­யில தான் பயிற்சி எடுத்­தனான். அதுக்­காக யுத்­தத்­திற்கு போகல. அங்க இருக்க வேணும் எண்டா பயிற்சி எடுத்­தா­க­வேணும். அதால தான் போனனான். மனை­விக்கும் அதுதான் பிரச்­சினை எண்டு தெளிவாய் சொன்னன்.

அதுக்கு பிறகு எங்­களை அங்க இருந்து கொண்டு போய் ஓமந்தை மகா­வித்­தி­யா­லயத்­தில வைச்­சி­ருந்­தவை. பிறகு அங்க இருந்து பூந்­தோட்டம் முகா­முக்கு மாத்­தி­னவை. மனை­வியை இன்­னொரு முகா­முக்கு மத்­தி­னவை. முகா­மில கொஞ்சம் கஷ்­டப்­பட்டம் ஒரு ஆறு மாதத்­துக்கு பிறகு எங்­களை விடு­தலை செய்­திட்­டினம்.

நான் பூந்­தோட்டம் முகா­மில இருக்­கிற நேரம் நடந்த முக்­கி­ய­மான விச­யங்கள் எண்டால், ஒரு நாள் கொஞ்ச பொடி­யங்­களை கொண்டு வந்து விட்­டவை. அவங்­க­ளிட்ட என்ன ஏது என்று கேட்­ட­போது முகா­மில இருந்த நேரம் கொஞ்ச ஆட்­களை ஆமி சுட்­டுப்­போட்டு என்று சனங்கள் வவு­னி­யா­வில இருந்த சித்­தார்த்தன், ஸ்ரீதரன் போல ஆக்­க­ளிட்ட முறைப்­பாடு செய்ததால அவையள் கண்­டிக்கு வந்து எங்­களைப் பாத்­த­வையள். ஆமி சுட்­டதாய் சனங்கள் வந்து எங்­க­ளிட்ட சொன்­ன­தாக பார்க்க வந்தம் என்று சொல்லி எங்­க­ளோட கதைச்­சுப்­போட்டு போனவை. அதுக்கு பிறகு எங்­களை இங்க கொண்டு வந்து விட்­டி­ருக்­கி­றாங்கள் என்று அவங்கள் சொன்­னாங்கள்.

அது­மா­திரி எங்­க­ளோட முகா­மில இருந்த பொடி­யங்­களை தனித்­த­னியே ஆமி கூட்­டிக்­கொண்டு போய் கதைப்­பினம். புலி­க­ளைப்­பற்றி கேப்­பினம். தங்­க­ளுக்­காக வேலை செய்­யச்­சொல்லி கேப்­பினம். அவை­ய­ளுக்­காக சி.ஐ.டி. வேலை பாக்­கி­ற­துக்கு கேப்­பினம். முக்­கி­ய­மான ஆக்கள் ஆரும் இருந்தா சொல்­லித்­த­ரச்­சொல்லி கேப்­பினம். இதுகள் தான் முகா­மில நடந்­தது என்று கூறி முடித்தார்.

அவர் கூறி முடி­க்­கவும் நாம் முக்­கி­ய­மாக சந்­திக்க வேண்­டிய அந்தப் போராளி வருகை தரவும் நேரம் சரி­யாக இருந்­தது. புன்­னகைத்­த­வாறே கொஞ்சம் சுணங்­கிப்­போச்சு என்று சொல்­லிக்­கொண்டே நாற்­கா­லியை எடுத்­துப்­போட்டு அமர்ந்து கொண்டார். பரஸ்­பர அறி­மு­கத்­திற்கு பின்னர் அவரைச் சந்­திக்க வந்­த­மைக்­கான நோக்­கத்தை கூறி­ய­போது கட­க­ட­வெனச் சிரித்தார்.

ஆச்­ச­ரி­ய­மாக அவரைப் பார்த்­த­போது, நீங்கள் கேட்கும் விடயம் எனக்கு சிரிப்பை வர வைக்­கி­றது என்று நேர­டி­யா­கவே கூறினார். சில விநா­டிகள் அமை­திக்கு பின்னர் அவர் தனது கருத்தை வெளிப்­ப­டுத்­த­லானார்.

நாங்கள் முப்­பது வரு­சமா போரா­டுறம். வவு­னி­யா­வுக்கு இங்­கால ஒரு தனி­நாடா நிதி, நிரு­வாகம் என எல்­லாமே இருந்தது. ஆனா எங்­க­ளுக்கு சர்­வ­தே­சத்­தின்ட அங்­கீ­காரம் தான் கிடைக்­கல. அது கிடைச்­சி­ருந்தா நாங்கள் எங்­கையோ இருந்­தி­ருப்பம். இது எல்­லா­ருக்கும் தெரிஞ்ச விசயம்.

எங்­கட இய­க்கத்தைப் பொறுத்த வரை­யில நாங்கள் முழுக்க முழுக்க போர் ரீதியா தான் வளர்க்­கப்­பட்­டி­ருந்தம். எங்­க­ளுக்கு போருக்கு எண்ட அந்த மிடுக்கு. அஞ்­சாத தன்மை. போர் தந்­திரம். இது­க­ளைத்தான் நாங்கள் முழுக்க முழுக்க திருப்பி திருப்பி படிச்சும் பயிற்­சியும் பெற்­றுக்­கொண்­டி­ருந்தம். எல்லா பொடி­யங்­க­ளுக்­குமே இதுதான் ஊட்டி ஊட்டி வளர்க்­கப்­பட்­டது.

விசேடமாய் சொல்­லு­றது எண்டா ஆமி, சிங்­க­ள­வர்கள் எல்லாம் சந்­தேக கண்­ணோட தான் பார்க்­கிற நிலை­மைதான் எங்­க­ளுக்கு இருந்­தது. ஒரு பொடி­யங்­க­ளுக்கும் மற்­றப்­பக்கம் என்ன எண்டே தெரி­யாம இருந்­தது. அந்த பக்­கத்தை அறிஞ்­சிடக் கூடாது என்­றி­ற­துக்­காக சில பத்­தி­ரி­கை­க­ளையே இங்­கால வாறத்­துக்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அப்­பி­டி­யொரு கட்­டுப்­பாட்­டுக்­குள்ள தான் இயக்கம் இருந்­தது. அதில இருந்த ஒவ்­வொரு போரா­ளியும் அப்­ப­டி­யொரு கட்­டுப்­பாட்­டுக்­குள்ள தான் வளர்ந்தான். சிந்­திச்சான். அப்­பிடி இருக்­கிற நிலை­மை­யில சிங்­க­ள­வங்­களோ அல்­லது ஆமியோ என்ன செய்­தாலும் அதை சந்­தே­கத்­தோட பாக்­கிற நிலைமை வாறதை பிழை எண்டு செல்ல முடி­யாது.

ஏனெண்டால் நாங்கள் அவங்­க­ளோட தான் சண்டை செய்­ய­வேணும் எண்டு தான் வளர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எங்கட மனநிலையைப் பொறுத்தவரையில் அவங் கள் எங்கட எதிரிகள். அப்பிடியான வங்கள் என்ன செய்தாலும் எங்களுக்கு சந்தேகம் வரத்தான் செய்யும். அதில பிழை எண்டு சொல்லுறதுக்கு இல்லை.

இப்ப நான் உங்களுக்கு சொல்லுற விசயங் களை கூட நான் இயக்கதில கற்றுக்கொண் டதை வைச்சுத்தான் சொல்லுறன். அதுக்காக நான் அரசாங்கத்துக்கு சார்பா கதைக்கிறன் எண்டு நீங்கள் நினைக்க கூடாது. நாங்கள் எல்லாத்தையும் பழி சொல்லுற மாதிரி கதைக்க கூடாது. நான் புலிகள் அமைப்பில நீண்ட காலம் இருந்தனான். போராடினன். பல தளங்களில நிண்டு வேலை செய்தனான். ஆனால்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-17#page-6

  • தொடங்கியவர்

மெல்ல கொல்லும்.....?

