Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சசி குற்றவாளியே !

Featured Replies

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

http://www.dinamalar.com/

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி! உச்ச நீதிமன்றம் அதிரடி

sasikala-_elavarasi-_sudhakaran_10177.jp

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

1991-1995 வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையை கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. அதன் அடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடந்த 2015 செப்டம்பர் 27-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடியே 1 லட்ச ரூபாயும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, கடந்த 2015 மே 11-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் முன்னிலையில் கடந்த 2015 பிப்ரவரி 23 முதல் இறுதி வாதம் நடைபெற்று வந்தது. கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே மற்றுடம் அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆகியோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, நீதிபதி பினாகி சந்திரகோஷ் அடங்கிய அமர்வில் ஆஜராகி, சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இதுவரை தீர்ப்பு வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஒரு வாரம் பொறுத்திருங்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஒரு வாரம் கழித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் இன்று தீர்ப்பளித்தனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/80721-supre-court-judgement-in-disproportionate-assets-case--sasikala-convicted.html

ஜெயலலிதா விடுவிப்பு

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவரை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றம விடுதலை செய்தது.

  • Replies 67
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நீதி வென்றது; ஆச்சார்யா கருத்து

 

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளதாக, கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710848

சசி 10 வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாது

புதுடில்லி: சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710847

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 

 

 

 
சசிகலா | கோப்புப் படம்
சசிகலா | கோப்புப் படம்
 
 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

இரண்டு நீதிபதிகளுமே ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினர். கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அப்படியே ஏற்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை:

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சென்னையில் நடைபெற்ற இவ்வழக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004-ம் ஆண்டு பெங்களூருவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலம், இறுதிவாதம் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இறுதியில் 2014, செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பை வழங்கினார்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015, மே 11-ம் தேதி ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வரையும் நிரபராதி என விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் தரப்பில் கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/சொத்துக்குவிப்பு-வழக்கில்-சசிகலா-உள்ளிட்ட-3-பேரும்-குற்றவாளிகள்-4-ஆண்டுகள்-சிறை-ரூ10-கோடி-அபராதம்-உச்ச-நீதிமன்றம்-தீர்ப்பு/article9540946.ece?homepage=true

  • தொடங்கியவர்

’துன்பத்தை ஏற்றுக்கொண்டார் சசிகலா..’ : அதிமுக ட்விட்டர் பக்கத்தில் உருக்கம்

ADMK Twitter

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ’அம்மாவின் புனிதம் துரோகிகளால் களங்கப்படுத்தப்பட்டது என்று பதிவிட்டுள்ளனர். மேலும் ’ஜெயலலிதாவுக்காக அனைத்து துன்பத்தையும் சசிகலா ஏற்றுக்கொண்டார்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதிமுக ட்விட்டர் பக்கத்தில் உள்ள பதிவுகளுக்கு நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து கமென்ட் செய்து வருகின்றனர். 

அம்மாவிற்க்கு எப்போது எல்லாம் துன்பம் வருகிறதோ அப்போதெல்லாம் அதை தன்மீது ஏற்றுகொண்டவர்

இப்போதும்அதை செய்கிறார்

தர்மமே வெல்லும்#Chinnamma

http://www.vikatan.com/news/tamilnadu/80735-admk-official-twitter-page-shares-heartfelt-posts-about-sasikala-conviction.html

 

 

'20 ஆண்டுகள் கழித்து வென்றுள்ளேன்'- சு.சுவாமி

Subramanain Swamy

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வரம்பு மீறி சொத்துக் குவித்துள்ளனர் என்று கூறி முதன்முறையாக நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தவர் பா.ஜ.க-வின் மாநிலங்களவை எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், '20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வென்றுள்ளேன். விரைவில் நிறைய பேர் சிறைக்கு செல்வார்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

http://www.vikatan.com/news/india/80736-i-have-won-after-20-years-says-subramanian-swamy.html

  • தொடங்கியவர்
gallerye_111846466_1710851.jpg

புதுடில்லி: சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மீதான 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட், இன்று உறுதி செய்தது. பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 1996ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27 ல் தீர்ப்பு அளித்தார். ஜெ.,க்கு 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம்; மற்ற மூன்று பேருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. உடனே நான்கு பேரும், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 21 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தனர். இந்த வழக்கில் ஜெ., உள்ளிட்ட நான்கு பேர் மூலம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுவித்து, 2015 மே, 11ம் தேதி தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பு அளிப்பதை, 2016 ஜூன், 7 ம் தேதி ஒத்தி

வைத்தனர். இந்த வழக்கில் இன்று, இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.

 

Tamil_News_large_1710851_318_219.jpg

வழக்கு கடந்து வந்த பாதை* 1996 ஜூன், 14 - தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்திற்குஅதிகமாக சொத்து சேர்த்ததாக, ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியன்சாமி, கவர்னரிடம் புகார் மனு அளித்தார்.* ஜூன், 18 - அப்போதைய, தி.மு.க., தலைமையிலான தமிழக அரசு, ஜெயலலிதாவுக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.* 1997 ஜூன், 4 - ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது* 2001 மே, 14 - ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது* 2003 பிப்., 28 - நேர்மையான விசாரணை நடப்பதை உறுதி செய்யும் வகையில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி, தி.மு.க., பொதுச் செயலர், அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்* நவ., 18 - வழக்கு விசாரணையை, கர்நாடக மாநிலம் பெங்களூரு கோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது* 2005 மார்ச்சில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், விசாரணை துவங்கியது* 2014 செப்., 27 - ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேரையும்,

 

'குற்றவாளிகள்' என, பெங்களூரு கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அன்றே, பரப்பன அக்ரஹாரா சிறையில், அனைவரும் அடைக்கப்பட்டனர்* செப்., 29 - ஜெயலலிதா சார்பில், கர்நாடகா ஐகோர்ட்டில், அப்பீல் மனுவும், ஜாமின் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது* அக்., 7 - ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை, கர்நாடகா ஐகோர்ட் தள்ளுபடி செய்தது* அக்., 17 - ஜெயலலிதா உட்பட நால்வருக்கும், சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது* அக்., 18 - ஜெயலலிதா, சசிகலா உட்பட நால்வரும், 21 நாள் சிறை வாசத்திற்குப் பின், ஜாமினில் வெளிவந்தனர்* 2015 மே, 11 - ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் வழக்கிலிருந்து விடுவித்து, கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பளித்தது* ஜூன், 23 - கர்நாடகா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, அந்த மாநில அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்பட்டது* மே, 23 - அ.தி.மு.க., தமிழக சட்டசபை தேர்தலில், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது; ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானார்* 2016 செப்., 22 - உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்* டிச., 5 - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, மரணம் அடைந்தார்* 2017 பிப்., 13 - கடந்த, 2016 ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு. இன்று தீர்ப்பு பிப்.14 , அறிவிக்கப்பட்து. - நமது நிருபர் -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710851

  • தொடங்கியவர்

கொண்டாட்டத்தில் திளைக்கும் கூவத்தூர்.. போடியிலும் உற்சாகம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட கூவத்தூர் மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கி இருக்கின்றனர். 

400_11104.jpg

bodi-ops-sasikala_11424.jpg

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திலும்,  போடி நாயக்கனூரில் உள்ள  ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்திலும் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 

http://www.vikatan.com/news/sasikala/80724-kuvathur-people-celebrate-dacase-verdict-on-sasikala.html

  • தொடங்கியவர்

சொத்து குவிப்பு வழக்கு வந்த பாதை

 

Tamil_News_large_1710856_318_219.jpg
 

 

 

 

சசி வழக்கு கடந்த வந்த பாதை

* 1996 ஜூன் 14: '1991 - 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடுத்தார்.

