Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுக்கிகளுக்கு போராளிகளின் சாயம் பூசப்படுகிறது: வாள்வெட்டு குண்டர் குழுக்களும் கதாநாயக பிம்பமும்

Featured Replies

பொறுக்கிகளுக்கு போராளிகளின் சாயம் பூசப்படுகிறது: வாள்வெட்டு குண்டர் குழுக்களும் கதாநாயக பிம்பமும்
 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர் குழுவொன்று, இரு பொலிஸாரை வாள்களினால் வெட்டியிருக்கின்றது.   
தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானது என்று தெரிவிக்கப்படுகின்றது.   

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தாக்குதல்தாரிகளைக் கைது செய்வதற்காக, இராணுவம் உள்ளிட்ட முப்படையின் ஒத்துழைப்போடு, தேடுதல் வேட்டை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.  

கடந்த சில வருடங்களாகவே, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில், குண்டர் குழுக்களை உருவாக்குவதிலும் ஊக்குவிப்பதிலும் பல தரப்புகளும் ஈடுபட்டிருக்கின்றன.   
இந்தத் தரப்புகளின் எதிர்பார்ப்பும் நோக்கமும் வெளிநோக்கில் வேறுவேறாக இருந்தாலும் அடிப்படை நோக்கம் என்னவோ ஒன்றுதான்.   

அது, வடக்கைப் பதற்றத்தோடும் மோதல் நிலைமைக்குள்ளும் வைத்துக் கொள்வது.  
அரசியல் அதிகாரங்களுக்கான போராட்டத்தைத் தர்க்க நியாயங்களோடும் கனதியாகவும் முன்னெடுத்து வந்த தரப்பொன்றை நோக்கி, அதன் எதிர்த்தரப்புகள் சதித்திட்டங்களை ஏவிக்கொண்டிருப்பது வழமை.   

அப்படியான சூழலொன்றை, வடக்கில் உருவாக்கி வைத்துக் கொள்வது சார்ந்து, தென்னிலங்கை தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது. அதன்போக்கில், குண்டர் குழுக்களின் தேவை, தென்னிலங்கைக்கும் அதன் தேசிய பாதுகாப்புத் தரப்புக்கும் அவசியமாகவும் இருக்கலாம்.   

ஆனால், அதையெல்லாம் அறிந்து வைத்திருக்கின்ற தமிழ்த் தரப்புகளில் சில, இந்தக் குண்டர் குழுக்களை நோக்கி, கதாநாயக பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. அதாவது, ‘பொறுக்கிகள்’ மீது போராளிகளுக்கு உண்டான சாயத்தை பூச விளைகின்றன.  

தமிழ்ச் சினிமாப் பாணியில், அதிவேக மோட்டார் சைக்கிள்களில் வரும் இந்தக் குண்டர் குழுக்கள், பலவீனமானவர்களைத் தங்களது இலக்குகளாக்கிவிட்டுச் செல்கின்றன.  

இதனால், பாதிக்கப்படுவது என்னவோ தமிழ் மக்கள்தான். ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பித்த நேரத்தில், இலங்கை அரசாங்க இயந்திரத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களும் இன்றைக்கு நடத்தப்படுகின்ற தாக்குதல்களும் ஒன்றல்ல.   

ஆனால், புலிகளின் ஆரம்ப காலக் காட்சிகளை, யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் தாக்குதல்கள், பிரதிபலிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தெற்கில் கூறிக்கொண்டிருக்கின்றார். அதனூடு தன்னுடைய இனவாத அரசியலை முன்னோக்கிக் கொண்டு வர முடியும் என்று நம்புகின்றார்.   

அப்படியான தோரணையை வடக்கிலுள்ள சில ஊடகங்களும் மறைமுகமாக உருவாக்க முனைகின்றன. சில நேரங்களில், உண்மை வேறுமாதிரியானது என்கிற விடயத்தை அறிந்து வைத்திருந்தாலும் அதைப் பற்றி உரையாடுவதிலிருந்து, தமிழ்த் தரப்பு பின்நிற்பதும் வேதனையானது.  

குண்டர் குழுக்களை உருவாக்கி, அதனூடு தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்காக காத்திருக்கும் தரப்புகள், பெற்றோரின் கட்டுப்பாடுகளை மீறியுள்ள, பாடசாலைப்பருவத்தைக் கடந்த இளைஞர்களைக் குறி வைக்கின்றன.  

