Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதியம்- உடன் பிறந்தே கொல்லும் வியாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே!

ஒரு விடயம் மட்டும் சொல்ல முடியும், நெடுங்காலபோவனை எதிர்ப்பதாக நினைத்து, தமிழ் வளர்த்த, பெரியார்களை அசிங்கப்படுத்துவது உண்மையில் மிகக் கீழ்தரமானது. என்னைப் பொறுத்தவரைக்கும் நெடு... ஒரு திருத்த முடியாத ஜன்மம். அவர் எதையும் ஆதரிக்கின்றார் என்பதற்காக, எம் முன்னோர்களைக் கீழ்தரமாக விவாதிக்காதீர்கள்.

வெள்ளைச்சுவரில் கறுத்தைப் புள்ளியை மட்டும் நோக்கும் மூடர்களைப் போல, நோக்கி, எம் முன்னோர்களை அசிங்கம் செய்தால், அடுத்த தலைமுறை பிறமொழியில் வாழ்ந்தபடி எம்மைக் குறி வைக்கும் என்பதை மறுக்க வேண்டாம்.

நெடுக்காலபோவனை மையமாக வைத்து விவாதத்தை திசை திருப்ப முற்படுவது தவறானது. அவர்கள் ஒன்றும் நெடுக்காலபோவனை திட்ட வேண்டும் என்று பெரியாரை இங்கு கொண்டு வரவும் நாவலரைத் திட்டவும் ஆரம்பிக்கவில்லை. உங்கள் போன்றோர் இப்படியான நிலையை நெடுக்காலபோவனுக்கு எதிரான நிலை என்பதாக காட்டுவதை உங்களின் பலவீனமாகவே கருதுகின்றோம். நெடுக்காலபோவன் ஒன்றும் தெருக்குச்சியல்ல. கண்டவரெல்லாம் எடுத்து முறித்து விளையாட. உங்களிடம் அவர்களின் கருத்தை எதிர்கொள்ளத் திராணி இருந்தால் கருத்தை கருத்தோடு பகருங்கள். நெடுக்காலபோவனை அநாவசியமாக இதற்குள் உள் நுழைப்பதும் நீங்கள் எல்லாம் ஏதோ உத்தமர்கள் போலவும் நெடுக்காலபோவனுக்கு வழிகாட்டும் மேதைகள் போலவும் தோற்றம் காட்டுவதை நிறுத்தி விடயத்தோடு மட்டும் பேசிக் கொள்ளுங்கள். அநாவசியமான கருத்துக்களால் சமூகத்தில் உள்ள மாறுபட்ட பார்வைகளை எல்லாம் நெடுக்கலாபோவனின் விளைவுகள் என்று எம் தலையில் கட்டிவிட்டு கருத்தியலில் வெட்டி விழுத்திவிட்டதாக பெருமிதம் கொள்ள வேண்டாம். உடனடியாகவே இப்படியான குருட்டுத்தனமான அறிவிலித்தனமான குற்றச்சாட்டுக்களை நெடுக்காலபோவன் மீது வைப்பதை நிறுத்துங்கள். கள நிர்வாகத்தினரும் இப்படியான கருத்துக்களை பக்கச்சார்பாக அனுமதிப்பதை நிறுத்த வேண்டும். :P :rolleyes:

Edited by nedukkalapoovan

  • Replies 115
  • Views 14.9k
  • Created
  • Last Reply

மருதங்கேணி சொன்னது போல் ஒன்றும் இல்லாதவனிடம் போய் சாதியத்தை விட்டுக்குடுக்கச் சொல்லி போதனை செய்தால் பலன் இல்லை என்பது உண்மை. ஆனால் ஒப்பீட்டளவில் புலம்பெயர்ந்த சமூகங்களில் எத்தனையே விதமான வாழ்க்கை முறைகள் நல்ல உதாரணங்கள் முன்னேற்றகரமான சந்தர்ப்பங்களை கொண்டிருக்கும் எம்மால் ஏன் இன்னமும் சாதியத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லை?

இந்த விவாதத் தொடரை ஆரம்பித்து வைத்த கட்டுரை புலம்பெயர்ந்தவர்கள் ஓடிவரும் பொழுது மறக்காமல் தூக்கி வந்து இங்கு உருவாகிய உருவாகிக் கொண்டிருக்கும் சமூகத்திற்கும் சாதியத்தைப் பரப்புவது பற்றித்தான் எழுதப்பட்டது.

இங்கு பலரும் விவாதத்தில் (என்னைப் பொறுத்த வரை) வெகுவாக திசை திரும்பி தாயகத்தில் சாதியை எப்படி ஒழிப்பது அங்குள்ள ஆதரவாளர்களும் சாதியத்தை விடவில்லை அங்கிருந்து வரும் திருமண விளம்பரங்கள் சாதியைக் குறிப்பிடுகின்றன வன்னியில் உள்ள மாடுகளின் குறியை வைத்து உரிமையாளரின் சாதிபை பிடிக்கலாம் என்கின்றனர். அங்குள்ளவர்கள் ஏகப்பட்ட நெருக்கடிகளில் இருக்கிறார்கள். ஒரு சாதாரண வாழ்க்கை என்பதை பல தசாப்த்தங்களாக அனுபவிக்காதவர்கள் 1-2 சந்ததிதகள் அப்படியே பிறந்து வழர்ந்தும் விட்டார்கள். அன்றாட அடிப்படை வாழ்விற்கே பல்வேறு சவால்களை எதிர்கொள்பவர்கள். இந்த அவலங்கள் மத்தியில் சமூகச் சீர்திருத்தங்கள் முன்னேற்றகரமான சிந்தனைகள் மாற்றங்கள் என்பது மிகவும் கடினமானது இருந்தாலும் புலிகள் எவ்வளவோ நல்லவிடையங்களை வியக்கத்தக்க முறையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் இங்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் பல்வேறு கலாச்சாரங்கள் இனங்கள் மதங்கள் மத்தியில் வாழும் எம்மால் ஏன் சாதியத்தை அறவே இன்னமும் வேரறுக்க முடியவில்லை? சுதந்திரமான அறிவியலை மய்யப்படுத்திய முற்போக்கான நாடுகளில் வாழும் எம்மால் ஏன் முடியவில்லை என்பது தான் இங்கு நாம் விவாதிக்க வேண்டியது.

