Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

fpn03dn5.jpg

மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் பாதுகாப்புக்காக வெளிமாநில போலீஸார் குவிக்கப்பட்டும், கடும் பதட்டமும், அச்சமும் நீடிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 28 கி.மீ., துõரத்தில் தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள பாலாறு செக் போஸ்ட்டின் ஒரு பகுதியில் கர்நாடகா போலீஸாரும், மறு பகுதியில் தமிழக போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நுழையும் தமிழக வாகனங்கள் மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், கர்நாடகாவுக்குள் பஸ்களை இயக்க வேண்டாம் என கர்நாடகா போலீஸார் தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால்,நேற்று மேட்டூரில் இருந்து பெங்களூரூ, மைசூரூ, கொள்ளேகால், மாதேஸ்வரன் மலை செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ன. மேலும், தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரூக்கு சென்ற தமிழக சுற்றுலா பயணிகளின் பஸ்களை கர்நாடகா போலீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுபோல், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல முயன்ற லாரி, வேன், ஜீப், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும், கர்நாடகா போலீஸாரால் திருப்பி அனுப்பபட்டன.

அதுபோல், கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு இயக்கப்படும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பஸ்ஸை தமிழகத்தின் எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு குடும்பத்துடன் வந்த தமிழர்கள் அனைவரும், எல்லையில் இருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடிக்கு நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை தொடர்ந்து, பாலாறு முதல் மேட்டூர் அணை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேட்டூர் அணை மற்றும் பூங்காவுக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் மேட்டூரில் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். மேலும், கர்நாடகா எல்லைப்பகுதி மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ""காவிரி தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பதட்டம் தணியும் வரை பாதுகாப்பு நீடிக்கும்,'' என மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார். இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு காரணமாக, கர்நாடகாவில் பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள், குடும்பத்துடன் தமிழத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழர்களை ஏற்றி வரும் கர்நாடகா பஸ்கள், தமிழக எல்லையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால், தமிழக எல்லைக்குள் நுழையும் தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு நடந்து வந்து பஸ் பிடித்து மேட்டூர் வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால், தமிழகத்தின் எல்லையான பாலாறு வரை தமிழக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கர்நாடகா தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.dinamalar.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன்களுக்கு எங்கும் எப்பவும் நக்குத்தண்ணி வாழ்க்கையாப்பா? :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்களுக்கு எங்கும் எப்பவும் நக்குத்தண்ணி வாழ்க்கையாப்பா? :angry:

:angry: :angry:

போர போக்கைப் பார்த்தால் ஒரு காலத்தில் தமிழீழம் கிடைத்தபின் தமிழீழத்திற்கு கர்நாடகா மற்றும் தமிழக அகதிகளின் வரவை எதிர்பார்க்க முடியுமா?

மாப்பு

வரும் சகோதரரை வரவேற்போம் எமது சகோதரர்களின் உரிமக்காக குரல் கொடுப்போம் குரலோடு மட்டுமல்ல செய்கையாலும் நன்மை செய்யும் தமீழீழம் தன் தந்தை மண்ணுக்கு

மாப்பு

வரும் சகோதரரை வரவேற்போம் எமது சகோதரர்களின் உரிமக்காக குரல் கொடுப்போம் குரலோடு மட்டுமல்ல செய்கையாலும் நன்மை செய்யும் தமீழீழம் தன் தந்தை மண்ணுக்கு

நன்றி ஈழவன்

ஏற்கனவே உச்சநீதி மன்றத்தீர்ப்பை கேரழ அரசு தூக்கி எறிந்துவிட்டு அராஜகம் பண்ணுகிறது, அது சம்பந்தமாக, தமிழ்நாடு அரசினால் தீர்க்கமான எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. இப்போது காவிரி சம்பந்த்மான தீர்ப்பு, கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைதிறந்து விடுகின்றதோ என்னவோ தமிழர்களைத்துரத்திவிட்டு இருக்கிறது. அயல் திராவிட மாநிலத்தவர்களே இப்படி திராவிடக்கட்சித்தலைவர்களுக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு என்று குரல் கொடுக்க ஒரு தமிழ் நாடு இந்த உலகில் இல்லையே

6 கோடி தமிழர் இருந்து என்ன 50 லட்ட்சம் தமிழராக இருந்தாலும் தனி நாடாக இருந்து எமது உறவுகளுக்காக குரல் கொடுப்பது இன்றைய தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தில் இளங்கோ சொன்ன மாதிரி தமிழ்நாட்டில் வேறு மொழிக்காரன் வந்தாலும் அவன் அந்த மொழிக்காரனாகவே இருக்கிறான் ஆனா எமது தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டும் தான்( கிராமத்தை தவிர்த்து) ஆங்கிலம் பேசி பேசி தமிழை மறக்கிறான்.

தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இல்லை உலகில் இருக்கும் அனைத்து தமிழர்களும் வடுவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்தேசியம் என்பது தனியே ஈழத்தமிழருக்கு மட்டும் சொந்தம் இல்லை உலகில் உள்ள அனைத்து தமிழரின் தாகம் அது ஈழத்தமிழனுக்கும் குரல் கொடுங்கள் உங்கள் கெளரவமான வாழ்க்கைக்கு போராடுங்கள்..

போர போக்கைப் பார்த்தால் ஒரு காலத்தில் தமிழீழம் கிடைத்தபின் தமிழீழத்திற்கு கர்நாடகா மற்றும் தமிழக அகதிகளின் வரவை எதிர்பார்க்க முடியுமா?

நினைப்பு தான் புளைப்பை கெடுக்கும்

நினைப்பு தான் புளைப்பை கெடுக்கும்

அட நல்ல பழமொழியாய் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம் பகுதியில் இதை இணைத்துவிடுங்கள்!

தமிழன் எண்டால் எல்லா இடமும் இழக்காரமாய் போயிட்டுது இதுக்கு எல்லாம் முடிவு இருக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் எண்டால் எல்லா இடமும் இழக்காரமாய் போயிட்டுது இதுக்கு எல்லாம் முடிவு இருக்குது.

அப்பிடி முழுக்கமுடிவு கட்டேலாது ஈழவா.நாங்கள் வளர்க்கிற செல்லப்பிராணிகளுக்குள்ளையே எத்தினை ஒட்டுண்ணியள் எங்களுக்கு தெரியாமல் ஒளிச்சிருந்து சேக்கஸ் காட்டுதுயள்? :)

ஏன் தண்ணீ தர பஞ்சிப்படுறாங்கள் தன் சொந்த நாட்டிலேயே தண்ணீர் இல்லமல் ஏன் தமிழன் கஸ்டப்படவேணும் வேறு வழிகள் இல்லையா சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் மாதிரி சிங்கப்பூர் அவுஸ்திரேலியாவில பிறிஸ்பேன் போன்ற பகுதிகளில வெற்றிகரமாக செய்யபடுதே.அரசியல் வாதிகளுக்காக கொழுத்தும் பட்டாசு காசுகளை சேர்த்தால் தமிழ் நாட்டின் தண்ணீர் பஞ்சம் ஒழிந்து விடும் பிறகு எந்த நாயிட்டையும் கொஞ்ச வேண்டியதுமில்லை.தண்ணீர் தராவிட்டால் கர்நாடகத்துக்கு மின்சாரத்தை வழங்குவதில் கொஞ்சம் இறுக்கம் காட்டலாமே முள்ளை முள்ளாலதான் எடுக்கேலும்

ஏன் தண்ணீ தர பஞ்சிப்படுறாங்கள் தன் சொந்த நாட்டிலேயே தண்ணீர் இல்லமல் ஏன் தமிழன் கஸ்டப்படவேணும் வேறு வழிகள் இல்லையா சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் மாதிரி சிங்கப்பூர் அவுஸ்திரேலியாவில பிறிஸ்பேன் போன்ற பகுதிகளில வெற்றிகரமாக செய்யபடுதே.அரசியல் வாதிகளுக்காக கொழுத்தும் பட்டாசு காசுகளை சேர்த்தால் தமிழ் நாட்டின் தண்ணீர் பஞ்சம் ஒழிந்து விடும் பிறகு எந்த நாயிட்டையும் கொஞ்ச வேண்டியதுமில்லை.தண்ணீர் தராவிட்டால் கர்நாடகத்துக்கு மின்சாரத்தை வழங்குவதில் கொஞ்சம் இறுக்கம் காட்டலாமே முள்ளை முள்ளாலதான் எடுக்கேலும்

இலவசக் கலர்TV போன்ற தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும் தலைவர்களும் இது போன்ற சில்லறைத்தனங்களுக்கு விலை போகும் மக்கள் கூட்டமும் ஈழவன் சொல்வதுபோன்ற திட்டங்களைப்பற்றி யோசிக்கவே இன்னும் கனகாலம் பிடிக்கும்.

