Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்திலீடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகள் யாவும் விடுவிக்கப்படும் : பாதுகாப்பு அமைச்சு

Featured Replies

போராட்டத்திலீடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகள் யாவும் விடுவிக்கப்படும் : பாதுகாப்பு அமைச்சு

 

 

விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்கவேண்டுமெனக்கோரி பிலக்குடியிருப்பு மக்கள்  விமானப்படைத்தளம் முன்பாக கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7777.jpg

இந்த நிலையில் குறித்த போர்டடாக்களத்துக்கு சற்றுமுன்னர் (ஒரு மணியளவில்) வருகைதந்த முல்லை மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலன் ஆகியோர் மக்களிடம் உங்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என தெரிவித்தனர்.

இதில் மக்களிடம் கருத்து தெரிவித்த  அரச அதிபர்,

சற்றுமுன்னர் எனக்கு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் தொலைபேசி அழைப்பைமேற்கொண்டு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் யாவும் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலருடன் தான் மேற்கொண்ட கலந்துரையாடலின் படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் தெரிவிக்குமாறு தெரிவித்தார்.

இதேவேளை போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறும் கேட்டுக்கொண்டார். 

இந்த நிலையில் அரச அதிபரின் கோரிக்கையை நிராகரித்த மக்கள் எமது காணிகளில் கால்பத்தித்த பின்னர்தான் இந்த போராட்டத்தை கைவிடுவோமென உறுதியாக தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/16622

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்கள் போராட்டம் வென்றது! காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!

09-e1436888118374-1024x648-300x190.jpgஎமது காணிகளுக்குள், செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே நாங்கள் போராட்டத்தைகைவிடுவோம் என தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள்முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் செவ்வாய்க்கிழமை (14)தெரிவித்துள்ளனர்.

கொழும்பில், ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின்அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து நிலங்களை விடுவிக்க துரிதநடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும், போராட்டத்தைகைவிடுமாறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களைச்சந்தித்த மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

எனினும், காணிகளுக்குள் எம்மை செல்ல அனுமதித்ததன் பின்னரே நாம் போராட்டத்தைகைவிடுவோம். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அம்மக்கள் மாவட்டச்செயலரிடம் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் 54 குடும்பங்களுக்குச் சொந்தமான 42 ஏக்கர் காணி வான்படையினரின்முகாமுக்குள் உள்ளடங்கியுள்ளது.

42 ஏக்கர் காணியில் 25 ஏக்கர் காணியைவிடுவிக்க கொழும்பில், ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்றஅமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வான்படையினர்சம்மதித்துள்ளனர்.

எனினும் உறுதிமொழியையடுத்து போராட்டத்தை கைவிட மாட்டோம்எனவும், காணிகளை விடுவித்தால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம் என மக்கள்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.newsvanni.com/archives/4961

  • தொடங்கியவர்

கேப்பாபுலவு காணிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை – முல்லை அரச அதிபர்

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
rupawathy.jpg
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் பகுதிக்கு  சென்றுள்ளார்.

இதன்போது, மக்களின் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தனக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக முல்லை அரச அதிபர் தெரிவித்தார். மீள்குடியேற்ற  அமைச்சர் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் உரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சர் கூறியதாகவும் தெரிவித்தார்.  தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் இந்த விடயத்தை தெரிவிக்கவே, கேப்பாபுலவுக்கு விஜயம் மேற்கொண்டதாக முல்லை அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/17666

  • தொடங்கியவர்

கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உறுதி

P4-063e61aa122877cdf5068bb28be5deddb961582e.jpg

 

சுவாமிநாதனின் தலையீட்டையடுத்து நடவடிக்கை; காணிகளில்  கால்வைத்தாலே போராட்டத்தை நிறுத்துவோம் என மக்கள் திட்டவட்டம்
  (ரொபட் அன்­டனி, கண்­டா­வளை நிருபர்)

கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்கு விரைவில் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன

நேற்­றைய தினம் மீள் குடி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னிடம் உறு­தி ­வ­ழங்­கி­ய­போ­திலும் அதனை ஏற்று போராட்­டத்தை கைவிட கேப்­பா­ப்பு­லவு மக்கள் மறுத்­து­விட்­டனர்.

