Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாந்தி.....!

Featured Replies

14 minutes ago, MEERA said:

உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? 

இருக்கிறபடியால்தான் இதை பதிந்தேன் :grin:

14 minutes ago, MEERA said:

“I have enough experience with organisation so that won’t be a problem,” she told the Bild am Sonntag. She has plenty of support at home: 13 children from five different fathers and seven grandchildren.

 a 65-year-old English and Russian teacher from Berlin, already has 13 children by five different fathers. After undergoing fertility treatment, Anngret is now in her 21st week of pregnancy. She expected a baby in summer but remembers clearly watching the ultrasound screen, where four beating hearts were clearly visible.

இப்படியே நாலு நாலா பெத்தா சீக்கிரமே இலக்கை அடைந்துவிடுவார் எனும் நப்பாசைதான்.

எதோ என்னால முடிந்த உதவி சுவியருக்கு. :grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் 65 யை உசுப்பேத்துவதிலும் பார்க்க, 18 சுவியரை உசுப்பேத்துவது சூப்பராக இருக்கும்.

3 hours ago, ஜீவன் சிவா said:

இருக்கிறபடியால்தான் இதை பதிந்தேன் :grin:

 a 65-year-old English and Russian teacher from Berlin, already has 13 children by five different fathers. After undergoing fertility treatment, Anngret is now in her 21st week of pregnancy. She expected a baby in summer but remembers clearly watching the ultrasound screen, where four beating hearts were clearly visible.

இப்படியே நாலு நாலா பெத்தா சீக்கிரமே இலக்கை அடைந்துவிடுவார் எனும் நப்பாசைதான்.

எதோ என்னால முடிந்த உதவி சுவியருக்கு. :grin:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/02/2017 at 8:00 AM, தமிழ் சிறி said:

நன்றாக அவதானித்து... கற்பனையை கலந்து, எழுதியுள்ளீர்கள் சுவி.
கடைசியில் எழுதிய காப்புரிமை, மோதிர உரிமையை வாசித்து, சிரிப்பை அடக்க முடியவில்லை. :grin:

ஒரு ஜாலிக்கு எழுதியது, அதுதான் சொற்கள் ஜாலியாய் விழுந்திருக்கு சிறியர், அதைவிட பிடித்த பகுதியை தனியாகப் பிரசுரிக்கும் உங்களின் பாணி பிடித்திருக்கு.......!  tw_blush:

On 25/02/2017 at 8:48 AM, முனிவர் ஜீ said:

உங்கள் கறுத்த விரல்லுக்கு எனது கருத்தை காணிக்கையாக்குகிறேன் பல  தனி நபர்களின் சுய ஆக்கங்களுக்கு  ஒரு கருத்து அது ஏற்று கொள்ள கூடியதாகட்டும் , அல்லது மாற்றுக்கருத்தாகட்டும் எதையாவது எழுதினால்  தான் அடுத்த ஆக்கத்தில்  அதைமாற்றி இன்னும் சிறப்பான தாக எழுத முடியும் ஆனால் அது அற்று போனது பல ஆண்டுகளாக 

பல சுய ஆக்கங்கள் எழுதுபவர்கள் தாங்கள் விடும் பிழயை மற்றவர் குத்திக்காட்டுவதால் என்னவோ மனஸ்தாபங்கள் வருவதால் என்னவோ யாழில் எழுத விரும்புவதில்லை  அனைவருக்கும் ஒன்று குத்திக்காட்ட வேண்டாம் சுட்டிக்காடுங்கள் நன்றி  ஆனால் ஒரு சிலர் அதை ஏற்றுக்கொள்வதாயில்லை  என்னையும் நீ பிழை பிடிக்கிறாயா என்ற நிலைப்பாடு என்பதை விட ஒரு கர்வம் தோன்றுவதால் எழுத முடியவில்லை சிலரால் உதாரணம் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது  .........................................


