Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாது இலங்கைக்கு அமெரிக்கா எடுத்துரைப்பு.

Featured Replies

இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாது இலங்கைக்கு அமெரிக்கா எடுத்துரைப்பு.

இலங்கையில் நிலைமை மோசமான கட்டத்தை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, புலிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என இலங்கைக்குச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து விட முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றது.

கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக்கே இவ்வாறு அமெரிக்கத் தரப்பில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். கொழும்பில் இருந்தவாறு இந்தியச் செய்தி நிறுவனமான ஐ.ஏ.என். எஸ்ஸுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இழுபட்டுவரும் தமிழரின் பிரிவினைக் கோரிக்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு மூலம் முடிவு காணலாம் என்று இலங்கைத் தரப்பில் கருதப்படுவதைத் தாம் ஏற்றுக்கொள்ளவேயில்லை என அமெரிக்கத் தூதுவர் அந்தப் பேட்டியில் குறிப் பிட்டிருக்கின்றார். சிறுபான்மையினரான தமிழர்களின் சட்டரீதியான அபிலாஷைகளை நிறைவு செய்யும் அதிகாரப் பகிர்வு மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான எந்தப் பேச்சுகளுக்கும் அடிப்படையாக அமையமுடியும் என்பதையும் இந்தப் பேட்டியில் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தினார்.

நிலைமை மோசமானதுதான் ஆனாலும் குகையின் அந்தத்தில் ஒளிக்கீற்று இருக்கவே இருக்கிறது. என்றார் அவர்.

சிங்களப் பெரும்பான்மையினரைக் கொண்ட தென்னிலங்கை இராணுவத் தீர்வு சாத்தியம் என உணர்கிறது. நாம் அதனுடன் உடன்படவில்லை. தமிழ் சமூகத்தின் ஆதங்கங்களைக் கவனத்தில் கொள்ளும் சமாந்தர அரசியல் தந்திரோபாயம் இல்லாமல் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது.

சமாந்தர அரசியல் தந்திரோபாயத் திட்டமில்லாமல் இராணுவத் தீர்வு சாத்தியமாகும் என நான் நம்பவில்லை. பயங்கரவாத முறைகளைப் பயன்படுத்தித் தாக்குவதில் புலிகளுக்கு குறிப்பிடத்தக்க வலிமை உண்டு. அதை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. இராணுவத் தந்திரோபாயத் துக்காக நாம் ஒரு விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என நான் நினைக்கிறேன். நம்பகத் தன்மையுடைய நடவடிக்கையுடன் வருவதுதான் முக்கியமானது என்பதே எமது கருத்து.

இராணுவத் தந்திரோபாய வழிகளை இலங்கை இராணுவம் நாடினாலும், இலங்கை சமாதானத்தில் பற்றுறுதி கொண்டுள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். அதேசமயம், பேச்சு மூலமான தீர்வில் புலி களின் நிலைப்பாடு சந்தேகத்துக்குரியதே.

இலங்கை அரசு சமாதானத்தில் திட சங்கற்பம் பூண்டுள்ளது. நான் இலங்கை ஜனாதிபதியுடனும் அரசின் மூத்த அமைச்சர்களுடனும் உரையாடும் ஒவ்வொரு சமயத்திலும் தாங்கள் அமைதித் தீர்வில் பற்றுறுதி கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் எனக்கு உறுதிப்படுத்தத் தவறுவதேயில்லை. அவர்களை சந்தேகிப்பதற்கு எனக்குக் காரணம் ஏதுமில்லை.

இராணுவம் இராணுவத் தீர்வையே நம்புகின்றது. ஆனாலும், அமைதி வழித் தீர்வை நாடுவதே அரசின் கொள்கையாக உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு தீர்வு யோசனை இல்லாமல் போவதற்கு எதுவுமேயில்லை.

புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் சமாதானத்தில் பற்றுறுதி உடையவர்களா என்பதை என்னால் கூறமுடியாது. அமைதி வாய்ப்பைப் பயன்படுத்துவதில் அவர்கள் ஆக இருந்தார்கள் என்று கடந்த இருபது வருட சரித்திரம் எமக்குக் காட்டவில்லை. நல்லெண்ணத்துடன் பேசித் தீர்க்க அவர்கள் தயாரா என்பதைக் காண்பதற்காக அரசு அவர்களுக்கு மிக விரைவில் சந்தர்ப்பம் ஒன்றை வழங்க வேண்டியிருக்கும்.

