Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவு சமாதி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது :

Featured Replies

கிளிநொச்சி மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவு சமாதி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது :

IMG_0397.jpg

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் மாவீரர்  துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும்   முன்னாள் போராளிகள் சிலா்  இந்தப் பணியை ஆரம்பித்துள்ளனா்.

யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னா் கடந்த வருடம் மாவீரா் நாள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதும் அப்போது வெறும் தரையில்  சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றி நினைவு கூரப்பட்டது.

இந்தநிலையில்  துயிலுமில்லத்தை வழமை போன்று மாற்றி அமைக்கும் வரைக்கும் ஒரு  பொதுவான நினைவுச் சமாதியினை அமைத்து நினைவு கூருவதற்கு தீா்மானித்து அந்தப் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளோம். எனத் தெரிவித்த மாவீரா்களின் உறவினர்கள்   தாம் கொண்டு  சென்ற செங்கற்கள், சீமெந்து என்பவற்றைக் கொண்டு நினைவுச் சமாதி  அமைக்கும் ஏற்பாடுகளை முன்னெடுத்தனா்.
DSC02637.jpg
முன்னதாக  முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள்  போராளி ஒருவா் அடிக்கல் வைத்து ஆரம்பித்து  வைக்க  ஏனையவா்களாலும் அடிக்கல் நாட்டப்பட்டு பொதுச் சமாதி அமைக்கும் பணிகள் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த  வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின  ஊடக தொடா்பாளா்   அ.ஈழம் சேகுவேரா    துயிலுமில்லத்தை வைத்து எவரும் அரசியல்  செய்ய நாம் அனுமதிக்க முடியாது எனவும்  கடந்த மாவீரா் நாளன்று கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் மிக மோசமான   அரசியல் அசிங்கம் நடந்தேறியது எனவும் தெரிவித்துள்ளார்.
IMG_0414.jpg
மேலும் ஒரு குடும்பத்தில்  இரண்டு மூன்று பிள்ளைகளை மண்ணுக்காக  அா்ப்பணித்தவா்கள் இருக்க எவ்வித தியாகமும் செய்யாத ஒருவா் விளக்கேற்றினாா். அவரது குடும்பத்தில் பன்னிரண்டு சகோதரர்கள் எவரும் இந்த மண்ணுக்காக எந்த  தியாகத்தையும ்செய்யவில்லை எனவும்  மாறாக இந்தப் போராட்டத்தை வைத்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவா்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறனவா்கள்  மாவீரா் துயிலுமில்லத்தில் அரசியல் செய்வதனை நாம் மட்டுமல்ல  தமிழ் மக்கள் எவரும் விரும்ப மாட்டாா்கள் எனவும்   கிளிநொச்சியில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையில்  இந்த சமாதியை  இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினா் ஒருவர் உடைத்துவிட்டு இராணுவ புலனாய்வுப்பிரிவினா் மீது பழியை சுமதிவிடலாம், அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் உடைந்துவிடலாம் அவ்வாறான நிலைமையே காணப்படுகிறது எனவும் தெரிவித்தாா்.

இதேவேளை கு. பிரபாகரன்  ( எழிலன்) எனும் முன்னாள் போராளி கருத்து தெரிவித்த போது   மாவீரா் துயிலுமில்லங்களை புனரமைக்க தயவு செய்து புலம் பெயர் உறவுகள் எந்தவொரு அரசியல்வாதிகளிடம் நிதியை வழங்காதீர்கள்  அப்படி வழங்கினால் அதிலும் அவா்கள் ஊழல் செய்வாா்களே  தவிர திருப்தியான பணிகள் இடம்பெறாது எனத் தெரிவித்தார்.
IMG_0423.jpg
கடந்த காலத்திலும் என் போன்ற முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவா்கள் உட்பட முன்னாள் போராளிகளை வைத்து இந்த அரசியல் வாதிக்ள கோடிக்கணக்கான நிதியை வெளிநாடுகளில் இருந்து திரட்டியிருக்கினறாா்கள்.  ஆனால் என்ன நடந்தது. எதுமில்லை யாருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினோமோ அவா்களிடம்  வேலை கேட்டுசெல்கின்ற அவலம்தான் நடந்துள்ளது. எங்களின் பெயரால் சேகரிக்கப்பட்ட நிதி அவா்களின் வங்கி கணக்கையே நிரப்பியுள்ளது. எனவும் தெரிவித்தாா்.

IMG_0400.jpgIMG_0401.jpgIMG_0407.jpg

http://globaltamilnews.net/archives/12714

7 minutes ago, நவீனன் said:

எவ்வித தியாகமும் செய்யாத ஒருவா் விளக்கேற்றினாா். அவரது குடும்பத்தில் பன்னிரண்டு சகோதரர்கள் எவரும் இந்த மண்ணுக்காக எந்த  தியாகத்தையும ்செய்யவில்லை எனவும்  மாறாக இந்தப் போராட்டத்தை வைத்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவா்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

யாரடாப்பா ?

  • கருத்துக்கள உறவுகள்

வேற யார் சின்னக்கவுண்டர் சிறிதரன், அவரின் முன்னாள் அல்லக்கை (?) தான் சொக்ஸோட நிற்கிறது.

