Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மயிலிட்டித்துறை மக்களிடம் கையளிப்பு

Featured Replies

மயி­லிட்­டித்­துறை மக்­க­ளி­டம் கையளிப்பு

 
மயி­லிட்­டித்­துறை மக்­க­ளி­டம் கையளிப்பு
 

27 ஆண்­டு­க­ளா­கப் பாது­காப்­புத் தரப்­பின் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்து வந்த மயி­லிட்­டித் துறை­மு­கம் மக்­க­ளி­டம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.

j/249 பிரதேச செயலர் பிரிவில் 54 ஏக்கர்  நிலப் பரப்பு மக்­கள் பாவ­னைக்கு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

 

unnamed-1-7.jpg

unnamed-2-7.jpg

 

unnamed-3-6.jpg

unnamed-4-5.jpg

unnamed-16.jpg

http://uthayandaily.com/story/9081.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மயி­லிட்­டித்­துறை நிலப்பரப்பு மக்­க­ளி­டம் கையளிப்பு

மயி­லிட்­டித்­துறை நிலப்பரப்பு மக்­க­ளி­டம் கையளிப்பு

 

27 ஆண்­டு­க­ளா­கப் பாது­காப்­புத் தரப்­பின் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்து வந்த மயி­லிட்­டித் துறை­மு­கம் மக்­க­ளி­டம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட இரா­ணு­வத் தள­பதி, மாவட்­டச் செய­ல­ரி­டம் காணி விடு­விக்­கப்­ப­டு­வ­தற்­கான பத்­தி­ரத்தை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மயிலிட்டி அம்மன் கோவிலை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டும், கற்பூரம் ஏற்றிக் கும்பிட்டும் வருகிறார்கள்.

j/249 பிரதேச செயலர் பிரிவில் 54 ஏக்கர்  நிலப் பரப்பு மக்­கள் பாவ­னைக்கு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

19598695_2077285038965748_8199845252206725346_n.jpg

19601404_2077280265632892_7867000128892264468_n.jpg

19601574_2077280188966233_5566539170488197104_n.jpg

19642503_2077283905632528_5512498500164258203_n.jpg

19665137_2077280442299541_5352184025723187454_n.jpg

19702260_2077280082299577_4571392260413633070_n.jpg

19702528_2077280318966220_998776654375605_n.jpg

19731995_2077282415632677_6287963608207481164_n.jpg

19748500_2077279928966259_4102934703984514115_n.jpg

19756415_2077280015632917_8007103405704383478_n.jpg

http://uthayandaily.com/story/9081.html

  • தொடங்கியவர்

மயிலிட்டி துறைமுகம் அதனுடன் இணைந்த 54 ஏக்கர் காணியும், 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டன: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

 

m3.jpg

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதியில் 54 ஏக்கர் நிலப்பரப்பு யாழ்.பாதுகாப்பு தலைமையகத்தினால் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ள குறித்த காணிகள் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்தப் பிரதேசத்தில் சுமார் 50 குடும்பங்கள் மீளக் குடியமரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மயிலிட்டி துறைமுகம் அதனுடன் இணைந்த 54 ஏக்கர் காணி 27 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளன. இந்த வகையில் துறைமுகம் அதனை அண்டிய 54ஏக்கர் நிலப்பரப்பின் பத்திரம் யாழ்ப்பாணம் இராணுவ கட்டளை தளபதி ஹெட்டியாராச்சியால் யாழ்ப்பாண அரச அதிபர் என்.வேதநாயகம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

m8.jpgm7.jpgm6.jpgm5.jpgm4.jpg

 

https://globaltamilnews.net/archives/31623

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தமிழரசுக்கட்சி தான் காரண்மென நினைக்க வேண்டாம் சுத்து மாத்து சும்மா கம்பு சுத்த போயிருக்குறார் விளங்கி கொள்ளவும்  அப்ப ஏன் கோப்பா பிலவுக்கு போகல என்ற கேள்வி கனபேரின் மனதில் நிற்குணுமே அரசு ஏற்கனவே  விடுவிக்க தீர்மானித்த  காணிகள் இன்னும் நிறைய இருக்கு  அதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று கூறி 