பதிவுக்கு நன்றி அம்மாச்சி   ஆசைகளை  அடக்கி வாழவேண்டும் மனிதன்   மிருகங்கள் தான் தாய் எது தந்தையெது என்று தெரியாமல் உடலுறவு கொள்ள நினைக்கும் தற்போது மனிதன் கூட அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் என்பதை  சுருக்கமாக கூறியுள்ள்ளீர்கள் 
பாராட்டுக்கள் 

உங்களின் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன் முனிவர். நான் ஒரு எழுத்தாளன் இல்லையே. இந்தக் கருத்தையும் ஏற்கும் பக்குவம் இருக்கும் என நினைக்கின்றேன்....! tw_blush:

On 26/02/2017 at 6:24 PM, நவீனன் said:

கதை அந்தமாதிரி சுவி அண்ணா..:)

நிழலி கேட்ட கேள்விக்கும் பதிலை சொல்லிவிடுங்கோ..:grin:

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி நவீனன். அவருக்கு சொல்லி விட்டேன், எங்கு ஆள் நிக்கும் எண்டு.....! tw_blush: 

On 26/02/2017 at 8:06 PM, கிருபன் said:

 நல்லதோர் கதை சுவியண்ணா.

சினேகாவை சில வரிகளிலேயே வர்ணித்திருந்தீர்கள், ஆனால் வந்தனாவின் உயரம், நிறம், பருமன் கூடத் தெரியவில்லை. சந்திரன் போன்றவர்கள் எப்படியான ரசனையுள்ளவர்கள் என்பதை நாங்களும் அறியவேண்டுமல்லவா!

நன்றி கிருபன். சினேகாவை அவரது சேவையைக் காட்டுவதற்காக சின்ன வர்ணனை தேவைப்பட்டது. வந்தனா ஒரு நடுத்தர குடும்பப் பெண் அதுதான் வர்ணிக்கவில்லை. ஆயினும் இப்ப புரியுது அவரையும் கொஞ்சம் வர்ணித்திருக்கலாமென...! tw_blush: 

On 26/02/2017 at 10:12 PM, சண்டமாருதன் said:

ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்.

காமம் இயற்கையானது. இருந்தும் இயற்கையை விட அதிகமாக சமநிலை தவறக்கூடியது. மனைவி கணவன் குழந்தை அயலவர் பக்கத்துவீட்டார் என்ன நினைப்பார்கள் ஊர் என்ன நினைக்கும் மானம் மரியாதை கொளரவம் பயம் என பல காரணங்களால் சமநிலை பேணப்படுகின்றது. திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ பிறிதொருவருடன் உடல் ரீதியாக தொடர்பு ஏற்படுகையில் அத்தொடர்பில் இருந்து ஒரு போலியான வாழ்வு தொடங்கும். அந்த ரகசியத்தை வாழ்நாள் முழுக்க காப்பாற்ற அதிகமான சக்தி தேவைப்படும். ஒருவருக்கொருவர் உண்மையற்றவர்கள் என்ற நிலையில் வாழ்ந்தாகவேண்டும். நிரந்தரமான ஒரு குற்ற உணர்வுடன் வாழ்வு தொடர நேரிடும். அது வாந்தியை விட மோசமான ஒரு நிலைதான். இருந்து ஒவ்வொருவருடைய வாழக்கைப் பின்னணி மற்றும் மன நிலையை பொறுத்து இவைகளின் தாக்கம் இருக்கும். 

காமம் இயற்கையானது. இருந்தும் இயற்கையை விட அதிகமாக சமநிலை தவறக்கூடியது. உண்மையே சண்டமாருதன்.  ஆனால் ஒரு கெட்டிக்கார பெண்ணால் எந்த நிலைமையிலும் சமயோசிதமாய் முடிவெடுத்து எதிரிக்கும் வலிக்காமல் தன்னையும் காப்பாற்றி பிரச்சினைகளை மீண்டும் தொடராமல் முடித்து வைக்க முடியும் என்றுதான் சொல்ல நினைத்தேன்....! நன்றி நண்பரே....!tw_blush:

On 26/02/2017 at 11:00 PM, யாயினி said:

தொடருங்கள் சுவியண்ணா..?


