Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம் வாள்வெட்டு ; மூவர் கைது

Featured Replies

சுன்னாகம் வாள்வெட்டு ; மூவர் கைது

 
 
சுன்னாகம் வாள்வெட்டு ; மூவர் கைது
 

சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் முறையே 21,23,24 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு  11.30 மணியளவில் இனந்தெரியாத குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின்போது வாள்வெட்டுக் காயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

http://uthayandaily.com/story/15980.html

  • தொடங்கியவர்

சுன்னாகம் வாள்­வெட்டு சம்­ப­வத்தில் மூவர் காயம்

 

 

சுன்னாகம் பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பகு­தியில் இடம்­பெற்ற வாள்­வெட்டுச் சம்­ப­வத்தில்  மூவர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். 

jaffna-koapay-knife.jpg

இந்த  சம்­பவம் தொடர்பில்   மூவரை பொலிஸார் கைது­செய்­துள்­ளனர். 

சுன்னாகம் பொலிஸ்­பி­ரி­விற்­குட்­பட்ட ரொட்­டி­லா­லடி மரு­த­னார்­மடம் பகு­தியில் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு வேளை குழு­வாகச் சென்­ற­வர்கள் அப்­ப­கு­தியில்  மற்­றொரு குழு­வுடன் தர்க்­கத்தில் ஈடு­பட்­டுள்­ள­துடன்  வாளால் வெட்டி காயப்­ப­டுத்திச் தப்பிச் சென்­றுள்­ளனர். 

சம்­பவம் தொடர்­பாக சுன்னாகம் பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­வர்கள் என கரு­தப்­படும் மூவரை நேற்­றை­ய­தினம் சுன்னாகம் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

 வாள்­வெட்டில் காய­ம­டைந்த இருவர் தெல்­லிப்­பளை வைத்­தி­ய­சா­லை­யிலும் மற்­றொ­ருவர் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லை­யிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­றனர். 

 வாள்­வெட்டில் ஈடு­பட்­ட­வர்கள் என கைது­செய்­யப்­பட்ட ஒருவர் யாழ்.நகரின் பிர­பல்­ய­மான  பாட­சாலை ஒன்றில் வர்த்­தகப் பிரிவில் இம்­மாதம் பரீட்சை எழுத உள்ளார்.  

அண்­மைக்­கா­ல­மாக சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்ள நிலையில் இதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கென பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

http://www.virakesari.lk/article/22716

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் இளம் வயதில இப்படியான செயல்களில் ஈடுபடுவதன் காரணம் என்ன என்று புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

மிகவும் இளம் வயதில இப்படியான செயல்களில் ஈடுபடுவதன் காரணம் என்ன என்று புரியவில்லை

நாங்கள் சிறுவர்களாக இருந்த காலங்களில்...பல விடயங்கள் வெளிப்படையாக எமக்குச் சொல்லப் படவில்லை!

எம்மிடமிருந்து மறைக்கப் பட்டன!

நான் எப்படி ..அம்மாவின் வயிற்றுக்குள் வந்தேன் என்று கேட்டால்....கடவுள் கொண்டு வந்து வைத்தார் என்பார்கள்!

நாமும் திருப்திப் பட்டு விடுவோம்...!

இப்போதெல்லாம் அப்படியல்ல!

அவர்கள் விரைவாக வளர்ந்து விடுகின்றார்கள்! ( மனதளவிலும்...உடலளவிலும்..)

வாழ்க்கையை விரைவில் முடித்து விடுகின்றார்கள்!

அதாவது...நாம் இருபது வயதில் அடைந்த  மனநிலையை...அவர்கள் பதின்ம வயதுகளிலேயே அடைந்து விடுகின்றார்கள்!

 

அது தான் காரணம் என நினைக்கிறேன் புத்தன்!

 

நான் முதலாவது...கள்ளுச் சிறட்டையைத் தொட்டபோது .....எனக்கு வயது...இருபத்தி நாலு!

வெளியால சொன்னால்...வெட்கக்கேடு..!

நமக்குள்ளேயே இருக்கட்டும்!:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

ள்!

 

அது தான் காரணம் என நினைக்கிறேன் புத்தன்!

 

நான் முதலாவது...கள்ளுச் சிறட்டையைத் தொட்டபோது .....எனக்கு வயது...இருபத்தி நாலு!

வெளியால சொன்னால்...வெட்கக்கேடு..!

நமக்குள்ளேயே இருக்கட்டும்!:rolleyes:

உப்படியான விசயங்களை கடைசிமட்டும் சொல்ல மாட்டேன்... நானும் அப்படிதான்:10_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.