Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளை முறியடிப்போம் - சுதந்திரதின விழாவில் மகிந்த.

Featured Replies

விடுதலைப்புலிகளை முறியடிப்போம் - சுதந்திரதின விழாவில் மகிந்த.

[ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2007, 15:53 ஈழம்] [அ.அருணாசலம்]

போர் டாங்கிகளும், துருப்புக்காவி கவசவாகனங்களும் அணிவகுத்துச் செல்ல சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதினத்தை அரச அதிபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் காலிமுகத்திடலில் கொண்டாடினார்.

இந்த நிகழ்வில் சிறீலங்கா கடற்படையினரின் கப்பல்கள் காலிமுகத்திடல் கடலில் அணிவகுத்து செல்ல விமானப்படையினரின் போர்விமானங்களும், உலங்குவானூர்திகளும் வானில் பறந்து சாகாசம் காட்டியதுடன், 3,500 படையினரின் அணிவகுப்பும் இடம்பெற்றது. சிறீலங்கா அரசின் இந்த கடுமையான இராணுவ விளம்பரங்கள் விடுதலைப்புலிகளுடனான 20 வருட போரில் தாம் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாக காட்டும் செயல் என சர்வதேச செய்திநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய அரச தலைவர் தெரிவித்ததாவது:

விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை நாம் நிறைவேற்றப்போவதில்லை, நாடு பிரிவடைவதையும் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை அதற்காக எல்லா மக்களும் (சிங்கள மக்கள்) ஒன்றிணைய வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் மற்றும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் அரசின் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று அரச படையினரால் கைப்பற்றப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடும் பாதுகாப்புடன் விஜயம் செய்த மகிந்த தான் விடுதலைப்புலிகளை தோற்கடிக்கப் போவதாக தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=30708

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகள் அமைதியாக இருக்கும் மட்டும் மகிந்த என்ன வேண்டும் என்றாலும் சொல்ல முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

முறியடிப்பது சின்ன விஷயம்தானே. எல்லாச் சமர்களிலும் புலிகள் சண்டையிடாது பின்னகருகின்றார்கள் (இப்படியே எதிர்காலத்திலும் தொடர்ந்தால் நல்லது என்று ரம்புக்கல வேறு பேட்டி கொடுக்கின்றார்). உள்நாட்டில் எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துவிட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேரப்போகின்றது (ஏன் தமிழ் மக்களே சேரப் போகின்றார்கள்). வெளிநாடுகள் கூட ஆயுத, பொருள் உதவிகள் செய்கின்றன. அத்துடன் நிதி போகும் வழிகளைத் தடைசெய்கின்றன.. இப்படியெல்லாம் அனுகூலமாக இருக்கும்போது எல்லாம் மகிந்த நினைத்தபடி நடக்கும்தானே. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ குறூக்ஸ், நெடுக்ஸ் இங்கு எழுதுவதை மகிந்தர் பார்த்த்படியினால்த்தான் இப்படி கொக்கரிக்கிறாரோ என்னமோ?? அவங்க யாரு எல்லாளன் படைக்கே மணி கட்டியவங்களாச்சே, சும்மாவா என்ன. :rolleyes:

அவன் சிங்களவன் வாயால் மட்டுமல்ல செயலிலும் செய்கிறான்!! ஆனால் நாங்களோ வாயால் நிலப்பரப்புக்களை கைப்பற்றுகிறோம், சிங்களக் குடியேற்றங்களை அகற்றுகிறோம், இடம்பெயர்ந்த மக்களைக் குடியேற்றுகிறோம், ....... ஏன் ஈழத்தையே பிடிச்சிட்டம்!!!!! இனி மிச்சம் எதுவும் இல்லை!!!!!!!!!!! :rolleyes:

  • தொடங்கியவர்

நாங்கள் வருகிற மாசி 22ம் திகதியை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம் அதற்கு பிறகாவது எதாவது மாற்றம் வரும் என்று எதிர் பார்க்கிறோம் இல்லையே மகிந்த இப்ப வாகரைக்கு வந்த மாதிரி என்னம் சில தினங்களில் மட்டக்களப்பு தொப்பிக்கள காட்டுக்கில்லை கூட வருவார்

புhசாரி இதைப் பாக்கேல்லையோ?