 ஏவல் கூலிகளாக, அதிவலுக் கொண்ட மோட்டார் சைக்கிள்களையும் போதைப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளும் அவர்கள், குண்டர்களாக மாறி நின்று, சமூகத்தின் சாபக்கேடாகப் பிரதிபலிக்கின்றார்கள்.   

எப்போதுமே அவர்களை உருவேற்றி வைத்துக் கொள்வதினூடு, காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் என்று சதிகாரர்கள் நம்புகின்றார்கள். ஆனால், அந்தச் சதிவலைக்குள் சிக்கும் இளைஞர்களின் மீட்சி என்பது அதிகம் நிகழாமலே போய்விடுகின்ற காட்சிகளையும் நாங்கள் காண வேண்டியேற்படுகின்றது. அது, மிகவும் வருத்தமளிப்பது. 

ஏற்கெனவே, யாழ்ப்பாணத்தில் ‘ஆவா குழு’ என்கிற பெயர் வெகு பிரபலம். இந்தக் குழுவை யார், எதற்காக உருவாக்கினார்கள் என்றெல்லாம் நிறையவே பேசப்பட்டுவிட்டது.   

இப்போதும், பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்தோடு ‘ஆவா’ குழுவே சம்பந்தப்பட்டிருப்பதாக, பொலிஸ் மா அதிபர் அறிவித்திருக்கின்றார். அத்தோடு இன்னொரு விடயத்தையும் அவர் கோடிட்டுச் சொல்லியிருக்கின்றார். அதாவது, இந்தக் குழுவுக்கு முன்னாள் போராளி ஒருவரே தலைமை தாங்குகின்றார் என்று.  
எம்.ஏ. சுமந்திரன் மீதான கொலை முயற்சிகளிலும் முன்னாள் போராளிகளே சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியிருந்தனர். நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரும் முன்னாள் போராளியே என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.   

இப்போது, வாள்வெட்டுக் குழுவின் தலைவராக இருப்பதும் முன்னாள் போராளியே என்று பொலிஸ் மா அதிபர் கூறியிருக்கின்றார். இதனூடாக தெளிவான படங்கள் வரையப்படுகின்றன.   

அதாவது, ஏற்கெனவே, உடல், உள ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டு, சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் போராளிகளை, இன்னும் இன்னும் அச்சுறுத்தலுக்குள் தள்ளுவதற்கான முனைப்புகளின் போக்கிலானது இது.  

குற்றங்கள் சார்ந்து, சந்தேக நபர்களின் தனி அடையாளங்கள் மீது, ‘முன்னாள் போராளிகள்’ என்கிற பொது அடையாளத்தைத் திணிப்பதன் மூலம், 12,000 பேரின் வாழ்வு மாத்திரமல்ல, அவர்கள் சார்ந்திருக்கின்ற குடும்பங்களின் வாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.  

இவ்வாறான தன்மைகளைப் பகுத்தாய்ந்து கொள்ள வேண்டிய தேவை, தென்னிலங்கைக்கும் அதுசார் தளங்களுக்கும் அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழ்த் தரப்புகளுக்கு அதுசார்ந்து பெரும் கடப்பாடு இருக்கின்றது.   

இல்லாது போனால், பலவீனமானவர்களாக மாற்றப்பட்டுள்ள முன்னாள் போராளிளை நோக்கி, இன்னமும் அதிகமான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு, அவர்கள் நடைப்பிணங்களாக்கப்பட்டு விடுவார்கள்.   

அப்படியான நிலையில், இந்தக் (வாள்வெட்டுக்) குண்டர் குழுக்கள் மீது, கதாநாய பிம்பம் பூசுவதைத் தவிர்த்து, அந்தக் குழுக்கள் எவை என்பதையும் அவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதையும் அடையாளப்படுத்த வேண்டும். அது, தேவையற்ற விடயங்களில், முன்னாள் போராளிகளை இழுத்துவிடும் முனைப்புகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்க வேண்டும்.  

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து, எட்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவம் உள்ளிட்ட முப்படையினரையும் வெளியேற்றுவது, முடியாத காரியமாகத் தொடர்ந்து வருகின்றது.   

