Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏகோபித்த தீர்மானித்தினை மீள்பரிசீலனை செய்யுங்கள் : 4 பௌத்த பீடங்களிடங்களையும் கோருகின்றது த.தே.கூ

Featured Replies

ஏகோபித்த தீர்மானித்தினை மீள்பரிசீலனை செய்யுங்கள் : 4 பௌத்த பீடங்களிடங்களையும் கோருகின்றது த.தே.கூ

 

 

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டின் பிரதான நான்கு பௌத்த பீடங்களும் எடுத்துள்ள தீர்மானமானம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் அழிப்பதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தீர்மானத்தினை மீள்பரிசீலனை செய்யுமாறும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது.

tna.png

நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களும் புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் சீர்திருத்தங்களோ அவசியமில்லை என கூட்டாக தீர்மானித்துள்ளதோடு அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிப்பதாகவும் முடிவு எடுத்துள்ளனர்.

 

நாட்டின் பிரதான பௌத்த பீடங்கள் இவ்வாறான தீர்மானத்தினை திடீரென அறிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/21535

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கள் திடீரென அறிவிக்கவில்லை என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும்.

  • தொடங்கியவர்

மகாநாயக்கர்களின் முடிவு நல்லிணக்கத்துக்கு குந்தகமானது

 
 

நாட்டுக்குப் புதிய அரசமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் கூறுவது நாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச் சமனானது. மகாநாயக்க தேரர்கள் தமது முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளாக இருக்கின்றது. இவ்வாறு அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

புதியஅரசமைப்புத் தேவையில்லை என்று, மகாநாயக்க தேரர்கள் நேற்று முன்தினம் மீண்டும் ஒன்றுகூடி முடிவெடுத்துள்ளனர். இதனை அரசுக்குத் தெரியப்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தனர். மகாநாயக்க தேரர்களின் இந்த நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி இப்போது ஆரம்பிக்கப்படவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே அது ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். இவ்வாறான நிலையில், மகாநாயக்க தேரர்கள் திடீரென, புதிய அரசமைப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் தங்களுடைய எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் ஏன் திடீரென்று இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டில் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் நடைமுறையிலுள்ள அரசமைப்பு தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமல் – அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டது. தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. இதனால்தான் நீண்ட கால ஆயுதப் போர் நடந்தது.

இந்த நிலமைகளிலிருந்து நாடு மீள வேண்டுமாக இருந்தால் புதிய அரசமைப்பு அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்படியான இணக்கப்பாடுகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய அரசமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, சில நாள்களில் இறுதி செய்யப்படக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான சந்தர்பத்தில் புதிய அரசமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்கத் தேரர்கள் கூறுவது நாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று கூறுவதற்கு ஒப்பானது. எனவே மகாநாயக்க தேரர்கள் தங்களது நிலைப்பாடுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இது எமது வேண்டுகோளாகவும் இருக்கின்றது – என்றார்.

http://uthayandaily.com/story/9643.html

தீர்­மா­னத்­தினை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யுங்கள்

sumanthiran-new-78baaa49414b1fbbc9d1b2116589bf1d879ab424.jpg

 

 (ஆர்.ராம்)
நான்கு பௌத்த பீடங்­க­ளையும் கோரு­கின்­றது கூட்டமைப்பு
புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் நாட்டின் பிர­தான நான்கு பௌத்த பீடங்­களும் எடுத்­துள்ள தீர்­மானம் அதிர்ச்­சி­யையும் ஆழ்ந்த கவ­லை­யையும் அளிப்­ப­தாக தெரி­வித்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அத்­தீர்­மா­னத்­தினை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறும் பகி­ரங்­க­மாக கோரிக்கை விடுத்­துள்­ளது. 

நாட்டின் பிர­தான பௌத்த பீடங்­க­ளான மல்­வத்த, அஸ்­கி­ரிய, ராமாஞ்ய நிக்­காய, அம­ர­புர நிக்­காய ஆகிய நான்கு பீடங்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் சீர்­தி­ருத்­தங்­களோ அவ­சி­ய­மில்லை என கூட்­டாக தீர்­மா­னித்­துள்­ள­தோடு அந்த தீர்­மா­னத்­தினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அறி­விப்­ப­தா­கவும் முடிவு எடுத்­துள்­ளனர். 

