Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்

Featured Replies

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்

  • டிரம்ப்

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.

 
படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார்.

தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார். இந்த ஜனவரி 20ம் தேதி, மக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூரப்படும் என்று அவர் கூறினார்.

தன்னை எதிர்நோக்கியுள்ள பணி சவால் நிறைந்தது என்று கூறிய ட்ரம்ப் , ஆனால் இந்த வேலையை செய்து முடிக்கப்போவதாக உறுதியளித்தார். இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் லாபம் அளிக்கும் வகையிலேயே எடுக்கப்படும் என்றார் டிரம்ப்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

http://www.bbc.com/tamil/global-38697539

  • தொடங்கியவர்

அதிபராக பதவியேற்கும் டொனால்ட் டிரம்ப் குடும்பத்தினர் வெள்ளை மாளிகை வருகை

 
 

டொனால்ட் டிர்ம்பும் அவருடைய மனைவியும் அதிபர் பாராக் ஒபாமா மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமாவோடு காலை உணவுக்காக வெள்ளை மாளிகையை வந்தடைந்துள்ளனர்.

Obamas and Trumps
 

பின்னர் அவர்கள், அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பதவியேற்று ஏற்புரையை வழங்க இருக்கின்ற கேபிட்டல் கட்டடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுவார்கள்.

டிரம்பின் குடும்பத்தினர், இந்த பதவியேற்பு நாளை அருகிலுள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற பாரம்பரிய செப வழிபாட்டோடு தொடங்கியுள்ளார்.

கேபிட்டல் கட்டடம் நோக்கிய பயணம் 

பலத்த பாதுகாப்புடன் நடைபெற இருக்கும் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரப்பத காலநிலைக்கு தக்கவாறு ஆடை அணிந்தவராக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும், எதிர்க்கட்சியினரும் வாஷிங்டன் நோக்கி பயணித்து வருகின்றனர்.

முன்னதாக, தன்னுடைய அலுவலகமான ஓவல் மாளிகையை விட்டு கடைசியாக வெளியேறுவதற்கு முன்னால், பராக் ஒபாமா வழக்கப்படி, தனக்கு பின் வரும் அதிபருக்கு தனிப்பட்ட குறிப்பை எழுதிவைத்துள்ளார்.

http://www.bbc.com/tamil/india-38694138

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் டிரம்ப்...ஆட்டம் இனி ஆரம்பமாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நாலு வருடம் தாக்குப்பிடிப்பாரா.அல்லது இன்ரெரு பொறிஸ் யஸ்ரினா காலம் பதில் சொல்லும்.

  • தொடங்கியவர்

ஒபாமா அறிமுகப்படுத்திய திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் ட்ரம்ப்பின் முதல் கையெழுத்து

Published by Kumaran on 2017-01-21 09:17:31

 

அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அறிமுகப்படுத்தியிருக்கும் ‘ஒபாமாகெயார்’ மருத்துவத் திட்டத்தை மாற்றியமைக்கும் உத்தரவில் தனது முதல் கையெழுத்தை இட்டார். இதன்படி, ஒபாமாகெயார் திட்டத்தின் விதிமுறைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படவுள்ளன.

2_Trump_Sign_Obamacare.jpg

ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில மணித்தியாலங்களில் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகமான ‘ஓவல்’ அலுவலகத்துக்கு வருகை தந்த ட்ரம்ப், ஒபாமா கெயாரில் காணப்படும் சிக்கலான விதிமுறைகளை மாற்றியமைக்கவேண்டும் என்ற உத்தரவில் கையெழுத்திட்டார்.

ஒபாமாகெயாரில் காணப்படும் விதிமுறைகளை இரத்துச் செய்யும் அதேவேளையில், அதற்கு மாற்றாக என்னென்ன விதிமுறைகளை அமல்படுத்தலாம் என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது.

மேலும், இந்த உத்தரவு குறித்த அறிவித்தல் ஒன்று ஒபாமாகெயாருடன் தொடர்புடைய முகவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், ஒபாமாகெயாரின் விதிமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/15632

  • தொடங்கியவர்

டொனால்டு ட்ரம்ப் உரை அமெரிக்கவாழ் இந்தியர்களை பாதிக்குமா..?

