Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைதிப்படை என்ற பெயரில் யாழில் அரங்கேறிய இந்திய இராணுவப் பயங்கரவாதம்

Featured Replies

ஒருதிரியில் நிழலி வழங்கிய ஆலோசனைக்கு அமைய இத்திரி திறக்கப்படுகிறது! அவரது ஆக்கபூர்வமான ஆலோசனைக்கு நன்றிகள்!!!

பல தனித்தனி இராச்சியங்களாக இருந்துவந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் இலங்கையைவிட்டு 1948 இல் அகன்ற பின்னர், ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவரும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் கட்டம் கட்டமாக திட்டமிட்ட தமிழின அழிப்பை 1950 களில் இருந்து இன்றுவரை அரங்கேற்றி வருகின்றனர். தமது சொந்த நலன்களுக்காக பல்வேறு பிறசக்திகளும் தமிழின அழிப்பில் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளுக்கு உடந்தையாக இருந்துவந்துள்ளன. இதில் "அகிம்சை", "ஜனநாயகம்" போன்ற வேடங்களைப் பூண்டிருக்கும் அயல்நாடான இந்தியாவின் பங்களிப்பு மிகையானது.    

ஈழத்தமிழர் மீது "கணிசமான" அக்கறை கொண்டிருந்த அன்னை இந்திரா காந்தியின் காலத்தின் (1984 ஒக்டோபர் இன்) பின்னர், வந்த அனைத்து இந்திய மத்திய அரசுகளும் தமிழின விரோத இந்திய கொள்கைவகுப்பாளர்களினது வழிகாட்டல்களின் படி தமிழர்களின் பலத்தை சிதைப்பதிலும் தமிழர் பிரச்சினைகளை வைத்து சிறீலங்காவின் பொருளாதார வளர்ச்சியை தடுப்பதிலும் பகீரதப்பிரயத்தனம் கொண்டுவந்துள்ளனர் என்பதை ஆழமான அரசியல் அறிவுள்ளவர்கள் அறிந்திருப்பார்கள்!

சிங்கள-பௌத்த வெறியர்களும், தமிழின விரோத ஹிந்திய வெறியர்களும், ஏனைய சந்தர்ப்பவாத சக்திகளும் இணைந்து ஈழமண்ணில் நடத்திய, தொடர்ந்து நடத்திவரும் தமிழின அழிப்பு / தமிழின ஒடுக்குமுறைகள்  பல இலட்சம் தமிழ் மக்களின் படுகொலைக்கும், தொடரும் தமிழின அழிப்புக்கும் காரணமாக அமைந்திருப்பது வரலாறு!

இந்த தமிழினவழிப்பு வரலாற்றில் ஓர் அங்கமாக 1987 ஜூலை முதல் 1990 மார்ச் வரை "இந்திய அமைதிப்படை" / "Indian Peace Keeping Force" (IPKF) என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தால் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள். இவற்றில் ஒருசில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பல சம்பவங்கள் வெளிவராமல் உள்ளன.

எனவே "இந்திய அமைதிப்படை" / "Indian Peace Keeping Force" (IPKF) இனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை முடிந்தளவு திரட்டும் நோக்கத்தில் இந்த திரி திறக்கப்படுகிறது! இதில் யாழ்கள உறவுகள் தாங்கள் நேரடியாக அறிந்த, அனுபவித்த இன்னல்களை, கொடுமைகளை பதிவுசெய்யலாம். அறிந்த சம்பவங்களை பதியும் போது சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான பெயர்களை தவிர்ப்பது அவசியம். நீங்களே நேரடியாக சம்பந்தப்படிருந்தால் உங்கள் பெயரை குறிப்பதுவும், தவிர்ப்பதுவும் உங்கள் உரிமை! மேலும் பொருத்தமான இடங்களில் திகதி, இடம், நேரம் போன்றவற்றை இணைத்தால் அந்தப் பதிவின் பெறுமதி மிகவுயர்வாக இருக்கும்.

ஏற்கனவே வெளிவந்த "தரமான" பத்திரிகை / இணைய செய்திகளையும் உரிய மூலங்களுடன் இணைக்கலாம்!

இத்திரியில் தேவையற்ற கருத்தாடல்களை தவிர்க்கலாமே!  (இருப்பினும் எந்தவொரு உறுப்பினரினதும் உரிமையை வலிந்து கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை).
 
மீண்டும் வலியுறுத்த விரும்புவது, இந்த திரியில், "இந்திய அமைதிப்படை" / "Indian Peace Keeping Force" (IPKF) இனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை, கொடுமைகளை மட்டுமே பதிவுசெய்யுங்கள்!

நன்றி!

 

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für இந்திய அமைதிப் படையின் யாழ் வைத்தியசாலை படுகொலை. 

Bildergebnis für இந்திய அமைதிப் படையின் யாழ் வைத்தியசாலை படுகொலை.

Bildergebnis für இந்திய அமைதிப் படையின் யாழ் வைத்தியசாலை படுகொலை.

Bildergebnis für இந்திய அமைதிப் படையின் யாழ் வைத்தியசாலை படுகொலை.

மருத்துவமனையை... சவச்சாலையாக்கிய, இந்தியப் படைகள்!

