Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : அதிகரித்துள்ள குற்றச்செயல்களுக்கும் இதுவே காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள், மது பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மது வரி தொடர்பில் பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

தெற்காசியாவில் மது பாவனையில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் என்றும் இல்லாதவாறு யாழ்ப்பாணத்தில் மது பாவனை திடீரென அதிகரித்துள்ளது.

இவ்வாறு மது பாவனை அதிகரித்தமையே, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.

எனவே, வடக்கில் அதிகரித்துள்ள மது பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கில் ஒரு சில இடங்களில் உள்ள மதுபானசாலைகள் பொது மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இயங்கி வருகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட இடங்களில் இவ்வாறான மதுபானசாலைகள் காணப்படுகின்றன.

இதேவேளை, வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதே அந்த மக்களுக்கு தேவை.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் போராட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்ற கூடாது.

எனவே, காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்களிடத்தில் காணப்பட்ட ஆயுதப் போராட்டத்தை இல்லாமல் செய்தது போல் அவர்களின் பிரச்சினைகளும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை நன்கு தெரிந்துகொண்டவர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன. எனினும், அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தமிழ் மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை தவிடுபொடியாக்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதன் போது குறிக்கிட்டு பேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, "உங்களுக்கு முன்னரே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக நான் குரல் கொடுத்துள்ளேன். ஊடகங்கள் எனது கருத்தை தவறாக வெளியிட்டிருப்பதாக" குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், "அப்படி ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டிருந்தால் நீங்கள் அதற்கு மறுப்பு வெளியிட்டிருக்கலாம்.

எனினும், நீங்கள் அவ்வாறு மறுப்பு எதுவும் வெளியிடவில்லை என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் போராட்டம் கண்டுகொள்ளப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்ற கூடாது.

அந்த நேரம் விட்டுபுட்டு

இப்ப வந்து கத்தி என்ன?

இவற்றுடன் அடிப்படை பிரச்சனைகளாக இருப்பது

1. தகுந்த வேலை வாய்ப்பு இன்மை
2. வெளி நாட்டில் இருந்து அனுப்பப்படும் தேவையற்ற அதீத பணமும் கட்டுப்பாடற்ற செலவீனம்
3. சமூக / குடும்ப அமைப்புகளில் போரால் ஏற்பட்ட பெரும் சிதைவு

யாழில் சுய தொழிலையும் உற்பத்தியையும் பெருக்காவிடின் சமூக குற்றங்கள் மேலும் அதிகரிக்கவே செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

சுய தொழில் செய்வதற்கு இங்கே பட்டதாரிகளுக்கே விருப்பமில்லை என்னும் போது என்ன செய்வது 
...எல்லோருக்கும் இருக்கும் தகுதிக்கேற்ப 

அரசாங்கமே வெற்றிலை ,பாக்கு வைத்து அழைக்க வேண்டும் என்ற மனப்பாங்கு 
அண்மையில் யாழ் வவுனியா பல்கலை மாணவன் ஒருவரை வேலைக்கு அழைத்து நானே எனக்கு மடையன் பட்டம் கட்டிக்கொண்டேன் 
ஒவ்வொரு நாளும் மதியம் ஒரு மணி வரை தூங்கி எழும்புவது தான் அவர் செய்யும் வேலை , நானும் பாவம் என்று வாய்ப்பு கொடுக்கப்போனால் 
பையன் கொடுத்த அலப்பறையில் நான் ஆடைகள் கந்தலாகாமல் ஓடி வந்ததே மிச்சம் ,பையன் எதிர்பார்ப்பு சுந்தர் பிச்சை (Google) இல்லை டிம் குக் (Apple)
coporate jet அனுப்பி தன்னை வேலைக்கு வருமாறு அழைப்பார்கள் என்பதோ தெரியாது  ..இத்தனைக்கும் ஒருவருட அனுபவம் கூட தொழில் தகைமையாக இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இவற்றுடன் அடிப்படை பிரச்சனைகளாக இருப்பது

1. தகுந்த வேலை வாய்ப்பு இன்மை
2. வெளி நாட்டில் இருந்து அனுப்பப்படும் தேவையற்ற அதீத பணமும் கட்டுப்பாடற்ற செலவீனம்
3. சமூக / குடும்ப அமைப்புகளில் போரால் ஏற்பட்ட பெரும் சிதைவு

யாழில் சுய தொழிலையும் உற்பத்தியையும் பெருக்காவிடின் சமூக குற்றங்கள் மேலும் அதிகரிக்கவே செய்யும்

தகுந்த வேலை வாய்ப்பு என்பது நிழலி தான் விரும்பும் வேலை மட்டுமே செய்வதென்ற கொள்கைக்குள் இருப்பவர்கள் உதாரணம் பட்ட தாரிகள்

அடுத்து வெளிநாட்டு பணம்  அது எல்லோருக்கும் தெரியும்  என்பதால் பேசவில்லை

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

சுய தொழில் செய்வதற்கு இங்கே பட்டதாரிகளுக்கே விருப்பமில்லை என்னும் போது என்ன செய்வது 
...எல்லோருக்கும் இருக்கும் தகுதிக்கேற்ப 

அரசாங்கமே வெற்றிலை ,பாக்கு வைத்து அழைக்க வேண்டும் என்ற மனப்பாங்கு 
அண்மையில் யாழ் வவுனியா பல்கலை மாணவன் ஒருவரை வேலைக்கு அழைத்து நானே எனக்கு மடையன் பட்டம் கட்டிக்கொண்டேன் 
ஒவ்வொரு நாளும் மதியம் ஒரு மணி வரை தூங்கி எழும்புவது தான் அவர் செய்யும் வேலை , நானும் பாவம் என்று வாய்ப்பு கொடுக்கப்போனால் 
பையன் கொடுத்த அலப்பறையில் நான் ஆடைகள் கந்தலாகாமல் ஓடி வந்ததே மிச்சம் ,பையன் எதிர்பார்ப்பு சுந்தர் பிச்சை (Google) இல்லை டிம் குக் (Apple)
coporate jet அனுப்பி தன்னை வேலைக்கு வருமாறு அழைப்பார்கள் என்பதோ தெரியாது  ..இத்தனைக்கும் ஒருவருட அனுபவம் கூட தொழில் தகைமையாக இல்லை .

சித்தப்பு நம்ம பசங்க எதிர்பார்ர்கிற வேலை வேற் லெவல்  ஆரம்பம் வேண்டாம் உச்சி மட்டுமே வேண்டும் பின்ன சரிந்து விழத்தானே வேண்டும் 

அட பாவமே சட்டையா கிளிஞ்சுது  தச்சுக்கலாம் அவங்க புதுசதான் எதிர்பார்ப்பாங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.