Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் மூன்று சிங்களவர் கைது கொழும்பில் பாரிய தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது

Featured Replies

ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்த மூவரை தாம் கைது செய்துள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

[Wednesday February 07 2007 10:30:24 AM GMT] [virakesari.lk]

இவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளையடுத்து, இம்மூவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஹிரு பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளர் உபாலி செனவிரட்ண, தொழிற்சங்கவாதியும் அக்குண பத்திரிகையின் ஆசிரியருமான சிசிர குமார மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் நிஹால் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிப் பொருட்களையும், ஆயுதங்களையும் இராணுவத்தினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் சி4 வெடிகுண்டு மருந்து ஆறு கிலோ கிராம், ரி56 ரக துப்பாக்கிகள், ரபில்ஸ், ரவைகள், கைக்குண்டுகள் போன்றவை அடங்கும் என இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, கைது செய்யப்பட்ட மூவரும், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் வீடியோ காண்பிக்கப்பட்டது. இதில் கருத்து தெரிவித்த ஹிரு பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளர் உபாலி செனவிரட்ண கூறியதாவது:

ஆரம்பத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்பட்டு வந்த நான், அவர்களது கொள்கை பிடிக்காமல் அக்கட்சியிலிருந்து விலகிச் சென்றேன். நாடு பாதாளத்திற்குள் செல்வதை பார்த்து பொருத்துக்கொள்ள முடியாமல் தனியான ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராட்டத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.

இதனால், நான் புலிகளின் உதவியை நாடினேன். ரவி என்பவர் ஊடாக புலிகளை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்கள் என்னை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று ஆயுத பயிற்சியளித்தார்கள். அத்தோடு ஆயுதங்களையும் தந்தார்கள்.

கொழும்பில் இடம்பெற்ற சில குண்டு வெடிப்புக்களுக்கு நான் எனது சகாக்களும் ஒத்துழைப்பு வழங்கியதோடு, எங்களுக்கு தேவையான ஆயுதங்களையும் பெற்றுக்கொண்டோம் எனத் தெரிவித்தார்.

இதுதவிர, கைது செய்யப்பட்ட ஏனைய இரு ஊடகவியலாளர்களினது வீடியோ காட்சிகளும் காண்பிக்கப்பட்டது. இதன்போது, தாமும் நாட்டில் இடம்பெறும் அசம்பாதவிங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் போராட ஆயத்தமானதாக தெரிவித்தனர்.

மிகப்பெரிய சதிவலை ஒன்று தமிழர்களுக்கெதிராகவும்; புலிகளுக்கெதிராகவும் பின்னப்படுகின்றது சம்மந்தப்பட்டவர்கள் இதைகவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி என்று சொல்லி அப்பாவித்தம்மிழனை பிடித்த காலம் போய் இப்ப புலி என்று சொல்லி சிங்களவனையும் பிடிக்கிற காலம் வந்துட்டுது.

இது ஒரூ முக்கியமான மாற்றம்.

மொக்குச்சிங்களவனுக்கு விசயங்கள் வடிவாக விளங்க இன்னும் கொஞ்சக் காலம் பிடிக்கும்.

Way to Go மகிந்த மாமா!

* படையினர் கூறுகின்றனர்

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை படையினரால் மூன்று சிங்களவர்கள் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டதையடுத்து பாரிய தாக்குதலொன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த மூன்று சிங்களவர்கள் பற்றியும் படைத்தரப்பு எதுவும் தெரிவிக்காத அதேநேரம், கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் இரு சிங்கள ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனமொன்றைச் சேர்ந்த ஒரு சிங்களவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையிலேயே படையினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று சிங்களவர்களிடமிருந்தும் ஆறு கிலோ நிறையுடைய "சீ4" ரக வெடிப்பொருட்களும், நான்கு ரி-56 ரக துப்பாக்கிகளும், அவற்றுக்கான 449 ரவைகளும், இருமைக்ரோ பிஸ்டல்களும் அவற்றுக்கான 49 ரவைகளும், 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிக்கான 50 ரவைகளும், தலா ஒரு கிலோ நிறையுடைய இரு கிளேமோர் குண்டுகளும் இரு இலத்திரனியல் வெடிக்க வைக்கும் கருவிகளும் கைப்பற்றியுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று சிங்களவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவர்கள் ஆறு மாதங்களாக கிளிநொச்சியில் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கபில அம்மானிடம் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று பயங்கரவாத சந்தேக நபர்களையும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்ததன் மூலம் கொழும்பில் நடைபெறவிருந்த பாரிய உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பற்றிய தகவல்களை தந்த பொதுமக்களுக்கு தாங்கள் நன்றி தெரிவிப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

http://www.thinakkural.com/news/2007/2/7/i...s_page20878.htm

Edited by ஈழவன்85

கடத்தலும் கைதும் - வெளிவருகின்ற உண்மைகள்.

- பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 08 குநடிசரயசல 2007 10:08

சிறிலங்காவின் புகையிரதத்துறைத் தொழிற்சங்கத்தினால் வெளியிடப்படுகின்ற அருண பத்திரிகையின் ஊடகவியளாளர்கள் மூவர் புலிகளுடன் நெருக்கமான தொடர்டபுகளைக் கொண்டிருந்ததாக நேற்றைய தினம் சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை, ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. குறித்த ஊடகவிலாளர்களுள் ஒருவர் பேசியதாகக் கூறப்படும் ஓளிநாடாவும் ஊடகமாநாட்டில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஊடகவியலாளர்களும் சிங்களவர்கள். கடந்த திங்கட்கிழமை இவர்கள் “கடத்தப்பட்டதாகவே” செய்திகள் வந்தன. ஊடகவியலாளர் சங்கங்கள் இவர்களின் விடுதலையைக்கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். அப்போது வாய்திறக்காமல் இருந்த அரசு இப்போது இரண்டு நாட்கள் கழித்து தாமே அவர்களைக் “கைதுசெய்ததாக” பகிரங்கப்படுத்தியுள்ளது.

தம்மால் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பயிற்சி பெற்றதாகவும் ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டதாகவும் தாக்குதல்களை நடத்தியதாகவும் கொழும்பின் சுற்றுப்புறங்களில் பதற்ற நிலையை உருவாக்க முயற்சித்தாகவும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை அரசு முன்வைத்தது.

தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை அரசு புலிகளுடன் தொடர்புபடுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்குட்படுத்தியுள்

  • தொடங்கியவர்

தொழிற்சங்கவாதிகளை கடத்துமளவுக்கு இலங்கையில் சம்பவங்கள் அதிகரிப்பு

[08 - February - 2007]

-ஆசிய மனித உரிமை ஆணைக்குழு விசனம்

இலங்கையில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்கள், தற்போது தொழிற்சங்கவாதிகள் கடத்தப்படுமளவுக்கு பரந்து சென்றுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பிலும் அதன் சுற்றுப்புறத்திலும் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தொழிற்சங்க ஊடகவியலாளரும் ஒரு தொழிற்சங்கவாதியும் கடத்தப்பட்டது தொடர்பாக நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில்,

இவர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பு (ஆர்.எஸ்.எவ்) தெரிவித்துள்ளது.

அச்சகத்திலிருந்து வெளியேறிய, `அக்குண' பத்திரிகை எழுத்தாளர் நிஹால் சேரசிங்க கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து கடத்தப்பட்டார்.

முன்னாள் `ஹிரு' பத்திரிகையாளரும் தற்போதைய `அக்குண' பத்திரிகை பக்க வடிவமைப்பாளருமான லலித் செனவிரத்ன, தனது வீட்டில் வைத்து சி.ஐ.டி. யினர் எனத் தங்களைக் கூறிய ஏழு பேரால் கடத்தப்பட்டார்.

`அக்குண' ஆசிரியர் சிசிர பிரியந்த, தனது வேலைத்தளத்தில் வைத்து தூக்கிச் செல்லப்பட்டுள்ளார். இவர், ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் பல மடங்கு சம்பள அதிகரிப்புக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தவர்களில் ஒருவர்.

இந்த மூவரும் கடத்தப்பட்டமையானது, இலங்கையில் தொழிற்சங்கவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் நசுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தெளிவாகக் காட்டுகிறது.

இலங்கையில் கடந்த சில தசாப்தங்களாக எந்தவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எவ்வாறானவர்களையும் அவர்கள் அரசியல் எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் சரி அல்லது தொழிற்சங்கவாதிகளாக இருந்தாலும் சரி அல்லது ஊடகவியலாளர்களாக இருந்தாலும் சரி அவர்களைக் கடத்துவதென்பது மிக இலகுவான நவீன தொழில்நுட்பமாக மாறிவிட்டது.

