Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பயங்கரம்..! ஒரே இரவில் 3 இடங்களில் வாள்வெட்டு.!! கை, கால், காது, மூக்குத் துண்டாடப்பட்டன

Featured Replies

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மூன்று இடங்களில் வாள்வெட்டு - குழு மோதல்கள் இடம்பெற்றன. காது, மூக்கு என்பன இந்த மோதல்களில் துண்டாடப்பட்ட நிலையில் 11 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடாநாட்டில் சில வார அமைதியின் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அச்சமும் - பீதியும் அடைந்துள்ளனர்.

அச்சுவேலி தெற்கு கரதடி, ஏழாலை வடக்கு, அரியாலை முள்ளிப் பகுதியிலேயே இந்த மோதல்கள் - வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன.

அச்சுவேலி தெற்கு கரதடியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் நடந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கும், ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கும் கடந்த சனிக்கிழமை கைலகலப்பு நடைபெற்றுள்ளது.

அதன் தொடர்ச்சியாகவே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், அச்சுவேலி தெற்கு கரந்தடிக்குச் சென்று மோதல்களில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் கூறினர்.

இந்த மோதல்களின்போது, வாள் வெட்டில் காது, மூக்கு, கண் என்பன துண்டாடப்பட்ட நிலையில் இளைஞர்கள் 7 பேர் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக உடனடியாகவே அவர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அரியாலை முள்ளிப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே மோதல் நடைபெற்றது.

இதன்போது வீடுகள் மீது கல் வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. வாள்வெட்டில் படுகாயமடைந்த 4 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்வதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் தப்பிச் சென்று விட்டனர்.

ஏழாலை வடக்கில் நேற்றுமுன்தினம் 7 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தவர்களை, மூன்று இளைஞர்கள் மறித்துள்ளனர். அவர்களிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

கத்தி, வாள் ஆயுதங்களைக் காண்பித்து அவர்கள் மிரட்டியும் காரில் இருந்தவர்கள் பணம் வழங்கவில்லை. இதனையடுத்து காரில் பயணம் செய்தவர்களைத் தாக்கியுள்ளனர்.

மயானத்தில் கிரியை முடித்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தப் பகுதி கிராம அலுவலர் மீதும், மூவர் கொண்ட இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு உடனேயே தகவல் வழங்கிய போதும் இரண்டு மணி நேரத்தின் பின்னரே சம்பவ இடத்துக்கு அவர்கள் வருகை தந்ததாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்தினர்.

யாழ். குடாநாட்டில் சில வாரங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் ஓய்ந்திருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திடீரென மூன்று இடங்களில் வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றமை மக்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

http://www.tamilwin.com/community/01/131995?ref=home

ஒரு புலி கொடியை பறக்க விடுங்க ஆதி முதல் அந்தம் வரை சொல்லுவினம் இது வால் வெட்டுக்கள் துப்பறிய முடியாது  அவர்களால் முடியாது நம்புங்க சாமி நம்புங்க .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, போல் said:

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மூன்று இடங்களில் வாள்வெட்டு - குழு மோதல்கள் இடம்பெற்றன. காது, மூக்கு என்பன இந்த மோதல்களில் துண்டாடப்பட்ட நிலையில் 11 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவங்கள் இருந்த ரைமிலை......
தனிமனித சுந்திரம் அது இது எண்டு கன சொப்பன சுதந்திரங்கள் இல்லாமலிருந்தது எல்லோ....

இப்ப......

ஒவ்வொரு மனிதனுக்கும் சகல சுதந்திரமும்  கிடைச்சு தலைக்கு மேலை நிக்குது.....புகுந்து விளையாடுங்க தம்பிகளா...

அது சரி ஊரிலை உலகத்திலை நடக்காததா சிலோனினிலை நடக்குது...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.