ஜூன் 31: மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.,யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணைக்குப் பிறகு ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். பின் ஜாமினில் வெளிவந்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.


* 1997 ஜூன் 4: ஊழல் தடுப்புச் சட்டத்தில் ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டதோடு, மூன்றாவது சிறப்பு நீதிபதி பி.அன்பழகன் முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்ததாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
 

 

சிறப்பு நீதிமன்றம்

* 1997: மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைத்தது. பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்த, 48 வழக்குகளை ஒன்று சேர்த்து, சொத்துக்குவிப்பு வழக்காக விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சம்பந்தம், வி.ராதாகிருஷ்ணன், பி.அன்பழகன் ஆகியோர் வழக்குகளை விசாரித்னர்.

* ஆக., 14: தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ., மனு.


* 1997 அக்.,1: டான்சி, பிளசன்ட் ஸ்டே ஓட்டல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளில் ஜெயலலிதாவை விசாரிக்க அன்றைய தமிழக கவர்னர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த, மூன்று ரிட் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இ.பத்மநாபன் தள்ளுபடி செய்தார்.


 

 

தி.மு.க., எதிர்ப்பு

* 2001 மே 14: தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார். அப்போது வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.


* 2003 நவ., 18: ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


* 2004 பிப்., 14: பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடங்கியது.


* ஜூன் 14: சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரிய ஜெயலலிதாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


* 2011 ஜூலை 29: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.


* 2011 ஆக.12: சொத்துக்குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், வீடியோ கான்பரன்ஸ் மற்றும் எழுத்து மூலமாக வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதி அளித்தது.


* 2011 செப்.,: அரசு தரப்பில் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக விளக்கமளிக்க ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

 

நேரில் ஆஜரானார்

* 2011 அக்., 20 - 21: பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணையில், 567 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மீதமுள்ள கேள்விகள் நவ.,8ம் தேதி கேட்கப்படும் என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


* நவ., 8: ஜெயலலிதாக 3வது முறையாக சொத்துக்குவிப்பு வழக்கில் நேரில் ஆஜரானார். 580 கேள்விகளுக்கு பதிலளித்தார்.


நவ., 9: மீதமிருந்த 192 கேள்விகளுக்கு பதிலளித்தார். மொத்தம் 1339 கேள்விகளுக்கு பதிலளித்தார்.

 

 

குன்ஹா தீர்ப்பு

* 2014 அக்., 29: வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செப்., 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி டி.குன்ஹா அறிவித்தார்.


* செப்., 12: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரா கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என ஜெ., தரப்பு மனு. இதையடுத்து தீர்ப்பு செப்., 27க்கு தள்ளிவைக்கப்பட்டது.


2014 செப்., 27: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை. ஜெ., வுக்கு ரூ. 100 கோடி, சசிகலாவுக்கு ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு பேரும் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


செப்., 29: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமின் மனு தாக்கல்.


அக்., 1: மனு ஏற்க நீதிபதி மறுப்பு 6 நாட்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


அக்., 7: ஜாமின் வழங்க மறுத்து, மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


அக்., 17: இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமினில் நால்வரும் வெளிவந்தனர்.

 

 

குமாரசாமி தீர்ப்பு

2015 ஜன., : சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு தாக்கல். மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வு நியமிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.


ஜன., 2: மனு விசாரணைக்கு வந்தது.


ஜன., 3: தி.மு.க., பொதுசெயலர் அன்பழகன் தன்னையும் இவ்வழக்கில் மனுதாரராக சேர்க்க நீதிபதியிடம் மனு. மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.


ஜன., 5: விசாரனை தொடங்கியது.


மார்ச் 11: விசாரனை நிறைவடைந்தது.


மார்ச்: அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு மனுத்தாக்கல். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இம்மனு சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.


ஏப்., 27: உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமித்தது செல்லாது எனவும், அவரது வாதத்தை நீதிபதி குமாரசாமி ஏற்கக்கூடாது எனவும் தீர்ப்பு வழங்கினர். மேலும் கர்நாடக அரசு, புதிதாக அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யலாம். அவர் எழுத்து மூலம் தனது வாதத்தை வழங்கவும் உத்தரவு. மேலும் அன்பழகன் தரப்பும் எழுத்து மூலம் வாதத்தை வழங்க உத்தரவு.


ஏப்., 28: கர்நாடக அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமனம். அவர் தனது வாதத்தை எழுத்து மூலமாக தாக்கல் செய்தார்.


மே 11: ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்; அபராதமும் ரத்து.


மே 23: தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்பு.


ஜூன் 23: ஜெயலலிதா விடுதலையான தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

 

 

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

2016 டிச., 5: முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தார்.


2017 பிப்., 14: மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதன்படி ஜெயலலிதா மறைந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும், 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710856

  • தொடங்கியவர்

21 ஆண்டுகள்... 21 அதிர்வலைகள்... ஜெ-சசிகலா வழக்கில் இதுதான் நடந்தது...! #DACase #OPSVsSasikala

ஜெயலலிதாவின் நிம்மதியைக் கெடுத்து... ஜெயலலிதாவின் பதவியைப் பறித்து... ஜெயலலிதாவின் விதியை முடித்த அபாய சரித்திரம் கொண்டது சொத்துக்குவிப்பு வழக்கு. 21 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கும் இந்த வழக்கு தற்போது  சசிகலாவின் முதலமைச்சர் கனவுகளையும் நொறுக்கித் தகர்த்துள்ளது. வழக்கு  கடந்துவந்த 21 ஆண்டுகளைப் பற்றிய பருந்துப் பார்வை இது...

sasujaka1_13540.jpg

1. முட்டாள்கள் தின காமெடி!

1995, ஏப்ரல் 1...

அப்போதைய, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஒருசில பத்திரிகையாளர்களை சென்னையில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும் எனச் சென்றவர்களுக்குக் காத்திருந்தது, இந்தியாவுக்கான ஸ்கூப் நியூஸ்! “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது  வழக்குத் தொடர, தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்'' என்ற பகீர் தகவலை சர்வசாதாரணமாகச் சொன்னார் சுவாமி. செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும், சுவாமி ஏதேனும் காமெடி செய்கிறாரா என அந்தப் பத்திரிகையாளர்களுக்குச் சந்தேகம். ‘இன்று முட்டாள்கள் தினம். அதனால் சுவாமி நம்மை ஏமாற்றுகிறார்’ என்று ஒரு நிருபர் கமென்ட் அடிக்க, ஆளுநர் சென்னாரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலை அனைவருக்கும் வழங்கினார் சுவாமி.

2. 'மூன்றே மாதங்களில் முடிக்கலாம்!’

“இந்திய அரசியல் சட்ட வரலாற்றில், முதலமைச்சர் மீதான ஊழல் குற்றங்களை விசாரிக்க, மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது இதுதான் முதல்முறை. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த  வழக்கில், சட்டரீதியான நடைமுறைகள்படி தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நடைமுறை தாமதங்களையும் தவிர்க்கத்தான் சிறப்பு நீதிமன்றமும் சிறப்பு நீதிபதியும் வேண்டும் என்கிறேன். ஜெயலலிதா மட்டும் வழக்கு  நடைமுறைகளுக்கு இசைந்தால், மூன்றே மாதங்களில்  வழக்கை  முடித்துவிடலாம்!'' என்று அப்போது கூறினார் சுப்ரமணியன் சுவாமி.