டொனால்டு டிரம்ப்
 

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ளார். தமிழகத்தின் மதுரை அலங்காநல்லூரில் சிறுபொறியாகத் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், சென்னை தொடங்கி இன்று மாநிலம் முழுவதும், 'தமிழன்டா' என்ற உணர்வுப்பூர்வமான அறவழிப்போராட்டமாக காட்டுத்தீயாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கி, தொடர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள், ஏன் கோடிக்கணக்கான தமிழர்கள் என்று சொல்லலாம்...'ஜல்லிக்கட்டு' என்ற ஒற்றை வார்த்தையை தமிழகம் முழுவதும் எதிரொலித்தவண்ணம் உள்ளனர்.

இதுவரை எந்தவொரு அசம்பாவிதமோ, திருட்டு போன்ற சம்பவங்களோ இல்லாமல், 'அனைவருமே தலைவர்கள், இது நமது போராட்டம்' என்ற மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய அக்கறையுடன் சாரைசாரையாகக் குழுமி, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுஒருபுறமிருக்க, அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். பதவியேற்ற உடன் அவர் ஆற்றிய முதல் உரையிலேயே அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்பதை நேரடியாகக் குறிப்பிடும் வகையில் உறுதிபடப் பேசியுள்ளார், டிரம்ப்-ன் பேச்சை உற்றுநோக்கும்போது, இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக, மத்திய அரசையோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள மாநில அரசையோ நம்பாமல், அடுத்த சில மாதங்களில் வெளிநாட்டில் இந்தியர்களின் உரிமைக்காக போராட வேண்டிய அடுத்த தருணம் உருவாகலாம் என்று எண்ணம் எழுகிறது.

45-வது அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்-ன் உரை விவரம்: 

"அமெரிக்க மக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைப்பேன். அமெரிக்காவின் நலனே எனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். அமெரிக்கர்கள் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; நீங்கள் மீண்டும் ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டீர்கள். அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் நான் ஓய்வின்றி பணியாற்றுவேன். அமெரிக்காதான் எனது முன்னுரிமையாக இருக்கும். இந்த தருணம் உங்களுடையது. இது உங்களுக்கானது. இங்கு கூடியுள்ள அனைவருக்கும், இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து அமெரிக்கர்களுக்குமானது இந்த தருணம்.

வாஷிங்டனில் மக்களுக்கான அதிகாரம் மீண்டும் வழங்கப்படும். அமெரிக்க மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது, அதனை மீட்டு செயல்படுத்துவேன்- இந்த நாளில் இருந்து நமது மண்ணில் புதிய பார்வையுடன் ஆட்சி நடைபெறும். வர்த்தகம், வரி விதிப்பு, குடியுரிமை, வெளிநாட்டு விவகாரம் போன்ற அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்க குடும்பங்களின் நலன்களுக்கானதாகவே அமையும். உங்களுக்காக என் உயிர்மூச்சு உள்ளவரை போராடுவேன். ஒருபோதும் அமெரிக்க மக்களை கைவிட மாட்டேன்" என்று உணர்வுப்பூர்வமான உரையை நிகழ்த்தியுள்ளார். மக்களுக்கான நடவடிக்கைகளை எடுக்காத அரசியல்வாதிகளைப் பற்றி ஒருபோதும் நாம் பேசுவதில்லை என்றும், அதிபர் தேர்தலில் வெற்றுப் பேச்சு முடிவுக்கு வந்துள்ளது என்றும் டிரம்ப் பேசியுள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போதே, ஹெச்1- பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றும், அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு அயல்பணி வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். தற்போது, அமெரிக்காவின் 45-வது அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அவரது பேச்சில், அதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

டிரம்ப் பதவியேற்றதும் ஆற்றிய உரையை, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவில் இருந்து, அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வரும் இந்தியர்கள் கவனத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். தங்களின் எதிர்காலத்திற்கு ஏதாவது பங்கம் விளைவிக்கும் வகையில், டிரம்ப் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுத்துவிடுவாரோ என்ற அச்சம், அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் இப்போதே தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது.