 

ஆர் . ராம்

சரியோ பிழையோ உங்கள் எல் லா­ரையும் அம்மா, அப்பா, மனைவி என வந்து சந்­திக்­கி­றார்­கள. பேசு­கின் றார்கள். சுதந்­தி­ர­மாக உங்­களை விட் டி­ருக்­கின்­றார்கள். ஆனால் நான் சென்ற இடத்தில் அண்டர் கிற­வுண்டில் ஆட்­களை வைத்­தி­ருக்­கின்­றார்கள் என்றார் எம்மைச் சந்­தித்த இரா­ணுவ மேஜர்

எங்­களை பரி­சோ­தனை செய்­யி­றத்­துக்கு டொக்­டர்மார் வந்­தார்கள். அவர்கள் எங்­களை பரி­சோ­திச்­சார்கள். ஊசி போட்­டார்கள். எங்­க­ளுக்கு ஆமி­யால ஊசி போடல. மில்­ரி­யால ஊசி போடல. பொல­ந­றுவை வைத்­தி­ய­சா­லை­யில இருக்­கிற டொக்­டர்மார் தான் வந்து ஊசி போட்­டவை.  

 

அவையள் வந்து ஊசி போடும்­போது கூட எங்­கட பொடி­யங்கள் இது என்ன ஊசியாய் இருக்கும் எண்டு வரி­சை­யில நிக்­கி­ற­நேரம் கதைச்­சுக்­கொண்­டாங்கள். நான் முன்­னையே சொன்ன மாதிரி அப்­பிடிச் சந்­தே­கங்கள் வாறதை தவிர்க்க ஏலாது. ஏனெண்டால் நாங்கள் அப்­பி­டித்தான் வளர்க்­கப்­பட்­ட­னாங்கள்.

இன்­னொரு விச­யத்­தையும் சொல்­ல­வேணும். இப்­பிடி ஊசி போடுற நேரத்­தில என்­னு­டைய கையை அங்க வந்­தி­ருக்­கிற டொக்­டர்மார் பார்த்­தார்கள். அதனை பரி­சோ­திச்­சார்கள். என்ன நடந்­தது எண்டு கேட்­டார்கள்.

என்­னு­டைய கையில காயம் பட்டு மணிக்­கட்­டுக்கு கிட்ட முறிந்து தொங்­கிய நிலை­யில தான் சிகிச்சை அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. புலி­க­ளிண்ட மருத்துப் பிரிவும், கிளி­நொச்சி வைத்­தியசாலை­யி­ல­யும் தான் எல்லா சிகிச்­சையும் தந்­தவை. அதுக்கு பிறகு தான் ஓர­ளவு விரல்கள் அசைக்க கூடி­யதாய் இருக்­குதே தவிர வேறொன்றும் செய்ய முடி­யா­தி­ருக்­கி­றது எண்டு அவை­ய­ளுக்கு சொன்னேன்.

உண்­மை­யி­லேயே அந்த டொக்­டர்மார் வியந்­தார்கள். என்­னு­டைய கையில ஏற்­பட்ட காயத்­திற்கு திருப்­பியும் இந்­த­ள­வுக்கு முன்­னேற்றம் அடைஞ்­சி­ருக்­கெண்டா அது டொக்­ட­ரிண்ட கெட்­டித்­தனம் தான் எண்டு சொன்­னார்கள். யார் இதைச் செய்­தார்கள்? எங்க செய்­தார்கள் என வியந்­தார்கள்.

அப்­போது நான் இந்த மருத்­துவம் கிளி­நொச்சி கொஸ்­பிட்­டல்ல தான் நடந்­தது. புலி­களும் சில மருத்­து­வத்தைச் செய்­தார்கள் எண்டு கூறினேன். புலி­க­ளி­டத்­தில எலும்பு முறி­வுக்கு சிகிச்சை அளிக்கும் அள­வுக்கு வைத்­தி­யர்கள் இருக்­கினமா எண்டு அந்த வைத்­தி­யர்கள் என்­னி­டத்­தில கேட்­டார்கள்.

அந்த நேரத்­தில அங்க இருந்த ஆமி கொமாண்டர் ஒருத்தர் என்னை எதுவும் சொல்ல விடாது தடுத்­தி­ருந்தார். அப்­போது அந்த டொக்டர் அந்த ஆமி கொமாண்­டரை ஏசி­ன­தையும் கண்டேன். அதுக்கு பிறகு அந்த டொக்டர் சொன்னார் இந்­த­ள­வுக்கு உங்­கட கையை செய்­தவர் உண்­மை­யி­லேயே சிறந்த வேலை­யொன்றைத் தான் செய்­தி­ருக்­கிறார். ஒரு­வேளை நீங்கள் அர­சாங்க வைத்­திய சாலை­யில சிகிச்சை பெற்றாக் கூட இந்­த­ளவு முன்­னேற்றம் ஏற்­பட்­டி­ருக்­குமொ எண்டு எனக்கு உறு­தியாய் சொல்லத் தெரி­யாது எண்டார்.

அந்­த­ள­வுக்கு எங்­கட விச­யத்தைக் கேட்ட அந்த டொக்­டர்மார் நிச்­ச­யமாய் எங்­க­ளுக்கு தீங்கு செய்­யிற மாதிரி ஊசி போட வந்­தவை எண்டு நினைக்க ஏலாது. மற்­றது அர­சாங்க வைத்­தி­யர்கள் அப்­பி­டி­யொரு வேலைக்கும் போக மாட்­டினம் எண்டு நான் நினைக்­கிறன்.

பிறகு நாங்கள் இருந்த நாட்­க­ளில இரண்டு மூன்று கிழ­மைக்கு ஒருக்கால் அப்­பிடி டொக்டர் மார் வரு­வினம். மருந்­துகள் குடுப்­பினம். தேவைப்­பட்டா ஊசி போடு­வினம். அதெல்லாம் சாதா­ர­ண­மான ஒரு மருத்துவச் செயற்­பா­டா­கவே இருக்­குது. அப்­பிடி இருக்­கேக்க அதை மட்டும் வைச்சு சந்­தே­கப்­பட இய­லாது. அதே ­நே­ரத்­தில புனர்­வாழ்­வில இருக்­கிற நேரத்­தில அவங்கள் எங்­களை பாது­காப்பாய் வைச்­சி­ருக்க வேணு­மெண்டே விரும்­பி­னாங்கள்.

ஒருநாள் எங்­கட புனர்­வாழ்வு முகா­முக்கு மேஜர் ஒருத்தர் வந்தார். அவர் எங்­க­ளோட கதைக்­கிற நேரத்­தில, நான் ஒரு இடத்­துக்குச் சென்றேன். பத்து நாட்கள் அங்கு இருந்து விட்டு வரு­கின்றேன். ஒரு விச­யத்­தில வேத­னைப்­ப­டு­கின்றேன். சரியோ பிழையோ உங்கள் எல்­லா­ரையும் அம்மா, அப்பா, மனைவி என வந்து சந்­திக்­கி­றார்­கள். பேசு­கின்­றார்கள். சுதந்­தி­ர­மாக உங்­களை விட்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால் நான் சென்ற இடத்தில் அண்டர் கிற­வுண்டில் ஆட்­களை வைத்­தி­ருக்­கின்­றார்கள்.

அவ்­வ­ளவு பேரையும் தற்­போது வரையில் பெற்­றோ­ருக்கு காட்­ட­வில்லை. அவர்­க­ளுக்கு உள­வியல் வகுப்பு எடுக்­கவே அங்கு சென்றேன். உங்­களை ஒரு மாதத்­துக்குள் விடு­தலை செய்­வார்கள். ஆகவே தயவு செய்து நீங்கள் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தாது இருங்கள். உங்­க­ளுக்கு கட­வுளின் கிரு­பையால் தான் இப்­படி இருக்­கின்­றீர்கள் எண்டு சொல்­லி­யி­ருந்தார்.

அதுக்கு பிறகு அந்த மேஜர் எங்­க­ளுக்கு சில புனர்­வாழ்வு பயிற்­சி­களை கொடுப்பார். எங்­க­ளுக்கு விளை­யா­டு­றத்­துக்கு கிற­வுண்­டுக்கு போறத்­துக்கும் அனு­மதி கொடுப்­பினம். நாங்கள் அங்க போய் வரு­வது வழ­மை­யாக இருந்­தது. அப்­பி­டி­யொ­ருநாள் போன நேரத்­தில தான் அந்த சம்­பவம் நடந்­தது.

எங்­க­ளோட இருந்த ஒரு­பொ­டியன் அவ­ரிண்ட காதல் விவ­கா­ரத்­தால கிற­வுண்டுக்கு கிட்ட இருந்த அல­ரி­ம­ரத்­தில அல­ரிக்­கொட்­டையை எடுத்து அரைத்து சாப்­பிட்டு விட்டார். உடனே மருத்­து­ம­னைக்கு கொண்டு போய் வைத்­தியம் எல்லாம் செய்­தாலும் நிலைமை கொஞ்சம் சீரி­யஸாய் போயிட்­டுது. புனர்­வாழ்வு முகா­மில இருந்த ஆமி­யாக்கள் அனை­வ­ருமே பயந்­திட்­டாங்கள்.

