Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம் பொலிஸ் நிலைய சித்திரவதை வழக்கு ; பொலிஸ் அதிகாரிகளுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை

Featured Replies

சுன்னாகம் பொலிஸ் நிலைய சித்திரவதை வழக்கு ; பொலிஸ் அதிகாரிகளுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை

 

 

ரி.விரூஷன்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011.11.25 அன்று குற்றச்சாட்டு சம்பமொன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறிகந்தராசா சுமணனன் என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில், யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சித்திரவதை வழக்கில் ஆறு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கும் பத்தாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த வழக்கின் இறுதி தொகுப்புரைக்காக இன்றைய தினம் பிற்பகல் யாழ்.மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ் தீர்ப்பை வழங்கினார். 

இதன்படி வழக்கின் தீர்ப்பானது இன்று மாலை 4.35 மணியளவில் வழங்கப்பட்டது. இவ் தீர்ப்பில் குற்றவாளியான ஆறு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பத்தாண்டு கடுழிய சிறைத்தண்டனையும், 25 ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறின் ஒரு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், ஒவ்வொரு எதிரியும் தலா 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும், கட்டத்தவறின் ஒரு ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/19696

இந்த 6 பேரில் இரண்டு மூன்று தமிழர்களும் இருக்கினம் என வாசித்தது நினைவு. இவர்கள் எப்படியும் மேன் முறையீடு செய்து தெற்கிற்கு  வழக்கை மாற்றி தப்பி விடிவினம்.

21 minutes ago, நவீனன் said:

 

25 ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறின் ஒரு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், ஒவ்வொரு எதிரியும் தலா 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும், கட்டத்தவறின் ஒரு ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/19696

 

வெறும்  25 ரூபாவா? வீரகேசரி வழக்கம் போல நித்தா கொண்டுட்டு போலிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இந்த 6 பேரில் இரண்டு மூன்று தமிழர்களும் இருக்கினம் என வாசித்தது நினைவு. இவர்கள் எப்படியும் மேன் முறையீடு செய்து தெற்கிற்கு  வழக்கை மாற்றி தப்பி விடிவினம்.

வெறும்  25 ரூபாவா? வீரகேசரி வழக்கம் போல நித்தா கொண்டுட்டு போலிருக்கு

முந்தி மாதிரி, புலிப்பயம் காட்டி தெற்க மாத்தி தப்பேலாது. 

அதுதான் அவயண்ட கவலை. ஆனால் அப்பீல் கொழும்பு தான். அங்க ஜட்ஜ் ஜயா... சி தானே.

வரலாற்றில் வித்தியாசமான தீர்ப்பு!

தெற்குசார்ந்த உயர்நீதித்துறையின் போக்கை பொறுத்திருந்து பார்ப்போம்

14 hours ago, நிழலி said:

இந்த 6 பேரில் இரண்டு மூன்று தமிழர்களும் இருக்கினம் என வாசித்தது நினைவு. இவர்கள் எப்படியும் மேன் முறையீடு செய்து தெற்கிற்கு  வழக்கை மாற்றி தப்பி விடிவினம்.

வெறும்  25 ரூபாவா? வீரகேசரி வழக்கம் போல நித்தா கொண்டுட்டு போலிருக்கு

1 தமிழ். 4 சிங்களம்.
தலா 25ஆயிரம் ரூபா

 

யாழ். இளைஞன் சுமணனை சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி! நீதிபதி இளஞ்செழியன்

உயிரிழந்த ஶ்ரீஸ்கந்தராஜா சுமணனின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனையின் மூலம் அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாவதாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆறு பேருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொலன்னறுவை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையை சுட்டிக்காட்டியே, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளார்.

இறந்தவரின் உடலில் ஆறு வெளிக்காயங்களும், 16 கண்டல் காயங்களும், காணப்பட்டதாகவும், மொட்டையான ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்தும் புதுக்காயங்கள் எனவும், உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் என சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு :

“இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட முதலாவது எதிரியான அப்போதைய சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்கபண்டார, இரண்டாவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன், நான்காவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் ராஜபக்ஷ, ஐந்தாவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் ஜயந்த, ஆறாவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்க ஆகியோருக்கு தலா பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனையும், தலா 25ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறின் 1ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், சுமணனது இரத்த உறவினருக்கு தலா 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் மேலும் 1 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.”

http://www.tamilwin.com/statements/01/144603?ref=home-feed

 
  • கருத்துக்கள உறவுகள்

சுமணனை தொங்க விட்டு தாக்கியமை வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. – நீதிபதி மா.இளஞ்செழியன்

சுமணனை தொங்கவிட்டு கால்களிலும் பிட்டத்திலும் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இவற்றில் கண்டல் காயங்கள் உள்ளதை மருத்துவ அறிக்கை உறுதி செய்துள்ளது. அத்துடன் இக் காயங்கள் மொட்டையான ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் உறுதி செய்கின்றது. என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பின் போது தெரிவித்தார்.