ஆயிரக்கணக்கான ஏக்கர்களை ஆக்கிரமித்துள்ள இராணுவத்திடம் இருந்து, சில ஏக்கர் காணியைப் பெறுவதற்கே, வெயில், மழை பாராது பல நாட்கள் வீதியில் உட்கார்ந்து போராட வேண்டியிருக்கின்றது.   

இல்லையென்றால், நஷ்டஈடு வழங்க வேண்டியிருக்கின்றது. உலகத்திலேயே எந்தப் பகுதியிலும் வழக்கத்தில் இல்லாத விடயங்களை எல்லாம், பொது மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுவதற்கான நிபந்தனைகளாக, இராணுவம் முன்வைக்கின்ற நிலையில், இந்தக் குண்டர் குழுக்களின் ஆடாவடித்தனம் அவர்களை குஷிப்படுத்துவதாகவே அமையும்.  

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதற்கொண்டு, தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயற்பாட்டு இயக்கங்கள், பொது மக்கள் என்று எல்லோருமே இராணுவ அகற்றம் குறித்தே பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.   

அத்தோடு, சட்டம், ஒழுங்கு முற்றுமுழுதாகப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றார்கள். ஆனால், இந்தக் குண்டர் குழுக்களின் அடாவடித்தனத்தை அடக்கவே இராணுவத்தைக் கொண்டு வர வேண்டியிருப்பதாகப் பொலிஸ் மா அதிபர் மறைமுகமாகக் கூறுகின்றார்.   

அதன்போக்கிலேயே, தேடுதல் நடவடிக்கைகளுக்காக முப்படையின் ஒத்துழைப்புப் பெறப்படும் என்றும் கூறியிருக்கின்றார். இராணுவ அகற்றத்துக்காக, வருடக்கணக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றவர்களின் ஆன்மா மீது, குண்டர் குழுக்களை முன்வைத்து, ஏறி மிதித்துவிட்டுச் செல்வதில்,தென்னிலங்கை தெளிவாகவே இருக்கின்றது. அப்படியான நிலையில், அதற்குள் அகப்பட்டுத் தொலைவது அபத்தமானதுதான்.  

வடக்கில் எப்போதுமே இராணுவ மேலாதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் தென்னிலங்கையும் அதன் தேசிய பாதுகாப்புத் தரப்பும் குறியாகவே இருக்கின்றது.   
அதனூடு, அனைத்து வகையான அரசியல் உரிமைப் போராட்டங்களையும் அடக்கி, தமிழ் மக்களைப் பேசா மடைந்தைகளாக்கவே தென்னிலங்கை விரும்புகின்றது.   

இராணுவ மேலாதிக்கம் என்னவெல்லாம் செய்யும் என்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்து வைத்திருக்கின்ற தமிழ்த் தரப்பு, அதிலிருந்து விலகியிருப்பதையே விரும்புகின்றது.   

ஆனால், தூரநோக்கற்ற, குறுகிய இலாபங்களுக்காகக் குண்டர் குழுக்களின் அடாவடித்தனங்களை, ஆதரிக்க முயலும் சில தமிழ்த் தரப்புகளின் செயற்பாடு, வரம்பு மீறிச் செல்கின்றது. அதை, என்றைக்குமே மன்னிக்க முடியாது.

அதற்கு, எதிராகத் தனி மனிதர்களாக மட்டுமல்லாது, கூட்டு இயக்கமாகவும் தமிழ் மக்கள், இயங்க முன்வர வேண்டும். அதனூடு குண்டர் குழுக்களை சமூகத்திலிருந்து அகற்றி, கதாநாயக பிம்பத்தைப் பூசியவர்களுக்குச் சாட்டையடி கொடுக்க வேண்டும்.  

இது, தற்போதுள்ள நிலையில் மிகவும் அவசியமானது. இதுதான், நீடித்த தீர்க்கமான அரசியலின் போக்கில் முக்கியமானது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொறுக்கிகளுக்கு-போராளிகளின்-சாயம்-பூசப்படுகிறது-வாள்வெட்டு-குண்டர்-குழுக்களும்-கதாநாயக-பிம்பமும்/91-201774

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டின் பொறுக்கிகளது இப்படியான பொறிக்கித்தனம், பொன்னைத்தனமாக ஆயுதங்களுடன் திரிவது இவை போன்றவைக்கு கீழ்வருவோர் காரணமாக இருக்கின்றனர்.