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=020207

புண்பட்ட பனங்கொட்டை நெஞ்சங்களுக்கு பலாக தேனாக பஞ்சாமிர்தமாக செய்திகள் வரப்போகுது. கடையளில முடிய முதல் ஓடிப்போய் பொப்கோனை வேண்டும்.

உப்பிடி எதும் தொடங்க எங்கடை ஊடகங்கள் இது தான் இறுதிப் பாச்சல் என்று பப்பாவிலை ஏறாட்டிச் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வருகிற மாசி 22ம் திகதியை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம் அதற்கு பிறகாவது எதாவது மாற்றம் வரும் என்று எதிர் பார்க்கிறோம் இல்லையே மகிந்த இப்ப வாகரைக்கு வந்த மாதிரி என்னம் சில தினங்களில் மட்டக்களப்பு தொப்பிக்கள காட்டுக்கில்லை கூட வருவார்

22ம் திகதிக் கதையை விட்ட, விமல் வீரவன்சவே உண்மை என்று நம்புவாரோ தெரியாது. அவரை விட நீங்கள் அதிகம் நம்புகின்றீர்கள். எதிரியிடம் ஏமாந்து போகும் செய்கை என்னும் நம்மவர்களிடம் மாறவே இல்லை.

22ம் திகதிக்கதை என்பது சுத்த ஏமாற்று,

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிக்கல மட்டும் அல்ல, ஆனையிறவு, கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கெல்லாம் வருவார். அவர் துட்டகைமுனுவின் மறுபிறப்பாச்சே.. எல்லா இடமும் வந்தபின் தங்கத் தட்டில் தமிழீழத்தை வைத்துத் தருவார்.. :angry: :angry:

:P :P :P 22ஆம் திகதியைவிட, வருடக்கடைசியிலை எதிர்பார்க்கலாம். 22ஆம் திகதி என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள

Edited by Thamilachchi

நாங்கள் வருகிற மாசி 22ம் திகதியை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம் அதற்கு பிறகாவது எதாவது மாற்றம் வரும் என்று எதிர் பார்க்கிறோம் இல்லையே மகிந்த இப்ப வாகரைக்கு வந்த மாதிரி என்னம் சில தினங்களில் மட்டக்களப்பு தொப்பிக்கள காட்டுக்கில்லை கூட வருவார்

விடுதலைப்புலிகள் அதாவது தமிழர் சேனை ஒருநாளும் திகதிகள் குறித்து சண்டை இட்டது (அதாவது எதிரியைத்தாக்கியது ) கிடையாது எனவே கொக்கரிக்காது பொறுத்து இருங்கள் சண்டை செய்பவருக்கும் அதனை வழி நடத்துகின்றவருக்கும் எப்படி சண்டை சாதகமாக நடக்க வேண்டும் என்றும் எப்போது எங்கு தாக்குதல் தொடுக்க வேண்டும் என்றும் தெரியும் நாம் சொல்வது போல் விடுதலை சேனை சண்டை இடுவதும் இல்லை இடப்போவதும் இல்லை எனவே தயவு செய்து களத்தில் இருந்து நல்ல செய்திக்காக தமிழனாய் தமிழ் மக்களாய் காத்து இருங்கோ! நல்ல செய்தி முன்பும் வரும் அல்லது பின்னாலும் வரும் !

தொப்பிக்கல மட்டும் அல்ல, ஆனையிறவு, கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கெல்லாம் வருவார். அவர் துட்டகைமுனுவின் மறுபிறப்பாச்சே.. எல்லா இடமும் வந்தபின் தங்கத் தட்டில் தமிழீழத்தை வைத்துத் தருவார்.. :angry: :angry:

நிச்சயம் தங்கத்தட்டில் வைத்து சிங்களவன் தரமாட்டான் ஆனால் சிங்களத்தாள் தமிழீழத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போகும் என்பது உறுதி!

அத்தோடு இன்னும் ஒன்றை சொல்லி வைக்க வேண்டும் காலம் நிச்சயம் எமக்கு நல்ல பதில் தரும் பொறுத்ததோடு பொறுங்கள் கோபம் மனிதனை தவறான பாதையில் இட்டு சென்று விடும் அப்படி இட்டு சென்று விட்டாள் எமது இலட்சியம் மண்ணாகிவிடும்! எனவே இவ்விடையத்தை பக்குவமாய் பார்ப்பவர்கள் பார்ப்பார்கள் ஆனால் நாம் பங்காளிகலாக இருந்து பக்கபலமாகவும் இருப்போம்!