அரசுக்கு நன்றி சொல்ல வேணும் இதற்கு அப்படி  எந்த உந்துதலும் கொடுக்க வில்லை எந்தக்கட்சியும் 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தமிரசுக் கட்சியும்
முக்கிய காரணம்

இந்த நல்லிணக்க 
அரசு பதவிக்கு வராமல்
மகிந்த அரசு மீண்டும்
பதவிக்கு வந்திருந்தால்
இந்த நிலங்கள் கண்டிப்பாக
விடுவிக்கப்பட்டு இருக்காது

இது அந்த சனங்களுக்கு
நல்லா தெரியும்

27 வருடங்களாக
அகதி வாழ்வு வாழ்ந்த 
அந்த மக்களின் துயரங்கள்
இனியாவது குறையட்டும்

அரசு தன் பங்கை செய்து 
விட்டது
இம் மக்களுக்காக
மயிலிட்டிக்காக
புலம்பெயர் நாட்டு
ஊர்ச் சங்கங்கள்
அமைப்புகள் 
கொஞ்சம் நல்லது
செய்ய தொடங்கட்டும்

  • தொடங்கியவர்

மக்கள் மகிழ்ச்சியில் ; இராணுவத்தினரிடமிருந்து 27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் விடுவிப்பு 

Published by Priyatharshan on 2017-07-03 15:43:25

 

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

mayility.jpg

அந்தவகையில், யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட மயிலிட்டி துறை வடக்கு ஜே. 251 கிராமசேவகர் பிரிவில் 54 ஏக்கர்  மக்களுக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.

mayiliti2.jpg

குறித்த காணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, யாழ்.மாவட்டச்  செயலரிடம்  இன்று காலை உத்தியோகபூர்வமாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

mayilitti.jpg

mayilitti1.jpg

mayilitti2.jpg

mayility2.jpg

 

 

Tags

http://www.virakesari.lk/article/21453

  • தொடங்கியவர்

மயிலிட்டி நில விடுவிப்பு நிகழ்வில் எம்.ஏ.சுமந்திரன், நா.வேதநாயகன் உரை – காணொலி

 

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

 

யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நா.வேதநாயகன்.

http://newuthayan.com/story/9225.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.மக்கள் மகிழ்ச்சி அடைவது மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்

மயிலிட்டியின் மீட்பு சிறப்பான வெற்றி!

 
 
 

கிட்டத்­தட்ட 27 வருட காலத் தவம் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது. இனி­யொ­ரு­போ­தும் மீட்­கவே முடி­யாதோ என்று அச்­சப்­பட்ட நிலம் ஒரு­வாறு மீண்­டும் மக்­க­ளின் கைக­ளுக்­குத் திரும்பி வந்­துள்­ளது.

தமி­ழர்­க­ளின் அர­சி­ய­லில் அண்­மைக் காலத்­தில் அடைந்­தி­ருக்­கக்­கூ­டிய மிகப் பெறு­ம­தி­மிக்க அடைவு இது. தற்­போ­தைய அர­சி­யல் சூழ­லில் அதன் அர­சி­யல் பெறு­மதி உண­ரப்­பட்­டி­ருக்­கி­றதா என்­பது கேள்­விக்­கு­ரி­ய­து­தான்.

1990ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி மயி­லிட்­டித் துறைப் பகு­தி­யி­லி­ருந்து மக்­கள் வெளி­யே­றி­னார்­கள். பலாலி தரைப் படைத் தளத்­தி­லி­ருந்து படை­யி­னர் கடும் எறி­க­ணைத் தாக்­கு­த­லு­டன் முன்­னே­றத் தொடங்­கி­யதை அடுத்து மக்­க­ளும் கையில் கிடைத்தவற்றுடன் உயி­ரைக் கையில் பிடித்­த­படி ஓடி­னார்­கள்.

