Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பிரச்சினை வேறு தமிழரின் விருப்பம் வேறு! கருணாநிதிக்கு டக்ளஸ் விளக்கக் கடிதம்.

Featured Replies

புலிகளின் பிரச்சினை வேறு தமிழரின் விருப்பம் வேறு! கருணாநிதிக்கு டக்ளஸ் விளக்கக் கடிதம்.

புலிகளின் பிரச்சினை வேறு; தமிழர்களின் விருப்பம் வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு தமிழக முதல்வர் கருமம் ஆற்றவேண்டும்.

இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.

இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தமிழக மண் தமிழர்களின் வேரடி மண்! தமிழுக்கு முதல்வரான நீங்கள் தமிழகத்திற்கு முதல்வராயிருப்பதே தமிழகம் பெற்றிருக்கும் மரியாதை மகுடம்! இந்த பொய்யாப் புகழ்ச்சியின் மகிழ்ச்சியில் நாங்களும் நனைகின்றோம்.

கடல் இடைநின்று தடுத்தாலும்... உடல் வேறு ஆனாலும்... எங்கள் உயிர் மூச்சு ஒன்றல்லவா!... உங்கள் உணர்வுகளின் கொதிப்பும், உயிர்த்துடிப்பும் தமிழகத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் உறுதிமிக்க உறவுப்பாலத்தை அமைத்திருக்கின்றன. இதனால் எம்மிடையே உற்சாகம் ஊற்றெடுத்து பாய்கின்றது.

ஈழத்தமிழர்கள் எழுந்தால் எழுவதற்கும், அழுதால் அழுவதற்கும், உயிர் பிரிந்தால் உயிர் துடிப்பதற்கும் என்று தளம் கொடுத்த தலைமகன் நீங்கள். ஈழத்தமிழர்கள் விரும்பும் வாழ்வியல் உரிமையும், கொண்டிருக்கும் அரசியல் உணர்வும் நீங்கள் அறியாதவர்கள் அல்லர். ஆனாலும், எமது மக்களின் குரலாக உங்கள் கவனத்திற்கு என்று கருதி இம்மடலை எழுதுகின்றேன்.

வெறும் உணர்ச்சிகளின் வேகமும் துப்பாக்கிகளின் மோகமும் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்த வேகமும் மோகமும் மக்கள் மீதான நேசம் என்று கருதி விடமுடியாது. இது தனியொரு குழுவின் இருப்புக்கான யுத்தமே ஒழிய மக்களின் விருப்புக்கான விடயமல்ல. வெல்லப்படமுடியாத ஒரு யுத்தத்தில் நாம் கொல்லப்பட வேண்டும் என்று எந்த இனமும் விரும்பாது.

அப்பாவி உயிர்களின் அழிவுகளில் அரசியல் ஆதாயம் தேடும் சுயநலன்கள் எமது மண்ணையும் மக்களையும் சுடுகாடு நோக்கி வழிகாட்டுகின்றன. இழந்த சுதந்திரத்திற்காக எழுந்த எமது தேசம் இருந்த சுதந்திரத்தையும் இழந்து நிற்கின்றது. சோறு இல்லை என்று அழுகின்ற வேதனை வெண்பாக்களும் இங்கு தேசிய கீதமாக ஒலிக்கின்றன.

பகுத்தறிவுப் பாசறையும் பட்டறிந்த அனுபவங்களும் கொண்டவர் கலைஞர் என்று ஈழத்தமிழர்கள் அறிவார்கள். ஈழத்தமிழர்களின் இன்றைய அவலம் தரும் வாழ்விற்கும் அச்சம் தரும் போருக்கும் யார் காரணம் என்பதை புரிந்திருப்பீர்கள்.

அமைதித் தீர்விற்கான வழிகளை அடைத்து மூடிவிட்டு யுத்தப் பிரகடனம் செய்துகொண்டிருக்கும் புலித்தலைமையே காரணம் என்பது ஈழத்தமிழர்களின் கருத்து. எமது மக்கள் தமிழீழம் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்ட தங்க விலங்கு அணிந்த கைதிகள். எமது மக்கள் உண்மைகள் மறுக்கப்பட்ட பூமியில் உதடுகள் பூட்டப்பட்ட பேசா மடந்தைகளாகி இருக்கின்றனர். ஆகவேதான் எமது மக்களின் குரலாக நான் உங்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்தவேண்டிய நிலையில் இருக்கின்றேன்!

மக்களது பிரச்சினை வேறு புலித் தலைமையின் பிரச்சினை வேறு! எமது மக்கள் அமைதிப் பூங்காவில் அரசியலுரிமை பெற்றவர்களாக அகமகிழ்ந்து வாழ விரும்புகிறார்கள். சம உரிமையோடு சமாதான சகவாழ்வு காண விரும்புகிறார்கள். ஆனால் புலித் தலைமையோ வெல்லப்பட முடியாத யுத்தத்தை விரும்பி நிற்கிறது. அப்பாவி இளைஞர், யுவதிகளை கட்டாயப்படுத்தி அவர்களைப் போருக்குப் பலி கொடுத்து வருகின்றது.

இருதரப்பும் கொண்டிருக்கும் இரு வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு காரியமாற்ற கலைஞர் முன்வரவேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பம் ஆகும். யுத்தத்தால் யாரும் வெல்லமுடியாது. யுத்தம் தரும் அழிவுகளுக்கு யாரும் அர்த்தம் சொல்லமுடியாது. ஆகவே, அமைதித்தீர்வு அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்வு மட்டும்தான். அதற்காக நீங்கள் இனிவரும் காலங்களில் இன்னும் பல மடங்கு பங்காற்றுவீர்கள் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

ஈழத்தமிழர்கள் மீது கருணைகொண்ட கலைஞர், காரியம் முடிப்பார் என்பது எமது மக்களின் அசையாத நம்பிக்கை.