சுன்னாகம் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிசாரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சித்திரவதைக்கு எதிரான வழக்கு புதன் கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது  குறித்த வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது அதன் போதே நீதிபதி அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,

குறித்த வழக்கில் முக்கிய சாட்சியாக இரண்டு சிவிலியன் சாட்சிகளும், பிரேத பரிசோதனை அறிக்கைகளும் காணப்பட்டதுடன், எனைய பொலிஸ் சாட்சியங்களும் பொலிஸ் பதிவேட்டை அடிப்படையாக கொண்டு அமைந்ததுடன் குற்றப் புலனாய்வு பிரிவின் சாட்சியமும் காணப்பட்டது.

இதன்படி இவ் வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள சுமணண் என்பவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுரேஸ் எவ்வாறு தனக்கும், சுமணணன் என்பவருக்கும் தாக்குதல் நடாத்தப்பட்டன என சாட்சியமளித்ததுடன் அது தொடர்பாக மன்றில் செய்தும் காட்டியிருந்தார். அதேபோன்று இரண்டாவதான சிவிலியன் சாட்சியான லோகேஸ்வரனும் சுமணண் என்பவரை பொலிஸார் கைது செய்து வரும் போது அவரது நெற்றியால் இரத்தம் வழிந்துகொண்டிருந்ததை கண்டதாக சாட்சியமளித்திருந்தார். இவற்றை மருத்துவருடயை பிரேத பரிசோதனை அறிக்கை ஒப்புறுதி செய்வதாக உள்ளது. ஏனெனில், குறித்த சுமணணன் என்பவரது உடலில் 16உட் காயங்களும், 6 வெளிக்காயங்களும் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சுரேஸ் என்பவரது சாட்சியத்தின் பிரகாரம் சுமணனை தொங்கவிட்டு கால்களிலும் பிட்டத்திலும் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இவற்றில் கண்டல் காயங்கள் உள்ளதை மருத்துவ அறிக்கை உறுதி செய்துள்ளது. அத்துடன் இக் காயங்கள் மொட்டையான ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் உறுதி செய்கின்றது. மேலும் பிரதி சொலிஸ்ர ஜெனறல் குமார்ரட்டணத்தால் சமர்பிக்கப்பட்ட வ1இருந்து வ10இஆ பிரிவு சாட்சியங்களும் ஆவணங்களும் குறித்த சிந்தக்கபண்டார பொலிஸ் அதிகாரி உட்பட எனைய ஜந்து பொலிஸ் அதிகாரிகளது பொறுப்பிலேயே சிறிகந்தராசா சுமணண் 25.11.2011 அன்றில் இருந்து 26.11.2011 அன்று பிற்பகல் அவரது சடலம் கண்டுபிடிக்கும் வரை இருந்தார் என்பது நிருபணமாகின்றது.