நாட்டின் பிர­தான பௌத்த பீடங்கள் இவ்­வா­றான தீர்­மா­னத்­தினை திடீ­ரென அறி­வித்­தமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இவ்­வி­டயம் குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இந்த நாடு சுதந்­திரம் அடைந்த காலத்­திற்கு பின்னர் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சிறு­பான்மை தேசிய இன­மாக காணப்­படும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்­துடன் நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­ப­ட­வில்லை.

1972ஆம் ஆண்டும், 1978ஆம் ஆண்டும் முதலாம், இரண்டாம் குடி­ய­ரசு யாப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­ட­போது தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் அதில் ஈடு­பட்­டி­ருக்­க­வில்லை. பெரும்­பான்மை தேசிய இனங்­களை மைய­மாக வைத்தே தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டன. அர­சி­ய­ல­மைப்பும் அனைத்து இனங்­க­ளையும் மையப்­ப­டுத்­தாத வகையில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றமை யாவரும் அறி­வார்கள்.

இத்­த­கை­ய­தொரு நிலை­மையில் 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆட்­சி­மாற்றம் இடம்­பெற்­றது. யுத்தம் நிறை­வுக்கு வந்த நிலையில் ஐக்­கிய இலங்­கைக்குள் அனைத்து இனங்­களும் இந்த நாட்டில் சம­உ­ரி­மை­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவும், பாது­காப்­பா­கவும் வாழ­வேண்டும் என்ற விடயம் அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. அதற்­க­மை­வாக புதிய அர­சி­ய­ல­மைப்பின் அவ­சி­யத்­தினை அனைத்து தரப்­பி­னரும் கொள்­கை­ய­ளவில் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தனர்.

இத­னை­வி­டவும் ஆட்­சி­மாற்றம் இடம்­பெற்ற நூறு­நாட்கள் வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் 2015ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 19ஆவது திருத்­த­சட்­டத்­தினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தார். அதன் பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­த­சிங்க , புத்­த­சா­சன மற்றும் நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ ஆகியோர் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என பல தட­வைகள் உறு­தி­ய­ளித்­துள்­ளனர். அத­னை­ய­டுத்து 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் 215உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டது.

இத­னை­வி­டவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக கட­மை­யாற்­றிய காலத்தில் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்டோர் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் புதிய அர­சி­ய­ல­மைப்பின் அவ­சி­யத்­தி­னையும் அது நிச்­ச­ய­மக உரு­வாக்­கப்­படும் என்ற உறு­திப்­பாட்­டையும் வழங்­கி­யுள்­ளனர்.

இவற்­றுக்­கெல்லாம் அப்பால் முதற் தட­வை­யாக இடந்த நாட்டின் அனைத்துப் பிர­ஜை­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்கள் பிர­தி­நி­தி­களின் ஏகோ­பித்த தீர்­மா­னத்­துடன் பாரா­ளு­மன்றம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்­றப்­பட்­டது. அதன் பின்னர் தொடர்ச்­சி­யாக புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

மக்கள் கருத்­த­றியும் குழு நிய­மிக்­கப்­பட்டு மக்­களின் கருத்­துக்கள் பெறப்­பட்­டன. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக வழி­ந­டத்தல் குழு, உப­கு­ழுக்கள் என்­பன அமைக்­கப்­பட்டு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் இறு­தி­செய்­யப்­பட்டு வழி­ந­டத்தல் குழுவில் சமர்ப்­பிக்­கப்­பட்டு தற்­போது வரை­யில்­பெ­றப்­பட்­டுள்ள , இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்ள கருத்­துக்கள், விட­யங்கள் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் இடைக்­கால அறிக்­கையின் வரை­வொன்றை இறுதி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மும்­மு­ர­மாக எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லை­யி­லேயே பிர­தான பௌத்த பீடங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சி­ய­மில்லை தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் செய்­யத்­தே­வை­யில்லை என்ற முன்­மொ­ழிவை ஜனா­தி­ப­தி­யி­டத்தில் தெரி­விக்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளன.