முதுமையிலும் தளராத உங்கள் இளமையான உணர்வுகள் உங்களுக்கு தொடர்ந்தும் உற்சாகம் கொடுக்கவேண்டும் என்று நலமாக வாழ நாம் வாழ்த்துகின்றோம். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Sudaroli-

Edited by யாழ்வினோ

தவறாய் எழுதியிருப்பார் புலிகள் பிரச்சினை வேற அலிபாபாவும் நாப்பது திருடருமான நமக்கு பிரசினை வேற என கொலை குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளவர் அங்க போய் போய் வாறார் இப்ப கடிதமும் எழுதிறார்

சிங்களவரின் சிந்தனையில் அடிவருடித் தமிழனின் கடிதம்.

கலைஞருக்குத் துதிபாடுவதிலிருந்தே தெரிகிறது டக்கியின் குணம்.

ஈழத் தமிழரின் கருத்தை முன்வைக்க இவரென்ன தமிழரால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியா ?

Edited by lisa01

டக்கு கலைஞர் கருணாநிதிக்கு காதல் கடிதம் எழுதியதன் நோக்கம் தமிழர் படை யாழ்பாணத்தைக் கைப்பற்றும் போது பீ.பீ.பீ.பீ கட்சி உறுப்பினர்கள் இந்தியாவிற்கு தமிழ் சனங்களிடம் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்துடன் ஓடிவருவார்கள். அவ்வாறு வருபவர்களிற்கு கலைஞரிடம் அடைக்கலம் கேட்பதற்கு இப்பொழுதே டக்கு கலைஞருக்கு ஐஸ் வைக்கத் தொடங்கிவிட்டது!

நூற்றுக்கும் குறைவான கள்ளவோட்டுடன் சட்டவிரோதமான முறையில் பாராளுமன்றம் சென்று சிங்களவர்களின் கால்களில் செருப்பாக நின்று தேயும் டக்கு தமிழர்களின் மலசலகூடத்தை கழுவுவதற்கு கூட தகுதி அற்றவன்!

டக்கு சம்மந்தமான செய்திகளை தமிழீழம் செய்திகளில் இணைக்காது, தயவு செய்து நகைச்சுவைப் பகுதியில் ஒட்டிவிடவும்!

தமிழன் தமிழனைப் பற்றி கதைப்பதில் நியாயம் இருக்கிறது! ஆனால் டக்கு ஒரு தமிழன் அல்லவே! ஒசாமா பின்லாடனும் கூட மீசை, தலைப்பாகை எல்லாம் வைத்துள்ளான். அவனுக்கு நெற்றியில் ஒரு குங்குமப் பொட்டுவைத்து விட்டால் அவன் சுப்பிரமணிய பாரதியார் ஆகிவிட முடியமா?

வரலாறையே உதாரணம் காட்டி தமிழன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் கலைஞர் இந்த எட்டப்பன் கடிதங்களை எல்லாம் பொருட்படுத்தமாட்டார்ர்.

இவ்வளவு ஜனநாயக உரிமைகள் உள்ள இந்திய மத்திய அரசுடனேயே முட்டி மோதி அரசு நடத்தும் தி.மு.க அடிமையாய் தமிழரை நடாத்தும் சிங்கள அரசுடன் ஓத்து போங்கள் என்று ஒரு போதும் சொல்ல மாட்டார்.

அவர் தான் செக்கோ, சிலாவாக்கியா போன்று ஒத்துப்போகாவிட்டால் பண்பாக பிரிந்து தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று சொல்லிவிட்டார்.

கடிதத்தின் நோக்கம் எதுவானபோதும், கடிதவரிகளுக்கும் டக்ளசின் செயற்பாட்டிற்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத போதும், பின்வரும் வரிகள் நிஜமானவையே!

வெறும் உணர்ச்சிகளின் வேகமும் துப்பாக்கிகளின் மோகமும் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்த வேகமும் மோகமும் மக்கள் மீதான நேசம் என்று கருதி விடமுடியாது. இது தனியொரு குழுவின் இருப்புக்கான யுத்தமே ஒழிய மக்களின் விருப்புக்கான விடயமல்ல. வெல்லப்படமுடியாத ஒரு யுத்தத்தில் நாம் கொல்லப்பட வேண்டும் என்று எந்த இனமும் விரும்பாது.

அப்பாவி உயிர்களின் அழிவுகளில் அரசியல் ஆதாயம் தேடும் சுயநலன்கள் எமது மண்ணையும் மக்களையும் சுடுகாடு நோக்கி வழிகாட்டுகின்றன. இழந்த சுதந்திரத்திற்காக எழுந்த எமது தேசம் இருந்த சுதந்திரத்தையும் இழந்து நிற்கின்றது. சோறு இல்லை என்று அழுகின்ற வேதனை வெண்பாக்களும் இங்கு தேசிய கீதமாக ஒலிக்கின்றன.

சாணக்கியன் அதற்கு நீர் ஏன் கவலைப்படுகிறீர். அந்த மக்களின் இரத்தத்தை காட்டி இங்க வந்து குடியுரிமை பெற்று விட்டு இப்ப அந்த மக்கள் எப்படி போனால் என்ன. உங்கட சுயநலம் தான்.

நீர் கொஞ்சம் போராடி வெற்றி பெற்ற விடுதலை நாடுகளைப் பற்றி வாசியும்.

quote name='saanakiyan' date='Feb 7 2007, 10:25 AM' post='256737']

கடிதத்தின் நோக்கம் எதுவானபோதும், கடிதவரிகளுக்கும் டக்ளசின் செயற்பாட்டிற்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத போதும், பின்வரும் வரிகள் நிஜமானவையே!

நேசன் நான் சுயநலவாதிதான் எல்லோரையும் போல!

ஆனால் நீங்கள் குறிப்பிடும்படியான அளவுக்கல்ல. ஏனெனில் இன்னமும் நான் பிறந்த தேசத்தில் கிடைத்த கேள்விக்குறியான பிரஜாவுரிமையுடன்தான் வாழ்கிறேன். எனியும் சாகும்வரை வாழ்வேன்.

அந்த மக்களின் இரத்தத்தை காட்டி இங்க வந்து குடியுரிமை பெற்று விட்டு
என்ற உங்களின் இந்தக் கருத்தை ஆதரிக்கிறேன். அந்த மக்களின் இரத்தத்தில் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, ஏற்கனவே 4% (கூறப்படுகிறது) ஆகிவிட்ட அந்த மக்களிடம் நன்றியுணர்வு வேண்டாமே கொஞ்சம் இரக்கமாவது இங்கே போர்பரப்புரை செய்யும் புலம்பெயர் சுயநலவாதிகளுக்கு வேண்டாமோ?

