Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

Featured Replies

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

ஓவியம்: பாரதிராஜா

 

ஜெயலலிதா மரணத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனால், உயிருள்ள கேள்வியாக இருப்பது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் அடுத்து என்ன ஆகும் என்பதுதான். அவருடைய சொத்துக்களுக்கு வாரிசுகள் யார்? ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்குப் போகும்? சட்டம் என்ன சொல்கிறது? விடை தெரியாத கேள்விகளுக்கு விடை அளிக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷ்.

p36b.jpg

வளர்ப்பு மகன் சுதாகரன் வாரிசாக முடியுமா?

‘‘ஒரு பெண் (ஆணுக்கு இது பொருந்தாது) இறந்துவிட்டால், அவருடைய சொத்துக்களுக்கு அவருடைய பிள்ளைகள் மற்றும் கணவர் வாரிசு ஆவார்கள். அவர்கள் இல்லாதபோது, பெண்ணின் பெற்றோருக்கு அந்தச் சொத்துக்கள் போகும். ஜெயலலிதாவைப் பொருத்தவரை, அவருக்கு திருமணம் ஆகவில்லை; அவரது பெற்றோரும் உயிருடன் இல்லை.குழந்தைகள் இல்லை. ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் கிடையாது. ஆனால், 1995-ம் ஆண்டு சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் வி.என்.சுதாகரனை, தனது வளர்ப்பு மகன் என ஜெயலலிதா அறிவித்தார். ‘வளர்ப்பு மகன்’ என அறிவித்தாரே தவிர, சுதாகரனை தத்தெடுக்கவில்லை. ஏனென்றால், இந்து தத்தெடுப்புச் சட்டப்படி, ஒரு குழந்தையை ஒரு பெண் தத்தெடுப்பதற்கு பல நிபந்தனைகள் உள்ளன. இந்தச் சட்டப்படி, திருமணம் ஆகாத அல்லது விவாகரத்தான பெண்ணும் குழந்தையைத் தத்தெடுக்கலாம். குழந்தையை தத்துக் கொடுப்பவர், தத்தெடுப்பவர் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். ஆண் குழந்தையைத் தத்தெடுத்தால் அந்தப் பெண்ணுக்கும், அந்தக் குழந்தைக்குமான வயது வித்தியாசம் குறைந்தது 21 வயது இருக்க வேண்டும்.

p36.jpg

தத்தெடுக்கப்படும் குழந்தைக்கு 15 வயது நிரம்பி இருக்கக்கூடாது. தத்தெடுப்பு என்பது இந்துமத முறைப்படியான சடங்குகளைப் பின்பற்றியோ அல்லது பதிவு செய்த தத்தெடுப்பு ஆவணம் மூலமாகவோ நடக்கலாம். இந்தச் சட்ட அடிப்படையில் பார்த்தால், வி.என்.சுதாகரன் ஜெயலலிதாவின் தத்துப் பிள்ளையாக ஆக முடியாது. இதனால்தான், சுதாகரனை ‘தத்துப்பிள்ளை’ என சொல்லாமல் ‘வளர்ப்பு மகன்’ என்று அறிவித்தார் ஜெயலலிதா. அதனால், சுதாகரன் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு கிடையாது. அதனால் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமைகோரவும் முடியாது.

p36a.jpgஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன ஆகும்?

இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துக்கள் முதலில் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும். மகன் அல்லது மகள் அல்லது கணவர் என்று யாருமே இல்லாதபோது, அந்தப் பெண்ணின் கணவருடைய வாரிசுகளுக்கு சென்று சேரும். அதாவது, கணவருடைய தாய், கணவருடைய வேறு தாரத்தின் பிள்ளைகளுக்குச் சென்று சேரும். ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும்போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துக்கள் போகும். பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும். ஒருவேளை அந்தப் பெண்ணின் தந்தைக்கும் வாரிசுகள் இல்லையென்றால், தாயின் வாரிசுகளுக்கு சென்று சேரும். இந்த சட்டங்களின்படி பார்த்தால், ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவருடைய தந்தை ஜெயராமனின் வாரிசான, ஜெயக்குமாரின் வாரிசுகளுக்குப் போகும். அதாவது, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமைகோர முடியும். இந்த இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துக்கள் குறித்து, உயிலோ அல்லது வேறு ஆவணங்களோ எதுவும் எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும். ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. சட்டம் அதற்கு வழி செய்கிறது. அப்படி, ஜெயலலிதா வேறு யாருக்கும் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைக்காத நிலையில்தான், அதற்கு அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் உரிமைகோர முடியும். ஒருவேளை, ஜெயலலிதா உயில் எழுதிவைத்திருந்தால், அந்த உயிலில் ஜெயலலிதா யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அவருக்குத்தான் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும்.

p36c.jpg

உயில் எழுதியிருந்தால் என்ன நடக்கும்?

ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளாரா, இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. உயிலைப் பொருத்தவரையில் அதைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. பதிவு செய்யாத உயிலாக இருந்தாலும் அது செல்லும். அந்த உயில் குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் சொல்லாதவரை யாருக்கும்  தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அந்தச் சொத்துக்களை விற்க முயன்றால் அது தெரியவரும். சென்னையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள் குறித்து உயில் எழுதப்பட்டிருந்தால் அந்த உயில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘புரபேட்’ செய்யப்பட வேண்டும். அப்போதுதான், அந்த உயில் செல்லும். உதாரணத்துக்கு, ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு குறித்து அவர் உயில் எழுதி இருந்தால், அது சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘புரபேட்’ செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அந்த உயில் குறித்து நமக்குத் தெரியவரும். அதன்மூலம்தான், ஜெயலலிதா அந்த வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் என்பதும் தெரியும். ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா தவிர வேறு மூன்றாம் நபருக்கு (சசிகலா உள்பட) தனது சொத்துக்களை ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால், தீபக்கும் தீபாவும் அந்த உயிலின் ‘செல்லும் தன்மை’ குறித்தும், ‘புரபேட்’ வழங்கக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காட முடியும். தமிழகத்தில் சென்னை தவிர்த்து, வேறு ஊர்களில் ஜெயலலிதாவுக்கு சொத்து இருந்தால், அது சம்பந்தமாக அவர் உயில் எழுதி இருந்தால், அதை ‘புரபேட்’ செய்யத் தேவை இல்லை. ஆனால், அந்த உயில் சென்னையில் எழுதப்பட்டு இருக்குமானால், மேலே சொன்ன ‘புரபேட்’ நடவடிக்கைகள் பொருந்தும்.

p36d.jpg

சிக்கலை ஏற்படுத்துமா சொத்துக் குவிப்பு வழக்கு?

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக சுட்டிக்காட்டப்பட்ட நகைகள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையை முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், நகைகளை ஏலம்விட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்ட அசையா சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் செய்த ரத்தை எதிர்த்து, தற்போது, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு நடந்து, அதில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதில் வெளிவரப்போகும் தீர்ப்பில், ஜெயலலிதா குற்றவாளி இல்லை என அறிவிக்கப்பட்டால், முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் மற்றும் நகைகள் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளைச் சென்றடையும். ஒருவேளை, ஜெயலலிதா குற்றவாளி என்றும், அவருக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதமும் உறுதி செய்யப்பட்டால், அந்த அபராதத்தை ஜெயலலிதாவின் சொத்துக்களில் இருந்துதான் வசூலிக்க வேண்டும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்னென்ன? ஜெயலலிதா வீட்டில் வசிக்கும் சசிகலா, இளவரசி ஆகியோர் தொடர்புடைய சொத்துக்கள் என்ன ஆகும்? அது அடுத்த இதழில்...

- ஜோ.ஸ்டாலின்


p36g.jpg

36f.jpg

p36e.jpg

 

p36h.jpg

p38.jpg

இன்ஃபோகிராஃபிக்ஸ்: ஆரிஃப் முகம்மது


ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன? கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்துக் கணக்குகளை வைத்து அலசுவோம்.

கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நிலவரப்படி அவரிடம் இருந்த கையிருப்பு ரொக்கம் 41 ஆயிரம். வங்கிக் கணக்குகள், நிதி நிறுவன இருப்புகளை எடுத்துக்கொண்டால் 25 வங்கி கணக்குகள் ஜெயலலிதா பெயரில் இருக்கின்றன. சென்னை, செகந்திராபாத், நீலகிரி ஆகிய இடங்களில் வங்கிக் கணக்குகள் உள்ளன. சில வங்கிகளில் ஐந்து கணக்குகள் வரை உள்ளன. 9 கணக்குகள் சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக முடக்கப்பட்டிருக்கின்றன. 25 கணக்குகளில் மொத்தமாக 10.63 கோடி ரூபாய் இருக்கிறது.

 பங்குதாரராக கம்பெனிகளில் செய்யப்பட்ட முதலீடுகளை எடுத்துக்கொண்டால் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைஸஸ், கொடநாடு எஸ்டேட், ராயல்வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட் ஆகிய 5 கம்பெனிகளில் மொத்தம் 27.44 கோடி ரூபாய் இருக்கிறது. 21,280.300 கிராம் தங்க நகையும், 3.12 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,250 கிலோ வெள்ளியும் ஜெயலலிதா வைத்திருந்தார். 

வாகனங்களை எடுத்துக்கொண்டால் மொத்தம் 9 வாகனங்கள் அவரிடம் இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதன் மொத்த மதிப்பு 42.25 லட்சம் ரூபாய். இது தேர்தல் கமிஷனில் சொல்லப்பட்ட கணக்கு. ஆனால், TN 09 BE 5969 என்ற பதிவு எண் கொண்ட Toyota Land Cruiser LC 200 மாடல் காரும் இதேப் போல TN 09 BE 6167  என்ற பதிவு எண் கொண்ட இன்னொரு காரும் ஜெயலலிதா பயன்படுத்தி வந்தார். அந்த கார்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. இந்த கார் ஒன்றின் விலை ஒரு கோடி ரூபாய்.

அசையா சொத்துக்களில் ஆந்திரா ஜிடிமேட்லாவில் 14.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.50 ஏக்கர் விவசாய நிலமும், செய்யூரில் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.43 ஏக்கர் விவசாய நிலமும், ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில், 5.03 கோடி ரூபாய் மதிப்புள்ள 651.18 ச.மீ வீடும், சென்னை மந்தைவெளியில் 43.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,206 ச.அ வணிக கட்டடமும் சென்னை பார்சன் மேனரில் 4.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 790 ச.அடி வணிக கட்டடமும் ஜெயலலிதா பெயரில் உள்ளது. இதுதவிர போயஸ் கார்டனில் இரண்டு இடங்கள் ஜெயலலிதா பெயரில் இருக்கிறது. 7.83 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 கிரவுண்ட் வீடும் 43.96 கோடி மதிப்பு கொண்ட 10 கிரவுண்ட் வீடும் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 72.09 கோடி ரூபாய்.

அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு மட்டும் 113 கோடி ரூபாய். ஒட்டுமொத்தமாக இந்த கணக்கு எல்லாமே தேர்தல் கமிஷனில் சொல்லப்பட்ட கணக்கு. இதன் உண்மையான மதிப்பு பல மடங்கு அதிகம். ஜெயலலிதா பல கம்பெனிகளில் பங்குதாரராக இருக்கிறார். அது தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என அந்த கணக்குகள் தனி. சொத்துக் குவிப்பு வழக்கில் இதுபற்றி விலாவரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் சேர்த்தால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எங்கேயோ போகும்.

ஜெயலலிதா இறந்தபிறகு அவரின் போயஸ் கார்டன் வீடு இப்போது யார் பெயரில் இருக்கிறது என வில்லங்கம் பார்த்தோம். அது இன்று வரையில் வேறு யார் பெயருக்கும் மாறவில்லை! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

 

 

p8.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். எம்.ஜி.ஆர். சமாதியில் அவரை அடக்கம் செய்த இடத்தில் இன்னும் ஈரம் காயவில்லை. அதற்குள், ஜெயலலிதா நிரந்தரப் பொதுச் செயலாளராக வீற்றிருந்த நாற்காலி, சசிகலாவுக்குப் பக்கத்தில் போய்விட்டது. தமிழக முதல்வர் என்ற அதிகாரம்மிக்க பதவி ஓ.பன்னீர்செல்வத்திடம் போய், பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. ஆனால், ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தில், இன்னும் மயான அமைதி நீடிக்கிறது. 

ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களான அவரது அண்ணன் பிள்ளைகள் தீபாவும், தீபக்கும் அத்தையின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடி இன்னும் குரலை உயர்த்தவில்லை. ‘தன் உடன்பிறவாச் சகோதரியின் சொத்துக்கள் யாருக்கு’ என்று சசிகலாவும் இன்னும் வாய் திறக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் நிலையில் உள்ளது. அந்தத் தீர்ப்பு வந்தபிறகு, ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன ஆகும் என்பது பற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லி இருந்தோம்.

p8c.jpg

பினாமி சொத்துக்கள் என்றால் என்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா, “ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசிக்கும், சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களின்  வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கள் எல்லாமே ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்கள்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி பார்த்தால், சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் போக, 1996-க்குப் பிறகு சசிகலா, இளவரசி, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவின் கணவர் டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெயர்களில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களையும் ஜெயலலிதாவின் ‘பினாமி’ சொத்துக்கள் என்றுதான் கருத முடியுமாம். குன்ஹாவின் இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், 2015-ம் ஆண்டு வெளியான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசிக்கும் சசிகலா, இளவரசி மற்றும் அவர்களுடைய உறவினர்கள் பலரும் புதிய சொத்துக்களை வாங்கியிருக்கிறார்கள். அவற்றை இயக்கும் சக்திகளாகவும் அவர்களே இருக்கின்றனர். அவற்றை எல்லாம், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்கள் என்று கருதினால், அந்தச் சொத்துக்களின் நிலை என்ன? அவற்றின் மூலம் லாபம் அடையப்போவது யார்? அல்லது ‘பினாமி’ சொத்துக்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகுமா? என்ற கேள்விகளை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷிடம் முன்வைத்தோம். அவர் அளித்த விளக்கம்...

p8a.jpg

பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைத் தடைச் சட்டம்!

“பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைத் தடைச் சட்டம், 1988-ல் கொண்டு வரப்பட்டது. பினாமி பரிவர்த்தனையை முழுவதுமாகத் தடை செய்ய அந்தச் சட்டம் வழிவகுத்தது. அதன் சாரம் என்னவென்றால், ‘ஒரு சொத்து யார் பெயரில் இருக்கிறதோ, அவர்தான் அந்தச் சொத்தின் உரிமையாளர். அதை மாற்றி, அந்தச் சொத்துக்கு வேறொருவர், தான் தான் உரிமையாளர் என்று உரிமை கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது. மேலும், பினாமி பெயரில் வாங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்வது குற்றமாகவும் கருதப்படுகிறது. ஆனால், அந்தச் சட்டத்தில், பினாமி சொத்தைப் பறிமுதல் செய்வது பற்றியோ, தண்டனை வழங்கும் நடைமுறை பற்றியோ எதுவும் அப்போது சொல்லப்படவில்லை. 

இந்தக் குறைபாட்டை களைவதற்காக, 2016-ம் ஆண்டு, இந்தச் சட்டத்தில், மத்திய அரசு திருத்தங்களைக் கொண்டுவந்து அமல்படுத்தியது. புதிய திருத்தங்களின்படி, பினாமி சொத்துப் பரிவர்த்தனைகளை விசாரிக்க, ‘விசாரணை அதிகாரி’ என்பவருக்கு அதிகாரம் உள்ளது. அந்த விசாரணை அதிகாரி, புகாரைப் பெற்றோ அல்லது சுயமாகவோ விசாரணையைத் தொடங்கலாம். பதிவு அலுவலகங்கள், கம்பெனிகள் பதிவாளர் மற்றும் உரிய நபர்களிடம் இருந்து ஆவணங்களைப் பெறுவதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் பினாமி சொத்து என்று தெரியவந்தால், அந்தச் சொத்தை ஜப்தி செய்து, நீதி விசாரணை அதிகாரியிடம் (Adjudicating Authority) அறிக்கை சமர்பிப்பார். அந்த நீதி விசாரணை அதிகாரி, சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து, பிரச்னைக்குரிய சொத்துக்கள், பினாமி சொத்துகள்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைப்பார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒருவர் மரணம் அடைந்த பிறகும், அவர் வாரிசுகள் மீதும் பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் நடவடிக்கை பாய சட்டம் வழி செய்கிறது. நீதி விசாரணை அதிகாரியின் நடவடிக்கையை எதிர்த்து, சம்பந்தப்பட்டவர்கள், மேல்முறையீடு செய்வதற்கு, ‘மேல்முறையீடு தீர்ப்பாயம்’ உள்ளது.

p8b.jpg

பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் - விதிவிலக்குகள்!

இந்துக் கூட்டுக்குடும்பத்தின் சார்பாக, குடும்பத் தலைவர் ஒரு சொத்தை வைத்திருப்பது, கணக்கில் காட்டப்பட்ட வருமானம் மூலம், மனைவி பெயரில் கணவன் (அ) கணவன் பெயரில் மனைவி சொத்துக்கள் வாங்கி வைத்திருப்பது, பிள்ளைகள் பெயரில் ஒருவர் சொத்துக்கள் வாங்குவது விதிவிலக்குகள். அதேபோல, சகோதரன், சகோதரிகளுடன் கூட்டாக சொத்துக்கள் வாங்கலாம். இந்தச் சொத்துக்கள், பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் குற்ற நடவடிக்கையாக கருதப்படாது. இப்படி வாங்கப்படும் சொத்துக்கள் பினாமி சொத்துக்களாக கருதப்படாது.

உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு வழக்கில் உள்ள சொத்துக்கள், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்கள் என்று அறிவிக்கப்பட்டு, இந்தச் சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படலாம். நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை என்றால், அந்தச் சொத்தின் உரிமையாளர்கள் எவரோ, அவர்களே அதை அனுபவிப்பார்கள்.  ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள், அதில்  உரிமை கொண்டாட முடியாது’’ என்றார்.   

- ஜோ.ஸ்டாலின்


புதிய சொத்துக்கள்!

சசிகலா, இளவரசி அன் கோ-விடம் சேர்ந்த புதிய சொத்துக்களில் சில...

1. ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங்: சேர்மன் சசிகலா. 2014-ம் ஆண்டு, இளவரசி மற்றொரு ‘சேர் பெர்சன்’ ஆகி உள்ளார். அன்றுதான், இந்த நிறுவனத்தின் பெயர், ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதன் சி.இ.ஓ இளவரசியின் மகன் விவேக்.

2. சந்தனா எஸ்டேட்ஸ்: ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனம். இயக்குநர்கள்-டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன்.

3. ரெயின்போ ஏர்: 2009-ல் தொடங்கப்பட்ட விமான சேவை நிறுவனம். பங்குதாரர்கள்- வி.ஆர்.குலோத்துங்கன், சவுந்தரபாலன், கார்த்திகேயன்.

4. லைஃப் மெட்: கோபாலபுரத்தில் ‘லைஃப் மெட்’ என்ற மருத்துவமனை உள்ளது. இயக்குநர்கள் - திருநாராயணன், அருண்குமார், ஹேமா வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார்.

5. மேவிஸ் சாட்காம்: 1998-ல் தொடங்கப்பட்டது. தற்போது, பூங்குன்றன், பிரபாவதி சிவக்குமார், மனோஜ் பாண்டியன், பழனிவேலு இயக்குநர்களாக உள்ளனர். பழனிவேலு என்பவர் சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர். இந்த நிறுவனத்தின் கீழ்தான், ‘ஜெயா டி.வி’ செயல்படுகிறது.

6. கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்: 2002-ல் தொடங்கப்பட்டது. பத்திரிகை, செய்தித்தாள், வார இதழ், புத்தகம் உள்ளிட்ட ஊடகங்களைத் தொடங்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இயக்குநர்கள்-இளவரசியின் மகள் பிரியாவின் கணவர் கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார்.

7. மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்: எம்.நடராஜனின் தங்கை மகன் குலோத்துங்கனும், டாக்டர் சிவக்குமாரும் சேர்ந்து தொடங்கிய நிறுவனம். பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களைத் தயாரிக்கிறது.

8. ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ்: வட்டிக்கு கடன் கொடுக்கும் நிறுவனம். இயக்குநர்கள் - கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார், பூங்குன்றன்.

இவைதவிர, டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட மேலும் சில நிறுவனங்கள். காட்டேஜ் ஃபீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட், வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட், சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்.

கடன் பெற்றுள்ள நிறுவனங்கள்!   

ஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் மற்றொரு நிறுவனம், ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதில், ஜெயா பிரின்டர்ஸ் நிறுவனம் 76 லட்சமும், ஜெ. ஃபார்ம் ஹவுஸ் 58 லட்சமும், மகாலெட்சுமி திருமண மண்டபம் 28 லட்சமும் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் எல்லாம் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானவை என்று நிரூபிக்கப்பட்டவை. அதாவது, ஜெ., சசிக்குச் சொந்தமான நிறுவனங்கள் அவர்களுடைய மற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, விற்று, அவர்களுக்கே கடன் கொடுக்கும் தொழில் செய்துவருகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள 32 பினாமி நிறுவனங்கள்!

பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கூறியுள்ள 32 நிறுவனங்களின் பட்டியல் இவை: ஜே ஃபார்ம் ஹவுசஸ், ஜே.எஸ்.ஹவுசிங் டெவலப்மென்ட், ஜே ரியல் எஸ்டேட், ஜெயா கான்ட்ராக்டர் அன்ட் பில்டர்ஸ், ஜே எஸ் லீசிங் அன் மெயின்டெனன்ஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுசஸ், மெட்டல் கிங், சூப்பர் டூப்பர் டி.வி. லிமிடெட், ஆஞ்சனேயா ப்ரின்டர்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சினோரா பிசினஸ் என்டர்ப்ரைசஸ், லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் டெவலப்மென்ட், ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ், மீடோ அக்ரோ ஃபார்ம்ஸ், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூட்டிக்கல்ஸ், ஏ.பி அட்வர்டைசிங் சர்வீசஸ், விக்னேஷ்வரா பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்ட்ரக்சன்ஸ், கோபால் ப்ரமோட்டர்ஸ், சக்தி கன்ஸ்ட்ரக்சன்ஸ், நமசிவாயா ஹவுசிங் டெவலப்மென்ட், அய்யப்பா  ப்ராப்பர்டி டெவலப்மென்ட்ஸ், சீ என்க்ளேவ், நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ், ஓஷியானிக் கன்ஸ்ட்ரக்சன்ஸ், க்ரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ், மார்பிள் மர்வெல்ஸ், வினோத் வீடியோ விஷன், ஃபேக்ஸ் யுனிவெர்சல், ஃப்ரெஷ் மஷ்ரூம்ஸ், சூப்பர் டூப்பர் டிவி மற்றும், கொடநாடு டீ எஸ்டேட்.

http://www.vikatan.com/juniorvikatan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
ஜெ., சொத்து... யாருக்கு ?
 
 
 

புதைத்ததைத் தோண்டுவதல்ல; மக்களுக்குப் பயனளிக்கும் எந்த உண்மையும், சமூகத்துக்குத் தெரியாமல் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

ஜெ., இயற்கை எய்திவிட்ட நிலையில், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பும் விரைவில் வரவுள்ளது. இந்நிலையில், ஜெ., சொத்துக்கள் யாருக்குப் போகப் போகின்றன என்ற சாதாரண தொண்டனின் மனநிலையைப் பிரதிபலிப்பதே, இந்த கட்டுரை.
 

'அம்மா என்றழைக்காத உயிரில்லையே...அம்மாவை வணங்காது உயர்வில்லையே!'



இளைஞர் பாசறையில் சேர்ந்த இளைஞன் துவங்கி, ஜெ.,வுக்கும் மூத்த 75 வயது பழுத்த அரசியல்வாதி வரை, அனைவரும் அன்போடு, 'அம்மா' என்று அழைத்த காரணத்தால், ஜெயலலிதா என்ற பெயரே மறைந்து போய், 'அம்மா' என்ற பெயரே நிலைத்துப் போனது. அதற்கேற்ப, தனது பேச்சிலும், பிரசாரத்திலும் தன்னை தாயாகவே வர்ணித்துக் கொண்டார் ஜெயலலிதா.'ஒரு தாய்க்கு தான், தன் குழந்தைக்கு என்ன வேண்டுமென்று தெரியும்' என, கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடைக்கு மேடை ஜெ., பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது.
அன்புக்குரிய அந்த 'அம்மா' ஆறே மாதங்களில் இறந்து போனதை, உண்மைத் தொண்டன் யாராலும் இப்போது வரை ஜீரணிக்க முடியவில்லை. அவனது நெஞ்சுக்குள்ளே நெருஞ்சியாய் குத்திக் கொண்டே இருக்கிறது, ஒரு வருத்தம். சாதாரண ஓர் ஏழை நோயாளி, அரசு மருத்துவமனையில் தரும் இலவச மருந்தை வாங்கிச் சாப்பிட்டே, வயதான காலத்திலும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும்போது, இத்தனை செல்வமும், செல்வாக்கும் இருந்த நம் 'அம்மா'வுக்கு ஏன் இந்த வயதில் மரணம் வந்தது என்ற வேதனை அது.
இந்த மரணத்துக்கு அடிப்படைக் காரணமாக, அவன் கண் முன்னே வந்து நிற்பது, அந்த சொத்துக்குவிப்பு வழக்கு. இந்த வழக்கில் தரப்பட்ட சிறைத்தண்டனைக்குப் பின்பே, அவரது உடலும், மனதும் உருக்குலைந்து போனதாக அந்த தொண்டன் நினைப்பதில் நிறையவே யதார்த்தமும், உண்மையும் இருக்கிறது.
இப்படி ஒரு நிலைக்கு அவரைத் தள்ளிய அந்த சொத்துக்களின் மீது, ஒவ்வொரு தொண்டனுக்கும் உள்ளூர ஒரு வெறுப்பும் உள்ளது. இப்போதைய அவனது மூளையைக் குடைந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி,
நம் 'அம்மா'வின் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்த அந்த சொத்தெல்லாம் யாருக்குப் போகும் என்பது தான்.ஜெயலலிதாவுக்கென்று தனியாக குடும்பம் எதுவும் கிடையாது. கழகத்தையே தனது குடும்பமாக நினைப்பதாக அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டதுண்டு. அப்படிப் பார்க்கையில், அவரது சொத்து எல்லாமே, அவர் குடும்பமாக நினைத்த கட்சிக்கு தான் போய்ச் சேர வேண்டும். அதற்கான உயில் எதையும் அவர் எழுதி வைத்திருக்கிறாரா, இந்த சொத்துக்களின் வாரிசு யார் யார் என்பதற்கெல்லாம் யார் பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

 

Tamil_News_large_1683213_318_219.jpg

அ.தி.மு.க.,வின் அடிமட்டத் தொண்டனுக்கு, ஜெ., மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, எதிர்க்கட்சியினர் போட்ட பொய் வழக்காகத்தான் இன்று வரை நினைவில் இருக்கிறது. ஆனால், அந்த வழக்கில் குறிப்பிடப்பட்ட சொத்துக்கள் அத்தனையும், ஜெ., பெயரிலும், அவருடன் இருந்த சசிகலா, இளவரசி மற்றும் சிறிது காலம் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரன் பெயரிலும் தான் இருந்தன என்பது நினைவில் இருக்க வாய்ப்பு குறைவு.
ஒன்று இரண்டில்லை... மொத்தம் 306 சொத்துக்கள் அதில் பட்டியலிடப்பட்டன. அதன் மொத்த மதிப்பு (காண்க: பட்டியல்) இன்றைக்கு எத்தனை கோடிகளைத் தாண்டும் என்பதை யாராலும் கற்பனை செய்யவே முடியாது. சொத்துக் குவிப்பு வழக்கின் முடிவு, எப்படி வேண்டுமானாலும் வரலாம். அது அரசுடமை ஆகாதபட்சத்தில், அவை அனைத்தும் தனது காலத்துக்குப் பின், தனது தொண்டர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் உதவிட, தனது சொத்து பயன்பட வேண்டுமென்று அவர் நினைத்திருக்கலாம்.
அவரது எண்ணம் என்னவென்று தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு, அவரது வழக்கறிஞர்களுக்கும், தணிக்கையாளர்களுக்கும் உள்ளது.'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்பதே, ஜெ., தனது கடைசிக் காலத்தில் அதிகமாய் உச்சரித்த வார்த்தை. அப்படி என்றால், அவரது சொத்துக்களும் மக்களுக்குச் சேர்வதே, அவரது ஆன்மாவை சாந்திப்படுத்தும்.

ஒரு வேளை, தனக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாக இருந்தவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தனது சொத்து போய்ச் சேர வேண்டுமென்று அவர் நினைத்து இருந்தாலும், அதையும் வெளியில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் இவர்களுக்கு இருக்கிறது.'அம்மா'வாக தொண்டர்கள் நினைத்த ஜெயலலிதாவின் சொத்துக்கள்,
அவரது உறவினருக்கா, குழந்தையாக நினைத்த தொண்டர்களுக்கா, குடும்பமாக நினைத்த கழகத்துக்கா அல்லது அவரை இந்த ஊழலில் விழவைத்து, சிறையில் தள்ளிய ஏதோ ஒரு கூட்டத்துக்கா?
தொண்டர்களிடம் சில எதிர்பார்ப்புகளும், பல கேள்விகளும் இருக்கின்றன... பதில் யாரிடம் இருக்கிறது?

1. சென்னை போயஸ் தோட்டம்-, கதவு எண்: 36ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்.
2. ஹைதராபாத், ஸ்ரீநகர் அலுவலர் காலனியில், 651.18 சதுர மீட்டர் கட்டடம்.
3. ஹைதராபாத் அருகிலுள்ள ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம். (11.35 ஏக்கர்)
 