கர்நாடகத்திற்கு மின்சாரம் வழங்க முடியாது என்று தமிழ்நாட்டால் சொல்ல முடியாது. மின்சாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகின்ற ஒரு துறை. அதில் மாநில அரசு தலையிட முடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகாவில் பதற்றம்: ராணுவம் வருகை: முன் எச்சரிக்கையாக 1,000 பேர் கைது

பெங்களூர், பிப்.7-:காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை ஒட்டி, பெங்களூருக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, 1,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பை வழங்கியது. தமிழ்நாட்டுக்கு, கர்நாடக மாநிலம் 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று, அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தீர்ப்பு வெளியானவுடன், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் வசிக்கும் மாவட்டங்களில், கன்னட அமைப்புகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டன. சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனால் அங்கு பதட்டம் நீடித்து வருகிறது. போராட்டம் காரணமாக தலைநகர் பெங்களூரில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் பஸ்கள், மாநில எல்லைப்பகுதியுடன் நிறுத்தப்பட்டன. இதேபோல், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் வந்த பஸ்கள் எல்லைப்பகுதியில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் டெப்போக்களில் நிறுத்தப்பட்டன.

காவிரி பாசன பகுதிகளான மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில், நேற்று 2-வது நாளாக, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெற்றது. கொள்ளேகாலில் விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கு தமிழ்ச்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக, சிறைக்கைதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த 200 கைதிகள் ஆர்ப்பாட்டம் (தர்ணா) நடத்தினார்கள். பிஜப்பூரில் ரெயில் மறியலும் நடைபெற்றது.

இந்த நிலையில் 12-ந் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடைபெறும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. பெங்களூரில் முழு அடைப்பின்போது கலவரம் ஏற்படாமல் இருக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் நீலம் அச்சுதராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பாதுகாப்பு பணிக்காக 12 பிளட்டூன் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் பெங்களூர் வந்துள்ளனர். மேலும் பிஜப்பூர், பெல்காம், தார்வார் போன்ற மாவட்டங்களில் இருந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினரும் வந்துள்ளனர்.

இது தவிர தமிழக எல்லையில் இருந்து ஒரு பட்டாலியன் துணை ராணுவத்தினரும், ஆந்திராவில் இருந்து 6 பட்டாலியன் துணை ராணுவத்தினரும் பெங்களூருக்கு வந்து இருக்கிறார்கள். இவர்கள் பெங்களூரில் கலவரம் ஏற்பட்டால் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

முன்எச்சரிக்கையாக பெங்களூரில் இதுவரை, 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவர்களும் அடங்குவர். இதற்கிடையே ஆங்காங்கே கலவரம் நடப்பதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். பொது மக்கள் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம். பெங்களூர் நகரம் அமைதியாக உள்ளது. பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கவில்லை.

ஆங்காங்கே சில அமைப்புகள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை.

பெங்களூரில் நாளை (இன்று) சர்வதேச விமான கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகள் பங்கேற்கின்றன. எனவே முழு அடைப்புக்காக கண்காட்சி தள்ளி வைக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கண்காட்சி நடைபெறும் பகுதியில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் மகாலட்சுமி நகரில் ஒரு கார் எரிந்துள்ளது. அது கலவரத்தில் எரிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதால் அந்த காரில் தீ பிடித்துள்ளது.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் நீலம் அச்சுதராவ் கூறினார்.

http://www.vikatan.com/

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

எரியுற வீட்டில் நெருப்பு புடுங்கும் பழக்கம் எந்தவொரு உண்மையான தமிழனுக்கும் இல்லை..உம்மை போல் நக்கி திண்ணும் கூலிகலுக்கு தான் உள்ளது!

Edited by karisal

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

நாங்கள் அதை சாதகமாக்கி சொந்த இரத்தத்தில் வயிரு கழுவும் இழிவானவர்கள் அல்ல எம் உறவுகள் எங்கு தாக்கப்பட்டாலும் வேதனை இருக்கும் உங்களை போல முகமூடியை கிழிக்கிறன் என காழ்புணர்சி உடையவர்கள் அல்ல சிறு வயதிலேயே இரத்தத்தை பார்த்தவர்கள் அதன் வலி என்ன என்பது எமக்கு தெரியும்.

தமிழன் எங்கு தாக்கப்பட்டாலும் வேதனைபடுவான் ஒவ்வொரு தமிழனும் அவன் ஈழத்தவனாக இருக்கட்டும் உலகத்தமிழனாக இருக்கட்டும்

அதாவது சுத்த தமிழன் உம்மை போல நாய்கும் பூனைக்கும் பிறந்திட்டு குரங்கு புத்தியை வச்சிருக்கும் அரைவேக்காடுக்கு அந்த உணர்ச்சி புரியாது :angry:

rmsachitha,

நீர் நல்ல இந்தியனுமில்லை, மானமுள்ள தமிழீழ மைந்தனுமில்லை.