நீர் கொஞ்சம் போராடி வெற்றி பெற்ற விடுதலை நாடுகளைப் பற்றி வாசியும்.

ஆம், எனக்கு மற்ற நாடுகளின் போராட்ட வரலாறு தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால் இன்று இப்போது தினமும் பயத்திலும் மரணத்தின் விழிம்பிலும் உழலும் எங்களுக்கு உங்கள் தீர்வு என்ன? சரித்திர பாட வகுப்பா?

நான் என்றும் கவர்ச்சி மிக்க எந்த இருதரப்பிற்காகவுமின்றி அழுக்குடையுடன் அனாதரவாக கைவிடப்பட்டிருக்கும் மக்களுக்காகவே கேள்வி கேட்கிறேன்.

ஊடகவியளாளர் கூட காலையில் அரசியல்வாதி ஒருவரை திட்டித்தீர்த்துவிட்ட ு(மக்கள் சார்பில்) மாலையில் அவருடன் விருந்துண்ணுகின்றனர். கேட்டால் ஊடகதர்ம வியாபாரம். பத்திரிகையை வாசிக்கும் மக்களே நாளைய செய்திகளாய் மீண்டும் மீண்டும் பத்திரிகைகளில்!

கடிதத்தின் நோக்கம் எதுவானபோதும், கடிதவரிகளுக்கும் டக்ளசின் செயற்பாட்டிற்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத போதும், பின்வரும் வரிகள் நிஜமானவையே!

உமக்கு நிஜமாகத் தெரியும் அந்த வரிகளிற்கும் புலிகளின் நடத்தைக்கும் கொள்கைகளிற்கும் வெகு தூரம். மேலோட்டமான வெளிப்பார்வையில் நிஜமாகத் தெரியக் காரணம் புலிகள் அல்ல. மாறாக புலிகளிற்கு வால்பிடிக்கும் ஊடகங்கள் தோற்றுவிக்கும் தவறான கருத்தியல். அந்த தவறான கருத்தியலில் மூழ்கி குரைத்துக் கொண்டு திரியும் "ஆதரவாளர்கள்" "உணர்வாளர்கள்" என்ற அரை வேக்காடுகள். இந்த சுயவிளம்பரம் தேடும் "ஊடகர்கள்" "ஆய்வாளர்களினதும"; மிகுதியாக உள்ள அரை வேக்காடுகளினதும் நியாயப்பாடுகளினதும் விளக்கங்களினதும் அடிப்படையில் தான் விடுதலைப் புலிகள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்றால் அது முற்றிலும் தவறு. ஆனால் அதை தவறு என்று பகுத்தறிந்து விளங்கத் தேவையில்லாதவர்களிற்கு புலிகள் மீது அவதூறுப் பிரச்சாரம் செய்ய இவை வசதியாகி விடுகிறது.

சாணக்கியன்!

நீங்கள் இந்த யுத்தம் தனியொரு குழுவின் இருப்புக்கான யுத்தம் என்று கருதுகிறீர்களா?

இந்த யுத்தம் வெல்லப்பட முடியாத யுத்தம் என்றும் கருதுகிறீர்களா?

உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சுத்தியலை அயலவர் ஒருவர் இரவலாக கேட்டால், நீங்கள் முதலில் கேட்பீர்கள்

1) எப்போது திருப்பித்தருவீர்கள்? (அவர் தருவார் என்ற நம்பிக்கையில்)

2) கவனம சுத்தியல்! (சுத்தியல் என்றாலும் அது உங்கள் பொருளல்லவா!)

தங்கள் வளங்களையும், வாழ்வையும், உயிரையும் மட்டுமின்றி இறுதியில் எதிர்காலத்தையும் தெரிந்தோ தெரியாமலோ வழங்கி நிற்கும் மக்களின் (4%) அதே கேள்விகளுக்கு பதில் வழங்கப்படவேண்டுமா வேண்டாமா?

1) வால்பிடிக்கும் ஊடகங்கள்,

2) "ஆதரவாளர்கள்" "உணர்வாளர்கள்" என்ற அரை வேக்காடுகள்,

3) சுயவிளம்பரம் தேடும் "ஊடகர்கள்" "ஆய்வாளர்கள்" மற்றும்

4) மிகுதியாக உள்ள அரை வேக்காடுகள்.

இங்கே மக்கள் யார்?

22ம் திகதியா? - பொப்கோர்ண் வாங்குங்கள்.

4 மாதம் மகிந்தவுக்கு கூடாது! - இதுவும் நல்லாதான் இருக்கு.

புலத்திலிருப்பவர்களுக்கு கவலை இல்லை. பொழுது போக்காக ஈழம் செய்திகள் பார்ப்பார்கள், நல்ல செய்திகள் (போர் வெற்றிகள்) இல்லை என்றால் Sun TV பார்ப்பார்கள். மிகுதி 4% மும் போனாலும் கொஞ்சம் கவலைபட்டு விட்டு 4 சிலிண்டர் வேகக்கார் செய்ய போய்விடுவார்கள்.

என்னுடைய கேள்விகளுக்கு நேரடியான பதிலை தாருங்கள்.

நீங்கள் எழுதியவற்றில் என்னுடைய கேள்விகளுக்கான பதில்கள் இல்லை.

சாணக்கியன்!

நீங்கள் இந்த யுத்தம் தனியொரு குழுவின் இருப்புக்கான யுத்தம் என்று கருதுகிறீர்களா?

இந்த யுத்தம் வெல்லப்பட முடியாத யுத்தம் என்றும் கருதுகிறீர்களா?