அத்துடன் குறுக்கு விசாரனையின் போது குறித்த இறந்த நபரது உடலில் காணப்பட்ட காயங்கள் எக் காலத்திற்கு உரியவை என எதிரி தரப்பு சட்டத்தரணியால் சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்க்கப்பட்ட போது, சட்ட வைத்திய அதிகாரி அவை புதிய காயங்கள் எனவும் இரண்டு தினங்களுக்குள் ஏற்பட்டதாக காயங்கள் எனவும் சாட்சியமளித்திருந்தார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார, சுமணணன் என்பவரை 25.11.2011 அன்று இரவு விசாரனைக்காக தடுப்பு சிறையில் இருந்து வெளியில் எடுத்தமையும், அதன்பின்னர் மறுநாள் காலை வட்டக்கச்சிக்கு விசாரனைக்காக அழைத்து சென்றமையும் அவர் தப்பிச் சென்று குளத்தில் மரணமான நிலையில் மீட்டதையும் தனது கூண்டு வாக்கு மூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேபோன்று எனைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தரில் 4ஆம் 5ஆம் 6ஆம் பொலிஸ் உத்தியோகத்தர்களை தவிர மற்றைய நபரும் தனது கூண்டு வாக்கு மூலத்தில் தமது செயற்பாட்டை கூறியுள்ளார். எனைய மூன்று 4ஆம், 5ஆம், 6ஆம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூண்டு வாக்கு மூலத்தில் எதுவும் கூறவில்லை. இங்கு கூண்டு வாக்கு மூலம் அளித்த சிந்தக்கபண்டார மற்றும் இரண்டாவது எதிரி மயூரன் சித்திரவதை செய்தமை தொடர்பாக மறுத்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் சித்திரவதை செய்யாமையின் நம்பகத்தன்மை தொடர்பில் மன்று ஆராய்ந்த போது சாட்சியங்களின் அடிப்படையில் அதனை இவர்களது மறுப்பை மன்று ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே இவ் வழக்கில் எதிரிகளான பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1ஆம், 2ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 7ஆம் ஆகியோர் குற்றவாளிகளாக பிரதி சொலிஸ்ர ஜெனறல் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் சாட்சிகள் ஊடாக நிரூபித்துள்ளார். மேலும் இவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்றாவது மற்றும் எட்டாவது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான குற்றத்தை அரச தரப்பானது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை. அதனால் இவ் வழக்கின் மூன்றாவது எதிரியான தேவதயாளன், மற்றும் எட்டாவது எதிரியான பொலிஸ் வாகன சாரதி லலித் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கபப்டுகின்றனர். என தெரிவித்தார்.

தீர்ப்பு.

அதனை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட முதலாவது எதிரியான அப்போதைய சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , சிந்தக்கபண்டார, இரண்டாவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் மயூரன், நான்காவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் ராஜபக்ஷ, ஜந்தாவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் ஜயந்த, ஆறாவது எதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்க ஆகியோருக்கு தலா பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனையும், தலா 25ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறின் 1ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், சுமணணது இரத்த உறவினருக்கு தலா 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 1ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

வழக்கின் பின்னணி. 

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.

அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த அப்போதைய நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார , மயூரன் , தயாளன் , சஞ்ஜீவ ராஜபக்சே , ஜெயந்த , வீரசிங்க , கோபி (குறித்த நபர் நாட்டில் இல்லை , அவருக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து நீதிமன்றினால் பிறப்பிக்கபட்டு உள்ளது.) லலித் , ஆகிய    8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள்  மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.

அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட  8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  • தொடங்கியவர்
சித்திரவதை புரிந்த 6 பொலிஸாருக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு
 
 
சித்திரவதை புரிந்த 6 பொலிஸாருக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறை  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு
சந்­தே­க­ந­ப­ரைத் தடுப்­புக்­கா­வ­லில் வைத்து சித்­தி­ர­வதை செய்த 6 பொலி­ஸா­ருக்கு 10 வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை வழங்கி யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றம் நேற்­றுத் தீர்ப்ப­ளித்­தது.
 
இந்த வழக்­கில் மனித குலத்­துக்கு எதி­ரான கொடுமை செய்­த­னர் என்று யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றத்­தால் இனங்­கா­ண­ப்பட்ட சுன்­னா­கம் பொலிஸ் நிலை­யத்­தின் முன்­னாள் பொறுப்­ப­தி­காரி சிந்திக்க பண்­டார, பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளான மயூ­ரன், ராஜ­பக்ச, ஜெயந்த, சோமதாஸ வீரசிங்க மற்­றும் கோபி­கி­ருஸ்ணா ஆகி­யோ­ருக்கே தண்டனை வழங்­கப்­பட்­டது. குற்­றஞ்­சாட்­டப்­பட்ட மேலும் இரு பொலி­ஸார் விடு­விக்­கப்­பட்­ட­ னர்.
 
குற்­ற­வா­ளி­கள் 6 பேரும் தலா 2 லட்­சம் ரூபாவை சித்­தி­ர­வ­தைக்­குள்­ளான சும­ண­னின் குடும்­பத்­துக்கு இழப்­பீ­டாக வழங்க வேண்­டும். செலுத்­தத் தவ­றின் ஒரு வரு­டம் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும். குற்­ற­வா­ளி­கள் 6 பேரும் தலா 25 ஆயி­ரம் ரூபாவை தண்­ட­மா­கச் செலுத்த வேண்­டும். அத­னை­யும் 
 
செலுத்­தத் தவ­றின் மேலும் 1 வரு­டம் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும் என்று யாழ்ப்­பாண மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் உத்­த­ர­விட்­டார்.
 
