Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை இழுத்துச் சென்ற பெண் : கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்

Featured Replies

சாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை இழுத்துச் சென்ற பெண் : கொழும்பில் அதிர்ச்சி சம்பவம் 

(எம்.எப்.எம்.பஸீர்)

பாதை விதிமுறைகளை மீறிய கார் ஒன்றினை நிறுத்தி அதன் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை அதே காரினால் மோதி காயப்படுத்தி, காரின் பொனட் மீது விழுந்த அவரை அதில் இருக்கத்தக்கதாகவே சுமார் ஒரு கிலோமீற்றர் வரை காரைச் செலுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நடமாடும் விபசார விடுதியொன்றினை நடத்திவரும் பெண் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 asfasfasf.jpg

இந்நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கி உத்தரவிட்டுள்ளார். 

தெற்கு களுத்துறையைச் சேர்ந்த கீதா சியாமலீ எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 கடந்த 10 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரகரி வீதியில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்களான  உபுல், பிரதீப் ஆகியோர் போக்கு வரத்து கடமையில் இருந்துள்ளனர். இதன் போது டப்ளியூ.பி.சி.ஏ.எச். 9280 எனும் காரினை பொலிஸார் நிருத்தியுள்ளனர். அதில் 5 பெண்கள் இருந்துள்ளனர். காரினை கீதா எனும் தற்போது கைதகியுள்ள பெண்ணே செலுத்தியுள்ள நிலையில், அவரின் சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதன் போது காரினை இயக்கிய குறித்த பெண் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளார். கார் மோதியதினால் காரின் பொனட் மீது அந்த கான்ச்டபிள் விழவே தொடர்ந்து அக்காரை அப்பெண் முன்னோக்கி வேகமாக செலுத்தி சென்றுள்ளார். இதன் போது காரின் பொனட்டில் காயத்துடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காரின் இரு பக்கங்களை பிடித்தவாறு உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடியுள்ளார். இதன் போது அவ்வீதியால் வேன் ஒன்றில் வந்துள்ள கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த  மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் மன்சான் எனும் நபர், பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏதோ ஆபத்து என கருதி காரின் குறுக்காக வேனை நிறுத்தி பொலிஸ் கான்ஸ்டபிள் உபுலை காப்பாற்றியுள்ளார். 

இதன் போது காரில் இருந்த நான்கு பெண்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன் காரைச் செலுத்திய பெண் தடுக்கி விழவே அவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

 இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், கைதான பெண் ஒரு நடமாடும் விபசார விடுதியை வாடகைக்கு எடுக்கும் வாகனங்கலில் நடத்துபவர் எனவும், அது தொடர்பிலேயே பணத்துக்கு பெண்கள் சிலரை ஆடவருக்கு விற்பனைச் செய்ய செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மேலதிகமாக, சம்பவம் இடம்பெறும் போது காரில் ஒருந்த விபசாரிகள் என நம்பப்படும் ஏனைய பெண்களைத் தேடியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/17786

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நவீனன் said:

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மேலதிகமாக, சம்பவம் இடம்பெறும் போது காரில் ருந்த விபசாரிகள் என நம்பப்படும் ஏனைய பெண்களைத் தேடியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/17786

"இ" க்கு பதில் "ஒ" வந்துவிட்டது, செய்தியை எழுதியவர் கூட உணர்ச்சி வயப்பட்டுவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

"இ" க்கு பதில் "ஒ" வந்துவிட்டது, செய்தியை எழுதியவர் கூட உணர்ச்சி வயப்பட்டுவிட்டார். 

இந்த மாதிரி செய்திகளை, 'ஆழ்ந்து' படிப்பதால், எழுத்துப் பிழை விட்டுத் தப்ப ஏலாது, மக்கா..

ம்.. யாருகிட்ட... மீராவா... கொக்கா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நவீனன் said:

பாதை விதிமுறைகளை மீறிய கார் ஒன்றினை நிறுத்தி அதன் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை அதே காரினால் மோதி காயப்படுத்தி, காரின் பொனட் மீது விழுந்த அவரை அதில் இருக்கத்தக்கதாகவே சுமார் ஒரு கிலோமீற்றர் வரை காரைச் செலுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நடமாடும் விபசார விடுதியொன்றினை நடத்திவரும் பெண் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறுக்கிடுறத்துக்கு மன்னிக்கோணும்.......எப்ப தொடக்கம் ஸ்ரீலங்காவிலை நடமாடும் விபச்சார விடுதி வந்தது?:cool:

பொனட்டுக்கு சுத்த தமிழ் தெரியாத வீரகேசரிக்கு நடமாடும் விபச்சார விடுதி மட்டும் சுத்தத்தமிழிலை வருதாம்.tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

குறுக்கிடுறத்துக்கு மன்னிக்கோணும்.......எப்ப தொடக்கம் ஸ்ரீலங்காவிலை நடமாடும் விபச்சார விடுதி வந்தது?:cool:

அது உங்கண்ட காலத்திலயே அங்க இருந்தது தானே.

வண்டில் மயில்வாகனத்தாரிற்ற தாக்கல் அனுப்பினால், பக்குவமா கொண்டாந்து கொண்டெல்லே போவார்.

சைற்றில சாராய யாபாரமும் செய்தவர். அதால இரண்டுமே கிடைக்கும்.

அது சரி... யாழ் கொட்டடி சத்திரச் சந்தி மோர்கடை கேள்விப் பட்டிருக்கிறியளோ?

இல்லையெண்டா, நீங்கள்....

சிவதீட்டை பெற்று..... துன்னுறோட திரிஞ்சிறப்பியல் எண்டு அடிச்சுச் சொல்லேலும். :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Nathamuni said:

அது உங்கண்ட காலத்திலயே அங்க இருந்தது தானே.

வண்டில் மயில்வாகனத்தாரிற்ற தாக்கல் அனுப்பினால், பக்குவமா கொண்டாந்து கொண்டெல்லே போவார்.

சைற்றில சாராய யாபாரமும் செய்தவர். அதால இரண்டுமே கிடைக்கும்.

அது சரி... யாழ் கொட்டடி சத்திரச் சந்தி மோர்கடை கேள்விப் பட்டிருக்கிறியளோ?

இல்லையெண்டா, நீங்கள்....

சிவதீட்டை பெற்று..... துன்னுறோட திரிஞ்சிறப்பியல் எண்டு அடிச்சுச் சொல்லேலும். :cool:

ஆ....ஆ.....ஓமோம்....ஓமோம்....இப்ப ஞாபகம் வருது.....
காரிலை ஏத்திக்கொண்டு வந்து....சாப்பாடு தண்ணியெல்லாம் குடுத்து......குலுங்காமல் நெரிபடாமல் திருப்பிக்கொண்டு போய் இறக்கி விட்டதெல்லாம் ஞாபத்துக்கு வருகுது.tw_joy:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.