Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சினிமா பார்க்கும் அவசரத்தில்.... கதவு திறந்திருப்பதை கவனிக்காமல்,
கதவுக்கு மேலால் ஏறி விழுந்து ஓடும்...  ரசிக கண்மணிகள். :grin:

  • Replies 360
  • Views 57.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அப்படியே... அந்த TV  தீப் பிடித்து  வெடிக்க கூடாதா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    என்னண்ணே பார்த்துட்டு நிற்குறிங்க... வீட்டை( அரசு இலவச வீடு ) இடிங்கண்ணே..? அப்படிங்குற ? இதோ இடிச்சுடுரண்டா ..?

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வேற மாதிரி ஆகிடும் ரோகிணி தியேட்டரை மிரட்டும் ரசிக கண்மணிகள் .. 😊

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு நாள்தான் பிளக்ஸ் பேனர் கட் அவுட் ..? 🤔

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®à®¾à®à¯à®ªà®¾à®à®¿à®¯à®¿à®²à¯ ஷாà®à¯

விஸ்வாசம் பார்க்க பணம் தராத அப்பா.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன்.. காட்பாடியில் ஷாக்!


விஸ்வாசம் படம் பார்க்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது.

இதனால் நடிகர் அஜித்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட கட்டப்பாடி அருகே கிழஞ்சூரில் ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க பாண்டியன் என்பவரின் மகன் ஆசைப்பட்டிருக்கிறார். இவர் தீவிர அஜித்குமார் ரசிகர். இவரது பெயரே அஜித்குமார்தான். முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் பல ரசிகர்களில் இவரும் ஒருவர்.

அதனால் விஸ்வாசம் படம் பார்க்க தன் அப்பாவிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற அஜித்குமார், தூங்கிக்கொண்டு இருந்த தந்தை மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டார்.

தீவிர சிகிச்சை:  உடம்பெங்கும் தீ பற்றி எரிய பாண்டியன் அலறி துடித்துள்ளார். பிறகு சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் தீக்காயங்களுடன் பாண்டியனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பார்க்க பணம் தராத அப்பாவை மகனே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/son-try-kills-his-father-due-viswasam-film-338551.html

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Stab to two Ajith fans in Vellore Alankar Theater

வேலூரில் அஜித் ரசிகர்கள் இடையே மோதல்.... இருவருக்கு கத்திக்குத்து.

வேலூரில் விஸ்வாசம் படம் வெளியான அலங்கார் திரையரங்கில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அஜித் ரசிகர்கள் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்கள் இன்று வெளியாகி உள்ளது.

இதனால், படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் 2 நடிகர்களின் ரசிகர்களாலும் கொடி, தோரணம், கட் அவுட்கள், பால் அபிஷேகம் என்று களை கட்டி உள்ளன. பட்டாசுகளை வெடித்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், வேலூர் அலங்கார் திரையரங்கில், நேற்றிரவு முதல் ஆடல், பாடல் என அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர்.

பின்னர், சிறப்பு காட்சி தொடங்கியதும், திரையரங்கில் சீட் பிடிக்க ஏற்பட்ட தகராறில் பிரசாந்த், மற்றும் அவரது மாமா ரமேஷுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால், திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/stab-two-ajith-fans-vellore-alankar-theater-338547.html

  • கருத்துக்கள உறவுகள்

பேட்ட பேனர் கிழிப்பு .. அசித்து ரசுனி ரசிகர்கள் சண்டை .. ☺️

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் விஸ்வாசத்தின் நிலைமை இதுதான்! தலை தெறிக்க ஓடிய ரசிகர்களின் வீடியோ இதோ

 

அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே வெளியாகியுள்ளது. இதனை தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பல திரையரங்குகளில் ஸ்பெஷல் காட்சிகள் திரையிடப்பட்டதால் நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் அத்தகைய திரையரங்குகள் முன்பு காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

அதேபோல் தான் இலங்கையில் உள்ள திரையரங்கு ஒன்றின் முன்பு காத்திருந்த ரசிகர்கள் கேட்டை திறந்தவுடன் எப்படி வேகமாக ஓடுகிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட கொடுமையே... இன்று  இவர்கள்  வேலைக்கோ, பாடசாலைக்கோ  போகவில்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது, ஜப்பானில்... நடந்த கூத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஜித் கட் அவுட்டுக்கு, மாலை போடும் போது... கட் அவுட் சரிந்து விழுந்து... பலர் காயம். 

கட்டவுடுக்கு கொண்டுபோன பாலை வாய்ல ஊத்திக்கிட்டானுங்க......🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

பேட்ட பட தியேட்டரிலேயே திருமணம் செய்த ரஜினியின் தீவிர ரசிகர்.. 

