Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனவரி 6இல் அவசரமாக ஒன்றுகூடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

Featured Replies

ஜனவரி 6இல் அவசரமாக ஒன்றுகூடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி அவசரமாகக் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டத்தைக் கூடுவதற்கு பகிரங்க அழைப்பு விடுத்ததற்கமையவே இக்கூட்டம் கூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கூட்டமொன்றுக்கு கடிதம் மூலம் அழைப்புவிடுத்தபோது அந்த அழைப்பு இரா.சம்பந்தனால் தட்டிக்கழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே தற்போது எதிர்வரும் 6ஆம் திகதி கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வழிநடத்தல் குழுவிலிருந்து, இரா.சம்பந்தன், எம்.சுமந்திரன் ஆகியோர் வெளியேற வேண்டுமெனவும் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=53138

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா கூடி...... ?

2 hours ago, Athavan CH said:

அத்துடன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வழிநடத்தல் குழுவிலிருந்து, இரா.சம்பந்தன், எம்.சுமந்திரன் ஆகியோர் வெளியேற வேண்டுமெனவும் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடக்கிற காரியமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இனி.... வயசுக்கு வந்து தான் என்ன, வராட்டி தான் என்ன....

  • தொடங்கியவர்

அட! தம்பி சுமந்திரன் உள்ளூர்த் தீர்ப்பை நம்பலாமோ?

எண்பத்தைந்து வயது முதியவர் ஒருவர் வாசிகசாலை ஒன்றில் பத்திரிகை பார்த்துவிட்டு ஒரு வெள்ளைத்  தாளில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எழுதுகின்ற அதேநேரம் அவரின் முணுமுணுப்பும் மெல்லக் கேட்கிறது. 

பத்திரிகை வாசித்துவிட்டு இப்பெரியவர் எதை எழுதுகிறார் என்று நினைத்து சரி, ஒருக்கால் பார்த்து விடலாம் என முடிவு செய்தேன். அந்த எழுத்து இப்படி இருந்தது.

தம்பி சுமந்திரனுக்கு வணக்கம். எனக்கு வயது எண்பத்தைந்து இனி நாங்கள் சருகுகள். இருந்தும் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். ஏற்புடையதாயின் ஏற்றுக்கொள்க. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை தொடர்பிலான விசாரணை முடிவில் குற்ற வாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், நிரபராதிகள் ஆகக் கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இது தான் நடக்கும் என்று எனக்கு நன்கு தெரியும். 

எண்பது வயதும் எனது அனுபவமும் அப்படி ஒரு முடிவுக்கு என்னைக் கொண்டு வந்தது. ஆனாலும் ஓர் ஐயம்! எங்கட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூர் விசாரணையில் திருப்தியடைவது போல தெரிவி த்ததால சிலவேளை ரவிராஜ் படுகொலைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கிடைத்து விடுமோ என்று திசை மாறினேன்.

ஆனால் நடந்தது நான் முன்பு நினைத்து போலத் தான். அதுமட்டுமல்ல, திருகோணமலையில் நடந்த படுகொலை தொடர்பிலும் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் விடுதலை பெற்றனர்.
இவைமட்டுமல்ல, இதற்கு முன்பும் ஏகப்பட்ட விடயங்கள் எனக்குத் தெரியும். அவற்றையெல்ல்லாம் எழு துவதற்கு என் வயது இடந்தரவில்லை.

அதேநேரம் நல்லாட்சி என்றாலும் என் பாதுகாப்புப் பற்றி நான் கவனம் எடுக்காவிட்டால் வேறு யார் தான் கவனம் எடுப்பார்கள்? ஆகையால் அவற்றை விட்டு விடுகிறேன்.

இது ஒருபுறமிருக்க, தம்பி சுமந்திரன்! மேலும் அறிவது, நடந்து முடிந்த வன்னிப் பெருயுத்தம் தொடர்பில என்ன மகன் நடக்குது?  சர்வதேச விசாரணை நடந்த முடிந்து விட்டது என்று தாங்கள் கூறியதாக பத் திரிகை மூலம் அறிந்தேன்.

நீங்கள் கூறியதை தம்பி மாவை வன்னிக்கூட்டம் ஒன்றில் வைத்து வழிமொழிந்தார்.
ஆனால் பலரும் சொல்கிறார்கள் சர்வதேச விசாரணை நடக்கவில்லை. சர்வதேச விசாரணைதான் தேவை என்று.

அட! காலன் அழைக்கின்ற நேரத்தில உமக்கேன் இந்த ஆய்வென்று தாங்கள் மனதுக்க நினைத்தாலும் பரவாயில்லை. என்ர இறுதிக் காலத்துக்குள் சர்வதேச விசாரணை நடந்து விட்டதா? அல்லது நடக்குமா? என்பதை அறிய வேண்டும் என்பதுதான் என் பெருவிருப்பம்.

சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றால் அந்த விசாரணை எங்கே? அதற்கு நடந்தது என்ன? அல்லது வன்னி பெருநில யுத்தத்தின் போது எங்களைப் பாதுகாக்காத பரம்பொருள் போல சர்வதேச விசாரணையும் அருவத் திருமேனியாய் விறகில் தீ போல்; பாலில் நெய் போல்; சங்கில ஒலி போல; உள் ளதோ? யாமறியேன். 

அது சரி, ரவிராஜ் படுகொலை விசாரணையின் தீர்ப்புக்குப் பின்னரும் உள்ளூர்த் தீர்ப்பு உத்தமம் என்று தாங்கள் கருதுகிறீர்களா? என்பதையும் அறிய ஆவல்.

ஏனென்றால் உள்நாட்டுத் தீர்ப்பில் நம்பிக்கை உண்டு என்பது போல  எங்கோ ஓரிடத்தில் தாங்கள் கூறி யதாக ஞாபகம். பின்னர் அண்மையில் கரவெட்டியில் நடந்த நிகழ்வொன்றில், இலங்கையின் நீதித்துறை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதென்று தாங்கள் உரையாற்றியதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.

அட தம்பி! எப்பதான் நாங்கள் உண்மையை உண்மையாக அறியப் போகிறோம். உண்மை ஒன்றுதான். இந்த ஓர் உண்மைக்குள் உண்மைதான் இருக்கும். உண்மை பற்றிக்கூறும் மற்றவை அனைத்தும் பொய்யாகும்.

ஏதோ எங்கட சனங்கள் பாவம் மகன்! நம்பி புள்ளடி போட்டவையள். ஏதோ பாத்து நடவுங்கள். என்ர நண்பன் சம்பந்தரை நலன் விசாரித்ததாகவும் கூறவும்.  

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12887&ctype=news

  • தொடங்கியவர்

பரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 2017 ஜனவரி 06ஆம் நாள் பிற்பகல் 4.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், செயலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்குபற்றுவர்.

கூட்டமைப்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை மாதம் தோறும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், சில மாதங்களாக இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் தற்போதைய அவசர சூழலில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் பொதுச்செயலர் சிவசக்தி அனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியிருந்தார்.

இதனடிப்படையிலேயே இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்துள்ள வாக்குறுதியின் நிலை, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள் குறித்து காரசாரமான விவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்காத அரசியலமைப்பு ஒன்றே முன்வைக்கப்படும் சூழல் எழுந்தால், புதிய அரசியலமைப்புக்கான வழிகாட்டல் குழுவில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விலகிக் கொள்ள வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

http://www.tamilkingdom.com/2016/12/531.html

  • கருத்துக்கள உறவுகள்

வேற என்ன 2017 க்கான மிளகாய் அரைப்புத்தான் அதுசரி எப்பப்பா எலக்சான் 

  • தொடங்கியவர்

சர்வதேச பங்களிப்புக்கான காலம் நெருங்கியுள்ளது! அரசியல் தீர்வு தொடர்பில் மாவை கருத்து

 

தமிழ் மக்களை அரசியல் தீர்வு முயற்சிக்கு வலியுறுத்திய இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் நெருங்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை யில் நேற்று இடம்பெற்ற வருட இறுதி ஒன்று 
கூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெறும் பொருட்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவை எவ்வளவு தூரம் முன் னேற்றம் அடைந்திருக்கின்றது என்பது குறித்து ஆதங்கங்களும் கவலைகளும் உண்டு.தமிழ் மக்களை சம தரப்பாக ஏற்று பிரச்சினைக்கு தீர்வுகாண முயலவேண்டும்.
இதனையே சர்வதேசமும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத் தியுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவில் ஏற்றுக்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக அரசாங்கம் செயற் பட முடியாது,

விடுதலைப் புலிகளோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இராஜதந்திர அணுகுமுறை காணப் படவில்லை என்று குற்றம் சாட்டுகின்ற தரப்புக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சிகளுக்கும் அத்தகைய குற்றச்சாட்டை சுமத்த இடமளிக்க முடியாது.
தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிதானமாக சர்வதேச சமூகத்தோடு இணைந்து முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றது.

இந்த முயற்சி நீதியை நிலை நாட்டாத பட்சத்தில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியது என்ற செய்தியினை சர்வதேச சமூகத்துக்கு அறிவிக்கப்படும்.
அதுவரை வடக்கு கிழக்கு இணை ந்த வகையில் பல்லின சமூகங்களை அங்கீகரிக்கின்ற அரசியல் அமைப்பின் ஊடாக தீர்வு பெறும் மக்களின் ஆணையை மதித்து நடப்பதாக மாவை சேனாதிராஜா தனது ரையில் குறிப்பிட்டுள்ளார். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12908&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கு கூடிக் கலையுறதே பரபரப்பான விசயமாப் போச்சு. இதுதான் அவைட அரசியல். tw_blush::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.