Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • தொடங்கியவர்

1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா, அதால LOCAL call, STD call, ISD call ஏன் MISSED call கூட பண்ண முடியாது!

2. கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம், ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?

3. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில தான் பேச முடியும்.

4. என்ன தான் உன் தலை சுத்தினாலும், உன்னால உன்னோட முதுகை பார்க்க முடியாது.

5. மீன் பிடிக்கிறவனை "மீனவன்" சொன்னா, நாய் பிடிக்கிறவன என்ன சொல்றது?

6. தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா ஏன் வலிக்கிறதில்ல?

7. பொங்கலுக்கு கவர்மெண்ட் லீவு இருக்கு, இட்லி, தோசைக்கு ஏன் லீவு கொடுக்க மாட்டேங்கிறாங்க?

8. கோல மாவில் கோலம் போடலாம், கடலை மாவில் கடலை போட முடியுமா?

9. வாழ்க்கையில ஒன்னும் இல்லாட்டி bore அடிக்கும், தலைல ஒன்னும் இல்லாட்டி glare அடிக்கும்.

10. 7 பரம்பரைக்கு உக்கார்ந்து சாப்பிட பணம் இருந்தாலும், fast food கடைல நின்னுகிட்டு தான் சாப்பிடணும்.

11. வாழை மரம் தார் விடும், ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது.

12. பால்கோவா பாலிலிருந்து பண்ணலாம், ஆனா ரசகுல்லாவ ரசத்திலிருந்து பண்ண முடியாது.

13. என்ன தான் படிப்பாளியா இருந்தாலும் பரீட்சை அறையில படிக்க முடியாது.

14. பள்ளிக்கூட "test"ல "பிட்" அடிக்கலாம். கல்லூரி "test"ல "பிட்" அடிக்கலாம். ஆனால், "Blood test"ல "பிட்" அடிக்க முடியாது.

15. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும், அதால, "நன்றி"ன்னு சொல்ல முடியாது. இது தான் வாழ்க்கை.

16. ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு.

17. என்ன தான் அஹிம்சா வாதியா இருந்தாலும், "சப்பாத்தி"ய சுட்டு தான் சாப்பிட முடியும்.

18. நீ என்ன தான் வீரனா இருந்தாலும், குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

19. காசு இருந்தா "Call Taxi", காசு இல்லாட்டி கால் தான் "Taxi".

20. கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும், கோவில் மணியால நம்மல அடிச்சா ரத்தம் வரும்.

21. பல்லு வலின்னா பல்ல புடிங்கிடலாம். ஆனா கண்ணு வலின்னா?

22. நீ என்ன தான் படிச்சு "Certificate" வாங்கினாலும், உன் கையால உன்னோட "Death Certificate" வாங்க முடியாது.

23. "Engineering College"ல படிச்சு "Engineer" ஆகலாம். "President College"ல படிச்சு "President" ஆக முடியுமா?

24. நீ "எத்தனால்" சாப்பிட்டா நீ ஆடுவ. ஆனால் "மெத்தனால்" சாப்பிட்டா ஊரு உனக்காக ஆடும்.

25. மெழுக வச்சு மெழுகு வத்தி செய்யலாம். ஆனா "கொசு"வ வைச்சு "கொசுவத்தி" செய்ய முடியாது.

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply

நீ "எத்தனால்" சாப்பிட்டா நீ ஆடுவ. ஆனால் "மெத்தனால்" சாப்பிட்டா ஊரு உனக்காக ஆடும்.

இப்படின்னா என்ன?

  • தொடங்கியவர்

இப்படின்னா என்ன?

ethenol

methanol

அது இரன்டும் அல்ககோல் வகை, இரசயாணக் கலவை

  • தொடங்கியவர்

ஒரு விமானத்துக்கு சண்டாசிங் என்ற சர்தார்ஜியை பைலட்டாகவும் பண்டாசிங் என்ற சர்தார்ஜியை கோ-பைலட்டாகவும் நியமித்தார்கள்.லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்குவது அவர்களின் வேலை.