4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3ல் 3.15 ஏக்கர் நிலம்.
5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.
6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவு எண்: 19ல் நிலமும், கட்டடமும்.
7. சென்னை, சாந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.
8. சென்னை, அண்ணா சாலையில், 602ம் இலக்கத்தில் கடை எண்.14.
9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5, கதவு எண்:14ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.
10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவு எண்: 213பி---யில் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)
11. சென்னை, அண்ணா சாலை, எண் 602ல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656ல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் மயிலாப்பூர் கிராமத்தில் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் 1,756 சதுர அடி நிலம்.
12. தஞ்சாவூர், மானம்பூ சாவடி சர்வே எண். 1091ல் 2,400 சதுர அடி நிலமும், கட்டடமும்.
13. தஞ்சாவூர் நகரம், 6வது வார்டு, டவுன் சர்வே எண். 1091ல் 51 ஆயிரம் சதுர அடி காலிமனை.
14. தஞ்சாவூர் நகரம், மானம்பூ சாவடி, பிளேக் சாலையில் டவுன் சர்வே 1019ல் 8,970 சதுர அடி காலி மனை.
15. திருச்சி, பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமம் டவுன் சர்வே எண். 107ல் 3,525 சதுர அடி நிலமும், கட்டடமும்.
16. தஞ்சை மாவட்டம், சுந்தரகோட்ட கிராமம், சர்வே எண். 402/2ல் 3.23 ஏக்கர் புஞ்செய் நிலம்.
17. சென்னை, கிண்டி, திரு.வி.க.,
தொழிற்பேட்டையில் சர்வே எண். 55,56ல் 5,658 சதுர அடி நிலமும், கட்டடமும்.
18. சென்னை மயிலாப்பூர் கிராமம், ஆர்.எஸ். எண். 1567/1ல் ஒரு கிரவுண்ட், 1407 சதுர அடி நிலமும், கட்டடமும்.
19. மன்னார்குடி, சர்வே எண். 93, 94 மற்றும் 95 ஆகியவற்றில் மொத்தம் 25,035 சதுர அடி நிலமும், கட்டடமும்.
20. சென்னை, பரங்கிமலை கிராமம், டி.எஸ். எண். 4535ல் 4604.60 சதுர அடி மனையும், கட்டடமும் மற்றும் திரு.வி.க. தொழிற்பேட்டையில் மனை எண். எஸ். 7.
21. சென்னை, காதர் நவாஸ்கான் சாலை, கதவிலக்கம் 14ல் பிரிவினை செய்யப்படாத 11 கிரவுண்ட், 1,736 சதுர அடி நிலமும், கட்டடமும் மற்றும் நுங்கம்பாக்கம் கிராமம் ஆர்.எஸ். எண். 58 மற்றும் புதிய ஆர்.எஸ். எண். 55/5ல் 523 சதுர அடி கட்டடம்.
22. செகந்தராபாத் கண்டோன்மென்ட் அஞ்சையா தோட்டம், கதவு எண்: 16ல் 222.92 சதுர மீட்டர் நிலமும், கட்டடமும்.
23. கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை சர்வே எண். 86, 87, 88, 89, 91, 92 மற்றும் 93 ஆகியவற்றில் 12,462.172 சதுர அடி நிலமும், கட்டடமும்.
24. சென்னை, அண்ணாநகர், மனை எண். எல்.66, இளவரசிக்காக வாங்கப்பட்டது, - மதிப்பு, 2 லட்சத்து 35 ஆயிரத்து 813 ரூபாய்.
25. சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டையில் 0.63 ஏக்கர் நிலமும், 495 சதுர அடி ஆர்.சி.சி. மேற்கூரை கட்டடமும்; ஆலந்துார் கிராமம் சர்வே எண். 89ல் 1,155 சதுர அடி ஏ.சி.சி. மேற்கூரை கட்டடம்.
26. சென்னை, மயிலாப்பூர் கிராமம், கிழக்கு அபிராமபுரம், மூன்றாவது தெரு கதவிலக்கம் 18ல் ஒரு கிரவுண்ட் 1,475 சதுர அடி நிலமும் கட்டடமும்.
27. செய்யூர் கிராமம், சர்வே எண். 366/4 மற்றும் 366/1 ஆகியவற்றில் 4.90 ஏக்கர் புஞ்சை நிலம்.
28. செய்யூர் கிராமம், சர்வே எண். 365/3ல் 3.30 ஏக்கர் புஞ்சை நிலம்.
29. செய்யூர் கிராமம், சர்வே எண். 365/1ல் 1.65 ஏக்கர் புஞ்சை நிலம்.
30. செய்யூர் கிராமம், சர்வே எண். 362/2ல் 2.25 ஏக்கர் புஞ்சை நிலம்.
31. சென்னை 106ல் மகா சுபலெட்சுமி திருமண மண்டபம்.
32. நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஜெம்ஸ் கோர்ட் ஆர்.எஸ். எண். 58/5ல் மொத்தம் 11 கிரவுண்ட், 1,736 சதுர அடி மனையில் 72/12000 பங்கு.
33. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், உள்வட்டச்சாலையில் ஆஞ்சனேயா பிரின்டர்ஸ்.
34. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180ல் 4.41 ஏக்கர் புஞ்சை நிலம்.
35. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 3ல் 1.42 ஏக்கர் புஞ்சை நிலம்.
36. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்சை நிலம்.
37. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 11 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்சை நிலம்.
38. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்சை நிலம்.
39. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்சை நிலம்.
40. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்சை நிலம்.
41. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்சை நிலம்.
42. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்சை நிலம்.
43. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்சை நிலம்.
44. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்சை நிலம்.
45. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்சை நிலம்.
46. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்சை நிலம்.
47. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்சை நிலம்.
48. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 41 சென்ட் புஞ்சை நிலம்.
49. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 364ல் 63 சென்ட் புஞ்சை நிலம்.
50. நீலாங்கரை கிராமம், மனை எண். 7ல் 4,802 சதுரஅடி மனையும் கட்டடமும்.
51. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள ஒரு கிரவுண்ட் 1,086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
52. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள ஒரு கிரவுண்ட் 1,086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
53. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள ஒரு கிரவுண்ட் 1,086சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
54. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள ஒரு கிரவுண்ட் 1,086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.
55. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள ஒரு கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு. (51 முதல் 56 வரையிலான சொத்துக்கள், வெவ்வேறு உரிமையாளர்களிடமிருந்து தனித்தனியாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.)

 

56. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 392/1, 2ல் 1.50 ஏக்கர் நிலம்.
57. சர்வே எண். 346/1 பி மற்றும் சில சர்வே எண்களில் 10 ஏக்கர், 41 சென்ட் நிலம்.
58. செய்யூர் கிராமம், சர்வே எண். 364/8, 364/3, 364/9 ஆகியவற்றில் 2.02 ஏக்கர் புஞ்சை நிலம்.
59. செய்யூர் கிராமம், சர்வே எண். 364ல் 54 சென்ட் புஞ்சை நிலம்.
60. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 345/3பி மற்றும் சில சர்வே எண்களில், 11 ஏக்கர் 83 சென்ட் நிலம்.
61. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண், 48/2 மற்றும் சிறுதாவூர் கிராமம் சர்வே எண். 383 முதல் 386 வரை மற்றும் 393 ஆகியவற்றில் மொத்தம், 11 ஏக்கர் 28 சென்ட் நிலம்.
62. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 392/1 மற்றும் சில சர்வே எண்களில், 10 ஏக்கர் 86 சென்ட் நிலம்.
63. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 379 மற்றும் சில சர்வே எண்களில், 10.7 ஏக்கர் நிலம்.
64. இதில், 10.7 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேலும் அதிகத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.
65. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 339/1 ஏ மற்றும் சில சர்வே எண்களில், ஏழு ஏக்கர் 44 சென்ட் நிலம்.
66.சென்னை டி.டி.கே. சாலை, கதவு எண்: 149ல் 2 கிரவுண்ட் மற்றும் 1230 சதுர அடி நிலமும் கட்டிடமும்.
67. சென்னை, டி.டி.கே. சாலை, ஸ்ரீராம் நகர், சர்வே எண். 3705ல் ஒரு பகுதி.
68. ஈஞ்சம்பாக்கம் சர்வே எண். 18/4 ஏ 1ல் 1.29 ஏக்கர் நிலம்.
69. சோளிங்கநல்லுார் கிராமம், சர்வே எண். 1/17ல் 16.75 சென்ட் நிலம்.
70. சென்னை, அடையார், கதவு எண்:189ல் 6.75 சென்ட் மனை.
71. சென்னை, அடையார், கதவு எண்:189ல் 16.50 சென்ட் மனை.
72. காயத்ரி சந்திரன் என்பவருக்கு, 5,30,400 ரூபாய்க்கு தரப்பட்ட டிமான்ட் டிராப்ட் மற்றும் 3.35 லட்சம் ரூபாய் ரொக்கம்.
73. சோளிங்கநல்லுார் ஆர்.எஸ்.ஓ. எண். 1/1 எப் மற்றும் 1/104 ஆகியவற்றில் 16.75 சென்ட் மனை.
74. கே.டி. சந்திரவதனன் என்பவருக்குக் கொடுக்கப்பட்ட 2,35,200 ரூபாய் மதிப்புள்ள டிமான்ட் டிராப்ட் மற்றும் 3.35 லட்சம் ரூபாய் ரொக்கம்..
75. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக ஆறு கிரவுண்ட் 1,087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
76. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக ஆறு கிரவுண்ட் 1,087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
77. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக ஆறு கிரவுண்ட் 1,087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
78. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக ஆறு கிரவுண்ட் 1,087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை. (75 முதல் 78 வரை தனித்தனியாகப் பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன)
79. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 403/3 மற்றும் 401/2 ஆகியவற்றில் 3.30 ஏக்கர் நிலம்.
80. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/88ல் 34 சென்ட் நிலம்.
81. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/7 பி-யில் 34 சென்ட் நிலம்.
82. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/9 ஏ -யில் 34 சென்ட் நிலம்.
83. சென்னை, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் கதவு எண்:98/99ல், 10 கிரவுண்ட் 640 சதுர அடி பரப்பிலான இடத்தில் பிரிக்கப்படாத பங்காக 880/72000
84. தியாகராய நகர் கிராமம், சர்வே எண். 5202ல் 4,800 சதுர அடி மனையும் கட்டடமும்.
85. சோளிங்கநல்லுார் கிராமம், சர்வே எண். 1/105ல் ஐந்து கிரவுண்ட் மனை மற்றும் மனை எண்கள் 40, 41 ஆகியவற்றில் 900 சதுர அடி மனையும், கட்டடமும்.
86. சேரகுளம் கிராமம், சர்வே எண். 436/6 மற்றும் பல சர்வே எண்களிலும் வல்லகுளம் கிராமம், சர்வே எண். 188/3 மற்றும் 221/1 ஆகியவற்றிலும் மொத்தம், 53 ஏக்கர் 66 சென்ட் நிலம்.
87. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 43/2ல் 3 ஏக்கர் 51 சென்ட் நிலம்.
88. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 46ல் 4 ஏக்கர் 52 சென்ட் நிலம்.
89. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 45ல் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.
90. கருங்குழி பள்ளம் கிராமத்தில் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.
91. திருவேங்கடநகர் காலனி சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து.
92. திருவேங்கடநகர் காலனி சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து. (பத்திரத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டுள்ளது).
93. வெட்டுவாங்கேணி & ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் சர்வே எண். 165/9 பி-யில் 37 சென்ட் நிலம்.
94. சென்னை, டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 150ல் 2 கிரவுண்ட் 733 சதுர அடி நிலமும், கட்டடமும்.
95. பையனூர் கிராமம், சர்வே எண். 392/6 மற்றும் சில சர்வே எண்களில், 5.80 ஏக்கர் நிலம்.
96. பையனுார் கிராமம், சர்வே எண். 391/1 மற்றும் சில சர்வே எண்களில், 3.52 ஏக்கர் நிலம்.
97. பையனுார் கிராமம், சர்வே எண். 384/1 மற்றும் சில சர்வே எண்களில், 5.28 ஏக்கர் நிலம்.
98. பையனுார் கிராமம், சர்வே எண். 383ல் 40 சென்ட் நிலம்.
99. பையனுார் கிராமம், சர்வே எண். 383ல் 40 சென்ட் நிலம்.
100. பையனுார் கிராமம், சர்வே எண். 403/1ல் 2.76 ஏக்கர் நிலம்.

தொடர்ச்சி நாளை......

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683213

  • தொடங்கியவர்
குத்துமதிப்பாய் ஜெ.,யின் சொத்து மதிப்பு!
 
 
 

'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்பதே ஜெ., சமீபமாய் அதிகமாய் உச்சரித்த வார்த்தை. அப்படி என்றால், அவருடைய சொத்துக்களும், மக்களுக்கு தானே சேர வேண்டும்!