ஏனெண்டால் தற்­செ­யலாய் அவர் இறந்­து­போ­யி­ருந்தா அவங்­க­ளுக்கு பெரிய பிரச்­சினை வந்­தி­டும் எண்­ட­தால தான் அவங்கள் பயந்து கொண்டு இருந்­தாங்கள். இந்த சம்­பவம் நடந்த அடுத்த நாள் எங்­க­ளுக்கு ஒரு கூட்டம் நடந்­தது.

அந்த கூட்­டத்­தில எங்­க­ளுக்கு பொறுப்பா இருந்த மேஜர் கதைச்சார். நாங்கள் உங்­களை எதுமே செய்­ய­வில்லை. உங்­களை பாது­காப்பா திருப்பி குடும்­பத்­தோட சேர்க்­கி­றத்­துக்­காகத் தான் இருக்­கிறம். தய­வு­செய்து இந்த மாதிரி வேலை­களை செய்­யி­ற­தால பெரிய பிரச்­சி­னைகள் தான் வந்­திடும்.

பிறகு உங்­களை வெளியில விடு­றத்­துக்கு அனு­ம­திக்­கவும் முடி­யாது. ஏனெண்டால் நான் தான் உங்­களை வெளியில போறத்­துக்கு அனு­ம­திச்சன். அப்­பி­டி­யான நேரத்­தில ஏதும் நடந்தால் நான் தான் பதில சொல்ல வேணும். அது மட்­டு­மில்ல பிறகு வெளிநாட்­டில இருக்­கிற ஆக்கள் வேறு விதமாய் பிர­சாரம் செய்ய வெளிக்­கி­டு­வினம். அதால அர­சாங்­கத்­துக்கு பிரச்­சினை வரும். அப்­பிடி பிரச்­சி­னைகள் வாறா­தால உங்­களை விடு­தலை செய்­யி­றது தான் பிந்­திப்­போகும் எண்டு கெஞ்­சாத குறையாய் கேட்டார்.

அது­போ­லத்தான் எங்­க­ளுக்கு மொழி­பெ­யர்க்­கி­றத்­துக்கு இருந்த முஸ்லிம் ஒருத்­தரும் தம்­பிமார் உங்­க­ளுக்கு புனர்­வாழ்வு பிடிக்­குதோ இல்­லையோ எண்டு எனக்கு தெரி­யாது. ஆனால் பிடிக்­காட்­டிலும் பிடிச்ச மாதிரி நடிச்­சுப்­போட்­டா­வது வெளியில போறத்­துக்கு பாருங்கோ. இல்ல நாங்கள் போரா­டுவோம் எண்டு நினைச்சால் இங்க இருக்­கிற முள்­ளுக்­கம்­பிய தாண்டி போய் ஆரம்­பி­யுங்கோ எண்டு சொன்னார்.

உண்­மை­யி­லேயே எங்­களை அவங்கள் பாது­காக்க வேணும் எண்டு தான் நினைச்­சாங்கள். ஏனெண்டால் ஐ.சி.ஆர்.சி., உலக நாடுகள் எல்­லாத்­துக்கும் விசயம் தெரிஞ்­ச­தால பிறகு வாற பிரச்­சி­னை­களை தீர்க்க வேணும் எண்­ட­தால தான் அவ்­வ­ளவு கரி­சனை செய்­தாங்கள்.

ஒரு­கட்­டத்­தில அவங்­க­ளுக்கு எங்­களை என்ன வேணும் எண்­டாலும் செய்­யக்­ கூ­டிய நிலைமை இருந்­தாலும் பிறகு அப்­பிடி நிலைமை இருக்­கல. எங்­கள வைச்சு தாங்கள் நல்­ல­பெயர் எடுக்க வேணும் எண்டு தான் நினைச்­சாங்கள். அதால அப்­பி­டி­யெல்லாம் செய்­தி­ருப்­பி­னமா எண்டு சொல்ல முடி­யாது.

இப்ப இந்த ஊசி பிரச்­சினை வந்­தி­ருக்­குது. உண்­மை­யி­லேயே ஊசி ஏத்­தி­யி­ருக்கா இல்­லையா என்­பது ஒரு பக்கம் இருக்க இந்த ஊசி­யால தான் ஆக்கள் சாகி­றத்­துக்கு காரணம் எண்டு சொல்­லு­ற­வை­யி­ளிட்ட செத்த ஆக்­க­ளிண்ட லிஸ்ட் ஆவது இருக்கா?

நாங்கள் துவக்கு தூக்கி போராடி இப்ப எல்லாம் முடிஞ்­சு­போச்சு எண்­டாலும் நாங்கள் நிம்­ம­தியாய் இல்ல. எத்­தனை பொடி­யங்கள் தங்­கட எதிர்­காலம் பற்றி சிந்­திக்­கி­றாங்கள். எல்­லா­ருக்கும் வெளிநாடு போறத்­துக்கு வாய்ப்பு இல்ல. இங்க வேலை­யிலும் இல்ல. இதுகளை நினைச்சா எங்களுக்கு நித்திரையே வராது.

இரவு முழுக்க யோசனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அப்பிடி இருக்கிற நேரத்தில வருத்தங்கள் எங்களுக்கு வராது என்கிறதுக்கு என்ன நிச்சயம்? இப்ப ஊசி போட்ட கதைய சொல்லிட்டினம். இனி அதை வைச்சு அரசியல் செய்யத் தான் பாப்பினம்.

அந்தக்காலத்தில இருந்து பொடியங்களை வைச்சே அரசியல் செய்து பழகீட்டினம்.தங்கட அரசியலுக்காக இப்பவும் அதேதான் நடக்குது. இந்த விசயத்தை உறுதிப்படுத்த முடியாம போனா யாருக்கு இலாபம்? யாருக்கு நஷ்டம்? இதுகள் எல்லாம் தெரியாம வாய்க்கு வந்த மாதிரி பேசுறதால எல்லாமே தலைகீழா தான் போகப்போகுது என தன்னுடைய ஆதங்கத்தை நிறைவு செய்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-24#page-5

  • தொடங்கியவர்

மெல்ல கொல்லும்.....?

 

ஆர் . ராம்

சர­ண­டைந்த முன்னாள் போரா­ளிகள் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த போதும், புனர்­வாழ்வில் இருந்த போதும் சர்ச்­சைக்கு ரிய ஊசி போடப்­பட்­டுள்­ளமையை ஆராய்­வ­தற் காக கள­ப்ப­ய­ணத்தில் சந்­தித்த சிரேஷ்ட போரா­ளி­க­ளி­ட­மி­ருந்து பல் வேறு கோணங்­க­ளிலும் கருத்­துக் ­களை பெற்ற போதும் அந்த விவ­காரம் தொடர் பில் இறுதி செய்ய முடி­யாத நிலை­மையே இருக்­கின்­றது. 

இவ்­வா­றி­ருக்­கையில், முன்னாள் போரா­ளி­களை மருத்­துவ ரீதி­யான பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வது என வடக்கு, கிழக்கு மாகாண சபை­களில் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டன. குறிப்பாக ஒவ்­வொரு மாவட்­டங்­களையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டத்தில் முன்னாள் போரா­ளிகள் மருத்­ துவ பரி­சோ­த­னைக்­கான பதி­வு­களை மேற்­கொள்ள முடியும் எனவும் அறி­விக்­கப்­பட்­டது.

அதே­நேரம் இந்த மருத்­துவ பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்கு வெளிநாட்டு மருத்­து­வர்­களை அழைப்­பதா, இல்­லையா என்ற நீண்ட விவா­தமும் அர­சியல் பிர­தி­நி­தி­களால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதில் பரஸ்­பர முரண்­பா­டான கருத்­துக்­களும் பகி­ரங்­க­மாக முன்­வைக்­கப்­பட்­டன.