விமானத்தை லண்டன்வரை வெற்றிகரமாக ஓட்டிச் சென்ற அவர்கள் ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றனர்.எல்லா வேலைகளும் முடிந்து விமானத்தின் சக்கரங்களை ரன்வேயில் பதிக்கும் நேரத்தில்"ரன்வே முடிந்துவிட்டது..விமானத்தை மேலே தூக்கு!"கோ-பைலட் பண்டாசிங் கத்த விமானத்தை மேலே தூக்கினார் சண்டாசிங்.இப்படி பத்துமுறை முயன்றும் விமானத்தைத் தரையிறக்கமுடியவில்லை.உடனே பண்டாசிங் சொன்னார்"இதை அமைத்தவர்கள் நிச்சயம் முட்டாள்களாகத்தான் இருக்கவேண்டும்!இல்லாவிட் டால் நீளத்தை அரைகிலோ மீட்டர் வைத்துவிட்டு அகலத்தை இப்படி பத்து கிலோமீட்டருக்கு வைப்பார்களா?"

_________________

பாண்டா சிங் நடுநிசியில் வந்த தொலைபேசிக்கு எழுந்து பதிலளிக்கிறார்.

குரல்: இது ஒன்று ஒன்று ஒன்று ஒன்று தானே?

சிங்: இல்லை, இது பதினொன்று பதினொன்று.

குரல்: நிச்சயமாய் இது ஒன்று ஒன்று ஒன்று ஒன்று இல்லையா?

சிங்: இல்லை, இது பதினொன்று பதினொன்று.

குரல்: நல்லது தவறு நடந்து விட்டது. உங்களை நடுநிசியில் எழுப்பியதற்க்கு மன்னிக்கவும்.

சிங்: பரவாலில்லை நண்பரே, எப்படி இருந்தாலும் தொலைபேசிக்கு பதில் சொல்ல நான் எழுந்துதான் கனும்.

  • தொடங்கியவர்

Wzxyrtsaenmie

என்ன தலைப்பு புரியுதா?

.

.

.

.

.

.

.

இல்லையா?

.

.

.

.

.

.

.

அப்ப மானிட்டரை தலைகீழா கவுத்தி வச்சு பாருங்க!!(அல்லது நீங்க

தலைகீழா நின்னு பாருங்க)

Wzxyrtsaenmie

.

.

.

.

இப்பவும் தெரியலையா?

.

.

நேரா இருக்கும்போதே புரியலை! தலைகீழா இருந்தா புரியுமா? லூஸாப்பா நீ?

----------------------------------------------

டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ.......

---------------------

நீங்க வீட்ல இருக்கீங்களா?

சொந்த வீடா?

டீவி இருக்கா?

டேபிள்?

சேர்?

நல்ல தோட்டம் இருக்கா?

நாய் குட்டி? பூனை குட்டி?

ஆடியோ சிஸ்டம் இருக்குல்ல?

ஸிடியா இல்ல டிவிடியா?

ஹோம் தியேட்டர் அட்டாச்டா?

நல்ல தண்ணி?

ஃப்ரிட்ஜ்?

பெருசா, சின்னதா?

கூலிங்கா இருக்குமா?

பைக் இருக்கா?

கார்? இல்லையா?

ஃபேனா? ஏஸியா?

ஃபோன் இருக்கா? நல்லது!

செல்ஃபோன்? அதுவும் இருக்கா!

அதுல பேலன்ஸ் இருக்கா?

அப்புறம் என்ன? ஒரு கால் பண்ணா குறைஞ்சா போய்டுவே?

_________________

:mellow:

Edited by வானவில்

  • தொடங்கியவர்

பல்பீர் சிங் ஒருநாள் நெரிசல் மிக்க பேரூந்தில் தனது மகனின் கல்லூரி சேர்க்கைக்காக மகனின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்று கொண்டிருக்கிறார்.

தவறுதலாக அவருடைய பையிலிருந்து புகைப்படம் கீழே விழுந்துவிட்டது. பல்பீர் அதை எடுக்க எத்தனிக்கையில் அது ஒரு பெண்ணின் காலுக்கடியில் நழுவி சென்றுவிட்டது.