அமைச்சர் சுவா­மி­நாதன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்­றைய தினம் சந்­தித்து கேப்­பா­ப்புலவு மக்­களின் போராட் டம் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டி­ய­போது காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி உறு­தி­மொ­ழியை வழங்­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியின் காணி விடு­விப்பு தொடர்­பான உறு­தி­மொ­ழியை முல்­லைத்­தீவு மாவட்ட செய­லாளர் ரூப­வதி கேதீஸ்­வரன் நேற்று போராட்டம் நடத்­து­கின்ற மக்­க­ளிடம்

 எடுத்­துக்­கூ­றி­ய­துடன் போராட்­டத்தை கைவி­டு­மாறு கோரிக்கை விடுத்தார். எனினும் மக்கள் அதனை நிரா­க­ரித்­து­விட்­டனர்.

எமது காணி­க­ளுக்குள் செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட பின்­னரே போராட்­டத்தை கைவி­டுவோம் என கேப்­பாப்­பு­லவில் போராட்­டத்தை மேற்­கொண்­டுள்ள மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த 15 தினங்­க­ளாக கேப்­பாப்­பு­லவு மக்கள் விமா­னப்­ப­டை­யினர் வச­முள்ள தமது காணி­களை விடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

 இந்த மக்­களின் போராட்­டத்­திற்கு வடக்கு, கிழக்கின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் ஆத­ரவு அதி­க­ரித்து வரு­கி­றது. இந்த சூழ­லி­லேயே நேற்­றை­ய­தினம் சிறைச்­சா­லைகள் மற்றும் புனர்­வாழ்வு அளிப்பு மீள்­கு­டி­யேற்றம், மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் நேற்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து இந்த விவ­காரம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.

இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட­ன­டி­யா­கவே இரா­ணு­வத்­த­ள­ப­தி­யுடன் தொடர்பு கொண்டு இது குறித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறார்.

அப்­போது கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி­களை வெகு­வி­ரைவில் விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­ப­தி­யிடம் இரா­ணுவத் தள­பதி உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

அத­னை­ய­டுத்து ஜனா­தி­ப­தியின் இந்தத் தீர்­மா­னத்தை முல்­லைத்­தீவு மாவட்ட செயலர் ரூப­வதி கேதீஸ்­வரன் கேப்­பாப்­பு­ல­வுவில் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்­க­ளிடம் அறி­வித்­த­துடன் போராட்­டத்தை கைவி­டு­மாறும் கோரி­யுள்ளார்.

எனினும் தமது காணி­க­ளுக்கு செல்லும் வரை போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என மக்கள் தெரி­வித்­துள்­ள­துடன் மாவட்ட செய­லா­ளரின் கோரிக்­கையை நிரா­க­ரித்­துள்­ளனர்.

""எமது காணி­க­ளுக்குள் செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட பின்­னரே நாங்கள் போராட்­டத்தை கைவி­டுவோம். அது­வரை போராட்டத்தை தொடர்வோம். காணிகளை விடுவித்தால் மாத்திரம் போராட்டத்தை கைவிடுவோம்"" என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

 உறுதிமொழியை நம்பி போராட்டத்தை கைவிடமுடியாது என்றும் காணிகளை விடுவித்தால் மாத்திரமே போராட்டத்தை கைவிடமுடியும் என்றும் மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-15#page-1

  • கருத்துக்கள உறவுகள்

 

கேப்பாபுலவு விமானப்படை தளத்துக்குள் மக்களின் காணிகள் !!

எமது மக்களின் வாழ்விடங்கள் அனைத்தும் படையினரால் தரைமட்டமாக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டிருப்பதையும், மக்கள் தமக்கான சுய வாழ்வாதாரத்திற்காக தாம் நாட்டிய பயன்தரும் தென்னை,பனை, மா, பலா,கொய்யா,கமுகு,உள்ளடங்கலான பலவகையான பயன்தரு மரங்கள் தேடுவாரற்ற காடுகளாக வளர்ந்து காட்சிதருவதையும் இந்த காணொளி ஊடாக நாம் அவதானிக்கமுடிகின்றது.

மேலும் கேப்பா புலவில் விமானப்படை கைப்பற்றி வைத்திருக்கும் இந்த பெரும் நிலப்பரப்பை அவதானித்தால் இங்கே பாரிய படைத்தளம் ஒன்றையோ,இல்லையேல் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றையோ இவர்கள் நிறுவுவதற்கான தூரநோக்கோடுதான் இப்பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையே அவதானிக்கமுடிகின்றது.

எமது நிலத்தில் சிங்களவன் கொக்கட்டம் இட்டு வாழ்கிறான்.. நாம் தான் இதனை போராடி எடுத்துக்கொள்ள வேண்டும்..

EeLam MPK BoYs !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.