 

Tamil_News_large_1683642_318_219.jpg

101. பையனுார் கிராமம், சர்வே எண். 379/2ல் மற்றும் 379/3 ஆகியவற்றில் 4.23 ஏக்கர் நிலம்.
102. பையனுார் கிராமம், சர்வே எண். 381/9 மற்றும் 392/2 ஆகியவற்றில் 51 சென்ட் நிலம்.
103. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.
104. ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18ல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும்.
105. சேரகுளம் கிராமம், சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில், 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.
106. சேரகுளம் கிராமம், 406/2 மற்றும் பல சர்வே எண்களில், 69.78 ஏக்கர் நிலம்.
107. சேரகுளம் கிராமம், சர்வே எண். 486 மற்றும் பல சர்வே எண்களில், 60 ஏக்கர், 65.5 சென்ட் நிலம்.
108. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 823/9 மற்றும் பல சர்வே எண்களில், 42.31 ஏக்கர் நிலம்.
109. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 221/4 மற்றும் பல சர்வே எண்களில், 34 ஏக்கர் 81.5 சென்ட் நிலம்.
110. சோளிங்கநல்லுார் கிராமம் சர்வே எண். 2/1பி, 3 ஏ ஆகியவற்றில் 50 சென்ட் நிலம்.
111. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 701/2 மற்றும் பல சர்வே எண்களில், 12.70 ஏக்கர் நிலம்.
112. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 685 மற்றும் பல சர்வே எண்களில், 14.42 ஏக்கர் நிலம்.
113. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 136/1 மற்றும் பல சர்வே எண்களில், 8.6 ஏக்கர் நிலம்.
114. கலவை கிராமம், சர்வே எண். 386/2 மற்றும் சில சர்வே எண்களில், 6.98 ஏக்கர் நிலம்.
115. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 682/6 மற்றும் 203/6 ஆகியவற்றில் 55 ஏக்கர் நிலம்.
116. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 224/4பி, மற்றும் 204/2 ஆகியவற்றில் 57.01 ஏக்கர் நிலம்.
117. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 221/3 மற்றும் 217/8 ஆகியவற்றில் 89.62 ஏக்கர் நிலம்.
118. சேரகுளம் கிராமம், சர்வே எண். 470/3 மற்றும் சில சர்வே எண்களில், 80.95 ஏக்கர் நிலம்.
119. சேரகுளம் கிராமம், சர்வே எண். 262/10 மற்றும் சில சர்வே எண்களில், 71.57 ஏக்கர் நிலம்.
120. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 374/1 மற்றும் சில சர்வே எண்களில், 68.09 ஏக்கர் நிலம்.
121. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 832/1 மற்றும் சில சர்வே எண்களில் 78.09 ஏக்கர் நிலம்.
122. சென்னை, தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6,794ல் 4,293 சதுர அடி மனையும், கட்டடமும்.
123. சென்னை, தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6,794ல் 3,472 சதுர அடி மனையும், கட்டடமும்.
124. சேரகுளம் கிராமம், சர்வே எண். 252 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 48.95 ஏக்கர் நிலம்.
125. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 62 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 54.98 ஏக்கர் நிலம்.
126. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 830/5 மற்றும் பல சர்வே எண்களில்; சேரகுளம் கிராமம், சர்வே எண். 1,30,823/9 ஆகியவற்றில் மொத்தம் 62.65 ஏக்கர் நிலம்.
127. வண்டாம்பாளை கிராமத்தில், ராமராஜ் அக்ரோ மில்லுக்கு சொந்தமான 6 லட்சத்து 14 ஆயிரம் பங்குகளை காந்தி மற்றும் பலரிடம் இருந்து வாங்கியது.
128. வண்டாம்பாளை கிராமத்தில், சர்வே எண். 79ல் 3.11 ஏக்கர் நிலம்.
129. வண்டாம்பாளை கிராமம், சர்வே எண். 80, 88/1 ஆகியவற்றில் 4.44 ஏக்கர் நிலம்.
130. கீழக்கவத்துக்குடி கிராமம் சர்வே எண். 81/1, 2 ஆகியவற்றில் 1.31 ஏக்கர் நிலம்;
வண்டாம்பாளை கிராமம் சர்வே எண். 84/1ல் 5.19 ஏக்கர் நிலம்.
131. வண்டாம்பாளை கிராமம், மற்றும் கீழக்கவத்துக்குடி கிராமம் ஆகியவற்றில் சர்வே எண். 77/1 பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.91 ஏக்கர் நிலம்.
132.வண்டாம்பாளை கிராமம் சர்வே எண். 81/4ல் 3.84 ஏக்கர் நிலம்.
133. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 597/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6 ஏக்கர் நிலம்.
134. மெடோ ஆக்டோ பார்ம்ஸ் பெயரில் சர்வே எண் 650/1 மற்றும் சில சர்வே எண்களில் 11.66 ஏக்கர் நிலம்.
135. வண்டாம்பாளை கிராமம், சர்வே எண். 78/1 மற்றும் சில சர்வே எண்களில், 8.10 ஏக்கர் நிலம்.
136. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 596/6 மற்றும் சில சர்வே எண்களில், 9.65 ஏக்கர் நிலம்.
137. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 336/12 மற்றும் பல சர்வே எண்களில், 10.29 ஏக்கர் நிலம்.
138. சேரகுளம் கிராமம், சர்வே எண் 260/5 மற்றும் சில சர்வே எண்களில், 16.51 ஏக்கர் நிலம்.
139. வெள்ளகுளம் கிராமம், சர்வே எண். 199/4 மற்றும் பல சர்வே எண்களில் 30.75 ஏக்கர் நிலம்.
140. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 385/3 மற்றும் பல சர்வே எண்களில், 51.40 ஏக்கர் நிலம்.
141. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 535/20 மற்றும் பல சர்வே எண்களில், 59.82 ஏக்கர் நிலம்.
142. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 351/7 மற்றும் சில சர்வே எண்களில், 8.32 ஏக்கர் நிலம்.
143. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 334/1 மற்றும் சில சர்வே எண்களில், 8.65 ஏக்கர் நிலம்.
144. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/2 ஏ 2ல் 1.08 ஏக்கர் நிலம்.
145. நிலம் வாங்கியதற்காக சிப்காட் நிறுவனத்திற்கு 23.11.1995 அன்று 7 லட்சத்து

23 ஆயிரத்து 806 ரூபாய்; 20.1.1996 அன்று 3 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய்; 6.4.1996 அன்று 4 லட்சம் ரூபாய், ராமராஜ் அக்ரோ மில் நிறுவனத் தால் கொடுக்கப்பட்டுள்ளது.
146. வண்டாம்பாளை ராமராஜ் அக்ரோ மில்ஸ் வளாகத்தில், வேலை செய்பவர்களுக்காக வீடுகள் கட்டிய வகையில் செலவு செய்யப்பட்டதொகை 57 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்.
147. வண்டாம்பாளை ராமராஜ் அக்ரோ மில்ஸ் வளாகத்தில் நிர்வாக இயக்குனருக்காக மாளிகை மற்றும் அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக் காக வீடுகள் கட்டியதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 83 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்.
148. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/2 ஏ 1ல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
149. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/1ல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
150. லெக்ஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்திற்காக பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் செலுத்தப்பட்ட தொகை 10 லட்சம் ரூபாய்.
151. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 611/2ல் மொத்தம் 11.25 ஏக்கர் நிலம்.
152. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 577/ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.40 ஏக்கர் நிலம்.
153. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ- யில் உள்ள மொத்தம், 5 கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)
154. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண். 334/1ஏ- யில் உள்ள ஐந்து கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப் படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (இளவரசி பெயரில்)
155. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ- யில் உள்ள மொத்தம், 5 கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சசிகலா பெயரில்)
156. சென்னை லஸ் அவென்யூசர்வே எண் 334/1ஏ- யில் உள்ள மொத்தம், 5 கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெ.எஸ்., வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில்)
157. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ- யில் உள்ள ஐந்து கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப் படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஆஞ்சனேயா பிரின்டர்ஸ் பெயரில்)
158. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ- யில் உள்ள ஐந்து கிரவுண்ட் 1,133 சதுர அடி பிரிக்கப் படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் பெயரில்)
159. லஸ் அவென்யூ, சொத்து வாங்குவதற்காக செலவிடப்பட்டது 76 லட்சம் ரூபாய்.
160. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1ல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.
161. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1யில் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.
162. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/ பகுதி மற்றும் இரண்டு சர்வே எண்களில் 3,197 சதுர அடி மனை.
163. தஞ்சாவூர் வ.உ.சி. நகர், டவுன் சர்வே எண். 3,077 மற்றும் 3,079ல் 26,540 சதுர அடி மனை மற்றும் கட்டடம்.
164. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 239/9 மற்றும் பல சர்வே எண்களில் ஏழு ஏக்கர் 11.5 சென்ட் நிலம்.
165. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 591/2 மற்றும் பல சர்வே எண்களில் 15.71 ஏக்கர் நிலம்.
166. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 9,00 ஏக்கர் கோடநாடு டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி.
167. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 324 மற்றும் சில சர்வே எண்களில் 9.50 ஏக்கர் நிலம்.
168. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப்-யில் 210.33 ஏக்கர் நிலம்.
169. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப். டி. மற்றும் சில சர்வே எண்களில் 20.89 ஏக்கர் நிலம்.
170. பையனுார் கிராமத்தில் சர்வே எண். 385/12 மற்றும் சில சர்வே எண்களில், 2.03 ஏக்கர் நிலம்.
171. பையனுார் கிராமத்தில் சர்வே எண். 385/7 மற்றும் சில சர்வே எண்களில், 2.34 ஏக்கர் நிலம்.
172. பையனுார் கிராமத்தில் சர்வே எண். 386/15 மற்றும் சில சர்வே எண்களில், 90 சென்ட் நிலம்.
173. கடலுாரில் இண்டி-டோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்காக, செலவிட்ட தொகை 86 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்.
174. சென்னை, நீலாங்கரை, ராஜா நகரில் கதவிலக்கம் 4/130ல் கூடுதல் கட்டடம் கட்டிய வகையில் செலவு செய்த தொகை 80 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.
175. சென்னை, நீலாங்கரை கிராமம் சர்வே எண். 94யில் 11 ஆயிரத்து 197 சதுர அடி நிலம்.
176. பையனுார் பங்களாவில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.
177. சென்னை, கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ஆஞ்சனேயா பிரின்டர்ஸ் நிறுவனத்திற்காக புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பியதற்காக செலவிடப்பட்ட தொகை, இரண்டு கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 ரூபாய்.
178. சென்னை வெட்டுவாங்கேணி கதவிலக்கம் 3/178 சி -யில் உள்ள குடியிருப்புக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் ஒரு கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 76 ரூபாய்.
179. ஆந்திரப் பிரதேசம், ஜிடிமெட்லா எல்லைக்கு உட்பட்ட பண்ணை வீட்டில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில், ஆறு கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து 901 ரூபாய்.
180. சிறுதாவூர் கிராமத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை, ஐந்து கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 ரூபாய்.
181. சென்னை போயஸ் கார்டன் கதவிலக்கம் 36ல் உள்ள வீட்டுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவிட்ட தொகை, ஏழு கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்.
182. சென்னை, டி.டி.கே. சாலை எண். 149 மற்றும் எண். 150ல் உள்ள கட்டடத்திற்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்.
183. சென்னை, சோளிங்கநல்லுார், எண். 2/1யில் உள்ள பி.3 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 80 லட்சத்து 36 ஆயிரத்து 868 ரூபாய்.
184. சென்னை மயிலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண். 19ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.
185. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல்கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.
186. சென்னை அண்ணாநகர் எண் எல்./66ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.
187. சென்னை தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் ஐந்தில் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.