கடந்த வருடம் முதல் மனித உரிமைகள் நிலையும் மோசமடைந்து வருகிறது. அதனால் யுத்தத்தை நிறுத்தி பேச்சுமூல மான தீர்வுக்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.அதிகாரப் பகிர்வு யோசனை ஒன்றை உருவாக்கும் நோக்குடன் பெரும்பாலும் எல்லாக்கட்சிகளினதும் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டவை. அமைதியை எட்டுவதற்கான நல்லதொரு வாய்ப்பைத் தந்திருப்பதாக அமெரிக்கா கருதுகின்றது.

அப்படி எட்டப்படும் யோசனை நம்பகத்தன்மையுடையதாகவும் குறிப்பாகத் தமிழ் மக்களினதும் அதேவேளை ஏனைய சமூகங்களினதும் சட்டரீதியான அபிலாஷைகளை நிறைவு செய்வதாகவும் அமையும் என நாங்கள் அதிகளவில் நம்புகிறோம். அந்த யோசனை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்கு ஓர் அடிப்படையாக அமைய முடியும்.

அரசுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது என்பதே மிக முக்கியமானது. ஆகவே அது பயனுள்ள தீர்வோடு வரவேண்டும். அரசுக்கு நாடாளுமன்றில் பலம் உண்டு. நம்பகமான ஒரு தீர்வுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. கவின் ஆதரவும் உண்டு என்பதற்கு பலமான ஆதாரங்கள் உண்டு. அதுதான் மிக மிக முன்னேற்றகர மான அடியாகும்.

ஜெனிவாப் பேச்சு குழப்பத்தில் முடிந் தது. கடைசி ஜெனிவாப் பேச்சில் அமைதிக்கு இணங்கிவராத புலிகளின் போக்கால் மோசமான விளைவுகள் ஏற்பட்டமையை நாம் காணலாம். எனவே, மீண்டும் பேச்சு மேசைக்கு இருதரப்பும் செல்லுமானால் பலமான ஊக்குவிப்பு அவற்றுக்குக்கிட்டும் என நாம் நம்புகிறோம்.

எதிர்காலத்தில், என்ன நடந்தாலும், புலிகளின் நாடு ஒன்றை அமெரிக்கா ஆதரிக்கும் என்று மட்டும் எவரும் கற்பனை செய்யக்கூடாது. புலிகள் தொடர்பாக அமெரிக்கா இறுக்கமான போக்கையே எடுத்துள்ளது என்றார் தூதுவர் பிளேக்.

இலங்கை விடயத்தில் இந்தியா இன்னும் அதிக ஈடுபாட்டை அல்லது பங்க ளிப்பைக்காட்டும் போக்கை வெளிப்படுத்தவேண்டுமா ? என்று கேட்டதற்கு அந்தக் கேள்வியில் உள்ள அர்த்தத்துக்குத் தம்மால் ஒத்துப்போக முடியவில்லை என்று பதிலளித்தார் தூதுவர்.

ஏற்கனவே இந்தியா அதிக ஈடுபாட் டுப் பங்களிப்பையே வெளிப்படுத்தி வருகின்றது. அதுவே முக்கிய பங்காளிதான். இலங்கை விடயத்தில் அமெரிக்கா தனது இந்திய நண்பர்களுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுகிறது. நிலைமை பற்றிய எமது மதிப்பீடுகளிலும் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய எமது கணிப்பீடுகளிலும் வேறுபாடு எதையும் நாம் காணவில்லை. நாங்கள் தொடர்ந்து இந்தியாவுடன் ஒத்துழைப்போம். என் றும் பதிலளித்தார் அவர்.

-Uthayan-

Edited by யாழ்வினோ

உதயன் தன்னையும் ஏமாற்றி மக்களின் தலையில் மிளகாய் அரைக்குது அல்லது வடிவா மொழிபெயர்க்க முடியவில்லை

மப்பிள்ளை இணைத்த செய்தியை வாசிக்கவும்

The LTTE cannot be defeated militarily without a parallel political strategy to address the grievances of the Tamil community... 'I don't think a military solution is possible without a parallel political strategy.