யாழ்ப்­பா­ணம், சுன்­னா­கம் பொலிஸ் நிலை­யத்­துக்­குட்­பட்ட பகு­தி­யில்  2011ஆம் ஆண்டு நவம்­பர் 21ஆம் திக­திக்கு முன்­ன­ரான காலப் பகு­தி­யில் இடம்­பெற்ற 35 லட்­சம் ரூபா மதிக்­கத்­தக்க திருட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் கிடைக்­கப் பெற்ற முறைப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் 2011ஆம் ஆண்டு நவம்­பர் 25ஆம் திகதி சுன்­னா­கம் பொலி­ஸா­ரால் 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளில் சிறிஸ்­கந்­த­ராஜா சும­ணன் முத­லா­வது சந்­தே­க­ந­ப­ரா­கக் கைது செய்­யப்­பட்­டார். 
 
எனி­னும் விசா­ர­ணைக்­காக கிளி­நொச்சி, வட்­டக்­கச்­சிக்கு அழைத்­துச் செல்­லப்­பட்ட சும­ணன் பொலிஸ் காவ­லி­லி­ருந்து தப்­பித்து இர­ணை­ம­டுக் குளத்­தில் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார் என்று பொலி­ஸா­ரால் கிளி­நொச்சி நீதி­வான் மன்­றில் அறி­யி­டப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் 2011ஆம் ஆண்டு நவம்­பர் 26ஆம் திகதி மாலை இடம்­பெற்­ற­தா­க­வும் பொலி­ஸா­ரால் தெரி­விக்­கப்­பட்­டது.
 
இந்த நிலை­யில் ஏனைய 4 சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் பெரும் குற்ற வழக்கு மல்­லா­கம் நீதி­வான் மன்­றில் பதிவு செய்­யப்­பட்டு விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன. கடந்த ஆண்டு இடம்­பெற்ற இந்த வழக்கு விசா­ர­ணை­யின் போது சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர், சுன்­னா­கம் பொலிஸ் நிலைய முன்­னாள் பொறுப்­ப­தி­காரி சித்­திக்க பண்­டார உள்­ளிட்ட 8 பொலி­ஸார் மீது சும­ணனை சித்­தி­ர­வதை செய்து கொலை செய்­த­னர் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்­த­னர்.
 
மல்­லா­கம் நீதி­வான் அந்­தோ­னிப்­பிள்ளை ஜூட்­சன் சந்­தே­க­ந­பர்­க­ளின் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் பொலி­ஸா­ரி­டம் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சித்­தி­ர­வதை மற்­றும் கொலை ஆகிய இரு பிரி­வு­க­ளில் வழக்­கு­களை முன்­னெ­டுக்­கு­மாறு குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டார். அத்­து­டன், சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்­கும் நீதி­வான் அறி­வித்­தல் வழங்­கி­னார்.
 
சம்­ப­வம் தொடர்­பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வி­னர் சந்­தே­க­ந­பரை கிளி­நொச்­சிக்கு அழைத்­துச் சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்ட சித்­திக்க பண்­டார உள்­ளிட்ட 5 பொலி­ஸா­ருக்கு எதி­ராக கொலை குற்­றச்­சாட்­டுப் பத்­தி­ரத்தை கிளி­நொச்சி நீதி­வான் மன்­றில் முன்­வைத்­த­னர். அத்­து­டன், சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தால் பொலிஸ் அதி­காரி சித்­திக்க பண்­டார உள்­ளிட்ட 8 பொலி­ஸா­ருக்கு எதி­ராக 1994ஆம் ஆண்டு சித்­தி­ரை­வ­தை­கள் சட்­டத்­துக்கு அமை­வாக யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றத்­தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது.
 
யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா. இளஞ்­செ­ழி­யன் முன்­னி­லை­யில் வழக்கு விசா­ர­ணை­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வந்­த­நி­லை­யில் நேற்று வழக்­குத் தொடு­னர் மற்­றும் எதிரி தரப்­புச் சட்­டத்­த­ர­ணி­க­ளின் தொகுப்­பு­ரை­கள் இடம்­பெற்­றன.
 
வழக்­குத் தொடு­னர் சார்­பில் வழக்கை நெறிப்­ப­டுத்­திய சட்­டமா அதி­பர் திணைக்­கள பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி குமார் ரட்­ணம் தொகுப்­பு­ரை­யில், 8 சந்­தே­க­ந­பர்­க­ளுக்­கும் எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை நிரு­பிக்­கும் வகை­யில் மன்­றில் சமர்ப்­பித்த சாட்­சி­யங்­கள் மற்­றும் ஆவ­ணங்­களை வைத்து ஒப்­பு­விப்­புக்­க­ளைச் செய்­தார்.
 