எது எப்படியானாலும், ஜல்லிக்கட்டுக்காக வீதியில் இறங்கி இரவு பகலாக போராடும் தமிழக இளைஞர்கள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக குரல் கொடுக்க முன்வர மாட்டார்களா? ஒரு மாநிலப் பிரச்னைக்கே, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள், இந்தியா என்று வந்து விட்டால், தங்கள் எல்லையை விரிவுபடுத்தி, இந்தியர்களுக்காக, இந்தியர்கள் என்ற உணர்வுடன் போராடவும் தயங்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

http://www.vikatan.com/news/world/78312-us-based-indians-shock-over-the-address-of-trump.art

  • தொடங்கியவர்

அதிபராக ட்ரம்ப்பின் முதல் ட்விட் என்ன? #POTUS

ஒபாமா

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமாக POTUS உருவாக்கப்பட்டது. ஒபாமா தான் POTUS கணக்கை பயன்படுத்திய முதல் அதிபர். ஒபாமா தனது சந்திப்புகள், கொள்கைகள் தொடர்பான விஷயங்கள், திட்டங்கள் குறித்த பதிவுகளை 2015ம் ஆண்டில் கணக்கு துவங்கப்பட்டதில் இருந்து பதிவு செய்து வந்தார். தற்போது ட்ரம்ப் அதிபராகி உள்ள நிலையில் POTUS ட்விட்டர் பக்கத்தை ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார். இதற்கு பதிலாக @POTUS44 என்ற பக்கத்தை இதுவரை அவர் செய்த 352 ட்விட்களோட சேர்த்து வழங்கியுள்ளது.

ஒபாமா vs ட்ரம்ப்:

அரசியல், நிர்வாகம், பேச்சு என அனைத்து துறைகளிலும் ஒபாமாவோடு ட்ரம்ப்பை ஒப்பிட்டு ட்ரம்ப்பை விமர்சிப்பது அனைவரும் அறிந்ததே.  அதிபராக ஒபாமா பதவியேற்று ஆறு ஆண்டுகளுக்கு அவருக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கே இல்லை. 2015ம் ஆண்டு தான் POTUS கணக்கு வழங்கப்பட்டது. இதைத்தான் ஒபாமா முதல் ட்விட்டாக பதிவு செய்திருந்தார்.

ஒபாமா vs ட்ரம்ப்

 

அதிபராக ஒபாமாவின் முதல் ட்விட்:

Hello, Twitter! It's Barack. Really! Six years in, they're finally giving me my own account.

— President Obama (@POTUS44) May 18, 2015

 

அதிபராக ட்ரம்ப்பின் முதல் ட்விட்:

#InaugurationDay href="https://t.co/2h8yWMYQz9">https://t.co/2h8yWMYQz9 pic.twitter.com/Q9u8n9vez2

— President Trump (@POTUS) January 20, 2017

ஒபாமாவுக்கு ஆறு ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட ட்விட்டர் கணக்கு, அதிபராக பதவியேற்ற அடுத்த நொடியே ட்ரம்புக்கு வழங்கப்பட்டு விட்டது. அதிபராக பதவியேற்ற சிறுது நேரத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி இருந்த தனது நீளமான அதிபர் உரையை முதல் ட்விட்டாக பதிவு செய்திருந்தார். பின்னர் தனது குடும்பத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்த ட்ரம்ப். ஒபாமா கேர் மீதான ஆணையில் கையெழுத்திடவும் செய்தார். பின்னர் தனது பர்சனல் பக்கத்தில் இருந்த ஒரு ட்விட்டை ரீட்விட் செய்துள்ளார் ட்ரம்ப்.

ஒபாமா POTUS ட்விட்டர் கணக்கை 2 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இதுவரை தனது சொந்த கணக்கான பராக் ஒபாமா பக்கத்திலிருந்து ஒரு ட்விட்டை கூட ரீவிட் செய்ததில்லை. ஆனால் ட்ரம்ப்பின் முதல் 5 ட்விட்களில் 3 தனது சொந்த பக்கத்தை டேக் செய்தே இருக்கிறது. அதிலும் ஒன்று டரம்ப்பின் பர்சனல் பக்கத்தில் உள்ள ட்விட்டின் ரீ ட்விட். விளம்பர பிரியர் என விமர்சிக்கப்படும் ட்ரம்ப் தன்னை மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார்.