1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ் மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலை ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் அல்லது யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நிகழ்ந்து 29 வருடங்கள் கடந்துவிட்டன.இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்தனர். அமைதியை ஏற்படுத்தவே இந்தியப் படைகள் வருகின்றன என்று ஈழத் தமிழர்களும் நம்பியிருந்தனர். தமிழ் மக்கள்மீது தமது தீர்வை திணிப்பதன் ஊடாக தமது அரசியல் பிராந்திய நலன்களை இந்தியா சாதிக்க நினைத்தது. இந்திய இலங்கை உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்கள் தரப்பால் புறக்கணிக்கப்பட்டது.இந்த நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இலங்கை இந்திய ஒப்பந்ததத்தை பாதுகாக்கவும் இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை தொடங்கினர். 1987 ஒக்டோபர் மாதம் இந்தியப் படைகள் யுத்தம் தொடங்கிய மாதம். விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற யுத்தம் செய்வதாக இந்தியா கூறியது. இதன்படி இலங்கை அரசுகள் தமிழ் மக்கள்மீது எவ்வாறு படுகொலைகளைப் புரிந்ததோ அவ்வாறே இந்திய அரசும் ஈழத் தமிழர்கள்மீது  படுகொலைகளைப் புரிந்தது. அத்தகைய படுகொலை ஒன்றே யாழ் போதனா வைத்தியசாலை படுகொலையும்.

யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ் வைத்தியசாலை வடக்கிழக்கு மக்களின் வைத்திய தேவையை நிவர்த்தி செய்யும் மையமாகும். இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்ட அன்றைய நாட்களில் மக்கள் வீடுகளுக்குள்ளும் பதுங்குகுழிகளுக்குள்ளும் பதுங்கி இருந்தனர். போரில் காயமடைந்த மக்கள் வைத்தியசாலைக்கு மருத்துவத்திற்காக கொண்டு வரப்பட்டனர். அத்துடன் இந்தியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களும் வைத்தியசாலையில் நிறைந்து கிடந்தன. 1987 அக்டோபர் 21 தீபாவளி நாள். விடுமுறை நாளன்று அனர்த்த காலத்தில் மருத்துசேவைக்கு வந்த வைத்திய சேவையாளர்களே இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
யாழ் கோட்டையை ஆக்கிரமித்திருந்த இந்தியப் படைகள், அன்றைய தினம் காலையிலேயே அங்கிருந்து பீரங்கிக் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். அத்துடன் ஹெலிகப்டர்களும் தாக்குதலில் ஈடுபட்டன. யாழ் நகரமே போர்க் கோலம் பூண்டிருந்தது. இந்தியப் படைகளின் ஏவுகணை ஒன்று காலை வேளையில் வெளிநோயளர் பிரிவில் வந்து வீழ்ந்து வெடித்தது. அத்துடன் ஏழாம் கூடத்தில் விழுந்த எறிகணையினால் ஏழுபேர் கொல்லப்பட்டார்கள். அத்துடன் மருத்துவமனைமீது துப்பாக்கிச் கூடுகளும் நடாத்தப்பட்டன.
மருத்துவமனைக்குள் விடுதலைப் புலிகள் நடமாடுவதாக சொல்லிக் கொண்ட இந்தியப் படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்து எல்லோரையும் உள்ளே செல்லுமாறு கூறினர். மேற்பார்வையாளர் அலுவலகம் முதல் மருத்துவனை வளாகமெங்கும் சராமாரியாக துப்பாக்கிச் கூடு நடாத்தினர். கண்டவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினர். ஒரு இந்தியப் படையினன் நோயாளி ஒருவரை நோக்கி கிறினைட்டை கழற்றி எறிந்தார். அதில் பலர் கொல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் இருந்த சில நோயாளிகள் இறந்தவர்களைப் போல தரையில் வீழ்ந்து கிடந்தமையால் உயிர் தப்பினர். இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சும் மருத்துவமனையை அதிரச் செய்தன. மறுநாள் 22 ஆம் திகதி காலை டொக்டர் சிவபாதசுந்தரம் என்பவருடன் மூன்று தாதிமார் கைகளை உயர்த்தியபடி நாம் மருத்துவர்கள் தாதியர்கள் நாம் சரணடைகிறோம் என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனை வாசலால் வந்தனர்.

அவர்கள்மீதும் இந்தியப் படைகள் சுப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். சிவபாதசுந்தரம் டொக்டர் அவ்விடத்தில் கொல்லப்பட்டார். இதைப்போலவே டொக்டர் கணேசரத்தினமும் வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இத் தாக்குதல்களில் மருத்துவர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் என 70 பேர் வரையில் கொன்று வீசப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் நடந்த சண்டையின் இடையே சிக்கிய மக்களே உயிரிழந்தனர் என்று இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப். செனரல் டெப்பிந்தர் சிங் தமது படுகொலை நடவடிக்கையை மூடி மறைத்தார்.

காலம் காலமாக ஈழத் தமிழ் மக்களை படுகொலை செய்த இலங்கை அரசே இந்தப் படுகொலையை இனப்படுகொலை என்று கூறியது. மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என 2008இல் இலங்கை அரசு கூறியது.(ஆனால் அதே ஆண்டிலும் தனது இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்திக்கொண்டிருந்தது) இந்தியப் படைகள் ஈழத்தில் செய்த ஏனைய கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் என்பனவும் இனப்படுகொலை சார்ந்த நடவடிக்கையாகவே நடந்தேறியுள்ளன.

ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, சர்வதேச தடைச்சட்டத்தின்படி குற்றச்செயலாகும் என என 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2ஐ எழுதியது.
துப்பாக்கிளும் போரும் தவிர்க்கப்படவேண்டிய இடங்களில் வைத்திய சாலை முதன்மையானது. வைத்தியசாலை வளாகத்தில் இதற்கான அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆயுதத் தடைக் குறியிடுகள் வைக்கப்பட்டிருக்கும். உயிரை காக்க வேண்டிய வைத்தியசாலையை உயிரை அழித்தனர் இந்தியப் படைகள். அமைதி காப்பதற்காக வந்ததாக கூறிய படைகள் உயிர்களை பாதுகாக்க வேண்டிய அமைதி வலயமாக மதிக்க வேண்டிய வைத்தியசாலையை போர்க்களமாக்கினர்.

வைத்தியசாலைகளை போர்த் தவிர்ப்பு வலயமாக மதிக்க வேண்டிய போர் தர்மத்தை ஈழத்தில் முதன் முதலில் மீறியது இந்தியப் படைகளே. பின்னர் இலங்கை அரசுகள் வைத்தியசாலைகள்மீது பல தாக்குதல்களை நடாத்தி மக்களை படுகொலை செய்தது. ஈழத் தமிழ் படுகொலை விடயத்தில் இந்தியா இலங்கையை ஊக்குவித்தது. அதைப்போலவே வைத்தியசாலைகள்மீது இனவெறித் தாக்குதலை நடத்தும் விடயத்திலும் இந்தியாவே இலங்கைக்கு முன்னோடி.

சந்திரிக்கா அரசாங்கத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலை எவரும் மறக்க முடியாது. பிறந்து சில நிமிடங்களேயான பச்சிளங் குழந்தைகள் கூட மண்ணில் புதைந்தனர். குழந்தையை பெற்றெடுக்க வைத்தியசாலை வந்த தாய்மாரும் குழந்தைகளும் ஒன்றாக விமானக் குண்டுகளினால் மண்ணில் புதைக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட அந்த தாக்குதலை எவரலாறும் மறக்க இயலாது. ஈழத்தில் வைத்தியசாலைமீது நடந்த மற்றொரு இனப்படுகொலை தாக்குதல் அது.

இதைப்போல மகிந்த ராஜபக்சவின் காலத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைமீதும் கொடும் எறிகணைத் தாக்குதல் நடாத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். ஒரு நேர்காணலின் அப்போது இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகா புதுக்குடியிருப்பு வைத்தியசாலைமீது ஒரே ஒரு எறிகணைதான் எறிந்ததாக சொன்னார். எத்தனை அதிர்ச்சிகரமான ஒப்புதல்? போரால் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் பரவியிருந்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை இலங்கைப் படைகள் பிண வைத்தியசாலையாக மாற்றினர்.

மிகவும் மனித உரிமை மீறல் கொண்ட மனி குலத்திற்கு விரோதமான இப் படுகொலைகளுக்காக இதுவரையில் இந்தியா மன்னிப்பு கேட்கவில்லை. அத்துடன் இப் படுகொலைகளை தாம் புரிந்ததாக ஒப்புக்கொள்ளவுமில்லை.. ஈழத் தமிழ் மக்கள் இலங்கை அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளினால் அழிக்கப்பட்டமைக்கான நீதி கோரும் காலத்தில், இந்திய அரசு ஈழத்தில் மேற்கொண்ட படுகொலை நடவடிக்கைகளுக்கு என்ன நீதி கிடைத்தது என்பதையும் மதிப்பிடுவதுடன் இந்திய அரசிடம் நீதி கோரும் குரலை வலுப்படுத்துவதும் இன்றைய நாட்களில் அவசியமானது.

-தீபச்செல்வன்.-

Edited by தமிழ் சிறி

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.  

 

Kein automatischer Alternativtext verfügbar.  Kein automatischer Alternativtext verfügbar.

 

Bild könnte enthalten: im Freien  

 

Bild könnte enthalten: 4 Personen, Personen, die stehen

1987 October 10 ஆம் நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நகரத்துக்குள் நுழைந்த இந்திய ராணுவம், தமிழர்களின் குரலாக ஒலித்து வந்த " ஈழ முரசு "  " முரசொலி " என்ற இரண்டு நாளேட்டின் அலுவலகர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தது அதுமட்டுமல்ல அச்சு எந்திரத்தையும், அலுவலகத்தையும் வெடி வைத்து தகர்த்தனர்.

அதே நாளில் கொக்குவில் இயங்கிய விடுதலைப்புலிகள் தொலைக்காட்சி சேவையான நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தில் இந்திய ராணுவம் புகுந்து ஒளிபரப்புக் கருவிகளை பறித்துச் சென்று விட்டது. ஈழ முரசு , முரசொலி நாளேடுகள் இலங்கை அரசு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழ் நாளேடுகள், நிதர்சனம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை இந்தியாவின் ‘ தூர்தர்ஷன் ’ அதிகாரிகள் கேட்டுப் பெற்று ஒளிபரப்பிய சம்பவங்களும் உண்டு. முதலில் மக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் ஊடகங்களை முற்றாக நசுக்கிய பிறகு இந்திய ராணுவம் மக்களுக்கு எதிரான ராணுவ வேட்டையில் இறங்கியது.