அவர் அந்த பெண்மணியிடம் “கொஞ்சம் உங்கள் புடவையை தூக்குங்கள், புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்” என்றார். அப்புறம் நடந்தவை பற்றி கேட்கவே வேண்டாம், அது...... ஒரு சரித்திரம்.

-----------------

ஆசிரியர்: ஜார்ஜ் வாசிங்டன் எப்போ இறந்தார்?

பல்பீர் சிங்: அடக்கம் செய்வதற்க்கு இரண்டு நாள் முன்பு

-----------------

ஆசிரியர்: உங்கள் நினைவில் உள்ள 5 பயங்கரமான பிராணிகளை கூறுங்கள்?

பல்பீர் : 3 சிங்கம், 2 புலி

-------------------

பல்பீர் சிங் மீது, நீதி மன்றத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கார் நிறுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அவரிடம் நீங்கள் ஏதேனும் கூறவிரும்புகிறீர்களா? என் கேட்டார்.

இனி இது போன்று தவறான அறிவிப்பு பலகையை வைக்க வேண்டாம் என கூறுங்கள் என்றார். பலகையில் “Fine for PARKING HERE” என்று எழுதி இருந்தது.

_________________

  • தொடங்கியவர்

உன் வாழ்க்கை இருள் சூழ்ந்திருந்தால்,

அந்த இருளிலிருந்து உன்னை வெளியேற்றும்படி

கடவுளை வேண்டிக் கேள்

கடவுளை வேண்டிய பின்னும்

இன்னும் நீ இருளிலேயே இருந்தால்

முதலில் உன் வீட்டு எலக்டிரிசிட்டி பில்லை கட்டு.

-----------------

நீ எப்பொழுதாவது தனிமையாக இருப்பதாக உணர்ந்தால்,

உன்னை சுற்றி ஒருவரையும் காணாவிட்டால்,

இந்த உலகமே மங்கி கொண்டு வருவதாக தோன்றினால்,

என்னோடு வா, என் கையை பிடித்துக் கொள்.

நான் உன்னை கண் டாக்டரிடம் அழைத்து செல்கிறேன்

---------------------------

நீ ஒவ்வொரு முறை

கண்ணாடியினருகில் வரும் போதும்

அது சொல்லும்

"பியூட்டிபுல்! பியூட்டிபுல்!!"

ஆனால்

நீ அதைவிட்டு விலகிசெல்லும்போது

அது சொல்லும்

"ஏப்ரல்பூல்! ஏப்ரல்பூல்!!"

  • தொடங்கியவர்

பல்பீரும், சாம்சிங்கும் எப்போதும் தங்கள் பெற்றோரின் பிரதாபங்களை சொல்லிக்கொள்வர்.

பல்பீர்: சூயஸ் கால்வாய் பற்றி தெரியுமா?

சாம்சிங்: மாம், அதுக்கு என்ன?

பல்பீர்: எங்க அப்பாதான் அதை தோண்டினார்.

சாம்சிங்: ஹ.. இது என்ன பிரமாதம். மாம் உனக்கு கருங்கடல் தெரியுமா? (டெட் சீ (Dead Sea) தெரியுமா?)

பல்பீர்: ம்ம் தெரியும்.

சாம்சிங்: அதுகு எங்க அப்பாதான் பெயிண்ட் அடிச்சார் (எங்க அப்பாதான் அதை கொன்றார்)

-------------------

--------------------------------------------------------------------------------

பல்பீர் தன்னை கிண்டல் செய்து அதிகமாக செய்திகள் வருவதால் நொந்து போனார். எனவே PHD செய்யலாம் என தீர்மானித்தார். இதுவரை யாரும் செய்யாதபடத்தில் அவரது ராய்ச்சி இருக்கவேண்டும் என முடிவு செய்தார். கரப்பான் பூச்சியை பார்த்ததும் அதனைக் கொண்டு ராய்ச்சி செய்ய ரம்பித்தார்.

