Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலிமுகத்திடலில் மக்கள் நிறைந்து கடலில் விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறோம் : பஷில்

Featured Replies

காலிமுகத்திடலில் மக்கள் நிறைந்து கடலில் விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறோம் : பஷில்

இம்­முறை கூட்டு எதி­ரணி காலி­மு­கத்­தி­டலில் நடத்தும்  மே தினக்­கூட்­ட­மா­னது அர­சாங்­கத்­திற்கு மிகப்­பெ­ரிய செய்­தியை கூறு­வ­தாக அமையும். மிகப் பிர­மாண்­ட­மான மேதி­னக்­கூட்­டத்தை நாங்கள் நடத்துவோம் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான  பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

Basil-Rajapaksa.jpg

எமது மே தினக்­கூட்­டத்­திற்கு நாட்டில் அனைத்து பாகங்­க­ளி­லி­ருந்தும் மக்கள் கலந்­து­கொள்­வார்கள். வடக்கு, கிழக்கு, மலை­யகம் என அனைத்துப் பகு­தி­க­ளி­லிருந்தும் மக்கள் பங்­கேற்­பார்கள். 

மேலும் மக்­க­ளினால் காலி­மு­கத்­தி­டலை நிரப்­பு­வது எமக்­கொரு பிரச்­சி­னையே அல்ல. ஆனால் மக்கள் நிரம்பி வழிந்து கடலில் வீழ்ந்து விடு­வார்­களோ என்­றுதான் பயப்­ப­டு­கின்றோம் என்றும் பஷில் ராஜ­பக் ஷ சுட்­டிக்­காட்­டினார். 

கூட்டு எதி­ர­ணி­யி­னரால் காலி­மு­கத்­தி­டலில் நடத்­தப்­ப­ட­வுள்ள மேதினக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:

கூட்டு எதி­ரணி இம்­முறை காலி­மு­கத்­தி­டலில் நடத்தும் மே தினக்­கூட்­டத்தில்   நாட்டில் அனைத்­துப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்தும் மக்கள் கலந்து கொள்­வார்கள், வடக்கு, கிழக்கு, தெற்கு, மலை­யகம் அனைத்துப் பகு­தி­க­ளி­லி­ருந்தும் மக்கள் எமது கூட்­டத்தில்  பங்­கேற்­பார்கள். 

மலை­யகத் தோட்ட மக்கள் அதி­க­ளவில் இம்­முறை பங்­கேற்­பார்கள். அத்­துடன் ரயில், பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள் என அனைத்து வித­மான வாக­னங்­க­ளிலும் பொது­மக்கள் எமது கூட்­டத்­திற்கு வரு­வார்கள். 

25 வரு­டங்­களின் பின்னர் எதிர்க்­கட்சி ஒன்­றுக்கு காலி­மு­கத்­திடல் கிடைத்­துள்­ளது.  அதை நாங்கள் சரி­யான முறையில் பயன்­ப­டுத்­துவோம். ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. வர­லாற்று ரீதி­யான மேதி­னக்­கூட்­டத்தை நாங்கள் வழங்­குவோம். 

கேள்வி : காலி முகத்­தி­டலை கூட்டு எதி­ர­ணி­யி­னரால்  நிரப்ப முடி­யாது என சவால் விடுக்­கப்­பட்­டுள்­ளதே?

பதில் : காலிமுகத்திடலை நிரப்புவது எமக்கொரு பிரச்சினையே அல்ல. ஆனால் மக்கள் நிரம்பி வழிந்து கடலில் வீழ்ந்து விடுவார்களோ என்றுதான் பயப்படுகின்றோம் என்றார்.

http://www.virakesari.lk/article/19538

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

பதில் : காலிமுகத்திடலை நிரப்புவது எமக்கொரு பிரச்சினையே அல்ல. ஆனால் மக்கள் நிரம்பி வழிந்து கடலில் வீழ்ந்து விடுவார்களோ என்றுதான் பயப்படுகின்றோம் என்றார்.

பயப்படதேவையில்லை சீனாக்காரரின் போர்ட் சிட்டியிலும் மக்கள் சிவப்பு கொடி தூக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

ரயில், பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள் என அனைத்து வித­மான வாக­னங்­க­ளிலும் பொது­மக்கள் எமது கூட்­டத்­திற்கு வரு­வார்கள். 

அமைச்சராகவும், குடும்பத்தோடு அதிகாரத்தில் இருந்த காலத்திலும், அடித்துச் சுருட்டிய பணத்தில் கொஞ்சம்.... மேதினத்திற்கு மக்களை அழைத்துவருவதில் கரைந்துவிடுமோ விடுமோ என்ற பயமும் இருப்பதுபோல் தெரிகிறது. அதுதான் இப்படிப் புலம்புகிறார். :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அமைச்சராகவும், குடும்பத்தோடு அதிகாரத்தில் இருந்த காலத்திலும், அடித்துச் சுருட்டிய பணத்தில் கொஞ்சம்.... மேதினத்திற்கு மக்களை அழைத்துவருவதில் கரைந்துவிடுமோ விடுமோ என்ற பயமும் இருப்பதுபோல் தெரிகிறது. அதுதான் இப்படிப் புலம்புகிறார். :shocked:

அரசியலில் இதெல்லாம் சகயமப்பா......உவங்களுக்கு மேதினமெல்லாம்  வருடத்தில் ஒரு நாள் செய்யும் பார்ட் டைம் யொப் என்பது உண்மையான தொழிலாளர்களுக்கு எப்போழுது புரியும் ?....மில்லியன் டொலர் கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

அரசியலில் இதெல்லாம் சகயமப்பா......உவங்களுக்கு மேதினமெல்லாம்  வருடத்தில் ஒரு நாள் செய்யும் பார்ட் டைம் யொப் என்பது உண்மையான தொழிலாளர்களுக்கு எப்போழுது புரியும் ?....மில்லியன் டொலர் கேள்வி?

தொழிலாளர்களுக்கு எல்லாமே புரியும் புரியாதென்றில்லை, பழக்கதோசம் விடாது. உதாரணமாக: தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது எல்லாத் தமிழர்களுக்கும் புரியும். ஆனாலும் பழக்கதோசம் விடாது. :( :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

தொழிலாளர்களுக்கு எல்லாமே புரியும் புரியாதென்றில்லை, பழக்கதோசம் விடாது. உதாரணமாக: தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது எல்லாத் தமிழர்களுக்கும் புரியும். ஆனாலும் பழக்கதோசம் விடாது. :( :shocked:

பட்(இங்கிலிசில சொல்லவேணும்)அட்லிஸ் உந்த பம்மாதையாவ்து ஊடகவியாளர்களர்கள்  மக்களுக்கு  தெளிவுபடுத்த வேண்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.