தாயகத்தில் புலிகள் சாதியத்தை ஒழிப்பார்களா இல்லையா எப்போ ஒழிப்பார்கள் என்று எம்மால் பொறுப்பேற்க முடியாத பங்களிக்க முடியாத ஒன்றைப்பற்றி நீட்டி முழக்கி வெற்று விவாதங்கள் பக்கம் பக்கமாக வேண்டாம்.

இங்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் எம்மால் ஏன் இன்னமும் முற்றாக ஒழிக்க முடியவில்லை எப்போ ஒழிக்கப் போகிறோம் என்பது தான் எமக்கு பொருத்தமான விவாதக் கோணம். புலம்பெயர்ந்த சமூகத்தவர்கள் மத்தியில் சாதியம் என்ற பலவீனம் இருக்கும் வரை அதை எதிரிகளும் துரோகிகளும தேசியத்திற்கு எதிரான ஒற்றுமையான எழுச்சிக்கு தடையாக தேவையான நேரத்தில் பொருத்தமான வடிவத்தில் பாவிப்பார்கள் என்பது தான் நாம் எல்லோரும் மேலதிகமாக உணர்ந்து கொள்ள வேண்டியது. சாதியம் இன்று வெளிப்படையாகப் பேசப்படவில்லை அவரவர் வீடுகளில் dinner table talk ஆக தனிப்பட்ட மட்டங்களில் பேசபடுகிறது என்று நிம்மதியாக இருந்துவிட முடியாது. கருணாவின் துரோகத்திற்கு முன்னரும் பிரதேசவாதம் எம்மவர்கள் மத்தியில் dinner table talk ஆகத்தான் இருந்தது. இந்த அபாயத்தைத்தான் சிவாசின்னப் பொடியின் கட்டுரை விளக்க முற்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தை விட புகலிடத்தில் மனிதனை மலினப்படுத்தும் பாகுபாடுகள் பல. அவற்றின் ஆதிக்கம் உள்ளவரை இவையும் தொடரும். ஆக மனிதனை மலினப்படுத்தும் பாகுபாடுகள் அனைவற்றிற்கும் எதிராக கருத்தியல் விழிப்புணர்ச்சி என்பது அறிவியல் சார்ந்து சமூகவியல் சார்ந்து எழும் போது இவையும் காணாமல் போகும். மற்றும்படி காலத்துக்கு காலம் ஆளாளுக்கு சாதி மதம் நிறம் என்று ஒழிப்புக் கோசம் போட்டுக் கொண்டு இருப்பது மட்டும் நடக்கும். மக்கள் மனங்களில் உள்ள எண்ணக்கருக்களில் அவை போதிய மாற்றங்களையோ தாக்கங்களையோ பண்ணப் போவது என்பது பகற்கனவு மட்டுமே..! :P :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

;) :rolleyes:

Edited by காவடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியை அழிக்க நினைப்பவர் ஒவ்வொருவரும், முதலில் தன்னில் இருந்து தொடங்கவேண்டும், தன்னைவிட உயர்ந்த சாதிக்காறன் அவமதிக்கும்போது கோபம்கொள்ளும் அவனுக்கு, தன்னை விட தாழ்ந்தசாதிக்காறனை அவதிக்கும் போது இனிக்கிறது, அவனை சரிசமனாக பாவிக்க மறுக்கிறான், அவனோடு உறவுகொள்ள தயங்குகிறான், எப்போதும் தாழ்ந்தசாதி என கருதுவோருடன் மோதும் போதும், அவன் இலகுவாக அவனை வீழ்த்த பிரயோகிக்கும் ஆயுதம் சாதியை இழுத்து கதைப்பதுதான்.

கஷ்ரப்பட்டு உழைக்கும் ஏழை ஒரு வேளை உணவுக்குகாக ஏங்கவும், உழையாது தொந்தி வளர்பவர்கள் உண்டு கழிக்கவுமே சாதி உருவாக்கப்பட்து, தொந்தி வளர்ப்பவர் தொடர்ந்து நோகாமல் வாழவே சாதியை எண்ணை ஊற்றி வளர்க்கிறார்கள்.

தன்னை விட உயர்சாதி என கருதுவோர் தன்னை சமனாக மதிக்க வேண்டும் என எண்ணுபவர்கள், தம்மைவிட தாழ்ந்தசாதி என கருதுவோரை சமனாக மதிக்க தயாரா? என தம்மைத்தாமே கேட்டுக்கொள்ளவேண்டும். மாற்றம் என்பது முதலிம் தன்னில் இருந்து தொடங்கவேண்டும்.