மறுநாள் அக்டோபர் பதினோராம் திகதி பிரம்படிப் பகுதியில் தலைவர் மறைந்திருக்கிறார் என்ற தகவலால் டாங்கிகள் கவச வாகனங்கள் சிறு பீரங்கிகள் சகிதம் அங்குசென்ற அமைதிப்படை அவர்களைக் காணாத விரக்தியில் 40 பொதுமக்களை சுட்டும் வீதியில் படுக்கவைத்தும் டாங்கியால் ஏற்றியும் கொன்றது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் இறங்கிய இந்திய ராணுவம் 1987 அக்டோபர் 21 அன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையைக் குறி வைத்தது. இதுபற்றி ‘நியூ சேட்டர் டே ரெவியூ’ என்ற கொழும்பு ஏடு வெளியிட்ட விரிவான செய்தி இது. (1987, நவம்பர் 7 )

அக். 21 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய ராணுவம் கைப்பற்றியது. அன்று தீபாவளி நாள். ராணுவத்தினர் உடனடியாக 50நோயாளிகளை சுட்டுக் கொன்றனர். அவரது உடல்கள் அங்கேயே எரிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே தரையில் வீசப்பட்டன. அடுத்த இரண்டு நாளில் அக்.23 ஆம் தேதி 83 நோயாளிகள் - ஊழியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார் இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரார். எல்லா நடவடிக்கைகளையும் யாழப்பாண கோட்டை தலைமை ராணுவ முகாமிலிருந்து கண்காணித்தவர் கேப்டன் பிஸ்ட். அவருக்கு (இந்தப் படுகொலைகளில்) உதவியாக செயல்பட்டவர்கள் டாக்டர் கனகராஜா, டாக்டர் பன்சாரி. இவர்களும் இந்திய “அமைதிப்படை” அதிகாரிகள்தான். கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்த உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் செய்யப்படவில்லை; விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

இறந்தவர்களில் 20 பேர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள். மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றவர்கள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் உடல் அழுகிய நிலையில் சவக்கிடங்கில் கிடந்தது. 12 பேர் உடல், அடையாளங்களை காண முடியில்லை. மருத்துவமனை ஊழியர்கள் 20 பேரின் சடலங்கள் ஏனைய ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டன. 11 பேர் உடல்கள், அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து அடையாளம் காணப்பட்டன. மருத்துவ மனையில் மின்சாரத்தை ராணுவத்தினர் துண்டித்ததால், மூச்சு சுவாசத்துக்கான ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நோயாளிகளும் தீவிர மருத்துவ கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 நோயாளிகளும் இறந்தனர். யாழ்ப்பாண மருத்துவமனை முற்றிலும் நாசமடைந்தது. மின்சாரமோ தண்ணீரோ இல்லை. சவக்கிடங்கு நிரம்பி வழிந்தது. ஒரு வயதிலிருந்து 85 வயது வரையுள்ள 85 சடலங்கள் 3 நாட்களில் குவிந்து கிடந்தன. ‘நர்சு’களின் குடியிருப்புகள் ஷெல் வீச்சுக்கு உள்ளாயின.

தெல்லிப்பளையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவமனையும் மூடப்பட்டது. மானிப்பாய் என்ற இடத்தில் இருந்த ‘கிரீன் மெமோரியன்’ என்ற தனியார் மருத்துவமனையையும் ராணுவம் மிரட்டி மூடச் சொல்லி விட்டது” என்று செய்தி வெளியிட்ட அந்த ஏடு, இறந்தவர்களின் நீண்ட பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டது. எந்த ஒரு யுத்தத்திலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ‘போர்க் குற்றம்’ என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் - ஷெல் வீசியது மட்டுமல்ல எவரும் சிகிச்சை பெறவும் கூடாது என்று செயல்பட்ட வேறு மருத்துவமனைகளையும் மிரட்டி மூடி விட்டார்கள். காந்தி தேசமான இந்தியாவிலிருந்து ராஜீவ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்ட ‘அமைதிப்படை’ இந்தப் போர்க் குற்றங்களைத்தான் செய்தது.

அக்டோபர் 27 இந்திய இராணுவக் 
ஹெலிகள் எறிகணைகளாலும் இயந்திரத் துப்பாக்கிகளாலும் சாவகச்சேரி சந்தையில் மேற்கொண்ட தாக்குதலில் 30 பொதுமக்கள் கொல்லப் பட்டதுடன் 75 பேர் படுகாயமடைந்தனர்.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச சட்டவியலாளர்கள் குழு போன்ற அமைப்புகள் தமிழ் ஈழப் பகுதிக்குள் நுழைவதற்கு ‘இந்திய அமைதிப் படை’ அனுமதி மறுத்தது. ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள், இதைக் கண்டித்தன.

“ வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து, பற்றாக்குறை கடுமையாகிவிட்டது. கடைகளில் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்காமல் போய்விட்டது. செஞ்சிலுவை சங்கம் உடனே தலையிட்டு தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்; தமிழ் மக்கள் மீது இந்திய ராணுவம் ஷெல் வீசிக் கொல்வதை உடன் நிறுத்த வேண்டும் ” என்று தொலைபேசி வழியாக அவசர வேண்டுகோள் விடுத்தார் வடக்கு மாவட்ட ஆட்சித் தலைவர். ( தி ஏஜ் ஏடு 16.10.87 )

இந்திய ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி ஐநாவில் மனித உரிமை குழுவில் கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 1987 பிப் 1 முதல் மார்ச் 11 வரை ஜெனிவாவில் நடந்த ஐநாவின் மனித உரிமைக் குழுவில் பேசிய பல பிரதிநிதிகள் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிக் கண்டித்தனர். அந்தக் கண்டனங்களை ‘தமிழ் இன்டர்நேஷனல்’ விரிவாகப் பதிவு செய்தது அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை இந்திய அமைதிப் படை !