சமாதானத்துடனான யுத்தத்துக்கு அமெரிக்கா ஆதரவு நல்கிரது

மூலத்துக்கு-http://story.malaysiasun.com/index.php/ct/...id/230256/cs/1/

மாப்பு ஒட்டியதற்கு-http://www.yarl.com/forum3/index.php?showtopic=19594

  • தொடங்கியவர்

உதயனின் மொழிபெயர்ப்பில் என்ன தவறு இருக்கின்றது?? மற்றைய பத்திரிகைகளை குறை கூறுவது போல் உதயனையும் குறை கூற வேண்டாம். :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ நல்லதாக நடந்து முடியும் என்று நம்புவோம்.

உதயனின் மொழிபெயர்ப்பில் என்ன தவறு இருக்கின்றது?? மற்றைய பத்திரிகைகளை குறை கூறுவது போல் உதயனையும் குறை கூற வேண்டாம். :angry:

மூலத்தை நான் கொடுத்த இணைப்பில் வாசியுங்கள் அதில் புலிகளை தோற்கடிக்க யுத்தத்துடனான அரசியல் செயற்பாடே சரியென கூறி இருக்கிறார்கள் அதை யுத்தம் தீர்வல்ல எண்டால் என்னத்தை சொல்லுவ்வது முழுபிழைதானே.அமெரிக்கா காரன் எங்களுக்கு மிளகாய் அரைக்க அதனை கொண்டு வந்து எங்கட தலையில் அரைகுது உதயன் என்னதான் சேவை மப்பான்மை உடைய பத்திரிகை எண்டாலும் மூலத்தில் பிழைவிடுவது சரியல்ல

இலங்கை அரசு சமாதானத்தில் திட சங்கற்பம் பூண்டுள்ளது. நான் இலங்கை ஜனாதிபதியுடனும் அரசின் மூத்த அமைச்சர்களுடனும் உரையாடும் ஒவ்வொரு சமயத்திலும் தாங்கள் அமைதித் தீர்வில் பற்றுறுதி கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் எனக்கு உறுதிப்படுத்தத் தவறுவதேயில்லை. அவர்களை சந்தேகிப்பதற்கு எனக்குக் காரணம் ஏதுமில்லை.

இராணுவம் இராணுவத் தீர்வையே நம்புகின்றது. ஆனாலும், அமைதி வழித் தீர்வை நாடுவதே அரசின் கொள்கையாக உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு தீர்வு யோசனை இல்லாமல் போவதற்கு எதுவுமேயில்லை.

புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் சமாதானத்தில் பற்றுறுதி உடையவர்களா என்பதை என்னால் கூறமுடியாது. அமைதி வாய்ப்பைப் பயன்படுத்துவதில் அவர்கள் ஆக இருந்தார்கள் என்று கடந்த இருபது வருட சரித்திரம் எமக்குக் காட்டவில்லை. நல்லெண்ணத்துடன் பேசித் தீர்க்க அவர்கள் தயாரா என்பதைக் காண்பதற்காக அரசு அவர்களுக்கு மிக விரைவில் சந்தர்ப்பம் ஒன்றை வழங்க வேண்டியிருக்கும்.

அமெரிக்கா கடந்த 20 வருட சரித்திரத்தைப் பார்க்கிறது எங்களிடம் சிங்களவன் 50 வருடத்துக்கும் மேலாக ஏமாற்றிய சரித்திரம் இருக்கிறது. அதுமட்டுமல்ல இலங்கை விடயத்தில் ஊகம் தெரிவிக்கும் அமெரிக்கா முதலில் ஈராக் விடயத்தில் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்துக்கு என்ன பதில் சொல்கிறது. அங்கு இராணுவ நடவடிக்கை வெற்றியடையுமா? அல்லது இராணுவ நடவடிக்கைகள் அங்கு பயன்படுத்தப் படுவதன் காரணம் தீர்வை எட்டுவதற்கல்ல நாட்டைச் சின்னாபின்னப்படுத்திச் சிதைப்பதற்காகவா?