3. ஜெயலலிதாவின் முதல் ரியாக்ஷன்!

‘ஜெயலலிதா மீது  வழக்கு  போடலாம்’ என ஆளுநர் சென்னாரெட்டி அனுமதியளித்த கடிதத்தின் நகல், சுவாமி பேட்டியளித்த நாள் அன்று மதியம் 12.30 மணிக்கு போயஸ் கார்டன் ஃபேக்ஸ் மெஷினில் வந்து விழுந்தது. அதைப் படித்ததும் ஆத்திரம், இயலாமை, வெறுப்பு... என நிதானம் இழந்த நிலையில், அப்போது தனக்கு எதிரே நின்றுகொண்டிருந்த அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியை விளாசித்தள்ளினார் ஜெயலலிதா. 'நீங்கள் இத்தனை பேர் இருந்தும் என்ன பிரயோஜனம்? நான் எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்கேயாவது போகிறேன்!’ எனக் கடுகடுத்தார்! 

4. ‘ராஜினாமா பெஸ்ட்!’

முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனைத் தொடர்புகொண்டு, ‘ஆளுநர் சென்னா ரெட்டி, சுப்ரமணியன் சுவாமிக்கு அளித்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போகிறேன். இதில் உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார். முழு விவரத்தையும் பொறுமையாகக் கேட்ட ஆர்.வி, ‘அது மிகப் பெரிய விபரீதமாக முடியும். வழக்குத் தொடுத்தால், அதுபற்றிய செய்திகள் தினமும் விவாதிக்கப்படும். உங்கள் மீது 'ஊழல்வாதி’ என்ற பிம்பம் படியும். எனவே, இப்போதே நீங்கள் பதவியை ராஜினாமா செய்து, வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு, வழக்கை  முழுமூச்சாக எதிர்கொள்ளுங்கள்’ என்றார். ஆனால், அதைச் செய்யவில்லை ஜெயலலிதா!

5. மலையெனக் குவிந்த புகார்கள்!

1995, ஏப்ரல் 15-ம் தேதி தி.மு.க சார்பில், 'தமிழகத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன’ எனச் சொல்லி 539 பக்கங்கள் கொண்ட அறிக்கை அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ஆளுக்கு ஓர் அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்தனர். ம.தி.மு.க சார்பிலும் ஊழல் பட்டியல் தரப்பட்டது. சுவாமி கிள்ளிய திரிக்கு, மற்ற அனைத்துக் கட்சிகளும் வெடிமருந்துகளைக் குவித்தன!

6. அரசியலில் இது சாதாரணம் அல்ல!

‘தமிழக முதலமைச்சரான தன் மீது  வழக்குத் தொடுக்க ஆளுநர் அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்தார் நீதிபதி சிவராஜ் பாட்டீல். ஜெ. தரப்பு  வழக்குரைஞர் பராசரன், 'முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்றார்.

நீதிபதி சிவராஜ் பாட்டீல், 'இது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த  வழக்கு. எனவே, டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுகிறேன்!’ என உத்தரவிட்டார்.

s1_13111.jpg7. சுவாமி மீது தாக்குதல் சுனாமி!

1995, ஏப்ரல் 20 அன்று ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு வரும் சுப்ரமணியன் சுவாமி மீது தாக்குதல் நடத்த சிலர் திரண்டனர். சுவாமி வரவும் கற்கள், சைக்கிள் செயின், அழுகிய முட்டை, அறுந்த செருப்புகள் ஆகியவை நீதிமன்ற வளாகத்தில் பறந்துகொண்டே இருந்தன. அந்த சமயம், முன்பு மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாகத் திட்டியதாகச் சொல்லி  வழக்குப் பதிவுசெய்த மதுரை போலீஸ், சுவாமியைக் கைதுசெய்ய சென்னை வந்து காத்திருந்தது. அவர்களிடமும் சிக்காமல் தப்பினார் சுவாமி. இந்த அத்தனை எதிர்ப்புகளில் இருந்தும் தப்பி நீதிமன்றத்துக்குள் வந்தார் சுவாமி. ‘ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்ய முடியாது’ என உத்தரவிட்டது உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்!

8. தி.மு.க ஆட்சியில் விறுவிறு வேகம்!

1996-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வேகம் பிடித்தது ஜெ. மீதான  சொத்துக்குவிப்பு  வழக்கு. 'முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என  வழக்குத் தொடர்ந்தார் சுவாமி. நீதிபதி சம்பந்தம், விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றம் நல்லம்ம நாயுடு தலைமையில் தனிப் படை அமைத்து உத்தரவிட்டது.

9. சிறையில் ஜெ... கார்டனுக்குள் போலீஸ்!

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த  வழக்கில்  முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியாக சசிகலா, மூன்றாவது குற்றவாளியாக வளர்ப்பு மகன் சுதாகரன், நான்காவது குற்றவாளியாக இளவரசி ஆகியோரைச் சேர்த்து, 1996 செப்டம்பர் 18 அன்று முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன்பிறகே 5.5.1997-ல் நீதிபதி சம்பந்தம், ஜெயலலிதா மீதான  சொத்துக்குவிப்பு  வழக்கில்  முதல் விசாரணையைத் தொடங்கினார். அப்போது தி.மு.க அரசு தொடர்ந்த பல  வழக்குகளில் ஒன்றான கலர் டி.வி ஊழல்  வழக்கில்  கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் இருந்தார் ஜெயலலிதா. அந்தச் சமயம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.

ஜெயலலிதா, சசிகலா

10. மாறியது காட்சி!

டான்சி  வழக்கில்  தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001-ம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல். ஆனாலும், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவற்றை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற, அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட  வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதலமைச்சர் ஆனது செல்லாது என சுரீர் தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவின் பதவி பறிபோக, ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சர் ஆனார். பிறகு டான்சி  வழக்கில்  இருந்து விடுதலை பெற்று, மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.        

11. வழக்கு  பெங்களூருவுக்கு பார்சல்!

‘தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த  வழக்கில்  வாக்குமூலம் அளித்த சாட்சிகளில் 76 பேர், இப்போது தங்கள் தரப்பை மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையும் முதலமைச்சர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறையாக இருக்கிறது. அதனால்  வழக்கை  தமிழகத்தில் நடத்தினால், நியாயம் கிடைக்காது. அதிகாரிகள் தைரியமாகச் செயல்பட முடியாது. எனவே,  வழக்கை  வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்!’ என தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 2003, நவம்பர் 18-அன்று,  வழக்கை  பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

12. வழக்கைத் தரவில்லை தமிழகம்!

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக பச்சாபுரே நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் அப்போது ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஆட்சி. அதனால்  வழக்கை  சென்னையில் இருந்து விடுவிக்க தாமதம் ஆனது. 10 மாதங்கள் கழித்தே, வழக்கின் தமிழ் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு அளித்தார்கள்.

13. எரிச்சல் ஆன நீதிபதிகள்!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் ஜெயலலிதா. 'கடந்த ஆறு மாதங்களாக நான் தினம் தினம் வந்துவிட்டு உட்கார்ந்துவிட்டுப் போகிறேன். நான் தனிமைச் சிறையில் இருப்பதைப்போல் உணர்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இனியும் வராவிட்டால், நான் அதைக் காரணம்காட்டியே தீர்ப்பைச் சொல்வேன்’ எனக் கடுகடு எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி பச்சாபுரே. அவர் ஓய்வுபெற, மல்லிகார்ஜூனையா புதிய நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடமும் இதே இழுத்தடிப்புகள் தொடர்ந்தன.

