Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம்கள் விவகாரத்தில், தவறாக வழிநடத்தப்படும் தமிழ் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு இரவோடு இரவாக அணிந்த துணியோடு வெளியேற்றப்பட்ட 72,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம்களில் முல்லைத்தீவு முஸ்லீம்களும் அடங்குவர். எக்குற்றமும் இழைக்காத அப்பாவி முஸ்லீம்கள் தமது மொழிச் சகோதரர்களான L.T.T.E. யினரால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 27 வருட அல்லோலகல்லோலப்பட்ட அகதி வாழ்வின் பின், தமது பரந்த குடும்பத்தோடு ஆர்வத்தோடும் ஆசையோடும் தமது பாரம்பரிய தாயகத்து மண்ணை நோக்கிச் சென்ற போது அதற்கு அதே மொழிச் சகோதரர்களால் எதிர்ப்பும் தடையும் காட்டப்படுவதென்பது தமிழ் மொழி பேசும் அதே சிறுபான்மையைச் சேர்ந்த ‘தற்போது தவறாக வழிநடத்தப்படும் தமிழ் குழுக்களுக்கு’ எவ்விதத்திலும் ஒவ்வாத செயலாகும்.

இது தார்மீக தர்மத்திற்கும் மானிட மனச்சாட்சிக்கும் முரண்படுவதோடு எந்தவொரு மனித உள்ளம் படைத்தவனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத காரியமுமாகும். தர்மங்கள் அதர்மங்களாக உருவெடுக்கும் போது பாதிக்கப்படும் அப்பாவிகளும் ஆவேசம் கொள்ளத்தான் செய்வார்கள். வரலாற்றுத் தவறைச் செய்த, வடு மாறாத குற்றத்தைப் புரிந்த புலி இயக்கத் தமிழ் மக்கள் தற்போதாவது தங்கள் பாவத்தை தீர்த்துக் கொள்ள இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியேற்றப்பட்ட மொழிச் சகோதரர்களான முஸ்லீம்களை வரவழைத்து, அரவணைத்து, கடமை போற்றி அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் வாழ உதவி செய்வதானது அவர்களால் தப்பித்துக்கொள்ள முடியாத தார்மீகக் கடமையாகும்.

அன்பின் உடன் பிறவா தமிழ் நல்லுலகின் மொழிச் சகோதரர்களே! அன்று 1983 கறுப்பு ஜுலையை கொஞ்சம் அதிருப்தியுடனாவது உங்கள் ஞாபகத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். தெற்கில் நாடளாவிய ரீதியில் அப்பாவித் தமிழ் மக்கள் பேரினவாத இன வெறியர்களால் கொலை செய்யப்பட்ட போது – உடமைகள் நொறுக்கப்பட்டு தீயிடப்பட்டு துவம்சம் செய்யப்பட்ட போது – நிர்க்கதியாய் தவித்து நின்ற போது தம்முயிரைத் துச்சமாக நினைத்து உதவிக் கரம் நீட்டி தங்குவதற்கு இடம் கொடுத்து உணவிட்டு நீர் கொடுத்து பாதுகாத்தவர்கள் உங்கள் மொழிச் சகோதரர்களாகிய முஸ்லீம்கள் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களது உடமைகளும், வீடுகளும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போது கச்சை கட்டிக்கொண்டு நீரிறைத்து தீயணைத்து உதவிய கரங்கள் முஸ்லீம்களின் கரங்கள் தான் என்பதையும் நீங்கள் மறந்து விடாதீர்கள்.

தனிப்பட்ட முறையில் வெள்ளவத்தையிலும் நான் எனது வீட்டில் ஏறக்குறைய 10 தமிழ் சகோதரர்களையும் எனது மைத்துனியின் பக்கத்து வீட்டில் 17 தமிழ் சகோதர சகோதரிகளையும் ஏறக்குறைய 14 நாட்கள் இருப்பிடம் அளித்து உணவளித்து தேவையேற்பட்ட போது உடையளித்து உதவிய முஸ்லீம் சகோதரர்களில் நாங்களும் ஒரு சிலர் என்பதை தாழ்மையோடு தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் ‘ இன்று வடபுல முஸ்லீம் மக்களின் குடியேற்றத்தை முல்லைத்தீவிலும் ஏனைய இடங்களிலும் கொடி பிடித்து நடைபோட்டு சுலோகங்கள் தூக்கி எதிர்ப்புத் தெரிவித்து விரோதம் காட்டும் எனது அன்பின் தமிழ் நெஞ்சங்களே! இதை செய்ய உங்களால் எப்படி முடிந்தது? என்பதையும் கேட்டு வைக்க விரும்புகிறேன்.

