Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்!

Featured Replies

யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்!

யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்!

 

அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வாவுக்குமிடையில் சூடான விவாதம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாக்குவாதம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அது யதார்த்தமானது அல்ல என்று பதிலளித்த போது இரா.சம்பந்தன் கோபமடைந்தார்.

சொற்களுக்காக சண்டையிட்டுக் கொள்ளாமல் அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதே முக்கியமானது என்று நிமால் சிறிபால டி  சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சம்பந்தன், அரசியலமைப்பு மாற்ற செயல்முறைகளை அனைத்துலக சமூகம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

இதற்கு, நிமல் சிறிபால டி சில்வா, அனைத்துலக சமூகத்தின் விருப்பத்துக்கேற்றவாறு செயற்படுவதற்கு தாம் ஆணை பெற்றிருக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

இதனால் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

http://thuliyam.com/?p=68934

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பு வரைபுக்கு சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஒத்த பொருளடக்கமும் சமமான சட்டவலுவுள்ள மொழிபெயர்ப்புகளை வேண்டுமென்று கேட்பதே சரியான தெரிவாக இருக்கமுடியும். மற்றும்படி சம்பந்தனின் அகீயா கோரிக்கை வழமைபோல் நகைப்புக்கிடம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vanangaamudi said:

அரசியலமைப்பு வரைபுக்கு சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஒத்த பொருளடக்கமும் சமமான சட்டவலுவுள்ள மொழிபெயர்ப்புகளை வேண்டுமென்று கேட்பதே சரியான தெரிவாக இருக்கமுடியும். மற்றும்படி சம்பந்தனின் அகீயா கோரிக்கை வழமைபோல் நகைப்புக்கிடம்தான்.

இப்படியே   பொருள் தேடி அடுத்த தேர்தல் வரை  இழுத்திரலாம்...

சம்பந்தரா கொக்கா??

31/12/2016 தவணையை  தமிழினம் மறந்தே போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

பாமர சிங்கள மக்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் என்பதற்காக சம்பந்தன் இப்படி கூறியிருக்கலாம் ....இந்த சிங்கள மக்கள் தான் பிக்குமாரையும்,இனவாத அரசியல் தலைவர்களையும் உருவாக்குபவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆக அனைத்துலகத்துக்கு  ஆமா போட  சம்பந்தன் தயாராக இருந்தாலும் . சிங்களம் இனவாதத்தை விட்டு வெளிவர  தயாராகவில்லை 

13 hours ago, Athavan CH said:

அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அது யதார்த்தமானது அல்ல என்று பதிலளித்த போது இரா.சம்பந்தன் கோபமடைந்தார்.

சகல ஊடகங்களில் வந்த இந்த செய்திகளில் ஒன்றில் பாரிய தவறு இருக்கவேண்டும் அல்லது மிகமோசமான சதித்திட்டங்கள் இருக்க வேண்டும்! 

சிங்கள-பௌத்த இனமத வெறியர்களும் தமிழர்களுக்கு நீதியை மறுக்கும் சகல சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளும் வேண்டுவது Unitary (ඒකීය) ஏகீய தன்மைகள் கொண்ட அரசியலமைப்பை. இதையே சம்பந்தனும் வலியுறுத்தி கோபமடைந்தார் என்றால் இந்த செய்திகளில் ஒன்றில் பாரிய தவறு இருக்கவேண்டும் அல்லது மிகமோசமான சதித்திட்டங்கள் இருக்க வேண்டும்!  

கூட்டாட்சி (Federal) என்ற தமிழர்களின் குறைந்தபட்ச கோரிக்கைக்கு எதிராக செயற்பட்டு சம்பந்தனுக்கு ஜனாதிபதியாகும் ஆசை வந்திருந்தால் இதை வலியுறுத்தி கோபமடைந்திருக்கலாம்.

அல்லது செய்திகளில் முழுமையில்லாது பாரிய தவறு நடந்துள்ளது. இதை விளங்குமளவுக்கு தரமான தமிழ் ஊடகவியலாளர்கள் இல்லை!

Edited by போல்

ஒற்றையாட்சியா? சமஷ்டியா? சொல் தொடர்பில் முடிவில்லை!

புதிய அரசமைப்புத் தொடர்பான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை இறுதிசெய்யும் நோக்கோடு கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடந்த அமர்விலும் அரசின் தன்மை குறித்து தெளிவான ஓர் இணக்கம் எட்டப்படவில்லை.

புதிய அரசமைப்பிலும் அரசின் தன்மை ஒற்றையாட்சி என்பதாகவே இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த விடயத்தில் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை.

முன்னதாக அரசின் தன்மை ஒற்றையாட்சி என்றே குறிப்பிடப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவும் வலியுறுத்தியிருந்தது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தற்போது வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்டுவரும் இடைக்கால அறிக்கையில் அரசின் தன்மை 'ஒருமித்த நாடு' என்று தமிழிலும், 'ஏக்கிய ராஜ்ய' என்று சிங்களத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் அது 'ஏக்கிய' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஆங்கிலத்தில் யுனிட்டரி (ஒற்றையாட்சி) என்ற பதத்துக்குப் பதிலாக 'ஏக்கிய' என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று தெரிவித்தார். 'யுனிட்டரி' என்று குறிப்பிடுவதே பொருத்தமானது என்று தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அதனை எதிர்த்தார். 'ஒற்றையாட்சி' என்று அதனைக் குறிப்பிடுவது யதார்த்தமற்றது என்று சம்பந்தன் நிராகரித்தார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல், "வார்த்தைகளில் தொங்கிக்கொண்டிருக்காமல் புதிய அரசமைப்பை முன்கொண்டுசெல்வது பற்றியே சிந்திக்கவேண்டும்" என்றார்.

இந்த விவாதத்தின் ஒரு கட்டத்தில் இடைக்கால அறிக்கையில் ஏற்கனவே 'ஏக்கிய ராஜ்ய' என்று சிங்களத்திலும், 'ஒருமித்த நாடு' என்று தமிழிலும் கொடுக்கப்பட்டிருக்கும் தெரிவுகளைப்போன்றே தற்போதைய அரசமைப்பில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே ஒற்றையாட்சி என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறுவதைப் போன்று கூட்டாட்சி (சமஷ்டி) என்பதையும் குறிப்பிடலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.

ஆனால், அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் நிராகரித்துவிட்டன. அந்த இரு சொற்களுமே இரு வேறு அர்த்தங்களைக் குறிப்பவை என்பதால் அதனை இடைக்கால அறிக்கையில் சேர்த்துக்கொள்வது இணக்கமொன்று எட்டப்படாதமையைக் குறிக்கும் என்று காரணம் கூறின.

இந்த விவாதத்தையடுத்து, இறுதிசெய்யப்படவுள்ள இடைக்கால அறிக்கையில் அரசின் தன்மை குறித்த உள்ளடக்கத்தை மட்டுமே முன்வைப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. அரசின் தன்மை ஒற்றையாட்சியா அல்லது கூட்டாட்சியா (சமஷ்டியா) என்பதைக் குறிப்பிடுவதில்லை என்று இணங்கப்பட்டது.

எதுவாக இருந்தாலும் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட அதிகூடிய அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவது என்பதை அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக்கொண்டன.

http://www.tamilwin.com/politics/01/147240?ref=view-latest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.