வெள்ளைக் கொடிகளை ரத்தச் சிவப்பாக்கிய பல படுகொலைகளை இந்திய ராணுவம் செய்தது. உதாரணமாக 9.11.1987 அன்று சண்டிலிப்பாய் எனுமிடத்தில் இந்திய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொது மக்களை காரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். காரில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்திய ராணுவம் நவாலியில் வைத்துக் காரை நோக்கிச் சுட்டது. காரில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர் .

அதே போல் போர் நிறுத்தம் அமுலில் இருந்த போது இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த ஹர்கிரந்த் சிங்கை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார். அப்படி " வெள்ளைக் கொடி " யுடன் பிரபாகரன் பேசவரும்போது அவரை சுட்டுக் கொன்று விடுமாறு இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த தீட்சித் என்பவர் ஹர்கிரந்த் சிங்கிடம் கூற, அதற்கு அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இது டெல்லியிலிருந்து மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று தீட்சித் கூறினார். அப்போதும் அந்த அதிகாரி மறுத்து விட்டார். இதை ஹர்சிரந்த் சிங் அவர்களே பணி ஓய்வு பெற்ற பிறகு தான் எழுதிய நூலிலும் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் கூறியுள்ளார்.

கேள்வி : விடுதலைப் புலிகளுடன் அமைதியை ஏற்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சியில், தீட்சித் அணுகுமுறை எப்படி இருந்தது?

பதில் : தீட்சித் ஒரு முறை என்னிடம், பிரபாகரனை சுட்டுவிடு என்றார். மன்னிக்கவும், என்னால் முடியாது என்று நான் கூறி விட்டேன். இது அவரது உத்தரவாகவே இருந்தது. சில பணிகளுக்காக, என்னை சந்திக்க 12 மணிக்குக்கூட, பிரபாகரன் வந்தார். அதைப் பயன்படுத்தி, சுட்டுவிடுமாறு சொன்னார். தனக்கு, மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவைத்தான் கூறுகிறேன் என்றார். ‘உங்களுடைய உத்தரவை நான் செயல்படுத்த முடியாது. நாங்கள் வெள்ளைக் கொடியின் கீழ் சந்தித்துப் பேசுகிறோம்; வெள்ளைக் கொடியின் கீழ் பேசும்போது, யாரையும் சுட முடியாது’ என்று பதில் சொன்னேன்.

21.11.1987 அன்று இந்திய ராணுவம் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. அடுத்த 48 மணி நேரத்தில் திருகோணமலையில் 7 அப்பாவித் தமிழர்களை இந்திய ராணுவம் சுட்டது.

1987ல் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கை வந்த இந்திய ராணுவம்

•10,000க்கு அதிகமாக அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றது

•600 க்கு அதிமான தமிழ் போராளிகளைக் கொன்றது

•800 க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது

•பல கோடி ரூபா பெறுமதியான தமிழர்களின் சொத்துகளை சேதமாக்கியது

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-6 at 2:14 PM, போல் said:

ஈழத்தமிழர் மீது "கணிசமான" அக்கறை கொண்டிருந்த அன்னை இந்திரா காந்தியின் காலத்தின் (1984 ஒக்டோபர் இன்) பின்னர், 

இரண்டு விடயங்களை இதில் குறுக்கால எழுதுவதற்கு போல் மற்றும் தமிழ்சிறி இருவரும் மன்னிக்கவேண்டும்.

இந்தியாவின் ஊடுருவலுக்கு பிள்ளையார் சுழி போட்டதே அன்னையர் இந்திரா காந்தி....

அமைதிப்படை என்ற அட்டுழிய படை இன்று எம்மண்ணில் நினைவுத்தூபிகளை நிறுவி  அரச மரியாதை அனுபவிக்கின்றது.

:rolleyes:மீண்டும் மன்னிப்பு கேட்கின்றேன் குறுக்கால போனதுக்கு.:unsure:..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

இரண்டு விடயங்களை இதில் குறுக்கால எழுதுவதற்கு போல் மற்றும் தமிழ்சிறி இருவரும் மன்னிக்கவேண்டும்.

இந்தியாவின் ஊடுருவலுக்கு பிள்ளையார் சுழி போட்டதே அன்னையர் இந்திரா காந்தி....

அமைதிப்படை என்ற அட்டுழிய படை இன்று எம்மண்ணில் நினைவுத்தூபிகளை நிறுவி  அரச மரியாதை அனுபவிக்கின்றது.

:rolleyes:மீண்டும் மன்னிப்பு கேட்கின்றேன் குறுக்கால போனதுக்கு.:unsure:..