நீங்கள் தவறாக வழிநட்டத்தப் படுகின்றிர்களா? என்பது புதிரான கேள்வியாகும். அன்று தமழ் ஈழப் போராட்டத்தின் போது தமிழ் நாட்டில் ஒரு அட்டைக் கத்தியாவது உங்களிடம் இல்லாதிருந்த போது, காலஞ்சென்ற முஸ்லீம் பழணி – பாவாக்கள் தான் உங்களோடு கரம் கோர்த்து உதவினார்கள் என்பதை நீங்கள் எப்படி மறக்க முடியும். உலகப்; பொதுமறையாம் திருக்குறள் கூறும் அறம் எங்கே? தர்மத்தைப் போதிக்கும் பகவத் கீதை எங்கே? கண்ணகியின் சிலம்பில் நீதி கண்ட நீங்கள், தேர் கால் சோழன் தேரில் நிலைநாட்டிய நீதியை எங்கே மறைத்தீர்கள்? சமபலமற்ற நிலையில் ‘இன்று போய் நாளை வா’ என்ற யுத்த தர்மத்தை முழங்கிய இராமனின் தர்மநெறி எங்கே? ‘உண்மையைத் தேடுங்கள்;;ளூ அது உங்களை விடுவிக்கும்’ என்ற யேசுநாதரின் உண்மையை தேடி அறியும் பாதை எங்கே? தேவாரத்தின் தெய்வீக வழிகாட்டலை எங்கே மறந்தீர்கள்? முல்லைத்தீவில் 440 பேர்களாக உங்களால் 27 வருடத்திற்கு முன்பு வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் 27 வருட துன்பியல் வாழ்வின் பின் 1400 ஆக எப்படி வரலாமென நீங்கள் கேட்கின்றீர்களே, 27 வருடம் என்பது ஒரு புதிய தலைமுறையின் உற்பத்திக் காலம் என்பதை நீங்கள் அறியாமலா இருக்கின்றீர்கள்? விரிவுபடுத்தபட்ட குடும்ப அங்கத்தவர்கள் தான் இந்த 1400 பேர்கள் என்பதை புத்தி ஜீவிகளான நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.

வடமாகாண அதிகார சபையால் ஆறு தடவைகள் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்திற்கு நிலம் மீட்புச் செய்து தருவதாக உறுதியளிக்கப்பட்டதன் நிமித்தம், அதை நம்பி வந்த மக்களுக்கு, வீட்டுக்கும், ஊருக்கும், நாட்டிற்கும் நீதி சொல்லும் முதலமைச்சரின் நீதி வழுவா மானிட தர்மத்துக்கும், அதே போன்று தமிழ் பேசும் அனைத்து மக்களாலும் கௌரவமாகவும் கண்ணியமாகவும் மதிக்கப்பட்டு நீதி தேவன் என்று புகழப்படுகின்ற முதலமைச்சர் கெரளவ விக்ணேஸ்வரனின் புனிதமான மனச்சாட்சிக்கும் விடுகிறோம். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது, புதிதாக அகதிகளாக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களை, ஏற்கனவே 1990ல் புலிகளால் அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம்களின் குடியேற்றத்தை ஒத்தி வைத்து புறம் தள்ளி விட்டு, தமிழ் அகதிகளுக்கு மீள்குடியேற்ற வசதிகளைச் செய்து கொடுத்தவர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த அன்றைய மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த றிஸாட் பதியுதீன் தான் என்பதை உங்கள் மனக் கண் முன் நிறுத்த விரும்பகின்றேன். எஸ். சுபைர்தீன் செயலாளர் நாயகம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=149888 .

 

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துக்கு மட்டும்  நீங்கள் உங்களை முஸ்லீமாக காட்டிவிட்டு  ஒரு இயக்கம் போன்ற தொரு தோற்றப்பாடுடன் ஒட்டு மொத்த வடகிழக்கையும்  தங்களது கைக்குள் கொண்டு வரவேண்டும் நினைப்பதும் அதற்கு அரபுலகம் தங்களக்கு உதவி செய்வதும்  நாங்கள் நன்கு அறியாததல்ல  சிங்கள மக்கள் தெரிந்தே கொன்றார்கள் ஆனால் நீங்கள் நிற்க வைத்தே கொல்கிறீர்கள்  கொன்று விட்டு சொல்லியும் காட்டுகிறீர்கள் உதாரணம் நிறைய இருக்கு  அம்பாறை மாவட்டம் முதல் வரைக்கும் இன்னும் எத்தனையோ பிரதேசங்கள் நீங்கள் செய்த அட்டூழியத்திற்கு சான்று சிங்களவன் கூட தமிழ் மக்களுக்கு ஆதரவு தந்தான் கொழும்பில் என்ன இலங்கையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அங்கு படித்தவர்களுக்கு தெரியும் ஆனால் அவன் காட்டிக்கொடுக்க இல்லை நீங்கள் காட்டிக்கொடுத்ததை உலகமே அறியும்.  அப்போ ஏன் கிழக்கில் அத்து மீறி காணிகளை பிடிக்குறீர்கள்  உதாரணம் பாடசாலைக்கு சொந்தமான  காணி 

