Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு

Featured Replies

மண்டைதீவில் சர்வதேச  கிரிக்கெட்  அரங்கு

 

( ஆர்.வி.கே.)
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. unnamed-_21_.jpg
இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர். unnamed-_20_.jpg
அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இவ்வருடம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ ஒரு நாடு ஒரு அணி “ எனும் பொதுவான இலக்கின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் கிரிக்கெட் அரங்கு எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.unnamed-_24_.jpgunnamed-_23_.jpgunnamed-_22_.jpg

http://www.virakesari.lk/article/15514

  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச இடத்தை பார்த்தால் பசுமையான பகுதியாக தெரியுது.. யாழ் நகருக்கு அருகே வேற பொட்டல் இடமே இல்லையா?

மண்டைத் தீவிற்கான வழியான பண்ணைப் பாலத்தை பார்த்தால் குறுகலான பாதை போல தெரியுதே!

  • தொடங்கியவர்
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு அமைக்கத் திட்டம்
2017-01-19 08:55:07

சிறந்த ஆற்­றல்­களை உடைய கிரிக்கெட் வீரர் ஒரு­வ­ருக்கு இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தற்கு ஏது­வாக நேர்­மை­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பதே 2017ஆம் ஆண்­டுக்­கான தேசிய அபி­வி­ருத்தித் திட்­டத்தின் அடிப்­படைக் கொள்கை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

21885sri-lanka-cricket-president-inspect

 

இந்த அடிப்­படைக் கொள்­கையை நிறை­வேற்­று­வ­தற்கு மாகாண கிரிக்கெட் உட்­கட்­ட­மைப்­புடன் முறை­யான விளை­யாட்­ட­ரங்கு வச­தி­களும் இருக்­க­வேண்டும் என்­பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் வெகு­வாக நம்­பு­கின்­றது.

 

இதன் மூலம் பாட­சா­லைகள் மற்றும் கழக மட்ட கிரிக்கெட் தரம் உயர்­வ­தற்­கான சந்­தர்ப்பம் உரு­வாகும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் குறிப்­பி­டு­கின்­றது.

 

கிரிக்கெட் நிரு­வா­கத்­தி­னரால் இந்த விடயம் கடந்த பல்­லாண்­டு­க­ளாக புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்­துள்­ள­தாக தற்­போ­தைய நிரு­வாகம் கரு­து­கின்­றது.

 

இதனைக் கருத்தில் கொண்டு சர்­வ­தேச கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங்கு ஒன்றை யாழ்ப்­பா­ணத்தில் நிர்­மா­ணிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால திட்டம் வகுத்­துள்ளார்.

 

21885sri-lanka-cricket-president-inspect

 

இதனை முன்­னிட்டு அண்­மையில் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்த திலங்க சும­தி­பால, சர்­வ­தேச கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங்கு அமைக்­கப்­ப­ட­வுள்ள இடத்தை நேர­டி­யாகப் பார்­வை­யிட்டார்.

 

அவ­ருடன் அரச அதி­கா­ரிகள், மாகாண மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க உறுப்­பி­னர்கள், தொழில்­நுட்ப உதவி அலு­வ­ல­கர்கள், யாழ். பொலிசார் ஆகி­யோரும் குறிப்­பிட்ட இடத்­திற்கு (மண்­டை தீவு) சென்­றி­ருந்­தனர்.

 

பொருத்­த­மா­னதும் நிலைத்­தி­ருக்­கத்­தக்­க­து­மான ஓரி­டத்தை தேர்ந்­தெ­டுப்­பது மிகவும் அவ­சியம் என சுட்­டிக்­காட்­டிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால, வீரர்கள் மற்றும் பொது­மக்கள் இல­குவில் அவ்­வி­டத்தை சென்­ற­டை­யக்­கூ­டி­ய­தாக இருப்­ப­துடன் பல்­வேறு வசதி வாய்ப்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்க வேண்டும் என்றார்.

 

மைதா­னத்தை பசு­மை­யாக வைத்­தி­ருப்­பதும் ஆடு­க­ளத்தை வருடம் பூராவும் பேணி பாது­காப்­பதும் மிகவும் சவால் மிக்­கது எனக் கூறிய அவர், அவற்றை வெற்­றி­கொள்ளும் வகையில் திட்டம் வகுக்­கப்­படும் என்றார்.

 

இது குறித்து யாழ். குடா­நாட்டில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு திலங்க சும­தி­பால தெளி­வு­ப­டுத்­தினார்.

 

கடந்த காலங்­களில் யாழ்­பாணம் பல திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்­களை உரு­வாக்­கி­யுள்­ள­தா­கவும் இந்தத் திட்­டத்தின் மூலம் கடந்த கால புகழ் யாழ். குடா­நாட்டில் மட்­டு­மல்­லாமல் முழு வட பகுதியிலும் மீண்டும் பரவ வேண்டும் என அவர் கூறினார்.

 

ஒரே அணி, ஒரே தேசம் என்ற பொது இலக்கை 2022இல் அடையும் பொருட்டு நூறு மில்லியன் ரூபா செலவில் இத் திட்டம் இவ் வருடம் ஆரம்பிக்கப்ப டுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிக்கின்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21885#sthash.tZJd1PIf.dpuf
  • தொடங்கியவர்

சூரியவெவவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் முடிச்சுப் போடவேண்டாம் : திலங்க சுமதிபால

 

 

அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்திற்கும் யாழ்ப்பாணத்தில் அமையவுள்ள சர்வவேதச கிரிக்கெட் மைதானத்திற்கும் முடிச்சுப்போடவேண்டாமென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

jaffna.jpg

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கோட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பூரண ஒத்துழைப்புடனும் அனுசரணையுடனும் யாழ். மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

 

குறிப்பாக இலங்கையின் வடக்கு பிராந்தியங்களான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வன்னி, மன்னார் போன்ற பிரதேசங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக யாழ்ப்பாணம் திகழ்கின்றது. இதனால் தான் நாம் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியை கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உகந்த பிரதேசமாக தேர்ந்தெடுத்துள்ளோம். 

இத் திட்டம் நிறைவேறும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கையுள்ளது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் எவ்வாறு சாத்தியமானதோ அவ்வாறே யாழில் நிர்மாணிக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானமும் சாத்தியமாகும்.

அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரியவெவ கிரிக்கெட் மைதானம் எந்த அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டதென்பது தெரியாது ஆனால் யாழில் அமையவுள்ள சர்வதேச அரங்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஒத்துழைப்புடன் அமையவுள்ளது.

நாம் நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி மண்டைதீவில் நிர்மாணிக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானத்தை சாத்தியமுள்ளதாக்குவோம். 

அங்கு குறிப்பாக நீர் வசதியை ஏற்படுத்த வேண்டிய தேவையும் புற்களை வளர்ப்பதற்கான தேவையும் எமக்குள்ளது. ஏனனில் குறித்த பிரதேசத்தை சுற்றி கடல்நீர் உள்ளதால் எமக்கு இவ்வாறான தேவைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் சூரியவெவ மைதானத்தையும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கபடவுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கையும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாமென அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/15579

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.