Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அந்தரங்கத்தை ஊரறியச் செய்வது சபைக்கே இழுக்காகும்’

Featured Replies

‘அந்தரங்கத்தை ஊரறியச் செய்வது சபைக்கே இழுக்காகும்’
 

image_99ed83c7cc.jpgஉங்கள் அனைவரிலும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில், அறிக்கையின் பிரதியை, சபைக்குக் கையளிக்கின்றேன். இந்த அறிக்கை, அந்தரங்கமானது. ஊரைக்கூட்டி, உங்கள் உரைகளை ஊரறிய ஊடகங்களுக்குக் கையளிப்பது, எமது வடக்கு மாகாணசபைக்கே இழுக்கை ஏற்படுத்தும்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

“குற்றமற்றவர்களே, மேரி மக்டெலின் மீது முதற்கல் எறிய முன்வாருங்கள் என்றார் இயேசு கிறிஸ்து நாதர். குற்றஞ்சாட்டுவதால் அரசியல் இலாபம் பெற விழைவோர், தமது நடவடிக்கைகளை மீள் பரிசீலனைக்கு

உட்படுத்த முன்வர வேண்டும். நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள் எம் ஒவ்வொருவரையும் உள்ளடக்கியது என்பதை மறவாது இருப்போமாக என்றும் அவர் குறிப்பிட்டார். 

வடமாகாண சபையின் அமைச்சர்கள் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முதலமைச்சர் குழுவொன்றை நியமித்தார். அந்த குழுவின் அறிக்கையை, சபையில் நேற்று (07) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“பலவிதமான குற்றச்சாட்டுகள் எமது அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்ததன் விளைவாக நாம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தோம். அதில் இருவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார். விதிமுறைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் மூடிய அறையில் விசாரணைகள் நடைபெற்றன. ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கப்படாது என்ற நிபந்தனையின் பேரில் விசாரணைகள் நடைபெற்றன. 

தற்போது அவர்களின் அறிக்கை பெறப்பட்டுள்ளது.  

மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகளும் சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளும் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுகளும் விவசாய கமநலசேவை, கால்நடை அபிவிருத்தி, நீர்வழங்கல், உணவு வழங்கல் விநியோகித்தல், சுற்றாடல் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகளும் கிடைக்கப்பெற்றன.  

நான்கு அமைச்சர்களும் குழுவின் அதிகாரத்தை ஏற்று சாட்சியமளித்துள்ளார்கள். சாட்சியமளிக்க அவர்கள் பின்நிற்கவில்லை. குறித்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமான அறிக்கையை இச் சபை முன் சமர்ப்பிக்க முன்னர் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்வது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.  

விசாரணைக்குழு அங்கத்தவர்கள் வடமாகாணசபையின் நடவடிக்கைகள் பற்றியும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அவர்கள் கருத்துப்படி எமக்கிருக்கும் மிகக் குறுகிய அதிகாரங்கள் பற்றியும் ஆளுநரின் அதிகாரங்கள் பற்றியும் பல்வேறு கருத்துகளைத் தம் அறிக்கையில் முன் வைத்துள்ளார்கள். அவை எம்மால் பரிசீலிக்கப்பட வேண்டியவை.  

முறைப்பாட்டாளர்கள் வராததால் சில அமைச்சர்கள் பேரிலான குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சாட்சியம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். மற்றையவர்கள் சம்பந்தமான தவறுகள் பல எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.  

உதாரணத்துக்கு, அதிகாரத் துஷ்பிரயோகம் பற்றிக் கூறியுள்ளார்கள். பணவிரயம் பற்றிக் கூறியுள்ளார்கள். அதிகார வரம்பை மீறியுள்ளதாகக் கூறியுள்ளார்கள். மேலும் பல தவறுகள் பற்றிக் கூறியுள்ளார்கள்.  

பொதுவாகக் குற்றச்சாட்டுகள் எமது உறுப்பினர்களாலேயே முன் வைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் நால்வரான அமைச்சர்கள் மீது மற்றைய சில உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி அவை சம்பந்தமாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விதப்புரைகளையும் விசாரணைக் குழுவினர் தந்துள்ளார்கள்.  

அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி நானே தீர்மானிக்க வேண்டும். எனினும் நான் தீர்மானிக்க முன் சபையினரின் கருத்தை அறிய ஆவலாய் இருக்கின்றேன். அத்துடன் அறிக்கையில் இருப்பவை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் சபையில் விளக்கமளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப்படுகின்றேன். ஏனென்றால் சில விடயங்கள் விசாரணைக் குழுவினால் கவனத்துக்கு எடுக்கப்படவில்லையென்றோ தவறான முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள் என்றோ பாதிக்கப்பட்டவர்களால் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.  

நாங்கள் ஈடுபட்டுள்ள இந்தச் செயல்முறை பொது வாழ்வில் உள்ளவர்கள் வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்புக்கூறலுக்குந் தம்மை முன்னிறுத்த முன்வரவேண்டும் என்ற கருத்தை முன்னிலைப் படுத்துவதாக அமைந்துள்ளது. 

மத்திய அரசாங்கமும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் தமது நிர்வாகத்தில் உள்ளடக்குவதாகவே கூறி பதவிக்கு வந்தது. அந்த வகையில் எங்கள் வடமாகாணம் வேறெந்த குறைகள் இருப்பினும் அடிப்படை விடயங்களில் சறுக்கிவிடக் கூடாது. அதிகாரத்துஷ்பிரயோகம், பணவிரயம், அதிகார வரம்புமீறல், பக்கசார்பான நடவடிக்கைகள் போன்றவை எமது நிர்வாகத்தைக் கேள்விக் குறியாக்கி விடுவன. நாம் எமது குறைபாடுகளை சீர்செய்ய வேண்டும். ஆனால் அதே நேரம் விசாரணைக்குழுவின் அறிக்கையில் முன்கூறியவாறு பல குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு நான் வருகைதராத ஒரு கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன் என்று கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறான பல விடயங்கள் சம்பந்தமாக எமது அமைச்சர்கள் கேள்விகளை எழுப்பவோ விளக்கமளிக்கவோ நாம் இடமளிக்க வேண்டும். எந்த விடயத்திலும் மேன் முறையீடு செய்ய வசதி அளிக்கப்படும். அதையெட்டியே இந்த கோரிக்கையை விடுக்கின்றேன்.  

உங்கள் அனைவரிலும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அறிக்கையின் பிரதியை சபைக்குக் கையளிக்கின்றேன். இந்த அறிக்கை அந்தரங்கமானது. ஊரைக்கூட்டி உங்கள் உரைகளை ஊரறிய ஊடகங்களுக்குக் கையளிப்பது எமது வடக்கு மாகாணசபைக்கே இழுக்கை ஏற்படுத்தும். குற்றமற்றவர்களே மேரி மக்டெலின் மீது முதற்கல் எறிய முன்வாருங்கள் என்றார் இயேசு கிறிஸ்து நாதர். குற்றஞ்சாட்டுவதால் அரசியல் இலாபம் பெற விழைவோர் தமது நடவடிக்கைகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த முன்வர வேண்டும். நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள் எம் ஒவ்வொருவரையும் உள்ளடக்கியது என்பதை மறவாது இருப்போமாக! 

இது சம்பந்தமான விவாதத்தை இம்மாதம் 9ஆம் திகதி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறான விடயங்களை நீடிப்பதால் அலுவலகங்களில் வேலைகள் தடைப்பட்டுப் போய் விடுவன. ஆகவேதான் 9ஆம் திகதி விவாதத்துக்கு நியமிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் அறிக்கை பற்றிய தமது விளக்கங்களை உடனேயே எழுத்து மூலந் தரவேண்டும். சபையினர் அனைவருக்கும் அறிக்கையும் அந்த விளக்கங்களும் தாமதமில்லாது கையளிக்கப்பட வேண்டும் அன்று கேட்டு அறிக்கையின் பிரதியொன்றை கௌரவ அவைத்தலைவர் அவர்களுக்குக் கையளித்து என் பேச்சை முடித்துக் கொள்கின்றேன், என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அந்தரங்கத்தை-ஊரறியச்-செய்வது-சபைக்கே-இழுக்காகும்/71-198197

  • தொடங்கியவர்

அமைச்­சர்­க­ளைப் பதவி நீக்­கு­வது குறித்து நானே முடிவெடுப்பேன்

அமைச்­சர்­க­ளைப் பதவி நீக்­கு­வது குறித்து நானே முடிவெடுப்பேன்
 

அமைச்­சர்­க­ளைப் பத­வி­யில் இருந்து நீக்­க­வேண்­டும் என்ற பரிந்­துரை குறித்து நான்தான் இறுதி முடி­வெ­டுப்­பேன் என நேற்று மாகாண சபை­யில் ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

“அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் என்ன நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என்­பது பற்றி நானே தீர்­மா­ னிக்­க­வேண்­டும். எனி­னும் நான் தீர்­மா­னிக்க முன் சபை­யி­ன­ரின் கருத்தை அறிய ஆவ­லாய் இருக்­கின்­றேன்” என்று முத­ல­மைச்­சர் குறிப்­பிட்­டார்.