புத்தன்.... உங்களது கருத்தை பகிர,  முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. 
அதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் தேவை இல்லை ஐயா. :)

இந்திரா காந்தி, இந்தியப்  பிரதமராக இருந்த காலத்தில்...   இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளராக  பார்த்­த­சா­ரதி (தமிழர்) இருந்தார். அதுவரை.... ஈழத் தமிழர்கள்  விடயத்தில், இந்தியா எமக்கு  சார்பாகவே நடந்து கொண்டது.  

எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் தருணத்தில்.... இந்திரா காந்தியின் மறைவுக்கு பின்னர் ராஜீவ்  காந்தி பிரதமரான போது....  நரசிம்ம ராவ் (ஆந்திரப் பிரதேசம்) (இவர் பின்பு பிரதமராக இருந்தவர்)  வெளி­யு­றவுச் செய­லாளராக வந்தார்.  அதன் பின் வந்த  ரமேஷ் பண்­டாரி, நாராயணன், சிவ­சங்கர் மேனன் (இருவர் மலையாளம்) என்று  வந்த பின்... அவர்கள் சிங்களத்துக்கு சார்பாக மாறி, எம் மக்களை அழித்து... ஈழமண்ணில் இரத்த ஆறு ஓட வைத்து... சந்தோசம் அடைந்தவர்கள்.  

திராவிடனை....  திராவிடனே  அழித்த  கொடுமை. 
அதற்குத் தான்.... திராவிடம் வேண்டாம்..... தமிழனாக  இருப்போம் என்று,  சீமான்  சொல்கிறார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, தமிழ் சிறி said:

திராவிடனை....  திராவிடனே  அழித்த  கொடுமை. 
அதற்குத் தான்.... திராவிடம் வேண்டாம்..... தமிழனாக  இருப்போம் என்று,  சீமான்  சொல்கிறார்.

tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல, மறந்து விட்டேன்... புத்தன்.
இப்போது... ஜனாதிபதியாக இருக்கும், பிரணாப் முகர்ஜியும்.... 
வெளியுறவு செயல்  தான்... பார்த்தவர். 

ஆனால்... அப்துல் கலாம்,  வெங்கட்ராமன்  போன்ற   தமிழர்கள்  இந்திய  ஜனாதிபதிகளாக  இருந்தும்.....
தமிழனுக்கு... விடிவில்லை என்னும்  போது....
"தமிழ்... இனி,  மெல்லச்  சாகும்."  என்று,  பாரதி கூறிய  கூற்று உண்மை போலுள்ளது. tw_sleepy:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

புத்தன்.... உங்களது கருத்தை பகிர,  முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. 
அதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் தேவை இல்லை ஐயா. :)

இந்திரா காந்தி, இந்தியப்  பிரதமராக இருந்த காலத்தில்...   இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளராக  பார்த்­த­சா­ரதி (தமிழர்) இருந்தார். அதுவரை.... ஈழத் தமிழர்கள்  விடயத்தில், இந்தியா எமக்கு  சார்பாகவே நடந்து கொண்டது.  

எல்லாம் சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் தருணத்தில்.... இந்திரா காந்தியின் மறைவுக்கு பின்னர் ராஜீவ்  காந்தி பிரதமரான போது....  நரசிம்ம ராவ் (ஆந்திரப் பிரதேசம்) (இவர் பின்பு பிரதமராக இருந்தவர்)  வெளி­யு­றவுச் செய­லாளராக வந்தார்.  அதன் பின் வந்த  ரமேஷ் பண்­டாரி, நாராயணன், சிவ­சங்கர் மேனன் (இருவர் மலையாளம்) என்று  வந்த பின்... அவர்கள் சிங்களத்துக்கு சார்பாக மாறி, எம் மக்களை அழித்து... ஈழமண்ணில் இரத்த ஆறு ஓட வைத்து... சந்தோசம் அடைந்தவர்கள்.  

திராவிடனை....  திராவிடனே  அழித்த  கொடுமை. 
அதற்குத் தான்.... திராவிடம் வேண்டாம்..... தமிழனாக  இருப்போம் என்று,  சீமான்  சொல்கிறார்.

தமிழனை அரவணைத்தால் சிங்களம் தானாக வழிக்கு வரும் என்பது இந்திராகாந்திக்கு நன்றாக தெரிந்திருக்க வேணும்,அதே கொள்கையைதான் மீண்டும் மோடிக்கு வெளிவிவகாரத்துறையினர் சொல்லி கொடுத்திருக்கினம்.அதுதான் வடக்கு கிழக்கு மலையகம் என்று திரிகின்றார் போலும்.
சிறிமாவின் குணத்தை இந்திராகாந்தி அறிந்திருக்க கூடும்...1971 ஆண்டு.ஜெ.வி.பி கிளர்ச்சியை அடக்க இந்தியா உதவியது ஆனால் பங்களதேஷ் போரின் பொழுது இலங்கை பாகிஸ்தான் பக்கம் நின்றது...

  • 2 months later...
  • தொடங்கியவர்

 

வல்வைப் படுகொலைகளின் இறுதிநாட்கள்…!