1) நல்ல உறுதியான இறுதித்தீர்வினை மக்களுக்கு பெற்றுத்தர இருக்கும் ஒரே ஒரு தெரிவாக புலிகளே உள்ள போதும், சில சமயங்களில் நேரடியாகவும், சில சமயங்களில் மறைமுகமாகவும் மக்களின் உரிமைகளை மதிக்காது செயற்படுவதை கண்டிக்கின்றேன். மேலும் மிக நீண்ட காலமாக மக்களுக்கு தீர்வெதனையும் பெற்றுத்தராது தொடரும் போராட்டத்தை, ஏனையவர்களை பல்வேறு காரணங்கள் கூறி ஓரங்கட்டி தன்னந் தனியே தலமைதாங்கும் அமைப்பு என்ற வகையில் இந்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

2) புலிகள் மேலும் மக்களை இறுதிப்போருக்காக இணையும்படி வற்புறுத்துகின்றனர். அவ்வாறில்லாவிடில் விடிவில்லை என்கின்றனர். 11வருடங்களுக்கு முன் 1995 ஆம் ஆண்டிலும் இவ்வாறே கூறப்பட்டது. மக்கள், போராளிகள் (புலிகள்) என்ற இரு பிரிவுகள் என்றும் தொடர்ந்து இருக்கும். (இதற்கு வாகரை ஒரு உதாரணம், இறுதி நேரத்தில் மக்கள் ராணுவக்கட்டுப்பாட்டிற்கும் போராளிகள் வேறு இடத்திற்கும் நகர்ந்தனர்) மக்கள் அனைவரும் என்றுமே போராளிகளாக ஆகமுடியாது. அப்படி ஒரு காலம் வரும் எனில் நீங்கள் அனைவரும் (புலத்தில் உள்ளவர்கள்) உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் பால் வயது வேறுபாடின்றி களத்தில் இறங்க வேண்டும். "காசு உழைச்சுக் கொடுக்கிறேன்". "சுவாத்தியம் ஒத்துக் கொள்ளாது" என்று எந்த சல்ஜாப்பும் சொல்லாமல் அனைவரும் வருவீர்களா? அது நடக்குமா? அது நடக்காது ஆகவே இந்த யுத்தம் வெல்லப்பட முடியாது.

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் உங்கள் கருத்தோடு 100% உடன்பட முடிகிறது. புகலிடத்தில் உள்ளவர்கள் அரசியல் அகதிகளே அல்ல. பொருளாதாரம் தேட வந்தவர்கள். சுத்தச் சுயநலவாதிகள். அவர்களுக்கு போராட்டம் ஒரு அகதி அந்தஸ்துத் தேடுவதற்கான கருவி. அகதி அந்தஸ்து பொருளாதாரம் தேடுவதற்கான அவசியம். அவர்களைப் பொறுத்தவரை அந்தந்த நாட்டு பிரஜா உரிமைக்காக ஈழத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் அல்லது கொடுப்பவர்கள். இங்கு நாம் குறிப்பிட்டோம் 15 இலட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி வந்துவிட்டனர். ஈழத்தில் சிங்களவன் சொல்வது போல 4% மும் இருக்கிறதோ தெரியாது. ஒரு தடவை பாதை திறந்தால் போதும் கனேடிய ஐரோப்பிய வீதிகளை நம்மவர்கள் நிரப்புவார்கள்..! தமிழர்களின் பலவீனமே வசதி வாய்ப்புக்கு வாய் பிளத்தல். அது இருக்கும் வரை தமிழீழம் வெறும் உச்சரிப்புத்தான்..! ஏழை மக்கள் தான் தமிழீழத்தை மீட்கவும் வேண்டும்..! மடியவும் வேண்டும்..! நடுத்தர பணக்கார காணிக்கார கடங்காரக் குடும்பங்கள் புகலிடத்தில் பொருளாதாரம் ஈட்ட வழிதேடிக் கொண்டே இருக்கும்..! அவர்களைப் பொறுத்தவரை தாயகப் பற்று ஒரு விளம்பரத்துக்கான வேசம். அகதி அந்தஸ்துக்கான அஸ்திரம் அவ்வளவுமே..! :rolleyes:

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

ஏழை ஈழத் தமிழரின் தாகம் நிம்மதி வாழ்வு.

புகலிடத்தமிழரின் தாகம் சொகுசான வெளிநாட்டில் அகதி அந்தஸ்து.

கூலித் தமிழனின் தாகம் சொந்த வீட்டில் கொள்ளி செருகுதல்.

இப்படி தமிழர்களில் 4 வகையினர் உண்டு. :rolleyes:

Edited by nedukkalapoovan

1) வால்பிடிக்கும் ஊடகங்கள்,

2) "ஆதரவாளர்கள்" "உணர்வாளர்கள்" என்ற அரை வேக்காடுகள்,

3) சுயவிளம்பரம் தேடும் "ஊடகர்கள்" "ஆய்வாளர்கள்" மற்றும்

4) மிகுதியாக உள்ள அரை வேக்காடுகள்.

ஐயோ மண்டையே பிளந்துவிடும் போல் உள்ளது. மேலுள்ள நான்கு வகை மனிதரில் தாங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதையும் தயவுசெய்து கூறிவிடமுடியுமா?

பந்தி பந்தியாக எழுதுகின்றீர்கள் ஆனால் முகமூடி அணிந்தபடி புதிர்கள் பல போடுகின்ற தாங்கள் யார் என்று, தங்கள் உண்மை முகங்களை ஏன் மறைக்கின்றீர்கள்? தங்களின் இலக்குத்தான் என்ன?

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

ஏழை ஈழத் தமிழரின் தாகம் நிம்மதி வாழ்வு.

புகலிடத்தமிழரின் தாகம் சொகுசான வெளிநாட்டில் அகதி அந்தஸ்து.

கூலித் தமிழனின் தாகம் சொந்த வீட்டில் கொள்ளி செருகுதல்.

இப்படி தமிழர்களில் 4 வகையினர் உண்டு. :rolleyes:

ஐயோ மண்டையே பிளந்துவிடும் போல் உள்ளது. மேலுள்ள நான்கு வகை மனிதரில் தாங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதையும் தயவுசெய்து கூறிவிடமுடியுமா?

பந்தி பந்தியாக எழுதுகின்றீர்கள் ஆனால் முகமூடி அணிந்தபடி புதிர்கள் பல போடுகின்ற தாங்கள் யார் என்று, தங்கள் உண்மை முகங்களை ஏன் மறைக்கின்றீர்கள்? தங்களின் இலக்குத்தான் என்ன?