14. லண்டன் சிக்கல்!

சொத்துக்குவிப்பு  வழக்கோடு லண்டன் ஹோட்டல்  வழக்கு  ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால்,  வழக்கு  இழுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் லண்டன்  வழக்குஇதிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆனால், லண்டன்  சொத்துக்குவிப்பு  வழக்கையும் பெங்களூரு  வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய, அந்த மனு மீதான தீர்ப்பு வரும்வரை பெங்களூரு  வழக்கு  விசாரிக்கப்படவில்லை. இறுதியில் உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்  சொத்துக்குவிப்புவழக்கை  மட்டும் விசாரித்தால் போதும் என உத்தரவிட்டது. இடையில் நான்கு ஆண்டுகள் உருண்டோடியிருந்தன!

15. உச்சந்தலையில் கொட்டிய உச்ச நீதிமன்றம்!


சொத்துக்குவிப்பு  வழக்கின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து ஒரு  வழக்கு, ‘இந்த  வழக்கு  விசாரணை முழுவதும் சட்ட விரோதம். எனவே, இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்’ எனக் கோரி ஒரு  வழக்கு,    வழக்கின் ஆவணங்கள் தமிழில் வேண்டும் எனக் கோரிக்கை என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் மனுக்கள் மேல் மனுக்கள் போட்டார் ஜெயலலிதா. தீவிர விசாரணைக்குப் பிறகு பல மனுக்களைத் தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சமயமும் ஜெயலலிதா தரப்பைக் கண்டித்தது.

இடையில், தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மாறி 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது!

16. பெங்களூருலேயே பல்டி விளையாட்டு!

2013 ஜனவரி 17 அன்று,  சொத்துக்குவிப்பு  வழக்கின் அரசு  வழக்குரைஞர் ஆச்சாரியா பதவி விலகினார். நீதிபதி மல்லிகார்ஜூனையா ஓய்வுபெற்று, புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்புக்கு வந்தார். அரசு  வழக்குரைஞராக பவானி சிங் பொறுப்பெடுத்துக்கொண்டார். அந்தச் சமயம் வழக்கின் காட்சிகள் மாறின. பவானி சிங்கின் அணுகுமுறை ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, அவரை மாற்ற வேண்டும் என கர்நாடக அரசுக்கு பேராசிரியர் க.அன்பழகன் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசு அவரை மாற்றியது. பவானி சிங் மாற்றத்தை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது. பவானி சிங்கே அரசுத் தரப்பு வழக்கறிஞராக நீடிக்கட்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தச் சமயம்தான் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா பொறுப்பு எடுத்துக்கொண்டார்.

sasikala4_13030.jpg

 

17. மிஸ்டர் ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்!

பொறுப்பை கையில் எடுத்ததில் இருந்து கறாரான மாஸ்டராகத்தான் நீதிபதி குன்ஹா இருந்தார்.  வழக்கை  விரைவுபடுத்தி முடிக்க நினைக்கிறார் குன்ஹா என்றதும், புதிய அஸ்திரத்தை எடுத்தார்கள். இந்த  வழக்கில்  32 நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தனித் தனியாக மனு போட்டார்கள். ‘எங்கள் நிறுவனத்தை  வழக்கில்  இருந்து விடுவிக்க வேண்டும். அதுவரை  சொத்துக்குவிப்புவழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். '17 ஆண்டுகளாக இந்த  வழக்கு  நடக்கிறது. இதுவரை தூங்கினீர்களா?’ என்று கேட்டு எல்லா மனுக்களையும் குன்ஹா டிஸ்மிஸ் செய்தார். அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தார். அந்த அளவுக்கு கறார் காட்டியதால்தான், குன்ஹாவால் தீர்ப்பு தேதியை அறிவிக்க முடிந்தது. மைக்கேல் டி.குன்ஹா நீதிபதியாக வந்த பிறகு, ஜெயலலிதா பெங்களூருக்கு வரவே இல்லை. தீர்ப்பு தரப்பட்ட 2014, செப்டம்பர் 27 அன்றுதான் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவை முதன்முறையாக நேரில் பார்த்தார். அந்த முதல் சந்திப்பே மறக்க முடியாததாக மாறிவிட்டது இருவருக்கும்!

18. பதவி இழந்தார் ஜெ... பன்னீர் முதல்வரானார்!

ஜெயலலிதா பதவியை இழந்தார். 21 நாட்கள் பரப்பன அக்ரஹார சிறைக்குள் இருந்தார். ஜாமீன் வாங்கி விடுதலையானர் 3 மாதங்கள் வீட்டுச் சிறைக்குள் இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது முறையாக முதல் அமைச்சர் ஆனார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா  மேல்முறையீடு செய்தார். 

19. பரபரப்பைக் கிளப்பிய குமாரசாமி கணக்கு!

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 3 மாதங்கள் நடந்த வழக்கில் 2015 மே மாதம் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். அதில், “அரசு ஊழியர் 10 சதவிகிதம் வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் ஜெயலலிதாவிடம் 2 சதவிகிதம் மட்டுமே சொத்துக்கள் இருந்தன. எனவே, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி என அனைரையும் விடுதலை செய்கிறேன்” என்று தீர்ப்பளித்தார். அந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

sasikala5_13228.jpg

20. ஜெ.மரணமும்... உச்ச நீதிமன்ற வழக்கும்...

உச்ச நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு நடந்து கொண்டிருந்தபோது, ஜெயலலிதா 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 6வது முறையாக தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆனார். அவர் 6-வது முறையாக முதலமைச்சர் ஆன நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநேரத்தில் எதிர்பாராதவிதமாக 2017 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அட்மிட் ஆனார். டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அப்போது சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாகத்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என்றும்... அந்த வழக்கின் தீர்ப்பு குறித்த அச்சம்தான் ஜெயலலிதாவின் உயிரைப் பறித்தது என்ற பேச்சும் இருந்தது.

21. ஜெ-சசியின் முடியாத துயரம்!

ஜெயலலிதா இறந்தபிறகு மூன்றாவது முறையாக ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க பொதுச் செயலாளரான சசிகலாவுக்கும் பன்னீர் செல்வத்துக்கும் இடையில் பதவிச் சண்டை ஏற்பட்டது. இருவரும் முதல்வர் நாற்காலிக்காக சண்டைபோட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. அதில் இன்று(பிப்ரவரி 14-ம் தேதி) வெளியான தீர்ப்பு சசிகலாவின் முதல் அமைச்சர் கனவைத் தகர்த்து அவரையும் சிறைக்கு அனுப்பி உள்ளது. 

ஜெயலலிதாவுக்கு கடந்த 20 ஆண்டுகளாக முடியாத துயரமாகத் திகழ்ந்த சொத்துக்குவிப்பு வழக்கு, தற்போது அவருடைய உடன்பிறவாச் சகோதரியான சசிகலாவுக்கும் மாறாத துயரமாக மாறிவிட்டது. 

http://www.vikatan.com/news/coverstory/80732-this-is-what-happened-in-disproportionate-assets-case-dacase-opsvssasikala.html

3 minutes ago, நவீனன் said:

பரபரப்பைக் கிளப்பிய குமாரசாமி கணக்கு!

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 3 மாதங்கள் நடந்த வழக்கில் 2015 மே மாதம் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். அதில், “அரசு ஊழியர் 10 சதவிகிதம் வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் ஜெயலலிதாவிடம் 2 சதவிகிதம் மட்டுமே சொத்துக்கள் இருந்தன. எனவே, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி என அனைரையும் விடுதலை செய்கிறேன்” என்று தீர்ப்பளித்தார். அந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கணிதம் வாழ்க!