வட­ மா­கா­ணத்தில் மன்னார், முல்­லைத்­தீவு, கிளி­நொச்­சியில் மாவட்ட வைத்­தியசாலை களும் அதற்கு மேல­தி­க­மாக ஆதா­ர ­வைத்­தியசாலைகளும் காணப்­ப­டு­கின்­ற­போதும் அவை வினைத்­திறன் மிக்­க­தான சேவையை வழங்­கு­வ­தற்கு போது­மான வளப்பற்­றாக்­ கு­றை­க­ளுடன் காணப்­ப­டு­கின்­றன. 

ஆகவே, வடக்கு மாகா­ணத்தின் மருத்து தேவை­களை நிறை­வு­செய்­வதில் யாழ் போதனா வைத்­தி­ய­சாலை முத­லி­டத்­திலும் அடுத்ததாக வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யுமே காணப்­ப­டு­கின்­ற­ன என்­பது யதார்த்­த­மா­னது. இந்த இரு வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் சாதா­ரண மருத்­துவ சிகிக்­சை­க­ளுக்­கா­கவே பொது­மக்கள் கூட்டம் கூட்­ட­மாக வருகை தரு­வதும் சில மருத்து சிகிச்­சை­களை பெறு­வ­தற்­காக இரண்­டொரு தினங்கள் முன்­ன­தா­கவே வருகை தந்து வாட்­டுக்­களின் நடை­பா­தையில் படுத்­தி­ருந்து மருத்­துவச் சிகிச்சை பெற்றுச் செல்லும் அவல நிலை­மை­களும் அன்­றாடம் நடை­பெறுகின்றன.

இத்­த­கைய நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் வட­மா­கா­ணத்தில் உள்ள அரச மருத்­து­வ­ம­னைகள் முன்னாள் போரா­ளி­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை முறை­யாக ஆராய்­வ­தற்கு பூர­ணத்­து­வ­மான வளத்தை கொண்­டி­ருக்­கின்­றதா என்ற பாரிய வினா எழுந்­த­போதும் அதற்கு மத்­தியில் முன்னாள் போரா­ளி­களின் விட­யத்தை ஆராய்­வ­தற்­கென வைத்­தி­ய­க­லா­நிதி சிவன்­சுதன் தலை­மை­யி­லான விசேட வைத்­திய நிபு­ணர்­கு­ழு­வொன்று வட­ம­ா­காண சுகா­தார அமைச்சின் ஏற்­பா­டு­க­ளுக்கு அமைய உரு­வாக்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மின்றி முன்னாள் போராளி­க­ளுக்கு என்ன நடத்­தி­ருக்­கின்­றது. என்­பதை வட­மா­கா­ணத்தில் உள்ள வைத்­தி­ய­நி­பு­ணர்­க­ளினால் ஆராய்ந்து கண்­ட­றி­ய­மு­டியும். அத ற்கு பின்னர் மேல­திக சிகிச்­சைகள் தேவைப்­படும் பட்­சத்தில் இலங்­கையில் உள்ள பிர­தான அரச மருத்­துவமனை­க­ளிலோ அல்­லது அதற்கு மேல­தி­க­மாக அவ­சி­யம் ஏற்­ப­டு­மி­டத்து அது தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கலாம் என்பது சுகா­தார அமைச்சின் நிலைப் பா­டா­க­வி­ருந்­தது. 

அதற்­க­மை­வாக வட­மா­கா­ணத்தில் உள்ள ஐந்து மாவட்­டங்­க­ளிலும் உள்ள மாவட்ட வைத்­தி­ய­சா­லை­களில் முன்னாள் போரா­ளிகள் மருத்­துவ பரி­சோ­த­னைக்­காக விண்­ணப்­பிக்க முடி யும் என அறி­விக்­கப்­பட்­டது.  குறிப்­பாக வாரத்தின் ஒவ்­வொரு வெளளிக்­கி­ழ­மை­க­ளிலும் யாழ்ப்­பாணம் போதனா வைத்­தி­ய­சாலை மற்றும் வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் பிற்­பகல் ஒரு மணிக் கும், மன்னார் மற்றும் முல்­லைத்­தீவு பொது வைத்­தி­ய­சா­லை­களில் காலை 8 மணிக்கும், கிளி­நொச்சி பொது வைத்­தி­ய­சா­லையில் பிற்­பகல் 4 மணிக்கும் இந்த மருத்­துவ பரி­சோ­த­னைகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­மென வட மாகாண சுகா­தார அமைச்சு அறி­விப்பை விடுத்­தி­ருந்­தது.  

இந்­நி­லையில் முன்னாள் போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்வின் போது, விஷ­ஊசி ஏற்­றப்­பட்­டதா என்­பதை ஆய்வு செய்­வ­தற்­காக, நடத்­தப்­பட்ட முதற்­கட்ட சிறப்பு மருத்­துவ பரி­சோ­த­னை­களில் ஐந்து மாவட்­டங்­களிருந்தும் வெறு­மனே 26 முன்னாள் போரா­ளிகள் மட்­டுமே பங்­கேற்­றி­ருந்­தனர்.

யாழ்.மாவட்­டத்தில் ஒன்­பது முன்னாள் போரா­ளி­களும், கிளி­நொச்சி மற்றும் முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் தலா ஏழு முன்னாள் போரா­ளி­களும், வவு­னியா மாவட்­டத்தில் மூன்று முன்னாள் போரா­ளி­களும் மருத்­துவ பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டி­ருந்த அதே­நேரம் மன்னார் மாவட்­டத்தில் எந்­த­வொரு முன்னாள் போரா­ளியும் மருத்­துவ பரி­சோ­த­னையை மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை.

வட­மா­காண சுகா­தார அமைச்சின் ஏற்­பாட் டில் முதலாம் வாரத்தில் 26 பேரும்,இரண்டாம் வாரத்தில் 47பேரும் மூன்றாம் வாரத்தில் 22பேரும் நான்காம் வாரத்தில் 30பேரும் ஐந்தாம் வாரத்தில் 21பேரு­மாக மொத்­த­மாக 146பேர் மருத்­துவ பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.அத­னைத்­தொ­டர்ந்தும் மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளுக்­கான நட­வ­டிக்­கைகள் நடை­மு­றையில் இருந்­து­வ­ரு­கின்­றன. 

உண்­மை­யி­லேயே 13ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட முன்னாள் போரா­ளிகள் சமூக மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் முதல் ஐந்து வாரங்­களில் வெறு­மனே 146பேர் மட்­டுமே மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளுக்­காக சமு­க­ம­ளித்­தி­ருக்­கின்­றனர்.இதற்­கான காரணம் என்ன என்­றொரு இயல்­பான சந்­தேகம் எழத்­தான் செய்­கின்­றது. அந்த சந்­தே­கத்தை தீர்த்­துக்­கொள்­வ­தற்கும் முன்னாள் போரா­ளி­க­ளி­டத்­தி­லேயே செல்­ல­வேண்­டி­யி­ருந்­தது. அவ்­வாறு குறிப்­பிட்ட முன்னாள் போரா­ளி­களை சந்­தித்­த­போது அவர்கள் சில கருத்­துக்­களை பகிர்ந்து கேள்­வி­களை எழுப்­பி­னர்கள்.

''நாங்கள் எங்­க­ளுக்­காக துவக்கை தூக்­க­ வில்லை. ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளுக்­கா­கவும் தான் துவக்கை தூக்­கினம். ஆனா எல்லாம் தலை­கீழா மாறின பிறகு இப்ப எங்­கட நிலை­மையை பாருங்கோ. எங்­கட எதி­ரியா இருந்­த­வ­னிட்டை சர­ண­டைஞ்சம். உயிரைக் காப்­பத்­திக்­கொள்ள வேணும் எண்­டு­றத்­துக்­காக நாங்கள் சர­ண­டை­யல.

என்ன நடக்கும் எண்டே தெரி­யாமத் தான் நாங்கள் சர­ண­டைஞ்சம். பிறகு எப்­பி­டியோ ஒரு­மா­தி­ரியா வெளிய­வந்தம். நாங்கள் வெளிய வந்த பிறகு இப்ப என்ன செய்­யிறம். நடுத்­தெ­ரு­வில தான் நிக்­கிறம்.  நாங்கள் பள்­ளிக்­கூட படிப்பை முழு­மை­யாக முடிக்­கா­த­தால அர­சாங்க உத்­தி­யோ­கத்­தி­லையும் சேர முடி­யாது. தனியார் கொம்­ப­னி­க­ளில சேரு­வ­தெண்­டாலும் எங்­களை முழுசாய் நம்பி எடுக்­கிற நிலை­மை­யில அவையள் இல்ல.  