 

188. புதிய மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண். 1/240ல் உள்ள வளாகத்திற்கு கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.
189. சென்னை, அக்கறை, மர்பி தெரு எண் 1ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.
190. சென்னை கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டை, கணபதி காலனி, சர்வே எண். 32.2.4யில் மனை எண். எஸ். 7ல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
191. சென்னை, கிண்டி, பணிமனை எம்.எப்.-9 யில் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய்.
192. வ.உ.சி., மாவட்டம், சேரன்குளம் கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும் 467/2 ஆகியவற்றில் கட்டடம், கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை 7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.
193. இளவரசியின் மகன் மாஸ்டர் விவேக் பெயரில் 12.9.1994 அன்று அபிராமபுரம் இந்திய வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு எண். 4,110ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 211 ரூபாய் 50 பைசா.
194. ஜெ., மற்றும் இளவரசி பெயர்களில் அபிராமபுரம், இந்தியன் வங்கி கிளையில், 23.11.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 20 பைசா.
195. என்.சசிகலா பெயரில் அபிராமபுரம், இந்தியன் வங்கிக் கிளையில், 11.3.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 771 ரூபாய் 26 பைசா.
196. ஜெ., மற்றும் இளவரசி பெயர்களில், சென்னை, அபிராமபுரம் கிளையில் 31.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 85 ஆயிரத்து 342 ரூபாய் 25 பைசா.
197. சுதாகரன் பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 30.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 221 ரூபாய்.
198. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 12.10.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 19 லட்சத்து 29 ஆயிரத்து 561 ரூபாய் 58 பைசா.
199. ஜெ., மற்றும் இளவரசி பெயர்களில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 28.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ரூபாய் 95 பைசா.
200. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 16.4.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 70 ஆயிரத்து 570 ரூபாய் 13 பைசா.
 

குத்துமதிப்பாய் ஜெ.,யின் சொத்து மதிப்பு!


கடந்த, 2016 சட்டசபைத் தேர்தலில், ஆர்.கே., நகர் தொகுதியில், ஜெ., வேட்புமனு தாக்கல்
செய்தபோது, அவர் கொடுத்த தகவலின்படி, அவரிடம் இருந்த கையிருப்பு ரொக்கம், 41 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

ஜெயலலிதாவுக்கு, சென்னை, செகந்திராபாத், நீலகிரி ஆகிய இடங்களில், 25 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனக் கணக்குகள் உள்ளன. அவற்றில், ஒரு சில வங்கிகளில் ஐந்து கணக்குகள் வரை இருக்கின்றன. சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக, ஒன்பது கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. மொத்த முள்ள, 25 கணக்குகளில், மொத்தமாக, 10.63 கோடி ரூபாய் இருந்தது.

ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைஸஸ், கோடநாடு எஸ்டேட், ராயல்வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட் ஆகிய ஐந்து கம்பெனிகளில், பங்குதாரராக அவருக்கு இருந்த சொத்தின் மதிப்பு, மொத்தம், 27.44 கோடி ரூபாய். அவர் தந்துள்ள தகவலின்படி, 21,280.300 கிராம் தங்க நகையும், 3.12 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,250 கிலோ வெள்ளிப்பொருட்களும் அவரிடம் இருந்தன. தன்னிடம் ஒன்பது வாகனங்கள் இருப்பதாகக் கூறி, அதன் பட்டியலையும் அவர் கொடுத்திருந்தார்; அவற்றின் மொத்த மதிப்பு, 42.25 லட்சம் ரூபாய்.

வேட்புமனுவில், ஜெ., தாக்கல் செய்த கணக்கில் இருந்தவை இவை. டி.என் 09 பி.இ., 5969 என்ற பதிவு எண் கொண்ட, 'டொயோட்டோ லேண்ட் குரூசர் எல்.சி., 200' மாடல் காரையும், டிஎன் 09 பிஇ 6167 என்ற பதிவு எண் கொண்ட இன்னொரு காரையும் ஜெ., பயன்படுத்தி வந்தார். அவற்றை, இந்த வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. அந்த கார் ஒன்றின் விலை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம்.

அசையா சொத்துக்களில், ஆந்திர மாநிலம் ஜிடிமேட்லாவில், 14.44 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14.50 ஏக்கர் விவசாய நிலமும், செய்யூரில், 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3.43 ஏக்கர் விவசாய நிலமும், ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில், 5.03 கோடி ரூபாய் மதிப்புள்ள, 651.18 ச.மீ வீடும், சென்னை மந்தைவெளியில், 43.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1,206 சதுர அடியுள்ள வணிக கட்டடமும், சென்னை பார்சன் மேனரில், 4.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 790 ச.அடி வணிக கட்டடமும் ஜெயலலிதா பெயரில் உள்ளன.

இவை தவிர போயஸ் கார்டனில் இரண்டு இடங்கள், ஜெயலலிதா பெயரில் இருக்கின்றன. மொத்தம், 7.83 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 கிரவுண்ட் வீடும், 43.96 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, 10 கிரவுண்ட் வீடும் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த அசையா சொத்துக் களின் மொத்த மதிப்பு, 72.09 கோடி ரூபாய்.

ஒட்டு மொத்தமாக, அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு மட்டும், 113 கோடி ரூபாய். இந்த சொத்துக் களின் சந்தை மதிப்பைக் கணக்கிட்டால், பல மடங்கு அதிகமாக இருக்கும். பல்வேறு கம்பெனிகளில் பங்குதாரராக ஜெயலலிதா இருப்பது தொடர்பான விபரங்கள், இந்த வேட்பு மனுவில் குறிப்பிடப்படவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா, பையனுார் பங்களா என அதன் பட்டியல் வெகு நீளம். குத்துமதிப்பாய் ஜெ., சொத்து மதிப்பை, மொத்தமாய் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், சத்தியமாய் தலை சுற்றிப் போகும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1683642

  • தொடங்கியவர்
ஜெ., சொத்து... யாருக்கு: நிறைவுப் பகுதி
 
 
 

'ஜெ., சொத்து யாருக்கு?' என்ற தலைப்பில், கடந்த இரு நாட்களாக வெளியான முழுப்பக்க
கட்டுரை, சொத்துக் குவிப்பு வழக்கில், தாக்கலான சொத்துப்பட்டியலில் இடம் பெற்றிருந்த 200 சொத்து விபரங்களைக் கூறியது.
அந்த பட்டியலில் மீதமுள்ள விபரங்களையும், வழக்கின் எதிர்காலம் குறித்து சட்ட நிபுணர்கள் சொல்வதையும், அரசியல் தலைவர்கள், தங்களுடைய சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துள்ள முன் உதாரணங்களையும் தெளிவு படுத்துகிறது, இன்றைய நிறைவுப்பகுதி...

 

Tamil_News_large_1684403_318_219.jpg

201. சசிகலா பங்குதாரராக உள்ள மெட்டல்கிங் நிறுவனத்தின் பெயரில், மயிலாப்பூரில் 10.11.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கில், 30.4.1996 அன்று ரொக்க இருப்பு, 2,900 ரூபாய் 28 பைசா.
202. சசிகலா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 1.12.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1,889 ரூபாய் 28 பைசா.
203. ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர் களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் 26.9.1990 அன்று கெல்லீஸ் கிளையில் இருந்து மயிலாப்பூர் கிளைக்கு மாற்றப்பட்ட கணக்கு எண். 2047ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 20 லட்சத்து 79 ஆயிரத்து 885 ரூபாய் 12 பைசா.
204. சசிகலா பெயரில் 23.5.1990 அன்று மயிலாப் பூர் வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 23218ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1,095 ரூபாய் 60 பைசா.
205. சசிகலா பெயரில் 2.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண் 1245யில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு மூன்று லட்சத்து 17 ஆயிரத்து 242 ரூபாய் 21 பைசா.
206. சுதாகரன் பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2220யில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 47 ஆயிரத்து 453 ரூபாய் 64 பைசா.
207. சுதாகரன் பெயரில் 1.12.1993 அன்று அண்ணாநகர், கிழக்குக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1689யில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்து 475 ரூபாய் 64 பைசா.
208. சுதாகரன் பெயரில் 25.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 24621ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 61 ஆயிரத்து 430 ரூபாய்.
209. ஜெயா பைனான்ஸ் பெயரில் 5.5.1995 அன்று அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1179யில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1, 760 ரூபாய்.
210. இளவரசி பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2219ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 18 ஆயிரத்து 198 ரூபாய்.
211. இளவரசி பெயரில் 23.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 25389ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 894 ரூபாய்.
212. சசிகலா பெயரில் 3.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2133ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 560 ரூபாய் 55 பைசா.
213. சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களில் 29.7.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2250ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 10 லட்சத்து 75 ஆயிரத்து 335 ரூபாய் 64 பைசா.
214. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பெயர்களில் 21.3.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2061ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 4 லட்சத்து 59 ஆயிரத்து 976 ரூபாய் 22 பைசா.
215. ஜெய் ரியல் எஸ்டேட் பெயரில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1050ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 55 பைசா.
216. சசிகலா மற்றும் சுதாகரன் பெயர்களில் 25.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1152ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 5 லட்சத்து 46 ஆயிரத்து 577 ரூபாய் 50 பைசா.
217. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரது பெயர்களில், 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1059 இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு ஆயிரத்து 838 ரூபாய்.
218. சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெ.எஸ். ஹவுசிங் கார்ப்பரேஷன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1062ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 13 ஆயிரத்து 671 ரூபாய் 80 பைசா.
219. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1058ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய் 70 பைசா.
220. சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1049ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய் 10,891.
221. ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயர்களில் 15.12.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1044ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.
222. சுதாகரன், இளவரசி மற்றும் சசிகலா ஆகியோர் பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1149ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.
223. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1146ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு, ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய் 10 பைசா.
224. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் 3.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1140ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு, ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய் 18 பைசா.
225. சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரது பெயர்களில், 13.9.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1113ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 358 ரூபாய் 70 பைசா.
226. இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரது பெயர்களில் 6.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1095ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2,916 ரூபாய் 61 பைசா.
227. ஜெயலலிதா பெயரில் 28.2.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 5158ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 5 ஆயிரத்து 152 ரூபாய் 6 பைசா.
228. ஜெயலலிதா பெயரில் 19.5.1989 அன்று சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் துவங்கிய கணக்கு எண்.20614ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு, மூன்று லட்சத்து 84 ஆயிரத்து 760 ரூபாய் 67 பைசா.
229. சசிகலா பெயரில் 29.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 23792ல், 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
230. ஜெயலலிதா பெயரிலான டாட்டா-சீரா கார் எண். டி.என். 01-எப்-0099 மதிப்பு 4 லட்சத்து ஆயிரத்து 131 ரூபாய்.
231. ஜெயலலிதா பெயரிலான மாருதி 800 கார் எண். டி.எம்.ஏ 2466 மதிப்பு 60 ஆயிரத்து 435 ரூபாய்.
232. ஜெயலலிதா பெயரிலான மாருதி ஜிப்சி கார் எண். டி.என். 09 பி. 4171 மதிப்பு, இரண்டு லட்சத்து 3 ஆயிரத்து 424 ரூபாய் 54 பைசா.
233. ஜெயலலிதா பெயரிலான டிராக்ஸ் ஜீப் எண். டி.எஸ்.ஜெ. 7299 மதிப்பு, ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்.
234. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் உள்ள டாட்டா-எஸ்டேட் கார் எண் டி.என்.01-எப்-0009 மதிப்பு, நான்கு லட்சத்து 6 ஆயிரத்து 106 ரூபாய்.
235. ஜெயலலிதா பெயரில் உள்ள ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.எஸ்.ஜெ. 9090 மதிப்பு 1 லட்சத்து 76 ஆயிரத்து 172 ரூபாய் 67 பைசா.
236. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் உள்ள ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 01-எச்-9999 மதிப்பு, மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 520 ரூபாய்.
237. ஜெயலலிதா பெயரிலான கண்டசா கார் எண். டி.என்.09-0033 மதிப்பு 2 லட்சத்து 56 ஆயிரத்து 238 ரூபாய்.
238. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரிலான டாட்டா - மொபைல் வேன் எண். டி.என்.01.க்யூ.0099 மதிப்பு, இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 169 ரூபாய்.
239. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரிலான மகேந்திரா அர்மடா சீப் எண். டி.என்.04.ஈ 0099 - மதிப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்து 250 ரூபாய்.
240. ஜெயலலிதா பெயரிலான டிராக்ஸ் ஜீப் எண். டி.எஸ்.ஜெ. 7200 - மதிப்பு, ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்.
241. சசிகலா பெயரிலான டாட்டா-சீரா கார் எண். டி.என். 04.எப்.9090 - மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரத்து 376 ரூபாய்.
242. ஜெயலலிதா பெயரிலான ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.எஸ்.ஆர். 333 மதிப்பு, நான்கு லட்சத்து ஆயிரத்து 131 ரூபாய்.
243. சசிகலா பெயரிலான டாட்டா - சீரா கார் எண். டி.என். 09 எச் 3559 - மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.
244. சசிகலா பெயரிலான டாட்டா - சீரா கார் எண். டி.என். 09 எச் 3496 - மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.245. சசி எண்டர்பிரைசஸ் பெயரிலான டெம்போ - டிராவலர் எண். டி.என். 01 எச் 1233 - மதிப்பு 4 லட்சத்து 24 ஆயிரத்து 268 ரூபாய்.
246. சசி எண்டர்பிரைசஸ் பெயரிலான டாட்டா - சுமோ எண்.டி.என். 07 எச் 0009 - மதிப்பு 3 லட்சத்து 15 ஆயிரத்து 537 ரூபாய்.