  • தொடங்கியவர்

குமாரசாமி தீர்ப்பை புறந்தள்ள வித்திட்ட அப்பீலின் 10 அம்சங்கள்

 
சசிகலா | கோப்புப் படம்.
சசிகலா | கோப்புப் படம்.
 
 

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுவித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேற்கொண்ட மேல்முறையீட்டு மனு மீதான பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், கர்நாடக அரசு தங்கள் மனுவில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொண்ட 10 முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.

1. 1,66,839.60 சதுர கிமீ பரப்பளவு கட்டிடங்களின் மதிப்பீடு:

பொதுப்பணித்துறை மதிப்பீட்டுக்குப் பிறகும் 20% கழிவும் போக விசாரணை நீதிமன்றம் கட்டிடங்களின் மதிப்பை ரூ.22,53,92,344 (22.53 கோடி) என்று நிர்ணயித்தது.

உயர் நீதிமன்றம் தனது மறுமதிப்பீட்டில் கட்டிடங்களின் கட்டுமான செலவாக ரூ.5,10,54060 என்ற தொகையை வந்தடைந்தது.

உயர் நீதிமன்றம் வந்தடைந்த கட்டிட மதிப்பான ரூ.5.10 கோடி என்பது குற்றம்சாட்டப்பட்டவர்களே ஒப்புக் கொண்ட தொகையான ரூ.8,60,59,261 என்பதை விடவும் குறைவாக கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. வளர்ப்பு மகன் வி.சுதாகரன் திருமண செலவு:

அரசு தரப்பு கணக்கிட்ட செலவுத் தொகை: ரூ.6,45,04,222

விசாரணை நீதிமன்றம் கணக்கிட்ட செலவு: ரூ.3,00,00,000

இதனை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை வைத்து மிகவும் குறைவாக ரூ.28.68 லட்சம் என்று நிர்ணயித்தது.

3. கடன் தொகையே வருமானமாக:

நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பை தீர்மானித்ததில் மிகப்பெரிய பலவீனம் என்னவெனில் கடன்களை வருமானமாக கணக்கிட்டதுதான் என்று கர்நாடக அரசு தன் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டது.

ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ஆணையம் குற்றம்சாட்டப்பட்டவர் வாங்கிய கடன் தொகை ரூ.5,99,85,274 என்று கண்டுபிடித்தது.

ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு ஆணையத்தின் இந்த கடன் தொகையை ஏற்று கொண்டது, ஆனால் தேசியவங்கிகளிலிருந்து வாங்கப்பட்ட 10 கடன்களின் மீதான தொகை ரூ.24,17,31,274 என்பதை உயர்நீதிமன்றம் புறக்கணித்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ள கணக்கீட்டுப் பிழையை கர்நாடக அரசு அம்பலப்படுத்தியது. அதாவது 10 கடன்களின் மீதான தொகை ரூ.10.67 கோடியே என்று உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டது, மாறாக ரூ.24.17 கோடி என்று கர்நாடக அரசு முன்வைத்தது.

4. வருவாயை மீறிய சொத்துக் குவிப்பு 76.7% ஆகும், 8.12% அல்ல:

கர்நாடக அரசு தன் மனுவில் மொத்த சொத்துக்களாக கணக்கிட்டு முன்வைத்த தொகை: ரூ.37,59,02,466, இதனை மொத்த வருவாயான ரூ.21,26,65,654 என்ற தொகையை கழித்து விட்டால் ரூ.16,32,36,812 கூடுதல் சொத்து உள்ளது என்று குறிப்பிட்டது.

கர்நாடக அரசு 76.7% வருவாயை மீறிய சொத்து என்று கணக்கிட்டது எப்படியெனில், ரூ.16,32,36,812 (வருவாய்க்கு அதிகமான சொத்துகள்) என்ற தொகையை 100-ஆல் பெருக்கி வரும் தொகையை ரூ.21,26,65,654 (மொத்த வருமானம்)-ஆல் வகுத்தால் 76.7% என்று கர்நாடக அரசு கணக்கிட்டது.

5. திராட்சைத் தோட்ட வருவாய்:

ஐதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டத்திலிருந்து பெற்ற வருவாயாக அரசு தரப்பு கணக்கிட்ட தொகை: ரூ.5,78,340.

ஜெயலலிதா தனது சொத்திலிருந்து பெற்ற வருவாயாகக் காட்டியது: ரூ.52,50,000

விசாரணை நீதிமன்றம் வருவாயை ரூ.10,00,000 ஆக கணக்கிட்டது.

உயர் நீதிமன்ற தீர்ப்பில் வருவாய்: ரூ.46,71,600 என்று குறிப்பிடப்பட்டது.

6. பரிசுகளே வருமானமாக:

ஜெயலலிதா தனது 44-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெற்ற பரிசுத் தொகை ரூ.1.5 கோடியை ‘சட்டபூர்வமான வருவாய்’ என்று உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டது.

இதனை கர்நாடகா அரசு எதிர்க்கும் போது, இந்த வருவாய் குறித்த சிபிஐ வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது, இந்த விவரத்தை குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு உயர் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டுவர தவறியது.

சட்டபூர்வ வருவாயிலிருந்து பரிசுத்தொகை பெற்றாரென்றால் அதனை ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு இந்த வருவாய் விவரம் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

7. சசி எண்டர்பிரைசஸ் வருமானம்:

சசி எண்டர்பிரைசஸுக்கு வாடகை வருமானம் ரூ.12,60,800 என்றும், அரசு தரப்பு ரூ.6,15,900 என்று எடுத்துக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டவர் செய்திருந்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது.

ஆனால் உயர் நீதிமன்றமோ ’பூடகமான’ ரூ.25,00,000 வாடகை வருமானம் என்று ‘ஊகத்தின் அடிப்படையில்’ எடுத்து கொண்டதாக கர்நாடக அரசின் மனு சுட்டிக்காட்டியது.

8. ஜெயா பப்ளிகேஷன் வருமானம் மற்றும் நமது எம்ஜிஆர் விவகாரம்:

ஜெயா பப்ளிகேஷன் வருமானம் ரூ.1.15 கோடி என்பதை உயர் நீதிமன்றம் தவறாக ரூ.4 கோடி என்று எடுத்து கொண்டது, அதாவது மொத்த விற்பனையை தவறாக நிகர லாபம் என்பதாக எடுத்துக் கொண்டதாக கர்நாடக அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

நமது எம்ஜிஆர் குறித்த விசாரணை நீதிமன்றத்தின் ஆதாரம் ‘தவறானது’ ‘ஜோடிக்கப்பட்டது’ என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது.

9. சூப்பர்டூப்பர் டிவி பிரைவேட் லிட். வருமானம்:

குற்றம்சாட்டப்பட்ட 3-ம் நபர், மற்றும் நிறுவன உரிமையாளரான வி.என்.சுதாகரன் நிறுவனம் சட்டபூர்வமாக ஈட்டிய வருமானம் ரூ.1.10 கோடி என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் விசாரணை நீதிமன்றம் இதனை நிராகரித்தது. விசாரணை நீதிமன்றத்தின் இந்த நிராகரிப்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

10. சொத்துக்கள்:

146 அசையா சொத்துகளின் விற்பனை, ரியல் எஸ்டேட் விற்பனைத் தொகை ரூ.20 கோடி என்று விசாரணை நீதிமன்றம் பதிவு செய்தது.