இவ்வாறாக கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கவோ அல்லது கடத்தல்களைத் தடுக்கவோ அரசு எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காததால் இலங்கையில் அண்மைக் காலங்களில் கடத்தப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவாக அதிகரித்துள்ளது.

1990 களின் முற்பகுதியில் அப்போதைய அரசு படையினருக்கு வழங்கிய அதிகளவு அதிகாரங்களையடுத்து காணாமல்போனோரின் எண்ணிக்கை மிக அதிகளவாகயிருந்தது.

எனினும், அப்போதைய கைதுகளின் போது, ஒருவர் கைதுசெய்யப்பட்டால் அது தொடர்பாக அவரது நெருங்கிய உறவினருக்கு பற்றுச்சீட்டொன்று வழங்கப்பட வேண்டுமென்ற நடைமுறை அமுலிலிருந்தது.

எனினும், தற்போதைய கைதுகளின் போது இவ்வாறான நடைமுறையை அமுல்படுத்துமாறு உள்நாட்டிலிருந்தும் சர்வதேச ரீதியிலும் குரல் கொடுக்கப்பட்டாலும் அவ்வாறான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.

தற்போது கடத்தப்படுவோர் மற்றும் காணாமல்போவோர் விடயத்தில் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் அரசு எடுக்கத் தவறியதால் கடத்தப்படுவோரதும் காணாமல் போவோரதும் எண்ணிக்கை ஐந்து மணித்தியாலத்திற்கு ஒன்றென்ற ரீதியில் அதிகரித்து விட்டதாக அமைச்சர் ஒருவரே ஜனாதிபதிக்கு கடிதமெழுதுமளவிற்கு இன்று மோசமான நிலைமையுள்ளது.

இவ்வறான கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் வர்த்தக சமூகத்தின் மத்தியில் பரவியதுடன் அவர்களிடமிருந்து பெருந்தொகை பணமும் அறவிடப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் பல ஊடகவியலாளர் கடத்தல்களுக்கிலக்கானதுடன் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள்.

இந்தக் கடத்தல்களும் காணாமல் போதலும் சகல மட்டங்களிலும் பரவி இன்று தொழிற்சங்கவாதிகள் கடத்தப்படுவதுடன் காணாமல் போகும் நிலைக்கு வந்துள்ளது.

இவை குறித்தெல்லாம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருவதுடன், குறிப்பிட்டதொரு காலப் பகுதியில் பெருமளவானோர் கடத்தப்படவும் காணாமல் போகவும் இவையெல்லாம் காரணமாயிருந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளபோதும் இந்த அரசு எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இவையெல்லாவற்றுக்கும் பொறுப்பேற்று கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவற்றை செய்ய இலங்கை அரசு விரும்பாவிடின் அல்லது அதனால் முடியாவிடின், இந்த விவகாரத்தில் ஐ.நா.மற்றும் சர்வதேச சமூகம் தலையிட வேண்டுமென்பதை அது நியாயப்படுத்தும்.

இதனால், இலங்கை அரசு உடனடியாகச் செயற்பட்டு இந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களுக்கு முற்றுப் புள்ளிவைப்பதுடன் இவற்றைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுள்ளது.

_________

தொழிற்சங்கவாதிகள் பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டால் தான் எல்லோரும் குரல் கொடுப்பீர்களா? அப்படியானால் இவர்கள் கடத்தப்படுவதற்கு நான் ஆதரவு தருகிறேன் - பொதுமக்களை காப்பதற்காக.

ஊடகவியலாளர் என்று தெரிந்தும் அவர்களுக்கே இப்படி கதை சோடிச்சு பகிரங்கப் படுத்தும் அளவிற்கு அரச இயந்திரம் துணிந்து விட்டதுஎன்றால் ஒரு அப்பாவி தமிழ் இளைஞனை எப்படி எல்லாம் செய்வார்காள்.

ஊடகவியலாளர் என்று தெரிந்தும் அவர்களுக்கே இப்படி கதை சோடிச்சு பகிரங்கப் படுத்தும் அளவிற்கு அரச இயந்திரம் துணிந்து விட்டதுஎன்றால் ஒரு அப்பாவி தமிழ் இளைஞனை எப்படி எல்லாம் செய்வார்காள்.