நிறà¯à®¯ à®à®±à®µà®¿à®©à®°à¯à®à®³à¯

சென்னை: பேட்ட படம் வெளியாகி இருக்கும் சென்னை தியேட்டர் ஒன்றில் நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் தனது திருமண விழாவை நடத்தி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட பேட்ட படம் இன்று அதிகாலை வெளியானது. காலை முதல் ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். அதிகாலையே ரசிகர்களை தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்தனர். இதனால் பல திரையரங்குகள் திருவிழா போல காட்சி அளித்து இருந்தது.

திருமணம் பேட்ட படம் வெளியாகி இருக்கும் சென்னை தியேட்டர் ஒன்றில் நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் தனது திருமண விழாவில் நடத்தி உள்ளார். இவரின் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. சென்னை ராயப்பேட்டை அருகே இருக்கும் உட்லேண்ட்ஸ் தியேட்டரில் இந்த திருமணம் 

à®°à®à®¿à®©à®¿ à®°à®à®¿à®à®°à¯

ரஜினி ரசிகர் இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. தியேட்டருக்கு வெளியேயே மேடை அமைத்து திருமணம் நடந்தது. ஐயர் வரவழைக்கப்பட்டு, சடங்குகள் எல்லாம் செய்து முறையாக இந்த திருமணம் நடந்தது.

நிறைய உறவினர்கள் நிறைய உறவினர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின் தம்பதியினர் ஒன்றாக பேட்ட படம் பார்க்க போவதாக கூறியுள்ளனர். இந்த திருமணம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

திரà¯à®®à®£à®®à¯

சாப்பாடு அளித்தனர் இந்த நிலையில் திருமணம் முடிந்து அங்கேயே எல்லோருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டது. தியேட்டருக்கு வெளியேயே மக்களுக்கு வரிசையில் சாப்பாடு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

à®à®¾à®ªà¯à®ªà®¾à®à¯ à®à®³à®¿à®¤à¯à®¤à®©à®°à¯

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/hardcore-fans-couple-got-married-petta-theater-chennai/articlecontent-pf347236-338542.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

Image may contain: one or more people and people sitting

படத்துக்கு போக காசு கொடுக்காததால்.... மகனால்  பெற்றோல் ஊற்றி, எரிக்கப் பட்ட  தந்தை.

பல அப்பய்ங்க மைண்டு வாய்ஸ் ... அன்னைக்கி நாம செகண்டு ஷோ போயிருந்தா இந்த மரணபயம் இருந்திருக்காது. -Premji Prem Kumar.- 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

49914742_1623054101172664_5716520115705479168_n.jpg?_nc_cat=1&_nc_ht=scontent-frt3-2.xx&oh=f6a8aaf54ee12f4ba1349c29c4297dd6&oe=5CCF1101

சினிமா ரசனை வேறு.. சிந்தனையற்ற ரசனை வேறு...  திருந்துங்கள் ரசிகர்களே...

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

 

Image may contain: 1 person, text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

அஜித் கட் அவுட்டுக்கு, மாலை போடும் போது... கட் அவுட் சரிந்து விழுந்து... பலர் காயம். 

 

7 hours ago, புலோலியூரான் ரவீ..ன் said:

கட்டவுடுக்கு கொண்டுபோன பாலை வாய்ல ஊத்திக்கிட்டானுங்க......🤣🤣🤣

அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்ததில் ரசிகர் பலி: கொண்டாட்டம் சோகமான விபரீதம்  ..

https://tamil.filmibeat.com/news/fan-dead-ajith-cutout-disaster-057777.html

டிஸ்கி :

தங்கள் வாக்கு பலித்து போட்டுதே தோழர் ..😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text

 

Image may contain: 3 people, text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வாசம் அசித் சிலை .. 🙂

maxresdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு வேண்டுகோள் ..🤔

 

  • கருத்துக்கள உறவுகள்

தியேட்டரில் ரஜினி போல சிகரெட் பிடித்தபடி படம் பார்த்த ரசிகர்.. அடித்து கொன்ற பக்கத்து சீட்காரர் 

petta-qqq-1548126763.jpg

திருப்பூர்: பேட்ட படத்தை பார்த்து கொண்டே சிகரெட் பிடித்த ரஜினி ரசிகர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உடுமலையை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. கட்டிடதொழிலாளியான இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர்.

இந்நிலையில் கடந்த 12 ந்தேதி அங்குள்ள லதாங்கி என்ற தியேட்டரில் பேட்ட படம் பார்க்க மணிகண்ட பிரபு சென்றிருக்கிறார்.அப்போது படம் பார்த்து கொண்டே, ரஜினியை போல வாயில் சிகரெட்டை பற்ற வைத்து ஸ்டைலாக ஊதி கொண்டிருந்தார். இதை பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் கவனித்துவிட்டு, சிகரெட் பிடிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

சரமாரி அடி

ஆனால் தன் தலைவன் படம் என்ற உற்சாகத்தில் சிகரெட்டை பிரபு தொடர்ந்து பிடித்து கொண்டே இருந்திருக்கிறார். இது இருவருக்கும் தகராறாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பக்கத்து சீட்டுக்காரர் பிரபுவின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கி உள்ளார்.