கணனிக்கு முன்னிருந்து டொக்கு டொக்கு என்று என்னதான் எழுதி தள்ளினாலும் முதலில் தான் எப்படி இருக்கிறேன் என்று தன்னைதானே உராய்ந்து பார்க்கவேண்டும். :rolleyes::rolleyes::unsure:

Edited by சித்தன்

ஆறுமுக நாவலர் பற்றி தனியாக தலைப்பு ஒன்று போட்டுள்ளேன். நாவலரைப் பற்றி அங்கு வைத்துக் கொள்வோம்.

இதில் பலர் சொன்னது போன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள சாதி பற்றி பேசுவோம்.

புலம்பெயர்ந்த நாடுகளிலே சாதியம் என்பது குறைவான ஆனால் முக்கியமான தருணங்களில் வெளிப்படுகிறது.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உயர்சாதி என்று தன்னை சொல்கின்ற வேளாள சமூகம் ஈழத்தை போன்று, மற்றைய சாதியினர் வீடுகளின் உணவு உண்பதை தவிர்ப்பது, விலகி நிற்பது போன்றவைகளை செய்வதில்லை. இது ஒரு சிறிய முன்னேற்றம். (இது வெகு சிலரிடம் இன்றும் இருக்கிறது என்பது வேதனையான உண்மை)

ஆனால் வேளாள சமூகம் சாதியை காதல், திருமணம் போன்ற தருணங்களில் வெளிப்படுத்துகிறது.

இன்றைய இளம் தலைமுறை கூட காதலிக்கும் போது சாதி குறித்து விசாரிக்கிறது.

இந்தப் போக்கு மிக அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் வேளாள சமூகத்திடம் காணப்படுகிறது.

ஆனால் இன்றைக்கும் புலம்பெயர்ந்து வாழும் பார்ப்பன சமூகத்தினர் திருமணம் போன்ற விடயங்களோடு மற்றைய சமூகத்தினரோடு நெருங்கிப் பழகுவதையும், விருந்து உண்பதையும், விருந்தோம்புவதையும் தவிர்த்தே வருகிறார்கள்.

இப்படி இரண்டு சமூகம் சாதியை புலம்பெயர் நாடுகளில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாதி பற்றி பேசுபவர்கள் இந்த இரண்டு விடயம் குறித்து விவாதிக்க வேண்டும். ஒன்றை விவாதிப்போம், மற்றதை விவாதித்தால் சாமி கண்ணைக் குத்தி விடும் என்பதால்தான் சாதி தொடர்ந்தும் புலம்பெயர் நாடுகளில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்சில் நடந்த ஓர் உண்மைக் கதை

அவள் மிகவும் அழகானவள். படித்துப் பட்டம் பெற்றவள். பண்பாடு என்றால் என்னவென்று அந்தப் பெண்ணிடமே கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஈழத்தில் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். அந்தப் பெண் ஒருவனைக் காதலித்தாள். பொடியன் உயர்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்.

இருவரையும் சேர்ந்து வைக்கும் பொறுப்பை அடியேன் எடுத்துக் கொண்டேன். பொடியன் வீட்டில் கடும் எதிர்ப்பு. அனைத்துத் தகுதிகளும் இருந்தும் பொடியன் வீட்டார் அவளை கேவலமான சொற்களால் திட்டியதாக பொடியன் என்னிடம் கூறினான். அந்த _____ நாயையா செய்யப் போகிறாய் என்று அவளது சாதியைக் காட்டி அவளை இழிவு படுத்தினர். இதை அந்தப் பெண் என்னிடம் வேதனையுடன் கூறிய போது, நான் அந்தச் சாதியின் பொருளைக் கூறி நீங்கள் அதையா செய்கிறீர்கள் இல்லையே! கணக்கியல் துறையில் பட்டம் பெற்றிருக்கிறீர்கள் என்று அவளுக்கு ஆறுதல் கூறினேன். அப்போது அவள் அந்தத் தொழிலை தனது அப்பா தாத்தா கூட செய்ததில்லை என்றாள். அதன் பின் நண்பர்கள் உதவியுடன் திருமணமும் நடத்தி வைத்தோம். ஆனால் பொடியன் வீட்டில் இன்றளவும் பிரச்சனைதான்

சாதிய நஞ்சு புலம் பெயர் நாடுகளிலும் வேரூன்றி உள்ளது.

சாதி ஒழிப்புக்கு கலப்புத் திழுமணமே மிகச் சிறந்த வழி. அடுத்தடுத்த தலைமுறைகளில் அது நிச்சயம் காணாமல் போய்விடும்.

Edited by இளங்கோ

சாதியமும் புலிகளும் என்கிற தலைப்பில் புலிகளின் அதிகார பூர்வ ஏடான விடுதலைப் புலிகளில் (இதழ்:20,தை, 1991) வந்த கட்டுரை இது.

இணைப்பு இங்கே http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/20-09.pdf

காலங்காலமாக தமிழீழ சமூகத்தின் உணவுடன் கலந்திருந்த வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியைய் இழந்து வருகின்றது.எமது 18 வருடகால ஆயுதப் போராட்டம் இதைச் சாதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர சாதியத்தின் முனையும் மழுங்கி வருகின்றது.

அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்கு முறையின் வெளிப்பாடுகளை சிற் சில இடங்களில் இன்றும் காணக் கூடியதாகவே உள்ளது.அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவந்துடன் கட்டுரை ஆரம்பமாகின்றது.

சாதியம் தொடர்பான புலிகளின் கருத்தை இக் கட்டுரை தொட்டுச் செல்கின்றது.

யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம்.அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணிக் கிணறு இருகிறது.அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனி மனிதருக்குச் சொந்தமானது.அந்தத் தனி மனிதர் தன்னை ஒரு உயர் சாதிக்காரர் என எண்ணிக் கொள்பவர்.அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்படோர் எனப்படும் ஒரு மக்களும் பிரிவும் இருக்கிறது.இந்த மக்களுக்கு குடி தண்ணீர் வசதி இல்லை.அவர்களிந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள்.தண்ணீர் அள்ளுவதற்கு முயற்ச்சிக்கிறார்கள்.இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடி வருகிறார்.தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்கிறார்.தாழ்த்தப்பட்டோ

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதன் ஆகா என்ன அற்புதமான விளக்கம் அதுவும் ஆதாரத்துடன்...உண்மையில் உங்கள் விவாதம் பிரமாதம்.

பாராட்டுக்கள்..இப்படிப்பட்ட கருத்துக்கள் மிக முக்கியமானவை..

Edited by Valvai Mainthan

சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால

நீதி வழுவா நெறிமுறையில் மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

பட்டாங்கிலுள்ளபடி.

சாதி அமைப்பு பிறப்பால் வருவதல்ல. தற்காலத்தில் சாதியமைப்பு

விளங்கிக் கொள்ளப்பட்ட முறைக்கும் இந்து சமயம் பொறுப்பல்ல.

சாதியத்தை ஒரு சார்பார் தங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்தப்

புறப்பட்டதினால்தான் இந்துசமயம் அதற்குள் இழுத்து விடப்பட்டது.

ஓளவையாரின் இந்தப் பாடல் காலத்திலேயே சாதியவெறி தலைவிரித்தா

டியதனால்தான் இந்தப் பாடலே பாடப்பட்டிருக்கலாம்.

ஆனால் தற்போது இந்நிலை குறிப்பிடத்தக்க அளவு

இல்லாமலே போய்விட்டதெனலாம். தாயகத்திலோ புலத்திலோ நண்பர்களி

டத்தில் இந்த ஏற்றத் தாழ்வுகளை நாம் அறிகின்றோமா?

சிலவேளைகளில் திருமணப் பேச்சுக்களின் போது இதுவெளிப்படுகிறது.

அதுவும் மிகவும் அடக்கமான குரலாகத்தானிருக்கும்.சாதியத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலவளர்ச்சியின் போக்கில் சமூகத்தின் சிந்தனையும் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது.

அதன் ஒரு நிலையே முன்பு ஒரு சிறிய வகுப்பாக இருந்த சாதிய எதிர்ப்பு கொள்கை இன்று பெரியவகுப்பாக மாறியமை.

எனவே இன்றைய காலத்தின் பௌகுத்தறிவுப் போதினிகளாகத் திகளும் சபேசனோ, இளங்கோவோ அந்த நாவலர் காலத்தில் இருந்திருந்தால், காலப்பாதிப்பிற்கு உட்படாமல் இப்படியேதான் அவர்களின் சிந்தனாவாதம் இருந்திருக்கும் என்று கூற முடியுமா?

எனவே முன்னோர்களில் தேடும் குற்றங்களுக்கு காலப்பாதிப்பே காரணமாகக் கருதி அவற்றை விட்டு விடுவதே அறிவுடமையாகும்.

மேலைத்தேய அறிஞ்ஞர்களின் கருத்துக்கள்,

பூமிதட்டையானது என்ற தகவல்களோடு இருந்ததற்க்காக எத்தனையோ அரிய சிந்தனைகளையும் சேர்த்து எறிய தயாராக இருக்கவில்லை உலகம்.

காலவளர்ச்சியின் அறிவியல் நிலைக்கு உடன்பாடானவைகளை உள்வாங்குவதும், ஃதிலாதனவைகளை கைவிடுவதும் தான் அறிவுடமை.

இளங்கோவிடம் இருக்கும் கடவுள்மறுப்பு கொள்கையைவிட என்னுடையது தீவிரமானதாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் மதத்தை வேரோடு சாய்க்க வேண்டும் என்ற சிந்தனை சிறிதும் கொண்டிருக்க வில்லை.

சமூகவளர்ச்சியின் ஆரோக்கியத்துக்கு பாதகமானவைகளை நீக்குவோம். நன்மை தருவன வற்றை போற்றுவோம்.

குறைகளயே கண்டுபிடித்து அதன் மூலத்தையே குற்றவாளி ஆக்கு வதற்கே துள்ளிக்குதித்த படி இங்கே வாதடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் அடுக்கும் குற்றங்களுக் கெல்லாம் அதை இந்துமதத்தில் வைத்தமைக்காக பழிப்பொறுப்புக்கு பிரதினிதித்துவப் படப்போவது யார்?

கடவுள்களாலா இவை அனைத்தும் எழுதப் பட்டது என்று சொல்கிறார்கள்.

பலவிதமான சிந்தனாவாதிகளால் அன்றைய கால அறிவியல்வளர்ச்சி நிலைக்கேற்ப்ப காலம், காலமாக படைக்கப்பட்டு வந்த தத்துவங்களின் குறை, நிறைகளுக்கு மதம் எப்படிப் பொறுப்பாகும்.