அமைச்­சர்­கள் மீதான விசா­ர­ணைக் குழு அறிக்­கையை, வடக்கு மாகாண சபை­யில் சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஊட­கங்­க­ளுக்கு தக­வல் வழங்­கக் கூடாது பல வித­மான குற்­றச்­சாட்­டுக்­கள் எமது அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­கக் கிடைத்­த­தன் விளை­வாக நாம் ஒரு விசா­ர­ணைக் குழுவை அமைத்­தோம். அதில் இரு­வர் ஓய்வு பெற்ற மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள். ஒரு­வர் இளைப்­பா­றிய இலங்கை நிர்­வாக சேவை­யின் மூத்த அதி­கா­ரி­யா­வார். விதி­மு­றைக் குறிப்­புக்­கள் கொடுக்­கப்­பட்டு அவற்­றின் அடிப்­ப­டை­யில் மூடிய அறை­யில் விசா­ர­ணை­கள் நடை­பெற்­றன. ஊட­கங்­க­ளுக்­குத் தக­வல்­கள் வழங்­கப்­ப­டாது என்ற நிபந்­த­னை­யின் பேரில் விசா­ர­ணை­கள் நடை­பெற்­றன. தற்­போது அவர்­க­ளின் அறிக்கை பெறப்­பட்­டுள்­ளது.

குற்­றச்­சாட்­டுக்­கள் விவ­ரம்

மீன்­பிடி அமைச்­ச­ருக்கு எதி­ராக 4 குற்­றச்­சாட்­டுக்­க­ளும், சுகா­தார அமைச்­ச­ருக்கு எதி­ராக 5 குற்­றச்­சாட்­டுக்­க­ளும், கல்வி அமைச்­ச­ருக்கு எதி­ராக 9 குற்­றச்­சாட்­டுக்­க­ளும், விவ­சாய அமைச்­ச­ருக்கு எதி­ராக 10 குற்­றச்­சாட்­டுக்­க­ளும் கிடைக்­கப் பெற்­றன. நான்கு அமைச்­சர்­க­ளும் குழு­வின் அதி­கா­ரத்தை ஏற்­றுச் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார்­கள். சாட்­சி­ய­ம­ளிக்க அவர்­கள் பின்­நிற்­க­வில்லை. குறித்த குற்­றச்­சாட்­டுக்­கள் சம்­பந்­த­மான அறிக்­கையை இந்­தச் சபை முன் சமர்ப்­பிக்க முன் சில விட­யங்­க­ளைப் பகிர்ந்து கொள்­வது நன்மை பயக்­கும் என்று நம்­பு­கின்­றேன்.

விசா­ர­ணைக் குழு அங்­கத்­த­வர்­கள் வடக்கு மாகாண சபை­யின் நட­வ­டிக்­கை­கள் பற்­றி­யும் 13ஆவது திருத்­தச் சட்­டத்­தின் கீழ் அவர்­கள் கருத்­துப்­படி எமக்­கி­ருக்­கும் மிகக் குறு­கிய அதி­கா­ரங்­கள் பற்­றி­யும் ஆளு­ந­ரின் அதி­கா­ரங்­கள் பற்­றி­யும் பல்­வேறு கருத்­துக்­க­ளைத் தம் அறிக்­கை­யில் முன் வைத்­துள்­ளார்­கள். அவை எம்­மால் பரி­சீ­லிக்­கப்­பட வேண்­டி­யவை.