1. யாழ் குடாநாட்டில் எங்கேயாவது வாய்தா வழக்குகள் கிடைக்காதோ என அலையும் வக்கீல்கள்
2. கண்டுக்காதுவிடும் காவல்துறை.
3. சாதி அமைப்பு
4. அப்பன் ஆத்தை
5. புலம்பெயர்தேசங்களில் வதியும் இவர்களது உற்வினர்கள் 

கடந்த ஒருமாதத்துக்கு முன்பு நான் யாழ்குடாவில் நின்றிருந்தபோது ஊரெழுவுக்கும் உரும்பிராய்க்கும் இடையில்  பலாலிவீதியில் மாலைவேளையில் என்னைப் பிந்தொடர்ந்து ஒரே மோட்டர்சைக்கிளில் வந்த மூவரில் நடுவில் அமர்ந்திருந்தவரிடம் கூரிய ஆயுதம் இருந்தது அவர்கள் என்னைத் தொடர்ந்துவ்ந்து எனது மோட்டர்சைக்கிளுக்குச் சமமாக மெதுவாக வரும்போது வந்தவரில் ஒருவர் "இவரா" எனக்கேட்டார் "இல்லை இவரல்ல" என மற்றவர்சொல்ல சரியாத்தான் சொல்லுறியோ என மீண்டும் கெட்டுச் சந்தேகத்தை உறுதிசெய்துகொண்டு அவர்களது மோட்டார்சைக்கிளை மெதுவாக்கி வந்ததழியே திருப்பிக்கொண்டு போய்விட்டார்கள்.  நான் நிலைமையின் விபரீத்ததை அவர்கள் திரும்பிப்போய் சிறிது நேரத்திலேயே உணர்ந்தேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Elugnajiru said:

யாழ் குடாநாட்டின் பொறுக்கிகளது இப்படியான பொறிக்கித்தனம், பொன்னைத்தனமாக ஆயுதங்களுடன் திரிவது இவை போன்றவைக்கு கீழ்வருவோர் காரணமாக இருக்கின்றனர்.

1. யாழ் குடாநாட்டில் எங்கேயாவது வாய்தா வழக்குகள் கிடைக்காதோ என அலையும் வக்கீல்கள்
2. கண்டுக்காதுவிடும் காவல்துறை.
3. சாதி அமைப்பு
4. அப்பன் ஆத்தை
5. புலம்பெயர்தேசங்களில் வதியும் இவர்களது உற்வினர்கள் 

கடந்த ஒருமாதத்துக்கு முன்பு நான் யாழ்குடாவில் நின்றிருந்தபோது ஊரெழுவுக்கும் உரும்பிராய்க்கும் இடையில்  பலாலிவீதியில் மாலைவேளையில் என்னைப் பிந்தொடர்ந்து ஒரே மோட்டர்சைக்கிளில் வந்த மூவரில் நடுவில் அமர்ந்திருந்தவரிடம் கூரிய ஆயுதம் இருந்தது அவர்கள் என்னைத் தொடர்ந்துவ்ந்து எனது மோட்டர்சைக்கிளுக்குச் சமமாக மெதுவாக வரும்போது வந்தவரில் ஒருவர் "இவரா" எனக்கேட்டார் "இல்லை இவரல்ல" என மற்றவர்சொல்ல சரியாத்தான் சொல்லுறியோ என மீண்டும் கெட்டுச் சந்தேகத்தை உறுதிசெய்துகொண்டு அவர்களது மோட்டார்சைக்கிளை மெதுவாக்கி வந்ததழியே திருப்பிக்கொண்டு போய்விட்டார்கள்.  நான் நிலைமையின் விபரீத்ததை அவர்கள் திரும்பிப்போய் சிறிது நேரத்திலேயே உணர்ந்தேன்.  

உங்கட நல்ல காலம் உறுதிப்படுத்த கேட்டிருக்கான் கேட்டிராமல் இருந்திருந்திருந்தால் உங்கள் நிலமை ஐயோ வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் மிரட்டி காசு புடுங்குவதாக கேள்விப்பட்டேன் எல்லாம் ஒரு சில போதைகளுக்கு அடியானதுகள் 

  • கருத்துக்கள உறவுகள்

 

எனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட ஒரு ஆக்கம் இச்செய்தியுடன் எங்கோ ஓரிடத்தில் தொடர்புபடும் என்பதால் இதனை இணைக்கிறேன்