இந்த மடலை தாடிகாறன் தனது சொந்த சிந்தையால் செதுக்கவில்லை

அவாரது கரம் இந்த மடலில் பதியப் படவில்லை..இந்த ககடிதத்தை

''போடியார்'' எழுதி கொடுக்க அதை அப்படியே வேண்டி தாடி காறன் ''கலைஞருக்கு'' அனுப்பியுள்ளான்.

மேலும் இவ்வகையான வரிகளை மணியத்தாரும் போடியாரும்

போட்டா போட்டி போட்டு மேளம் அடித்து சங்கூதி வில்லிசை கச்சேரியில்

இவற்றை பாடி மகிழ்தவையள் என்பது அவையின்ர அந்த கூத்தை கேட்டவர்களுக்கு புரியும்...

அதை விட்டு இவ்வாறான மடமைத்தனமான கேள்விகளிற்கு பதில் அளிக்காது விளகுதல் சிறந்தாதே...

இந்த குருதிஸதான் விடுதலை போரட்டம் எவ்வாறு மழுங்கடிக்கப்பட்டு அந்த தலைவரை கைது செய்தார்கள் என்பதை

இவ்வாறானவர்கள் சற்று ஆய்வு செய்து பார்த்தல் யாவும் புரியும்..மிகுதி கேள்விக்கு விடை தெரியும்..பதிலும் புரியும்...

அவர்கள் கண்மூடி விழிப்பதற்க்குள் காரியம் நடந்து முடிந்தது...

அவ்வாறான ஒரு வலை பின்னலுக்குல் புலிகளை சிக்க வைக்க பல அன்னிய சகத்திகள் போட்ட போட்டி போடுவதை

உற்று பார்க்கும் போது அறிய முடிகிறது...புலிகள் தாம் தமது நகர்வுகளை நகர்த்த முனைந்த வேளை அவர்களுக்கு வந்த திடிர் சமிக்கைகள்

எதை குறித்தன என்பது..சில காலம் கடக்கையில் அவர்கள சில உண்மைகளை சொல்லார்கள்

அப்போது தற்போது தாங்கள் கேட்க்கும் கேள்விகளிற்க்கும்..அறியாமை தனத்திற்கும் ஒரு முற்று புள்ளி வைக்கப் படும்..

இது இவர்களை போன்ற பல மக்கள் கேட்க்கும் கேள்வி... இதை..புலிகளும் நன்ங்கறிந்து வைத்துள்ளனர்..

ஆனால் அவர்களிற்கு விரித்த வலையில் அதை வpரித்தவர்களையே சிக்க வைக்க புலிகள் சில சதுரங்க ஆட்டத்தை முடுக்கி விட்டுள்ளனர்..

அந்த காய் நகர்த்தல் சற்று சறுக்கினாலும் புலிகளக்கும் ஆபத்து..எனவே தான் சில இன்னல்களுக்கு முகம் கொடுத்த வாறு

அந்த ஈழ விடுதலை புலிகள் தமது..நலன்களை காக்கும் வகையில் தமது இலக்கு நோக்கி நகர்கிறார்கள்...

அதற்க்கிடையில் இவ்வாறன துன்பியல் நிகழ்வுகளை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்..ஏனெனில் இது தான் வரலாறு..

ஒரு இனம் விடுதலை அடையும் போது இறுதியல் பல்லாயிரம் உயிர்களை விதையாக்கியே விடுதலை அடையும் அது தவிர்க்க முடியாத ஒன்று

அவ்வாறான நிகழ்வே தற்போதும்..இனி நடக்கப்போகும் எதிர் கொள்ளப்போகும் நிகழ்வுகளும் ஆகும்..

இவை அணைத்துக்கும் காரணம் தற்போதை உலக ஒழுங்கு முறையில் வந்த மாற்றமம் திடிர் திடிர் என வந்த அரசியல் மாற்றங்களும் போட்ட போட்களுமே..அதனால் தான் ஒவ்வொரு விடுதரல அமைப்பும் இவ்வாறான சிக்கலுக்கள் சிக்கி தவpத்து தம்மை விடுவிக்க சில பின்னடைவுகளையும் தந்திரோபய நகர்வுகளையும் கையாண்டு வெற்றி பெற்றன ..பெறுகின்றன.. அப்படியான ஒரு நிலையே தற்போது தமிழர் தேசமும் எதிர் கொள்கிறது..

இதை அந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

Edited by vanni mainthan

இந்த குருதிஸதான் விடுதலை போரட்டம் எவ்வாறு மழுங்கடிக்கப்பட்டு அந்த தலைவரை கைது செய்தார்கள் என்பதை

இவ்வாறானவர்கள் சற்று ஆய்வு செய்து பார்த்தல் யாவும் புரியும்..மிகுதி கேள்விக்கு விடை தெரியும்..பதிலும் புரியும்...

போராட்டம் தலைவருக்காகவா மக்களுக்காகவா? (குர்திஸ்தான் ஆகட்டும் தமிழீழம் ஆகட்டும்)

தயவுசெய்து உங்கள் விளக்கத்தை தாருங்கள். தவறு எனது எனில் ஏற்றுக்கொள்வேன்!

மாப்பிள்ளை,

கீழ்வரும் கேள்விக்கு நீங்கள் முதலில் விடைதாருங்கள். நான் உங்களுக்கு பதில் தருகிறேன்.

ஐயோ மண்டையே பிளந்துவிடும் போல் உள்ளது. மேலுள்ள நான்கு வகை மனிதரில் தாங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதையும் தயவுசெய்து கூறிவிடமுடியுமா?

பந்தி பந்தியாக எழுதுகின்றீர்கள் ஆனால் முகமூடி அணிந்தபடி புதிர்கள் பல போடுகின்ற தாங்கள் யார் என்று, தங்கள் உண்மை முகங்களை ஏன் மறைக்கின்றீர்கள்? தங்களின் இலக்குத்தான் என்ன?

அவர்கள் கண்மூடி விழிப்பதற்க்குள் காரியம் நடந்து முடிந்தது...