  • தொடங்கியவர்

நான் எழுதிய இந்த கட்டுரைக்கு பதில் கருத்துக்களை முன்வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. ஏற்கனவே இந்தக்களத்தில் யாழ்ப்பாணச் சாதியமும் ஈழத் தழிழரும் என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடந்துகொண்டிருந்தது. அந்த விவாதப் போக்கு ஆரோக்கியமில்லாமல் சென்று கொண்டிப்பதாக எனக்குத் தென்பட்டதால் அதை நெறிப்படுத்துவதற்காக இந்தக் கட்டுரையை எழுதினேன். இந்தக் கட்டுரையை பலர் நன்கு புரிந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். சிலர் தங்கள் மனதில் தோன்றியதை எழுதினார்கள். எந்தவொரு கருத்துக்கும் எதிர்கருத்து உண்டென்பதையும் எனக்கு என்னுடைய கருத்தை செல்வதற்கு எந்தளவுக்கு உரிமையுண்டோ அந்தளவுக்கு மற்றவர்களுக்கும் எனது கருத்துக்கு எதிர்கருத்துச் சொல்வதற்கும் அபிப்பிராயம் சொல்வதற்கும் உரிமையுண்டென்பதையும் நான் ஏற்றுக் கொள்பவன் என்ற வகையில் இங்கே முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன்.

இப்போது நம்முன் சில கேள்விகள் இருக்கின்றன. அதாவது …..

1. புலம்பெயர்ந்த நாடுகளில் நம்மவர்கள் மத்தியில் சாதியம் இருக்கிறதா?

2. நமது இளைய தலைமுறை சாதிய உணர்வூட்டி வளர்க்கப்படுகிறதா?

3. இளைய தலைமுறையினர் அடையாளம் இழப்பதற்கும் வன்முறைக் கும்பலாக மாறுவதற்கும் சாதியம் துணை போகிறதா?

4. புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் தாயக விடுதலைக்காக ஓரணியில் திரள்வதற்கு சாதியம் தடையாக இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதில்.. ஆம் நூறு வீதம் உண்மை என்பது தான். இல்லை இது தவறு என்று நினைப்பவர்கள் உங்கள் கருத்தைச் சொல்லாம்.

அடுத்து இன்னொரு கோணத்திலே சில கேள்விகளை கேட்டுப்பார்ப்போம்..

1. சாதியைப் பற்றி நாங்கள் ஊடகங்களில் கதைக்கத் தேவையில்லை. கதைப்பதால் தான் அது வளரும் நாங்கள் அதைப்பற்றி கதைக்காவிட்டால் அது தானாக அழிந்துவிடும் என்று கூறுவது சரியா?

2. புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் - தாயகத்தை கண்ணால் பாத்திராத குழந்தைகளைப் பார்த்து நீங்கள் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்று கூறும்போது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் மீதும் ஏற்படுகின்ற வெறுப்பை தமிழ் தேசித்துக்கு எதிரான வெறுப்பாக சித்தரிப்பது சரியா?

3. ஒரு வேளை சாப்பாட்டுக்கான அரிசி மரக்கறி மீன் இறைச்சி வகைகளை வாங்கும் போது கூட தரம் பார்த்து தேடி வாங்கும் போது வாழ்நாள் முழுதும் தொடரக்கூடிய திருமண பந்தத்தில் சாதி பார்ப்பதில் என்ன தவறு என்று கேட்பது சரியா?

4. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களுக்கு பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கத் தெரியாது. ஊத்தையர்களும் குழப்படிக்காரர்களுமான அவர்களது பிள்ளைகளுடன் எங்களது பிள்ளைகள் சேர்ந்து கெட்டுப் போய்விடக் கூடாது என்று நினைக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது என்று சொல்வது சரியா?

பிழை என்பது தான் என்னுடைய பதில். இல்லை இவையெல்லாம் சரியான நியாயமான கருத்துக்கள் என்று நினைப்பவர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.

எனவே நான் என்னுடைய கருத்தியல் தளத்தில் 'புலம் பெயர்ந்த நாடுகளில் சாதியத்தக்கு புத்துயிர் அளிக்கப்படுகிறது. அது இளைய தலை முறையினரை அடையாளம் இழக்கச் செய்கிறது. தாயக விடுதலைக்காக நாங்கள் எல்லோரும் ஒன்றுபடுவதை தடுக்கிறது' என்ற முடிவுகளோடு இந்தக் கட்டுரையைத் தொடர்கிறேன்

புலம்பெயர்ந்த நாடுகளில் சாதியத்துக்கு புத்துயிர் ஊட்டப்படுவதற்கு நம்மவர்களுக்கு எற்பட்டள்ள மனஅழுத்தங்களும் அதனால் எற்பட்டுள்ள ஒருவிதமான மனநோயும் தான் அடிப்படைக் காரணங்களாகும்.

1970 களின் முற்பகுதி வரை மேற்குலகிற்கு புலம் பெயர்வது என்பது உயர்கல்வியின் நிமித்தமும் தொழில் நிமித்தமுமே நடைபெற்றது. அதிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த மிகவும் வசதி படைத்த மேற்தட்டு பிரிவினருக்கே அது சாத்தியமானது. அதிலும் எலிசபெத் மகாராணி குடியிருக்கும் இலண்டன் மாநகருக்கு செல்வதும் அவரது மொழியான ஆங்கில மொழியில் கல்வி கற்பதும் இந்துக்கள் கைலாசத்தக்கும் வைகுண்டத்துக்கும் செல்வதை கிடைத்தற்கரிய பெரும் பேறாக கருதியதற்கு ஒப்பானதாக இருந்தது. தமிழர்தாயகத்திலிருந்த ஏனைய மக்களுக்கு லண்டன் செல்வதும் தங்களது பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வி கற்பிப்பது என்பதும் ஒரு கனவாகத் தான் இருந்தது. ஆனால் 1977 க்கு பின்னர் பௌத்த சிங்கள பேரின வாதம் முனைப்புடன் தமிழ் மக்களை அழிக்கத் தொடங்கிய பின்பு இந்த நிலைமை மாறி இந்தக் கனவை நனவாக்கலாம் என்ற நிலைமை உருவானது. ஆனால் புலம்பெயர்ந்த எல்லோராலும் லண்டன் மாநகரத்துக்கு செல்வது சாத்தியமில்லாமல் போனது. கடலிலே பயணம் செய்யும் கப்பல் புயலிலே சிக்கி தனது பயணத்தை தொடரமுடியாமல் ஏதோ ஒரு நாட்டின் கரையை தொடுவது போலவே நம்மவர்களும் பிரான்ஸ் சுவீஸ் ஜேர்மனி இத்தாலி ஸ்கண்டிநேவியன் நாடுகள் என்ற பல நாடுகளில் தஞ்சமடைந்தார்கள். ஒரு கட்டத்திற்குப் பின்னர் ஏதாவது ஒரு நாட்டுக்குச் சென்றால் சரி என்ற நிலைமை வந்துவிட்டது.