எங்­க­ளால எந்த வேலை­யையும் செய்ய முடியும் எண்­டாலும் அதுக்கு கூட யாரும் கூப்­பி­டுறது இல்ல. ஒரு ஓரங்­கட்டப்­பட்ட நிலை­மை­யில தான் இருக்­கிறம். எங்­கட பொடி­யங்­க­ளோட சேர்ந்து ஏதா­வது ஒரு வேலை செய்வம் எண்டு நினைச்­சாலும் அதுக்கும் முடி­யாம இருக்கு. புனர்­வாழ்­வில இருந்து வந்த ஒண்டு இரண்டு பேர் சேர்ந்து நிண்டு கதைச்சால் கூட எங்­களுக்கு பின்­னால சி.ஐ.டி.காரர் வரு­கிற நிலைமை தான் இருக்­குது. அப்­பி­டியே இல்­லாட்டி எங்­களை ஆமி காம்­பு­க­ளுக்கு வரச் சொல்­லு­கிற நிலை­மைதான் இன்னும் இருக்கு.  இரண்டு ஒரு நாளுக்கு கையெ­ழுத்து வைக்  கச் சொல்­லுற காலம் இருந்­தாலும் ஆட்சி மாறி­  ன­துக்கு பிறகு இப்ப அந்­த­ள­வுக்கு இல்லை. எண்­டாலும் இன்னும் எங்­களை சந்­தே­கத்­தோட பார்க்­கிற நிலை­மைகள் தான் இருக்கு.   

இப்­பிடி எங்­கட நிலை­மைகள் இருக்­கிற நேரத்­தில எதுக்கு நாங்கள் வீணாய் போய் சிக்­க­லில மாட்­டிக்­கொள்ள வேண்டும். ஏதோ கூலி வேலை­களைச் செய்து நாங்கள் கூழோ கஞ்­சியோ குடிச்­சுக்­கொண்­டி­ருக்­கின்றோம். அப்­பி­டி­யி­ருக்­கை­யில வீணாய் போய் நாங்கள் மருத்­துவ பரி­சோ­தனை அது இது எண்டு செய்­து­கொண்டு இரு­ந்தா என்ன நடக்  கும். எங்­களை பிறகு சி.ஐ.டியால கூப்­பிட்டு விசா­ரிப்­பினம். எங்­களை பின்­தொ­டர ஆரம்­பிப்­பினம்.  கஷ்­டப்­பட்­டாலும் இருக்­கிற கொஞ்ச நிம்­ம­தி­யோட எங்­கட காலத்தை போக்­கத்தான் பாக்­கிறம். எங்­க­ளுக்கு ஏதோ ஊசி எல்லாம் போட்­டவை தான். அவங்­கட சாப்­பாட்­டையும் தான் சாப்­பிட்டம். இப்­ப உடல்­நி­லை­யில கொஞ்சம் வித்­தி­யா­சங்கள் தெரி­யுது. 

எதோ எஞ்­சின காலத்­தை­யா­வது பிரச்­சினை இல்­லாம வாழ்ந்­திட்டு போவம் எண்டு தான் நினைக்­கிறம். அதால தான் இந்த மாதிரி பரி­சோ­தனை அது இது எண்­டெல்லாம் போக­ லமா ஒதுங்கி இருக்­கிறம். எங்­களை வைச்சு திரும்­பத்­தி­ரும்­ப அர­சியல் செய்யிறதுக்கு நாங்கள் இடங்கொடுக்கமாட்டம்.  மருத்துவ பரிசோதனை செய்யிறதுக்கு முன்னால எங்களுக்கு அன்றாடம் சாப்பிடுகி றதுக்கு ஒரு வழிய செய்து கொடுங்கோ எண்டு தான் கேக்கிறம். அதக்கு பிறகு இந்த விசயங்களை பாப்பம்'' என்ற தொனிப்படவே அனைத்து போராளிகளும் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். 

அதேநேரம் மறுபக்கத்தில் உண்மையிலே தங்களுக்கு என்ன நடந்திருக்கிறது என் பதை அறிந்து கொள்ளவேண்டும் அதற்காக மருத்துவப் பரிசோதனை செய்தே தீரவேண் டும். அதன் முடிவு அறிக்கைகளும் உடனடி  யாக கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத் தோடும் போராளிகள் இல்லாமலில்லை. அவ்வாறானவர்கள் தான் எதற்கும் அஞ்சப்  போவதில்லை எஞ்சிய காலத்தை குடும்பத்  தினருடன் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்பதற்காகவும் சந்தேகங்களை போக்கு வதற்காகவும் தாமாக முன்வந்து இதுவரை யில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண் டிருக்கின்றார்கள் என்பது முக்கியமானதா கின்றது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-7

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எதோ எஞ்­சின காலத்­தை­யா­வது பிரச்­சினை இல்­லாம வாழ்ந்­திட்டு போவம் எண்டு தான் நினைக்­கிறம். அதால தான் இந்த மாதிரி பரி­சோ­தனை அது இது எண்­டெல்லாம் போக­ லமா ஒதுங்கி இருக்­கிறம்.

இதுதான் உண்மை, மற்றதெல்லாம் புலுடாக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இதுதான் உண்மை, மற்றதெல்லாம் புலுடாக்கள் 

அதே.....

  • தொடங்கியவர்

மெல்ல கொல்லும்.....?

06-bd9f798d955d873c7a32fe497e5b256c88d2a2df.jpg

 

ஊசி சர்ச்சை ஏற்படுத்திய மனவலிகள்

ஆர் . ராம்

சுகா­தார அமைச்­சரின் செயற்­பா­டு­களும் திட்­டங்­களும் இவ்­வாறு இருக்­கையில் முன்னாள் போரா­ளிகள் வறு­மையின் கொடு­மையில் தவிக்கும் நிலைமை, வேலை­வாய்ப்­புக்­க­ளின்­றிய சூழலில் நெருக்­க­டி­களை சந்­திக்கும் துர்ப்­பாக்­கிய நிலைமை, சமூ­கத்தில் மாற்­றுக்கண் கொண்டு பார்க்­கப்­ப­டு­கின்ற நிலைமை, இன்­னமும் புலனாய்­வா­ளர்­களின் கெடு­பி­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­து­வ­ரு­கின்ற நிலைமை என அனைத்­துமே நேரெ­தி­ரான சூழ்நிலைகளே காணப்­ப­டு­கின்ற நிலை­மையில் தான் சர்ச்­சைக்­கு­ரிய ஊசி விவ­காரம் தலை­தூக்­கி­யது. இந்த விவ­காரம் பூதா­க­ர­மா­கி­யுள்­ள­மையால் தற்­போது மரத்தால் விழுந்­த­வனை மாடேறி மிதித்த கதை­யாக முன்னாள் போரா­ளிகள் மேலு­மொரு பாரிய நெருக்­க­டிக்குள் சிக்­கி­யுள்­ளனர்.

சமூ­கத்தில் வாழும் ஒருவர் தனது பலங்­க­ளையும் பல­வீ­னங்­க­ளையும் இனங்­கண்டு வாழ்க்­கையில் வரக்­கூ­டிய அனைத்து இன்ப துன்­பங்­க­ளையும் அறிந்து தனக்கும் தன்­னைச்­சார்ந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கும் எவ்­வி­தத்­திலும் பாதிப்­புக்கள் ஏற்­ப­டா­த­வாறு தனது வாழ்க்­கைக்­கான முடி­வு­களை தானே பெற்று முழு­மை­யான மன ஆரோக்­கி­யத்­துடன் வாழ்­வதே மன­ந­ல­மாகும்.

ஒரு­வ­னு­டைய நல்­வாழ்­விற்­கான அத்­தி­வா­ர­மாகக் கரு­தப்­ப­டு­வதே மன நல­மாகும். அவ­னது வீடும் நாடும் பயன்­மிக்­க­தாக செயற்­ப­டு­வ­தற்கும் அதுவே வழி­வ­குக்­கி­றது. ஒரு­வ­னது உடல், உள்ளம், சமூகம், சூழல், ஆன்­மீகம் போன்ற அனைத்­திலும் சம­நிலை பேண உத­வு­வதும் மன­ந­ல­மே­யாகும். அவ்­வா­றி­ருக்­கையில் முன்னாள் போரா­ளிகள் முழு­மை­யான புன­ர்வாழ்வுப் பயிற்­சி­களை பெற்று வெளியா­கி­யி­ருக்­கின்ற போதும் தற்­போது வரையில் அவர்­களின் மனங்கள் முழு­மை­யான நலத்­துடன் இல்லை.