முறைப்­பாட்­டா­ளர்­கள் வரா­த­தால் சில அமைச்­சர்­கள் பேரி­லான குற்­றச்­சாட்­டுக்­கள் சம்­பந்­த­மா­கச் சாட்­சி­யம் கிடைக்­க­வில்லை என்று கூறி­யுள்­ளார்­கள். மற்­றை­ய­வர்­கள் சம்­பந்­த­மான தவ­று­கள் பல எடுத்­துக் காட்­டப்­பட்­டுள்­ளன. அதி­கா­ரத் துஷ்­பி­ர­யோ­கம் பற்­றிக் கூறி­யுள்­ளார்­கள். பண விர­யம் பற்­றிக் கூறி­யுள்­ளார்­கள். அதி­கார வரம்பை மீறி­யுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்­கள். மேலும் பல தவ­று­கள் பற்­றிக் கூறி­யுள்­ளார்­கள்.

நான்­தான் தீர்­மா­னிக்க வேண்­டும்

பொது­வா­கக் குற்­றச்­சாட்­டுக்­கள் எமது உறுப்­பி­னர்­க­ளா­லேயே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. உறுப்­பி­னர்­கள் நால்­வ­ரான அமைச்­சர்­கள் மீது மற்­றைய சில உறுப்­பி­னர்­கள் குற்­றஞ்­சாட்டி அவை சம்­பந்­த­மாக சுதந்­தி­ர­மான விசா­ரணை நடத்­தப்­பட்டு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. விதப்­பு­ரை­க­ளை­யும் விசா­ர­ணைக் குழு­வி­னர் தந்­துள்­ளார்­கள். அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் என்ன நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என்­பது பற்றி நானே தீர்­மா­னிக்­க­வேண்­டும்.

எனி­னும் நான் தீர்­மா­னிக்க முன் சபை­யி­ன­ரின் கருத்தை அறிய ஆவ­லாய் இருக்­கின்­றேன். அத்­து­டன் அறிக்­கை­யில் இருப்­பவை பற்றி சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் சபை­யில் விளக்­க­ம­ளிக்க அவ­கா­சம் அளிக்க வேண்­டும் என்­றும் அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்­றேன்.

ஏனென்­றால் சில விட­யங்­கள் விசா­ர­ணைக் குழு­வி­னால் கவ­னத்­துக்கு எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென்றோ தவ­றான முடி­வுக்கு அவர்­கள் வந்து விட்­டார்­கள் என்றோ பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளால் கருத்­துக்­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

நாங்­கள் ஈடு­பட்­டுள்ள இந்­தச் செயல்­முறை பொது­வாழ்­வில் உள்­ள­வர்­கள் வெளிப்­ப­டைத்­தன்­மைக்­கும் பொறுப்­புக் கூற­லுக்­குந் தம்மை முன்­னி­றுத்த முன்­வ­ர­வேண்­டும் என்ற கருத்தை முன்­னி­லைப் படுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.

மக்­கள் நம்­பிக்­கையை வீண­டிக்­கக் கூடாது

மக்­கள் எம்­மைத் தேர்ந்­தெ­டுக்­கும் போது எங்­கள் மீது அவர்­க­ளுக்கு பல எதிர்­பார்ப்­புக்­கள் இருந்­தன. நேர்­மை­யான, ஊழ­லற்ற, பக்­க­சார்­பற்ற, கண்­ணி­ய­மான ஒரு நிர்­வா­கத்தை நாம் அவர்­க­ளுக்­குக் கொடுப்­போம் என்ற எதிர்­பார்ப்பே அது. புதிய ஒரு அமைப்­பான வடக்கு மாகாண சபை­யைக் கையேற்­ற­போது நாம் ஒரு நம்­பிக்­கைப் பொறுப்பை ஏற்­றுக் கொண்­டோம்.

ஆகவே நம்­பிக்­கைப் பொறுப்­பா­ளர்­கள் என்ற முறை­யில் நேர்மை, பக்­க­சார்­பற்ற தன்மை, பொறுப்­புக் கூறல், பொறுப்­பாக நடந்­து­கொள்­ளல் மற்­றும் மக்­க­ளின் நலன்­க­ளைப் பாது­காப்­பது போன்ற குணா­தி­ச­யங்­களை மக்­கள் எங்­க­ளி­டம் எதிர்­பார்த்­துள்­ளார்­கள்.

அந்த நம்­பிக்­கையை நாங்­கள் மழுங்­க­டிக்­கும் வண்­ணம் நடந்து கொள்­ளக் கூடாது என்ற கருத்தை வலி­யு­றுத்­தவே மேற்­படி விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. எம்­மி­டம் குறை­பா­டு­கள் இருப்­பின் அவற்றை நிவர்த்தி செய்­யவே இந்த விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. எம்மை நாமே ஒழுக்­கப்­ப­டுத்த அல்­லது எமது நட­வ­டிக்­கை­களை மீளாய்வு செய்ய இந்த வழி­முறை உத­வி­யது.