ஒரு மேசையில் கரப்பானை வைத்து அதன் ஒரு காலை வெட்டினார். பிறகு அதை “நட” என்றார். கரப்பான் முன்னோக்கி நகர்ந்தது. பல்பீர் இரண்டாவது காலை வெட்டி “நட” என கூறினார். கரப்பான் சமாளித்து நகர்ந்தது. மூன்றாவது காலையும் வெட்டி “நட” என்றார். கரப்பான் முயற்சித்து முடியாமல் அதே இடத்தில் சுற்றியது. கடைசியாக நாலாவது காலையும் வெட்டி “நட” என்றார். பாவம் அது எதுவும் முடியாமல் அப்படியே படுத்துவிட்டது.

உடனே பல்பீர் இதே சோதனையை 1000 கரப்பான்களுக்கு சோதித்து பார்த்தார். அனைத்தும் முடிவு ஒரே மாதிரி இருந்தது.

பல்பீருக்கு சந்தோசம் தாளவில்லை. ஹ! என் ஆராய்ச்சி வெற்றியடைந்தது. கட்டுரை தயார் என்று கூறி எழுத ஆரம்பித்தார்.

“கரப்பான் பூச்சியின் 4 கால்களையும் வெட்டினால், அது செவிடாகிறது”.

_________________

--------------------------------------------------------------------------------

பல்பீருக்கு 4-வது குழந்தை பிறந்தது. பிறப்பு சான்றிதழை கீழ்க்கண்டவாறு பூர்த்தி செய்தார்.

தாய்: சீக்கியர் தந்தை: சீக்கியர் குழந்தை: சீனர்

அலுவலர்: பெற்றோர் இருவரும் சீக்கியர்களாக இருக்கும் போது குழந்தை எப்படி சீனர் என்று எழுதலாம்?

பல்பீர்: ஹஹா.. செய்தித்தாள் படிக்கிறது இல்லையா? அதில் “பூமியில் பிறக்கும் ஒவ்வொரு 4-வது குழந்தையும் சீனக்குழந்தை”(சீனாவில் பிறக்கிறது) என கூறியுள்ளார்கள்.

_________________

கூட நாளா இந்த ஜோக்கை காணவில்லை என்று யோசித்தனான் மிக்க நன்றி தலை

  • தொடங்கியவர்

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

_________________

நல்ல மனிதன்

அது நீதான்

நல்ல நண்பன்

அதுவும் நீதான்

நல்ல இதயமுள்ளவன்

அட! நீதாம்பா.

நல்ல எண்ணமுள்ளவன்

நீதான்! நீயேதான்

நல்ல அழகானவன்

ஆ! போதும். இதெல்லாம் உனக்கு ரொம்ப அதிகம்.

இந்த தடவை அது நான்தான்.

--------------

சத்தியமாய் சொல்லு

நாம ரெண்டு பேரும் உயிருக்குயிரான நண்பர்கள்தானே

நீ விரல்

நான் நகம்

நீ நீர்

நான் மீன்

நீ நட்சத்திரம்

நான் நிலா

நான் மரம்

நீ குரங்கு, சரியா?

குதிக்கும்போது பாத்துக்குதி.

--------------

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு. :mellow:

_________________

  • தொடங்கியவர்

கூட நாளா இந்த ஜோக்கை காணவில்லை என்று யோசித்தனான் மிக்க நன்றி தலை

--------------------------------------------------------------------------------

பித்துக்குளி போல் ஒருவன் தலையில் வாக்மேன் அணிந்து முடிதிருத்த கடைக்கு வந்தான். முடிதிருத்துவோரிடம் “எனக்கு முடிதிருத்துங்கள் னால் தலையில் உள்ள ஹெட்போனை கழட்ட வேண்டாம்” என்றான். அவரும் அவர் வேலைகளை முடித்துவிட்டார், னால் ஹெட்போனுக்கு கீழே கொஞ்சம் வேலையிருந்தது. அவர் கவனிக்கமாட்டார் என நினைத்து கழட்டினார். அவ்வளவுதான். அந்த மனிதன் கீழே விழுந்து விக்கி நீல நிறமாகி இறந்து போனார்.