ஜாலியன் வாலா பாக் படுகொலை, மைலாய் படுகொலைஎன்ற வராலாற்றுப்புகழ் பெற்றுவிட்ட துயரம் நிறைந்த கொலைகளின் வரிசையில் இந்த வல்வெட்டித்துறைப் படுகொலையும் இன்று இடம் பெற்றுவிட்டது என்பதை எவரும் எக்காலமும் மூடி மறைத்து விடமுடியாது.
1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம், 3ம், 4ம், திகதிகளில் இந்தியப் படையினர் வல்வெட்டித்துறை யில் நடாத்திய படுகொலைகள் இன்றும் கூட எமது நெஞ்சை விட்டு அகலாது இருக்கின்ற ஒரு துன்பியல் நிகழ்வாகும். ஈழத்தில் தமிழர்களைக் காப்பதற்கு என்ற போர்வையில் வந்த இந்தியப் படையினர் எமது நாட்டைக் கபளீகரம் செய்து சின்னாபின்னப் படுத்தி, அமைதியற்ற ஒரு பிராந்தியமாக்கி விட்டுச் சென்றனர்..!
1. ஆயிரக் கணக்கான வீடுகளை உடைத்தும், எரித்தும் தரைமட்டமாக்கினார்கள்.
2. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவிகளை ஆண், பெண்குழந்தைகள், வயோதிபர்கள் என்ற பாகுபாடே இன்றி சுட்டும், எரித்தும் துவம்சம் செய்தனர்.
3. நூற்றுக்கணக்கான கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி னார்கள்.
4. தமிழ்ப் பள்ளிகளை எரித்தார்கள்.
5. ஹிட்லர் கூடச் செய்யத்தயங்கிய படுகொலைகளை வைத்தியசாலையி னுள்ளேயே மேற்கொண்டு வெறியாட்டம் ஆடினார்கள்.
6. பல நூற்றுக்கணக்கான பென்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி நர்த்தனம் ஆடினார்கள்...!

அவர்களது படுகொலைகளின் உச்சக்கட்டமாக நிகழ்த்திய வல்வைப் படுகொலை நிகழ்ந்து 18 வருடங்களின் பின் இன்றும் கூட நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகின்றது.
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ந் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு ,பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் இந்தியப் படையினர் V வடிவத்திலான வியூகம் அமைத்துப் புறப்பட்டனர் . இவ்வாறு புறப்பட்ட இந்திய இராணுவவீரர்களுக்கு தலைமை தாங்கியது. முறையே மேஜர் சுதர்சன் சிங்,.கப்டன் கோபாலகிருஸ்ண மேனன் , கப்டன் கபூர் என்போராவார்.இவர்களை எதிர் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலில் 09 சீக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட்டதும் , ஆயுதம் தாங்கிய புலிகளை அழிக்கத் திராணியற்ற இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.
ஒகஸ்ட் 2 ந் திகதி இச் சம்பவம் நடைபெற 3,4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவோ அல்லது அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை.வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.
• ஆண்,பெண்,முதியோர் வேறுபாடு இன்றி 71 பொதுமக்கள் சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டி ருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர்.
• நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்திருந்தனர்.
• 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்ப ட்டன.
• 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
• வல்வை சனசமூக நிலையம் மற்றும் பொது நூலகம், பாடசாலைகள் என்பன தீயிடப்பட்டன,பல ஆயிரக்கணக்கான நூல்கள்.தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப் பட்டு தீயிடப்பட்டு இருந்தன.
• 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

1989 ஆம் ஆண்டு ஆகஸ்ற் மாதம 2ஆம்,3 ஆம்,4ஆம் திகதிகளில் இடம்பெற்ற அந்த மிலேச்சத்தனமான வல்வைப் படுகொலை நடந்து முடிந்த கையுடன் அந்தக் கொடூரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும். என்ற உணர்வில் தமிழகத்தில் பல தலைவர்களைச் சந்தித்ததில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் திரு.ஜோர்ஜ் பெர்ணான்டஸ் தந்த உற்சாகமும், ஆதரவும் இந்திய இராணுவத்தினரின் கொடுரமான தாக்குதலை வருணிக்கும் விவரணச் சித்திரமான எனது வல்வைப் படுகொலை நு|லுக்கு உத்வேகம் அளித்தது.

இலங்கையில் அமைதி காக்க என வந்த இந்திய அமைதிப் படை யினரால் 1989 ம் ஆண்டு ஆகஸ்ற் 2, 3, 4 ம் திகதிகளில் படுகொலை செய்யப்பட்டுத் தாயகத்தின் விடிவுக்காய்த் தமதுயிரை நீத்த மக்களை இன்று உலகமே நினைவு கூர்ந்து கொண்டி ருக்கின்றது…… வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவினரால் இந்தச் சம்பவம் சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட தால், இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டது. இந்தப் படுகொலைகளை இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஒப்பாகவும்வியட்நாமில் அமெரிக்கர்களினால் மேற்கொள்ளப்ட்ட மைலாய் படுகொலைக்கு ஒப்பாகவும்; அன்று இங்கிலாந்தின் ~டெய்லி டெலகிராஃப்| மற்றும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ இந்தியாவின் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை யாளர்களுக்குக் நான் கொடுத்த பேட்டியின் மூலம் தான் உலகமே அதன் கொடுரத்தைப் புரிந்து கொண்டது. நான் எழுதிய வல்வைப் படுகொலை” என்ற நூலை தமிழிலும்ஆங்கிலத்திலும் எழுதி அதற்குரிய புகைப்படங்களையும் எடுத்துச் சென்று கடலூரில் தங்கியிருந்த ஜோர்ஜ் பெர்னான்டஸ் அவர்களைச் சந்தித்து இந்தியா வின் மைலாய் படுகொலைபற்றிய விளக்கத்தை எழுதி எனது நூலுக்கான அணிந்துரையை எழுதித் தருமாறு கேட்ட பொழுது அதிர்ந்து போன ஜோர்ஜ் பெர்னான்டஸ் மனம் உருகி என்னிடம் கையளித்த அணிந்துரையின் ஒரு பகுதி கீழே தரப்படுகின்றது .இவரே அடுத்து வந்த திரு.வி.பி.சிங் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படுகொலைகளின் பொழுது உயிர் நீத்த 71 பொது மக்களுக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