“3ஆவது சந்­தே­க­ரான பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் தயா­ளன் தவிர்ந்த ஏனைய 7 சந்­தே­க­ந­பர்­க­ளும் தடுப்­புக் காவ­லி­லி­ருந்த சும­ணனை சித்­தி­ர­வ­தைக்­குட்­ப­டுத்­தி­னர். சும­ணன் கைது செய்­தது முதல் அவரை வெளி­யில் அழைத்­துச் செல்­லப்­பட்­டமை வரை­யான பொலி­ஸா­ரின் பதி­வுப் புத்­த­கங்­க­ளின் குறிப்­புக்­கள் உறுதி செய்­கின்­றன.
 
சட்ட மருத்­துவ அதி­கா­ரி­யால் வழங்­கப்­பட்ட சாட்­சி­யத்­தின் அடிப்­ப­டை­யில் சம­ண­னின் உட­லில் 16 உட்­கா­யங்­க­ளும் 6 வெளிக்­கா­யங்­க­ளும் உள்­ளமை அவர் மீது சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­மையை உறுதி செய்­கி­றது. முத­லா­வது மற்­றும் மூன்­றா­வது சிவில் சாட்­சி­யங்­கள் சித்­தி­ர­வதை செய்­த­மை­யைக் கண் கண்ட சாட்­சி­யங்­க­ளாக மன்று ஏற்­றுக் கொள்­ள­வேண்­டும்.
 
முக்­கி­ய­மாக, சந்­தே­க­ந­ப­ரான சும­ணன் நவம்­பர் மாதம் 26ஆம் திகதி மாலை இறந்­தார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அன்று இரவு 7 மணிக்கு சும­ண­னு­டன் கைது செய்­யப்­பட்ட ஏனைய 4 சந்­தே­க­ந­பர்­க­ளும் மல்­லா­கம் நீதி­வான் முன்­னி­லை­யில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­போது, சும­ணன் கைது பற்­றிய எந்­தத் தக­வ­லை­யும் பொலி­ஸார் நீதி­வா­னி­டம் முன்­வைக்­கப்­பட்ட முதல் அறிக்­கை­யில் வெளிக்­காட்­ட­வில்லை. டிசெம்­பர் மாதம் முத­லாம் திக­தியே சும­ணன் கைது பற்­றிய விவ­ரம் முதல் அறிக்­கை­யில் இணைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே இந்த விட­யத்தை முக்­கிய விட­ய­மாக மன்று ஏற்­றுக்­கொள்ள வேண்­டும்.
 
அத்­து­டன், சும­ணன் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­ததை மூடி மறைப்­ப­தற்­காக அரங்­கேற்­றப்­பட்­டதே வட்­டக்­கட்­சிக்கு அவரை அழைத்­துச் சென்ற சம்­ப­வம் என மன்­றில் உறு­தி­யா­கக் கூறு­கின்­றேன்” என்று பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி தொகுப்­பு­ரை­யில் மேலும் தெரி­வித்­தார்.
 
தொடர்ந்து சந்­தே­க­ந­பர்­க­ளின் சட்­டத்­த­ர­ணி­க­ளான அன­ரன் புனி­த­நா­ய­கம், சர்­மினி விக்­கி­னேஸ்­வ­ரன், ...., ரஞ்­சித் குமார் மற்­றும் மு.றெமி­டி­யஸ் ஆகி­யோர் முறையே தொகுப்­பு­ரை­களை வழங்­கி­னர்.
 
சிவில் சாட்­சி­கள், பொலிஸ் சாட்­சி­யங்­கள், நிபு­ணத்­துவ சாட்­சி­யங்­கள் ஒன்­றுக்கு ஒன்று முர­ணா­னவை என்று அவர்­கள் முதன்­மை­யாக எடுத்­துக் கூறி­னர். பொலி­ஸார் மீது திருட்­டுச் சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு ஏற்­பட்ட விரக்­தியே இந்த வழக்­கின் அடிப்­படை என்­றும் அர­சி­யல் நாட­கம் என்­றும் எதிரி தரப்­புச் சட்­டத்­த­ர­ணி­கள் மன்­றில் எடுத்­து­ரைத்­த­னர். (அவர்­க­ளால் முன்­வைக்­கப்­பட்ட சில கருத்­துக்­கள் திறந்த மன்­றில் பல­ரை­யும் இடை­யிடை யே சிரிக்க வைத்­தன).
 