சில நாள்­க­ளில் படை­யி­னர் தமது முகாம்­க­ளுக்­குத் திரும்பி விடு­வர் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே போட்­டது போட்­ட­படி விட்­டு­விட்­டுப் புறப்­பட்­டார்­கள் அந்த மக்­கள். ஏனெ­னில் அது­வ­ரை­யான விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் தரைப் படை­யி­னர் தமது முகாம்­க­ளில் இருந்து முன்­னே­றி­வந்து தாக்­கு­வ­தும் திரும்­பிப் போவ­து­மான போர் உத்­தி­யைத்­தான் பயன்­ப­டுத்தி வந்­தார்­கள்.

ஆனால் எதிர்­பார்ப்­பு­களை எல்­லாம் பொய்ப்­பித்­துத் தாம் பிடித்த நிலத்தை நிரந்­த­ர­மா­கத் தக்க வைத்­துக்­கொண்­ட­னர் படை­யி­னர். விடு­த­லைப் போராட்­டத்துக்குப் பின்­ன­ரான காலத்­தில் தமி­ழர்­க­ளின் நிலம் நிரந்­த­ர­மாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட முதல் சந்­தர்ப்­ப­மாக அது அமைந்­தது. அந்­தத் துறைக்கு மீள, மக்­கள் 27 வரு­டங்­கள் கடும் தவம் இருக்க வேண்­டி­யி­ருந்­தது.

மயி­லிட்­டி­யில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­கள் மல்­லா­கத்­தில் இடைத் தங்­கல் முகாம்­க­ளில் அமர்த்­தப்­பட்­ட­னர். கணி­ச­மா­னோர் வட­ம­ராட்சிப் பகு­திக்­குச் சென்­றார்­கள். போர்க் காலத்­தி­லும் போரின் பின்­ன­ரான காலத்­தி­லும் உள்­ளு­ரில் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளின் குறி­யீ­டாக நீண்ட கால­மா­கத் திகழ்ந்­த­வர்­கள் இந்த மக்­கள்.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹுசைன், பிரிட்­ட­னின் தலைமை அமைச்­ச­ராக இருந்­த­வ­ரான டேவிட் கெம­ரூன் ஆகிய தலை­வர்­கள்­கூட இந்த முகாம்­க­ளுக்கு வந்து இங்­குள்ள மக்­களை நேரில் சந்­தித்து அவர்­க­ளின் மீள்­கு­டி­யேற்­றம் குறித்து வலி­யு­றுத்­தும் அள­வுக்கு இவர்­க­ளின் பிரச்­சினை உல­க­ம­யப்­பட்­டி­ருந்­தது.

பன்­னாட்டு அழுத்­தங்­கள், போராட்­டங்­கள் என்று எல்­லா­வற்­றுக்­கும் மத்­தி­யி­லும் மயி­லிட்­டி­யைப் படை­யி­னர் விடு­விப்பார்­கள் என்று சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் எவருமே நம்­பி­ய­தில்லை. நம்­பு­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளும் இருந்­த­தில்லை.

ஒரு சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் வரை மயி­லிட்டி மக்­க­ளுக்­கே­கூட அந்த நம்­பிக்கை வலு­வாக இருந்­தது என்று சொல்ல முடி­யாது. தமது இடத்­திற்கு எப்­ப­டி­யா­வது போக­வேண்­டும் என்று அவர்­கள் விரும்­பி­னார்­கள். அதற்­காக அவர்­கள் தம்மை ஒறுத்­துத் தவம் கிடந்­தார்­கள். ஆனால் நம்­பிக்கை மிகச் சிறி­தா­கவே இருந்­தது.