ஆனால் உயர் நீதிமன்றம் தேவையில்லாமல், காரணமில்லாமல் 146 அசையாச் சொத்துகள் விற்பனையில் 49 சொத்துகள் விற்பனையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விற்பனையில் கிடைத்த தொகையாக, ரூ.6,24,09,120 என்று நிர்ணயித்தது.

http://tamil.thehindu.com/tamilnadu/குமாரசாமி-தீர்ப்பை-புறந்தள்ள-வித்திட்ட-அப்பீலின்-10-அம்சங்கள்/article9541185.ece?homepage=true

மாற்றம் செய்த நாள் :14, பிப்ரவரி 2017 (13:49 IST)

 
உச்சநீதிமன்றத்தில் சசிகலா அவசர மனுத்தாக்கல் - பிற்பகலில் விசாரணை
 
சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மனுவில், தீர்ப்பை ஏற்கிறோம். அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால் கட்சிப் பணிகள் இருக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லை என்பதால் உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் ஆகையால் 4 வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், இதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184384

பதிவு செய்த நாள் : 14, பிப்ரவரி 2017 (13:49 IST) 
மாற்றம் செய்த நாள் :14, பிப்ரவரி 2017 (13:49 IST)

 
பெங்களுரு நீதிமன்ற நீதிபதி அசோக் நாராயணா முன்பு சசிகலா ஆஜராக உத்தரவு
 
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்கள் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 3 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. 
 
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக சரண் அடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் பெங்களுரு சிறையில் அடைக்கப்படுவார்கள். 
 
சசிகலா உள்ளிட்டோர் பெங்களுரு நீதிமன்ற நீதிபதி அசோக் நாராயணா முன்பு 48வது அறையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184386

  • தொடங்கியவர்
 

 

 
Tamil_News_large_1710862_318_219.jpg
 

8 நிமிடங்களில் தீர்ப்பு

 

புதுடில்லி: நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, 8 நிமிடங்களுக்குள் கூறப்பட்டு விட்டது.

சுப்ரீம் கோர்ட்டில், 6ம் எண் கோர்ட்டுக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர், காலை, 10:32 மணிக்கு வந்தனர். அங்கு ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குவிந்து இருந்தனர். கூட்ட நெரிசல் கடுமையாக இருந்தது.

 

 

கோர்ட் அறையில் மவுனம்

தீர்ப்பு உரை இருந்த கவர் மீது இருந்த சீலை நீதிமன்ற ஊழியர்கள் அகற்றினர். அப்போது சில வினாடிகள் நீதிபதிகள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அப்போது கோர்ட் அறையில் பெரும் மவுனம் நிலவியது.

அப்போது நீதிபதி பினாகி சந்திர கோஷ், ‛‛ இந்த வழக்கு ஏற்படுத்தி உள்ள அழுத்தத்தை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். அந்த சுமையை நாங்கள் தாங்கிக் கொண்டுள்ளோம்,'' என்றார்.


இதன்பின், நீதிபதி கோஷ் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை வாசிக்க தொடங்கினார். 8 நிமிடங்களில் தீர்ப்பு கூறப்பட்டு விட்டது.


அடுத்த வினாடி அந்த அறை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் வெளியே உள்ளவர்களுக்கு தகவலை தெரிவிப்பதில் தீவிரம் காட்டினர்.


அப்போது நீதிபதி அமித்வா ராய், தன் தரப்பு தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். அவர், ‛ சமூகத்தில் ஊழல் என்ற பிரச்னை தலை விரித்து ஆடுவது எங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது' என்று தன் தீர்ப்பில் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710862

  • தொடங்கியவர்

C4mv0VQUcAANcA0.jpg

’மேல்முறையீடு செய்வோம்’: தம்பிதுரை

தம்பிதுரை

சொத்துக்குவிப்பு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.  டெல்லியில் பேட்டியளித்த தம்பிதுரை, ’சசிகலா வழக்கில் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவரால் முதல்வராக முடியாது’ என்றார்

http://www.vikatan.com/news/tamilnadu/80766-we-will-file-review-petition-against-sasikala-conviction--m-thambidurai.html

  • தொடங்கியவர்

 

பதிவு செய்த நாள் : 14, பிப்ரவரி 2017 (14:45 IST) 
மாற்றம் செய்த நாள் :14, பிப்ரவரி 2017 (14:45 IST)

 
ஓபிஎஸ்க்கு ஆதரவளித்தவர்கள் நீக்கம்
 
 முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். 
 
அதிமுக நாடாளுமன்ற எம்.பி-க்களை தவிர பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த முக்கிய நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , பி.ஹெச்.பாண்டியன், மோகன், பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி, முத்துராமலிங்கம், முத்துச்செல்வி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஐயப்பன், எஸ்.கே.செல்வம், ராஜேந்திர பிரசாத்  உள்ளிட்ட அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக சசிகலா அறிவித்துள்ளார். 
 
மேலும் பன்னீருக்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அனைவரையும் நீக்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். 
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184389
  • தொடங்கியவர்

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: அரசியல் தலைவர்கள் கருத்து

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் அளித்த கருத்தை கீழே பார்க்கலாம்.

 
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: அரசியல் தலைவர்கள் கருத்து
 
சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று சுப்ரீம்கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து வருமாறு:-

வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. ஊழல் செய்ய அச்சப்பட வைக்கும் தீர்ப்பு.

சட்டத்தின் பிடியில் இருந்து குற்றம் புரிந்தவர்கள் யாரும் தப்பிவிட முடியாது என்பதற்கான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடமாகும்.

தமிழக கவர்னர் தற்போது தமிழகத்தில் நிலவும் நிலையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நிலையான ஆட்சி ஏற்படவும், அரசியல் சாசனம் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, உரிய முடிவு எடுத்து உடனடியாக விரைவில் காலம் தாழ்த்தாமல் ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வழி வகுக்க வேண்டும்.

மார்க்சிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்:-

பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுவதுடன் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு இது வலுசேர்க்கும் என்றும் கருதுகிறது. ஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்:-

சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு இந்தியாவில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது.

பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு மரண அடி விழுந்திருக்கிறது. எவ்வளவு பணம் இருந்தாலும் தீர்ப்பை விலைக்கு வாங்க முடியாது என்பதை நீதிபதிகள் நிரூபித்து இருக்கிறார்கள். ஊழல் செய்து சொத்துக்குவித்த குற்றவாளியின் கையில் தமிழக அரசை ஒப்படைக்க நினைத்தவர்கள் வெட்கப்பட வேண்டும்.

அகில இந்திய தேசிய லீக் தலைவர் இனாயத்துல்லாஹ்:-

உச்சநீதி மன்ற தீரப்பின் மூலம் தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பு தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்வதற்கு வழிவகையும் செய்துள்ளது.

என்.ஆர்.தனபாலன்

காலம் கடந்து கிடைக்கப் பெற்ற தீர்ப்பாக இருந்தாலும் வரவேற்று பாராட்டுக்குரியதாய் அமைந்துள்ளது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஊழல் செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சரியான பாடமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன்:-

ஒட்டு மொத்த தமிழக மக்களின் உள் மனது நினைத்ததை இன்றைக்கு உச்சநீதிமன்றம் எதிரொலித்துள்ளது. ஊழல் செய்கிற அரசியல்வாதிகளை எச்சரிக்கை செய்கிற வகையில் உச்சநீதிமன்றம் தர்மத்தை நியாயத்தை நிலைநாட்டி உள்ளது.