இரு தரப்பு தொகுப்­பு­ரை­க­ளும் நிறை­வ­டைந்­த­வு­டன் 30 நிமிட இடை­வே­ளை­யின் பின் தீர்ப்பு அறி­விக்­கப்­ப­டும் என்று யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்று அறி­வித்­தது.
மாலை 4.35 மணிக்கு மன்று மீண்­டும் கூடி­யது. மேல் நீதி­மன்ற நீதி­பதி தீர்ப்பை வழங்­கி­னார்.
 
“பொலிஸ் நிலை­யத்­தில் தடுப்­புக் காவ­லி­லி­ருந்த சந்­தே­க­ந­பர் ஒரு­வரை கொடுமை செய்த குற்­றச்­சாட்­டில் இந்த வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. எதிரி தரப்­புச் சட்­டத்­த­ர­ணி­க­ளால் முன்­வைக்­கப்­பட்ட தொகுப்­பு­ரை­க­ளில் சாட்­சி­யங்­க­ளுக்கு இடையே காணப்­பட்ட முரண்­பா­டு­கள் தொடர்­பில் மட்­டுமே கூறப்­பட்­டது. ஆனால் இந்த வழக்­கில் சாட்­சி­யங்­களே இல்­லா­மல் வேறு முக்­கிய சில விட­யங்­களை மன்று சீர் துாக்­கிப் பார்க்­கின்­றது.
 
சந்­தே­க­ந­பர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டால், 24 மணி நேரத்­துக்­குள் நீதி­வான் முன்­னி­லை­யில் முற்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அர­ச­மைப்­பில் கூறப்­பட்ட சட்­ட­மா­கும். ஆனால் சந்­தே­க­ந­பர் சும­ணன் நவம்­பர் மாதம் 25ஆம் திகதி மு.ப. 10.30 மணிக்­குக் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவரை மறு­நாள் 26ஆம் திகதி காலை 6.30 மணிக்கு  கிளி­நொச்சி, வட்­டக்­கச்­சிக்கு விசா­ர­ணைக்­கா­கப் பொலி­ஸார் அழைத்­துச் சென்­றுள்­ள­னர். அன்­றைய தினம் பி.ப. வேளை சும­ணன் பொலிஸ் காவ­லி­லி­ருந்து தப்­பித்து மாலை இர­ணை­ம­டுக் குளத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்­டார் என்று பொலி­ஸா­ரால் தெரி­விக்­கப்­பட்­டது. 
 
சந்­தே­க­ந­பர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டால் 24 மணி நேரத்­துக்­குள் அண்­மை­யா­க­வுள்ள நீதி­வான் முன்­னி­லை­யில் அவரை முற்­ப­டுத்த வேண்­டும். நீதி­வா­னின் அனு­ம­தி­யு­டன் மறி­யல் சாலை உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரு­டன் சந்­தே­க­ந­பரை விசா­ர­ணைக்கு எங்கு வேண்­டும் என்­றா­லும் அழைத்­துச் செல்­ல­லாம் என்று குற்­ற­வி­யல் சட்ட நடை­மு­றைக் கோவை­யில் கூறப்­பட்­டுள்­ளது. 
 
எனி­னும் இந்த வழக்­கில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டில் சும­ணனை நீதி­வா­னி­டம் முற்­ப­டுத்­தா­மல் பொலி­ஸார் செயற்­பட்­ட­மையே அவர்­கள் மீதான குற்­றச்­சாட்டை நிருப்­பிக்­கும் செயற்­பாடு. சந்­தே­க­ந­பர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்ட பின்­னர், அவர் மீதான அனைத்து நட­வ­டிக்­கை­க­க­ளுக்­கும் அந்த பொலிஸ் நிலை­யத்­தின் பொறுப்­ப­தி­கா­ரியே பொறுப்­புக் கூற வேண்­டி­ய­வர்.
 