நன்கு படித்த அல்லது ஓரளவுக்கு படித்த ஆங்கிலம் தெரிந்த ஒரு பிரிவினரும் அடிப்படை கல்வியை மட்டும் பெற்ற பிரிவினருமாக எமது மக்கள் இந்த நாடுகளில் தஞ்சமடைந்து போது பழக்கமில்லாத சூழலும் முன்னொரு போதும் கேட்றிந்திராத மொழியும் அவர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்து. ஜேர்மன் சுவீஸ் போன்ற நாடுகளில் சமூக உதவிகளும் தங்குமிட வசதிகளும் கிடைத்தாலும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இவர்களே உழைத்து அதனை பெற வேண்டிய நிலை இருந்து.

உழைப்பு என்று வருகிற போது மொழி தெரியாத நிலையில் அடிமட்ட வேலைகளைத் தான் செய்ய வேண்டி இருந்து. படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடின்றி எல்லாரும் எச்சில் கோப்பை கழுவினார்கள் கழிப்பறைகளை துப்பரவாக்கினார்கள். குப்பை அள்ளினார்கள். இந்த வேலைகள் அவ்வளவு சுலபமானவையாக இருக்கவில்லை. மொழி தெரியாத நம்மவர்களை வெள்ளை முதலாளிகள் கசக்கிப் பிழிந்தர்கள். என்ன தான் தொழில் சட்டங்கள் ஜனநாயக மரபுகள் இருந்தாலும் நம்பவர்கள் நவீன அடிமைகளாவே பாரிஸ் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டார்கள். இந்த மோசமான தொழில் ரீதியான அடக்கு முறை என்பது குடாநாட்டில் இருந்து புலம் பெயாந்து வந்த மேல்தட்டு மக்கள் ஓருபோதும் அனுபவித்திராத ஒன்றாகும். அதேவேளை அவர்கள் இங்கு செய்த அந்தத் தொழில்களும் காலாகாலமாக இழிவான தொழில்களாக அவர்கள் கருதியவையாகும். 'ஐயோ எங்களுடைய நிலை இப்படியாகிவிட்டதே' என்று இது அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை கொடுத்தது. மறுபறத்தில் பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு இந்த அடக்கு முறையோ இந்தத் தொழில்களோ ஒன்று புதியவை அல்ல. தாயகத்தில் ஒரு குளிர் சாதனப்பெட்டி வாங்குவது தொலைகாட்சி பெட்டி வாங்குவது வீட்டை ஆடப்பரப் பொருட்களால் அலங்கரிப்பது இவையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவையாக இருந்தன. ஆனால் இங்கே அதெல்லாம் அவர்களுக்கு சாத்தியமானது. பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள் பெரிய ஷோ கேசுகள் செட்டிகள் என்று ஆடம்பரப் பொருட்களாக வாங்கிக்குவித்து தங்களது கனவுகளை அவர்கள் நிறைவேற்றினார்கள்.

உண்மையில் ஒரு சமூகத்தில் தொழில் ரீதியான வேறுபாடுகள் ஒழிந்து பொருளாதார சமத்தவம் எற்படும் போது அந்தச் சமூகத்தக்குள் இருக்கும் அனைத்து எற்றத்தாழ்வுகளும் மறைந்துவிடும் என்பது ஒரு பொதுவான அரசியல் கோட்பாடு.

ஆனால் நமது சமூகம் ஒரு சாதிய சமூகமாக இருப்பதால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக போட்டியும் பொறாமையும் ஊரில் அப்படி இருந்தது இப்படி இருந்தது என்ற ஒப்பீடுகளும் தான் வளர்ந்தன.

நான் எற்கனவே குறிப்பிட்ட படி ஒவ்வொரு சாதிய அலகும் தன்னை தானே தன்னளவில் புனிதர்கள் என்ற நினைப்போடு மற்ற சாதிய அலகுகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதால் ஏனைய சமூகங்களிலும் இனங்கள் மத்தியிலும் ஏற்பட்ட தொழில் புரட்சி பொருளாதார மாற்றம் மற்றும் அரசில் புரட்சிகளால் வர்க்க அடிப்படையிலான காரணங்களின் அடிப்படையில் இருந்த சாதி அமைப்பு தகர்ந்தது போல எங்கள் மத்தியில் இருக்கும் சாதி அமைப்பு தகரவில்லை.