விசா­ரணை அறிக்­கை­யில் குறை­பாடு

கொழும்பு அர­சும் வெளிப்­ப­டைத் தன்­மை­யை­யும் பொறுப்­புக் கூற­லை­யும் தமது நிர்­வா­கத்­தில் உள்­ள­டக்­கு­வ­தா­கவே கூறிப் பத­விக்கு வந்­தது. அந்த வகை­யில் எங்­கள் வட­மா­கா­ணம் வேறெந்­தக் குறை­கள் இருப்­பி­னும் அடிப்­படை விட­யங்­க­ளில் சறுக்­கி­வி­டக் கூடாது. அதி­கா­ரத் துஷ்­பி­ர­யோ­கம், பண­வி­ர­யம், அதி­கார வரம்பு மீறல், பக்­கச் சார்­பான நட­வ­டிக்­கை­கள் போன்­றவை எமது நிர்­வா­கத்­தைக் கேள்­விக் குறி­யாக்­கி­வி­டு­வன.

நாம் எமது குறை­பா­டு­க­ளைச் சீர்­செய்ய வேண்­டும். அதே­நே­ரம் விசா­ர­ணைக் குழு­வின் அறிக்­கை­யில் முன்­கூ­றி­ய­வாறு பல குறை­பா­டு­கள் சுட்­டிக் காட்­டப்­பட்­டுள்­ளன. உதா­ர­ணத்­திற்கு நான் வரு­கை­த­ராத ஒரு கூட்­டத்­திற்கு நான் சென்­றி­ருந்­தேன் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பல விட­யங்­கள் சம்­பந்­த­மாக எமது அமைச்­சர்­கள் கேள்­வி­களை எழுப்­பவோ விளக்­க­ம­ளிக்­கவோ நாம் இட­ம­ளிக்க வேண்­டும். எந்த விட­யத்­தி­லும் மேன் முறை­யீடு செய்ய வசதி அளிக்­கப்­ப­டும். அதை­யெட்­டியே இந்­தக் கோரிக்­கையை விடுக்­கின்­றேன்.

மீண்­டும் விசா­ரிப்­பதா ?

முறைப்­பாட்­டா­ளர்­கள் வருகை தரா­த­தால் கைவி­டப்­பட்ட விசா­ர­ணை­களை மீண்­டும் உயிர் கொடுக்க வேண்­டு­மென்­றால் அத­னைச் செய்­ய­வும் நாங்­கள் தவ­றக்­கூ­டாது. சபை­யின் கௌர­வத்­தைப் பாது­காக்­கும் பொறுப்பு உங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இருக்­கின்­றது. எந்த ஒரு விவா­த­மும் தனிப்­பட்ட ரீதி­யாக எவ­ரை­யும் தாக்­கு­வ­தாக அமை­யக்­கூ­டாது.

ஒரு விட­யம் நடந்­ததா இல்­லையா என்­பதை அறி­வதே எமது குறிக்­கோ­ளாக இருக்க வேண்­டும். தனிப்­பட்ட முறை­யில் எவ­ரை­யும் தாக்­கு­வ­தை­யும் அவர்­கள் மனத்­தைப் புண்­ப­டுத்­து­வ­தை­யும் தவிர்த்­துக் கொள்ள வேண்­டும். இனி­யா­வது தனிப்­பட்ட முறை­யில் உறுப்­பி­னர்­க­ளைத் தாக்­கு­வ­தைத் தவிர்ப்­போ­மாக!

ஊட­கங்­க­ளி­டம் கொடுப்­பது  மாகா­ண­ச­பைக்கு இழுக்கு

உங்­கள் அனை­வ­ரி­லும் உள்ள நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அறிக்­கை­யின் பிர­தி­யைச் சபைக்­குக் கைய­ளிக்­கின்­றேன். இந்த அறிக்கை அந்­த­ரங்­க­மா­னது. ஊரைக்­கூட்டி உங்­கள் உரை­களை ஊர­றிய ஊட­கங்­க­ளுக்­குக் கைய­ளிப்­பது எமது வடக்கு மாகாண சபைக்கே இழுக்கை ஏற்­ப­டுத்­தும். குற்­ற­மற்­ற­வர்­களே மேரி மக்­டெ­லின் மீது முதற்­கல் எறிய முன்­வா­ருங்­கள் என்­றார் இயே­சு­கி­றீஸ்து நாதர்.