247.சசி எண்டர்பிரைசஸ் பெயரிலான மாருதி எஸ்டீம் கார் எண்.டி.என். 09 எப் 9207 - மதிப்பு 5 லட்சத்து 25 ஆயிரத்து 132 ரூபாய்.
248. சுதாகரன் பெயரிலான அசோக் லேலண்ட் கார்கோ வாகனம் எண்.டி.என். 09 எப் 9027 - மதிப்பு 5 லட்சத்து 5 ஆயிரத்து 9 ரூபாய்.
249. சுதாகரன் பெயரிலான டிராக்ஸ் ஜீப் எண். டி.என். 09 எப் 3744 - மதிப்பு 2 லட்சத்து 96 ஆயிரத்து 191 ரூபாய் 28 பைசா.
250. 'நமது எம்.ஜி.ஆர்.' பெயரில் பஜாஜ் டெலிவரி வேன் எண். டி.என். 07 டி 2342 - மதிப்பு 52 ஆயிரத்து 271 ரூபாய்.
251. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரிலான சுவராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 09 எச் 3541 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.
252. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரிலான சுவராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 09 எச் 3595 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.
253. மெட்டல் கிங் பெயரிலான மாருதி கார் எண். டி.என். 09 எப் 9036 - மதிப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 485 ரூபாய் 19 பைசா.
254. அ.தி.மு.க. தலைமை அலுவலகம், ஜெயலலிதா மற்றும் மெட்டல் கிங் பெயரில் பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் எண் - டி.என்.09 பி 6966 - மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.
255. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரிலான சுவராஜ் மஸ்தா வேன் எண்.
டி.என். 09 எச் 3586 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.
256. சென்னை ஏவியேஷன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் எண். டி.என். 09 பி 6565 -மதிப்பு 9 லட்சத்து 15 ஆயிரம்.
257. அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் மெட்டல் கிங் பெயரில், பஜாஜ்டெம்போ வேன் எண்.டி.என்.09பி 6975 - மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.
258. மயிலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டிபாசிட் திட்டத்தில், ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்பு தொகை 16 லட்சத்து 3 ஆயிரத்து 545 ரூபாய்.
259.மயிலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டிபாசிட் திட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 544 ரூபாய்.
260. மயிலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டிபாசிட் திட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை ஐந்து லட்சம் ரூபாய்.
261. மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை 71 ஆயிரத்து 218 ரூபாய்.
262. அபிராமபுரம் வங்கியில், 'சூப்பர் டூப்பர்' நிறுவனம் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.
263. அபிராமபுரம் வங்கியில், 'சூப்பர் டூப்பர்' நிறுவனம் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.
264. அபிராமபுரம் வங்கியில், 'சூப்பர் டூப்பர்' நிறுவனம் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.
265. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில், ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப்பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 47740)
266. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில், ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப்பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 48173)
267. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில், ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப்பட்ட நிரந்தர வைப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் (ரசீது எண். 48172)
268. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில், ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப்பட்ட நிரந்தர வைப்புத் தொகை மூன்று லட்சம் ரூபாய்.
269. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில், ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப்பட்டநிரந்தர வைப்புத் தொகை, 30 லட்சம் ரூபாய்.
270. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில், ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப்பட்ட நிரந்தர வைப்புத் தொகை, 15 லட்சம் ரூபாய்.
271. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில், ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப்பட்ட நிரந்தர வைப்புத் தொகை, ஐந்து லட்சம் ரூபாய்.
272. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில், ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.
273. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில், ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 10 லட்சம் ரூபாய்.
274. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில், ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை, 20 லட்சம் ரூபாய்.
275. கோயம்புத்துார் மெட்ராஸ் ஆக்சிஜன் அண்ட் அசிடிலின் கம்பெனியில், ஜெயலலிதாவின் தாயார் 1969 மற்றும் 1971ல் முதலீடு செய்த 200 பங்குகள், ஜெயலலிதாவுக்கு வாரிசுரிமையாக வந்தவை.
276. சென்னை அம்பத்துார் குணாள் இஞ்ஜினியரிங் கம்பெனியில், ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட 2000 பங்குகள்.
277. சென்னை கேன்பின்ஹோம்சில், ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை ஒரு கோடி ரூபாய்.
278. ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த 389 ஜோடி காலணிகளின் மதிப்பு, இரண்டு லட்சத்து 902 ரூபாய் 45 பைசா.
279. ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த 914 புதிய பட்டுச் சேலைகளின் மதிப்பு, 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய்.
280. ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த 6,195 புதிய சேலைகளின் மதிப்பு, 27 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய்.
281. ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த 2,140 பழைய சேலைகள் மற்றும் உடைகளின் மதிப்பு, நான்கு லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய்.
282. போயஸ் கார்டனில் ஜெ., வீட்டில் 21.12.1996 அன்று நடந்த சோதனையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட ஏழு விலை உயர்ந்த கடிகாரங்களின் மதிப்பு, ஒன்பது லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்.
283. போயஸ் கார்டனில் ஜெ., வீட்டில் 21.12.1996 அன்று நடந்த சோதனையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட 91 கைக்கடிகாரங்களின் மதிப்பு, ஆறு லட்சத்து 87 ஆயிரத்து 350 ரூபாய்.
284. ஜெயலலிதாவின் 86 வகை ஆபரணங்களின் மதிப்பு, 17 லட்சத்து, 50 ஆயிரத்து 31 ரூபாய்.
285. சசிகலாவுக்கு உரிமை உடையவை என்று சொல்லப்பட்ட 62 வகை ஆபரணங்களின் மதிப்பு ஒன்பது லட்சத்து 38 ஆயிரத்து 460 ரூபாய்.
286. ஜெயலலிதாவின் 26 வகை ஆபரணங்களின் மதிப்பு, 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய் பத்து பைசா.
287.சசிகலாவுக்குச் சொந்தமான 34 வகை ஆபரணங்களின் மதிப்பு 17 லட்சத்து 54 ஆயிரத்து 868 ரூபாய் 90 பைசா.
288. ஜெயலலிதாவின் 41 வகை ஆபரணங்களின் மதிப்பு 23 லட்சத்து 90 ஆயிரத்து 58 ரூபாய் 25 பைசா.
289. ஜெயலலிதாவின் 228 வகை ஆபரணங்களின் மதிப்பு, ஒரு கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 958 ரூபாய்.
290. ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 394 வகை ஆபரணங்களின்- மதிப்பு, மூன்று கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 725 ரூபாய்.
291. ஜெ., வீட்டில் இருந்த 1116 கிலோ கிராம் எடையுள்ள வெள்ளிப்பொருட்களின் மதிப்பு 48 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.
292. சூப்பர் டூப்பர் நிறுவனத்திற்கு சிட்கோ மூலம் பெறப்பட்ட ஷெட் மதிப்பு 15 லட்சத்து 75 ஆயிரத்து 800 ரூபாய்.
293. மெட்டல் கிங் நிறுவனத்திற்காக இயந்திரங்கள் வாங்கிய வகையில் 7 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்.
294. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸுக்காக இயந்திரங்கள் வாங்கிய வகையில், இரண்டு கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்.
295. சுதாகரனுக்கும், சத்தியலட்சுமிக்கும் நடந்த நிச்சயதாம்பூலத்தின் போது, ஜெயலலிதாவால் 12.6.1995 அன்று வழங்கப்பட்ட நகைகள் மதிப்பு 11 லட்சத்து 94 ஆயிரத்து 381 ரூபாய் 50 பைசா.
296. சென்னை தியாகராயநகர் சி.பி.ஐ., கிளையில், ஜெயலலிதாவின் கணக்கு எண். 32ல் 30.4.96 அன்று இருந்த ரொக்க இருப்புத் தொகை 21 ஆயிரத்து 380 ரூபாய்.
297. திருமழிசை, தொழிற்பேட்டையில் 1.12 ஏக்கர் பரப்புள்ள மனை எண் 6 ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கப்பட்டது. அதன் மதிப்பு 8 லட்சத்து 60 ஆயிரத்து 950 ரூபாய்.
298. அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில், ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய்.
299. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில், அசோக் லேலண்ட் பேந்தர் லக்சுவரி கோச் பதிவு எண். டி.என். 09 எப் 2575 மதிப்பு - 32 லட்சத்து 40 ஆயிரத்து 278 ரூபாய்.
300. சசிகலா பெயரில் கெல்லீஸ்சி.பி. வங்கிக் கிளையில் உள்ள கணக்கு எண். 38746ல் 30.4.1996 அன்று இருந்த ரொக்கம் இருப்பு 17 ஆயிரத்து 502 ரூபாய் 98 பைசா.
301. சசிகலாவுக்குச் சொந்தமான திருச்சி பொன்னகரில் உள்ள வீட்டினைப் புதுப்பிக்கவும், மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பவும் செய்யப்பட்ட செலவு 6 லட்சத்து 83 ஆயிரத்து 325 ரூபாய்.
302. லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கதவிலக்கம் ஒன்று, வாலஸ் கார்டன் சென்னை - 34ல் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு, 34 லட்சத்து 46 ஆயிரத்து 32 ரூபாய்.