உதயன் தன்னையும் ஏமாற்றி மக்களின் தலையில் மிளகாய் அரைக்குது அல்லது வடிவா மொழிபெயர்க்க முடியவில்லை

மப்பிள்ளை இணைத்த செய்தியை வாசிக்கவும்

சமாதானத்துடனான யுத்தத்துக்கு அமெரிக்கா ஆதரவு நல்கிரது

மூலத்துக்கு-http://story.malaysiasun.com/index.php/ct/...id/230256/cs/1/

மாப்பு ஒட்டியதற்கு-http://www.yarl.com/forum3/index.php?showtopic=19594

மக்ஸிமஸ் உங்கள் கருத்திற்கு நன்றி. இதே கருத்தை நான் எழுத வருமுன் நீங்கள் முந்தி விட்டீர்கள். அதாவது இதன் தலைப்பு இவ்வாறுதான் போடப்பட்டிருக்க வேண்டும்!

சமாதானம் என்ற போர்வையில் போரை செய்யவேண்டும் என பகிரங்கமாகக் கூறும் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19594

அமெரிக்க தூதுவர் சொன்னது பற்றிய உதயினின் கண்ணோட்டத்தில் தவறு என்று சொல்ல முடியாது. உதயன் தாயகத்திலுள்ள மக்களிற்காக இயங்குவது.

இங்கு அமெரிக்கு தூதுவர் சொல்ல வருவது புலிகளை இராணுவரீதியில் பலவீனப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டபடி அரசியல் தீர்வு என்று ஏதோ ஒன்றை தயாரித்து திணித்து மேடையேற்ற வேண்டும் என்று. அதாவது ஈராக்கில் constitution தயாரித்து தேர்தல் நடத்தி அரசாங்கம் அமைத்து வெளியுலகிற்கு காட்டியபடி தமது வளச்சுறண்டல்களை செய்ய முயற்சி செய்த மாதிரி.

இலங்கையில் ஒரு இனப்பிரச்சனை இருக்கிறது என்பதை சர்வதேசம் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு தீர்வு திட்டம் என்று ஒன்றை மேடையேற்றியபடி தனது நலன்களிற்காக எப்படி என்ன செய்யலாம் என்பதில் அவர்கள் இன்று குறியாக இருக்கிறார்கள். இதற்கு ஒரு தடை எதற்கும் விலைபோகாத உறுதியான தமிழ்த் தேசிய தலமை. தனது பேரம் பேசல்களிற்கு அவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கத்தான் சிறீலங்காவின் இராணுவ நடவடிக்கைகளிற்கு ஆதரவு தருவதாக காட்டிக் கொள்கிறது அமெரிக்கா.

இந்த (சர்வதேசம் தமிழர் தரப்பு மீது அழுத்தங்களை பிரயோகிக்க விரும்பும்) சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள இனவாதம் தமிழரின் இருப்பை உரிமைகளை இலங்கைத் தீவில் முடிந்தளவு குறைத்து ஓரம்கட்ட முயற்சிக்கிறது. தமிழீழத் தனியரசின் இருப்பிற்கு தேவையான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தமது பிடிக்குள் கொண்டு வந்து அவற்றை தமிழர் தரப்பு மீட்க முயற்சிக்கும் பொழுது அது ஒரு சர்வதேச பொருளாதார இராணு வலைப்பின்னலில் மாட்டுப்பட்டிருக்கும் நிலையை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

மேலும் சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலம் அதை ஒரு மனிதாபிமான பிரச்சனையாக பிரச்சாரப் படுத்தலாம். இஸ்ரேல் 2005 இல் தனது குடியேற்றங்களை அகற்றிய பொழுது எவ்வாறு மேற்குல ஊடகங்கள் அதை ஒரு மனிதாபிமான அவலமாக பல நாட்களாக படங்காட்டினார்களோ அவ்வாறு ஒரு நாடகத்தை நடத்தலாம்.

இந்தியா இலங்கைக்கு வழங்கும் 2 ஆவது ஆழ்கடல் ரோந்து-கண்காணிப்பு கப்பலும் சொல்வது தமிழர் தாயகம் மீதான இறுக்கமான பொருளாதார தடைக்கு எதிரிகளும் அவர்களிற்கு ஆலோசனை வழங்குபவர்களும் தயாராகிறார்கள் என்பதை. தமிழர் தாயகப் பகுதிகளிற்கு வெளியிலிருந்து வழங்கல்கள் வருவதை தடுப்பதற்குரிய blockade இறுக்கமாக அமுல்படுத்த அதை ஆழ்கடலிற்கு விரித்தி செய்கிறார்கள். தற்போது போன்று அதிவேக தாக்குதல் படகுகளினால் தொடர் ரோந்து செய்வது தவறான முறை என்பதை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

தினமும் ஈராக்கில் 100 ஈராக்கியர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருக்கும் அமெரிக்க அரசு தமிழீழத்தையும் இவ்வாறு சுடுகாடாக்குவதற்கு அஞ்சமாட்டாது!