மேலும் இந்த வழக்­கில் சட்ட மருத்­துவ அதி­கா­ரி­யின் அறிக்­கை­யை­யும் அவ­ரால் வழங்­கப்­பட்ட சாட்­சி­யங்­க­ளை­யும் மன்று ஏற்­றுக் கொள்­கின்­றது. கொல்­லப்­பட்ட சும­ணின் உட­லில் 16 உட்­கா­யங்­க­ளும் 6 வெளிக்­கா­யங்­க­ளும் இருந்­தன என்று சட்ட மருத்­துவ அதி­காரி குறிப்­பிட்­டார். ‘அந்த காயங்­கள் உட­லம் சோதனை செய்­யப்­பட்ட போது, எத்­தனை நாட்­க­ளுக்கு முன்­னர் ஏற்­பட்­டது’ என்று 2ஆம் எதி­ரி­யின் சட்­டத்­த­ரணி சட்ட மருத்­துவ அதி­கா­ரி­யி­டம் வின­விய போது, அவர் 2 நாள்­க­ளுக்கு முன்­னர் ஏற்­பட்­டவை என்று தெளி­வா­கப் பதி­ல­ளித்­தார். எனவே பொலி­ஸார் கைது செய்த பின்­னர்­தான் சும­ண­னுக்கு அந்­தக் காயங்­கள் ஏற்­பட்­டன என்று மன்று எண்­பிக்­கின்­றது.
 
பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட சித்­தி­ர­வ­தைக்கு கண்­கண்ட சாட்­சி­யம் அவ­சி­யம் இல்லை. எனி­னும் இந்த வழக்­கின் முத­லா­வது சாட்­சி­யின் சாட்­சி­யத்­தில் கூறப்­பட்­ட­வை­கள் சட்ட மருத்­துவ அதி­கா­ரி­யின் சாட்­சி­யத்­து­டன் ஒப்­பீடு செய்­கின்­றன. முத­லா­வது சாட்சி கூறி­ய­தற்கு அமை­வாக, சும­ணன் துாக்­கில் தொங்­க­வி­டப்­பட்டு அவ­ருக்­குப் பின்­பு­றத்­தில் பொல்­லு­க­ளால் அடிக்­கப்­பட்­டமை, சட்ட மருத்­துவ அதி­கா­ரி­யின் சாட்­சி­யத்­தில் தெரி­விக்­கப்­பட்ட பிண்­டத்­தில் ஏற்­பட்ட 3 காயங்­கள் நிரூப்­பிக்­கின்­றன. 
 
எல்­லா­வற்­றுக்­கும் மேலாக பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யி­லி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரால் பதிவு செய்­யப்­பட்ட பதி­வுப் புத்­த­கங்­க­ளின் குறிப்­புக்­க­ளின் அடிப்­ப­டை­யில் வழக்­குத் தொடு­ன­ரால் பொலிஸ் சந்­தே­க­ந­பர்­கள் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.
 
வழக்­குத் தொடு­ன­ரால் 1 தொடக்­கம் 11ஆ வரை முன்­வைக்­கப்­பட்ட ஆவ­ணங்­களை மன்று ஏற்­றுக் கொள்­கி­றது. 3ஆவது சந்­தே­க­ந­ப­ரான பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் தயா­ள­னுக்கு எதி­ராக வழக்­குத் தொடு­ன­ரால் நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்­பால் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. அவரை வழக்­கி­லி­ருந்து மன்று விடு­விக்­கின்­றது. அத்­து­டன், 8ஆவது சந்­தே­க­ந­ப­ரான வீர­சிங்க என்­ப­வர் சார­தி­யா­கக் கட­மை­யாற்­றி­னார். 
 
அவர் வட்­டக்­கச்­சிக்­குச் செல்­ல­வில்லை. ஆனால் சும­ணன் மீதான சித்­தி­ர­வ­தைக்கு பொல்­லு­கள் மற்­றும் வயர்­களை அவர் வழங்­கி­னார் என்று சாட்­சி­யத்­தில் தெரி­விக்­கப்­பட்ட போதும் அது நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தால் அவ­ரை­யும் மன்று விடு­விக்­கின்­றது.
 
ஏனை­ய­வர்­க­ளான முத­லா­வது எதிரி முன்­னாள் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி சிந்­திக்க பண்­டார, மயூ­ரன், ராஜ­பக்ச, ஜெயந்த,.... மற்­றும் கோபி­கி­ருஷ்ணா ஆகி­யோர் மன்­றால் நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்­பால் மனித குலத்­துக்கு எதி­ராக கொடு­மை­களை மேற்­கொண்ட குற்­ற­வா­ளி­கள் என மன்று முடி­வுக்கு வரு­கி­றது” என்று மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் தீர்­ப­ளித்­தார்.
 
அத்­து­டன், போர்க்­கா­லத்­திலோ, அமை­திக் காலத்­திலோ, அவ­ச­ர­கா­ல­நி­லை­யிலோ சந்­தே­க­ந­பர்­கள் மீது கொடு­மை­கள் இடம்­பெ­று­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மா­கும் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.
 