ஜோர்ஜ் பெர்னான்டசினால் வழங்கப்பட்ட அணிந்துரை:

ராஜீவ் காந்தியின் இராணுவ சாகசத்தால், இலங்கை இந்தியாவின் வியட்நாமாக மாறும் என்று நான் 1987 ஆகஸ்ட் ஆரம்பத்தில் சொன்னேன். அப்போது இந்திய வியட்நாமிலும் ஒரு மைலாய் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ராணுவத்தினர் எங்கும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்று நான் அறிந்திருந்தேன், மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்தியிருக்கின்றேன்.

இன்று வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் தனது மைலாயை நிகழ்த்தி யிருக்கிறது. இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையில் காட்டிய காட்டு மிராண்டித் தனத்தைப்பற்றி லண்டனிலிருந்து வெளிவரும் ~டெய்லி டெலகிராஃப்| தனது தலையங்கத்தில் விமர்சிக்கிறது: ~~இந்த நாசவேலை மைலாயை விடக் கொடுமை யானது. அங்கே அமெரிக்கப் படைகள் நிதானமிழந்து வெறியாட்டம் ஆடினர். ஸ்ரீலங்காவின் கிராமத்தில் இந்தியப்படையினர் திட்டமிட்டுச் செயல் பட்டிருக்கின்றனர். ஆட்களைப் படுக்கவைத்து முதுகில் சுட்டுக் கொன்றிருக் கின்றனர். வேற்றுமை அதுமட்டுமல்ல, மைலாய் அமெரிக்கப் பத்திரி்கையாளர் களாலேயே உலகின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. மைலாய் பொதுமக்களுக் கெதிரான அமெரிக்க இராணுவத்தினரின் அடாவடிச் செயலை அமெரிக்க மக்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள், மாணவர், இளைஞர்கள்- ஒன்றுதிரண்டு எதிர்த்தனர்

வல்வெட்டித்துறையில் இந்தக் கோரச்சம்பவம் நடந்து பதின்மூன்று நாட்களுக்குப்பின் அங்கு சென்ற பைனான்சியல் டைம்ஸ்(லண்டன்) பத்திரிகையின் டெல்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ இச்சம்பவத்தை அறிந்தார். இதைப்பற்றிய அவரது செய்தி ஆகஸ்ட் 17 அன்று அவரது பத்திரிகையில் வெளியானது. அதற்கு முன்பே ஆகஸ்ட் பதின்மூன்றாம் திகதி லண்டன் டெலிகிராஃப் பத்திரிகை, தனது நிருபர் ஜெரமி கவ்ரான் தொகுத்தனுப்பிய செய்தியை வெளியிட்டது. இந்தியப் பத்திரிகை யாளர்களின் ஒரு சிறு பகுதியினரே அதுவும் செப்டம்பர் மூன்றாம் தேதிக்குப் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸில் ரீட்டா செபாஸ்டியன் கொடுத்த செய்தியை தொடர்ந்தனர்.

உண்மை என்னவென்றால் வல்வெட்டித்துறை சம்பவம் இந்திய அரசால் திட்ட மிட்டு மறைக்கப்பட்டது. இந்தியப் பத்திரி்கை யாளர்களின் பெரும்பகுதியினர் இதில் கூட்டுச் சேர்ந்து கொண்டு புளகாங்கிதம் அடைந்தனர். இந்தியாவில் இராணுவம் புனிதமாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால் அடாவடித்தனங்களில் ஈடுபடும் போது, இப்புனிதத்தன்மை மேலும் கூடுகிறது. வடகிழக்கு மாகாணத்தில் இராணுவ உடையில் நம்மவர்கள் நடத்தும் பாலியல் வல்லுறவுக்களையும் கொள்ளைகளையும் பற்றி - யாரேனும் வாய்திறப்பதுண்டா?

அதிகார வர்க்கத்தையும், இராணுவத்தளபதிகளையும் மக்கள் சக்தி வென்றபோது வியட்நாமும்இ மைலாயும் முடிவுக்கு வந்தன.வல்வெட்டித்துறை பற்றிய உண்மை களை வல்வைப் படுகொலைகள் என்ற இச்சிறு பிரசுரம் உலக மக்களுக்கு குறிப்பாக இந்திய மக்களுக்கு உணர்த்தும்என நம்புகிறேன். இந்திய மக்களின் மனசாட்சியை விழிப்படையச்செய்து, வல்வெட்டித்துறையில் உயிரிழந் தோருக்காக அவர்களை நீதி கேட்கச் செய்யுமானால், இவ்வெளி யீட்டின் நோக்கம் முழுமை பெறும். -

Image may contain: food

Image may contain: one or more people and food

Image may contain: fire

Image may contain: tree and outdoor

Image may contain: outdoor

FB

  • 2 months later...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.