இங்குள்ள மக்கள் தங்களை தங்களது வட்டத்தின் மேலாண்மையை நிலையை நிறுத்தவதற்கு சாதியத்துக்கு புத்துயிர் அளித்தார்கள். அடித் தட்டு மக்களின் பிள்ளைகளுக்கும் தங்களது பிள்ளைகளுக்கும் இடையில் காதல் எற்பட்ட சாதிக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தங்களது பிள்ளைகளுக்கு சாதியப் பெருமைகளை சொல்லிக் கொடுத்தார்கள். தொழில் ரீதியாக பொருளாதார ரீதியாக காட்ட முடியாத தங்கள் மேலாண்மையை இவர்கள் சமுக அமைப்புக்கள் பொது நிறுவனங்கள் கோவில்கள் என்பவற்றின் பிரமுகர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டு தங்கள் வட்டத்தை பலப்படுத்திக் கொள்ள மறு பகுதியினர் நுகர் பொருள் கலாச்சாரத்தக்குள் விழுந்து தேசிய சிந்தனையை மறந்து வட்டி சீட்டு என்ற ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

லண்டனிலே இது முதலில் சென்ற டமிழ்சுக்கும் பிறகு சென்ற டேர்ட்டி டமிழ்சுக்குமான பிரச்சனையாக இருக்கிறது. சுவீஸ் நேர்வே போன்ற நாடுகளிலே தாயகச் செயற்பாட்டாளர்களின் முன்மாதிரியான செயற்பாடுகள் இந்த முரண்பாட்டைபெருமளவுக்கு குறைத்தருக்கிறன.

சாதியம் புலம் பெயர்ந்த இளைய சமூகத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதறகு சில உதாரணங்களை கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

1998 மாம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் இருந்த ஒரு இளைஞர் கும்பல் ஒன்றில் இருந்து அட்டகாசம் செய்து வந்த கபில் என்ற இளைஞனை நான் சந்தித்து அவன் அப்படி மாறியதற்கான காரணத்தைக் கேட்டேன். கட்டைப்பிராயை சேர்ந்த அவனுக்கு தந்தை இல்லை. தாய் மட்டும் தான் தாயையும் அவனையும் தாய் மாமன் தான் பிரான்சுக்கு கூப்பிட்டார். 10 வயதில் பிரான்சுக்கு வந்த அவனை தாய் துப்பரவு பணி செய்தே படிப்பித்தார். நன்றாகப் படித்து மருத்துவகல்லூரியில் 3ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நேரத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாக் கொண்ட சட்டக் கல்வி பயின்ற வந்த ஒரு பெண்ணை அவன் 3 வருடமாக காதலித்தான். இந்த விடயம் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் இவனின் பூர்வீகத்தை ஆராந்து இவன் சாதி குறைந்தவன் தகுதி இல்லாதவன் என்று கூறி அந்தப் பெண்ணின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிட்டார்கள். அத்தோடு இலண்டனில் இருந்த தங்கள் உறவுக்கார பொடியன் ஓருவனுக்கும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்க எற்பாடு செய்து விட்டனர். இதை அறிந்த அவன் தனது நண்பர்களோடு சேர்ந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ய முற்பட்டபோது காவல்துறையினர் பிடித்து விட்டனர். தன்னை வலுக்கட்டாயமாக கடத்த முற்பட்டது என்று அந்தப் பெண் கொடுத்த முறைப்பாட்டால் இவனுக்கு 18 மாதம் சிறைத் தண்டனை கிடைத்தது. இவன் சிறைத் தண்டனை அனுபவித்த நேரத்தில் அவளுக்கு திருமணமாகிவிட்டது. தண்டனை முடிந்து வெளியே வந்தவன் படிப்பை தொடராது குடிக்கப்பழகி சமூகத்தின் மீதான வெறுப்பால் தெருச் சண்டியனாக மாறிவிட்டான். நாடு போராட்டம் அவனது தாய்பட்ட கஷ்டம் இவை பற்றி எல்லாம் நான் அவனுக்கு எடுத்து விளக்க முற்பட்ட போது அவன் அதை கேட்கும் கட்டத்தை தாண்டி விட்டான்.

இன்னொரு இளைஞனின் கதை வித்தியாசமானது.

அவனது பெயர் கஜன். அவனது தாய்க்கு அவனது அப்பா இரண்டாம் தாரம். முதன் கணவன் அபுதாபியில் வேலைக்குப் போனபோது இறந்துவிட்டார். அவருடன் அபுதாபில் வேலை செய்த அவனது தாய் அவருக்குப் பிறந்த ஒரு மகனுடன் 1981 ம் ஆண்டு பிரான்சக்கு வந்தா. 1983 ம் ஆண்டு இங்கே பாரிசில் அவனது தந்தையை காதலித்து இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டா. 1984 ம் ஆண்டு இவன் பிறந்தான். 1993 ம் ஆண்டு இவனது தந்தை சாதி குறைந்தவர் என்று இவனது தாய்க்கு தெரியவருகிறது. அதிலிருந்து தனக்கு பொய் சொல்லி ஏமாற்றி விட்டதாக ஒவ்வொருநாளும் வீட்டில் சண்டை. தனது முதல் தாரத்து மகனை லண்டனில் இருந்த தனது சகோதரனுடன் தங்கி இருந்து படிக்க அனுப்பி வைத்த கஜனின் தாய் தகப்பனின் மேலுள்ள கோபத்தை வைத்து இவனுக்கு அடிப்பதும் 'கொப்பன்ரை புத்திதானே உனக்கு இருக்கும்' என்று இவனை திட்டி அவமானப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். பொறுத்தப் பொறுத்துப் பார்த்த அவன் தனது 16 வது வயதில் விட்டை விட்டு வெளியேறி லா சப்பல் குழுக்களுடன் சேர்ந்து அவர்களுடனேயே தங்க ஆரம்பித்தான். நீ செய்தது சரியா உன்னுடைய எதிர்காலம் பற்றி சிந்தித்தியா என்று நான் அவனைக் கேட்ட போது “எதிர்காலமா அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இப்ப நான் சந்தோசமா இருக்கிறன். இப்ப என்னை ஒருதரும் பேச மாட்டினம். எனக்கு ஒருதரும் அடிக்க மாட்டினம்” என்றான்.