அவ்வாறான ஒரு வலை பின்னலுக்குல் புலிகளை சிக்க வைக்க பல அன்னிய சகத்திகள் போட்ட போட்டி போடுவதை

உற்று பார்க்கும் போது அறிய முடிகிறது...புலிகள் தாம் தமது நகர்வுகளை நகர்த்த முனைந்த வேளை அவர்களுக்கு வந்த திடிர் சமிக்கைகள்

எதை குறித்தன என்பது..சில காலம் கடக்கையில் அவர்கள சில உண்மைகளை சொல்லார்கள்

அப்போது தற்போது தாங்கள் கேட்க்கும் கேள்விகளிற்க்கும்..அறியாமை தனத்திற்கும் ஒரு முற்று புள்ளி வைக்கப் படும்..

இது இவர்களை போன்ற பல மக்கள் கேட்க்கும் கேள்வி... இதை..புலிகளும் நன்ங்கறிந்து வைத்துள்ளனர்..

ஆனால் அவர்களிற்கு விரித்த வலையில் அதை வpரித்தவர்களையே சிக்க வைக்க புலிகள் சில சதுரங்க ஆட்டத்தை முடுக்கி விட்டுள்ளனர்..

அந்த காய் நகர்த்தல் சற்று சறுக்கினாலும் புலிகளக்கும் ஆபத்து..எனவே தான் சில இன்னல்களுக்கு முகம் கொடுத்த வாறு

அந்த ஈழ விடுதலை புலிகள் தமது..நலன்களை காக்கும் வகையில் தமது இலக்கு நோக்கி நகர்கிறார்கள்...

அதற்க்கிடையில் இவ்வாறன துன்பியல் நிகழ்வுகளை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்..ஏனெனில் இது தான் வரலாறு..

ஒரு இனம் விடுதலை அடையும் போது இறுதியல் பல்லாயிரம் உயிர்களை விதையாக்கியே விடுதலை அடையும் அது தவிர்க்க முடியாத ஒன்று

அவ்வாறான நிகழ்வே தற்போதும்..இனி நடக்கப்போகும் எதிர் கொள்ளப்போகும் நிகழ்வுகளும் ஆகும்..

இவை அணைத்துக்கும் காரணம் தற்போதை உலக ஒழுங்கு முறையில் வந்த மாற்றமம் திடிர் திடிர் என வந்த அரசியல் மாற்றங்களும் போட்ட போட்களுமே..அதனால் தான் ஒவ்வொரு விடுதரல அமைப்பும் இவ்வாறான சிக்கலுக்கள் சிக்கி தவpத்து தம்மை விடுவிக்க சில பின்னடைவுகளையும் தந்திரோபய நகர்வுகளையும் கையாண்டு வெற்றி பெற்றன ..பெறுகின்றன.. அப்படியான ஒரு நிலையே தற்போது தமிழர் தேசமும் எதிர் கொள்கிறது..

இதை அந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

ஐயா வன்னிமைந்தன் தங்களின் இதயசுத்தியுடனான விளக்கத்திற்கு நன்றி!

மாப்பிள்ளை,

கீழ்வரும் கேள்விக்கு நீங்கள் முதலில் விடைதாருங்கள். நான் உங்களுக்கு பதில் தருகிறேன்.

சாணக்கியன்,

பந்தை சாணக்கியமாக எனது பக்கம் அடித்துவிட்டதாய் எண்ணி மகிழ வேண்டாம். வேண்டுமானால் உங்கள் சந்தோசத்திற்கு என்னை "ஆதரவாளர்கள்" "உணர்வாளர்கள்" என்ற அரை வேக்காடுகள்" என்ற இரண்டாவது பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம்!

அதுசரி இப்போது தாங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்று கூற முடியுமா?

ஒட்டுக்குழுக்கள், தமிழினத் துரோகிகள் அடங்கும் ஐந்தாவது பிரிவை தாங்கள் வரைவிலக்கணம் தரும் போது மறந்து விட்டீர்கள்! பீ.பீ.பீ.பீ குழு மீதுள்ள விசுவாசமே தாங்கள் ஐந்தாவது பிரிவை வேண்டுமென்று சொல்லாது விட்டதன் நோக்கம் என அடியேன் கருத முடியுமா?

மாப்பிள்ளை,

என்ன குழந்தப்பிள்ளையாட்டம் கதைக்கிறீர்கள்?

நீங்கள் கேட்ட கேள்விகள் 4 அவையாவன.

1) மேலுள்ள நான்கு வகை மனிதரில் தாங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதையும் தயவுசெய்து கூறிவிடமுடியுமா?

2) பந்தி பந்தியாக எழுதுகின்றீர்கள் ஆனால் முகமூடி அணிந்தபடி புதிர்கள் பல போடுகின்ற தாங்கள் யார்?

3) தங்கள் உண்மை முகங்களை ஏன் மறைக்கின்றீர்கள்?

4) தங்களின் இலக்குத்தான் என்ன?

மிகுதி 3 கேள்விகளுக்கும் விடை எங்கே?

திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள். வகை பிரித்தது யார் என்று புரியும். இடையில் புகுந்து புரியாமல் குழப்புகிறீர்களே?

சரி உங்கள் விருப்பப்படியே என்னை அந்த 5ம் படையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால் தயவுசெய்து பின்வரும் கூற்றுகள் குறித்து உங்கள் பதிலைதாருங்கள்.

1) பாதுகாக்கப்படவேண்டிய மக்களின் அழிவுகள் முடிவின்றி தொடர்ந்து நீண்டு செல்வது குறித்து புலிகள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர்.

2) புலிகள் தங்கள் நலன்களை காக்கும் வகையில் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளுகின்றனர்.

3) மக்கள் மேலும் மேலும் அழிவுகளையும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

4) பல்லாயிரம் மக்களை உயிர்பலி கொடுத்தாலே விடுதலை விளையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஆட்டோ காரன் மேலதிகாமாக காசு கேடதுக்கு அவனை படுகொலை செய்த டக்கிளஸ்( கொலைக்கு பதிவு பொலிஸில் இருக்கு) இருந்தும் இந்தியாவுக்கு என்று ஊர் சுர்றி வருகிறான் என்றால் இந்தியாவின் ஜனாயகம் எப்படி என்று தெரிகிறது.....

அவன் சொன்ன கருத்தை தூக்கி பிடிக்கும் இந்த தொங்குண்ணிகளை பற்றி சொல்லவே வேண்டாம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசன் நான் சுயநலவாதிதான் எல்லோரையும் போல!