நாடக அரசியல் நடத்துபவர்கள், ஜெயலலிதாவுக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவள் நான் என்று பொய்யாக பேசுபவர் பின்னால் சென்று அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்து விடாதீர்கள். ஊழல் குடும்பத்தை ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் ஒதுக்கித் தள்ளுவதுதான் உண்மையான ஜனநாயகத்தை பாதுகாக்கும்.

தமிழருவி மணியன் கூறுகையில், “உச்சநீதிமன்றம் ஊழலுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்பு மிக்க நரகாசுரவதத்தை நடத்தி முடித்திருக்கிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள்தான் உண்மையான தீபாவளி திருநாள். கவர்னர் அவசரப்படாமல் பொறுமை காத்ததில் இருந்த நியாயத்தை அவரை விமர்சித்த அரசியல் தலைவர்களும் இப்போது உணர்ந்திருக்கக் கூடும்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/14145135/1068251/Assets-case-judgment-Political-Leaders-Comment.vpf

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஜீவன் சிவா said:
பதிவு செய்த நாள் : 14, பிப்ரவரி 2017 (14:45 IST) 
மாற்றம் செய்த நாள் :14, பிப்ரவரி 2017 (14:45 IST)

 
ஓபிஎஸ்க்கு ஆதரவளித்தவர்கள் நீக்கம்
 
 முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். 
 
அதிமுக நாடாளுமன்ற எம்.பி-க்களை தவிர பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த முக்கிய நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , பி.ஹெச்.பாண்டியன், மோகன், பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி, முத்துராமலிங்கம், முத்துச்செல்வி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஐயப்பன், எஸ்.கே.செல்வம், ராஜேந்திர பிரசாத்  உள்ளிட்ட அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக சசிகலா அறிவித்துள்ளார். 
 
மேலும் பன்னீருக்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அனைவரையும் நீக்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். 
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184389

இந்திய வரைபடத்திலிருந்து தமிழகம் நீக்கம் - சசிகலா அதிரடி !!

அமெரிக்க அதிபர்  பதவியில் இருந்து ட்ரம்ப்ட் நீக்கம் - சசிகலா சரவெடி!!  :cool:

  • தொடங்கியவர்
போயஸ் கார்டனிலிருந்து போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
 
 
 
 
 
 
 
 
Tamil_News_large_1710876_318_219.jpg
 

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கிய நிலையில், போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710876

  • தொடங்கியவர்
 
 
Tamil_News_large_1710877_318_219.jpg
 

சீராய்வு மனு - வெற்றி வாய்ப்பு குறைவு: சோலி சொரப்ஜி

 

 

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி தனியார் டிவிக்கு அளித்த பேட்டி: இந்த வழக்கில் சசிகலா தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்தாலும், அதற்கு வெற்றி வாய்ப்பு மிக குறைவாக தான் இருக்கும். இதனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி அவர் சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710877

  • தொடங்கியவர்
 
 
 
 
 
 
 
கூவத்தூரில் 144 தடை உத்தரவு

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Tamil_News_large_1710878_318_219.jpg
 

காஞ்சிபுரம்: அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள கூவாத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி அறிவித்துள்ளார். இதனால், கூவத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. கூவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710878

  • தொடங்கியவர்
பெங்களுரு போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
 

 

 

 

 

 

 
Tamil_News_large_1710881_318_219.jpg
 

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோரது சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர். சென்னையில் இருந்து அழைத்து வரப்படும் சசியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதா அல்லது சிறை வளாக கோர்ட்டில் ஆஜர்படுத்துவதா என கோர்ட் பதிவாளர் ராதாகிருஷ்ணன் , போலீஸ் உதவி கமிஷனர் திம்மையா மற்றும் சிறை துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில் சசி அடைக்கப்படவிருக்கும் சிறை அறை துப்புரவு செய்யும் பணி நடக்கிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710881

  • தொடங்கியவர்

ஜெ.வின் சொத்துக்களுக்காகவே அவரது வீட்டில் சசிகலா கும்பல் குடியிருந்தது.. சுப்ரீம் கோர்ட்

 

ஜெயலலிதாவின் சொத்துக்களைக் குறி வைத்தே அவரது வீட்டில் சசிகலா கும்பல் குடியிருந்ததாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை: ஜெயலலிதா வீட்டில் சசிகலா, இளவரசி உள்ளிட்ட மூவரும் அடைக்கலம் புகுந்தது வாழ்வாதாரத்துக்கோ அல்லது ஜெயலலிதா தங்கச் சொன்னதற்காகவோ அல்ல. மாறாக அவரது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில்தான் அவர்கள் குடியேறியுள்ளனர் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பாக கூறியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் ஒரு முக்கிய அம்சம், ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில்தான் அவரது வீட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குடியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது முக்கிய நோக்கமே சொத்துக்கள்தான் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுகுறித்து தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

ஜெயலலிதா கொடுத்தது

ஏ2 (சசிகலா) மற்றும் ஏ4 (சுதாகரன்) ஆகியோர் தங்களுக்கு என்று சுயேச்சையான வருவாய் ஆதாரங்கள் இருப்பதாக கூறினாலும் கூட, அவர்கள் வைத்திருந்த நிறுவனங்கள், நிலங்கள், பணம் உளளிட்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, அவை அனைத்தும் ஏ1 (ஜெயலலிதா) மூலமாக வந்தது தெரிய வருகிறது.

 

அனுமதித்த ஜெயலலிதா

ஏ2, ஏ3 (இளவரசி) மற்றும் ஏ4 ஆகியோர் ஏ1 வீட்டில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது ஏ1 அவர்களை தாராளமாக புழங்க அனுமதித்தார் என்பதற்காகவோ அந்த மூன்று பேரும் ஏ1 வீட்டில் தங்கவில்லை.

 

கிரிமினல் சதித் திட்டம்

மாறாக, ஏ1க்குச் சொந்தமான சொத்துக்களை கைப்பற்றும் கிரிமினல் சதித் திட்டத்துடன்தான் இந்த மூன்று பேரும் அங்கு தங்கியிருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

 

  சந்தேகமே இல்லை

பல்வேறு ஆதாரங்கள், ஆவணங்கள் மூலம் இவர்களின் நோக்கம் தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-co-hatched-conspiracy-hold-the-assets-jayalalitha-sc-274074.html

  • தொடங்கியவர்

சட்ட விரோத சொத்துகளை மறைக்க போயஸ் தோட்டத்தில் ஜெ.-சசி கூட்டுச்சதி: உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விவரிப்பு

 

Supreme_Court_3133007f.jpg
 
 
 

பெரிய அளவில் சட்ட விரோதமாக சொத்துகளை குவிக்கவும், அவற்றை பல்வேறு விதமாக சட்டபூர்வமாக்குவதிலும் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் கிரிமினல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அதாவது, “ஆழமான சதித்திட்டம்’ இருந்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விவரங்கள் தங்களுக்கு எடுத்துரைப்பதாக இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவுக்கு ‘மனிதர்களை நேசிக்கும் கொடைப்பண்பு’ காரணமாக ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. மாறாக இவர்களது குற்ற நடவடிக்கைகளிலிருந்து காத்துக் கொள்ளவே சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்தில் இடம்கொடுத்து வைத்திருந்தார் ஜெயலலிதா என்று தீர்ப்பில் இருவர் மீதும் கடுமையாக சாடப்பட்டுள்ளது.