முதற்­த­ட­வை­யாக அனை­வ­ரி­னதும் பங்­கேற்­புடன் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­னெ­டுப்­புக்கள் இத்­தனை தூரம் முன்­னேற்­ற­க­ர­மான நிலை­மை­யினை அடைந்­துள்ள நிலையில் இந்த அறி­விப்­பா­னது எமக்கு அதி­ருப்­தி­யையும், ஆழ்ந்த கவலையையும் அழிக்கின்றது. இத்தனை காலமும் பௌத்த பீடங்கள் இச்செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் எவற்றையும் முன்வைக்காத நிலையில் தீடீரென இவ்வாறான அறிவிப்பொன்றை விடுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வியும் எமக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எழுகின்றது.

ஆகவே நாட்டின் எதிர்காலத்திற்காகவும், இந்நாட்டில் உள்ள அனைத்து இனங்களும் ஐக்கிய இலங்கையில் தமது அபிலாஷைகளுடனும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான சூழலொன்று அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்துவதற்காக ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை உணர்ந்து கொண்டு நான்கு பௌத்த பீடங்கள் தமது தீர்மானத்தினை மீள்பரிசீலனைசெய்து கொள்ளுமாறு பகிரங்கமாக கோருகின்றோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-06#page-1

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணர் காந்தியை விட பெரிய‌ அகிம்சாவாதி.....அடுத்த நோபல் பரிசு அண்ணைக்குத்தான் கொடுக்க வேணும் 

 

sumanthiran

பௌத்தபீடங்களின் தீர்மானம் – ஆழ்ந்த கவலையில் சுமந்திரன்!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டின் பிரதான நான்கு பௌத்த பீடங்களும் எடுத்துள்ள தீர்மானமானம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் அழிப்பதாக தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அத்தீர்மானத்தினை மீள்பரிசீலனை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களும் புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் சீர்திருத்தங்களோ அவசியமில்லை என கூட்டாக தீர்மானித்துள்ளதோடு அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிப்பதாகவும் முடிவு எடுத்துள்ளனர்.

நாட்டின் பிரதான பௌத்த பீடங்கள் இவ்வாறான தீர்மானத்தினை திடீரென அறிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் கவலையை வெளியிட்டுள்ளார்.

 

http://tamilleader.org/?p=2750

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கவலையடைந்திருக்க மாற்றார்கள் ,அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தவிடயம்....உங்க்ளுக்கும் உது தெரிந்திருக்கும் ஆனால் கண்ணைமூடிகொண்டு பூணை பால் குடிச்ச கதை உங்கன்ட கதை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

இத்தனை காலமும் பௌத்த பீடங்கள் இச்செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் எவற்றையும் முன்வைக்காத நிலையில் தீடீரென இவ்வாறான அறிவிப்பொன்றை விடுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வியும் எமக்கும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எழுகின்றது.

உங்களுக்கு எழுகிறது என்று சொல்லுங்கள் ....மக்களுக்கு நீங்கள் சம்முடன் சேர்ந்து 2015 இல் வெட்டி கிழிக்க புறப்பட்ட போதே தெரியும் ,உங்களால் ஒரு இன்ச் கூட நகர முடியாது என்று ...வியாதி இருக்கிறவனை விடுத்து வியாதியற்றவனுக்கு மருந்து கொடுத்தால் இப்படித்தான் ஆகும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

மகாநாயக்கர்களின் முடிவு நல்லிணக்கத்துக்கு குந்தகமானது

ஆகவே நாட்டின் எதிர்காலத்திற்காகவும், இந்நாட்டில் உள்ள அனைத்து இனங்களும் ஐக்கிய இலங்கையில் தமது அபிலாஷைகளுடனும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான சூழலொன்று அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்துவதற்காக ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை உணர்ந்து கொண்டு நான்கு பௌத்த பீடங்கள் தமது தீர்மானத்தினை மீள்பரிசீலனைசெய்து கொள்ளுமாறு பகிரங்கமாக கோருகின்றோம் என்றார். 

பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை ஏற்கெனவே சிங்களம் தமிழர்களுக்கு அளித்துள்ளதை திருவாளர் சுமந்திரன் இன்னமும் அறிந்துகொள்ளவில்லைப் போலும்.... ஒன்று மேலுலகம், மற்றது புலம்பெயர்ந்த நாடுகள் என்பதை யாராவது அவருக்கு அறியத்தாருங்கள். :rolleyes: 

  • தொடங்கியவர்

மகாநாயக்க தேரர்கள் அரசமைப்பு தொடர்பான முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.