இப்படி சாதி என்ற கொடிய மனநோயால் சிரழிக்கப்பட்ட நூற்றக்கணக்கான இளைஞர்களுடைய வரலாற்றை பக்கம் பக்கமாக என்னால் உதாரணம் காட்டமுடியும். தயவு செய்து இந்தப் பிரச்சனையை நாங்கள் விதண்டாவாதம் செய்வது - மூடி மறைக்க நினைப்பது என்று இல்லாமல் இந்தக்களத்தில் வந்து பதிவுகளை செய்யக் கூடிய - இவற்றைப் படிக்கக் கூடிய இளைய தலைமுறையினர் புலம் பெயர்ந்த சமூத்தில் இதை ஒழிப்பதற்கு அடுத்த தலைமுறைக்கு இது பரவாமல் தடுப்பதற்கு உங்களைப் போன்ற இளைஞர்களது எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை அதன் பாதிப்பக்களில் இருந்து மீட்பதற்கு என்ன செய்லாம் என்பதை தயவு செய்து ஆக்கபூர்வமாக அலசுங்கள். தாயக விடுதலையை விரைந்து முன்னெடுப்பதற்கு தேசித்தலைவர் புலம்பெர்ந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் நப்பிக்கையை காப்பாற்றுவதற்கு இருக்கும் தடைக்கற்களை தகர்ப்பதில் உங்களுடன் நானும் கை கோர்க்கிறேன்

சிவா சின்னப்பொடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சிவா சின்னப்பொடி அவர்களே! உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மைதான். உங்களோடு இணைந்து செயலாற்ற உறுதியாக இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிவா சின்னப்பொடி அவர்களே நீங்கள் கூறிய கதைகள் நிதர்சனத்தை எடுத்துக்காட்டினாலும், சாதியம் ஒன்றுக்கான காரணத்துக்காக காதல் தோல்விகள், ஏமாற்றங்களால் மட்டும் கும்பல்களுடன் சேர்ந்து குடிப்பது, தவறான செய்கைகளில் ஈடுபடுவது என்பது போன்ற நிகழ்வுகள் நடப்பது இல்லை.

கும்பலுடன் சேர்வதில் சாதியம் ஒரு பொருட்டாகவே கருதப்படுவது இல்லை.

இன்று நண்பகல்12.20 க்கு ஒறிலா வீல் நகரத்திலிருந்து பாரிஸ் ஊடாக கோர்பய் எசன் நகரத்தக்குச் செல்லும் RER -D புறநகர விரைவுத் தொடருந்தில் பயணித்த போது சார்சல் நகரத்தில் ஏறிய இரண்டு தமிழ் இளைஞர்களது உரையாடல் என் கவனத்தை ஈர்த்து….

இளைஞன்1.. மச்சான் நான் பரிசுக்குள்ள ஒரு ஸ்ரூடியோ (ஒரு அறை மட்டுமுள்ள குடியிருப்பு ) எடுக்கப்போறன்..

இளைஞன2 எந்த இடத்தில பார்த்திருக்கிறாய்..

இளைஞன்1.. பொபினியலை மெற்றேவுக்கு பகத்தில 780 யுரோ வாடகை. எங்கடை பொடியள்ஆரும் இந்தால் சொல்லு சமறிக்கு வச்சிருக்கலாம்.

இளைஞன்2.. எங்கடைபொடியள் எண்டு எனக்குத் தெரிஞ்சதா ஒருதரும்இல்லை.ஆனால் என்னோடை வேலை செய்யிற ஒரு பொடியன் வீடு தேடுறான். நான் வேணுமெண்டால் அவனட்டை சொல்லிப் பாக்கிறன்….

இளைஞன்1 ஆள் ஆர் எந்த ஊர் என்ன மாதிரி..?

இளைஞன்2 அவன் நல்ல பொடியன் சங்கானையோ பண்டத்தரிப்போ சொந்த ஊர் எண்டு நினைக்கிறேன்.அவன் “ந” எண்டு நினைக்கிறன்.

இளைஞன்1 ஐயோ வேண்டாம். ஊந்த ‘நனா’ ‘பனா’க்களோடை ஒரு வீட்டுக்கை இருந்து ஒண்டா திண்டு குடிச்து எண்டு ஊருக்குத் தெரிஞ்சால் எங்டை ஆக்கள் கலியாணம் கட்ட பொம்பிளையே தரமாட்டாங்களடாப்பா..நீ எங்கடை பொடியள் ஆரும் இருந்தால் சொல்லு…..

எழும்பி கன்னத்தை பொத்தி குடுக்க வேண்டும் என்று ஆத்திரம் வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி ஒழிஞ்சு போச்சு... சும்மா சும்மா சாதி இருக்கெண்டு சொல்லி நீங்கதான் மக்களிட்ட சாதிய திணிக்கிறிங்க :P

போர்சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?

போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்றுவேண்டுமானால் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. மறைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாகக் கூறினால். ராணுவம் குண்டு வீசப்போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர்பிழைக்க ஒடி கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படி நிலை வெளிபடும். ஓடி தஞ்சமடையும் போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.

இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்த பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும்,உத்திரவுகளையு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.