அதற்­கான கார­ணங்­க­ளாக வறுமை, தொழில் வாய்ப்­புக்கள் இன்­மை உள்­ளிட்ட ஏற்­க­னவே கூறிய விட­யங்­களே அமை­கின்­றன. அதன்­பி­ர­காரம் முன்னாள் போரா­ளிகள் சாதா­ரண பொது­ம­கனின் மன­நி­லையை ஒத்த பூரண நலத்­துடன் இல்­லாது உள்­ளத்தால் இத்­த­ரு­ணத்­திலும் வேத­னைப்­பட்­டுக்­கொண்­டே­யி­ருக்­கின்­றனர்.

விடு­த­லைப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்­டதன் கார­ணத்தால் இத்­தனை நெருக்­க­டியை சந்­திக்கும் முன்னாள் போரா­ளிகள் சர்ச்­சைக்­கு­ரிய ஊசிப் பிரச்­சி­னையால் மன­த­ளவில் எண்ணெய்த் தாழியில் விழுந்த புழு­வாக துடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். உண்­மை­யி­லேயே களப்­ப­ய­ணத்­தின்­போது சந்­தித்த போரா­ளிகள் மிகவும் பகி­ரங்­க­மாக தாம் உள்­ளத்தால் வேத­னைப்­படும் விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­னார்கள். அவை வரு­மாறு,

முத­லா­வது போராளி கூறு­கையில், எனக்கு இப்­போது தான் முப்­பத்­தைந்து வய­தா­கின்­றது. நான் விடு­த­லைப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்­டதன் கார­ணத்தால் சமூ­கத்தில் இன்றும் போரா­ளி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கின்றேன். நான் க.பொ.த சாதா­ரண தரம் வரையில் கல்வி கற்­றி­ருந்தேன்.

அதன் பின்னர் போராட்­டத்தில் இணைந்து விட்டேன். எனக்கு தற்­போது வரையில் திரு­ம­ண­மா­க­வில்லை. திரு­மண பந்­தத்தில் இணைந்து கொள்­வ­தற்­காக பெண் பார்க்கும் சில முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. அதன்­போது நான் புனர்­வாழ்வு பெற்ற போராளி என்­பதால் சில திரு­மண பேச்­சுக்கள் கைவி­டப்­பட்­டன. சில திரு­மணப்பேச்­சுக்கள் எனது கல்வித்தரம் போதாது என்­பதால் கைவி­டப்­பட்­டன.

இவ்­வா­றான நிலையில் இறு­தியில் திரு­ம­ணப்­பேச்­சொன்று எடுக்­கப்­பட்டு ஏறக்­கு­றைய முடிவாகி­யி­ருந்த நிலையில் விஷ ஊசி முன்னாள் போரா­ளி­க­ளுக்கு போடப்­பட்­டது என்ற கதை எழுந்­த­மையால் பெண்­வீட்டார் அப்­பேச்சை கைவி­டு­மாறு கோரி­யி­ருந்­தனர்.

எனது வீட்டில் நான் முத்­த­பிள்­ளை­யாக இருக்­கின்றேன். எனக்கு இரண்டு சகோ­த­ரிகள் இருக்­கின்­றனர். ஒருவர் திரு­மணம் முடித்து விட்டார். இன்­னொ­ருவர் திரு­மணம் முடிக்க இருக்­கின்றார். தற்­போது எனது பெற்­றோ­ருக்கும் வய­தாகிச் செல்­கின்­றது.

எனது திரு­மணம் முடிந்த பின்­னரே கடைசி சகோ­த­ரியின் திரு­ம­ணத்தை ஏற்­பாடு செய்­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றார்கள். இவ்­வா­றான நிலையில் எனது திருமணம் தள்­ளிப்­போய்க்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்த ஊசிப்­பி­ரச்­சினை இப்­ப­டியே போனால் எனது திரு­ம­ண­வாழ்க்கை கேள்­விக்­கு­றி­யா­கி­விடும். அது­கூடப் பர­வா­யில்லை. எனது பெற்­றோரின் எதிர்­பார்ப்­புக்கு என்­ன ­ப­தி­ல­ளிப்­பது?.

சகோ­த­ரியின் எதிர்­காலம் என்­ன­வாகும் என்ற கேள்­விகள் எனக்குள் இப்­போது எழ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. இவற்றை சிந்­திக்­கின்ற தரு­ணங்­களில் எல்லாம் வாழ்க்கை மீதான வெறுப்பே அதி­க­மா­கின்­றது. என்ன செய்­வ­தென்று முடி­வெ­டுக்க முடி­யாத நிலை­மையும் நீடிக்­கின்­றது.

எல்லாம் நாங்கள் போய் அர­சி­யல்­வா­தி­க­ளி­டமோ அல்­லது வேறு யாரி­டமோ கூறி தீர்வை பெற்­றுக்­கொள்ள முடி­யாது. என்ன செய்­வது என்று தெரி­யாது ஒவ்­வொரு நாளும் சிந்­தித்­துக்­கொண்டே நாட்­களை நகர்த்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம் என்று குறிப்­பிட்டார்.

நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யான இரண்­டா­வது போராளி கூறு­கையில், நான் விடு­த­லைப்­போ­ராட்­டத்தில் சுமார் இரு­பது வரு­டங்கள் ஈடு­பட்­டி­ருந்து அந்த அமைப்­பி­லி­ருந்து விலகிய நிலையில் 2004ஆம் ஆண்டு திரு­மணம் முடித்­தி­ருந்தேன். எனக்கு தற்­போது நான்கு குழந்­தைகள் இருக்­கின்­றார்கள். நால்­வரும் கல்­வியைத் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­போது எனக்கு சில காயங்கள் ஏற்­பட்­டன. தற்­போதும் சில துகள்கள் எனது உடலில் இருக்­கின்­றன. இருப்­பினும் அவற்றால் எனது உயி­ருக்கோ அல்­லது அன்­றாட செயற்­பா­டு­க­ளுக்கோ எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்­லை­யென மருத்­து­வர்கள் கூறி­விட்­டார்கள்.

நாம் பெரி­ய­ளவில் வரு­மா­னத்தைப் பெறாது விட்­டாலும் எமது குடும்பம் அன்­றாடம் பசி, பட்­டி­னி­யின்றி வாழ்­வ­தற்­கு­ரிய வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொண்­டுதான் இருக்­கின்றேன். அண்­மையில் விஷ ஊசி பிரச்­சினை கதை பத்­தி­ரி­கை­களில் வந்­தி­ருந்­தது. உண்­மையில் அப்­ப­டி­யொரு சம்­பவம் நடந்­ததா இல்­லையா என்­பது குறித்து யாருக்கும் எந்த விட­யங்­களும் தெரி­யாது.

இந்­தப்­பி­ரச்­சி­னையால் அர­சி­யல்­வ­ா திகள் சொல்­வதன் பிர­காரம் 100க்கு மேற்­பட்­டோரில் யார் முத­லா­வ­தாக இறந்தார். இறு­தி­யாக இறந்தார் என்­பது கூறி­ய­வர்­க­ளுக்கே தெரி­ய­துள்­ளது. அவர்­க­ளி­டத்தில் அந்த பட்­டியல் இருக்கிறதா இல்­லையா என்­பது கூடத் தெரி­யாது. அவ்­வா­றான நிலையில் தான் இந்தக் கதையை கூறி­யி­ருக்­கின்­றார்கள்.

இந்த விடயம் வெளியான பிறகு எமது வீட்டில் சில மாற்­றங்கள் நடந்­தன. குறிப்­பாக நானும் பிள்­ளை­களும் மனை­வியும் மகிழ்ச்­சி­யா­கவே வாழ்ந்து வந்தோம். வேலை­யற்ற நேரங்­களில் பிள்­ளை­க­ளுடன் விளை­யா­டுவேன். அதுவே எனக்கு தற்­போ­துள்ள ஒரு ஆறு­தலும் கூட. அவ்­வா­றி­ருக்­கையில் அன்­றொ­ருநாள் நாங்கள் அனை­வரும் உண­வ­ருந்­திக்­கொண்டு இருந்­த­போது எனக்கு திடீ­ரென இரு­மி­யது.