நன்றி

விடுதலைப்புலிகள் அமைதியாக இருக்கும் மட்டும் மகிந்த என்ன வேண்டும் என்றாலும் சொல்ல முடியும்

உண்மையான கருத்தை தந்ததுக்கு நன்றி

நாதன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டில கன சனம் 22 ம் திகதி கதையை நம்பிக் கொண்டு இருக்கினம். 5 வருசம் முடிய successfully completed எண்டு சேர்டிபிகேட் குடுக்கப் போறாங்கள் போல..

விடுதலைப்புலிகளை முறியடிப்போம் - சுதந்திரதின விழாவில் மகிந்த.

நேற்று அரச படையினரால் கைப்பற்றப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடும் பாதுகாப்புடன் விஜயம் செய்த மகிந்த தான் விடுதலைப்புலிகளை தோற்கடிக்கப் போவதாக தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எந்த விடுதலைப் புலிகளை தோற்கடிக்கப் போவதாய் மகிந்து கூறுது?

கருணா குரங்குப் படையின் மக்கள் விடுதலைப் புலிகளையா அல்லது

தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் புலிகளையா?

வாகரைக்குக் போன மகிந்து கருணாக் குரங்கின் கட்சிக்கொடியைப் பார்த்துவிட்டு குழம்பிப் போய்

உளறுகின்றது.

கீழே உள்ள கொடிதான் தமிழ் மக்களின் தமிழீழத்தின் தேசியக்கொடி.

thesiakodi_small.gif

இங்கு யாழ் களத்தில் நின்று மகிந்துவிற்கு புலனாய்வு செய்யும் அன்பர்கள், மகிந்துவுக்காக வக்காளத்து வாங்கும் அன்பர்கள் தயவு செய்து தமிழீழ தேசியக் கொடியிற்கும் கருணாக் குரங்குபடையின் கட்சிக்கொடிக்கும் உள்ள வேற்றுமைகளை எடுத்துக் கூறி மகிந்துவை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடவும். கனவு கண்டபடி தனது காலின்கீழ் படுத்துறங்கும் கருணாக் குரங்குப் படையிற்கே மகிந்து தூக்கத்தில் வெடிவைக்கப் போகுது.

  • தொடங்கியவர்

என்னுடன் கதைக்கும் அனைத்து தமிழ் மக்களும் மாசி 22ம் திகதி, அதைத்தான் சொல்லுகிறார்கள் தொலைக்காட்சி ஆய்வும் அதைத்தான் சொல்லூது

  • தொடங்கியவர்

இந்த போராட்டத்துக்கு உழைத்தவர்கள் இவர்கள்

+மாவீரர்கள் தான் அதிகம்

+போராளிகள்

+இந்த போராட்டத்துக்கு உதவி செய்த மக்கள்

+உபத்திரம் செய்யாத மக்கள்

இவர்கள் அனைவருக்கும் போராட்டத்தில் பின்னடைவுகள் வரும்போது மனவருத்தம்

நீங்கள் நினைப்பதுபோல் போராட்டத்தில் எந்தப் பின்னடைவும் இல்லை. யுத்த களமொன்றில் தான் புலிகள் எந்த இழப்புமின்றி பின்வாங்கியுள்ளனர். மகிந்தா கூறுவதுபோல் வாகரையை இராணுவம் ஆக்கிரமித்தது மிகப் பெரிய வெற்றியல்ல. ஆயிரம் போராளிகளை அழித்து பெரு முகாம்களைக் கைப்பற்றுவத்தான் வெற்றி.

சிங்களவரைப் போல் நீங்களும் வரலாற்றை மறந்துபோனீர்களா ?

ஜயசிக்குறு எதிர்ப்புப் போரில் மூவாயிரத்திற்கும் அதிகமான போராளிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து வன்னிப் பெருநிலத்தை மீட்டதை மறந்துவிட்டீர்களா ?

22 ஆம் திகதி என புரளிகிளப்பியவர்கள் வன்ச கூட்டத்தினர்.

இப்படி அறிவிப்பதனால் தாக்குதல் ஏதும் நடக்காமல் தடுக்க

லாம் என்ற எதிர்பார்ப்போ தெரியாது. இவர்களின் வலையில்

சிக்குபவர்கள் அல்ல புலிகள்.

