Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்கம் பிள்ளையார் கொடியேற்றம்

Featured Replies

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்கம் பிள்ளையார் கொடியேற்றம்

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம் இன்று மிகவும் கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

mamangam.jpg

இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தம்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாசாரிய குருக்களினால் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து தம்பத்துக்கு அபிஷேகமும் செய்யப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்று பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜா சிவாசாரியார் பிரதம குருவினால் அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விநாயகப்பெருமான் உள் வீதியுலா வந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றன.

 

பல இடங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருள் பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது .

http://www.virakesari.lk/article/21864

  • கருத்துக்கள உறவுகள்

23 தீர்த்தம் கொஞ்ச வெளிநாட்டு சனத்தைப்பார்க்கலாம் இந்த வருடமும் :10_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமாங்க பிள்ளையாருக்கு அரோகரா..

  • கருத்துக்கள உறவுகள்
"ஆடி அமாவாசையில் தீர்த்தமாடி
அமிர்தகழி பதியினிலே அமிர்தம் உண்டு"
உன்னைக் கும்பிட்டுத் தானே நானும் வளர்ந்தேன்.
என்னை மட்டும் ஏன் நீ கை விட்டாய்
கல்லுப் பிள்ளையாரேtw_angry:
 
 
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:
"ஆடி அமாவாசையில் தீர்த்தமாடி
அமிர்தகழி பதியினிலே அமிர்தம் உண்டு"
உன்னைக் கும்பிட்டுத் தானே நானும் வளர்ந்தேன்.
என்னை மட்டும் ஏன் நீ கை விட்டாய்
கல்லுப் பிள்ளையாரேtw_angry:
 
 

நீங்கள் தேங்காய் மோதகம் கொழுக்கட்டை கொடுக்கல போல அந்தாளுக்கு 

 

On 7/15/2017 at 5:00 AM, குமாரசாமி said:

மாமாங்க பிள்ளையாருக்கு அரோகரா..

ம்ம் அரோகரா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14.7.2017 at 8:25 PM, தனி ஒருவன் said:

23 தீர்த்தம் கொஞ்ச வெளிநாட்டு சனத்தைப்பார்க்கலாம் இந்த வருடமும் :10_wink:

 

1 hour ago, ரதி said:
"ஆடி அமாவாசையில் தீர்த்தமாடி
அமிர்தகழி பதியினிலே அமிர்தம் உண்டு"
உன்னைக் கும்பிட்டுத் தானே நானும் வளர்ந்தேன்.
என்னை மட்டும் ஏன் நீ கை விட்டாய்
கல்லுப் பிள்ளையாரேtw_angry:
 
 

பிள்ளையார் தான் போக காணேல்லையாம் இதுக்கை இவை இரண்டு பேர்ரை கூத்தை பாருங்கோவன்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 

பிள்ளையார் தான் போக காணேல்லையாம் இதுக்கை இவை இரண்டு பேர்ரை கூத்தை பாருங்கோவன்..:grin:

image.gif

  • கருத்துக்கள உறவுகள்

batti_mamanga_7.jpgbatti_mamanga_10.jpgbatti_mamanga_11.jpgbatti_mamanga_2.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:
"ஆடி அமாவாசையில் தீர்த்தமாடி
அமிர்தகழி பதியினிலே அமிர்தம் உண்டு"
உன்னைக் கும்பிட்டுத் தானே நானும் வளர்ந்தேன்.
என்னை மட்டும் ஏன் நீ கை விட்டாய்
கல்லுப் பிள்ளையாரேtw_angry:
 
 

பிள்ளையார் கை விட்டாரா இல்ல நீங்க விட்டீர்களா..எப்படியிருப்பினும் லண்டன் வரை  கொண்டு வந்துட்டார் அல்லவா...

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

அதானே எத்தினை நேர்த்திகடன் வச்சி இருப்பாவு செய்யல அந்தாள் கழட்டி விட்டுருப்பாரு பிறகு கல்லுப்பிள்ளையாரே நெல்லுப்பிள்ளையாரே என இங்க வந்து குத்தி முறிவது 

9 minutes ago, யாயினி said:

பிள்ளையார் கை விட்டாரா இல்ல நீங்க விட்டீர்களா..எப்படியிருப்பினும் லண்டன் வரை  கொண்டு வந்துட்டார் அல்லவா...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனி ஒருவன் said:

அதானே எத்தினை நேர்த்திகடன் வச்சி இருப்பாவு செய்யல அந்தாள் கழட்டி விட்டுருப்பாரு பிறகு கல்லுப்பிள்ளையாரே நெல்லுப்பிள்ளையாரே என இங்க வந்து குத்தி முறிவது 

 

இவருக்கு ஏழரைச்சனி தொடங்குது....