அது­வொரு பெரிய விடயம் அல்ல. சாதா­ர­ண­மாக உண­வினால் ஏற்­பட்­டி­ருக்­கலாம். ஆனால் அன்று எனது மனைவி, உங்­க­ளுக்கும் புனர்­வாழ்வில் இருக்கும் போது ஊசி ஏதா­வது போட்­டார்­களோ தெரி­ய­வில்லை. இப்­படி இருமல் வரு­கிறதே எனக் கூறினார்.

அந்த சம­யத்தில் நான் அதனை பெரி­தாக எடுத்­துக்­கொள்ளா விட்­டாலும் சில நாட்கள் கடந்த நிலையில் எனது பிள்­ளைகள் என்­னுடன் விளை­யா­டு­வதில் பெரி­தாக ஆர்வம் காட்­டாது இருந்­தனர். அதனை உணர்ந்­த­வனாக ஏன் இப்­பொ­ழுது அப்­பா­வுடன் விளை­யா­டு­வ­தற்கு நீங்கள் வரு­வ­தில்லை என அவர்­க­ளி­டத்தில் நேர­டி­யா­கவே கேட்டேன்.

அப்­போது அவர்கள் என்­னி­டத்தில் சொன்ன பதில் எனக்கு இடி­வி­ழுந்­ததைப் போன்று இருந்­தது. அம்மா கூறினார், உங்­க­ளுடன் விளை­யாட வேண்டாம். அப்­பாக்கு கஷ்டம் கொடுக்­க­ாதீர்கள். அவ­ருக்கு ஏதா­வது நடந்து விட்டால் எங்­க­ளுக்கு யாரும் இல்­லாமல் போய்­வி­டுவோம். அதனால் தான் நாங்கள் விளை­யாடி உங்­க­ளுக்கு கஷ்­ட­ம­ளிக்க வேண்டாம் என நாம் வரு­வ­தில்லை என்­றார்கள். 

தொடரும்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-4

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மெல்ல கொல்லும்.....?

 

ஆர் . ராம்

 

யாழ்.பல்­க­லைக்­க­ழக உள­வியல் பேரா­சி­ரி­யர் வைத்­திய நிபுணர் தயா சோம­சுந்­தரம் முன்னாள் போரா­ளி­களை சமூ­கத்­துடன் இணைந்துச் செயற்­ப­டு­வ­தற்கும், அவர்­க­ளுக்­கான உரிய அங்கீ­கா­ரத்தை வழங்கி அவர்கள் உள­ரீ­தி­யாக சமத்­து­வத்தைப் பேணு­வ­தற்­கு­மாக சில பரிந்­து­ரை­களைச் செய்தார்.

குறிப்­பாக, யுத்­த­க­ளத்தில் பல கரு­வி­களை கையாள்­வ­தற்கும், தீர்­மா­னங்­களை எடுக்­கவும் வல்­ல­வர்­க­ளாக திகழ்ந்த இவர்கள் உயிரைக் கூட சமூகத்­திற்­காக தியாகம் செய்­யக்­கூ­டிய நிலையில் தான் இருந்­துள்­ளார்கள்.

ஆகவே இவர்­க­ளி­டத்தில் ஏதோ­வொரு திறமை இருக்­கின்­றது என்­ப­தற்கு அப்பால் சமூகம் சார்ந்து 24மணி நேரத்­திற்கும் அதி­க­மாக செயற்­ப­டு­வ­தற்கும் தயா­ரா­க­வுள்ள அர்ப்­ப­ணிப்­பா­ளர்­க­ளா­கவே நிச்­சயம் இருப்­பார்கள். அவர்­களைப் பயன்­ப­டுத்தி எத்­தனை விட­யங்­களையும் செய்ய முடியும்.

எமது சமூகத்தை எடுத்­துக்­கொண்டால் யுத்­தத்திற்குப் பின்­ன­ரான காலத்தில் 57சத வீத வடக்கு சிறு­வர்கள், இயல்­பற்ற வகையில் செயற்­ப­டு­கின்­றனர். 29வீதத்­தினர் யுத்­தத்தின் பின் தாக்­கங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். இந்த தாக்­கங்­களின் குணங்­கு­றி­க­ளாக பயம், அழுத்தம் வலிப்பு, நோய், வயிற்­றுப்புண் மற்றும் நாட்­பட்ட சோர்வு என்­பன இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன.

எனது தனிப்­பட்ட ஆய்­வின்­படி கிளி­நொச்சி, வவு­னியா, முல்­லைத்­தீவு மற்றும் மன்னார் ஆகிய இடங்­களில் 79வீதத்­தினர் ஆயு­தப்­போரின் தாக்க வெளிப்­பாட்டை கொண்­டுள்­ளனர்.58 வீத­மானோர் குண்­டு­வீச்­சு­களை பார்த்­துள்­ளனர். 40 வீத­மானோர் எறி­கணை மற்றும் மோட்டார் குண்­டு­வீச்­சுக்­களை பார்த்­துள்­ளனர். தமது வீடுகள் தாக்­கப்­ப­டு­வதை 40 வீத­மா­ன­வர்கள் பார்த்­துள்­ளனர். 77வீத­மானோர் பல்­வேறு இடப்­பெ­யர்­வு­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

இந்த உள தாக்­கங்­களால் நம்­பிக்கை,நம்­ப­கத்­தன்மை, உணர்­வுகள் என்ற இயல்­பாக அபி­வி­ருத்தி அடை­ய­வேண்­டிய தன்­மைகள் பாதிக்­கப்­படும்.இதன் கார­ண­மாக எளிதில் நிரந்­த­ர­மான தழும்பு ஏற்­படும். மருத்­து­வத்­துறை மாண­வர்­களால் வன்­னியில் எடுக்­கப்­பட்ட தர­வு­க­ளின்­படி, 63வீத­மான சிறு­வர்கள் தமது நண்­பர்கள் மற்றும் உற­வி­னர்கள் மர­ண­மா­வதை பார்த்­துள்­ளனர்.

67வீத­மானோர் மர­ணங்­களில் இருந்து தப்­பி­யுள்­ளனர். 43 வீத­மானோர் எதி­ரிகள் சாவதை பார்த்­துள்­ளனர். 80 வீத­மானோர் ஆயுதப் போராட்­டத்தில் அகப்­பட்­டுள்ள அனு­ப­வத்தை கொண்­டுள்­ளனர். 30வருட போர் கார­ண­மாக வடக்கில் பாரம்­ப­ரிய கட்­டுப்­பாடு உடைந்து போயுள்­ளது. சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் 2007இற்கும் 2014இற்கும் இடையில் 32வீதத்தில் இருந்து 99வீத­மாக அதி­க­ரித்­துள்­ளது.

2013ஆம் ஆண்டில் வடக்கில் 19வீதத்­தினர் இயல்­பற்ற மூளை செயற்­பாட்டை கொண்­டி­ருந்­தனர்.17வீதத்­தினர் மது­பானம் மற்றும் போதைப்­பொருள் பாவ­னைக்கு ஆட்­பட்­டி­ருந்­துள்­ளனர்.

மேலும் வடக்கில் நான்காம் கட்ட யுத்தம் நடை­பெற்ற 2005 தொடக்கம் 2009ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலத்தில் யாழ்ப்­பா­ணத்தில் ஒரு லட்சம் பேரில் 23 பேர் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­தது. ஆனால் யுத்த நிறைவின் பின்னர் தற்­கொலைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளன.

2011 மற்றும் 2012இல் ஒரு லட்சம் பேரில் 25 பேர் தற்­கொலை செய்து கொண்­ட­தா­கவும் 2013ஆம் ஆண்டு அது மேலும் அதி­க­ரித்­துள்­ளது.

ஆகவே இத்­த­கைய பின்­ன­ணி­களை வைத்துப் பார்க்­கின்­ற­போது முப்­பது வருட யுத்­தத்­தினால் பாரம்­ப­ரிய குடும்ப மற்றும் சமூக கட்­டுப்­பாட்டு பொறி­முறை செய­லி­ழந்­துள்­ளது. யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் மனித வள முன்­னேற்­றத்­துக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. சிறு­வர்கள், இளை­ஞர்கள், யுவ­தி­க­ளுக்­கான எதிர்­காலம் இல்­லாமல் போயுள்­ளது.

ஆகவே இந்த கட்­ட­மைப்பை சீர்­செய்­கின்ற பொறி­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. அவ்­வா­றான பொறி­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­போது சமூகம் சார்ந்து சிந்­தித்து, பற்­றுடன் அர்ப்­ப­ணிப்­பாக செயற்­படக் கூடி­ய­வர்­க­ளாக இந்த முன்னாள் போரா­ளிகள் நிச்­சயம் இருப்­பார்கள்.