கதையை ஏன் சோடிப்பான் கைதுசெய்யப்பட்டவர்களே கனக்க கதை சொல்லிகினம். வீடியோவை ஒளிச்சு பாத்தால் மறந்து போம்............... :D:icon_idea::D:icon_idea:

புலி என்று சொல்லி அப்பாவித்தம்மிழனை பிடித்த காலம் போய் இப்ப புலி என்று சொல்லி சிங்களவனையும் பிடிக்கிற காலம் வந்துட்டுது.

இது ஒரூ முக்கியமான மாற்றம்.

மொக்குச்சிங்களவனுக்கு விசயங்கள் வடிவாக விளங்க இன்னும் கொஞ்சக் காலம் பிடிக்கும்.

Way to Go மகிந்த மாமா!

சிங்களவரையும் புலி பிடித்திருக்கிறது.

அதைத்தான் சொல்வது "புலிகள்என்றால் மக்கள். மக்கள் என்றால் KODDIYA"

Edited by Iraivan

மஹிந்த மாத்தையாவுக்கு இப்ப புலி அல்ல கிலி பிடிச்சிட்டுது. அது தான் போரவாரவைய எல்லாம் பிடிச்சு சிறைக்குள்ள வைச்சு பாதுகாக்கினம் போல. இவையள் சென்னைப் பக்கம் போனால் சினிமாவுக்கு கதை எழுதி நல்ல காசு சம்பாதிக்கலாம். புலி வருது புலி வருது என்ட சின்ன வயசுல படிச்ச கதை தெரியும் தானே. நாலு பக்கத்திலையும் துவக்க நீட்டிக் கொண்டு எழுதிக் குடுத்தத படி என்டு சொன்னா யார் தான் செய்ய மாட்டினம்.

ஈழத்திலிருந்து

ஜானா

கடத்தலும் கைதும் - வெளிவருகின்ற உண்மைகள்

சிறிலங்காவின் புகையிரதத்துறைத் தொழிற்சங்கத்தினால் வெளியிடப்படுகின்ற அருண பத்திரிகையின் ஊடகவியளாளர்கள் மூவர் புலிகளுடன் நெருக்கமான தொடர்டபுகளைக் கொண்டிருந்ததாக நேற்றைய தினம் சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை, ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. குறித்த ஊடகவிலாளர்களுள் ஒருவர் பேசியதாகக் கூறப்படும் ஓளிநாடாவும் ஊடகமாநாட்டில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஊடகவியலாளர்களும் சிங்களவர்கள். கடந்த திங்கட்கிழமை இவர்கள் “கடத்தப்பட்டதாகவே” செய்திகள் வந்தன. ஊடகவியலாளர் சங்கங்கள் இவர்களின் விடுதலையைக்கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். அப்போது வாய்திறக்காமல் இருந்த அரசு இப்போது இரண்டு நாட்கள் கழித்து தாமே அவர்களைக் “கைதுசெய்ததாக” பகிரங்கப்படுத்தியுள்ளது.

தம்மால் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பயிற்சி பெற்றதாகவும் ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டதாகவும் தாக்குதல்களை நடத்தியதாகவும் கொழும்பின் சுற்றுப்புறங்களில் பதற்ற நிலையை உருவாக்க முயற்சித்தாகவும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை அரசு முன்வைத்தது.

தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை அரசு புலிகளுடன் தொடர்புபடுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்குட்படுத்தியுள்

எல்லாம் மகிந்த சிந்தனை.

மொத்தச் சிங்களவரும் மகிந்த சிந்தனையில் மூழ்கியிருக்க, இதெல்லாம் எங்களுக்குத்தான் பெரிய செய்தி.

உண்மையிலும் உண்மை. மகிந்த சிந்தனையில் சிங்களவர் மட்டுமல்ல

உலகமே மயங்கிக்கிடக்கிறது. அவ்வளவு போதை. அதைத் தெளிவிப்பதற்கு

மாற்று மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவர்கள் மகிந்தவுக்கு எதிரானவர்கள்.இவர்கள் கம்யூனிச இடதுசாரிகள்.இவர்கள் எதிர்பார்ப்பது தனிமனித சுதந்திரம்.ஜே.வி.பி இந்த கொள்கையில் இருந்து மாறுபட்டதால் அவர்களில் இருந்து விலத்தியவர்கள்.இவர்களை பணக்காரனே காட்டிகொடுத்துவிடுவான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.