“சாட்சியங்களை ஆராய்ந்து பார்த்ததில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சதியில் ஈடுபட்டதான முடிவுக்கு நாங்கள் வருகிறோம், சம்பந்தப்பட்ட இந்த காலக்கட்டத்தில் ஏ1, அதாவது ஜெயலலிதா ஆட்சியில் இருந்துள்ளார். அப்போது தன் வருவாய் ஆதாரங்களையும் மீறி அளவுக்கதிகமாக சொத்து சேர்த்தார் (1991-96). இதனை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சில நிறுவனங்களுக்கும் இது அளிக்கப்பட்டுள்ளது மாற்றுப் பெயர்களில்” என்று நீதிபதிகள் பினகி சந்திர கோஸ் மற்றும் அமிதவ ராய் அடங்கிய அமர்வு முடிவுகட்டியது.

மேலும் 1991-ல் குற்றம்சாட்டப்பட்டோரின் சொத்துகள் மதிப்பு ரூ.2.01 கோடி. 1996-ல் குற்றம்சாட்டப்பட்டோரின் சொத்து மதிப்பு ரூ.66.44 கோடியாக பல்கிப்பெருகியது.

“இதனையொட்டிய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் நமக்கு அறிவுறுத்துவதெல்லாம், பெரிய அளவில் சொத்துகளைக் குவித்து அவற்றை செயல்படாத பல நிறுவனங்கள் மூலம் மறைத்து சட்ட விரோத சொத்துக் குவிப்பை சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவி மேற்கொண்டுள்ளனர்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீதிபதி ராய், ஊழல் நடைபெற்ற விதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

கிரிமினல் சதி என்பதற்கு உச்ச நீதிமன்றம் 4 குற்றவாளிகள் மீதும் முறையான காரணங்களைக் கூறியுள்ளது.

ஒன்று, ஜெயா பப்ளிகேஷன் சார்பாக ஜெயலலிதா, சசிகலாவுக்கு பவர் ஆஃப் அட்டார்னி வழங்கியுள்ளார். சொத்துகள் குவிப்புக்கு பயன்படும் பணப்புழக்கம் மற்றும் பணம் கையாளுதலிலிருந்து ஜெயலலிதா தன்னை தொலைவுபடுத்திக் கொள்ள அவர் இவ்வாறு சசிகலாவுக்குக் பவர் ஆஃப் அட்டார்னி வழங்கினார் என்கிறது உச்ச நீதிமன்றம்.

ஜெயா பப்ளிகேஷன் கணக்குகளில் செலுத்தப்படும் தொகைகளை சசிகலாவே நிர்வகிப்பார் என்று ஜெயலலிதாவுக்கு முழுதாக, நன்றாகவே தெரியும்.

இரண்டாவது செயல்படா நிறுவனங்களை அவ்வளவு வேகமாக உருவாக்கிய விதம் என்பது சதி நடைபெற்றதற்கான அடுத்த சாட்சியமாகும்.

“ஒரே நாளில் 10 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சாட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா, இளவரசி ஆகியோர் சொத்துகளை வாங்குவதோடு தனியான நிறுவனங்களைத் தொடங்கினர். இதைத்தவிர எந்த ஒரு வர்த்தக நடவடிக்கைகளையும் இவர்கள் கவனிக்கவில்லை” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த செயல்படா நிறுவனங்கள் நமது எம்ஜிஆர், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் நீட்சிகளே. இவர்கள் செய்த ஒரே வர்த்தகம் சொத்துகளை வாங்கிக் குவிப்பதே.

மேலும் போயஸ் தோட்டத்தில் அனைவரும் இருந்து கொண்டிருக்கும் போது சசிகலா உள்ளிட்டோர் செய்த வேலைகள் தனக்கு தெரியாது என்று ஜெயலலிதா கூறுவதினாலும் எந்த ஒரு பயனுமில்லை.

“எந்த வித ரத்த உறவுமில்லாமல் ஜெயலலிதா இவர்களுடன் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்து வந்தார்” என்று தீர்ப்பில் நீதிபதி கோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஏ1 (ஜெயலலிதா) கொடுத்த நிதிகளில் நிறுவனங்களின் உருவாக்கம், பெரிய அளவில் நிலங்களை வாங்கியது ஆகியவை, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் போயஸ் தோட்டத்தில் ஏதோ சமூக வாழ்க்கையை வாழ்ந்து விடவில்லை என்பதையும் மனிதார்த்த நோக்கங்களுக்காக ஜெயலலிதா இவர்களுக்கு இலவசமாக போயஸ் தோட்டத்தில் இடமளிக்கவில்லை என்பதையும் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் ஒரே இடத்தில் இருந்து கொண்டுதான் சட்ட விரோத சொத்துகளை வாங்கி அதை சட்டப்பூர்வமாக சதித்திட்டம் தீட்டியுள்ளானர் என்பதையும் சாட்சியங்க்கள் நிரூபித்துள்ளன.

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா மேற்கொண்ட விசாரணை நடைமுறை பெரிய அளவிலான ஆராய்தல் ஆகியவற்றுக்காக அவரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. ஆனால் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கையிலிருக்கும் ஆதாரங்களைக் கூட கவனிக்க மறுத்து விட்டது. குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஆதரவாக வருமான வரி அதிகாரிகளின் நிலைப்பாட்டை கேள்வியின்றி ஏற்றுக் கொண்டுள்ளது.

விசாரணை நீதிமன்றம் உணர்வுபூர்வமாக, கண்காணிப்பு பூர்வமாக, நீதிபூர்வமாக சாட்சியங்களை அணுகியுள்ளது. ரூ.32 லட்சத்திற்கு புடவைகள் வாங்கியதாக அரசு தரப்பு அழுத்தம் கொடுத்ததை நீதிபதி குன்ஹா ஒதுக்கித்தள்ளினார் மேலும் அரசு தரப்பு ஆட்சேபணைகளுக்கிடையே தங்கம் மற்றும் வைர இருப்புகளூக்கான மதிப்பு ரூ.2 கோடியாகக் குறைக்கப்பட்டது. சுதாகரன் திருமண செலவுகளை 50% குறைத்தது. மேலும் கட்டுமானங்கள் மதிப்பீட்டையும் 20% குறைத்தது விசாரணை நீதிமன்றம். எனவே நீதிபதி குன்ஹா மிகவும் நியாயமாகவே செயல்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் பிரதம குற்றவாளி மரணமடைந்த பிறகு சசிகலா உள்ளிட்டோரை தண்டிக்க முடியுமா என்ற சட்டரீதியான கேள்விக்கு, உச்ச நீதிமன்றம் 2014-ல் தனது சிபிஐ-ஜிதேந்தர் குமார் வழக்கை மேற்கோள் காட்டி மற்றவர்களை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க முடியாது என்றது.

மேலும் 2-வது ஆட்சேபணையாக அரசுசார் ஊழலில் தனிப்பட்ட நபர்களான சசிகலா உள்ளிட்டோரை தணடிக்க முடியுமா என்ற கேள்விக்கு குன்ஹா தீர்ப்பையே முடிவாகக் காட்டியது, “விசாரணை நீதிமன்றம் மிகச்சரியாகவே தனிப்பட்ட நபர்கள் இதில் குற்றவாளிகளாக கருத இடமுண்டு என்று முடிவுக்கு வந்தது” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறி குன்ஹா தீர்ப்பை செல்லும் என்று அறிவித்தது.

http://tamil.thehindu.com/india/சட்ட-விரோத-சொத்துகளை-மறைக்க-போயஸ்-தோட்டத்தில்-ஜெசசி-கூட்டுச்சதி-உச்ச-நீதிமன்ற-தீர்ப்பில்-விவரிப்பு/article9542895.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.