குற்­றஞ்­சாட்­டு­வ­தால் அர­சி­யல் இலா­பம் பெற­வி­ழை­வோர் தமது நட­வ­டிக்­கை­களை மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்த முன்­வ­ர­வேண்­டும். நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் செயல்­பா­டு­கள் எம் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் உள்­ள­டக்­கி­யது என்­பதை மற­வாது இருப்­போ­மாக – என்­றார்.

http://uthayandaily.com/story/5574.html

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தெரிகிறது தமிழர்கள் நிலை எங்கே நிற்கிறது  என்று தெரிகிறதா மக்களே இனியாவது இவர்களை நம்பி இராமல்  நீங்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணமிது  ஒரு அபிவிருத்தி திட்டம் வந்தால் அது ஒரு அரசியல் வாதியினால் சிபாரிசு செய்யப்பட்ட்வருக்கு சென்று விடுகிறது பிறகு அதன் பங்குகள் பிரித்து கொடுக்கப்படுகிறது              அனைத்து திட்டங்களிலும் இப்படியே நடக்கிறது  என்னத்தை சொல்ல  ...........................................

  • கருத்துக்கள உறவுகள்
குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொன்டு அவர்களை உடனே பதவி நீக்கம் செய்திருந்தால் இன்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேசு­வ­ரன் அவர்களை விக்கின வினாயகருக்கு நிகராக கொண்டாடி மனு நீதிச் சோழன் காலத்திலே வாழப் போவது நாங்கள்தான்,:)
 
புதிய அமைச்சர்கள் வந்தாலும்...! அவர்கள் வரப்போவது...!! கருனாநிதி, மகிந்த காலத்தில்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டு, முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேசு­வ­ரனுக்கு அரசியல் அறிவு, அரிவரி கூட இல்லை. கோவிலில் தேவாரம் பாடத்தான்சரி என்று தூற்றப் போவதும் நாங்கள்தான்.:(
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

தற்போது தெரிகிறது தமிழர்கள் நிலை எங்கே நிற்கிறது  என்று தெரிகிறதா மக்களே இனியாவது இவர்களை நம்பி இராமல்  நீங்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணமிது  ஒரு அபிவிருத்தி திட்டம் வந்தால் அது ஒரு அரசியல் வாதியினால் சிபாரிசு செய்யப்பட்ட்வருக்கு சென்று விடுகிறது பிறகு அதன் பங்குகள் பிரித்து கொடுக்கப்படுகிறது              அனைத்து திட்டங்களிலும் இப்படியே நடக்கிறது  என்னத்தை சொல்ல  ...........................................

மக்கள என்ன மாதிரி சிந்திக்க வேணும்?....இது சகல நாடுகளிலும் நடக்கும் ஒன்று இதை அந்த ஆண்டவன் வந்தாலும் மாற்ற முடியாது.இதை செய்ய ஊக்கிவிப்பதும் மக்கள் தான்..மக்கள் சும்மா வோட்டு போட்டுவிட்டு தங்களது அலுவல்களை பார்த்து கொண்டு போவார்கள்..சீனாவில இருக்கிற அரசியல்வாதியும் அமேரிக்கா அரசியல்வாதியும்  ஒன்றுதான்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

மக்கள என்ன மாதிரி சிந்திக்க வேணும்?....இது சகல நாடுகளிலும் நடக்கும் ஒன்று இதை அந்த ஆண்டவன் வந்தாலும் மாற்ற முடியாது.இதை செய்ய ஊக்கிவிப்பதும் மக்கள் தான்..மக்கள் சும்மா வோட்டு போட்டுவிட்டு தங்களது அலுவல்களை பார்த்து கொண்டு போவார்கள்..சீனாவில இருக்கிற அரசியல்வாதியும் அமேரிக்கா அரசியல்வாதியும்  ஒன்றுதான்...