குற்­ற­வா­ளி­கள் சார்­பி­லும் வழக்­குத் தொடு­னர் சார்­பி­லும் மன்­றால் கருத்­துக்­கள் கேட்­கப்­பட்­டன. குற்­ற­வா­ளி­கள் தரப்­பில் எது­வுமே தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. வழக்­குத் தொடு­னர் தரப்­பில் முன்­னி­லை­யான பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி, குற்­ற­வா­ளி­க­ளுக்கு உச்­ச­பட்ச தண்­டனை வழங்­கு­மாறு கோரி­னார்.
 
அத்­து­டன், பாதிக்­கப்­பட்ட சும­ண­னின் குருதி உரித்து உற­வு­க­ளுக்கு ஒரு மில்­லி­யன் ரூபா­வுக்கு மேற்­ப­டா­த­வா­றா­வது குற்­ற­வா­ளி­க­ளால் இழப்­பீடு வழங்­கப்­பட வேண்­டும் என்று அரச சட்­ட­வாதி நாக­ரட்­ணம் நிசாந் மன்­றி­டம் வலி­யு­றுத்­தி­னார். தொடர்ந்து குற்­ற­வா­ளி­க­ளான 6 பொலி­ஸா­ருக்­கு­மான தண்­ட­னைத் தீர்ப்பை மேல் நீதி­மன்ற நீத­பதி அறி­வித்­தார்.
 
“1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்க சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான மாநாட்­டுச் சட்­டம், இலங்கை சித்­தி­ர­வ­தை­கள் சட்­டம், உயர் நீதி­மன்­றத்­தால் வழங்­கப்­பட்ட சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான தீர்ப்­புக்­கள், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள், பன்­னாட்டு நீதி­மன்ற போர்க்­குற்­றத் தீர்ப்­புக்­கள், உகண்டா நீதி­மன்ற சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான தீர்ப்பு உள்­ளிட்­ட­வைக்கு அமை­வாக 6 குற்­ற­வா­ளிக்­க­ளுக்­கும் அதி­கூ­டிய தண்­ட­னை­யாக தலா 10 வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறைத்­தண்­டனை வழங்­கப்­ப­டு­கி­றது. 
 
அத்­து­டன், குற்­ற­வா­ளி­கள் 6 பேரும் தலா 2 லட்­சம் ரூபாவை சித்­தி­ரை­வ­தைக்­குள்­ளான சும­ண­னின் குடும்­பத்­துக்கு இழப்­பீ­டாக வழங்க வேண்­டும். செலுத்­தத் தவ­றின் தலா ஒரு வரு­டம் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும். குற்­ற­வா­ளி­கள் 6 பேரும் தலா 25 ஆயி­ரம் ரூபாவை தண்­ட­மா­கச் செலுத்த வேண்­டும். அத­னை­யும் செலுத்­தத் தவ­றின் மேலும் தலா 1 வரு­டம் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும்” என்று யாழ்ப்­பாண மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் உத்­த­ர­விட்­டார்.
 
இந்த வழக்­கில் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கப்­பட்டு தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள கோபி­கி­ருஸ்ணா வெளி­நாடு ஒன்­றில் வசித்து வரு­கி­றார் என்று மன்­றில் தெரி­விக்­கப்­பட்­டது. அவர் இல்­லா­ம­லேயே வழக்கு விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன. அவர் சார்­பில் சட்­டத்­த­ரணி மு.றெமி­டி­யஸ் மன்­றில் முன்­னி­லை­யா­னார். கோபி­கி­ருஸ்­ணா­வுக்கு எதி­ராக பன்­னாட்­டுப் பொலி­ஸார் ஊடா­கப் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
 
இதே­வேளை, இலங்­கைப் பொலி­ஸா­ரின் தடுப்­புக் காவல் சித்­தி­ர­வ­தை­கள் அதி­க­ரித்­துள்­ளன என்று பன்­னாட்டு மன்­னிப்­புச் சபை உள்­ளிட்ட மனித உரிமை அமைப்­புக்­கள் ஐ.நா வரை குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளன. இந்த நிலை­யில் வடக்கு மாகா­ணத்­தில் முதன் முறை­யாக தடுப்­புக் காவல் சித்­தி­ர­வ­தை­யில் ஈடு­பட்ட பொலி­ஸா­ருக்கு தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. 

http://www.onlineuthayan.com/news/25992

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.