தீவிர சிகிச்சை

பிறகு கீழே கிடந்த கட்டையை எடுத்து நடுமண்டையில் அடித்துள்ளார். இதில் பிரபு படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். படம் முடிவதற்குள்ளேயே இவ்வளவும் நடந்து முடிந்தது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பிரபு பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

சிசிடிவி காட்சிகள்

ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது தியேட்டரின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும்போதுதான் மேற்கண்ட விவரங்கள் போலீசார் தெரிவித்தனர்.

தொடர் வன்முறை

பிரபுவை தாக்கிய பக்கத்து சீட்டுக்காரர் அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பது அடையாளம் காணப்பட்டு, அவரை போலீசார் கைது செய்தனர். பேட்ட, விஸ்வாசம் இரு படங்களும் ரிலீசான நாள் முதல் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கிறது. ஆனால் இரு தரப்பு ரசிகர்களும் வன்முறையில் ஈடுபட்டு கொலை வரை சென்று கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

https://tamil.oneindia.com/news/tiruppur/rajini-fan-murder-near-thirupur/articlecontent-pf349021-339303.html

டிஸ்கி :

யாரும் அதிர்ச்சி எல்லாம் ஆகலை .. செம்பு தட்ஸ்தமிழ்க்கு அதிக கரிசனை .😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தியேட்டரில் ரஜினி போல சிகரெட் பிடித்தபடி படம் பார்த்த ரசிகர்.. அடித்து கொன்ற பக்கத்து சீட்காரர் 

--------

டிஸ்கி :

யாரும் அதிர்ச்சி எல்லாம் ஆகலை .. செம்பு தட்ஸ்தமிழ்க்கு அதிக கரிசனை .😊

ரஜனி போல்  சிகரட் குடித்த, ரசிகருக்கு... செவிட்டிலை,  நாலு அறை...    குடுக்கிறதை விட்டுட்டு...
அவனை அடித்து  கொன்று விட்டார்களே...
இதுக்குப் பிறகு... யாரும் ராஜனி மாதிரி, சிகரட்  குடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.  🤪

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த ரசிகனின் வீட்டிற்கு சென்று கதறி அழுத சிம்பு.

simbicry22-1548665440.jpg

சென்னை: பேனர் வைக்கும் தகராறில் கொலை செய்யப்பட்ட தனது ரசிகரின் வீட்டிற்கு சென்ற சிம்பு துக்கம் தாங்க முடியாமல் அழுதுவிட்டார்.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்பு ரசிகரான மதன் திருமண நிகழ்ச்சியின்போது பேனர் வைக்கும் தகராறில் கொலை செய்யப்பட்டார்.

அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார் சிம்பு.

இந்நிலையில் மதனின் வீட்டிற்கு இன்று சிம்பு சென்றார் . சிம்பு வந்தா ராஜாவாதான் ரிலீஸுக்கு முன்பு தனக்கு பேனர், கட்அவுட்டுகள் வைப்பதற்கு பதில் பெற்றோருக்கு உடை வாங்கிக் கொடுக்குமாறு சிம்பு முதலில் தெரிவித்தார். இந்நிலையில் அவர் மதனின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு உடை கொடுத்து ஆறுதல் கூறினார்.

அழுகை கண்ணீர்

மதனின் பெற்றோர் அழுவதை பார்த்த சிம்புவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார். மதனின் குடும்பத்தை தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அவர் அழுதபோது எடுத்த வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் ஃபீல் பண்ணியுள்ளனர்.

ரசிகன் குடும்பம்

மதன் வீட்டிற்கு சென்ற சிம்பு பெயருக்கு போய் பேசிவிட்டு உடனே கிளம்பவில்லை. அங்கு சிறிது நேரம் இருந்து மதன் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டார். மதனின் புகைப்படத்தை பார்த்ததும் மீண்டும் அழத் துவங்கிவிட்டார் சிம்பு.

நல்ல மனசு 

சிம்பு மாதிரி ஒரு நல்ல மனசு யாருக்கும் வராது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். தனக்கு பேனர் வைத்து அண்டாவில் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.filmibeat.com/news/simbu-gets-emotional-058041.html

டிஸ்கி :

நல்ல ரசிகன் ..நல்ல தலீவன் .. ☺️

 

  • கருத்துக்கள உறவுகள்

simbubaner-1548995772.jpg

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling, text

இப்படியே.... பால், ஊத்திக் கொண்டு இருந்தால், விரைவில்.. அகதி ஆவாய். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் செல்வி 😊jfkjvgl8_varalaxmi-sarathkumar_625x300_0

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.