Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரியில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு

Featured Replies

சாவகச்சேரியில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு
 
 
சாவகச்சேரியில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயி ரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
 
உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் விசேட வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து களுத்து றைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
 
யாழ்ப்பாணம் சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் வானில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர்.
18-12-2016%2020.12.29%202.jpg
களுத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வானும் யாழ்ப்பாணத்தில் இருந்து வவு னியா நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
 
இதன்போது 11 பேர் உயிரிழந்த நிலையில்  சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சாவகச்சேரி பதில் நீதிவான் எஸ்.கணபதிபிள்ளை நேரில் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். 
 
சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் மேற்கொண்டிருந்தார்.

 
 
இதன்படி உடலிலும் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியிலும் ஏற்பட்ட பலமான காயம் கார ணமாக மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18-12-2016%2020.12.41%201.jpg


இதனை தொடர்ந்து குறித்த பதினொரு சடலங்களில் மாத்தளை பகுதியை சேர்ந்தவரது சட லமானது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதுடன் ஏனைய பத்து பேரது சடலங்களும் இல ங்கை விமான படையினரது ஒத்துழைப்புடன் விசேட வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் பலா லியில் இருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு களுத்துறை மாதம்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்று அதிகாலை முதல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த நிலையில் அவர்களுக்கான தங்குமிட ஏற்பாடுகள் போன்ற அவர்களது அனைத்து ஏற்பாடுகளையும் யாழ்.போதனா வைத்தியசாலையினர் ஏற்பாடு செய்திருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்திரு ந்தார்.
 
இதேவேளை, யாழ்ப்பாண மக்களுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக விபத்தில் உயிரிழந்தவர்க ளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

http://onlineuthayan.com/news/21544

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே சிங்கள பகுதியில் தமிழனுக்கு நடந்து இருந்தால் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

இதுவே சிங்கள பகுதியில் தமிழனுக்கு நடந்து இருந்தால் ?

அது அவையின்ரை சொந்தப்பிரச்சனை எண்டு சொல்லுவினம். அதுக்கு ஒரு கும்பல் ஆமா போடும்....இப்பிடி ஒவ்வொரு விபத்து சாவுக்கும் தனி பிளைட் எண்டால் நாடு நட்டத்திலையெல்லோ ஓடும் எண்டும் வக்காளத்து வாங்குவினம்.:cool:

8 hours ago, பெருமாள் said:

இதுவே சிங்கள பகுதியில் தமிழனுக்கு நடந்து இருந்தால் ?

இதையே தான் நானும் சொல்ல வந்தன்!

சிங்களவனுக்கு தமிழ் பகுதியில் நடந்தபடியால் சிங்கள இனவெறி கிளம்பிய சம்பவம் இது.

சிற்றூந்து தவறான போக்கில் வருவதை உணர்ந்த தமிழ் சாரதி பேரூந்தை நிறுத்திவிட்டார். இல்லை என்றால் அவர் மேலும் பழிகள் வந்திருக்கும். அவர் நிறுத்தியிருக்கா விட்டால் சிற்றூந்து சிதறியிருக்கும், பேரூந்தில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.