மணிப்பூரின் மனிதெளரிமைப்போராளி இரோம் சர்மிளாவின் தேர்தல் தோல்வியும் யாழ்குடாநாட்டுமக்களில் கள்ள மெளனத்தனமும்

கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் உண்ணாநிலை நோன்பினை மணிப்பூரில் கடைப்பிடித்த இரோம் சர்மிளா எனும் மனித உரிமைப்போராளி நேற்றையதினம் நடைபெற்ற மாநிலத்தின் அரசமைப்பதற்கான தேர்தலில் வெறும் தொண்ணூறு வாக்குகள்பெற்று படுதோல்வியைச்சந்தித்திருக்கிறார் இதில் என்ன வேடிக்கை என்றால் அவர் உண்ணாநோன்பிருந்த காலத்தில் மணிப்பூரின் குடிமக்கள் அனைவரும் அவரைத் தமது மிகவும் விருப்பத்துக்கான அரசியல்தலைவராகவே வரிந்துகட்டியிருந்தனர்

அதாவது நோட்டா எனும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை எனும் அதிகப்பிரசங்கித்தனமான ஓட்ட்ளித்த வாக்காளர்களுக்குக்கூட கொஞ்சமேனும் யோசித்து இரோம் சர்மிளாவுக்கு வாக்களிக்கவில்லை அதாவது நோட்டாவுக்கு ஓட்டளித்தவர்களது சிந்தனை அறிவை நாம் சந்தேகப்படவேண்டிய நிலையிலேயே உள்ளது இரோம் சர்மிளா அவர்களைகூட நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் கவனிக்காதுவிட்டமை அவர்களது சமூகம்மீதான அறிவின் அடர்த்தியில் சந்தேகத்தை உண்டாக்குகிறது ஆகையால்தான் இரோம் சர்மிளா பெற்ற வாக்குகளைவிட நோட்டாவுக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் அதிகம்.

அதாவது இரண்டாயிரமாம் வருடத்தில் மணிப்பூரில் பேரூந்துக்காக தெருவில் காத்திருந்த பத்துப் பொதுமக்களைக் கண்டமேனிக்குச் சுட்டுக்கொன்றதனுடானான சூழலில் இப்படியான உரிமைமீறலுக்கு இந்திய ஆயுதப்படையினருக்காக ஆயிரத்துத்தொளாயிரத்துஐம்பத்தெட்டில் கொண்டுவரப்பட்ட ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச்சட்டத்தை நீக்கச்சொல்லியே கடந்த பதினாறு வருடங்களாக உண்ணாநொன்பைத் தொடர்ந்து அதற்கான தேவையோ அல்லது அப்படித் தொடர்ந்து உண்ணாநோன்பிருப்பதால் ஆட்சியதிகாரம் பதினாறு வருடங்களில் செய்யததை இனிமேல் செய்யாது எனத்தோன்றியதால் அண்மையில் உண்ணாநொன்பை முடித்துக்கொண்டார். அதன் பின்னரான அரசியல் முன்னெடுப்பிலேயே இப்படிப் பரிதாபமான தொல்வி நிலை.