 


303. செகந்தராபாத் சி.பி.ஐ., வங்கியில் இருந்த வைப்புத் தொகை , மூன்று லட்சம் ரூபாய்.
304. 'நமது எம்.ஜி.ஆர்.' பெயரில், மயிலாப்பூர் சி.பி. கிளையில் 30.4.96 அன்று இருந்த ரொக்க இருப்பு, ஐந்து லட்சத்து 10 ஆயிரத்து 868 ரூபாய் 16 பைசா.
305. சேரங்குளம் கிராமம் சர்வே எண். 49/3 ஏ மற்றும் சில சர்வே எண்களில், 5.53 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கிய வகையில் செலவிட்ட தொகை, 21 ஆயிரத்து 830 ரூபாய்.306. கடந்த 1993 அக்டோபரில் இந்தியன் வங்கியில் மாஸ்டர் விவேக், செல்வி சகிலா, மற்றும் செல்வி கிருஷ்ணப்பிரியா (இவர்கள் இளவரசியின் மகன் மற்றும் மகள்கள்) ஆகியோர் பெயர்களில் டிபாசிட் செய்யப்பட்ட தொகை 38 ஆயிரத்து 421 ரூபாய்.
 

அந்த ஏழு அட்டவணைகள்!


ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், அவருடைய சொத்துக்கள், செலவினங்கள் அனைத்தும் ஏழு விதமாக அட்டவணைப்படுத்தப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தான், வழக்கு விசாரணையும் நடந்தது. அவை இவை தான்:
 

ஜெ., முதல்வராகும் முன், 1.7.1991க்கு முன், அவரது சொத்து மதிப்பு


(ரூபாய் மதிப்பில்) -2,01,83,956.53
l30-04-1996க்கு பின், அவரிடமிருந்த சொத்து மதிப்பு
-66,44,73,573.27

l01-07-1991லிருந்து 30-04-1996 வரை ஜெ., வருமானம்
-9,34,26,053.56

l01-07-1991லிருந்து 30-04-1996 வரை அவரது செலவு
-11,56,56,833.41

l01-07-1991லிருந்து 30-04-1996 வரை, வாங்கிய சொத்து மதிப்பு
-64,42,89,616.74

lஇதே காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக அவர் செய்த செலவு
-2,22,30,779.85

lகணக்கில் வராத சொத்துக்களின் மொத்த மதிப்பு
-66,65,20,396.59
 

வாழும்போதே வாரிக் கொடுத்தவர்கள்!


*அ.தி.மு.க.,வை நிறுவிய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழும்போதே 'வள்ளல்' என்று போற்றப்பட்டவர். அவர் வாழ்ந்த சென்னை ராமாவரம் தோட்டத்தை, காது கேளாத, வாய் பேசாத குழந்தைகளுக்கு எழுதி வைத்தார். தற்போது அங்கு காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் 300 பேர் தங்கி, படித்து வருகின்றனர்.
அதேபோன்று, தனக்குச் சொந்தமான அடையாறு சத்யா ஸ்டூடியோவை கல்லுாரி நடத்துவதற்கு எழுதி வைத்தார். அதுவே, இன்றைக்கு எம்.ஜி.ஆர்.,- ஜானகி மகளிர் கல்லுாரியாக இயங்கி வருகிறது. பல ஆயிரம் மாணவியர் படிக்கின்றனர்.
*தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த 2010ல், தமிழக முதல்வராக இருந்தபோது, அவர் வாழ்ந்து வரும் கோபாலபுரம் இல்லத்தை, தனது காலத்துக்குப் பின்பு, இலவச மருத்துவமனையாக மாற்றுவதற்கு எழுதி வைத்துள்ளார். இதற்காக, அவரது தாயார் பெயரில் அஞ்சுகம் அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.
*இதேபோன்று, மூத்த கம்யூ., தலைவர் நல்லகண்ணு, கட்சி சார்பில் தனக்கு தரப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியை, அதே மேடையில் கட்சிக்கே திரும்ப வழங்கி விட்டார்.
*பெரும் நிலப்பிரபுவான கேரள முன்னாள் முதல்வர் நம்பூதிரிபாட், எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததோடு, வாரிசுகள் இருந்தும், தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் கட்சிக்கே எழுதி வைத்தார்.
*மா.கம்யூ., பொதுச் செயலராக இருந்த சுர்ஜித், தனது சொத்தின் ஒரு பகுதியை, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் அறக்கட்டளைக்கும், மற்றொரு பகுதியை கட்சிக்கும் உயில் எழுதியிருந்தார்.
 

சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?


ஜெ., சொத்துக்கள் யாருக்குச் செல்ல வாய்ப்புள்ளது என்பது குறித்து, சட்ட நிபுணர்கள் கூறுவதாவது:

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய உள்ளதா அல்லது குன்ஹாவின் தீர்ப்பை ஏற்கிறதா என்பது மட்டுமே இப்போதுள்ள ஒரே எதிர்பார்ப்பு. ஜெ., முதல்வராக இருக்கும்போது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது தான் வழக்கின் முகாந்திரம். அந்த வகையில், முக்கிய குற்றவாளி என்ற இடத்தில், அவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. அவர் இறந்து விட்டதால், இவ்வழக்கு கைவிடப்படும் வாய்ப்பு அதிகம்.

ஏனெனில், வழக்கில் பிற குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாதவர்கள். அதேநேரத்தில், ஊழல் தடுப்புச் சட்டம் 1988ல் மட்டுமின்றி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120 பி மற்றும் 109 ஆகியவற்றின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, கவனிக்கத்தக்கது.குன்ஹாவின் தீர்ப்பு உறுதி செய்யப்படும்பட்சத்தில், பிற குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வாய்ப்புள்ளது. எந்தத் தீர்ப்பு ஏற்கப்பட்டாலும், வழக்கில் உள்ள சொத்துக்களுக்கு பிரச்னை ஏதுமில்லை. இதனால், ஜெ., பெயரில் உள்ள சொத்துக்கள், அவர் உயில் எழுதி வைத்துள்ளவருக்கு போய்ச் சேரும்.

எதுவும் எழுதாதபட்சத்தில், அவருக்கான ரத்த உறவாக உள்ள அவரது அண்ணனின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோரே, சட்டரீதியாக இவற்றைப் பெறும் உரிமை உடையவர்களாகின்றனர். ஜெ.,பெயரில் உள்ள பங்குகளும், இவர்களையே சேரும்.உதாரணமாக, கோடநாடு எஸ்டேட்டில் 50 சதவீத பங்கு, ஜெ., பெயரில் தற்போது இருந்தால், அதில் இவர்களிருவருக்கும் சரி பாதி பங்கு கிடைக்கும். ஆனால், நிலமாக பிரித்துக் கொள்ளும் வாய்ப்பில்லை.

எஸ்டேட் பெயரில் கடன் இருந்தால், அதில் பாதியை இவர்கள் ஏற்க வேண்டியிருக்கும். இல்லாவிட்டால், எஸ்டேட் மதிப்பில் பாதியை, இவர்களுக்கு சக பங்குதாரர் செலுத்த வேண்டும். ஒரு வேளை, தனது சொத்துக்களை ஏதாவது ஓர் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருக்கும்பட்சத்தில், இந்த சொத்துக்களின் மூலமாக வரும் தொகை, அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

தனி நபருக்கு இவர் ஏதாவது எழுதி வைத்திருந்தால், அதை சட்டரீதியாக பலர் எதிர்க்கவும் வாய்ப்புண்டு. எனவே, அந்த உயிலை நல்ல மனநிலையில் தான் எழுதினார் என்பதை நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு, அவர்களுக்கு உள்ளது. அவ்வாறு செய்தால் மட்டுமே, அந்தச் சொத்தை அடைய முடியும்.

சமீபத்தில், மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், கட்சி வேட்பாளர்களுக்கான அங்கீகாரக் கடிதத்தில், ஜெயலலிதாவின் கைநாட்டு மட்டுமே இடம் பெற்றிருந்தது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. நன்கு கையெழுத்துப் போடும் ஒரு நபர், கைநாட்டு வைப்பது, இத்தகைய சந்தேகங்களை எழுப்புவது, இயல்பான விஷயமே.

ஒரு வேளை, உயிலிலும் ஜெ., கைநாட்டு இருந்தால், அதை வைக்கும்போது, அவர் மயக்க நிலையில் இல்லை என்பதையும், நல்ல மனநிலையில் இருந்தார் என்பதையும் நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு, யாருடைய பெயரில் உயில் எழுதப்பட்டுள்ளதோ, அவர்களுக்கு இருக்கிறது.

ஜெ., உயிலைப் பொறுத்தே, இவை அனைத்தும் முடிவு செய்யப்படும்.இவ்வாறு, சட்ட நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சொத்துக்கள், 1991-19996 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில் ஜெ., முதல் முறை முதல்வராக இருந்தபோது, அவரது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக் கள் என்று, 30-4-1996அன்று கணக்கிடப் பட்டவை.அதன் பின், 2001-2006, 2011-2016 மற்றும் 2016 மே -செப்.,22 ஆகிய கால கட்டங்களில் (பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த காலகட்டம் தவிர்த்து) ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1684403

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே தலை சுத்துதே tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி வம்சமும் இதற்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல...
தமிழ்நாட்டு மக்களின் அரசியல் தலைவிதி இரு முக்கிய கட்சிகளிடமும் சொத்தாக குவிந்திருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.