முடிதிருத்துபவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதில் அப்படி என்னதான் இருக்கு என அவரும் போட்டு கேட்டார். “மூச்சை உள்ளே இழு, மூச்சை வெளியே விடு, மூச்சை உள்ளே இழு, மூச்சை வெளியே விடு . . . . . .

_________________

--------------------------------------------------------------------------------

பல்பீரும் சாம்சிங்கும் மீன்பிடிக்க போனார்கள். நிறைய மீன் பிடித்து கரை திரும்பினார்கள்.

பல்பீர்: இப்போ போய் இவ்ளோ மீன் பிடிச்சமே இடம் ஞாபகம் இருக்கா?

சாம்சிங்: ஓ!!, படகின் பக்கவாட்டில் X குறி போட்டுவைச்சிருக்கேன்.

பல்பீர்: (படு கோபமாக) முட்டாள். . . . நாளைக்கு இதே படகு கிடைக்குமுன்னு என்ன நிச்சயம்?

_________________

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு. :lol:

_________________

:lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு. :lol:

_________________

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE(வானவில் @ Apr 12 2007, 12:03 AM)

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு.

_________________

சரி ஜம்மு, வில்லு! உங்கள் இல யாரு செந்தில், கவுண்டமணி. :P

  • தொடங்கியவர்

QUOTE(வானவில் @ Apr 12 2007, 12:03 AM)

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு.

_________________

சரி ஜம்மு, வில்லு! உங்கள் இல யாரு செந்தில், கவுண்டமணி. :P

அட என்ன ஜோக்கு இதில எஸ் எம் எஸ் படிக்கிறது நீங்க

செந்தில் கவுண்டமணி நாங்க இல்லை :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே வில்லண்ணே! நம்மை யெல்லாம் நம்மையெல்லாம் ரெம்ப அறிவுஜீவியா நீங்க நினைத்து நம்மளை முட்டாளாக்கிற மாதிரி பகிடி பண்ணிறீங்கண்ணே. நம்பள்ள அரைவாசிப்பேர் முட்டாள்தாண்ணே.

அதுசரி ஜனனியின் செல்போனுக்கும் சிம்காட்டுக்கும் பிளான் போட்டீங்களே வோர்க்அவுட் ஆச்சுதா?

மூண்று எறும்புகள் வரிசையாக போச்சுதாம்.

முன்னால் வந்த எறும்பிட்ட முதல் எறும்பு சொல்லிச்சாம் என் பின்னால் இரு எறும்புகள் வருகின்றன என்று.

இரண்டாம் எறும்பு சொன்னது என் பின்னால் ஒரு எறும்பு வருகுது என்று.

பிறகு மூன்றாம் எறும்பு சொன்னது தன்பின்னால் இரண்டு எறும்புகள் வருகின்றனவென்று!!!

ஏன் அது அப்படிச் சொன்னது என்று யாருக்காவது தெரியுமா? :):lol:

பிறகு வருகிறேனுங்கோ!!! :):(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

எறும்பு தண்ணிக்குள்ள விழுந்தாலே செத்துப்போயிடுமே!! வேறை உதாரணம் தேடி இருக்கலாம்.. இது பொருந்தவில்லை..

மூண்று எறும்புகள் வரிசையாக போச்சுதாம்.

முன்னால் வந்த எறும்பிட்ட முதல் எறும்பு சொல்லிச்சாம் என் பின்னால் இரு எறும்புகள் வருகின்றன என்று.

இரண்டாம் எறும்பு சொன்னது என் பின்னால் ஒரு எறும்பு வருகுது என்று.

பிறகு மூன்றாம் எறும்பு சொன்னது தன்பின்னால் இரண்டு எறும்புகள் வருகின்றனவென்று!!!

ஏன் அது அப்படிச் சொன்னது என்று யாருக்காவது தெரியுமா?

மூன்றாம் எறும்பு பின்புறமா revers ல ஊர்ந்ததா?