‘‘மயி­லிட்­டியை அண்­டிய பகுதி வரைக்­கும் விடு­வார்­கள். ஆனால் மயி­லிட்­டியை விட­மாட்டார்கள் போலத்­தான் கிடக்­கி­றது’’ என்று சொன்­ன­வர்­கள் பலரை கடந்த காலங்­க­ளில் பார்க்க முடிந்­தி­ருக்­கி­றது. இன்று அந்த மண்­ணில் கால் பதித்து மக்­க­ளால் ஆடிப் பாட முடிந்­தி­ருக்­ கி­றது. ஆனந்­தக்­கூத்­தாட முடிந்­தி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்த ஒரு அர­சி­யல் முடிவே இத­னைச் சாத்­தி­ய­மாக்­கி­யது என்­ப­தில் எந்­தச் சந்­தே­க­மும் இல்லை. அரசியல் இராஜ தந்திர வெற்றி என்று கூட்டமைப்பு உரிமை கோரினால் இந்த விடயத்தில் அது முற்றிலும் பொருத் தமே என்பதை அதன் அரசியல் எதிரிகளும் ஏற்றுக் கொள்வர்.

கூட்­ட­மைப்பு மீதும் அதன் தலை­வர்­கள் மீதும் பல்­வேறு விமர்­ச­னங்­கள் இருந்­தா­லும் இந்த ஒன்­றுக்­கா­கவே அவர்­க­ளைப் பாராட்­ட­லாம். மைத்­திரி, ரணில் அர­சு­டன் இணைந்த அர­சி­யல் பய­ணத்­தில் கூட்­ட­மைப்பு இது­வ­ரை­யில் எட்­டிய மிகப் பெரிய அடைவு என்று மயி­லிட்­டி­ விடுவிப்பைத் துணிந்து கூற­லாம்.

கடந்த காலங்களில் இணக்க அரசியலாலும் மீட்க முடிந்திராத நிலத்தை மீட்டெடுத்தது உண்மையில் பெரிய அடைவுதான். கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிவரும் தனது அரசியல் பாதையில் நம்பிக்கையுடன் முன்னேற இரா.சம்பந்தருக்கு இது தெம்மையும் உத்வேகத்தையும் அளிக்கும் என நம் பலாம்!

http://uthayandaily.com/story/9378.html

2 hours ago, நவீனன் said:

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்த ஒரு அர­சி­யல் முடிவே இத­னைச் சாத்­தி­ய­மாக்­கி­யது என்­ப­தில் எந்­தச் சந்­தே­க­மும் இல்லை. அரசியல் இராஜ தந்திர வெற்றி என்று கூட்டமைப்பு உரிமை கோரினால் இந்த விடயத்தில் அது முற்றிலும் பொருத் தமே என்பதை அதன் அரசியல் எதிரிகளும் ஏற்றுக் கொள்வர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் தொடர்ச்சியாக கையளித்த அறிக்கைகளின் பலனாக ஏற்பட்ட அழுத்தங்களின் விளைவாக ஆக்கிரமிப்பில் மேலுமொரு சிறுபகுதி விடப்பட்டுள்ளது!

அரசின் எடுபிடிகளாக இருப்பதால் மேடையில் இருக்கும் தமிழரசுக்கட்சி சகுனிகள் இந்த நிகழ்வில்  கலந்துகொள்ளும் தகுதியற்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வைரவன் said:

இதுக்கு தமிரசுக் கட்சியும்
முக்கிய காரணம்

இந்த நல்லிணக்க 
அரசு பதவிக்கு வராமல்
மகிந்த அரசு மீண்டும்
பதவிக்கு வந்திருந்தால்
இந்த நிலங்கள் கண்டிப்பாக
விடுவிக்கப்பட்டு இருக்காது

மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் சிங்களத்திடமிருந்து நில மீட்பல்ல, தமிழீழமே மீண்டிருக்கும். ஆகக் குறைந்தது தமிழருக்குச் சுயாட்சியை என்றாலும் வழங்கும் நிலைக்குப் போருக்கு ஆதரவளித்த உலகநாடுகளால் மகிந்தா தள்ளப்பட்டிருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.