  • தொடங்கியவர்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைகிறது  பொதுக்கல்லறை

 

 

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை இன்று பன்னிரண்டு முப்பது மணியளவில் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் இணைந்து  நாட்டியிருந்தனார்.

unnamed__1_.jpg

யுத்த நிறைவிற்கு பின்னர் உடைக்கப்பட்டிருந்த குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக் கல்லறை அமைக்கும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், கடந்த  வருட இறுதியில்  அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டதுடன் யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில் அங்கு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு  மாவீரர்  தினம்  அனுஸ்டிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

unnamed__2_.jpg

unnamed__3_.jpg

unnamed__4_.jpg

unnamed__5_.jpg

unnamed__6_.jpg

unnamed.jpg

http://www.virakesari.lk/article/15120

  • தொடங்கியவர்

மாவீரா் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலிஸாரினால் இடைநிறுத்தம்

 

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

unnamed__7_.jpg

முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும்   முன்னாள் போராளிகள் சிலா்  இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனா்.

unnamed__8_.jpg
இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின்  செயலலாளா் க. கம்சநாதன்  தன்னுடைய  அனுமதியின்றி   சுடலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டாம்  என உத்தரவிட்டிருந்தாா்.unnamed__9_.jpg அதற்கு  எதிா்ப்புத் தெரிவித்த மாவீரா்களின் உறவினா்கள் மற்றும்   முன்னாள் போராளிகள் இது பிரதேச சபையின் உரிமைக்குட்பட்ட காணி  அல்ல எனச் சுட்டிக்காட்டியதோடு, இராணுவம் இவ்வளவு நாளும் இங்கு கட்டிடங்கள் அமைத்து இருந்த போது  உங்களுடைய பிரதேச சபையும்  சட்டங்களும் எங்கு போனது எனவும் கேள்வி எழுப்பியதோடு தங்களது பணியை தொடா்ந்தும் முன்னெடுத்தனா். unnamed__10_.jpgஅரசியல்  அழுத்தம் காரணமாகவே பொது நனைவுச் சின்னம் அமைக்கும் பணியை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  கருதுவதாக  முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள்  போராளியான கு. பிரபாகரன் (எழிலன்)  தெரிவித்தாா்.unnamed.jpg
இதனை தொடா்ந்து கிளிநொச்சி  உதவி பொலீஸ் அத்தியட்சா் . கிளிநொச்சி பொலிஸாா் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்று பொது நினைவு சமாதி அமைக்கும் பணியில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனா்.   கிளிநொச்சியிலிருந்து 119 தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து மாவீரா் துயிலுமில்லம் காணியில் சட்டவிரோத பணிகள் இடம்பெறுகிறது என முறைப்பாடு செய்தமையினை தொடா்நது தாம் இங்கு வருகைதந்தாகவும். இன்று வியாழன் நான்கு மணிக்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சமுகளிக்குமாறு  அங்கு பிரதேச சபை செயலாளா், பிரதேச செயலாளா் உள்ளிட்ட  பலரை அழைத்து பேசி தீர்வுக்கு வருவோம் எனக் கூறி சமாதி அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளனா்.

http://www.virakesari.lk/article/15127

  • தொடங்கியவர்

கனகபுரம் மாவீரர் மயானத்தில் பொதுக்கல்லறை அமைக்கும் பணிகள் பொலிஸாரால் இடைநிறுத்தம்

4 minutes ago, நவீனன் said:

கனகபுரம் மாவீரர் மயானத்தில் பொதுக்கல்லறை அமைக்கும் பணிகள் பொலிஸாரால் இடைநிறுத்தம்

போற போக்கை பார்த்தால் ஸ்ரீதரனுக்கு கிட்டடியிலை விழும்போல் கிடக்கு .

  • தொடங்கியவர்

பொது நினைவுச் சமாதி அமைத்த ஆறுபேரை நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

kili-news1.jpg
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க. கம்சநாதனின்  முறைப்பாட்டையடுத்து  பொது நினைவுச் சமாதி அமைத்த ஆறுபேரை வெள்ளிக்கிழமை நாளை  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு  கிளிநொச்சி பொலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இன்று வியாழன் முற்பகல்  மாவீரர்களின் உறவினா்கள் முன்னாள் போராளிகள் என பலா் ஒன்று  சோ்ந்து பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனா்.  இவர்கள் இன்று வியாழக்கிழமை  மாலை நான்கு முப்பது மணிக்கு கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி நீதி  நீதவான் நீதிமன்றுக்கு வருமாறு  அறிவிக்கப்பட்டுள்ளனா்..

இது தொடா்பாக கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க.கம்சநாதனிடம் வினவிய போது
kili-news2.jpg
சுடலைகளில் ஏதேனும் பணிகளை மேற்கொள்வதாக இருந்தால்  பிரதேச சபையின் அனுமதி பெறப்படல் வேண்டும் என்றும் அவ்வாறு எந்த  அனுமதியும் பெறப்படாது பணிகள் இடம்பெற்றமையினால் அதனை நிறுத்த கோரியதாகவும் ஆனால்  பணியில் ஈடுப்பட்டவா்கள் நிறுத்தாது தனது  கடமைகளையும் செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தினர் எனவும்  எனவேதான் முறைபாடு செய்தேன் எனத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஏற்பாட்டாளா்கள் கருத்து  தெரிவித்த போது கடந்த நவம்பா் 27 ஆம் திகதி மாவீரா் நாள் நிகழ்வு நடந்த போது இந்தச் செயலாளரும் அவரது சட்டங்களும் எங்கு சென்றது எனக் கேள்வி எழுப்பியதோடு,  துயிலுமில்லம் அமைந்துள்ள குறித்த கனகபுரம் காணி தனியாா் காணியும் என்றும் அதற்கும் பிரதேச சபைக்கும் தொடா்பில்லை என்றும் குறிப்பிட்டதோடு ஒரு தமிழன் துயிமில்லத்தை சுடலை என்று குறிப்பிட்டதும் இதுதான் முதல் தடவை என்றும் தெரிவித்தனா்.

kili-news3.jpg

kili-news4.jpgkili-news5.jpg

 

http://globaltamilnews.net/archives/12769

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.