இங்கு கவனிக்கப்பட வேண்டிய பகுதி.

Asked if India needed to play a more pro-active role, Blake said he disagreed with the surmise of the question.

'India is already playing a very active role and is a major if not the pre-eminent player in Sri Lanka. The US cooperates very closely with our Indian friends on the situation in Sri Lanka. I don't see any difference in our analysis of the situation or what needs to be done. We will continue our cooperation with India.'

இந்தியவை விட அமெரிக்காவின் ஆர்வம் ஈடுபாடும் அதிகரிக்கும்.

இந்தியாவின் ஈடுபாடு எந்த திசையில் போக வேண்டும் என்பதை முற்றிலும் தீர்மானிக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் எந்த திசையில் போகக் கூடாது என்பதற்குரிய அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடிய அளவிற்காவது தமிழ்நாடு இருக்கும் என்று நம்பலாம். இது ஆதிக்க சக்த்திகளின் நிகழ்ச்சி நிரல்களிற்கு ஏற்புடையது அல்ல.

எனவே வெளிப்பார்வைக்கு இந்தியா தான் பிராந்திய வல்லரசு அது தான் முக்கிய பங்களிக்கிறது என்ற மாயயை வைத்துக் கொள்ள விரும்பினாலும் இந்தியா தற்போது காட்டும் ஈடுபாட்டிற்கு அப்பால் மேலும் இதற்குள் தலையிட விரும்பாது. சீன இந்த இடவெளியை இட்டு நிரப்பாது இருப்பதற்குரிய பங்களிப்புகளை அமெரிக்கா பார்த்துக் கொள்ளும். இதில் இந்தியாவிற்கு ஆட்சேபனை இருக்கப் போவதில்லை. அவர்களிருவரும் சீனாவிற்கு எதிரான strategic partners.

இந்த இராஜதந்திரத்தை சிங்களவன் உச்சமாக பயன்படுத்துகிறான் தொடர்ந்து பயன்படுத்துவான்.

இதன் அர்த்தம் தமிழ்நாட்டின் எழுச்சி தொடர்வதும் ஆழமாகப் பலப்படுத்தப்படுவதும் முக்கியம். மற்றும் படி அமெரிக்காவின் ஈடுபாடுகளில் அழுத்தங்கள் தாக்கங்களை ஏற்படுத்த எம்மிடம் நெம்புகோல்கள் இல்லை. உலக அரங்கில் சிலமாற்றங்கள் சாதகமான சூழ்நிலைகள் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான் ஒரே வழி. அதுவரை போராட்டம் தக்கவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அது தான் இன்றுள்ள முக்கியமான சவால். சிங்கள இனவாதம் இந்த சந்தர்ப்பத்தை உச்சமாக பயன்படுத்தாது இருக்க சில தற்காப்பு நகர்வுகளை செய்ய வேண்டி இருக்கும்.

அமெரிக்காவுக்கு ஐரோப்பாவில் பல நாடுகள், மத்தியகிழக்கு , பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோநேசியா, வரிசையில் இலங்கையில் ஒருதளம் வேண்டும். அதுதான் அதன் வல்லரசு நிலைப்பாட்டுக்கு சரியாக இருக்கும் எண்று நின்னைக்கிறேன்... அதன் வியாபாரங்களுக்கும் கூட அது அதிகம் பயன் படும்...

தமிழர்கள் சுயாட்ச்சி பெற்றால் அது சாத்தியமானது இல்லை என்பதில் அமெரிக்காவுக்கு சந்தேகமே இல்லை... அதனால்த்தான் ஏகபோக ஆதரவை இலங்கை அரசுக்கு வாழங்குகிறது...