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

இவருக்கு ஏழரைச்சனி தொடங்குது....

யாருட்ட நம்ம கிட்டையா  எத்தனை பேரை பார்த்திருப்பம் உன்மையை சொல்ல சொல்லுங்க லண்டனில கால் வச்சா பிள்ளையாரப்பா உனக்கு நான் பொங்குவன் எண்டு நேர்த்தி வச்சவா அது செய்யல அதான் :104_point_left::11_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனி ஒருவன் said:

யாருட்ட நம்ம கிட்டையா  எத்தனை பேரை பார்த்திருப்பம் உன்மையை சொல்ல சொல்லுங்க லண்டனில கால் வச்சா பிள்ளையாரப்பா உனக்கு நான் பொங்குவன் எண்டு நேர்த்தி வச்சவா அது செய்யல அதான் :104_point_left::11_blush:

DE-r2RnWAAYd0aV.jpg

:grin:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

DE-r2RnWAAYd0aV.jpg

:grin:

என்ன நான் சொன்னது உங்களூக்கு கேட்கலையா கு.சாமி அண்ண இல்லை கேட்காத மாதிரி நடிக்கிறியளா என்ன?

 

அது சரி ரதி வந்து பார்க்கிரதுகுள்ள நான் ஓடிட வேணும்  குளவி கலைச்சி விட்ட மாதிரி விரசி விரசி குத்தும் :11_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On July 18, 2017 at 7:18 PM, குமாரசாமி said:

DE-r2RnWAAYd0aV.jpg

:grin:

சோ நைஸ் தாத்தா..கையில இப்படி

imagesVIEW ALL
Related image
 
ஒன்ற தந்தால் இன்னும் நல்லாயிருக்கும் .அப்புறம் சண்டைக்கு வரக் ௯டா சரியா..?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, யாயினி said:

சோ நைஸ் தாத்தா..கையில இப்படி

imagesVIEW ALL
Related image
 
ஒன்ற தந்தால் இன்னும் நல்லாயிருக்கும் .அப்புறம் சண்டைக்கு வரக் ௯டா சரியா..?

கோபமோ? எனக்கோ? ஓ..மை...காட்.....:grin:
அது சரி கூட்டாய் இரண்டு பேர் வந்து லைக் பண்ணியிருக்கினம்....அவைக்கு  ஏதும் விளங்கியிருக்கும் எண்டுறியள்?????tw_grin:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனி ஒருவன் said:

 

பார்க்க சந்தோசமாய் இருக்கு, அப்படியே கேட்பதற்கும் இனிமையான பாடல். நன்றி தனி....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பார்க்க சந்தோசமாய் இருக்கு, அப்படியே கேட்பதற்கும் இனிமையான பாடல். நன்றி தனி....!  tw_blush:

அண்னை நாளை  தீர்த்தம் பிதிர்கடன் நிறைவேற்றுவார்கள் நாளை நான் நாளை கதிர்காம  யாத்திரை இந்த வருடமும் அதனால் அங்கே நிற்கவில்லை  ஆரோகரா :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் இனிதே அமைய வாழ்த்துக்கள்..... படங்களுடன் வரவும்......!  tw_blush:

  • தொடங்கியவர்

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தேர் உற்சவம்

 

 

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தேர் உற்சவம்

July 22, 2017  

 
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகருக்கு இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து சுவாமி வீதியுலா வந்ததுடன் ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் ஒரு புறமும் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2537&mode=head

  • தொடங்கியவர்

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

 

 

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

July 23, 2017  

 
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆடி அமாவாசையில் பிதிர்க் கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம் கருதப்படுகின்றது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினைக் கொண்ட அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க தலமாக இது விளங்கி வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த பத்து தினங்களாக நடைபெற்று வந்ததுடன் நேற்று (22) தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி தம்ப பூஜை நடைபெற்று திருப்பொற் சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சிவன் பார்வதியுடன் மாமாங்கேஸ்வரர் உள்வீதியுலா வந்து எருது வாகனத்தில் தீர்த்தக்கரையினை நோக்கி சென்றார்.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் விசேட பூஜையுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தீர்த்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2538&mode=head

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.