அவர்கள் அத்­த­கைய மன­நி­லையில் தான் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். ஆகவே அத்­த­கைய செயற்­பா­டு­களில் அவர்­களை உள்­வாங்­கு­வதன் மூல­மாக பல விட­யங்­களில் முன்­னிலை பெற­மு­டியும்.

குறிப்­பாக கூறு­வ­தானால் சமூக கட்­ட­மைப்பு வலு­வா­ன­தாகி முன்­னேற்­ற­க­ர­மாக மாறு­வத­ற்கு ஏது­வாக அமையும். சமூ­கத்­துடன் முன்னாள் போரா­ளிகள் தொடர்பு படு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­ரிக்கும். ஆயு­தங்­களை ஏந்­திய போது இருந்த அவர்­க­ளுக்­கு­ரிய சமூக அங்­கீ­காரம் அவர்­களின் சேவைகள் மூல­மாக மீண்டும் கிடைக்கும்.

ஆகவே இத்­த­கைய விட­யங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். அதே­நேரம் முன்னாள் போரா­ளி­க­ளுக்­கு­ரிய தேவைகள், அவர்­க­ளுக்குள் இருக்கும் எதிர்­பார்ப்­புக்­களை கண்­ட­றி­வ­தற்கும், முகாம்­களில் அடைத்து வைத்து புனர்­வாழ்­வ­ளிக்­காது முறை­யா­ன­தொரு சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட புனர்­வாழ்­வ­ளிக்கும் செயற்­றிட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதன் ஊடாக முன்னாள் போரா­ளி­களின் பல பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புள்­ளது.

சர்ச்­சைக்­கு­ரிய ஊசி விவ­காரம்

சர்ச்­சைக்­கு­ரிய ஊசி விவ­காரம் தொடர்­பாக பல­த­ரப்­பட்ட கருத்­துக்கள் வரு­கின்­றன. என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் எது­வுமே நடந்­தி­ருக்க வாய்ப்­பில்லை என்று கூற­வில்லை. முறை­யா­னதொரு பொறி­மு­றை­யூ­டாக அவர்­க­ளுக்கு என்ன நடந்­தி­ருக்­கின்­றது என்­பதை கண்­ட­றிந்து முழு­மை­யா­ன­தொரு நட­வ­டிக்கை நிச்­சயம் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது என்றார்.

நிறை­வாக

சர்ச்­சைக்­கு­ரிய ஊசி விவ­காரம் வெளியா­னதைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட கள ஆய்­வுகள், மற்றும் நேர்­கா­ணல்கள் ஊடாக கடந்த 25அங்­கங்­க­ளிலும் பல­த­ரப்­பட்ட விட­யங்கள் வெளிக்­கொண்டு வரப்­பட்­டுள்­ளன. அவற்றின் சாராம்­சத்தின் மூலம் ஏது­வுமே நடந்து விட­வில்லை என்ற முடி­வுக்கு வர­மு­டி­யா­துள்­ளது.

இத­னை­வி­டவும் உல­க­ளா­விய ரீதியில் இவ்­வாறு மனித உயிரை மெல்ல மெல்ல கொல்­வ­தற்கு ரஷ்யா போன்ற பல நாடு­களில் போர்­களின் போது, ஆட்சி மாற்­றங்­களின் போது, புரட்­சி­களின் போது என பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் உணவின் மூலம், ஊசிகள் மூலம் நிகழ்த்­தப்­பட்ட சம்­ப­வங்கள் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. அவற்றில் சில இந்த தொடரின் ஆரம்­பத்­தி­லேயே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இந்த நாடு­க­ளுடன் இலங்கை அர­சாங்கம் திறந்த பாது­காப்பு ஒப்­பந்­தங்­க­ளையும் கொண்­டி­ருக்­கின்­றது. தேசிய பாது­காப்பு என்ற எல்­லையால் அதி­லுள்ள விட­யங்கள் எவ்­வாறு இருக்­கின்­றன. எத்­த­கைய ஒத்­து­ழைப்­புக்­களை நல்க முடியும் என்ற விட­யங்­களை எல்லாம் அறி­ய­மு­டி­யா­துள்­ளது.

அந்­நி­லையில் அந்­தந்த நாடு­களில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் நிகழ்த்­தப்­பட்டு பல ஆண்­டு­களின் பின்னர் பல்­வேறு வகை­யான நீண்­ட­தொரு மருத்­துவ ஆய்­வு­களின் அடிப்­ப­டை­யி­லேயே அவ்­வா­றான சம்­பவம் நிகழ்ந்­தி­ருக்­கின்­றது என்ற முடி­வுக்கு அந்­நாட்டு மருத்­துவ துறை­யி­னரால் ஓர­ள­வேனும் வர­மு­டிந்­தி­ருக்­கின்­றது என்­பது நிதர்­ச­ன­மான உண்­மை­யாகும்.

அவ்­வ­ளவு தூரம் மிக­மிக நுணுக்­க­மாக மேற்­கொள்­ளப்­படும் இத்­த­கைய சம்­ப­வங்­களை எவ்­வாறு இல­குவில் கண்­ட­றி­வது என்­ற­தொரு பிரச்­சினை இருக்­கின்­றது. எது எவ்­வா­றா­யினும் வடக்கு மாகாண சுகா­தார அமைச்சின் தலை­மையில் வடக்கு மாகாண மருத்­து­வக்­கு­ழுவின் முன்­னெ­டுப்பில் ஆய்­வொன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. ஆய்­வுக்­கான வச­திகள், நிபு­ணத்­து­வத்­தன்ைமை என்­ப­ன­வெல்லாம் இருக்­கின்­றதா என்­பது மிகப்­பெ­ரிய கேள்வி.

அதற்கு மத்­தி­யிலும் வடக்கு மாகாண சுகா­தார அமைச்சர் வைத்­திய கலா­நிதி பா.சத்­தி­ய­லிங்­கத்தின் அதீத நம்­பிக்­கை­யு­ட­னான உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான இடை­வி­டாத செயற்­பா­டுகள் தொடர்ந்­த­வண்­ண­முள்­ளன. ஆய்வு எப்­போது நிறை­வ­டையும் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

ஒரு­வேளை இந்த ஊசி விவ­காரம் பொய்­யென தெரி­ய­வ­ரு­மா­க­வி­ருந்தால் அதனால் எழப்­போகும் விளை­வுகள் எவ்­வாறு அமையப் போகின்­றன என்­ற­தொரு கேள்­வியும் இருக்­கின்­றது. இறுதி யுத்­தத்தில் மனித உரிமை மீறல்­க­ளுக்­கா­கவும், மனி­தா­பி­மானச் சட்ட மீறல்­க­ளுக்­கா­கவும் ஐ.நா மன்­று­வரை போராடிய அனைத்துமே பொய்த்துவிடும் அபாயமுள்ளது.

இவ்வாறு முள்மீது விழுந்த சேலை போன்று உள்ள முன்னாள் போராளிகளின் விவகாரத்தில் பொறுமைக்கான எல்லை எதுவரை என்பதே அறியப்படாத நிலையில், ஊசி விவகாரம் உண்மையா? இல்லையா என்ற கேள்விகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக முன்னாள் போராளிகளின் முகத்திற்கு முன்னால் எழுப்பப்படுகின்றபோது அந்த வினாக்களே அவர்களை மெல்ல மெல்ல மரணிக்கச் செய்து விடும்.

இந்த ஆபத்திலிருந்து அவர்களை மீட்டெ டுப்பது எவ்வாறு? என்பதற்கான பதிலை குறித்த சர்ச்சையை பாராளுமன்றத்திலும், வெளியிலும் வெளிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளிலும், வடக்கு மாகாண சுகாதார துறையினரிடமுமே உள் ளது. மேலும் இந்த விடயம் சம்பந்தமான அனைத்து செயற்பாடுகளும் தொடர்ந்தும் அவதானிக்கப்படும் என்பதோடு மண்மீட் புக்காகச் சென்றவர்களின் உயிர்மீட்புக்கான இப்பத்தி தற்காலிகமாக முற்றுப்பெற்றாலும் காலத்தின் தேவை கருத்தி மீண்டும் தொடரலாம்.

நன்றி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-04#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.