இந்தியாவுடன் கூட்டு நிலைப்பாட்டை எடுத்து இருப்பின், இலங்கையில் தன் கைப்பொம்மை பாக்கிஸ்தான் தலையீட்டை அமெரிகா தடுத்து நல்லெண்ணத்தை வளர்த்து இருக்கும்... இந்தியாவின் பிராந்திய நலன்களை காப்பதில் அமெரிக்கா கைகொடுப்பதாய் எந்த தகவல்களும் வருவதில்லை...

Edited by Thala

தமிழர்கள் சுயாட்ச்சி பெற்றால் அது சாத்தியமானது இல்லை என்பதில் அமெரிக்காவுக்கு சந்தேகமே இல்லை...

என்பதை சற்றே விளக்குவீர்களா?

புலிகள் ஒடுக்கப்பட்டால் பிரச்சனையே இல்லாத தீவில் எப்படி அமெரிக்கா காலூண்டி நிற்க முடியும்?

என்பதை சற்றே விளக்குவீர்களா?

புலிகள் ஒடுக்கப்பட்டால் பிரச்சனையே இல்லாத தீவில் எப்படி அமெரிக்கா காலூண்டி நிற்க முடியும்?

ஏன் முடியாது..??? இண்று Voice of America மட்டக்களப்பில் இருந்து இயங்க முடியும் எண்றால் ( அங்கிருந்து தென்னாசிய தொடர்பாடல்களை ஒட்டு கேட்க்கிறார்கள் எண்டாலும்) வடபகுதியில் விமான நிலயங்களை திருத்த இண்றும் இந்தியா வரவேண்டி இருக்கிறது ஏன்...? புலிகள் பலமாக இருக்கும் இடத்தில் அமெரிக்கா நேரடியாக தலை போடுவதில்லை... அதுக்கு காரணம் புலிகளின் இந்தியா மீதான நெகிழ்வு போக்கு... பாரம்பரிய ரீதியான தொடர்புகள்...!

புல்மோட்டையில் இல்மனைட் ஏற்றிய "சீன" கப்பல் தாக்கப்பட்டது ஆனால் சீனன் குடாவுக்கு வரும் இந்திய கப்பல்கள் தாக்கப்படுவதில்லை...

சுனாமியின் போதும் அமெரிக்க கப்பல்கள் அம்பாறைக்கு வரும் என்னும் முன்னர் இந்திய கப்பல் தென் தமிழீழத்தில் நிக்கின்றது... இங்கு இந்திய கப்பல் தமிழர்களை காரணம் காட்டி கொண்டு வரப்பட்டது...

மேலே இருப்பதை தகவலாக வைத்து கொள்ளுங்கள்...

அமெரிக்கர்கள் இலங்கைக்கு உளவு தகவல்கள், ஆயுதங்கள் திட்டமிடல்கள், படையியல் பயிற்ச்சிகள் கொடுக்கிறார்கள்... ஆனாலும் பணம் வாங்குவதில்லையாம்... அப்படியானால் என்ன அர்த்தம் எண்றால் சிங்களவர்கள் அமெரிக்க இராணுவமாக செயற்படுகின்றார்கள்... நேரடியாக அமெரிக்காவில் இருந்து படை எண்டு இன்னும் யாரும் வரவில்லை... விசயம் அப்படி இருக்கும்போது பொருளாதாரத்தை பெருக்க அமெரிக்கா தரும் சன்மானத்துக்கும் நிரந்தர பாதுகாப்புக்காயும் சிங்களவர் ஒப்பந்தம் ஒண்றை போட மாட்டார்கள்,என்கிறீர்களா...???

பிரச்சினை உள்ள நாடுகளில் மட்டும்தான் அமெரிக்கா தன் படைகளை நிறுத்தி வைத்து இருகின்றதா...??

Edited by Thala

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[

பிரச்சினை உள்ள நாடுகளில் மட்டும்தான் அமெரிக்கா தன் படைகளை நிறுத்தி வைத்து இருகின்றதா...??

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாது இலங்கைக்கு அமெரிக்கா எடுத்துரைப்பு.

இந்த தலைப்பில் எந்த சந்தேகமுமில்லை, இந்த உண்மையை பல வருடங்களின் முன்பே அமெரிக்கா அறிந்திருந்ததினால் தான் ஸ்ரீலங்காவுக்கு உதவ முண்டியடித்துக்கொண்டிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.