நீங்கள் ஒரு வைரஸ் தான் பரவிட்டால் ஒட்டு மொத்த இலங்ல்கைகே ஆபத்து நீங்கள்  புனித இஸ்ஸாம் அல்ல அ ந்தமதம் போதிக்கும்       போதனைகள       கடைபிடிப்பவர்களாக இருந்தால் இன்று நீங்கள் வடகிழக்கில் தனித்துவமான இனமாக வாழ்ந்திருப்பீர்கள் ஆனால் நீங்களோ இலங்கை தீவில் நல்ல விலாங்கு மீன்போல  வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்   இதுவரை காலமாக  நீங்கள் திருந்தப்போவது இல்லை 

எனக்கு முஸ்ஸ்லீம்கள் கோபம் கிடையாது ஆனால்  உங்களுடைய அரசியல் வாதிகள் தப்பித்துக்கொள்ள ஒட்டு மொத்த முஸ்லீம்கலையும் வேண்டும் மென்றே திசைதிருப்புகிறார்கள்  தமிழர்கள் பக்கம்  

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலிருந்து போனவர்களுக்கு அவர்களது பரம்பரை நிலம் வேண்டும். நியாயம்.

அதற்காக அடாவடியாக காடுகளை அழித்து குடியேறுவதா?

வில்பத்து சரிவரவில்லை என்றால், தமிழ் பேசும் சகோதரம்.., பிட்டும் தேங்காப்பூவும் என்று முல்லைத்தீவு பறிக்குள் கைவிடுவதும், கிழக்கில் பள்ளிக்கூட மைதானத்தை மடக்குவதும், மன்னாரிவ், தேவாலய காணியை, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மடக்க முயல்வதும் எந்த ஊரு நியாயம்?

15 hours ago, colomban said:

முஸ்லிம்கள் விவகாரத்தில், தவறாக வழிநடத்தப்படும் தமிழ் மக்கள்

இதுவரை சிங்களவர்களை "சிங்களம் பேசுபவர்கள்" என்றும் முஸ்லிம்களை "இசுலாமை பின்பற்றுபவர்கள்" என்றும் குறிப்பிட வக்கில்லாத அரைவேக்காட்டு ஊடகங்கள் பல  தமிழர்களை "தமிழ் பேசுபவர்கள்" என்று தரமிறக்கி தமிழர்களை தவறாக வழிநடத்தி வந்துள்ளன. தமிழர் அதிலிருந்து விடுபடவேண்டும்.

நாம் தமிழர்கள் தாம். தமிழ் பேசுபவர்கள் இல்லை! எங்களை "தமிழ் பேசுபவர்கள்" என்று அழைக்கும் காடைத்தனத்தை ஏற்றுக்கொள்ளும் கீழ்நிலை மனோபாவத்தில் சில தமிழர்கள் இருப்பதுவும் தமிழினத்தின் சாபக்கேடு.

வீரகேசரி பத்திரிகை வித்தியாவின் கொலைவழக்கில் உள்ள தமிழ் நீதிபதிகளை "தமிழ் பேசும் நீதிபதிகள்" என்று அழைத்து அது ஓர் அரைவேக்காட்டு பத்திரிகை என்பதை நிரூபித்து வருகிறது.

15 hours ago, colomban said:

தனிப்பட்ட முறையில் வெள்ளவத்தையிலும் நான் எனது வீட்டில் ஏறக்குறைய 10 தமிழ் சகோதரர்களையும் எனது மைத்துனியின் பக்கத்து வீட்டில் 17 தமிழ் சகோதர சகோதரிகளையும் ஏறக்குறைய 14 நாட்கள் இருப்பிடம் அளித்து உணவளித்து தேவையேற்பட்ட போது உடையளித்து உதவிய முஸ்லீம் சகோதரர்களில் நாங்களும் ஒரு சிலர்

பொய்களுக்கு அளவுக்கணக்கு இல்லை! நீங்கள் அடித்த கொள்ளைகள் எவ்வளவு? செய்த கொலைகள் எவ்வளவு? அதை சொல்லுங்கள்.