மக்கள் சிந்திக்க வேணும் மாற்று அரசிலை  இந்த ஆடுகள் சரிவராது என தெரிந்தவுடன்  அதற்க்கான நடவடிக்கைகளுக்குள் இறங்கியிருக்க வேணும்  ஆனால் மக்களும் ம்ந்தைகளுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்றாகிவிட்டது கிழக்கில்  நன்றாக பணி செய்யக்கூடிய ஒருத்தர் தமிழரசுக்கட்சியில் தமிழர்களுக்காக நான் சேவை செய்ய வேண்டும் அதற்க்காக ஒரு இடத்தை தாருங்கள் அதில் நின்று நான் வெற்றி பெறுகிறேன் என்று கூறியும்  அவருக்கு அந்த இடம் கொடுக்கப்படவில்லை பிறகு அவர் வேறு கட்சியில் சேர்ந்து   தேர்தலில் ஈடுபட்டார்  என்பதை பல வாக்குகளை பிரித்து விட்டார் .ஆக நல்ல சேவை செய்வேண் எபவர்களை தட்டிக்கழித்து தேவையில்லாத  உறுப்பினர்களை வைத்திருந்து  இப்படி அரசியல் ஊழல் நிறைந்த அரையல் செய்து பிழைப்பு ந்டத்துவதை விட இவர்கள் அதைவிட்டு விட்டு போகலாம்  

ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேணும் என்று சொன்னார்கள் அது நழுவிப்போய்விட்டது ,சுயஆட்சி  கேட்டார்கள் , பொலிஸ் ,காணி அதிகாரங்கள் கேட்டார்கள் இலங்கை அரசு இவர்கள் கேட்பதை ஏன் கொடுக்க வில்லை என்பது இப்போது புரிகிறது இவர்களெல்லாம்  அலிபாவும் நாற்பது திருடர்களும் . மெல்ல மெல்ல சாவோம் 

 

சினாவில் இருக்கும் அரசியல் வாதியும் ஒன்றுதான் , அமெரிக்காவில் இருக்கும் அரசியல் வாதியும் ஒன்றுதான்  இப்படி சொல்லி சொல்லியே  ,அரசியலுக்கு வருபவனை உதாரணம் காட்டி அவனை இன்னும் தவறுகள் செய்ய தூண்டி கண்டு கொள்ளாமல் இருக்குறோம்  சினா வளர்ர்சியடைந்த நாடு , அமெரிக்கா அதைவிட வளர்ச்சியடைந்த நாடு புத்து

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனி ஒருவன் said:

 

Quote

மக்கள் சிந்திக்க வேணும் மாற்று அரசிலை  இந்த ஆடுகள் சரிவராது என தெரிந்தவுடன்  அதற்க்கான நடவடிக்கைகளுக்குள் இறங்கியிருக்க வேணும்  ஆனால் மக்களும் ம்ந்தைகளுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும்

சிறிலங்காவை பொருத்தமட்டில் மக்கள் வாக்கு போடும் பொழுது...தமிழனா,சிங்களவனா,முஸ்லிமா என்று பார்த்துதான் வாக்கு போடுகிறார்கள் ..இதை தவிர அவர்களால் வேறுவகையில் சிந்திக்க முடியாது சிந்திக்கவும் மாற்றார்கள்.இரண்டு தமிழன் ஒரு தொகுதியில் நின்றால் ஒரளவுக்கு நல்லவன் என்று நினைத்து அவருக்கு அதிக வாக்குகளை போடுவார்கள்.

Quote

அதற்க்காக ஒரு இடத்தை தாருங்கள் அதில் நின்று நான் வெற்றி பெறுகிறேன் என்று கூறியும்  அவருக்கு அந்த இடம் கொடுக்கப்படவில்லை பிறகு அவர் வேறு கட்சியில் சேர்ந்து   தேர்தலில் ஈடுபட்டார்  என்பதை பல வாக்குகளை பிரித்து விட்டார் .

இங்கு அவர் பொதுநலத்துடன் செயற்படவில்லை தானே? அவரை தமிழர்கள் வெற்றி பெற வைத்திருந்தாலும் இதைத்தான் அவர் செய்திருப்பார்.பொது நலம் செய்ய வேண்டுமென்றிருந்தால் தேர்தலில் நிற்காமல் தவிர்த்திருக்கலாம்.
இன்று வடமாகணசபை அமைச்சர்கள் மீதான‌ குற்றச்சாட்டுகளும் யாரால் வைக்கப்படுகிறது என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

