Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவில், அமெரிக்காவின் 5 வது கப்பல் படையணி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவில், அமெரிக்காவின் 5 வது கப்பல் படையணி.

தியாகோ கார்ஷியா தீவுகளில் நிலைக்கொண்டுள்ள அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 5வது கப்பல் படையணியை நெடுந்தீவுக்கு மாற்ற தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ராஜதந்திர தலையீடுகளை அமெரிக்க விரைவில் மேற்கொள்ளும் என அந்த தகவல்கள் கூறுகின்றன.

2007 ஆம் ஆண்டு அமெரிக்கா இலங்கையுடன் செய்து கொண்ட (The Acquisition and Cross – Services Agreement) (ACSA) உடன்படிக்கைக்கு அமைய நெடுந்தீவை கோரவுள்ளதாக கூறப்படுகிறது.

தியாகோ கார்ஷியா தீவுகளில் இருந்து அமெரிக்காவின் 5வது கப்பல் படையணியை திரும்ப பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுக்கு இந்து சமுத்திர பகுதியில் படையணியை நிலை நிறுத்த வேண்டும் என்ற தேவை காரணமாகவும் அமெரிக்கா இவ்வாறு நெடுந்தீவை கோரவுள்ளது.

அமெரிக்கா தனது 5வது கப்பல் படையணிக்காக 1966 ஆம் ஆண்டு தியாகோ கார்ஷியா தீவுகளை பிரித்தானியாவிடம் இருந்து 14 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு பெற்றது.

இந்த குத்தகை தொடர்பான உடன்படிக்கையின் பிரகாரம் அமெரிக்கா அந்த தீவுகளை 50 ஆண்டு காலம் மாத்திரம் பயன்படுத்த முடியும்.

இதனடிப்படையில், இந்த வருட இறுதியில் உடன்படிக்கை காலாவதியாகின்றது. இதனால், தியாகோ கார்ஷியா தீவுகளில் அமெரிக்க படையினர் தொடர்ந்தும் நிலைக்கொண்டிருக்க முடியாது.

இந்த நிலையில், அமெரிக்கா, இலங்கையின் நெடுந்தீவு தொடர்பில் கவனம் செலுத்தும் முன்னர் மாலைதீவுகளில் தீவு ஒன்று குறித்து கவனம் செலுத்தியது.

எனினும் பின்னர் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இந்து சமுத்திரத்தில் நெடுந்தீவு அமைந்துள்ள பூகோள ரீதியான முக்கியத்துவம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை,

இலங்கையின் கடல் சம்பந்தமான துறையில் சீனாவின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அமெரிக்கா நெடுந்தீவு தொடர்பில் தனது கவனத்தை செலுத்தியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளுடான போரில் பதில் தாக்குதல் நடத்தும் தலைமையகமாக தியாகோ கார்ஷியா தீவுகளில் உள்ள முகாமையே பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/143533?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறியர்,

முதலாம் திகதி தானே கச்சத்தீவு, டைனசோர் எண்டு வந்தீங்கோ.

மாசக் கடைசீல நெடுந்தீவோ?

ஏப்ரல் பூல் முடியவில்லை போல கிடக்குது.

தவிர, டியாகோ கார்சியா ஆழ்கடலின் நடுவில் உள்ள மக்கள் இல்லாத தீவு. 

நெடுந்தீவோ மக்கள் நிரம்பிய, ஆழம் இல்லாத கடல் சூழ் ஒரு தீவு.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு, பாக்கு நீரினை ஊடாக கப்பல்கள் போகக்கூடிய ஆழம் இல்லாமையால், முழு இலங்கையினை சுத்தியே செல்கின்றன.

இந்நிலையில் போர்க்கப்பல்களா?

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி இல்லாமல் மல்லாக்கா படுத்து கனவு கண்டு செய்தி போடுறாங்கள் ஆண்டவா 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

தவிர, டியாகோ கார்சியா ஆழ்கடலின் நடுவில் உள்ள மக்கள் இல்லாத தீவு. 

மக்கள் வாழ்ந்தார்கள் ...ஆனால் அமெரிக்காவின் தேவைக்காக அந்த தீவு மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார்கள்...

 Between 1968 and 1973, the population was forcibly removed by the United Kingdom through intimidation of locals and denying the return of any who left the island. Many were deported to Mauritius and Seychelles, following which the United States built a large naval and military base on Diego Garcia, which has been in continuous operation ever since. As of March 2015, Diego Garcia is the only inhabited island of the BIOT; the population is composed of military personnel and supporting contractors.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இந்த விடயம் தெரியும். அதிலும் சுமார் 250 பேர், பிரிட்டனில் தங்கும் அனுமதியை, அரசு சாக்குப் போக்கு சொல்ல முயன்றும், உயர் நீதிமன்று வழங்க உத்தரவிட்டது.

நான் சொல்ல வந்தது, மக்கள் இல்லாத ஆழ்கடல் தீவிலிருந்து, மக்கள் உள்ள, ஆழ்கடலற்ற தீவுக்கு வரவேண்டிய தேவை இல்லை என்பதை.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

.

நான் சொல்ல வந்தது, மக்கள் இல்லாத ஆழ்கடல் தீவிலிருந்து, மக்கள் உள்ள, ஆழ்கடலற்ற தீவுக்கு வரவேண்டிய தேவை இல்லை என்பதை.

ஆனால் போர‌ போக்கைப் பார்த்தால் தீவுகளை உருவாக்கி படை முகாங்களை உருவாக்கின்றனர்.அந்தவகையில் இதுவும் சாத்தியயப்படலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

ஆனால் போர‌ போக்கைப் பார்த்தால் தீவுகளை உருவாக்கி படை முகாங்களை உருவாக்கின்றனர்.அந்தவகையில் இதுவும் சாத்தியயப்படலாம்..

ஒரு தீவிலும் பார்க்க வசதிகள் கொண்ட, தேவையான வகையில் நகரக்கூடிய நவீன பாரிய விமானம் தாங்கிக் கப்பல்கள் வந்தபின், அது தேவையில்லை என்றே கருதுகிறேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இணையங்களின் குண்டு சட்டி குதிரை ஒட்டுதலால் இப்படியான செய்திகள் உருவாகின்றன ஒரு தமிழ் இணையம் புதிதாக செய்தி போட்டால் அடுத்த கணம் மற்ற எல்லா தமிழ் இணையமும் கொப்பி பேஸ்ட் போட்டு விடிவினம் இம்முறை தமிழ்வின்னுக்கு குறிப்பிட்ட யாழில் தடைசெய்யபட்ட இணையம் இந்த செய்தியை போட்டு விட்டு தமிழ் வின் கொப்பி பேஸ்ட் பண்ணியதும் தன்னுடைய பக்கத்தில் எடுத்துவிட்டுது மாட்டுபட்டது தமிழ்வின் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.