அதேபோல இணைய ட்ரெண்டிங்கிலும் எதிர்மறை விமர்சனங்களை பெற்ற ட்ரம்பின் பதவியேற்பை ஃபேஸ்புக் லைவ் செய்ததில் ஆங்க்ரி இமோஜிக்கள் பறந்தன. அதுமட்டுமின்றி ட்ரம்ப்பின் பதவியேற்பின் போது வெள்ளை மாளிகை முன்பு கூடிய கூட்டத்தையும், ஒபாமா பதவியேற்பின் போது கூடியிருந்த கூட்டத்தையும் இணைத்து வெளியான வீடியோ தான் அன்றைய ஆன்லைன் வைரல். இதிலும் ஹிட் அடித்தது ஒபாமா தான். 

 

ஆன்லைனில் இருக்கும் நெட்டிசன்களை பொறுத்தமட்டில் ட்ரம்ப் மீம் மெட்டிரியலாகவே திகழ்கிறார். அதற்கேற்ப அவரும் நடந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் நீங்கள் அமெரிக்க அதிபர், கொஞ்சம் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்ற ட்விட் ட்ரம்ப் கண்ணுக்கு தெரிந்தால் நல்லது.

http://www.vikatan.com/news/world/78324-trumps-first-tweet-as-a-president-of-united-states-of-america.art

  • கருத்துக்கள உறவுகள்

 ட்ரம்பின் பாதுகாப்பு வலைப்பின்னலை பார்த்து மக்கள் பெருமூச்சு விட்டதை பார்த்தேன்.

  • தொடங்கியவர்

'ஒபாமா கேர்' மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பாக மாற்றங்கள் கொண்டு வர டிரம்ப் முதல் கையெழுத்து

 
 

முந்தைய அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா கொண்டு வந்த சுகாதார பராமரிப்பு சீர்திருத்தங்களில் மாற்றம் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டு, அமெரிக்க அதிபாக தனது முதல் நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் துவக்கியுள்ளார்.

டிரம்ப் முதல் கையெழுத்து
 

`ஒபாமா கேர்' என அழைக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான சட்டங்களின் மூலம் ஏற்படும் பொருளாதார சுமையை குறைக்குமாறு முகமைகளுக்கு டிரம்ப் கையழுத்திட்ட பிரகடனம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க அதிபராக ஆற்றிய தனது தொடக்க உரையில், அமெரிக்காவின் நலனை முதன்மைபடுத்தப் போவதாகவும், கைவிடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பரவலாக குற்றங்கள் நடப்பது ஆகிய அமெரிக்க முன்னேற்றம் மற்றும் கலாச்சாரத்தை குலைக்கும் படுகொலைகளை நிறுத்தப் போவதாகவும் டொனால்ட் டிரம்ப் உறுதி எடுத்துக் கொண்டார்.

இதனிடையே, இன்று (சனிக்கிழமை) மாலையில் வாஷிங்டனில் நடக்கவுள்ள பெண்கள் பேரணியில் 2 லட்சம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன மற்றும் பாலின ரீதியான சமத்துவங்களுக்கு புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட டிரம்பின் நிர்வாகத்தில் அச்சுறுத்தல் இருக்கும் என்று உணர்வதை சுட்டிக்காட்ட தாங்கள் விரும்புவதாக இப்பேரணியில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-38703666

  • தொடங்கியவர்

வெள்ளை மாளிகை இணையதளத்தில் எல்.ஜி.பி.டி பக்கங்கள் நீக்கம்!

எல்ஜிபிடி

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், வெள்ளைமாளிகை இணையதளத்தில் இருந்து, எல்ஜிபிடி அதாவது ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் தொடர்பான பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அந்த இணையதளத்தின் தொழிலாளர் துறைக்கான பக்கத்தில் எல்ஜிபிடி தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த பக்கங்கள் நீக்கப்பட்டிருப்பது, அதில் தொடர்புடையவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதிபராக இருந்த பராக் ஒபாமா, எல்ஜிபிடி தொழிலாளர்களின் உரிமைகளில் செய்த முன்னேற்றங்கள் தொடர்பாக புதிய அதிபர் டிரம்ப் என்ன முடிவு செய்யப்போகிறார் என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதே டிரம்ப், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/world/78309-lgbt-pages-removed-from-white-house-website.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

eight_col_trumpo2.jpg?1434479773

எனக்கு இந்த போட்டோவை பாக்கப் பாக்க மன்னார்க்குடி கூட்டத்தின்ரை நினைப்புத்தான் வருகுது....:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.