Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழல் விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கமாக்குங்கள் வடக்கு முதலமைச்சரிடம் அமைச்சர் டெனீஸ்வரனும் கோரிக்கை

Featured Replies

ஊழல் விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கமாக்குங்கள்

வடக்கு முதலமைச்சரிடம் அமைச்சர் டெனீஸ்வரனும் கோரிக்கை

 
ஊழல் விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கமாக்குங்கள்
 

வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான ஊழல் விசா­ரணை அறிக்­கையை முத­ல­மைச்­சர் மக்­கள் அறி­யும் வகை­யில் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வேண்­டும் என வடக்கு மாகாண மீன்­பிடி போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண அமைச்­சர்­கள் நால்­வர் தொடர்­பில் முன்­வைக்­கப் பட்ட குற்­றச்­சாட்­டுக்­கள் குறித்து முத­ல­மைச்­ச­ரால் நிய­மிக்­கப்­பட்ட குழு விசா­ரணை நடத்­தி­யது. தற்­போது அந்த விசா­ரணை அறிக்கை முத­ல­மைச்­ச­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண அமைச்­சர்­கள் தொடர்­பில் சபை­யில் பகி­ரங்­க­மாக விவா­திக்­கப்­பட்டு குற்­றச்­சாட்­டுக் க­ளும் பகி­ரங்­க­மா­கவே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இவை பத்­தி­ரி­கை­க­ளி­லும் வெளி­வந்­தன. எனவே அந்த விசா­ரணை அறிக்­கையை முத­ல­மைச்­சர் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வேண்­டும்.
நான் உட்­பட நான்கு அமைச்­சர்­கள் மீதும் குற்­றச்­சாட்­டுக்­கள் முன் வைக்­கப்­பட்­டன. இதற்­க­மைய நான்கு பேரும் விசா­ர­ணைக் குழு­வின் முன்­பா­கத் தோன்றி விளக்­கம் அளித்­தோம்.

இத­னால் விசா­ர­ணை­யில் என்ன நடந்­தது என அறி­யும் உரிமை எமக்­கும் உண்டு. இத­னையே மக்­க­ளும் எதிர்­பார்க்­கின்­ற­னர்-­.– என்­றார்.

http://uthayandaily.com/story/3827.html

On ‎5‎/‎23‎/‎2017 at 3:14 AM, நவீனன் said:

வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான ஊழல் விசா­ரணை அறிக்­கையை முத­ல­மைச்­சர் மக்­கள் அறி­யும் வகை­யில் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வேண்­டும் என வடக்கு மாகாண மீன்­பிடி போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

டெனிஸ்வரன் உட்பட சகலரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன! இதில் முன்னணியில் இருப்பது சத்தியலிங்கமும் குருகுலராஜாவும் ஐங்கரநேசனும். இவர்கள் முதல் 2 வருடங்களில் செய்த ஊழல்கள் பல.

குறிப்பாக சுன்னாக பிரதேசத்தில் கழிவெண்ணெய்கள் நிலக்கீழ் நீர்வளங்களை மாசுபடுத்தியதில் சம்பந்தப்பட்ட தரப்பை பாதுகாப்பதில் ஐங்கரநேசனதும்  முதலமைச்சரின் உறவினர்களான நிமலன் கார்த்திகேயன் மற்றும் மன்மதராசாவின் பங்குகள் உலகறிந்தது!

எனவே முதலமைச்சர் இந்த ஊழல் முதலைகளை தனதருகில் வைத்திருப்பதை தவிர்ப்பதுடன் கொள்ளையடித்த பணத்தை மீட்கும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். முதலமைச்சர் விக்ணேஸ்வரன் மாபெரும் ஊழல் முதலையான மன்மதராசாவை விலத்தியது பாராட்டத்தக்கது. ஆனால் மன்மதராசாவையும் வென்ற ஊழல் முதலையான அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற நிமலன் கார்த்திகேயனை தொடர்ந்தும் அருகில் வைத்திருப்பது முதலமைச்சர் விக்ணேஸ்வரனின் நற்பெயரை விரைவில் சிதைத்துவிடும்!

தற்போது இலங்கை வந்து, யாழில் நிலைகொண்டு முதலமைச்சரின் செயற்பாடுகளில் பெருமளவில் நேரடியாக தலையிடும்  ஊழல் முதலை நிமலன் கார்த்திகேயனை முதலமைச்சர் உடனடியாக விலத்தி வைப்பது அவரது நற்பெயரை காப்பாற்ற உதவும் என்பதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு அவர் செய்யும் பேருதவியாக அமையும்!

கடந்த சில மாதங்களாக சம்பந்தன்-சுமந்திரன் கும்பல்கள் சிங்கள-பௌத்த மற்றும் ஹிந்திய அரச ------ பின்புலத்துடன் முதலமைச்சர் விக்ணேஸ்வரனை அரசியலில் இருந்து அகற்ற பாரிய சதி முயற்சிகளில் இறங்கியுள்ளது இரகசியம் இல்லை! அண்மையில் கொலைக்கள மார்ஷல் சரத் பொன்சேகாவினால் கூட இந்த சதித்திட்டம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது!

இந்த பின்னணியில் தான் ஹிந்திய ------ ----- வித்தியாதரன், ஆனந்தசங்கரி, வரதராஜபெருமாள் போன்றவர்களை கூட்டமைப்புக்குள் கொண்டுவரும் முயற்சி நடைபெற்று வருகிறது. அத்துடன் முன்னாள் போராளிகளையும் கூட்டமைப்பில் இணைத்து தமிழ் மக்களை ஏமாற்றும் திட்டம் சிங்கள-பௌத்த மற்றும் ஹிந்திய அரச ------ பின்புலத்துடன் சம்பந்தன்-சுமந்திரன் கும்பல்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் முள்ளிவாய்க்கால் சென்று முதலமைச்சர் விக்ணேஸ்வரனின் செல்வாக்கை குறைக்க முயன்று தோற்றதும் இதன் பின்னணியில் தான்! சிங்கள-பௌத்த மற்றும் ஹிந்திய அரச ------ கொலை முயற்சியில் கூட ஈடுபடலாம். பளை துப்பாக்கி சூட்டு நாடகம் இதன் ஒத்திகையாக இருக்கலாம்.  

எனவே முதலமைச்சர் விக்ணேஸ்வரன் தனது பயணங்களை இரகசியமாக வைப்பதுடன் கூட்டமைப்பை நம்பி இருக்காமல் அடுத்த தேர்தலில் அவர்கள் காலைவாரும் சந்தர்ப்பத்தில் மாற்று அரசியல் சக்தியை தேர்தல்களத்தில் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

முதலமைச்சர் விக்ணேஸ்வரன் இன்னும் அதிகமாக மக்கள் ஆதரவை பெற்றுக்கொள்ள வடமாகாண சபையில் நடந்த ஊழல்களை இரும்புக்கரம் கொண்டு நிறுத்துவதுடன் ஊழல் முதலை நிமலன் கார்த்திகேயன் போன்றவர்களை தூரத்தில் வைத்திருக்க வேண்டும். 

Edited by நிழலி
அவதூறான மற்றும் அநாகரீகமான சொற்கள் நீக்கப்படடன

10 hours ago, போல் said:

ஆனால் மன்மதராசாவையும் வென்ற ஊழல் முதலையான அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற நிமலன் கார்த்திகேயனை தொடர்ந்தும் அருகில் வைத்திருப்பது முதலமைச்சர் விக்ணேஸ்வரனின் நற்பெயரை விரைவில் சிதைத்துவிடும்!

யார் இந்த நிமலன் கார்த்திகேயன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.