  • தொடங்கியவர்

எறும்பு தண்ணிக்குள்ள விழுந்தாலே செத்துப்போயிடுமே!! வேறை உதாரணம் தேடி இருக்கலாம்.. இது பொருந்தவில்லை..

:rolleyes::rolleyes:

மூன்றாம் எறும்பு பின்புறமா revers ல ஊர்ந்ததா?

:P

சரி ஜம்மு, வில்லு! உங்கள் இல யாரு செந்தில், கவுண்டமணி. :P

வாசித்த நீங்க அக்கா

:rolleyes:

மூண்று எறும்புகள் வரிசையாக போச்சுதாம்.

முன்னால் வந்த எறும்பிட்ட முதல் எறும்பு சொல்லிச்சாம் என் பின்னால் இரு எறும்புகள் வருகின்றன என்று.

இரண்டாம் எறும்பு சொன்னது என் பின்னால் ஒரு எறும்பு வருகுது என்று.

பிறகு மூன்றாம் எறும்பு சொன்னது தன்பின்னால் இரண்டு எறும்புகள் வருகின்றனவென்று!!!

ஏன் அது அப்படிச் சொன்னது என்று யாருக்காவது தெரியுமா? :rolleyes::rolleyes:

பிறகு வருகிறேனுங்கோ!!! :rolleyes::lol:

நான் நினைக்கிறேன் அது றோயல்பமிலி எறும்பு போல அது தான் கணக்கு சரியா தெறியவில்லை

:rolleyes:

1) வானவில் -நான் புதுசா ஒரு கவிதை எழுதினான்

ஜன்னி -எதை கொண்டு :D

வானவில் -பேனாவை கொண்டு :P

2) சித்து -கழுதைக்கு பிடித்த ரொட்டி எது?

புத்து -தெரியலியே ?????? :D

சித்து - சுவரொட்டி தான் :P

புத்து -???? :D

சிரிக்கலாம் வாங்கோ

1)கந்தப்பு - இப்படி சிக்கிரட் பிடிக்கிறாய் அழிய போகிறாய் :angry:

சின்னப்பு - இப்படி தான் பிடிக்க வேண்டும்,திரும்பி பிடித்தா நாக்கு சுட்டுவிடும் :P

2) கந்தப்பு - உங்க பொண்ணுக்கு எந்த வாசணை பிடிக்கும் :o

சின்னப்பு - பக்கத்து வீட்டு மணிவாசணை தான் பிடிக்கும் B)

3) யம்மு -ஒரு எறும்பை கட் பண்ணினா என்ன ஆகும் B)

சகி -தெரியலிய :(

யம்மு - கட்டெறும்பு ஆகும் :P

  • தொடங்கியவர்

சேருங்க எல்லோரும் சேருங்க,

சேர்ந்து உங்கள் பதில் சொல்ல முடியாத சந்தேகங்களை இங்கே கேளுங்கள்.

என்னுடைய சந்தேகம்.

இரவில் கொசு கடித்தால் " குட்நைட் " வைக்கலாம்.

பகலில் கொசு கடித்தால் " குட்மார்னிங் " வைக்கமுடியுமா ???

யோசிங்க ! யோசிங்க

  • தொடங்கியவர்

சித்து: சார் எறும்புக்கு பவுடர் வாங்கிட்டு போங்க..

கந்தப்பு: வேணாம்! இன்னைக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, நாளைக்கு அது லிப்ஸ்டிக் கேட்கும்.. ஹ.. ஹ..

-------------

கண்களை மூடுங்கள். உங்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள். குறிப்பாக உங்கள் முகத்தை நினைவில் நிறுத்துங்கள். இப்பொழுது கண்களை திறக்கவும்.

ஒரு பேய் படம் பார்த்த எஃபெக்ட் இருக்குமே!!! :o :P

------------

வானவில் : 1869ல் என்ன நடந்தது?

டண் : எனக்கு தெரியாது சார்.

வானவில்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

டண் : காந்திஜிக்கு நாலு வயசு சார்

----------------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.