ஈழப்போரின்போது முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழினம் இன்னல்களுக்குள் முடக்கபட்டு மிகப்பெரிய இனவழிப்பு நடைபெற அனைத்துத் தரப்பும் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கையில் யாழ் குடா நாடு தன்னைக் கூடாநாடாக மாற்றியமைத்திருந்தது அதாவது அங்கிருக்கும் தைழர்கள் எல்லோரும் வாய்மூடி மெளனிகளாக மட்டும் இருக்கவில்லை அப்படி மெளனமாக இருந்திருந்தாலே எமை அழிக்க நினைப்பவன் கொஞ்சமேனும் யோசித்திருப்பான் எங்கு பார்த்தாலும் இராணுவப்புலனாய்வுத்துறை இராணுவ முகாம்கள் அனைத்தும் சித்திரவதைக்கூடமாக மாற்றப்பட்டது இதில் ஊரெழு எனும் கிராத்தில் இருந்த இராணுவ முகாமை தமிழர்கள் இறைச்சிக்கடை என்றுதான் அழைப்பர் ஆகையால் தெருவில் இறங்கி வன்னி நிலப்பரப்பில் நடைபெறும் மிகப்பெரிய இனவழிப்புக்கு எதிர்ப்புக்காட்டமுடியாது எனினும் அம்மக்கள் வீட்டைவிட்டு வெளியெ வராமல் இருந்திருப்பார்களேயானாலும் அது மக்கள் தங்கள் எதிப்பினை எதோ ஒரு வழியில் வெளிக்காட்டுகிறார்கள் என சிங்களம் புரிந்திருக்கும்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா தற்போது தென்னகத்தில் இளைய தளபது எனப்பெயர் எடுத்திருக்கும் நடிகர் விஜை திருமணம் செய்தது யாழ்குடாநாட்டிலிருந்து இடப்பெயர்ந்து இப்போது லண்டனில் வாழும் குடும்பத்தைச்சேர்ந்த பெண்ணை, அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அதாவது வீடு தோட்டம் துரவு இவைகள் அனைத்தும் யாழில் இருக்கவே செய்கிறது அதைப்பார்த்துப் பக்குவப்படுத்தவும் வந்தைடத்தில் இரண்டுபாடல்களைப்பாடி பரவசமாகவும் இசையமைப்பாளர் விஜைஆண்டனியுடன் இராணுவத்தால் களமிறக்கப்பட்டார்கள் யாழ்குடாநாட்டில் இருக்கும் இராணுவ முகாம்கள் அனைத்திலும் அங்கிருக்கும் இராணுவத்தினர்க்கு புத்துணர்ச்சிக்கான இசைநிகழ்சியை நடாத்தி எஞ்சியநேரத்தில் யாழில் நிலைகொண்டுள்ள ஐம்பத்தி இரண்டாம் படையணி அம்பத்தி ஓராம் படையணி ஐம்பதாம் படையணி உங்களுக்குப் பெருமையுடன் வழங்கும் தென்னகத்து சினிமா இசையமைப்பளர் விஜை ஆண்டனி தென்னகத்தின் இளையதளபதி விஜையது அம்மாவுடன் இணைந்துநடாத்தும் மாபெரும் இசைத்திருவிழா என பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு நடாத்தப்பட்ட இசை நிகழ்சி எனும் முக்கல் முனகல் மற்றும் நாக்கமூக்கப் பாடல் அடங்கிய களியாட்டத்துக்கு யாழ் குடாநாட்டின் குஞ்சு குருமான் இளையோர் வயோதிபர் படிச்சவன் படிக்காதவன் எனும் வயதுவேறுபாடு இல்லாது கலந்து களியாட்ட சோதியில் இணைந்தார்கள்.

நாம் இப்போது கூறுகிறோமே இந்த யாழ்ப்பாணத்து மெத்தப்படிச்ச சனம் அனைவரும் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது புலிகள் இல்லாமற் போகவேண்டும் கொழும்புப்பாதை சீக்கிரம் திறக்கபடல்வேண்டும் பொருள்கள்தட்டுப்பாடுஇல்லாது கிடைக்கவேண்டும் என நல்லூர்க்கந்தனுக்கு நெய் விளக்கும் சூடமும் கொளுத்தி வேண்டுதல் வைத்தவர்கள்

இரோம் சர்மிளாவின் கதையும் இதுவே இவர் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் நிறுத்திவைத்துவிட்டு பேசாம ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகலாம்

எந்த இனத்துக்காக அவ்வினத்தின் இளையோர் இரவுபகல் பாராது போராடி தமது உயிர்களை ஆகுதியாக்கினார்களோ அதே இனம் அந்தமண்ணின் பிறிதொரு நிலப்பரப்பில் சொல்லெணாத்துன்பங்களையும் மரணத்தையும் எதிர்கொண்டபோது வாயைப்பொத்தி வாளாதிருந்ததற்கு இணையானதே இரோம் சர்மிளாவை இன்று மணிப்பூர் மக்கள் நிராகரித்தது.

ஒரு இனம் தனது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவதத் தவிர்த்து தனது போராடவேண்டிய போராட்டகளத்தில் இருக்கவேண்டிய தேவையை வேறொருவர் செய்யட்டும் என புலிகளது தலையிலும், இரோம் சர்மிளாவினது தலையிலும் சுமத்திவிட்டதன் விளைவை மணிப்பூர் மக்களும் ஈழத்தின் மக்களும் இப்போது அனுபவிக்கிறார்கள், இப்போது போராட்டக்களம் வெறுமையாக்கப்பட்டதும் புலிகளையும் இரோம் சர்மாவையும் நிராகரிக்கிறார்கள்.

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.