மொத்தத்தில் நீர் உண்மையான தமிழ்ப் பெற்றோருக்கு பிள்ளையுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் இரத்ததின் இரத்தங்களே தமிழன் ஓடுறான் ஓடிக்கொண்டே இருக்கிறான் வாழ்வில் தமிழ்நாட்டின் விளிம்புவரை.. கூப்பிடுங்கள் பெரியாரை போடுங்கள் பகுத்தறிவு முழக்கம் கர்நாடகத்தில். கர்நாடகம் பெற்றுத்தந்த பகுத்தறிவுச் சிங்கம் கர்நாடகத்துக்கு பகுத்தறிவு புகட்டாமல் உறங்கியதாலா தமிழனுக்கு தண்ணிக்கும் பஞ்சம். பாபா காலில் விழுந்தும் தண்ணீர் இல்லையா..??! காவேரியை திறக்க பெரியார் வழியில் கர்நாடகத்துக்கு பகுத்தறிவு புகட்டுவதே சரியான தீர்வு. காட்டுமிராண்டித் தமிழன் ஏன் இன்னும் அதைத் தொடங்கவில்லை..! :rolleyes::rolleyes:

பேறுந்து ஓடாததால்தான் இவர்கள் நடந்து வருகிறார்கள்.

பேறுந்து ஓடாததால்தான் இவர்கள் நடந்து வருகிறார்கள்.

(rmsachitha @ Feb 7 2007, 11:28 PM)

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

மைசூர்சென்னை சதாப்தி ரயிலை வழிமறித்து

பயணிகள் மீது கன்னட விவசாயிகள் தாக்குதல்

பிப்ரவரி 08, 2007

சென்னை: மைசூலிருந்து சென்னை வந்த சதாப்தி ரயிலை 3 இடங்களில் வழி மறித்த கர்நாடக விவசாயிகள், ரயில் பயணிகள் மீதும், ரயில் என்ஜினின் டிரைவர் மற்றும் ஊழியர்களை தாக்கினர்.

காவி> நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து மைசூர், மாண்டியா உள்ளிட்ட காவிரிப் பாசனப் பகுதிகளில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் நேற்று பிற்பகல் மைசூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மாண்டியா மாவட்டத்தில் 3 இடங்களில் கர்நாடக விவசாயிகள் மறித்தனர்.

பின்னர் ரயில் டிரைவர், ஊழியர்கள் மற்றும் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே போலீஸார் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை கலைந்து போகச் செய்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/02/08/train.html

காவிரிபோராட்டத்தில் குதிக்கும் கன்னட

திரையுலகம்: தலைமைசரோஜா தேவி!

பெங்களூரு: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைக் கண்டித்து பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தலைமையில் பெங்களூரில் பேரணி நடத்த கன்னட திரையுலகம் முடிவு செய்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கன்னட சங்கங்கள் அறிவித்துள்ள பந்த்துக்கு கன்னட திரையுலகம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் பல படங்களில் எம்ஜிஆரோடு ஜோடி போட்டு தமிழ் சினிமாவை 'ஆண்ட' சரோஜா தேவி தலைமையில் பெங்களூரில் பேரணி நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் பேரணியில் மறைந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக இன்று கூடி ஆலோசிக்கின்றனர்.

அம்பரீஷ் மிரட்டல்:

இதற்கிடையே, காவிரி பாசனப் பகுதி மாவட்டமான மாண்டியா தொகுதியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பியும், நடிகரும், நடிகர் ரஜினிகாந்த்தின் மிக நெருங்கிய நண்பருமான அம்பரீஷ், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.

இவர் தற்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக உள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு இல்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

மாண்டியா விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக எனது பதவியைத் தூக்கி எறியத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/02/08/cauvery.html

ஆக நடித்து சம்பாதிக்கும் வரையும் தமிழன் தண்ணி எண்டு வந்தால் தமிழனுக்கே தண்ணி காட்டப்படுது இப்படிபட்ட நட்சத்திரங்களால்

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கர்டாகாவில் இதுவரை எந்த தமிழரும் தாக்கப்படவில்லை, அப்படி தாக்குதல் நடக்கும் அதை வைத்து இந்தியத்தமிழர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்று ஈழத்தமிழர்கள் பகல் கனவு காணவேண்டாம்.

அட உம்மட கழிவுப்புத்திக்கு இதைவிட ஆழமாய் சிந்திக்க வக்கில்லயோ?

நீர் இந்தியன் என்று சொன்னால் நாம் நம்பிவிடுவோமாக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.