22 ஆம் திகதி என்று சிங்களவனே புரளியை கிளப்பி எல்லாருக்கும் தெரிய வைச்சுவிட்டாச்சு. இனி அடிக்கப் போனால் அதிர்ச்சியாக இருக்காது என்று புலிகள் அடிக்காமல் இருக்க மேல்மாடி காலியான சிங்களவன் செய்த சின்னப்புள்ளத்தனமான கணக்கு. அப்படிப்பாத்தா சிங்களவன் 22 ஆம் திகதிதான் உண்மையிலேயே எதிர்பார்க்கமாட்டான். உந்த சின்னப்புள்ளைத்தனமான வலையெல்லாம் சரிவராது.

அப்ப அடி உண்மையா 22 ஆம் திகதி தான் இடியாக விளப்போகுது போல.

பெப்ரவரி 22ம் திகதி உண்மையோ பொய்யோ, இராணுவம் இந்த நாளில் உஷராக இருக்கப் போவது உண்மை. எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத இடத்தில் மிகுந்த திட்டமிடலுடன் தாக்குதல் நடத்துவத்துவது தலைவரின் பாணி. இதுதான் திகதி என்று குறிப்பதும், புலி பாயாது என்று குறுக்கால போறவர்கள் கூறுவதும் சிறுபிள்ளைத்தனம்.

பொழுது போகாமல் இராணுவ ஆராச்சி செய்வதாக நினைத்து புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் வருகிற மாசி 22ம் திகதியை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம் அதற்கு பிறகாவது எதாவது மாற்றம் வரும் என்று எதிர் பார்க்கிறோம் இல்லையே மகிந்த இப்ப வாகரைக்கு வந்த மாதிரி என்னம் சில தினங்களில் மட்டக்களப்பு தொப்பிக்கள காட்டுக்கில்லை கூட வருவார்

:P :P :P 22ஆம் திகதியைவிட, வருடக்கடைசியிலை எதிர்பார்க்கலாம். 22ஆம் திகதி என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள

உண்மைதான் மாப்பிளை.

அப்பிடியெண்டால் இந்த ஒட்டுக்குழுக்களைச் சமாளிப்பதும் போர்தானே.

உண்மைதான் மாப்பிளை.

அப்பிடியெண்டால் இந்த ஒட்டுக்குழுக்களைச் சமாளிப்பதும் போர்தானே.

அக்கா லீசா01,

ஒட்டுக்குழுக்களை அடக்குவதும், புதிய துரோகிகள் உருவாகாதவாறு பார்த்துக் கொள்வதும் கூட நிச்சயமாகப் போர் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெப்ரவரி 22ம் திகதி உண்மையோ பொய்யோ, இராணுவம் இந்த நாளில் உஷராக இருக்கப் போவது உண்மை. எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத இடத்தில் மிகுந்த திட்டமிடலுடன் தாக்குதல் நடத்துவத்துவது தலைவரின் பாணி. இதுதான் திகதி என்று குறிப்பதும், புலி பாயாது என்று குறுக்கால போறவர்கள் கூறுவதும் சிறுபிள்ளைத்தனம்.

பொழுது போகாமல் இராணுவ ஆராச்சி செய்வதாக நினைத்து புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே!

இந்த சம்பாஷணைகளை வாசிக்கும்பொழுது தலைவரின் சிந்தனையிலிருந்து தெறித்து வெளியான சில துளிகள் ஞாபகம் வருகின்றது.

"முடிவில் வரப்போவதனை அறிந்தவனுக்கு இடையில் நடக்கும் சம்பவங்கள் குழப்பத்தினை தரமாட்டா"

தெளிவு: முடிவு தெரிந்திருந்தும் நாம் ஏன் சில திரைப்படங்களை திருப்பித்திருப்பிப் பார்க்கிறோம்? இடையில் வரும் சில நகைச்சுவைக்காட்சிகளை, சிலரின் நடிப்புத்திறமைகளை (கீரோவாகட்டும் அன்றில் வில்லனாகட்டும் அல்லது குணச்சித்திர நடிகனாகட்டும்) ரசித்துப் பார்ப்பதற்கே. போராட்டத்தலைமையில் பற்றுறுதி கொண்டோனுக்கு முடிவு என்ன என்பது வெள்ளிடைமலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.