Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுமக்களின் காணி விடுவிப்புக்கு பிரித்தானியா பாராட்டு

Featured Replies

பொதுமக்களின் காணி விடுவிப்புக்கு பிரித்தானியா பாராட்டு
 

 

இலங்கையின் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, பிரத்தானியா தன்னுடை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.  

அத்துடன், கடந்த வருடம் பிரித்தானியா மற்றும் இலங்கை ஆயுத படைகளுக்கிடையிலான தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டமையையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது. 

“பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, ஆயுதப் படைகளை பாராட்டுகின்றேன். மேலும், காணிகள் விடுவிக்கப்படின் இரண்டு சமுதாயத்தினருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும்” என, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌறிஸ் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, வட அயர்லாந்து தொடர்பில் ஐக்கிய
இராச்சியத்தின் சொந்த அனுபவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், மோதலின் பின்னரான நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டார். 

தேசிய நலன் மற்றும் இராணுவத்துக்கான நலன் ஆகியவற்றில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை நவீன இராணுவத்துக்கு அவசியமானது எனக் குறிப்பிட்ட அவர், உண்மையறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு நல்லிணக்கத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும் எனவும் இது தேச நலனுக்கு உகந்தது எனவும் கூறினார். 

2016 ஜனவரி தொடக்கம், ஐக்கிய இராச்சியமும் இலங்கையும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தியுள்ளன. இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் இதற்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பொதுமக்களின்-காணி-விடுவிப்புக்கு-பிரித்தானியா-பாராட்டு/175-201672

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வகுத்த சிறிலங்கா தேசியத்தை பிரிக்க  வேண்டுமென‌ போராடினது தப்புத்தான்...

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, putthan said:

நீங்கள் வகுத்த சிறிலங்கா தேசியத்தை பிரிக்க  வேண்டுமென‌ போராடினது தப்புத்தான்...

சிலோன் தேசியத்தை.. என்று சொல்லனும். இப்பவும் அவை சிலோன் ரீ ன்ர ருசில தான் இருக்கினமே தவிர.. அங்க நடக்கிற வேற ஒன்றும் அவைக்குத் தெரியாது. ஆகவே.. அவை எதையும் பாராட்டுவினம்.. இராணுவ.. ஆயுத ஒத்துழைப்புக்களும் கொடுப்பினம்.

அவை யாரு.. இரண்டு உலகப் போர்களிலும் மிச்சப் போர்களிலும் வால்பிடிச்ச ஆக்களில்ல. உலகத்தையே ஆண்டவையாம்.. கனோனால.. சுட்டுச் சுட்டு. இவை எல்லாம் மனிதாபிமானம்.. பேசிறது.. மற்றைவைய பயங்கரவாதிகள் என்பதும்... என்ன உலகமோ.  :rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.