நாம ஏதாச்சும் எழுதி போட்டால் அந்தப் பக்கமே ஒரு சனமும் வாறதில்ல.நான் எழுதி விட்ட கருத்தோடையே நாட்கணக்காக கிடப்பதை நிறைய விடையங்களில் அவதானித்தபடியால் தொடர்ச்சியாக எதை செய்யும் ஆர்வமும் இல்லாது போய் விட்டது..சில நேரங்களில் நாங்களே பொல்லைக் கொடுத்து அடி வாங்கிறோமோ என்ற எண்ணப்பாடு...?

உங்களின் பக்கத்தில் மிகவும் விருப்பமான வாசகன் நான். அப்படித்தான் அதிகமானவர்கள் அங்கு வந்து போகினம். ஆனால் பின்நூட்டங்கள் அதிகம் எழுதும் தளமல்ல, மானசீகமாய் வாசித்து விட்டு கடந்து போகும் பதிவுகளே அவை.  இது என்னை ஊக்கப் படுத்த வேணும் என்று எழுதுகின்றார்கள்....! வருகைக்கு நன்றி சகோதரி.....!  tw_blush:

4 hours ago, ஜீவன் சிவா said:

இப்படியே நாலு நாலா பெத்தா சீக்கிரமே இலக்கை அடைந்துவிடுவார் எனும் நப்பாசைதான்.

எதோ என்னால முடிந்த உதவி சுவியருக்கு. :grin:

நானும் எண்டே உதவிக்கு நன்றி சொல்வாரெண்டு பாத்தா ம்கும் :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

நானும் எண்டே உதவிக்கு நன்றி சொல்வாரெண்டு பாத்தா ம்கும் :grin:

 முந்திரிக் கொட்டை,  அவசரபடக் கூடாது.... நானே ஆறு ஆறாய் பிரித்து கஸ்டப்பட்டு  எழுதிக் கொண்டு வாறன். இடையில குழப்பினால் , மறுபடியும் முதலில் இருந்து......!  tw_blush:

 

13 hours ago, suvy said:

முந்திரிக் கொட்டை,  அவசரபடக் கூடாது.... நானே ஆறு ஆறாய் பிரித்து கஸ்டப்பட்டு  எழுதிக் கொண்டு வாறன். இடையில குழப்பினால் , மறுபடியும் முதலில் இருந்து......!  tw_blush:

என்னவோ தெரியாது சுவியர் 

இன்று இந்த பாடலை கேட்க நேர்ந்தது + சுவியர்தான் எம் ஆர் ராதாவாய் தெரிந்தார் // சிரித்து இன்னமும் முடிக்கவில்லை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/02/2017 at 11:16 PM, Ahasthiyan said:

நல்ல கதை சுவி, சொந்த ஆக்கங்கள் எப்போதும் ரசிக்க கூடியவை, விதை விதைத்து பயிர் வளர்த்து  அதன் வளர்ச்சியை தினமும் பார்த்து பேருவகை அடைவதுக்கு ஈடாகும். 

உண்மைதான் அகஸ்தியன், எதிர்பாராமல் போட்ட பதிவு எல்லோரையும் கவர்ந்திருக்கு சந்தோசம்.....!  tw_blush:

On 26/02/2017 at 11:37 PM, குமாரசாமி said:

சுவியர்! தான் ஒரு பேய்க்காய் எண்டதை அமசடக்காய் நிரூபிச்சிட்டார் tw_thumbsup:

உங்கடை எழுத்துக்களை இன்னும் எதிர்பார்க்கிறன்.:)

 

நன்றி கு.சா....! அதுதான் அருள்பாலிக்க துருச்சாமி வந்திருக்கின்றார்......! tw_blush:

On 27/02/2017 at 1:21 AM, நந்தன் said:

ஏதோ ஒரு பக்கம் ஏறினால் சரிதானே:grin:

நன்றி நந்தன்...! நல்லகாலம் சந்திரன் சூட்கேஸ் கொண்டுவரவில்லை.....!tw_blush:

On 27/02/2017 at 3:41 AM, putthan said:

பச்சை முடிச்சு போயிட்டே.....