Quote

ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேணும் என்று சொன்னார்கள் அது நழுவிப்போய்விட்டது ,சுயஆட்சி  கேட்டார்கள் , பொலிஸ் ,காணி அதிகாரங்கள் கேட்டார்கள் இலங்கை அரசு இவர்கள் கேட்பதை ஏன் கொடுக்க வில்லை என்பது இப்போது புரிகிறது இவர்களெல்லாம்  அலிபாவும் நாற்பது திருடர்களும் . மெல்ல மெல்ல சாவோம்

உவங்கள் அடிபடுவாங்கள் உவங்களுக்கு கொடுக்கதேவையில்லை என்று ஒரு மத்திய அரசு நினைக்கூடாது...பல இனங்களை கொண்ட நாட்டில் அந்த அந்த இனங்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது மத்திய அரசின் கடமை.

13 hours ago, தனி ஒருவன் said:

 

 

சினாவில் இருக்கும் அரசியல் வாதியும் ஒன்றுதான் , அமெரிக்காவில் இருக்கும் அரசியல் வாதியும் ஒன்றுதான்  இப்படி சொல்லி சொல்லியே  ,அரசியலுக்கு வருபவனை உதாரணம் காட்டி அவனை இன்னும் தவறுகள் செய்ய தூண்டி கண்டு கொள்ளாமல் இருக்குறோம்  சினா வளர்ர்சியடைந்த நாடு , அமெரிக்கா அதைவிட வளர்ச்சியடைந்த நாடு புத்து

ஜனநாயக அரசியலில் இதுதான் எழுதப்படாத விதி ...அதுவும் ஆசியாவில் சொல்லி வேலையில்லை....ஒரு சின்ன உதாரணம் இஸ்லாம் என்று சொல்லி அமெரிக்கா ஐரோப்பாவில் குண்டு வைத்து சாதாரண மக்களை கொல்லுகின்றனர் ,ஆனால் அதே அமெரிக்காரன் சவுதிக்கு போய் கதைத்தவுடன் சக முஸ்லிம் நாட்டுடன் தொடர்பை துண்டிக்கிறார்கள்...சாதாரண அப்பாவிகள் அடிபட்டு சாவடைய பெரியவர்கள் கைகுழுக்கி தங்களது சுயநலத்தை பாதுகாத்து கொள்கிறார்கள்...

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

புத்து அரசியலை எப்படியாயினும் நியாயப்படுத்தலாம் ஆனால் இவர்கள் ஒழுங்கான  அரசியல் செய்தால் ஏன் விமர்சிப்பான் வருபவன்  அனைவரும் மக்களுக்கும் நல்லது செய்கிறோம் செய்வன் எனவம்   அரசியலுக்கு வந்து உருப்படியாக செய்தது இல்லை   நழுவல் போக்குடனே நடந்து கொள்ள காணமுடிகிறது  

4 hours ago, putthan said:

இங்கு அவர் பொதுநலத்துடன் செயற்படவில்லை தானே? அவரை தமிழர்கள் வெற்றி பெற வைத்திருந்தாலும் இதைத்தான் அவர் செய்திருப்பார்.பொது நலம் செய்ய வேண்டுமென்றிருந்தால் தேர்தலில் நிற்காமல் தவிர்த்திருக்கலாம்.
இன்று வடமாகணசபை அமைச்சர்கள் மீதான‌ குற்றச்சாட்டுகளும் யாரால் வைக்கப்படுகிறது என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

 அவர் அங்க்உ பொது நலத்தில் இருந்து விலகி இருந்தது உன்மைதான் காரணம் மாற்றுக்கட்சியில் சேர்ந்து அத்தனை வாக்குகள் பெற்ற அவரால் ஏன் தமிழர்களின் உரிமைக்கட்சியான தமிழரசுக்கட்சி ஏன் அவருக்கு சீற் வழங்கவில்லையென்பது உள்ளே தொக்கிநிற்கிறது  ஆக மொத்தத்தில் தமிழரசுக்கட்சியில் சாயலுக்கு அசைந்தாடும் ஆட்களையே கட்சியும் விரும்புகிறது .

யாரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன ஒரு குடிமகனால் முன் வைக்கப்பட முடியுமா  , அதை எந்த வகையில் நிருபிக்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள் அரசியல் கட்சியின் உறுப்பினர்களூக்கு தன்ன்கென ஒரு அணி இருக்கிறது புத்தன் அதை நீங்கள் அறீவீர்கள் அப்படியிருக்க தனிநபரால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.