முஸ்லிம்கள் முதலில் 1983 இல் கொழும்பில் தமிழர்களிடம் கைப்பற்றிய மற்றும் கொள்ளையடித்த  சொத்துக்களை மீள அளிக்கட்டும். அத்துடன் வடக்கு கிழக்கில் தமிழரிடம் அபகரித்த காணிகளை மீள அளிக்கட்டும். அத்துடன் பிடித்த கள்ளக்காணிகளை கைவிடட்டும். கோவில்களில் செய்த அட்டூழியங்களுக்காக அப்பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களை அகற்றட்டும். சிங்களப் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து செய்த தமிழினப் படுகொலைகளுக்காக சம்பந்தப்பட்ட அனைத்து முஸ்லிம்களையும் சிறைகளில் அடைக்கட்டும். முஸ்லிம்கள் துணையுடன் படுகொலையான தமிழர்களுக்கு உரிய நட்டஈடுகளை கொடுக்கட்டும். அதன் பின்னர் முஸ்லிம்களுக்கு நியாயமான பிரச்சினைகள் இருந்தால் அவற்றை ஆராய்ந்து தீர்த்துக்கொள்ளலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு முன்னர் தாங்கள் மூதூர்.. கல்முனை.. நிலாவெளி.. கிண்ணியா.. செங்கலடி... மாமாங்கம்.. மீராவோடை.. அம்பாறையில் என்று இன்னோரென்ன... பிரதேசங்களில்.. தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகளையும் இன சுத்திகரிப்புச் செயற்பாடுகளையும்.. பிரமதாச அரசோடும்... சிங்கள அரச படைகளோடு கூட்டு நின்றும் செய்த படுகொலைகளையும் யாரும் மறப்பதற்கில்லை. அதற்கு மேலாக.. முஸ்லீம் ஊர்காவல் படை என்று ஒன்றை உருவாக்கி.. தமிழ் மக்களின் கிராமங்களை அழித்து.. தற்போதைய அமைச்சர் ஹிஸ்புல்லா தலைமையில்.. அஷ்ரப்பின் வழிகாட்டுதலில்.. தாங்கள் நடாத்திய ஜிகாத் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாத வெறியாட்டங்கள் பற்றியும் உலகம் அறியும்.

அதுக்கு மேல்.. கொழும்பில் நின்று அரச உளவுப் பிரிவோடு சேர்ந்து நின்று தமிழ் மக்களை கைது செய்து துன்புறுத்தக் காரணமாக இருந்தீர்கள். யாழ்ப்பாணம் சிங்கள ஆக்கிரமிப்புக்குள் போனதன் பின் கிருசாந்தி குமாரசாமி படுகொலையில் இருந்து வித்தியா படுகொலை வரை உங்களின் பங்களிப்பு நேரடியாகவோ.. மறைமுகமாகவோ இருந்து வந்துள்ளது.

மேலும்.. வடக்குக் கிழக்கில்.. போதைப்பொருள் கடத்தலோடு மற்றும் சமூவிரோதச் செயல்களோடு.. உங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவு அமைந்திருப்பது.. கொழும்பில்.. நீங்கள் நடத்தி வரும்.. வியாபாரங்கள்.. நடவடிக்கைகள் பற்றி அறிந்தவர்களுக்கு புதிதாகத் தோன்றாது.

இவ்வளவு கஸ்டங்களையும் உங்களால்.. அனுபவித்த.. அனுபவிக்கும் தமிழ் மக்களுக்கு இன்று நீங்கள் ஆற்றும் கருமம்... இந்தியப் படைகள் காலத்தில் உங்களுக்கு அடைக்கலம் தந்து காத்து நின்ற தமிழ் மக்களுக்கு நீங்கள் ஆற்றும் கருமம்..  உங்கள் மனச்சாட்சிக்கு எப்படி உறுத்தலாக இல்லையோ.. அதேபோல் தான் உங்களின் அநியாயங்களில்.. ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட நினைக்கும் தமிழ் மக்களுக்கும் சிந்தனை உள்ளது. இதில் எது தர்மமான சிந்தனை. தர்மம்.. சத்தியம் சோதனைகளை சந்திப்பது உலக வழமை. காரணம்.. அநியாயத்துக்கு அதிகம் முன்னுரிமை இந்த உலகில் உள்ளதால்.

முஸ்லீமோ.. சிங்களவனோ.. அவர்களின் நியாயங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ள தமிழ் மக்கள்.. நிச்சயம் அநியாயங்கள்.. மத.. இன.. மற்றும் அதிகாரத்திமிரோடு தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட ஒருபோதும் யாருக்கும் அடிபணிந்து ஒத்துழைக்கமாட்டார்கள். 

Edited by nedukkalapoovan

ஆகா! ஆகா! இப்புடியும் கதையளக்க தொடங்கீட்டினமோ? ஏமாறுவதற்கு இன்னமும் இரண்டொரு தமிழன் இருப்பான் என்று நம்பிக்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.