 

பின்னால் ஏறினால் விசயத்தை காரில ஸ்டார் பண்ணலாம் ,ரூம் காசு மிச்சம் என்று நினைத்திருக்கலாம் அந்த தொழிலாளி....

 

சுவி கதை அந்தமாதிரி தூக்கலாயிருக்கு....உங்களிடமிருந்து மேலும் பல ஆக்கங்களை எதிர் பார்க்கின்றோம்....பச்சை கலாஸ்(முடிந்துவிட்டது)

பச்சை என்ன பச்சை புத்தன்...! நீங்கள் வந்து ரெண்டு வரி கருத்து வைத்ததே உங்களையும் கதை நன்றாக ஈர்த்திருக்கு என்று சந்தோசம். பக்கத்தில் துருச்சாமி உலவுகின்றார்......!  tw_blush:

On 27/02/2017 at 4:08 AM, ஈழப்பிரியன் said:

மணி ரத்தினத்தின் படம் இரு தடவைகள் பார்த்தா தான் புரியும்.

அதே மாதிரி தான் சுவியரின் கதையும் இரண்டாம் தரம் வாசிக்கும் போது தான் புரிந்தது.

நன்றி ஈழப்பிரியன்....! மாங்காய்கள் இலையில் சிறிது மறைந்திருப்பதுதான் அழகு இல்லையா.....!  tw_blush:

On 10/03/2017 at 3:31 AM, வல்வை சகாறா said:

சுவியண்ணா வாவ் இவ்வளவு இலகுவாக எளிமையாக பெரிய விடயத்தை சொல்லிவிட்டீர்கள். எங்கேய்யா இப்படியான திறமைகளை மறைத்து வைத்திருக்கிறீர்கள்?..... நல்ல சரக்கு .....ஊப்ஸ்  மேல உள்ள கதையை வாசித்த பாதிப்பு கண்டு கொள்ளாதேங்கோ...., கதையெழுத நல்ல திறமை இருக்கிறது வீணாக்கிப்போடாதேங்கோ. தொடர்ந்து எழுதுங்கள்.

நீங்கள், கிருபன், ஜீவன் போன்றோரின் ஊக்கம்தான்  என்னை இன்னொரு நகைச்சுவை கதை எழுதும் தைரியத்தைத் தந்தது. நன்றி சகோதரி. துருச்சாமியை நீங்கள் கைதட்டிப் பாராட்டியிருந்தீர்கள். அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி......! ஒருவேளை பெண்கள் பிடிக்காது தவிர்த்து விடுவார்களோ என நான் கொஞ்சம் யோசித்தேன்....!  tw_blush:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 02/04/2017 at 7:15 AM, ஜீவன் சிவா said:

என்னவோ தெரியாது சுவியர் 

இன்று இந்த பாடலை கேட்க நேர்ந்தது + சுவியர்தான் எம் ஆர் ராதாவாய் தெரிந்தார் // சிரித்து இன்னமும் முடிக்கவில்லை.

 

மிகவும் அருமையான தாலாட்டுப் பாடல். இருவர் உள்ளம் படத்தில். எம். ஆர். ராதா , முத்துலட்சுமி நடிப்பு பின்னணி ஏ.எல் ராகவன் , எல். ஆர். ஈஸ்வரி.... சுகமான தாலாட்டுப் பாடல். காலத்தால் அழியாதது. நல்லதொரு இணைப்பு நன்றி ஜீவன்....!  tw_blush:

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் யாழ்கள புஸ்பா தங்கத்துரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.