ஆனால் நீங்கள் குறிப்பிடும்படியான அளவுக்கல்ல. ஏனெனில் இன்னமும் நான் பிறந்த தேசத்தில் கிடைத்த கேள்விக்குறியான பிரஜாவுரிமையுடன்தான் வாழ்கிறேன். எனியும் சாகும்வரை வாழ்வேன்.

என்ற உங்களின் இந்தக் கருத்தை ஆதரிக்கிறேன். அந்த மக்களின் இரத்தத்தில் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, ஏற்கனவே 4% (கூறப்படுகிறது) ஆகிவிட்ட அந்த மக்களிடம் நன்றியுணர்வு வேண்டாமே கொஞ்சம் இரக்கமாவது இங்கே போர்பரப்புரை செய்யும் புலம்பெயர் சுயநலவாதிகளுக்கு வேண்டாமோ?

ஆம், எனக்கு மற்ற நாடுகளின் போராட்ட வரலாறு தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால் இன்று இப்போது தினமும் பயத்திலும் மரணத்தின் விழிம்பிலும் உழலும் எங்களுக்கு உங்கள் தீர்வு என்ன? சரித்திர பாட வகுப்பா?

நான் என்றும் கவர்ச்சி மிக்க எந்த இருதரப்பிற்காகவுமின்றி அழுக்குடையுடன் அனாதரவாக கைவிடப்பட்டிருக்கும் மக்களுக்காகவே கேள்வி கேட்கிறேன்.

ஊடகவியளாளர் கூட காலையில் அரசியல்வாதி ஒருவரை திட்டித்தீர்த்துவிட்ட ு(மக்கள் சார்பில்) மாலையில் அவருடன் விருந்துண்ணுகின்றனர். கேட்டால் ஊடகதர்ம வியாபாரம். பத்திரிகையை வாசிக்கும் மக்களே நாளைய செய்திகளாய் மீண்டும் மீண்டும் பத்திரிகைகளில்!

ஆம் நீர் புலம் பெய்ர்ந்த நாட்டில் பிறந்து இருபதால் கட்டாயம் அப்பா அம்மாவும் இங்கு தான் ஆனா எனது தாய் தந்தையுடன் 2 தம்பியும் தங்கையும் இன்றும் யாழ்ப்பாணத்தில் தான் அவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும் ஆனாலும் அவர்களுடன் பேசும் சந்தர்ப்பங்களில் சொல்லுவார்கள் பட்ட கஷ்டத்தோடு இன்னும் பட்டாலும் பறவாய் இல்லை சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவதிடம் இருந்து எப்ப தான் விடிவு கிடைக்கும் என்று காத்து இருக்கிறார்கள்

எப்போது 95 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கை மீண்டும் வரும் என்ற ஆவளுடன்.

கடிதத்தின் நோக்கம் எதுவானபோதும், கடிதவரிகளுக்கும் டக்ளசின் செயற்பாட்டிற்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத போதும், பின்வரும் வரிகள் நிஜமானவையே!

ஆனாலும் உமது தமிழ் அறிவை பாராட்ட தான் வேண்டும்

நான் எல்லாம் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளந்தாலும் இன்னும் எழுத்து பிழைகள் விட்டும் ஒரு பொய்யை உண்மையாக வாதாடும் திறமை என்னிடம் வரவில்லை

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழி கேள்விப்பட்டு இருக்கின் ஆனால் நீர் சொன்ன பொய்யை திரும்ப திரும்ப்ப சொல்லி உண்மையாக்க பார்க்கிறீர் ஆனா நாங்கள் அம்மியும் இல்லை நீர்???????????

மாப்பிள்ளை, என்ன குழந்தப்பிள்ளையாட்டம் கதைக்கிறீர்கள்? நீங்கள் கேட்ட கேள்விகள் 4 அவையாவன.

1) மேலுள்ள நான்கு வகை மனிதரில் தாங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதையும் தயவுசெய்து கூறிவிடமுடியுமா?

2) பந்தி பந்தியாக எழுதுகின்றீர்கள் ஆனால் முகமூடி அணிந்தபடி புதிர்கள் பல போடுகின்ற தாங்கள் யார்?

3) தங்கள் உண்மை முகங்களை ஏன் மறைக்கின்றீர்கள்?

4) தங்களின் இலக்குத்தான் என்ன? மிகுதி 3 கேள்விகளுக்கும் விடை எங்கே?

திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள். வகை பிரித்தது யார் என்று புரியும். இடையில் புகுந்து புரியாமல் குழப்புகிறீர்களே? சரி உங்கள் விருப்பப்படியே என்னை அந்த 5ம் படையில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தயவுசெய்து பின்வரும் கூற்றுகள் குறித்து உங்கள் பதிலைதாருங்கள்.

1) பாதுகாக்கப்படவேண்டிய மக்களின் அழிவுகள் முடிவின்றி தொடர்ந்து நீண்டு செல்வது குறித்து புலிகள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர்.

2) புலிகள் தங்கள் நலன்களை காக்கும் வகையில் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளுகின்றனர்.

3) மக்கள் மேலும் மேலும் அழிவுகளையும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

4) பல்லாயிரம் மக்களை உயிர்பலி கொடுத்தாலே விடுதலை விளையும்.

ஐயா சாணக்கியன்,

உமது கேள்விகளிற்கான பதிலை சுருக்கமாக கூறிவிடுகின்றேன்.

1) மேலுள்ள நான்கு வகை மனிதரில் தாங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதையும் தயவுசெய்து கூறிவிடமுடியுமா? "ஆதரவாளர்கள்" "உணர்வாளர்கள்" என்ற அரை வேக்காடுகள்.

2) பந்தி பந்தியாக எழுதுகின்றீர்கள் ஆனால் முகமூடி அணிந்தபடி புதிர்கள் பல போடுகின்ற தாங்கள் யார்? சிங்களக் குண்டர்களினாலும், ஒட்டுக்குழுக்களாலும், இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாலும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஓர் அப்பாவித் தமிழ் மக்கள்.

3) தங்கள் உண்மை முகங்களை ஏன் மறைக்கின்றீர்கள்? எங்களுக்குத்தான் முகங்களே இல்லையே! சிங்களக் குண்டர்கள், ஒட்டுக்குழுக்கள் மற்றும் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் ஏற்கனவே எங்கள் தலையைக் கொய்து விட்டார்களே! நாங்கள் தலையில்லாத வெறும் முண்டங்கள்!

4) தங்களின் இலக்குத்தான் என்ன? தமிழீழத் தேசியத்தலைமை சாதாரண தமிழ் மக்களிடம் எதை எதிர்பார்க்கின்றதோ எதைக் கேட்கின்றதோ அதை உம்மைப்போல் சாணக்கியத்துடன் ஆராய்ந்து தத்துவ ஆராய்ச்சிகள் செய்யாது உடனடியாகவே நிறைவேற்றுவது!

1) பாதுகாக்கப்படவேண்டிய மக்களின் அழிவுகள் முடிவின்றி தொடர்ந்து நீண்டு செல்வது குறித்து புலிகள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர்.

2) புலிகள் தங்கள் நலன்களை காக்கும் வகையில் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளுகின்றனர்.

3) மக்கள் மேலும் மேலும் அழிவுகளையும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

4) பல்லாயிரம் மக்களை உயிர்பலி கொடுத்தாலே விடுதலை விளையும்.

மேற்குறித்த நான்கு கேள்விகளிற்குமான பதில்களை தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரைகளில் இருந்து தாங்கள் அறிந்து கொள்ள முடியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமக்கு நிஜமாகத் தெரியும் அந்த வரிகளிற்கும் புலிகளின் நடத்தைக்கும் கொள்கைகளிற்கும் வெகு தூரம். மேலோட்டமான வெளிப்பார்வையில் நிஜமாகத் தெரியக் காரணம் புலிகள் அல்ல. மாறாக புலிகளிற்கு வால்பிடிக்கும் ஊடகங்கள் தோற்றுவிக்கும் தவறான கருத்தியல். அந்த தவறான கருத்தியலில் மூழ்கி குரைத்துக் கொண்டு திரியும் "ஆதரவாளர்கள்" "உணர்வாளர்கள்" என்ற அரை வேக்காடுகள். இந்த சுயவிளம்பரம் தேடும் "ஊடகர்கள்" "ஆய்வாளர்களினதும"; மிகுதியாக உள்ள அரை வேக்காடுகளினதும் நியாயப்பாடுகளினதும் விளக்கங்களினதும் அடிப்படையில் தான் விடுதலைப் புலிகள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் என்றால் அது முற்றிலும் தவறு. ஆனால் அதை தவறு என்று பகுத்தறிந்து விளங்கத் தேவையில்லாதவர்களிற்கு புலிகள் மீது அவதூறுப் பிரச்சாரம் செய்ய இவை வசதியாகி விடுகிறது.

பன்னாடைகளே நீங்கள் சொல்லும் அந்த ஊடகங்களில் வருபவை உண்மைக்கு புறம்மாக இருக்கட்டும் ஆனால் அதை உங்களால் விமர்சனம் என்ற பெய்ரில் தோல் உரித்து காட்ட முடியுமா?

ஏதோ நீர் மட்டும் தான் ஊடகங்களை கண்கானித்து கொண்டு இருந்து அந்த ஊடகங்களில் வருபவை பொய் என்று கத்தி கொண்டு இருக்கிறீர்

உம்மால் அதுக்கு எதிரான விமர்சனத்தை வைக்க முடியுமா?

ஊடகத்தின் பெயர்

எழுதியவர்

அவர் எழுதிய பொய்

உண்மை

உங்களால் முடியுமா????????????

இல்லையா? பேசாமல் வாயை மட்டும் இல்லை எல்லாத்தையும் மூடி கொண்டு இருங்கள் இல்லையேல் நாறும்.

மிஸ்டர் சாணக்கியன்..

தங்களின் விளங்குதல் எவ்வாறு உள்ளதென்பது இதில் இருந்து புரிகிறது....

சரி தங்கள் கூற்றுப்படி பார்ப்போமேயானால்..இன்று அரச படைகள் ஏன் சாதரண அப்பாவி தமிழ்

மக்களை கொள்கின்றது..??

சிறையில் பிடித்து அடைக்கிறது.???

இதற்கு அடிப்படை காரணம் என்ன..???

அவன் இவ்வாறு தானே சொல்கின்றான்..அவர்கள் பயங்கர வாதிகள்..

பயங்கார வாதத்துடன் தொடர்புடையவர்கள்..

அப்படியானால் அது விடுதலைப்புலிகள்தானே

அந்த மக்கள்..இது இவ்வாறு இருக்கும் போது..நான் சொன்ன விடயம்..

''புலிகள் தங்கள் நலனை காத்தபடி''

அதன் பொருள் தமிழ்தேச மக்களை காத்தல்...

இதுவும் விளங்காமல் ''சாணக்கியன்'' என்ற பெயர் எதற்க்கு....???

உலக வரலாறுகளை எடுத்து பாருங்கள் அந்த தேசம் விடுதலை அடைந்த போது

எத்தனை ஆயிரம் மக்களை பலி கொடுத்ததென்பது...

அதற்க்கு அடிப்படை காரணம்..அந்த படைகளிற்கு எதிரதக அந்த விடுதலை அமைப்புக்கள்

தங்களது தாக்குதல் திறனை அதிகரிக்கும் போது...

பல பரதேசங்களை குறுகிய காலத்திற்க்குள் கையகப்படுத்தும் போது..இவ்வாறான

போரியல் மாற்றங்கள் திடிர் திருப்பமாக மாறி

அந்த அரச படைகளின் இராணுவ சமநிலைக்கு மேலாக எழும்போது..

அந்த ஆக்கிரமிப்பு படைகளிற்கு ஏனைய உலக நாடுகளினது உதிவிகள்..அரசியல்..இராணுவ

நலன் சம்பந்தமானவை வரும்போது...இவ்வாறான சூழல'; வரும்..இதை முன் கூட்டியே அறிந்து வைத்திருக்கும்

அந்த விடுதலை படைகள்....தமத இலக்குகளை தாமதம் இன்றி அதே வேளை....மிக சாதுரியமாக வெல்வர்..இதுதான வரலாறு கூறும் செய்திகளாய் உள்ளன...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.